மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 33Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 33

Quote from monisha on September 9, 2022, 11:00 AM

33

ஜென்மாந்திர உறவு
அபிமன்யு தன்னிலையைப் புரிந்து கொண்டவரைக்கும் நலம் என்று சூர்யா எண்ணி இப்போதைக்கு தான் பேச நினைத்ததைப் பேச முடியாதென இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவள், "சாரி டாக்டர்... நான் உங்களை மீட் பண்ணதான் வந்தேன்... பட் டைமாச்சு... எனக்கு ஒரு வொர்க் இருக்கு... நான் நெக்ஸ்ட் டைம் உங்களை வந்து மீட் பண்றேன்" என்று சொல்லிவிட்டு அவசரமாய் வெளியேறினாள். அர்ஜுனுக்கு நடப்பது என்னவென்று புரிந்து கொள்ள இயலாத நிலையில் அவளின் செயலைப் பற்றி யோசித்திருக்க அபியும் எழுந்து கொண்டு, "அர்ஜுன் நான் அப்புறம் வந்து உன்கிட்ட பேசிறேன்" என்று விறுவிறுவென வெளியேறிவிட்டான்.  "டே அபி!" என்று ஆர்ஜுன் அழைக்க அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. அபிமன்யு சூர்யாவைப் பிடிக்க வேகமாய் நடக்க அவள் குழப்பத்தோடு முன்னேறி சென்று கொண்டிருந்தாள். அவன் சூர்யா என்றழைக்க அவள் திரும்பிப் பார்க்காமல் செல்ல, அவளைப் பிடிக்க எண்ணி நெருங்கி வந்த அதே சமயத்தில் அவன் அழைப்பைத் தாமதமாய் உணர்ந்து அவளும் திரும்பினாள். அவனின் நெற்றியில் இவள் தலை மோதி கொள்ள, வலியால் காயம்பட்ட இடத்தை இருவரும் தேய்த்துக் கொண்டனர். சூர்யா வலி தாங்காமல், "என்ன அபி நீங்க" என்று கேட்க, "உன்னை யாரு சடார்னு திரும்ப சொன்னது" என்று அவன் முறைத்தான். "நீங்கதானே கூப்பிட்டீங்க?" "கூப்பிட்ட உடனே திரும்பல... இவ்வளவு லேட்டா ரியாக்ட் பண்ற" என்று அவன் கேட்டுக் கொண்டிருக்க அவள் முகம் வலியால் சுருங்கியது. அவள் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் அவளுக்கு ஏற்பட்ட சிறு காயம் கூட அவனுக்குள் வலியை உணர வைக்க, "ரொம்ப வலிக்குதா... " என்று பரிவோடு கேட்க, "இட்ஸ் ஓகே" என்றாள் அவள். சிறிது நேரத்திற்கு முன்பு சண்டையிட்டுக் கொண்டவர்களா அவர்கள் என்றளவுக்கு ஒருவருக்கொருவர் விழியால் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்ள சூர்யா சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, "எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க?" என்று கேட்டபடி மருத்துவமனையை விட்டு வெளியேறியவளை, "சூர்யா நில்லு... நான் பேசணும்" என்று அழைத்தான். "எனக்கு வேலை இருக்கு... நான் கிளம்பணும்" என்று கண்டுக்கொள்ளாமல் சென்றவளின் கரத்தைப் பற்றி நிறுத்தினான். அவள் அதிர்ச்சியோடு அவன் முகத்தை நோக்க, "நீ எதுக்கு அர்ஜுனைப் பார்க்க வந்த? ஏன் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியான? இப்போ காரணமில்லாம தப்பிச்சி ஓடுற... அப்படி என்ன உன் பாஸ் உனக்கு ஆர்டர் கொடுத்தார்?" என்று அவன் வரிசையாய் கேள்வியை அடுக்கியபடி அவள் கரத்தை விடுத்தான். "புரிஞ்சுக்கோங்க அபி... நான் இங்க என்னோட பெர்ஸ்னல் வொர்க்காக வந்தேன்" "பெர்ஸனல் வொர்க்கா... அது என்ன?” என்று கேட்டு அவளை ஆராய்ந்து பார்த்தான். "நான் அப்புறமா சொல்றேன்... இப்ப என்னைப் போக விடுங்களேன்" என்றவளுக்கு எங்கே தான் தன் சகோதரியின் பார்வையில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சம். அவள் தேடலைக் கவனித்தபடி, "இந்தத் தப்பிக்கிற வேலை எல்லாம் வேண்டாம்... இப்பவே சொல்லு" என்று பிடிவாதமாய் நின்றான். "இப்ப முடியாது... லேட்டர்... இது என் கார்ட்... அப்புறம் கால் பண்ணுங்க" என்று சொல்லி அவள் கார்டை அவனிடம் நீட்ட அவன் அதைப் பார்க்காமலே வீசியெறிந்து விட்டு, "இது உண்மைன்னு எப்படி நம்பறது... அன்னைக்குக் காண்பிச்ச போலி ஐடி கார்ட் மாதிரி இதுவும் போலியா இருந்தா?" என்றான். சூர்யா கீழே விழுந்த தன் கார்டை கையில் எடுத்து, "இது என்னோட ஒர்ஜினல் கார்ட்" என்றாள். "நான் உன்னை நம்பத் தயாராயில்லை... நான் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிட்டு எங்கே வேணா போ" என்றான் தீர்க்கமாக! அவள் தவிப்போடு, "சரி சொல்றேன்... ஆனா இங்க வேண்டாம் என் சிஸ்டர் என்னைப் பார்த்திருவா... நாம வேறு எங்கயாவது போய் பேசுவோம்" என்றாள். "யாரு உன் சிஸ்டர்?" "எல்லாத்தையும் சொல்லித் தொலைக்கிறேன்... ஆனா இங்கிருந்து முதல்ல கிளம்புவோம்" என்று அவனைப் பார்க்காமல் மருத்துவமனைக்குள் நோட்டமிட, "சரி இங்கயே வெயிட் பண்ணு" என்று செல்ல அவன் எங்கே போகிறான் எனத் திரும்பிப் பார்த்தாள். அவன் தன் பைக்கை ஓட்டியபடி வந்து, "சரி போலாம்" என்று அழைத்தான். "நான் உங்க கூட பைக்ல வர்றதா... நோ வே" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். "சரி வர வேண்டாம்... உள்ளே போய் அர்ஜுனை மீட் பண்ணி நீ செஞ்ச சீட்டிங் வேலை எல்லாம் சொல்றேன்... அப்புறம் உன் சிஸ்டர்... யாரு?" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் பைக்கில் ஏறி அமர்ந்தபடி, "போய் தொலைங்க" என்றாள். அபிமன்யு புன்னகையோடு அவளை அழைத்து வெளியேறிவிட அர்ஜுன் தன் அறையின் ஜன்னல் வழியே நடப்பவற்றைப் பார்த்து புரியாமல் திகைத்தான். 'தெரியாதுன்னு சொல்லிட்டு பைக்ல கூட்டிட்டுப் போயிட்டிருக்கான்' என்று நினைத்துகொண்டிருக்க அப்போது ரம்யா கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கேட்டாள். “கம்மின்" என்று சொல்ல ரம்யா உள்ளே நுழைந்து, "நீங்க கேட்ட... ரிப்போர்ட்ஸ்" என்று சொல்லி ஒரு பைஃலை மேஜை மீது வைத்துவிட்டு வெளியேற போனவளை, "ரம்யா" என்று அழைத்தான். இயந்திரத்தனமாய் அவன் முகத்தைக் கூட கவனிக்காமல், "சொல்லுங்க டாக்டர்" என்றாள். சில நாட்களாகவே அவள் அவ்விதம்தான் நடந்து கொள்கிறாள் என அர்ஜுன் கவனிக்காமல் இல்லை. ஆனால் இப்போது அவன் அதைக் குறித்து பேசாமல், "என் தம்பி அபிமன்யு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தான்... நீ பார்த்தியா ரம்யா?" என்று கேட்க, அந்த நொடி அவனை ஆவலோடு நோக்கி, "நான் பார்க்கலயே... எங்கே?" என்று வினவினாள். "இல்ல நான் ரூம்குள்ள வரும் போது இருந்தான்... கூட ஒரு பொண்ணு வேற இருந்தா... யார் அது அபின்னு கேட்டதுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டான்... அந்தப் பொண்ணும் என்னைதான் பார்க்க வந்தேன்னு சொல்லிட்டு எதுவும் பேசாம வேலை இருக்குன்னு கிளம்பிட்டா... இப்ப பார்த்தா என் தம்பியும் அந்தப் பொண்ணும் பைக்ல ஒன்னா போறாங்க... என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல... ஐம் கன்ஃபியூஸ்ட்" என்றுரைக்க ரம்யா யோசனையோடு, "உங்க தம்பி லவ் பண்ற பொண்ணோ என்னவோ... இன்ட்ரோ கொடுக்கக் கூட்டிட்டு வந்திருப்பாரு போல" என்றாள். "நோ நோ... அபி அப்படி எல்லாம் சான்ஸே இல்ல... அதுவும் என்கிட்ட சொல்லாம" என்று அர்ஜுன் உரைக்க, ரம்யாவிற்கு இப்போது கோபம் எழுந்தது. "ஏன் சான்ஸ் இல்ல... உங்களை மாதிரியே உங்க தம்பியும் இருக்கணுமா என்ன?" என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் பதிலுக்காகக் காத்திராமல் வெளியேறினாள். இப்போது அர்ஜுனிற்கு அபியின் குழப்பம் மறைந்து ரம்யாவா தன்னை இப்படி எடுத்தெறிந்து பேசுகிறாள் என்று உள்ளூர வலித்தது. அவள் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்க தானும் அவளைப் புரிந்து கொள்ளாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறோமோ என்று குற்றவுணர்வு ஏற்பட்டது. * ரொம்பவும் வேகமும் இல்லாமல் நிதனாமகவும் இல்லாமல் சீராக சென்ற அபிமன்யுவின் பைக் ஒரு சிவாலயத்தின் வாசலில் நிற்க சூர்யா இறங்கிவிட்டு, "பேசலாம்னு சொல்லிட்டு... கோயிலுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க" என்று கேட்டாள். "ஏன் கோயிலில் பேச கூடாதா... நான் எப்பவும் இங்கதான் வருவேன்" என்று சொல்லிவிட்டு அபிமன்யு காலணியைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைய சூர்யா பின்னோடு சென்று, "அபி ஸ்டாப்... எனக்கு கோயிலுக்கு எல்லாம் போற்தில இன்ட்ரஸ்ட் இல்ல" என்று உரைத்தாள். "ஏன்?" என்று நடந்து சென்றபடியே கேட்டான். "ஏன்னு கேட்டா... எனக்கு பிடிக்காது" என்றவளை வித்தியாசமாய் ஒரு பார்வை பார்த்து, "எனக்கு இங்க வர்றதுதான் பிடிக்கும்" என்றான். அவள் வேறுவழியில்லாமல் முன்னேறி உள்ளே சென்றவனிடம், "நீங்க ஏன் இவ்வளவு பக்திமானா இருக்கீங்க? எப்ப பார் சாமினு... சாமியாராகப் போறீங்களா!" என்று கேட்டாள். அவள் மீது தன் பார்வையை வீசி, "சாமி கும்பிட்டா சாமியார் ஆகப் போறாங்கன்னு அர்த்தமா... கோயிலுக்கு வந்தா மனசுக்குத் தெளிவு அமைதி அப்புறம் ஒருவித பாஸிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு கர்ப்பகிரகத்தில் நுழைய  சூர்யா அவனைப் பின்தொடராமல், "அபி எனக்கு டைம் ஆகுது... ஐ ஹேவ் டூ கோ" என்றாள். அவன் அவளைத் திரும்பிக் கூட நோக்காமல், "வெயிட் பண்ணு... சாமி கும்பிடிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றான். அவள் அங்கே இருந்த தூணில் சாய்ந்து நின்றபடி, 'மை பேட் டைம்... இதுதான் சான்ஸ்னு நல்லா பழித் தீர்த்துக்கிறான். அந்த ஈஷ்வர் வேற வந்து தொலைச்சிட்டா... அது வேற பிரச்சனை' என்று புலம்பிக் கொண்டிருந்தவள் அங்கே இருந்த கடவுள் சிலையைப் பார்த்து, 'நான் கோயிலுக்கு வந்துட்டேங்கிறதுக்காக, உன்னைக் கும்பிடுவேன்னு மட்டும் எதிர்பார்க்காதே... நெவர்... நான் உன்கிட்ட எதுவும் கேட்கமாட்டேன்... நீயும் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்' என மனதளவில் கடவுளைக் காரணமில்லாமல் நிந்தித்து கொண்டிருந்தாள். அப்போது சூர்யாவின் அருகில் ஒரு சிறுமி வந்து நின்று அவளிடம், "ஆன்ட்டி... எங்கம்மா உங்களைக் கூப்பிடுறாங்க" என்றாள். "யாரு உங்கம்மா... எதுக்கு என்னைக் கூப்பிடிறாங்க?" என்று கேட்டபடி அந்தச் சிறுமி வழிகாட்டுதலில் சென்ற இடத்தில் ஒரு நடுத்தர வயது பெண் நின்றபடி , "இந்தாம்மா... ஒருத்தர் குறைஞ்சுட்டாங்களேன்னு பார்த்தேன்" என்று ஒரு துணி பூ மஞ்சள் குங்குமம் அத்தோடு மஞ்சளால் பிணைக்கப்பட்ட கயிறைக் கொடுக்க அவள் யோசித்து நிற்க அந்தப் பெண், "ஏன்மா யோசிக்கிற... வாங்கிக்கம்மா" என்று சொல்லி அதனை நீட்ட அவள் என்னவென்று புரியாமல் கையில் வாங்கிக் கொண்டாள். அந்தச் சமயத்தில் அபிமன்யு பின்னோடு வந்து நின்று, "உன்னை எங்கெல்லாம் தேடுறது சூர்யா" என்று கேட்டான். "இல்ல... நான்" என்று பதில் சொல்லாமல் நின்றவளின் கைகளில் உள்ளதை பார்த்தவன், "இதெல்லாம் சுமங்கலி பூஜை பண்ணி கல்யாணமான பெண்களுக்குதானே கொடுப்பாங்க... நீ ஏன் வாங்கின?" என்று கேட்டான். "ஓ அப்படியா... ஐ டோன்ட் நோ" என்று திரும்பி அதைக் கொடுத்தப் பெண்மணியைத் தேடினாள். "அந்த லேடியை காணோமே" என்று விழிகளால் அந்த இடத்தை அலசியவளை, "சரி விடு... அவங்களும் தெரியாம கொடுத்துட்டாங்க நீயும் வாங்கிட்ட... இப்ப ஒன்னும் பண்ண முடியாது" என்றான். "என்ன விளையாடுறீங்களா... என்னைப் பார்த்தா கல்யாண ஆன மாதிரி தெரியுதா?!" என்று கொஞ்சம் கோபமாய் கேட்டாள். "ம்ம்ம்... அதானே" என்று சொல்லி சிரித்தவன் அப்போதுதான் அவள் முகத்தை உற்று கவனித்தான். சூர்யா புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, "ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு" என்று சொல்லியபடி மருத்துவமனையில் அவள் தன் நெற்றியில் இடித்து கொண்டதால் தன் நெற்றி திலகம் அவள் வகுட்டில் ஒட்டிக் கொண்டிருந்ததைக் கவனித்தான். அபி செய்கையாலேயே அவள் நெற்றியில் ஒட்டியிருந்த குங்குமத்தைச் சுட்டிக் காட்ட அவள் தன் பர்ஸிலிருந்த கண்ணாடியைப் பார்த்துவிட்டு அபிமன்யுவை முறைக்க அவனோ, "இதுக்கும் எனக்கு சம்பந்தம் இல்லை... இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்ஸிடென்ட்" என்று உரைத்தான். அந்த குங்குமத்தை அழுத்தமாய் அவள் துடைத்து எடுத்தாள். சில காரியங்களின் வீரியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இங்கே சூர்யா அப்படி ஒரு தவறை இழைத்தாள் என்றே சொல்ல வேண்டும். "சரி... நான் கேட்டதற்கான பதிலை மேடம் இப்பையாச்சும் சொல்றிங்களா?" அபி கேட்க, சூர்யா எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தபடி நிற்க அபியே மீண்டும், "உன் பாஸ் ஈஷ்வர்தானே அர்ஜுனைப் பார்க்க உன்னை அனுப்பினது" என்று கேட்டான். "நீங்க நினைக்கிற மாதிரி ஈஷ்வர் என் பாஸ் இல்ல... முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க" என்றாள். அபிமன்யு வியப்போடு, "அப்படின்னா?" என்று குழம்ப, சூர்யா அழுத்தமாய், "அப்படின்னா ஈஷ்வருக்காக நான் வேலை செய்யல... நான் வேலை செய்றது அவந்திகா மேடம் கிட்டதான்... அவங்க சொல்லிதான் உங்களைத் தேடி வந்தேன்" என்று சொல்ல "யார் அவந்திகா மேடம்?" என்றான். "அவங்க ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸோட எம். டி... ஈஷ்வரோட அம்மா" என்றாள். அபிமன்யு முறைத்தபடி, "என்னைப் பார்த்தா இளிச்சிவாய்னு நெத்தில எழுதி ஒட்டிருக்கா... நீ சொன்ன மாதிரி அவந்திகா மேடம் கிட்ட வேலை பார்க்கிறன்னா... அப்போ ஈஷ்வரும் உன் பாஸ்தானே" என்று கேட்டான் "முதல்ல நான் சொல்றதை முழுசா கேளுங்க" என்று சொல்லி சூர்யா அவனைத் தேடி வந்த காரணத்தை முழுவதுமாய் விவரித்தாள். அபி யோசித்தபடி நின்றவன் பின் சூர்யாவை நோக்கி, "நீ சொல்றதைப் பார்த்தா... கொங்ககிரில நடந்த விஷயத்துக்கும்" என்று இழுக்க, "கொங்ககிரில அப்படி என்னதான் நடந்துச்சு... உங்களுக்கு எப்படி ஈஷ்வரைத் தெரியும்" என்று கேட்க அவன் மௌனம் காத்தான். சூர்யா அவன் பதிலை எதிர்நோக்க அவன் விடையளிக்காமல், "சரி நீ அர்ஜுனை ஏன் பார்க்க வந்த?" கேட்டான். "அது… நான் என் சிஸ்டர் ரம்யாவுக்காகதான் வந்தேன்... அவ உங்க பிரதர் அர்ஜுனை லவ் பண்றா... அதுவும் ஒரு வருஷத்திற்கு மேலா... ஆனா அர்ஜுன் சாரும் என் சிஸ்டரை புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல... ரம்யாவும் தன் மனசில இருக்கிறதைச் சொல்ற மாதிரி தெரியல... அதான் நானே அர்ஜுன் சார்கிட்ட சொல்லலான்னு... கடைசியில நான் நினைச்சது ஒன்னும் நடக்கல" என்று வருத்தமுற்றாள். அவள் சொன்னதைப் புன்னகை ததும்ப கேட்டு கொண்டிருந்தவன்,"ஓ! இதான் மேட்டரா... ம்ம்ம்... எனக்கு டாக்டர் ரம்யாவை நல்லா தெரியுமே... ரொம்ப அமைதியானவங்க... அதுவும் இல்லாம அர்ஜுனே அவங்களைப் பத்தி நிறைய சொல்லிருக்கான்” என்றான். அப்போது சூர்யாவின் கைப்பேசி ஒலிக்க அவள் எண்ணைக் கூட சரியாகப் பாராமல் அதனை அணைத்து ஸைலன்டில் போட்டாள். மீண்டும் சூர்யா அபியை நோக்கி, "நாளைக்கு எல்லாம் எனக்கு நிறைய வொர்க் இருக்கும்... நான் திரும்பியும் அர்ஜுன் சாரை மீட் பண்ணி எப்படி இதைப் பத்தி பேசுறது" என்று அவள் இயலாமையோடு உரைக்க, "அந்த விஷயத்தை என்கிட்ட விட்டிரு... நான் அர்ஜுன்கிட்ட பேசுறேன்" என்றான். சூர்யா முகம் மலர, "நிஜமாவா?" என்று கேட்க அவன் தலையசைத்து ஆமோதித்தான். அவள் உணர்வுபூர்வமாய் "தேங்க்யூ" என்றாள். சூர்யாவிற்கு ஒருவழியாய் பிரச்சனையெல்லாம் முடிந்துவிட்ட நிம்மதி உண்டாக மறுபுறம் அபிமன்யுவின் புரிதல் நெகழ்ச்சியாய் இருந்தது. சட்டென்று ஈஷ்வரை சந்திக்க வேண்டிய நினைவு வர, "அபி ஐ ஹேவ் டூ கோ" என்று பதட்டமானாள். "நான் டிராப் பண்ணட்டுமா?" "இல்ல பரவாயில்ல... கொஞ்சம் லாங்க் டிஸ்டன்ஸ்... நானே போயிக்கிறேன்... நீங்க இந்த திங்ஸை எடுத்துட்டுப் போயிடுங்க" என்று அந்தப் பெண் கொடுத்த தாலி மஞ்சள் குங்குமம் போன்றவற்றை அவன் கையில் திணித்துவிட்டு, "பை... மறக்காம அர்ஜுன்கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணுங்க... தென்" என்று அவள் பர்ஸில் இருந்த அவள் கார்டை எடுத்து அவனிடம் தந்தாள். "திஸ் இஸ் மை கார்ட்... திரும்பியும் தூக்கிப் போட்டுராதீங்க" என்று அவள் அவசரமாய் உரைத்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் வெளியேறினாள். அவனும் அவள் தந்து விட்டுப் போனதை எல்லாம் கைகளில் வாங்கிக் கொண்டு அவள் அவசரத்தின் காரணம் புரியாமல் விழித்தான். அவள் கொடுத்தப் பொருளையெல்லாம் பார்த்து, 'என்னைப் பார்த்தா இவளுக்கு எப்படி தெரியுது' என்று யோசித்தபடி அபிமன்யு அவளை சந்தித்தது முதல் நடந்தவற்றை அனைத்தையும் நினைவு கூர்ந்தவன் அவர்களுக்குள் விதியின் வசத்தால் ஏற்பட்ட பந்தத்தை எண்ணி வியந்தான். நிச்சயமாக அவளுக்கும் தனக்கும் ஏதோ ஜென்மாந்திர உறவு இருக்கிறது என்பதை அன்று நடந்த நிகழ்வுகளும் அவனை அழுத்தமாய் நம்ப வைத்தது. இன்று இறைவன் சன்னிதியில் மீண்டும் தீர்மானிக்கப்பட்ட இந்த அழகிய பந்தத்தை சூர்யாவும் அபிமன்யுவும் நிலைநிறுத்திக் கொள்ள கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்றை விலையாய் கொடுக்க போகிறார்கள். அந்தப் பேரிழப்பு அவர்களின் காதல் விருட்சத்தை தகர்க்கவும் கூடும். கோயிலில் இருந்து அவசரமாய் புறப்பட்ட சூர்யா ஈஷ்வரை சந்திக்க விருப்பமன்றி அவள் பயணத்தை மேற்கொண்டாள். அதுவல்லாது அந்தச் சமயத்தில் அவள் அலைபேசி மௌனமாய் ஈஷ்வரின் அழைப்பை எடுத்துரைத்து கொண்டிருந்தது. ஓயாமல் அவன் அழைக்க அவள் அதை கவனிக்க தவறினாள். ஈஷ்வருக்கோ அவள் தன் அழைப்பை ஏற்க மறுக்கிறாள் என்று எண்ணும் போதே அவள் மீதான வெறுப்பும் கோபமும் பன்மடங்கு பெருகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே அவள் திமிர் பிடித்தவள் கர்வம் பிடித்தவள் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ பதிந்திருந்த நிலையில் அவளின் கவனக்குறைவை அவளின் அலட்சியப் போக்காகவும் கர்வமாகவுமே அவன் தீர்மானித்து கொண்டான். இப்போது ஈஷ்வர் முன்னிலையில் சூர்யா தோன்றினால் அவளை எரித்து விடும் அளவிற்கு அவள் மீது கோபத்தைத் தேக்கி வைத்து காத்திருந்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா