மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: SrushtiSrushti - Episode 1Post ReplyPost Reply: Srushti - Episode 1

Quote from monisha on January 4, 2023, 11:33 AM

சிருஷ்டி

1
‘மாற்றம் ஒன்றே மாறாதது.’ பூமியின் சுழற்சி மாறுவதில்லை. ஆனால் இந்தப் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கும் உயிரினங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் மாற்றம் அடைந்து கொண்டேயிருக்கின்றன. அதுவும் மற்ற உயிரினங்களை விட மனிதனின் தேடல் அபரிமிதமானது. மாற்றத்தை நோக்கிய அவன் பயணம் நீண்டு நெடியது. ஆதிவாசிகளாக மனிதன் வேட்டையாடுவதில் தொடங்கிய தேடல் விவசாயத்தில் வளர்ந்து பூமியின் நிலங்களை ஆக்கிரமித்து பின் வளங்களை ஆக்கிரமித்து பணம், பொன், பொருள் மீது பற்றுக் கொண்டு நாடு, இனம், மொழி என்று போட்டியிலும் பொறாமையிலும் பிரிந்து தன் இனத்தைத் தானே அடிமைப்படுத்தி மனித நேயம் நலிந்து மனிதம் மறந்து தன் தேடலின் விளைவாகப் பல உயிரனங்களை எக்ஸ்பைரி நிலைக்குத் தள்ளிய போதும் அவன்/ள் தன் தேடலை நிறுத்திக் கொள்ளவில்லை. தேவையும் தேடலும் ஒரு நிலைக்கு மேல் மனிதனுக்குப் போதையானது. திருப்தியின்மையால் ஓடிக் கொண்டே இருக்கும் மனிதன் தேடலையும் தேவையையும் மறந்து ஆடம்பரத்திற்காக தன் ஓட்டத்தைத் தொடர்ந்தான். இயற்கை பூமியை சிருஷ்டித்தது. பூமி மனிதனை சிருஷ்டித்தது. மனிதன் இயந்திரத்தை சிருஷ்டித்தான். இயந்திரம் அழிவை சிருஷ்டிக்கிறது. இயந்திரன் மனிதனாகும் போது மனிதன் இயந்திரமாக மாறும் தருவாய்! உயிரணுக்களால் உருவாகிய மனிதன் மின்னணுக்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில்… **** மணி 5:59 அந்த இயந்திர கடிகாரம் சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. மணி ஆறு பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்ற எண்ணைத் தொட்டதும் அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த குளிரூட்டி அதுவாக அணைந்துவிட்டது. கூடவே சுற்றிக் கொண்டிருந்த மின்காற்றாடியும் அணைந்துவிட, ‘இது நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம்’ என்று இயந்திரத்தனமாக ஒரு பெண்ணின் குரல் அந்த அறை முழுக்கவும் எதிரொலித்தது. பின் ‘குட்மார்னிங்’ என்ற ஆங்கில பாடல் ஒலித்தது. ‘ஓ! ஷிட்’ என்று எரிச்சல் நிலைக்குச் சென்ற தியா, ‘ஆஃப்தட்மேன்’ என்று தன் கணவனிடம் அதிகாரமாகச் சொல்லிக் கொண்டே தம் காதுகளை மூடிக் கொண்டாள். நாற்பது வயது மடந்தை அவள். ஆனால் யாரும் முகம் பார்த்து அவள் வயதைக் கணித்துவிடமுடியாது. தியாவின் காதுகளுக்கு அந்தப் பாடல் மிக மிக நாரசாரமாக ஒலிக்க, “கரண்… அதை ஸ்டாப் பண்ணுடா… நான் வொர்க் முடிச்சு படுத்ததே நாலு மணிக்குதான்” என்று போர்வையை முழுவதுமாக மூடி காதுகளை தலையணைக்குள் புதைத்துக் கொண்டாள். கரண் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. அவன் அந்தச் சத்தத்தை இம்மியளவும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்த நித்திரையிலிருந்தான். எத்தனை ஹை டெக் இயந்திர அலாரங்கள் வந்தாலும் மனிதன் தானாக உறக்கம் களைந்து எழுந்து கொண்டால்தான்? கரண்தான் அதற்கு உதாரணம். அத்தனை சலசலப்பு சத்தங்களிலும் உறங்கிக் கொண்டிருந்தான். தியாவால் தாங்க முடியவில்லை. “கரண்” என்று அவனைப் போட்டு உலுக்க, துடித்துப் பிடித்து அவன் விழித்துப் பார்த்தான்.  “அந்த அலாரம் பீஸை ஆஃப் பண்ணிட்டு ஏசியை ஆன் பண்ணு” என்றாள். “அதை நீயே எழுந்து ஆப் செய்யலாம்ல” என்று மனைவியிடம் அவன் தூக்கக் கலக்கத்தில் சொல்ல, “நான் எதுக்கு செய்யணும்… நீதான் வாக்கிங் போக போறேன்னு புதுசா சூட் ஷூ வாங்கின… அப்புறம் இந்த இன்டெலிஜென்ட் நானோடெக் அலாரத்தை வாங்கி ஆறு மணிக்கு செட் பண்ணி வைச்ச… அது தினைக்கும் அடிச்சு உயிரை எடுக்குது.  போதாக்குறைக்கு ஏசி ஃபேன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணித் தொலைக்குது… காசுக் கொடுத்து இந்தக் கர்மத்தை வாங்கி மாட்டி வைக்கலன்னு யார் அழுதா?” என்று தன் உறக்கம் பறிபோன கடுப்பில் தியா புலம்ப, “உன் கத்தலுக்கு அந்த அலாரமே பெட்டர்” என்ற கரண் தாங்க முடியாமல் உறக்க நிலையில் தள்ளாடிக் கொண்டே எழுந்து அந்த அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் குளுரூட்டியை இயக்கிவிட்டு, தன் போர்வைக்குள் வந்து சுருண்டுக் கொண்டான். “அப்போ இன்னைக்கு நீ வாக்கிங் போக போறதில்ல” என்றவள் சலிப்போடு கேட்க, “நைட் வொர்க் முடிக்க ரொம்ப நேரமகிடுச்சு பேபி… ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள் மட்டும்” என்று அவன் விழிகளை மூடிக் கொள்ள, “டையிலி இதே சாக்கு… எப்படியோ போ? இனிமே வெயிட்லாஸ் பண்றேன் கலோரிஸ் குறைக்கிறேன் அது இதுன்னு சொன்ன… ஐல் கில்யு… முக்கியமா நாளைக்கு அந்த அலாரம் என் ரூம்ல இருந்துச்சு” என்று வசை மாறிப் பொழியத் தொடங்கினாள். வேறென்ன செய்வது. அந்த அலாரம் செவ்வனே தன் வேலையைச் செய்திருந்தது. அவள் உறக்கம் உருக்குலைந்து போக, அவனை மட்டுமே உறங்க விடுவானேன் என்ற நல்லெண்ணம் கொண்டு அவன் காது ஜவ்வு கிழியக் கத்தினாள். “ஓகே ஓகே பேபி… சில்” என்றவன் மனைவியைப் பேச விடாமல் செய்ய அவளை தன் போர்வைக்குள் இழுத்து திணித்துக் கொள்ள, “ஏ கரண் விடுடா” என்று அவளின் கூச்சல் மெல்ல மெல்ல சுருதி இறங்கி முனங்கலாக மாறியது. “கரண் என்ன மார்னிங்கே! விடு நான் தூங்கணும்” என்றவள் பேச்சை அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. “இது கூட கலோரிஸ் குறைக்க நல்ல வழிதாம் பேபி” என்றவன் நடைப்பயற்சிக்குப் பதிலாக காதல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தான் என்று சொல்வதைவிட அவளையும் சேர்த்து ஈடுபடுத்திக் கொண்டிருந்தான். வாழ்க்கை எத்தனை இயந்திரத்தனமாக மாறினாலும் காதலும் காமமும் மனித இனத்தில் மாறாமல் இருக்கும் ஒன்று. அந்த காலைப் பொழுதிற்கான உடற்பயற்சியை முடித்த திருப்தியில் மீண்டும் கரண் போர்வைக்குள் முடங்கி தன் தூக்கத்தைத் தொடர எத்தனிக்க, “ஒழுங்கா அந்த அலாரத்தை நானே எழுந்து ஆஃப் செஞ்சிருக்கலாம்… எனக்கு இதுதேவைதான்… முடியலடா சாமி… முன்னமாதிரியா இருக்கேன்… எனக்கு இப்ப வயசாகால” என்றாள். “நீதானே பேபி நான் இன்னும் யங் அன் எனர்ஜிடிக்னு சொல்லுவ” என்று அவன் கேலியாகக் கேட்க, அது ஒரு வெளிப்புற ஒப்பனை மட்டும்தான் என்று அவள் மனசாட்சிக்கு மட்டும்தானே தெரியும். அவ்வப்போது இப்படி வாய்விட்டு அவளே தன் வயதின் தாக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிட, அதனைச் சரியாகப் பிடித்துக் கொண்டு கலாய்க்கும் கணவனைக் கோபமாக முறைத்து அவன் தோள்களில் அடித்துவிட்டு, “போடா” என்று முடியாமல் அந்தப் படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள். எழுந்து கொள்ள இயலாமல் தலை கிறுகிறுக்க தொடங்கியது. அவள் வேலை முடித்து படுத்ததே நான்கு மணிக்கு! பின் புரண்டு புரண்டு உறங்க அரைமணி நேரம் பிடிக்க, மீண்டும் ஒன்றரை மணி நேரத்தில் எழுந்து கொள்வது என்றால் தலைச் சுற்றாமல் என்ன செய்யும்? அப்படியே மீண்டும் அமர்ந்து கொள்ள, “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு பேபி” என்று கரண் அவள் கரத்தைப் பிடிக்க, “போடா… எனக்கு இப்போ கொஞ்சம் காபி குடிச்சா நல்லா இருக்கும்” என்றபடி எழுந்து குளியலறைக்குள் சென்று தன் காலை கடன்களை முடித்து கொண்டு திரும்ப, கரண் மீண்டும் தன் உறக்கத்தை செவ்வனே தொடங்கியிருந்தான். குறட்டை சத்தம் வெளியே கேட்குமளவுக்கு! “அடப்பாவி! என் தூக்கத்தில கல்லைப் போட்டுட்டு இவன் மட்டும் எப்படி தூங்குறான் பாரு” என்று அப்போதைக்குக் கடுப்பாவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக கடிகாரத்தை ஒரு பார்வை பார்த்தாள். மணி 7:04 என்று காட்டியது. “லித்துக்கு ஸ்கூல் வெகிக்கல் வந்திருக்குமோ? வந்திருக்காது இன்னைக்காச்சும் அவளை வழியனுப்பி விடுவோம்” என்றவள் அறையை விட்டு வெளியே வர, அந்த இடம் முழுக்க நிசப்தம் சூழ்ந்திருந்தது. “லித்து” என்றவள் குரல் கொடுக்க, எதிரே வந்து இயந்திரகெதியில் நின்றது ஒரு ரோபோ! ஆனால் உருவத்தில் இளம் பெண் போலவே அது காட்சியளித்தது. அதுவாக இருந்தாலும் பார்வைக்கு அவளாகவே தெரிந்தது. “சிஷு! லித்து கிளம்பிட்டாளா?” “எஸ் மேம்… ஜஸ்ட் நவ்” என்று அவளான அது சொல்ல, “அச்சோ!” என்று முகம் சுணங்கினாள் தியா. கரண் தியா தம்பதியின் ஒரே மகள் லித்திக்கா. பதின்மூன்று வயது அவளுக்கு! சிஷு என்பது மகளைப் பார்த்து கொள்ள வேண்டி அவர்கள் வாங்கி வைத்திருக்கும் ரோபோ! சிருஷ்டி என்ற நிறுவனத்தின் அதி சிறந்த கண்டுபிடிப்பு. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு இது ஒர் வரப்பிரசாதம். சிஷு குழந்தையின் வயதிற்கேற்ப ப்ரொக்ரேம் செய்யப்பட்டிருக்கும். இதனால் அது கைக் குழந்தையைக் கூட பார்த்து கொள்ளும் வல்லமை பொருந்தியதாக அமைந்திருந்தது. சிஷுவின் சிறப்பம்சம்கள் உலக நாடுகளைத் திரும்பி பார்க்க செய்தது. அதை ‘அவள்’ என்று சொன்னால் சரியாக இருக்கும். அது ஒரு பெண் குரலோடு வடிவமைக்கப்பட்ட அதேநேரம் குரல் அசைவு என்று அது சாட்சாத் ஒரு பெண்ணாகவே காட்சியளிக்கும். அதன் தோற்றம் இப்படியிருப்பதால் சுலபமாக குழந்தைகள் அதனோடு ஒன்றிவிடுகின்றன. சிஷுவின் சிறப்பம்சத்தைத் தாண்டி அதன் கட்டுபடியான விலை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. கோபுரம் முதல் குடிசை வாசிகள் வரை செல்ஃபோன் எப்படி தன் ஆளுமையைச் செய்ய தொடங்கியதோ அப்படி சிஷு பணம் படைத்தவர்கள் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கங்களின் வீடுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். லித்திக்கா மகளை வழியனுப்ப முடியவில்லை என்று வருத்தம் கொண்ட அதேநேரம் சிஷுவிடம் மகள் என்ன சாப்பிட்டால் என்ன செய்தால் என்று எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டாள். அதன் பின் தியா அங்கிருந்த காபி மிஷினில் தனக்காக காபியைத் தயாரித்து கொண்டு அமர்ந்தவள் சிறிய கார்ட் போலிருந்த ஒன்றைத் தொட அதன் மடிப்புகள் விரிந்து ஒரு கைப்பேசியாக மாறியது. அதனைத் தொட்டுதும் அவள் ரேகையில் இயங்கிய அந்த நவீன பேசி அவளுக்கு வந்திருந்த அனைத்து தகவல்களையும் (நோடிஃபிகேஷ்ன்களையும்) வரிசையாகத் தெரியப்படுத்தியது. அதனை சலிப்பாகக் கேட்டு கொண்டே காபியைப் பருகியவள், “மெசேஜ் ஃப்ரம் லித்து” என்றதும் குழம்பினாள்! ஒரே வீட்டில் இருந்து கொண்டு எதற்கு லித்து தனக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்? அப்போதுதான் நினைவுக்கு வந்தது அவளுக்கு! மகளிடம் முகம் பார்த்து பேசியே ஒரு வாரத்திற்கும் மேலானது. தான் அவளிடம் வேலை டென்ஷனில் பேசவில்லை. அவளாவது பேசி இருக்கலாமே! அவள் இந்த யோசனயைக் கடந்து, “ப்ளே லித்து மெசேஜ்” என்று அவள் தன் பேசியிடம் ஆணையிட்டாள். “ம்மா எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று லித்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் குரல் தடைப்பட, “ஸ்கூல் வேன் நம்ம ரோட் க்ராஸ் பண்ணிருச்சு… லெட்ஸ் மூவ்” என்று சிஷு அவள் பேச்சை நிறுத்தியிருந்தது. தடைப்பட்ட அந்த வாய்ஸ் மெஸேஜ் தியாவின் மனதை சஞ்சலப்படுத்த, “கால் லித்து” என்று தன் கைபேசியிடம் சொல்ல, அவளுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. அவர்கள் பள்ளியில் சிக்னல் ஜாமர் இருந்த காரணத்தால் மாணவர்கள் கைப்பேசிகள் வைத்திருந்தாலும் உபயோகப்படுத்த முடியாத நிலைமை இருந்தது. தியாவிற்கு அதற்குப் பின் எந்த வேலையும் ஓடவில்லை. சிஷுவை அழைத்து, “லித்து போகும் போது எப்படியிருந்தால்? அவள் உடல் நிலைக்கு ஒன்றும் குறையில்லையே” என்று விசாரிக்க, சிஷு அவள் மிகவும் நலமாக இருப்பதாகச் சொன்ன போதும் தியாவின் மனதிற்கு நிம்மதி ஏற்படவில்லை. மகளுக்காக தான் நேரம் ஒதுக்கவில்லையே என்ற குற்றவுணர்வு மனதை ரணபடுத்தியிருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா