மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: SrushtiSrushti - Episode 6Post ReplyPost Reply: Srushti - Episode 6

Quote from monisha on January 4, 2023, 11:39 AM

6
“மாம்… சேவ்மீ… மாம் ப்ளீஸ் சேவ் மீ” என்று மனதை உருக்குமளவுக்காய் ஒரு குரல் வெகு தூரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. அதுவும் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது. சட்டென்று அந்த குரல் மிக அருகாமையில் வந்துவிட்டது. அந்த குரல் வந்த திசையை நோக்கி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த தியா அவள் எதிரே இருந்த இருட்டறையில் தெரிந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள். சிஷு லித்துவின் கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொண்டிருக்க, அவள் மூச்சுத் திணறியபடி தவித்துக் கொண்டிருந்தாள். தியாவால் சிஷுவைத் தடுக்க முடியவில்லை. அவள் கால்கள் கட்டப்பட்டது போல தோன்றியது. “லித்து… நான் வர்றேன்… மாம் வந்து உன்னைக் காப்பாத்துறேன்” என்று தியா பரபரப்புடன் கூறிய போதும் அவளால் நகர முடியவில்லை. எது அவளைத் தடுக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை. லித்து மூச்சு திணறியபடி அவள் கண் முன்பாகவே இறந்துவிட்ட காட்சியைப் பார்த்த தியா தாங்க முடியாமல், “லித்த்த்த்த்த்த்தத்த்த்து” என்று அலறியபடி விழித்துக் கொண்டாள். அவளருகில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த கரண் பதறித் துடித்து எழுந்து, “என்னாச்சு தியா?” என்றான். மிரட்சியோடு அமர்ந்திருந்த மனைவியை கரண் இரக்கத்துடன் பார்த்து, “தியா ப்ளீஸ்… நடந்த எல்லாத்தையும் மறந்துடு” என்றான். அவன் புறம் சீற்றமாகத் திரும்பியவள், “மறக்கணுமா… அது எப்படி முடியும்? என் பொண்ணை என்னால எப்படி மறக்க முடியும் கரண்?” என்று சீற, “வேற வழி இல்ல தியா… மறந்துதான் ஆகணும்… இனிமே நம்ம லித்து திரும்ப வர மாட்டா… அவ லைஃப் முடிஞ்சு போச்சு” என்றான் அவன். “நோ… நோ…” என்று அவனைக் கோபமாகத் தள்ளிவிட்டு அவள் எழுந்து முகப்பறைக்குச் சென்றுவிட்டாள். அவள் மேஜையில் தலை சாய்த்தபடி அழுவதைப் பார்த்த கரண் காபி எடுத்து வந்து, “தியா காபி குடி” என்று ஒரு கப்பை அவளருகில் தள்ளினான். எழுந்து அமர்ந்தவள் அவனை நேராகப் பார்த்து, “உனக்கு ஃபீலிங்ஸே இல்லையா கரண்… நம்மோட ஒரே பொண்ணு இறந்து போயிருக்கா… அதெப்படி இவ்வளவு ஈஸியா நீ மறந்துடுன்னு சொல்ற?” என்று வினவ, “எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு தியா… நானும் இப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல… இட்ஸ் அ ஷாக் பார் மீ டூ… பட் ஸ்டில் அதையே யோசிச்சிட்டு அழுதுக்கிட்டு நம்ம வாழ்க்கையை நான் நரகமாகிக்க விரும்பல… அதுவுமில்லாம நம்ம ஒன்னும் சிக்ஸ்டி செவன்டி ஏஜ்ல இல்லயே… வீ ஆர் ஜஸ்ட் இன் பார்டிஸ்… ப்ரெக்ட்டிக்கலா யோசிச்சு பாரு தியா… இன்னும் நமக்கு லைப் இருக்கு… நாம அதை வாழ்ந்தாகணும்” என்றவன் சொல்லிக் கொண்டே ஆதரவாக அவள் தோளை அணைத்துக் கொள்ள வரவும் அவள் எழுந்து விலகி நின்று கொண்டாள்.  “அப்படி பார்த்தா என் பொண்ணுக்கு பதிமூணு வயசுதானே… நீயும் நானும் வாழ்ந்த வாழ்க்கைல கால் வாசி கூட அவ வாழலேயே… இன்னும் கேட்டா நம்மோட அஜாக்கிரதையால அவ சூசைட் பண்ணிக்கிட்டா… ஒரு வேளை நம்ம கடமையை நாம தட்டிக் கழிக்காம இருந்திருந்தா அவ இன்னைக்கு உயிரோட இறந்திருப்பாளோ என்னவோ?” என்றவள் சொல்வதைக் கேட்ட கரண் கோபமானான். “ஜஸ்ட் ஸ்டாப் இட் தியா… ஸ்டாப் இட்… உன்னோட இந்த கில்டினஸை முதல தூக்கிப் போடு… லித்துவோட இறப்புக்கும் சிஷுவுக்கும் எந்த சம்பந்தமுமில்ல” “அப்படினா லித்துவோட தற்கொலைக்கு என்ன காரணம் கரண்?” “அது தற்கொலையே இல்ல… அவ ஏதோ ஒரு கியூரியாஸிட்டில அந்தத் துப்பாக்கியை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தெரியாம எடுத்து அவளை அவளே சுட்டுக்கிட்டா… இட்ஸ் ஜஸ்ட் அன் அக்ஸிடென்ட்… அவ்வளவுதான்” என்றவன் கூற, அவள் முகம் கோபத்தில் சிவந்தது. “இல்ல… இது ஆக்ஸிடென்ட் இல்ல… இது சிஷுவாலதான் நடந்தது… அந்த சிஷுதான் காரணம்… நான் அதை ப்ரூப் பண்ணிக் காட்டுறேன்” “எங்கே போய் ப்ரூப் பண்ண போற… என்ன யூஸ் அதனால… ஒரு மண்ணும் இல்ல… இந்த விஷயத்தை இதோட விட்டுடு தியா… ஜஸ்ட் மூவ் ஆன்” என்றவன் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட அவள் மேஜையிலிருந்து காபி கோப்பையைத் தட்டிவிட்டு மீண்டும் மேஜையில் படுத்துக் கொண்டு அழுதாள். கரண் அவளைக் கண்டும் காணாமல் அலுலகத்திற்குத் தயாராகிப் புறப்பட்டுச் சென்றான். தியா அப்படியே படுத்தபடி அழுது கொண்டிருந்தவள் சில மணிநேரங்கள் கழித்தே உணர்வு பெற்று எழுந்தாள். அந்த வீடே வெறிச்சோடி இருந்தது. அந்தத் தனிமை அவளைப் பயமுறுத்தியது. நேற்று அர்ஜுன் பேசியது அவள் நினைவுக்கு வர, அலுவலகத்திற்குப் புறப்பட்டால் என்ன என்று அவளுக்கொரு எண்ணம். காரில் சென்று கொண்டிருக்கும்போது கரண் சொன்ன வார்த்தைகள் தியா மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. பதிமூன்று வருட திருமண வாழ்க்கை அவர்களுடையது. பத்து வருட காலம் தம்பதிகளாகச் சேர்ந்திருப்பதே இங்கே ஆச்சரியத்திற்குரிய விஷயம் எனும்போது அவர்களின் உறவு பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அவர்களின் பிணைப்பாக இருந்தது லித்திக்காதான். ஏன் அவர்கள் உறவின் தொடக்கமும் கூட அவள்தான். அர்ஜுனின் பிரிவு தியாவைப் பெரிதுமாகப் பாதித்திருந்த நிலையில்தான் கரண் அவள் வாழ்வில் வந்தான். யாருடனும் மீண்டும் அத்தகைய நெருக்கமான உறவை அவள் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் கரண் அவளை விடாமல் துரத்தி அவள் மனதில் காதலை விதைத்தான். இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கிய சில மாதங்களிலேயே தியா கருத்தறித்தாள். தன் வயிற்றில் உதித்த முதல் உயிரை தியா மிகவும் நேசித்தாள். தனக்கு கிடைக்காத அத்தனையும் அந்த ஜீவனுக்குக் கொடுக்க வேண்டுமென்று எண்ணினாள். அவள் அதிகமாக ஏங்கியது அப்பா என்ற உறவுக்குதான். திருமணம் செய்து கொள்ளாமல் அவள் தாயும் தந்தையும் சேர்ந்து வாழ்ந்திருந்தனர். தியா பிறந்த பிறகும் கூட. அவள் தந்தையின் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தாள். ஆனால் அவர் வெளிநாட்டில் வேலை கிடைத்ததும் மிக சாதாரணமாக அவர்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். தியாவால் அந்தப் பிரிவை ஏற்கவே முடியவில்லை. அந்த ஏக்கம் பல வருடங்கள் நீடித்தன. தன் மகளுக்கு அப்படி நிகழ கூடாது என்று எண்ணினாள். கரணிடம் திருமணம் செய்து கொள்ள சொல்லிக் கேட்டவள் மேலும் அவன் எந்தக் காரணம் கொண்டும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லக் கூடாது என்று நிபந்தனை விதித்தாள். அவன் அதற்கு சம்மதம் தெரிவித்து உடன்பட்ட பிறகுதான் அவனை அவள் பதிவு திருமணம் செய்து கொண்டது… அன்றிலிருந்து அவர்கள் உறவில் எவ்விதமான பிணக்கு வந்தாலும் தியா அதனைப் பிரிவாக மாறிவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள். அதற்கு பின்னணியில் தாய் தந்தை என்று இரு உறவுகளும் தன் மகளுக்கு வேண்டுமென்ற எண்ணம்தான். ஆனால் அவள் செய்த ஒரே தவறு சிஷு. தன் மகளின் பொறுப்புக்களைப் பார்த்து கொள்ள அவள் சிஷுவை அனுமதித்திருக்காவிட்டால் இப்படியொரு அசம்பாவிதம் நடந்தே இருக்காது. இந்த நொடி தன் மகள் தன்னுடன் இருந்திருப்பாள். ஆனால் இனி அதுபற்றி யோசித்து எந்த உபயோகமும் இல்லை. போக்குவரத்து நெரிசல்களை எல்லாம் கடந்து தியா ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்திருக்க, அங்கே அவளைப் பார்த்தவுடன் நேகா கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள். “சாரி டா… நான் நேத்து உங்க வீட்டுக்கு வரணும்னுதான் கிளம்பனேன் பட் முடியல… அதான் அர்ஜுனுக்கு கால் பண்ணி சொன்னேன்” என்றவள் தோழியிடம் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய கண்ணாடி அறைக்குள் இருந்து தியாவைப் பார்த்த அர்ஜுன் வியப்புடன் கையசைத்து புன்னகைத்தான். அலுவலகத்திலிருந்த எல்லோரும் அவளைப் பரிதாபத்துடன் நோக்கிய போது அவன் பார்வை மட்டும் அன்புடன் நோக்கியது. அதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். அதன் பின் அவள் மெல்ல மெல்ல வேலையில் ஈடுப்பட தொடங்கினாள். நடந்தவற்றை மறக்க முடியாவிட்டாலும் கொஞ்சம் அவள் மனதின் கவலைகள் மட்டுப்பட்டிருந்தது. அதற்காகவே அவள் வேலைகளில் தன்னை மொத்தமாக மூழ்கடித்துக் கொண்டாள். “டைமாச்சு தியா… கிளம்பலாம்” என்று நேகா சொல்ல தியா அவளை நிமிர்ந்தும் பார்க்காமல், “நான் வேலையை முடிச்சுட்டுக் கிளம்புறேன்” என்றாள். “நாளைக்கு முடிச்சுக்கலாம் தியா” “நான் வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ண போறேன்… எனக்கு என்ன இருக்கு” என்று தியாவின் விரக்தியான பதிலில் நேகா கவலையுற்றாள். ஆதரவாக அவள் தோளைத் தட்டிக் கொடுத்து நேகா கிளம்பிவிட நேரம் கடந்து போனதை தியா உணரவே இல்லை. “இன்னும் நீ கிளம்பலையா தியா” என்று கேட்டபடி அர்ஜுன் அவள் அருகில் வந்து நிற்கவும்தான் அவள் சுற்று புறம் உணர்ந்து நேரத்தை பார்த்தாள். “ப்ச்… வேலைப் பார்த்துட்டே இருந்ததுல எனக்கு டைம் தெரியல” என்றவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அப்போதே கிளம்ப எத்தனிக்க, “இரு தியா… நானும் வரேன்” என்று அர்ஜுன் அவளுடன் இணைந்து கொண்டான். லிஃப்ட்டுகாக இருவரும் காத்திருக்க அர்ஜுன் அவளிடம், “ஆஃபிஸ் வந்த பிறகு கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றியா தியா” என்று வினவ, “ம்ம்ம்” என்றவள் தலையசைத்தாள். அதற்குள் லிஃப்ட் வந்து நிற்க இருவரும் உள்ளே நுழைந்தனர். கீழே இறங்கும் வரை மௌனமாக இருந்தவன், “என் அப்ராட்மென்ட் பக்கத்துலதான் இருக்கு… வந்துட்டுப் போறியா?” என்று கேட்க, “இல்ல அர்ஜுன்… டைமாகுது… நான் வீட்டுக்குப் போகணும்… கரண் வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பாரு” என்றாள். “இட்ஸ் ஓகே… இப்போ இல்லாட்டியும்… வேறொரு டைம்ல” என்றவன் தயக்கத்துடன் இழுக்க, “ஷுர்” என்றவள் தன் காரில் ஏறி அவனிடம் கையசைத்துச் சென்றாள். அவள் கண்களில் படிந்திருந்த ஆழமான சோகம் அவன் மனதைத் தாக்கியது. அவள் சென்ற திசையைப் பார்த்து அவன் கண்கள் கலங்கி நின்றான். தியா வீடு வந்து சேர்ந்த போது கரண் சுவரோடு சுவராக இருந்த ராட்சத வெர்ச்சுவல் திரையில் செய்திகள் பார்த்து கொண்டிருந்தான். அவள் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும், “தியா வந்துட்டியா… ஏன் ஃபோன் பண்ணா எடுக்கல” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவள் படுக்கறைக்குள் சென்றுவிட்டாள். “நீ வீட்டுல இல்லன்னதும் நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? லொகேஷன் பார்கக நீ ஆஃபிஸ்ல இருக்கன்னு காட்டுச்சு” என்றபடி அவளைப் பின்தொடர்ந்து வந்தவன், “அப்புறம் நேகாகிட்ட பேசுனேன்… நீ ஆஃபீஸ்லதான் இருக்கிறதா சொன்னா” என்றான்.  அவள் அவன் சொல்வதை காதில் வாங்காமல் உடைமாற்றி கொண்டு உணவு மேஜையில் வந்து அமரவும், “நீ இன்னைக்கு ஆஃபிஸ் போனது எனக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா?” என்றபடி அவளுக்கான உணவை எடுத்து வைத்துவிட்டு அவனும் அமர்ந்து உணவு உண்ணத் தொடங்கினான். தியா அவனிடம் அப்போதும் பேசவில்லை. அமைதியாக உண்டு கொண்டிருந்தவள் எதிரே இருந்த திரையில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள். குழந்தைகளைக் கவனித்து கொள்ளும் சிஷு என்ற ரோபோவின் அப்க்ரேடட் வெர்ஸனை விரைவில் வெளியிட போவதாக சிருஷ்டி நிறுவனம் அறிவித்ததோடு அல்லாமல் அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் வகையில் சிஷுவின் விலை பாதியாகக் குறைய போவதாகத் தெரிவித்திருந்ததைக் கேட்டு தியா அதிர்ச்சியடைந்தாள். “நோ… இப்படி நடக்க கூடாது… நான் இப்படி நடக்க விடமாட்டேன்” என்று தியா ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரைத் தூக்கியெறிந்து அந்தத் திரையின் மீது விட்டெறிந்தாள். ஆனால் அந்த வெர்சுவல் திரையைத் தாண்டி சுவரின் மீது பட்டு அந்தக் கண்ணாடி டம்ளர் உடைந்து நொறுங்கியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா