மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Meendum UyirthezhuMeendum Uyirthezhu - 34Post ReplyPost Reply: Meendum Uyirthezhu - 34

Quote from monisha on September 12, 2022, 4:18 PM

34

தன்னவள்
மஹாபலிபுரத்தின் அருகாமையில் கடற்கரையின் அலையோசைகளின் ஆதிக்கத்தில் அந்த விஸ்தரமான சாலையை ஒட்டியபடி அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான பங்களா பிரமிக்க மட்டும் வைக்கவில்லை. கொஞ்சம் மிரட்சியையும் தர, அதிக வாகன நெரிசல் இல்லாத காரணத்தால் வாகனங்கள் எல்லாம் அதிவேகமாய் அந்த இடத்தைக் கடந்து சென்றன. அப்போது அந்தப் பங்களாவின் ராட்சஸ வெளிக்கதவைத் தாண்டிச் சற்று நேரத்திற்கு முன்பு ஈஷ்வரின் சிவப்பு வண்ண அதிநவீன கம்பீரமான கார் உள்ளே நுழைந்தது. ஈஷ்வர்தேவ் வீட்டிற்குள் சென்ற சிலநொடிகளிலேயே உள்ளே இருந்த வேலையாட்களை எல்லாரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்துவிட்டான். சூர்யா வந்தடையவில்லை என்ற கோபமும், இன்னொரு புறம் அவனின் அழைப்பையும் ஏற்கவில்லை என்று அளவில்லா ஆவேசத்தாலும் அவன் ராஜநாகமாய் சீறி அங்குள்ளவர்களை மிரள வைத்துக் கொண்டிருந்தான். அவன் யார்மீது விஷத்தைக் கக்குவானோ என எல்லோரும் நடுக்கமுற, அத்தகைய விஷத்தை முறிக்கும் வல்லமை கொண்ட சூர்யா வெகுதாமதமாகவே அந்த இடத்தை வந்தடைந்தாள். அங்கே அவள் வருவது முதல்முறை அல்ல. ஏற்கனவே வேறொரு சூழ்நிலையில் வேலை விஷயமாக, சில கிளைன்ட்ஸை அந்தப் பங்களாவில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுத்தாள். அதன் காரணத்தினால் அங்கே உள்ள காவலாளி முதல் வேலையாட்கள் வரை எல்லோரும் அவளுக்குப் பழக்கமானவர்களாகவே இருந்தனர். ஆதலால் சூர்யாவின் வருகையைப் பார்த்ததுமே அங்கே இருந்த தலைமை காவலாளி ஈஷ்வர் வந்துசேர்ந்த தகவலை உரைத்தான். அந்தத் தருணம் யாருக்கும் அசைந்து கொடுக்காத அவள் தைரியமும் கொஞ்சம் ஆட்டம் கண்டது என்றே சொல்ல வேண்டும். 'சூர்யா ரிலேக்ஸ்... டோன்ட் லூஸ் யுவர் கரேஜ்' என்று மனதில் தன் தாரக மந்திரத்தை ஜபித்தபடி வெளிப்புறத்திலிருந்து அந்த வீட்டை நோக்கி நடந்தவளுக்கு உள்ளே செல்லவே பத்து நிமிடங்கள் பிடித்தது. அதற்கு காரணம் அந்தப் பங்களாவைச் சூழ்ந்திருந்த இடம் அத்தனைப் பெரியதாக இருக்க, சுற்றிலும் பரந்து விரிந்த தோட்டமும் வெளியே அகண்டு விரிந்த நீச்சல்குளமும் அமைய பெற்று வண்ணமயமாய் காட்சியளித்தது. அந்தப் பங்களாவின் முகப்பறை வெறிச்சோடி இருக்க அந்த வீட்டின் தலைமை வேலையாள் சூர்யாவைப் பார்த்தவுடன் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டபடி இனி எல்லாவற்றையும் அவள் சமாளித்து கொள்வாள் என்ற எண்ணத்தோடு ஈஷ்வரின் கோபத்தைப் பற்றிப் பதட்டத்தோடு விவரித்தான். அவனின் கோபம் வேறு யாரிடமும் இல்லை தன் மேல்தான் என்று புரிந்து கொண்டவள் தான் நேரம் கடந்து வந்துவிட்டோமா என யோசித்தபடி கைப்பேசியினைக் கவனித்தாள். அதிலிருந்த அவனின் மிஸ்ட் கால்களை பார்த்து அந்த நொடி அதிர்ந்தும் போனாள். கோயிலில் கைப்பேசியை ஸைலன்ட்டில் போட்ட நினைவு வர, 'சூர்யா... வாட் ஹேவ் யூ டன்?' என்று தலையில் கை வைத்து கொண்டவளின் உள்ளம் பதட்டத்தை நிரப்ப, தைரியம் வெகுதூரம் விலகிச் சென்றது. தான் செய்தது பெரிய தவறு என்று எண்ணியவள் தன்மீதுள்ள கோபத்தாலேயே எல்லோரையும் கடிந்து கொண்டிருக்கிறான் என்பதை ஒருவாறு உணர்ந்தபடி அவன் இருக்கும் இடத்திற்கு விரைந்தாள். ஈஷ்வர் முதல் தளத்தில் அமைந்திருந்த பெரிய அறையின் பின்புற விசாலமான கதவுகளைத் திறந்து வெளிக்காற்றை அனுபவித்தபடி நின்றிருந்தான். அவன் விழிகள் நோக்கியிருந்த திசையில் கடல் ஓயாமல் அலைகளை எழுப்பி அந்த இடத்தின் நிசப்தத்தைத் துரத்தி கொண்டிருந்தது. அதனை நின்று ரசித்தவன்... இல்லை, பெயருக்கென்று அவன் பார்வை அதனைக் கண்டுகளித்தாலும் அவன் மனம் அதில் லயிக்கவில்லை. அந்தத் தருணத்தில் சூர்யா திறந்திருந்த முன்புற கதவை தன் விரல்களால் தட்டி,"மே ஐ கம்மின்" என்று அவளின் தீட்சண்யமான குரலால் அனுமதி கேட்டாள். அந்தக் குரல் ஈஷ்வரின் செவியில் நுழைந்து விவரிக்க முடியாத உணர்வுகளை எழுப்பிவிட்டாலும் ஏனோ தன் பார்வையைத் திருப்பாமலே, "வு இஸ் தட்?" என்று கேள்வி எழுப்பினான். "சூர்யா" என்று தன் பெயரை உரைத்த மறுகணம் அவன் மண்டைச்சூடேற அவளை என்ன செய்யலாம் என்று அவன் சிந்தித்த அதே சமயத்தில், அவள் எத்தகைய கலவரம் வெடிக்க போகிறதோ என எதிர்பார்த்திருந்தாள். தன் அழைப்பைக் கூட ஏற்காத திமிர் பிடித்தவள் முகத்தை தான் பார்ப்பதா என்று அவன் மனதில் எண்ணியபடி, அவளைத் திரும்பிப் பார்க்காமலே, "வெல்கம் மிஸ் சூர்யா சுந்தர்..." என்று அழைப்புவிடுத்தான். அவள் அவனிடம் எப்படி பேசி சமாளிப்பது என யோசித்தபடி அமைதியாக நிற்க, "என்ன மிஸ் சூர்யா... உன்னை நான் வந்து வெல்கம் பண்ணனுமோ?" என்று வினவினான். "ஐம்..." என்று மன்னிப்பு கேட்க வாயெடுத்தவளைப் பேசவிடாமல், "தப்பு செஞ்சிட்டு ரீஸன் சொல்றது... சமாளிக்கிறது... சாரி சொல்றது... இதெல்லாம் உங்களுக்குப் பழக்கமா போயிடுச்சு இல்ல... ஐ டோன்ட் வான்ட் டூ ஹியர்... ஆல் தீஸ் நான்ஸென்ஸ்" என்று வெறுப்பாய் அவன் உரைக்க, 'சாரியும் கேட்க கூடாது ரீஸனும் சொல்ல கூடாது... இதுல பெரிய இவனாட்டும் முகத்தைத் திருப்பிட்டு வேற கேள்வி கேட்கிறான்' என்று மனதிற்குள்ளேயே அவனைக் கடிந்து கொண்டவள் தலையிலடித்து கொண்டு, 'எல்லாம் அந்த இடியட் அபிமன்யுவால' என்று எண்ணி அபியையும் சேர்த்து திட்டினாள். அவள் இப்படி யோசனையில் நிற்க அவன் மேலும், "பங்க்ஞ்சுவாலிட்டின்னாலும் என்னன்னு தெரியல... கால் பண்ணாலும் எடுக்கல...மேடம் ஸோ பிஸி..." என்று ஏளனமான பாணியில் கேட்டான். சூர்யா உடனே, "இட்ஸ் மை மிஸ்டேக்... ஃபோன் ஸைலன்ட்ல" என்று அவள் காரணத்தை உரைப்பதற்கு முன்பே ஈஷ்வர் இடையிட்டு, "ஸைலன்ட்ல... குட் ரீஸன்... பேசாம போகும் போது உன் ஃபோனை கடல்ல தூக்கிப் போட்டுப் போயிடு... எதுக்கு யூஸ் இல்லாத பொருளைக் கையில் வைச்சுக்கிட்டு" என்றான். "ஐம்..." என்று மீண்டும் மன்னிப்பு கேட்க எத்தனித்தவளை பேசவிடாமல், "டோன்ட் டாக்... உன்னை மாதிரியான ஆளெல்லாம் மாம் எப்படி வேலைக்கு வைச்சிருக்காங்களோ... கொஞ்சங்கூட டெடிக்கேஷனே இல்ல... இதுல ரொம்ப புத்திசாலின்னு வேற சார்ட்டிஃபிகேட்... இதுதான் புத்திசாலித்தனமா? அவ்வளவும் திமிரு... தலைகணம்... ஆனா சுந்தர் அங்கிள் உன்னைப் பத்தி கரெக்டா சொன்னாரு... நீ கேப்பபிள் இல்லன்னு... நான்தான் கேட்கல... எனிவே நீ சுந்தரோட டாட்டரா போயிட்ட... அதனால போனா போதுன்னு இந்தத் தடவை நான் உன்னை மன்னிச்சு விடறேன்... அகையின் இந்த மாதிரி மிஸ்டேக் பண்ணாதே... ரொம்ப முக்கியமான விஷயம்... உன் தலைகணத்தையும் திமிரையும் என்கிட்ட தப்பி தவறி கூட காட்டிடாதே... அப்புறம் வேற மாதிரி ஈஷ்வரை நீ பார்க்க வேண்டியிருக்கும்... அன்டர்ஸ்டான்ட்... ஆல்ரெடி லேட்டாயிடுச்சு... சென்னை ஆஃபிஸிக்கு நாளைக்கு மீட்டிங்க்கான அரெஞ்சமன்ட்ஸ் பண்ண சொல்லி மெயில் அனுப்பு... சூன்" என்று அவள் முகத்தைக் கூட பார்க்காமல் படபடவென பொறிந்து தள்ள சூர்யாவிற்குத் தான் தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வைத் தாண்டி அவன் பேச்சில் தெரிந்த அதிகாரம் அவன் மீதான வெறுப்பை அதிகரிக்க செய்தது. அவனின் வார்த்தைகள் அவளின் தன்மானத்தைச் சீண்டி விட இவனிடம் வேலைப்பார்ப்து தன் சுயமரியாதைக்கு இழுக்கு என்று எண்ணமிட்டாள். அதற்கு மேல் அவனிடம் இறங்கிப் போக மனமின்றி, "உங்க மன்னிப்பு ஒன்னும் எனக்கு தேவையில்ல... எனக்கு உங்ககிட்ட வேலை பார்க்க சுத்தமா விருப்பமில்ல... அன் ஐம் லீவிங் நவ்" என்று சொல்லிவிட்டு அந்த அறை வாசலைவிட்டு அவள் அகன்ற நொடி ஈஷ்வர் அவளின் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் வார்த்தைக்கு எதிர் பேச்சு பேசவே பெரிய பெரிய ஆட்களே யோசிக்கும் நிலையில் அவள் தன்னை நிராகரித்து சென்றதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைக்கு வெளியே வந்து படியிறிங்கியவளைப் பார்த்து, "சூர்யா ஸ்டே தேர்" என்று குரல் கொடுத்தான். "ஃபார் வாட்?" என்று திரும்பிக் கூட பார்க்காமல் அவள் கேள்வி எழுப்ப, "என்ன சொன்ன? திரும்பி என் முகத்தைப் பார்த்து சொல்லு" என்றான். "நீங்க என் முகத்தைப் பார்த்து பேசுனீங்களா? அப்புறம் நான் மட்டும் ஏன்?" என்று அவனின் செயலை அவனுக்கே குத்திக் காட்டினாள். ஈஷ்வர் ஆவேசத்தோடு, "ஜஸ்ட் நவ் ஐ செட்... உன் திமிரையும் தலைகணத்தையும் என்கிட்ட காட்டாதேன்னு... இப்படி நீ என்கிட்ட நடந்துக்கிறதுக்காக அப்புறம் நீ ரொம்ப வருத்தபட வேண்டியிருக்கும்” என்றான் கடுமையாக! "பரவாயில்ல" என்று சொல்லிவிட்டுத் திரும்பி பார்க்காமலே, "பெட்டர் திமிரும் தலைகணம் இல்லாத வேற ஏதாவது ஒரு ஆளை உங்களுக்கு அடிமையாய் வைச்சுக்கோங்க... அப்படிப்பட்ட ஆள் நான் இல்ல" என்று உரைத்துவிட அவள் சுந்தரின் மகள் என்ற ஒரே காரணத்தினாலேயே அவன் இத்தனை தூரம் அவளிடம் பொறுமையாய் பேசிக் கொண்டிருந்தான். இப்போது அத்தகைய எல்லையை அவள் மீறிவிட கதவருகில் வெளியேற போனவளிடம், "இனிமே ரா க்ரூப் ஆஃப் கம்பனிஸுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்ல... அன் ஐம் ஃபைரிங் யூ ரைட் நவ்" என்று சத்தமாக அவள் காதுபட உரைத்துவிட்டு தன் கோபத்தைக் கட்டுபடுத்தும் வழி தெரியாமல் நின்றான். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் இவர்களின் சம்பாஷணைகளும் கோபங்களும் வெறுப்புகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமலே அரங்கேறிவிட்டதுதான். ஈஷ்வரின் அதிகாரம் சூர்யா முன்னிலையில் தோற்றுப் போக, ‘ஐம் பைஃரிங் யூ’ என்ற அவனின் கடைசி வாக்கியத்தைக் கேட்டப் பின் அவள் வெளியேறாமல் நின்றாள். அந்தச் சூழ்நிலையில் அவள் அப்படியே சென்றிருந்தால் அவர்களின் சந்திப்பு இப்பிறவியில் நிகழாமல் கூட போயிருக்கலாம். ஆனால் சூர்யா என்ன எண்ணினாலோ மீண்டும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவள் அவன் ஈகோவை மேன்மேலும் சீண்டும் விதமாய் மாடியில் நின்றபடி எங்கோ பார்த்து கொண்டிருந்தவனை, "அது உங்களால் முடியாது மிஸ்டர் ஈஷ்வர்" என்று அவனைத் தலைதூக்கிப் பார்த்தபடி உரைத்தாள். இப்போது அவள் தன் பெயரைச் சொல்லி அழைக்கிறாளா எனக் கட்டுக்கடங்கா சீற்றத்தோடு நிமிர்ந்து பார்த்தவனுக்குப் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவள் முகத்தை உள்வாங்கிய விழிகள் ஸ்தம்பித்தன. அவளோ அவனை அலட்சியமாய் நோக்கி, "ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோங்க... நான் அவந்திகா மேடம் சொல்லிதான் உங்களுக்கு அசிஸ்ட் பண்ண வந்தேன்... என்னை டிஸ்மிஸ் பண்ற அதிகாரம் உங்களுக்கு இல்ல... மேடமுக்கு மட்டும்தான் அந்த அதிகாரம் உண்டு... காட் இட்" என்று திமிராய் சொல்லிவிட்டு விரைவாய் வெளியேறிவிட ஈஷ்வரோ பேச வார்த்தையின்றி நின்றான். அவனின் ஆழ் மனதில் அழுத்தமாய் பதிந்திருந்த முகம் அது. அன்று மரணத்தருவாயில் அவனை உயிர்ப்பிக்க செய்த அவளின் பிம்பித்தை நீண்டநாளைய காத்திருப்புக்குப் பின் இன்று நிஜரூபமாய் தரிசித்துவிட்டான். ஆனால் அவளோ அவன் மீது வெறுப்பை உமிழ்ந்துவிட்டுப் போகிறாள். அவனை நிராகரித்துவிட்டுப் போகிறாள். பிறந்ததிலிருந்து இந்நாள் வரை யாருமே அவனை அவமரியாதையாக கூட பேசாத நிலையில் அவள் அலட்சியமாய் பார்த்து அவமானப்படுத்திவிட்டுப் போகிறாள். இத்தனை நேரமாய் அவளைப் பார்க்காமல் பெரும் தவறிழைத்துவிட்டோம் என்று அவனுக்குள் தோன்றியது. அவளைப் பார்த்த நொடியே மீண்டும் தொலைத்துவிட மனமில்லாமல் செக்யூரிட்டிக்கு ஃபோன் செய்து எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளை வெளியேற அனுமதிக்க கூடாது என்று பணித்தான். ஆதலால் சூர்யாவை கேட்டில் நின்றிருந்த காவலாளிகள் வெளியேறவிடாமல் தடுக்க அவள் வெகுநேரம் சண்டைப்பிடித்து பார்த்தும் பலனில்லை. அந்தச் சமயத்தில் செக்யூரிட்டி அறையிலிருந்த ஃபோன் ஒலித்தது. ஈஷ்வர் எடுத்து பேசிய காவலாளியிடம் சூர்யாவிடம் பேச வேண்டும் என வினவினான். அவள் கோபத்தோடு ரிசீவரை காதில் வைத்து, "நான் போகணும்... கேட்டை ஓபன் பண்ண சொல்லுங்க" என்றாள். "உள்ளே வா சூர்யா... நான் உன்கிட்ட பேசணும்" என்று சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பைத் துண்டித்தான். அவளுக்குள் அவனின் பேச்சு இன்னும் கோபத்தை அதிகமாய் தூண்டிவிட்டது. நேரம் கடந்து செல்ல செல்ல தன்னை அவனால் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் அவள் வேறுவழியின்றி திரும்பி வந்தாள். அங்கே ஈஷ்வர் முகப்பறையில் போடப்பட்டிருந்த பிரமாண்டமான சோஃபாவில் கால் மீது கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்தபடி இருந்தான். அவன் பார்வை அழுத்தமாய் அவள் வரவை எதிர்பார்த்தபடி வாசல்புறம் பதிந்திருந்தன. சூர்யா உள்ளே வந்ததும் ஈஷ்வரைக் கோபத்தோடு நோக்க, அவன் முகத்தில் கோபத்திற்கான சுவடே இல்லாதது அவளுக்கு வியப்பளித்தது. ஆனால் அவன் கண்களில் வெளிப்படும் காதல் உணர்வை அவள் கவனிக்க தவறினாள். ஈஷ்வர் சூர்யாவைக் கண்ட நொடி அவளை தன் விழிகளால் சிறையெடுத்தான். தன் மனதை கவர்ந்தவளின் முகம் கோபத்தால் சிவந்திருப்பதை அவன் விழிகள் கண்டுகொள்ள அவளை எவ்விதம் கையாள்வது என்ற யோசனையோடு, "கம்மான் சூர்யா...ஸிட்" என்று அவன் அருகிலிருந்த இருக்கையைக் காட்ட, அவளுக்கு அவனின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதிலும் சற்று நேரத்திற்கு முன்பு தன்னிடம் கோபமாய் பேசியவனுக்கு அத்தனை சீக்கிரத்தில் என்ன நிகழ்ந்திருக்கும் என அவள் குழப்பத்தோடு நின்றிருக்க... "சூர்யா உட்காரு... பேசணும்னு சொன்னேன்" என்று அழுத்தமாக உரைத்தான். அவள் இப்போது தெளிவு பெற்றபடி விழிகளை உயர்த்தி, "சாரி மிஸ்டர் ஈஷ்வர்... நான் போகணும்" என்றாள் பிடிவாதமாக. அவளின் திமிரையும் அகந்தையும் ரசித்தவன் அலட்சியம் நிறைந்த பார்வையோடு, "போ... நான் என்னவோ உன் கையைப் பிடிச்சு தடுத்த மாதிரி இருக்கே" என்றான். "செக்யூரிட்டிக்குகிட்ட என்னை வெளிய போக விடாம ஸ்டாப் பண்ண சொல்லிட்டு இப்போ போன்னு சொல்றீங்க... என்ன நினைச்சுட்டிருக்கீங்க உங்க மனசுல... இப்படி எல்லாம் பண்ணா... பயந்திருவேனா?!" என்று அவனை நோக்கி தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க "ரிலேக்ஸ்... இப்ப என்னாயிடுச்சுன்னு இவ்வளவு டென்ஷன்" என்று கேட்டபடியே எழுந்து நின்றான். அவனின் கம்பீரம் சற்று அவளை அசர வைத்தாலும் அவள் தன் பிடிவாதத்தில் இருந்து அசைந்து கொடுக்காமல், "நத்திங்... இப்ப நான் போகணும்... கேட்டை ஓபன் பண்ண சொல்றீங்களா?" என்றாள். ஈஷ்வரின் பொறுமை கரைந்து போக அவளை நெருங்கி நின்றபடி, "இப்படியே பிடிவாதம் பிடிச்சன்னா... சாரி டூ ஸே... நீ இங்கிருந்து போகவே முடியாது" என்று அவன் பார்வை அவளையே குறி வைக்க, சூர்யா பதட்டமடைந்தவளாய், "என்ன விளையாடிறீங்களா... ஐ ஹேவ் டூ கோ" என்று அவனிடம் இருந்து சற்று விலகி நின்றாள். அவன் விஷமமாய் புன்னகைத்து, "விளையாடறேனா... ஐம் சீரியஸ்..." என்றான். சூர்யா இப்போது தான் அவனின் எல்லைக்குள் இருக்கிறோம். அவனின் கோபத்தைத் தூண்டிவிடுவது போல் பேசுவது நல்லதில்லை என்பதை உணர்ந்தவள் சற்று நிதானித்து, "ஏன் இப்படி பண்றீங்க... என்னதான் வேணும் உங்களுக்கு?" என்று கேள்வியாய் அவனைப் பார்த்தாள். "என்கிட்ட வேலை செய்றதுல உனக்கு என்ன பிரச்சனை... அதுக்கான காரணம் எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்" என்று கேட்டான். "என் சுயமரியாதை பாதிக்கிற மாதிரியான இடத்துல என்னால ஒரு நிமிஷம் கூட வேலை செய்ய முடியாது... நெவர்" என்றாள். "ஸீர்யஸ்லீ ஐ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட்... அப்படி என்ன நான் உன் சுயமரியாதையைப் பாதிக்கிற மாதிரி பேசிட்டேன்" என்று வினவினான். "உங்களுக்குப் புரியாது... அடுத்தவங்களோட உணர்வுகள் உங்களுக்கு சுத்தமா புரியாது... ஏன்னா உங்களுக்கு எல்லாத்துக்கும் கோபப்படணும்... எல்லார்க்கிட்டயும் கோபப்படணும் ... நல்லா யோசிச்சு பாருங்க... என்னை நீங்க பேச வீட்டீங்களா... அட்லீஸ்ட் என்கிட்ட ரீஸானாவது கேட்டீங்களா... நீங்களா திட்டினீங்க கோபப்பட்டிங்க... தென் மன்னிச்சிட்டீங்க... அதெல்லாம் கூட பரவாயில்ல... நான் கால் அட்டெண்ட் பண்ணாததுக்கு என் திமிரு தலைகணம்தான் காரணம்னு நீங்களே முடிவு பண்ணிக்கிட்டீங்க... என்ன மாதிரியான ஆட்டிட்டியூட் அது... எல்லோரையும் உங்க காலடில வைச்சுக்கணும்... அப்படிதானே? பட் நான் அதுக்கு ஆளில்ல" என்று அவனின் மீது வரிசையாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் இயல்பாக அவனே இவ்விதம் மற்றவர்களை நிற்க வைத்து குற்றம் சாட்டுவான். இப்போது அத்தகைய அனுபவத்தை அவள் தனக்கே தந்துவிட்டாள் என்பதை எண்ணி அவனுக்குள் சிரிக்கவே தோன்றியது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான் எனினும் அதனை தன்னெதிரே நின்று கொண்டு முகத்திற்கு நேராய் உரைக்கும் அவளின் துணிவு அவளின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க... அந்த நொடி மொத்தமாய் அவள் அவனைக் கவர்ந்திழுத்தாள். "ஸோ... நான் உன் சுயமரியதை பாதிக்கிற மாதிரி பேசிட்டேன்... அதுதான் உன் பிரச்சனை... ரைட்" என்று அவன் புன்னகையோடு அமைதியாகவே வினவ அவளுக்கு வியப்பானது. சூர்யாவிற்கு தான் பேசிக் கொண்டிருப்பது ஈஷ்வரிடம்தானா என சந்தேகம் உண்டாகத் திகைப்போடு நின்றிருந்தவளை நோக்கி, "இப்பவும் மிஸ்டேக் உன் மேலதான் சூர்யா" என்றான். "வாட்... என் மேல மிஸ்டேக்கா?" என்று அவள் அதிர்ச்சியாக, "நீ ஒழுங்கா ஃபோனை அட்டென்ட் பண்ணியிருந்தேன்னா... இவ்வளவு பிரச்சனையே இல்லேல" என்றான். "நான் பண்ணது மிஸ்டேக்தான்... ஆனா நான் ஒன்னும் இன்டென்ஷன்ல உங்க ஃபோனை அட்டென்ட் பண்ண கூடாதுன்னு நினைக்கல... ஃபோன் ஸைலன்ட்ல இருந்ததினாலதான் அப்படி நடந்து போச்சு” என்றாள். "கரெக்ட் அதே போலதான் நானும் ஜஸ்ட் கோபத்துல பேசிட்டேனே தவிர உன் சுயமரியாதைப் பாதிக்கிற மாதிரி பேசனும்னு இன்டென்ஷன்ல பேசல... புரிஞ்சுக்கோ... உனக்கு என் மேல ஏதோ தப்பான அபிப்பிராயம்... அதானாலதான் சாதாரணமா நடந்த விஷயத்திற்கு நீயே ஏதேதோ காரணம் கற்பிச்சுக்குற" என்று ஈஷ்வர் உரைக்க அவள் பேச்சற்று நின்றாள். அதுவும் அவள் வார்த்தையைக் கொண்டே அவளை மடக்கிய அவன் சாமர்த்தியம் அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதேநேரம் ஈஷ்வர்தேவ் எல்லா விஷயங்களையும் கோபமாகவும் அதிகாரமாகவும் கையாள்பவன் என்ற அவளின் எண்ணம் இப்போது முற்றிலும் தவறு என்று தோன்றுமளவுக்கு அவன் பிரமாதமான தன் பேச்சு வல்லமையைக் காட்டிவிட்டான். அதுவும் இப்படியானவன் தன் கோபத்தை விடுத்து அவளை சமாதானப்படுத்த இத்தனை தூரம் இறங்கி வர வேண்டிய அவசியமென்ன? இந்தக் கேள்விக்கான விடையை அவள் ஆராய்ந்து கொண்டிருந்தாள். அப்போது அவனோ, "தப்பு இரண்டு பக்கமும் இருக்கு... ஸோ இந்தப் பிரச்சனையையும் இப்படியே விட்டிரலாம்னு நினைக்கிறேன்... இல்ல முடியாதுன்னு நீ நினைச்சன்னா... உங்க மேடமுக்கு இப்பவே கால் பண்ணி ஈஷ்வர்தேவுக்கு அசிஸ்டன்ட்டா வொர்க் பண்ண எனக்கு விருப்பமில்லைன்னு சொல்லிடு" என்றுரைக்க அவள் அவனை அதிர்ச்சியாய் பார்த்தாள். அவனோ அவள் நாடியை சரியாய் பிடித்திருந்தான். அவள் அவ்வாறு செய்ய மாட்டாள் என்று அவன் தெளிவாய் யூகித்தே அவ்விதம் உரைத்தான். அவள் இப்போது இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டாள். அவனே இந்தளவுக்கு விட்டுக்கொடுத்து இறங்கிவரும் போது தானும் இப்போது இறங்கி வந்தே தீர வேண்டும் என்ற நிலையில் அவள் தன் மௌனத்தைக் கலைத்தபடி, "அவசியமில்ல... வீ லீவ் திஸ் மேட்டர்" என்று உரைத்தாள். ஈஷ்வர் வெற்றி புன்னகையோடு, "தட்ஸ் குட்... அப்போ கொஞ்சம் வேலையைப் பத்திப் பேசுவோமா?" என்று கேட்டான். அவன் மேலும் மேலும் அவனின் பேச்சாலும் செயலாலும் அவளை வியப்புறச் செய்ய அவனின் எண்ணத்தைக் கணிக்க முடியாமல், "ம்ம்ம்" என்று தலையசைத்தாள். "சென்னை ஆஃபிஸ் மீட்டிங் பத்தி" என்று அவன் சொல்லி முடிப்பதற்கு முன்னதாக, "நான் நேத்தே மீட்டிங் பத்தி மெயில் பண்ணிட்டேன்... மோரோவர் ஜீ. எம் கிட்டயும் இதைப் பத்திப் பேசிட்டேன்" என்றாள் சூர்யா. "ரியல்லி... நான் சொல்லிறதுக்கு முன்னாடியே நான் நினைச்சதை முடிச்சிட்ட... குட் ஜாப் சூர்யா... " என்று அவன் வியந்து பாராட்ட சற்று நேரம் முன்பு அவர்களுக்கு இடையிலான இறுக்கமான சூழ்நிலை தளர்ந்திருந்தது. இருவரும் சில நிமடங்கள் வேலையில் மும்முரமாக இறங்கிவிட ஈஷ்வராலோ சூர்யாவின் அருகாமையில் அப்படி முழுமையாக வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அவ்வப்போது அவள் மீது லயிக்க, "பாஸ்" என்று அழைத்து அவள் அவனை மீட்டெடுக்க வேண்டியதாக இருந்தது. ஒருவாறு அவர்களின் சம்பாஷணை முடிந்து சூர்யா, "ஓகே பாஸ்... நாளைக்கு மார்னிங் சென்னை ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்" என்று புறப்பட்டாள். "எதுக்கு தேவையில்லாத அலைச்சல்... பெட்டர் நீ இங்கயே தங்கிடு" என்று அவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவன் உரைக்க அவளுக்குப் பதட்டமானது. "நோ பிராப்ளம்... நாளைக்கு நான் ஷார்ப்பா டைமுக்கு வந்திடுறேன்... இப்போ நான் கிளம்பிறேன்" என்று அவள் தவிர்க்க, ஈஷ்வர் சலிப்போடு, "தென் யுவர் விஷ்..." என்றான். சூர்யாவிற்கு ஈஷ்வரின் மீதான வெறுப்பெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்தச் சந்திப்பின் மூலம் அவனின் மீதான அபிப்பிராயம் ஓரளவு மாறியிருந்தது. அதற்கு காரணம் ஈஷ்வரின் பேச்சு வல்லமை. அவளை அதிகாரத்தால் கையாள முடியாது என்பதை உணர்ந்தவன் அதற்கேற்றாற் போல் அவளிடம் பேசி தன் விருப்பத்திற்கு இணங்க வைத்துவிட்டான். அவளிடம் அவன் விட்டுக் கொடுத்ததெல்லாம் மேலோட்மாய் ஒரு மாயை. அவளின் கோபத்தைக் குறைக்க அவன் கையாண்ட யுக்தி. சூர்யாவிற்கு இது புரியாமல் இல்லை. ஆனால் ஏன் தன்னை அவன் சமாதானப்படுத்த இத்தனை ஆர்வம் காட்டுகிறான் என்ற கேள்வி அவள் மனதைத் துளைத்த அதே சமயத்தில் ஈஷ்வரின் மனமும் அவளைக் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தது. அவளின் நேர்த்தியான தேக அமைப்பும் பிறையாய் நுதலும்... அழகாய் வளைந்திருந்த புருவமும்... கர்வமாய் நிமிர்ந்திருக்கும் விழிகளும்... மென்மையான பூவிதழென மாயைக் கொள்ள செய்யும் உதடுகளுமென அவள் வதனம் எங்கேயோ அவன் நினைவுகளை இழுத்துச் செல்ல, சூர்யாவின் அழகு மட்டுமல்ல... அவளின் கோபம் திமிர் கர்வம் என எல்லாமுமே அவனை வசீகரிக்க அவள் தனக்கே உரியவள் என்று எண்ணத்தை அழுத்தமாய் அந்த முதல் சந்திப்பிலேயே பதிய வைத்து கொண்டான். ஆனால் அடுத்த நொடியே அவன் கைப்பேசி ஒலித்து அந்த எண்ணணத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா