மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Muran KavithaigalMuran kavithaigal - 11Post ReplyPost Reply: Muran kavithaigal - 11

Quote from monisha on September 15, 2022, 9:25 PM

11
ஒன்று இரண்டு மூன்று என்று குக்கரின் விசில் சத்தம் தொடர்ந்தது. ரேணு இட்லி மாவை இட்லித் தட்டில் ஊற்றிப் பாத்திரத்தை மூடியவர் தண்ணீரில் ஊறப் போட்டிருந்த வெங்காயத்தின் தோலை உறித்து நறுக்கத் தொடங்கினார். குக்கரில் விசில் சத்தம் தொடர்ந்தது. அவசரமாக எட்டி அதன் அடுப்பை அணைத்தவர் தக்காளியை நறுக்கும் போது கவனியாமல் கை விரலில் வெட்டிக் கொண்டார். வலி உயிர் போனது. இரத்தம் பீறிட்டது. வலியை விடவும் அதிகமாக வேலை தடைப்படுகிறதே என்றுதான் கவலையாக இருந்தது. குழாயைத் திறந்து தண்ணீரில் கை வைத்தார். இரத்தம் நிற்காமல் வெளியேறியது. ‘கடவுளே இந்த இரத்தம் நின்னு தொலைய மாட்டேங்குதே’ என்ற கடுப்புடன் அவர் வெளியே குளிர்சாதனப்பெட்டிக்கு விரைந்து ஐஸ் க்யூப் ஒன்றை எடுத்தார். அப்போது ஹாலில் அமர்ந்து ஆசுவாசமாக மாதவனும் உதய்யும் காலை நேர செய்தியைப் பார்த்திருந்தனர். போகிற போக்கில் அந்த செய்தியாளரின் குரல் ரேணுவின் செவிகளையும் எட்டியது. இரண்டாவது அலையில் கொரானாவின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்தார். அவர் திரும்பி பார்க்க அந்தத் தொலைக்காட்சித் திரை கொரானா நோயாளிகள் அதிகரித்து கொண்டிருப்பதைக் குறித்து புள்ளி விவரங்களைக் காட்டிக் கொண்டிருந்தது. கணநேரம்தான் என்றாலும் அதைப் பார்த்த நொடி நெஞ்சம் படபடத்தது. வீட்டில் கைக் குழந்தையை வைத்திருக்கும் எண்ணம்தான் பிரஞ்ஞையில் வந்து போனது. உதய் மாமனாரிடம் பேசுவது அவர் காதில் விழுந்தது. “தேர்தல் முடிஞ்சு ரிசல்ட் வர வரைக்கும் ஒன்னும் கண்டுக்கல… இப்போ அதிகமாயிடுச்சுனு புலம்புறானுங்க” என்று கூற, “ஆமா மாப்பிளை… அனேகமா லாக்டௌன் போட்டிருவாங்கனுதா நினைக்கிறேன்” என்றார் மாதவன். அறையிலிருந்து வெளியே வந்த மிருதுளா, “அப்போ இந்த வருஷமும் ஸ்கூல் ஆரம்பிக்க மாட்டாங்களா?” என்று கவலையுடன் கேட்க, “உஹும் சான்சே இல்ல” என்றான் உதய். இவர்கள் பேச்சுக்கு இடையில், “மிருதுளா இங்கே வா” என்று ரேணு அழைக்க, “தோ வரேன் மா” என்று சமையலறைக்குள் விரைந்தாள். “உன் வீட்டுகாருக்கும் உனக்கும் டீ போட்டு வைச்சு இருக்கேன்… கொஞ்சம் சூடு பண்ணி கப்ல ஊத்திட்டுப் போய் கொடு” என்றார். “நீ வேற மா… நானே காலையில மூட் அப்செட்ல இருக்கேன்” என்றவள் கடுகடுக்க, “என்னடி பெரிய மூட் அப்செட்… கொரானா வந்தாலும் போனாலும் எல்லோருக்கும் நேரா நேரத்துக்கு வயித்துக்கு சாப்பிட்டுதானே ஆகணும்” என்றவர் பதிலுக்கு ஏறினார். “நான் இல்லன்னு சொல்லலயே… ஆனா இந்த நியூஸ்லாம் பார்த்து எப்படி எப்பவும் போல நார்மலா இருக்கிறதுன்னு எனக்கு புரியல” “ஒரு டீயைச் சூடு பண்ணிக் கொடுக்க சொன்னதுக்காடி இவ்வளவு பேசுற” “ம்மா… சும்மா டீ டீன்னு… நான் என்ன பேசிட்டு இருக்கேன்… நீ என்ன பேசிட்டு இருக்க… என் பிரச்சனை உனக்கு சொன்னாலும் புரியாது… பசங்க படிப்பு வீணா போகுதேன்னு எனக்குதான் மண்டை காயுது… இதுல ஆஃபிஸ்ல வொர்க் ஃப்ரம் ஹோம்னு சொல்லி நேரங்காலம் இல்லாம வேலை வாங்கி சாகடிக்கிறானுங்க” என்றவள் சரமாரியாகப் பேசத் தொடங்க, “அம்மா தாயே! நீ இங்க நின்னா எனக்கு ஒரு வேலையும் ஆகாது… உன் டென்ஷனை என் மண்டைல ஏத்திடுவ” என்றவர் எரிச்சலுடன் மொழிய, “எனக்கும் அப்படிதான் ஆகுது” என்றவள் சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு அவள் பாட்டுக்கு வெளியேறிவிட்டாள். வேறு வழியின்றி அவரே தேநீரை சூடு செய்து கப்பில் ஊற்றிய கையோடு சாதனாவிற்கும் ஹார்லிக்ஸ் தயாரித்து ஆற்றிய போது அடிப்பட்ட விரலில் சூடான ஆவி பட்டு ஜிவ்ஜிவ்வென்று வலி இழுத்தது. “ஸ்ஸ்ஸ்” என்று அவஸ்த்தையுடன் கையை உதறிக் கொண்டே உதயிடம் தேநீரைக் கொடுத்துவிட்டு சாதனாவின் அறையில் எட்டிப் பார்த்தார். குழந்தை பிறந்த போதிருந்த கொஞ்சம் நஞ்சம் தெளிவு கூட இப்போது இல்லை. ஏதோ நிரஞ்சனின் திருமணம் பாப்பாவுக்குப் பெயர் வைக்கும் விழா என்று சேர்ந்தார் போல பதினைந்து நாள் இருந்துவிட்டு ஓடிவிட்டான் அவள் கணவன். மீண்டும் கொரானா இரண்டாவது அலைத் தொடங்கியதில் அவள் மனம் அல்லாடியது. இப்போது இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடாதோ என்று யோசிக்க தொடங்கிவிட்டாள். முதல் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தம்பதிகளாக அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களை அவர்கள் தொலைத்துக் கொண்டிருப்பதால் உண்டாகும் மனவேதனை ஒரு வகையில் கணவன் மனைவி இருவரின் மனநிலையையும் பாதித்தது. “எனக்கு உங்களைப் பார்க்கணும் போல இருக்கு” என்று அவள் ஏக்கத்துடன் பேச, “சாதனா… இந்தா ஹார்லிக்ஸ்” என்று ரேணு அறைக்குள் வந்து அந்த டம்ளரை வைக்க அதனைப் பார்த்து முகம் சுளித்து, “எனக்கு இதைக் குடிக்கவே பிடிக்கல… டீ கொடேன் மா” என்று அவள் தாயைத் தவிப்புடன் பார்த்து வைத்தாள். மகளை முறைத்துப் பார்த்தவர், “குழந்தைக்கு பால் சரியா வர மாட்டேங்குதுன்னு புலம்பிட்டு டீ கொடு காபி கொடுன்னு… உதை விழும்… ஒழுங்கா குடி” என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறும் போது அந்த சம்பாஷனையைக் கைப்பேசியில் கேட்ட கௌஷிக், “ஒழுங்கா ஹார்லிக்ஸ் குடி” என்று பதிலுக்கு அவனும் ஏறினான். “ஆமா ஆமா… இதைக் குடி அதைக் குடின்னு எங்கேயோ உட்கார்ந்திட்டு சொல்றது ஈஸி… குழந்தையைப் பெத்துட்டு இராத்திரி பகல் தூக்கம் இல்லாம… பிடிச்சதை சாப்பிட முடியாம அவஸ்த்தைப்படுற என் கஷ்டம் எனக்குதான் தெரியும்” என்று அவள் வெறுப்புடன் பதில் கூற, “நான் என்ன… உன்னை விட்டுட்டு டூரா வந்திருக்கேன்… இஷ்டத்துக்குப் பேசுற… தினம் தினம் கொரானா பேஷன்ட்ஸ் கூட மல்லுக்கட்டிட்டு இருக்கேன்… அதுவும் அந்த பிபிஇ கிட்டை போட்டுட்டு இந்த வெயில வேலை செய்றதோட கஷ்டம் எல்லாம் உனக்கு புரியாது” என்றவன் அந்தப் பக்கம் கடுப்பாகக் கத்தத் தொடங்கினான். ஏக்கத்தில் தொடங்கி எப்போதும் போல் அவர்கள் உரையாடல் சண்டையில் முடிந்திருந்தது. இதனால் தினம் தினம் அவள் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தாள். ரேணுவிற்குதான் மகளின் புலம்பலைக் கேட்டு ஒரு மாதிரி அலுப்பு ஏற்பட்டது. “நீ படிச்சவதானே… ஏன் டி இப்படி இருக்க?” என்று கேட்டதற்கு, ஒருமுறை, “ம்மா… இது ஒரு மாதிரி மனநலப் பிரச்சனை… குழந்தை பெத்த எல்லா பெண்களுக்கும் வரும்… இதுக்கு பேர் போஸ்ட்பார்ட்ம் டிப்ரஷன்… நீ அது தெரியாம எனக்கு அட்வைஸ் பண்ணாதே” என்று அவள் அறிவியல் பெயரொன்றைச் சொல்லி எரிந்து விழுந்தாள். இதை நினைத்து கொண்ட ரேணு தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டார். ‘நான் கூடதான் மூணு பெத்தேன்… எனக்கு இப்படி எல்லாம் வந்துச்சா என்ன? ம்க்கும்… வந்திருந்தாலும் யாருக்குத் தெரிஞ்சிருக்க போகுது… அம்மாவுக்கு உடம்பு சரியில்ல ஒரு மாசம்தான் ரெஸ்ட் எல்லாம்… அப்புறம் பழையபடி ஓட்டம்’ அதுவும் சாதனா கருத்தரித்த போது நடந்ததெல்லாம் அவர் கண் முன்னே இப்போது பளிச்சென்று வந்து போனது. மூன்றாவது குழந்தைக்கு அவர் துளியும் விருப்பப்படவில்லை. கருவைக் கலைத்துவிடலாம் என்று மனதில் எழுந்த எண்ணத்தைச் சொன்ன போது மாதவன் குடும்பமே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது. வேறு வழியின்றி முடிந்தும் முடியாமல் அவளைப் பெற்றெடுத்து வளர்த்து… என்று ரேணுவின் சிந்தனை அலைகள் கரையில்லாமல் பாய்ந்து கொண்டிருக்கும் போதே கைத் தானாக காலை உணவை முடித்திருந்தது. இட்லியையும் குருமாவையும் உணவு மேஜை மீது எடுத்து வந்து வைத்தவர், குழந்தைக்குத் தேங்காய் போட்டது செரிக்காது என்று சாதானாவுக்கு மட்டும் தனியாக வாணலியில் வதக்கி வைத்தத் துவையலை மிக்ஸியில் போட்டு அரைத்தார். அவர் வேலையை முடிக்கும் போது எப்போதும் போல மகனும் மருமகளும் கீழே வந்தார்கள். ஆடி அசைந்து பத்து மணிக்கு வருபவர்கள் இன்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிட்டார்கள். வழக்கம் போல ஜோ உற்சாகமாக குட் மார்னிங் சொல்லவில்லை. சோஃபாவில் இயல்பாக அமர்ந்தாள். உணவு உண்ணும் போது கூட ஒருவித இறுக்கமான மௌனத்தைக் கடைபிடித்தாள். நிரஞ்சன் கண் காட்டியதில் தன் தட்டை எடுத்து சிங்கில் போட்டாள். மீண்டும் அவள் மாடியில் தன் அறைக்குச் சென்றுவிட மிருதுளா தம்பியிடம், “ஏன் டா உன் பொண்டாட்டி மூஞ்சியை முதுகு பக்கம் திருப்பி வைச்சு இருக்கா… மேடம் கொஞ்ச நேரம் கீழே நம்ம கூட உட்கார்ந்து பேச மாட்டாங்களோ” என்று குற்றம்சாட்ட அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மருமகள்கள் எது செய்தாலும் குற்றம். ஜோ அறைக்குத் திரும்பிய போது அவளைப் பின்தொடர்ந்து வந்த தருண், “நாம கேம் விளையாடலாமா ஜோ” என்று கேட்க, “என்ன கேம்?” என்றவள் ஆவலாகக் கேட்க, “மாமா டிவில நிறைய கேம் இருக்கு நான் காட்டுறேன்” என்றவன் டிவியை இயக்கினான். அதன் பின் அவன் காட்டிய விளையாட்டுகளில் ஜோவும் மிகவும் ஆர்வமாக அவனுடன் விளையாட தொடங்கிவிட்டாள். ரேணு காலை வேலைகளை முடித்து தோட்டத்திற்கு வந்த போது ஒரே சத்தமாக இருந்தது. “டேய் தருண்… அதுல ஏறாத மாட்டிக்குவ…” “நான் அவுட் ஆகப் போறேன் போல” “டேய் ஜம்ப் ஆக மாட்டேங்குதுடா” “டாப் அன் லெப்ட் கீ யைச் சேர்த்து பிரஸ் பண்ணு ஜோ” ஜோவும் தருணுக்கு சரிக்கு நிகராக படுக்கையின் மீது ஏறி முட்டிப் போட்டுக் கொண்டு அதகளம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து ரேணுவுக்கு எரிச்சல் மூண்டது. “என்ன பொண்ணு இவ… ஊருல பொண்ணே இல்லாத மாதிரி இவளைப் போய் தேடிப் பிடிச்சு கல்யாணம் செஞ்சிட்டு இருக்கான்” என்று தலையிலடித்துக் கொண்டவருக்குக் கோபம் தாறுமாறாக ஏற, “தருண்” என்று கத்தினார். “அம்மம்மா” என்றவன் அதிர்ந்து நின்றுவிட ஜோ அவசரமாக கால்களை மடித்து அமர்ந்து கொண்டாள். “ஆன்லைன் கிளாஸ் இல்லையாடா உனக்கு” அவன் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு, “இருக்கு அம்மம்மா” என்றான். “எத்தனை மணிக்கு?” என்றவர் கேட்கவும் அவன், “பத்து மணிக்கு” என்று கூற அவர் கண்கள் நேராக கடிகாரத்தின் மீது விழுந்தது. மணி பத்தே கால். அவர் பேரனை முறைக்க அவன் அடித்துப் பிடித்து கீழே ஓடிவிட்டான். அவர் ஜோவையும் அதே போன்ற ஒரு பார்வையைப் பார்த்துவிட்டுத் தோட்டத்திற்குச் சென்றுவிட்டார். சில நொடிகள் என்ன செய்வதென்று புரியாமல் அறைக்குள் நடந்த ஜோ பின் வெளியே வர, ரேணு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். “நீங்க இந்த கார்டனை சூப்பரா மெய்டைன் பண்றீங்க ஆன்டி… சீரியஸ்லி சின்னதா இருந்தாலும் அவ்வளவு நீட்டா அழகா இருக்கு” என்றவள் சொல்ல, ரேணு பதிலேதும் சொல்லாமல் தன் வேலையில் மும்முரமாக இருக்க ஜோ மேலும், “நான் உங்க கார்டனை ஃபோட்டோ எடுத்தது ஃபேஸ் புக்ல போஸ்ட் பண்ணேன்… செம லைக்ஸ்… கமென்ட்ஸ்… இருங்க என் செல்ஃபோன்ல இருக்கு” என்று உள்ளே ஓடியவள் தன் கைப்பேசியை எடுத்து வந்து, “பாருங்களேன்” என்றவள் அந்தப் புகைப்படத்தை எடுத்து வந்து ரேணுவின் முன்பு காண்பித்தாள். தன்னை அறியாமல் அவர் விழிகள் அவள் காட்டிய புகைப்படங்களை ஆராய்ந்தன. மாலை சூரிய ஒளியில் மிக அழகாக அந்தப் படங்களை எடுத்திருந்தாள். அவள் காட்டி முடிக்கும் வரை அவரால் தன் விழிகளை அகற்ற முடியவில்லை. பின் அவளே, “போஸ்ட் மேலே என் ஆன்டியோட கார்டனு போட்டிருந்தேன்… பார்த்தீங்களா லைக்ஸ்… சிக்ஸ் ஹன்டிரடன் செவன்டி எய்ட்” என, அவருக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது. சட்டென்று மனம் ஒரு மாதிரி இலகுவதை உணர்ந்தவர் மீண்டும் விறைத்துக் கொண்டு தோட்ட வேலைகளில் கவனம் செலுத்த, “நிறைய பேர் எப்படி இந்த கார்டனை மெயின்டயின் பண்றீங்கனு கமென்ட்ல ஐடியா கேட்டிருக்காங்க” என்று சொல்ல மீண்டும் அவர் அவளைக் கண்டும் காணதவராக காய்களைப் பறித்தார். அவர் பேசவில்லை என்பதை எல்லாம் யோசிக்காமல் ஜோ தொடர்ந்து, “ஏன் ஆன்டி… நீங்க இந்த கார்டனிங்கை இன்னும் பெருசா பண்ணக் கூடாது” என்று கேட்க, அவர் பொறுமை பறக்க ஆவேசமாகத் திரும்பியவர், “இதையே நான் செஞ்சிட்டு இருந்தா வீட்டு வேலை சமையல் வேலை எல்லாம் யார் செய்றது?” என்று கேட்க, “செர்வன்ட்ஸ் வைச்சுக்கலாமே” என்றவள் இயல்பாகதான் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தை அவர் அடி மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபத்தைக் கிளறிவிட்டது. “நான்தான்மா இந்த வீட்டோட செர்வன்ட்… நான் அதுக்காகதான் இந்த வீட்டுல இருக்கேன்” என்று எள்ளலாகச் சொல்ல, அவள் அதிர்ச்சியானாள். அந்த சமயம் அங்கே வந்த நிரஞ்சன் அம்மாவின் குரலிலிருந்த எரிச்சலை உணர்ந்து, “ம்மா என்னாச்சு?” என்று விசாரித்தான். “உன் பொண்டாட்டிதான் வீட்டு வேலைக்கு எல்லாம் ஏன் ஆள் வைசுக்கலன்னு கேட்டா… அதுக்காகதான்மா நான் இந்த வீட்டுல இருக்கேனேன்னு சொன்னேன்… கரெக்ட்தானே” என்றவர் மகனைப் பார்த்து எகத்தாளமாக கேட்க, “ம்மா ஏன் மா இப்படியெல்லாம் சொல்றீங்க” என்றவன் வருந்தினான். “உன் பொண்டாட்டி கேட்டதுக்குதான்பா நான் பதில் சொன்னேன்” என்றவர் சொன்ன விதத்தில் அவன் ஜோவைத் திரும்பி முறைத்தான். “இல்ல நிரு… நான் அப்படி” என்றவள் பேசுவதை காதில் வாங்காமல் விறுவிறுவென இறங்கிச் சென்றுவிட்ட தன் அம்மாவின் பின்னோடு ஓடிச் சென்று, “ம்மா சாரி அம்மா” என்றவன் கெஞ்ச, “என்கிட்ட தேவை இல்லாம உன் பொண்டாட்டிய பேச வேண்டாம்னு சொல்லு ரஞ்சு” என்று விட்டு அவர் சமையலறைக்குள் சென்றுவிட்டார். இதே மனநிலையுடன் அவன் மேலே தன் அறைக்குள் வர, ஜோ தான் என்ன அப்படி தவறாகச் சொல்லிவிட்டோம் என்று குழம்பியபடி இருந்தாள். நிரஞ்சன் அவள் முன்னே வந்து நின்று, “அறிவிருக்காடி உனக்கு” என்று என்ன ஏதென்று கூட விசாரிக்காமல் எகிறினான். “நிரு… நான் சொல்றதைக் கேளு” “நான்தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல… நம்ம பெங்களூர் போற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசின்னு… அப்புறம் ஏன் தேவையில்லாம அம்மாகிட்ட அதையும் இதையும் பேசிச் சண்டையைப் பெருசாக்குற” என்று கத்த, “நிரு புரிஞ்சிக்கோ… நான் அவங்ககிட்ட சண்டையே போடல” என்றாள். “ஜோ உனக்கு நான் சொல்றதே புரிய மாட்டேங்குது… அவங்க உன்னை மாதிரி ஜாலி டைப் எல்லாம் கிடையாது… ரொம்ப சென்ஸிட்டிவ்… அவங்ககிட்ட நீ எல்லார்கிட்டயும் பேசுற மாதிரி வார்த்தையை விடக்கூடாது” என்றவன் சொல்ல, அவளுக்கு அப்போதும் தான் தவறாக எதுவும் பேசியதாகத் தோன்றவில்லை. ஆனால் நிரஞ்சன் அவள் பக்கத்தைக் கேட்காமல் மேலும் அதே ஆவேசத்துடன், “ஏற்கனவே அம்மா நம்ம கல்யாணத்தால ரொம்ப கோபத்துல இருக்காங்க… இதனால எனக்கும் எங்க அம்மாவுக்கு இடையில பெரிய கேப் உருவாகிடுச்சு… நீ உன் ஸில்லியான பிகேவியரால அதை இன்னும் பெருசு பண்ணிப் பிரிவா மாத்திடாதே” என்றவன் படபடவென பொரிந்து தள்ளிவிட்டுச் சென்றுவிட்டான். ஜோவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவள் படுக்கையில் அப்படியே சரிந்து அமர்ந்து கொண்டாள். ‘அந்தக் குடும்பம் உன் ஆட்டிட்யுடுக்கு செட்டாகாது ஜோ’ என்று அவளின் தந்தை திரும்ப திரும்பச் சொன்னது அவள் காதில் ஒலித்தது. அப்போதும் கூட அவள் மிக உறுதியாக நான் நிருவை காதலிக்கிறேன் அவன்தான் எனக்கு எல்லாம் என்று சொன்னாள். ஆனால் அவனுக்கு தான் எல்லாமுமாக இல்லையோ என்ற கேள்வி அந்த நொடி அவள் மனதைத் தாக்கியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா