மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E2Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E2

Quote from monisha on May 6, 2023, 7:05 PM

2
துபாய் நகரின் இரவு அழகை காண உண்மையில் கண்கள் கோடி வேண்டும். பகலும் இரவும் வித்தியாசமற்று காட்சியளித்தன அந்த அழகிய பாலைவன நகரத்தில்! சூரியனின் பிரகாசத்திற்கு இணையாக மின்விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது அந்நகரம்! இருபதாம் நூற்றாண்டுங்களில் வெறும் வெப்ப பாலைவனமாக கண்டறியப்பட்ட ஒரு நகரம் கடந்த முப்பது வருடங்களில் பொருளாதரத்தில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றது என்று சொன்னால் அது மிகையில்லை. பல நூறு மின்னல்களின் வெளிச்சங்களை ஒருங்கிணைத்தது போல கட்டிடங்கள் விண்ணுயரத்தில் பிரமாண்டமாக நின்று பளபளத்தன. அக்கட்டிடங்களின் உயரத்திற்கு இணையாக இல்லாவிட்டாலும் அந்த முப்பது மாடி உயர நட்சத்திர விடுதியும் கூட அவற்றிற்கு இணையாக தகதகவென வண்ணமயமாய் மின்விளக்குகளால் ஜொலித்து கொண்டிருந்தது. . ஆடம்பரமான கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள் பதினெட்டாவது மாடியில் நடந்தேறிய அதேசமயம் இருபத்து ஐந்தாவது மாடியில் பயங்கரமான சதியாலோசனை கூட்டம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. மிக விபரீதமான ஒப்பந்தம் அது. பல மில்லியன் டாலர்களில் நிகழ்ந்து கொண்டிருந்த அந்த ரகசிய ஒப்பந்தத்தில் மனித மனங்களின் விருப்பு வெறுப்புகள் தேவைகள் போன்றவை விலை பேசப்பட்டன. சரியாக சொல்ல வேண்டுமென்றால் மக்களின் அந்தரங்கங்கள். கைப்பேசியில் விளையாடப்படும் கேம் ஹெப்களை வடிவமைக்கும் நிறுவனத்துடன் மேற்சொன்ன ரகசிய ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது. சரியாக அதே தருவாயில் பதினெட்டாவது மாடியின் திறந்தவெளியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. பிரமாண்டமாக ஒரு கேக் கொண்டு வந்து வைக்கப்பட்டது. வி வி ஐ பிகள் பலரும் அந்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்க தங்கள் அதிநவீன கார்களில் படையெடுத்து கொண்டிருந்தனர். மிக முக்கியமான இந்திய தொழிலதிபர்கள் உட்பட! கருப்பு நிற லாங் ஸ்கர்ட்டில் அழகு பதுமையாக வந்து நின்றாள் அந்த காரிகை. வண்ண மயமாக ஆயிரக்கணக்கான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பெண்ணவள் வந்து நின்ற இடத்தில் பளபளக்கும் காகித பூக்கள் வெடித்து அவள் மீது அபிஷேகமாக சிதறின. ‘ஹாப்பி பார்த்டே நந்தினி’ என்று எல்லோரும் அவளை வாழ்த்தி பாடி கைத்தட்டி ஆரவாரித்தனர். வளைந்த புருவங்களும் சாம்பல் நிற விழிகளும் தோளில் அலை அலையாக புரண்டு சரிந்த கரிசல் கூந்தலும் வியப்பில் விழிவிரிக்க செய்த அவள் உயரமும் உடல் வளைவுகளும் என அவள் பேரழகில் ஆண்கள் கூட்டம் பித்து பிடித்து நின்றது என்றால் பெண்கள் கூட்டமோ பொறாமையில் வெந்து புழுங்கின. வயது வரம்பே இல்லாமல் இவ்விரு பாலினமும் அவளை விழி அகற்றாமல் பார்த்திருந்தனர். உலகின் அத்தனை போதை வஸ்த்துக்களும் அவளிடம் மண்டியிட வேண்டும். அவளது விழிகளிலும் மயக்கும் புன்னகையிலும் தன் வசம் இழந்தர்வர்கள் அனைவரும் மகுடிக்கு ஆடும் பாம்பு போல மதிமயங்கி அவளிடம் கிறங்கி நின்றனர். அவளை சொந்தமாக்கி கொள்ள அங்கிருந்த பல செல்வந்தர்களுக்குள் மறைமுகமாக பெரும் போட்டியே நிலுவியது. வானத்து தேவதையின் சுயம்வரம் போலதான் அவ்வரங்கமே அழகிய கம்பீரமான ஆடவர்களால் நிறைந்திருந்தது. அந்த போட்டி அவள் அழகிற்காக மட்டுமல்ல. அதிசிறந்த அவளின் அற்புத அறிவுக்காகவும்தான். பெரும் அரசியல் குடும்பத்தின் வாரிசான அவள் தற்சமயம் வரை எந்தவொரு ஊடகங்களின் முன்னிலையில் பிரசன்னமானது கிடையாது. சமீபமாகதான் சில தொழில்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருந்தாள். அதனை ஆதிக்கம் என்று சொல்ல இயலாது. சர்வாதிகாரம். எந்த தொழிலிலும் தனக்கு போட்டியாக ஒருவரையும் அவள் நிற்க விட மாட்டாள். ஏன்… வாழவே விடமாட்டாள்? கட்டிட தொழிலில் சிறந்து விளங்கும் துபாய் நகரத்திலும் அவள் தற்சமயம் தன் அடையாளத்தை பதித்திருந்தாள். பிரமிப்பூட்டும் இந்த நட்சத்திர விடுதியும் கூட அவளுக்கு சொந்தமானதுதான்.  இத்தனை வருடங்கள் இல்லாது இன்று அவளது பிறந்த நாள் இந்தளவு ஆரவாரமாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்பட முக்கிய காரணம் விரைவில் அவள் முன்னெடுக்க இருக்கும் அரிசியல் அரங்கேற்றத்திற்காகதான்! ஆனால் தற்போது நிகழப்போவது அவளின் வெளிபடையான அரசியல் பிரவேசம்தான். மற்றபடி மறைமுகமாக அவள் இந்திய அரசியலில் தன் தலையீடுகளை தொடங்கி பத்து வருடங்கள் மேலாகிவிட்டது. ஆரவாரமாக நடந்திருந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சோசியல் டிரிங்கிங்’ என்ற பெயரில் எல்லோரும் மது போதையில் மிதந்து கொண்டிருக்க, அவளுக்கு அத்தகைய போதைகளில் எல்லாம் பெரிதாக விருப்பம் இல்லை. அவள் அக்கூட்டத்தை விட்டு விலகி வந்திருந்த சமயம், அவள் கைபேசியில் வந்த தகவல் அவளை அதிர்ச்சியடைய செய்தது. பரபரப்பாக அந்த அலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசியவள். “பாரதி எப்படி ரிலீஸ் ஆக முடியும்? அதுக்கு சான்ஸே இல்லையே” என்று கேட்க, “இல்ல மேடம் தண்டனை காலத்துக்கு முன்னாடியே நன்னடத்தை காரணத்தால ரிலீஸ் பண்றாங்க” என்றவன் சொன்ன தகவல் அவள் தலையில் இடியை இறக்கியது. “அவன் ரிலீஸ் ஆர்டரை ஸ்டாப் பண்ண முடியுமா?” “இனிமே அது கஷ்டம் மேடம்… எனக்கே ரொம்ப லேட்டாதான் தகவல் தெரிஞ்சுது… ஆனா நான் வேணா முயற்சி பண்ணி பார்க்கிறேன்” “கஷ்டம்னு சொல்லிட்ட இல்ல… அப்புறம் என்ன முயற்சி பண்ணி பார்க்க போற” என்று அவனிடம் எரிந்து விழுந்தவள் தான் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து ஒருவாறு தன்னை நிதானப்படுத்தி கொண்டு பேசினாள்.  “சரி என்னைக்கு ரிலீஸ்?” போன்ற தகவல்களை கேட்ட பின், “பாரதி ரிலீஸான பிறகு… எங்க போறான் என்ன பண்றான் பாலோ பண்ணுங்க… அதுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னு டிசைட் பண்ணலாம்” என்று முடிவாக உரைத்துவிட்டு இணைப்பை துண்டித்தாள். அதற்கு பின் அவளால் அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரசிக்க முடிக்கவில்லை. ****** காந்தி ஜெயந்தி பத்து வருட சிறை வாசத்திற்கு பிறகு இன்றுதான் பாரதிக்கு சுகந்திர காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. பிரமாண்டமான அந்த மதில் சுவற்றின் பின்பாகவே தன் வாழ்க்கை முடிந்து விடுமோ… இந்த சிறைக்குள்ளேயே தான் மாண்டு விடுவோமோ என்ற எண்ணமெல்லாம் அவ்வப்போது தோன்றி அவன் மனோதிடத்தையும் அசைத்து பார்த்த போதும் அவன் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. அது அவன் காதலின் மீதான நம்பிக்கை. சரியாக சொல்ல வேண்டுமென்றால் காதலியின் மீதான நம்பிக்கை. அவளுடன் சந்தோஷமாக இல்லற வாழ்க்கை நடத்த வேண்டுமென்று ஆசை கொடுத்த நம்பிக்கை. அந்த ஆசை நிறைவேறவாவது தான் நிச்சயம் விடுதலை பெற வேண்டும் என்று பிடிவாதமாக மனதில் எண்ணி கொண்டுதான் அந்த பத்துவருட சிறை வாசத்தின் ஒவ்வொரு நாட்களையும் அவன் கடந்து வந்தது. அந்த சிறை கதவுகளை தாண்டி வந்த போது எந்தளவு அவன் மனம் இன்பம் கொண்டதோ அதே அளவு தன் கைதி தோழர்களை எண்ணி வருத்தமும் கொண்டது. பாரதியை எல்லோரும் கனத்த மனதோடே வழியனுப்பி வைத்தார்கள். அவன் விடுதலை பெறுவது சந்தோஷமான தகவல்தான் எனினும் எல்லோர் விழிகளிலும் கண்ணீர் நிரம்பியிருந்தது. அங்குள்ள பல கைதிகளுக்கு அவன் உறவாக இருந்திருக்கிறான். சிறைச்சாலை என்றாலே குற்றங்களின் கூடாரங்கள். கைதிகள் என்றாலே கரடு முரடான மனம் கொண்டவர்கள். வஞ்சக புத்தி கொண்ட குற்றவாளிகள் என்பதெல்லாம் உண்மை இல்லை என்று சிறைக்கு வந்த சில நாட்களிலேயே பாரதி புரிந்து கொண்டான். அவர்கள் குற்றவாளிகள் அல்ல. வக்கிர புத்தி கொண்டவர்களால் வஞ்சிக்கப்ப்பட்டவர்கள். துரோகம் இழைக்கப்பட்டவர்கள். ஆதரவில்லா பாவப்பட்ட ஜீவன்கள். அவர்களுக்குள்ளும் மனிதாபிமானம் இருந்தது. அன்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்கும் உள்ளம் இருந்தது. துரோகம் செய்த மனைவியையும் நண்பனையும் ஆவேசத்தில் வெட்டி கொன்றுவிட்டு தண்டனை பெற்று சிறைக்கு வந்த டேனியல் என்பவன் தான் செய்த தவற்றை எண்ணி நடை பிணமாகவே சுற்றி கொண்டிருந்தான். அவனை யாருமே கண்டுகொள்ளாத நிலையில் அந்த துரோகத்திலும் வேதனையிலும் இருந்து அவனை மீட்டெடுத்தது பாரதிதான். இப்படி துரோகங்கள் குரோதங்கள் வக்கிர புத்திகளால் வஞ்சிக்கிப்பட்டு சிறைக்கு வந்த பல டேனியல்களுக்கு பாரதி மகனாக சகோதரனாக நண்பனாக இருந்து வந்திருக்கிறான். இப்போது அவன் பிரிந்து செல்வது எல்லோருக்குள்ளும் ஆறாத துயரத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. “கடைசியா எனக்காக ஒரு தடவை அந்த பாட்டை பாடு பாரதி” என்று டேனியல் ஏக்கமாக கேட்க,  பாரதியும் புன்னகைத்து அவன் கேட்ட பாட்டை பாடினான். “மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் விரல்களை தாண்டி வளர்வதை கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதில் என்ன பாவம் எதற்கு இந்த சோகம்… ………..கிளியே! நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்!” கைதிகள் தொடங்கி சிறை காவலர்கள் வரை அங்குள்ள எல்லோரும் அவன் குரலுக்கும் பாட்டுக்கும் ரசிகர்கள்தான். அதுவுமில்லாமல் அவன் பாட்டிலும் குரலிலும் உயிரோட்டம் இருந்தது. இறுகி கிடந்த பலரின் மனங்களை அவன் பாடல் கசிந்துருக செய்திருக்கிறது. டேனியல் கண்ணீரோடு பாரதியை கட்டி தழுவி வழியனுப்பினான். அதன் பின அந்த சிறைச்சாலையின் அதிகாரி பாரதியிடம் தன் கைபேசி எண்ணை கொடுத்து, “உனக்கு எந்த உதவி வேணாலும் எனக்கு கால் பண்ணு பாரதி” என்று தோள் தட்டி உரைத்தவர் அவனுடைய விடுதலைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்து அவன் சிறைசாலையில் ஈட்டிய பணத்தையும் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார். சிறை கதவுகளை தாண்டி வந்தவன் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி தான் செல்ல வேண்டிய விலாசத்தை சொல்லிவிட்டு அமர்ந்தான். அந்த பத்து வருடத்தில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் யாவும் அவன் கவனத்தை ஈர்த்தன. பெரிய சாலைகள் உயர்ந்த கட்டடங்கள் உயிர் ரக கார்களின் அணிவகுப்புகள் என்று அவன் விழிகள் அம்மாற்றங்களை கண்டு வியந்தன. அதேநேரம் ஆட்டோ சென்ற வழியில் அமைச்சர் வேதநாயகம் கண்ணீர் அஞ்சலிக்காக சிலர் அமைதி ஊர்வலம் நடத்தி சென்றனர். தன்னுடைய விடுதலை செய்தியை கேட்ட சந்தோஷத்தில் அப்போதைக்கு வேதநாயகனை பற்றி மறந்துவிட்ட போதிலும் பின்னர் இது விஷயமாக அவன் காசியிடம் பேசினான். “அமைச்சர் வேதநாயகம் டெத் பத்தி உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?” “அட நீ வேற பாரதி… இதெல்லாம் ஏதோ பெரிய புள்ளிங்க செய்ற வேலை… நமக்கு ஒன்னும் இதை பத்தி தெரியாது” “உங்களுக்கு தெரியாம எல்லாம் எப்படி அண்ணே… தீபசுடர் கட்சில நீங்க என்ன இன்னைக்கு நேத்தாவா இருக்கீங்க” “அதென்னவோ உண்மைதான்… ஆனா இப்போ எதுவும் முன்ன மாதிரி இல்ல… தலைவருக்கு உடம்பு சரியில்லாம போனதுல இருந்து பவர் எல்லாம் அவர் மச்சான் கைக்கு போயிடுச்சு… கட்சில அவர் சொல்றதுதான் சட்டம்” என்று காசி தன் புலம்பலோடு சேர்த்து அச்சமயம் ஆட்சி கட்டிலில் நடக்கும் அநியாயங்கள் மற்றும் நீடித்து வரும் விடையறியா மர்மங்கள் பற்றியும் உரைத்தான். “தலைவர் உயிரோடதான் இருக்காரான்னு சந்தேகமா இருக்குனா பார்த்துக்கோயேன்” என்றவன் உச்சபட்சமாக அதிர்ச்சி வெடிகளை போட்டிருக்க பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அவன் சென்று கொண்டிருந்த ஆட்டோ அந்த அமைதி ஊர்வலத்தை கடக்க முடியாமல் மெல்ல ஊர்ந்து செல்ல,  “அந்த ஆளு செத்தாலும் செத்தான்… இவனுங்க கலவரம் கண்ணீர் அஞ்சலி… ஊர்வலம்னு நம்ம தாலியை அறுக்குறானுங்க” என்ற அந்த ஆட்டோக்காரர் சலிப்பும் அலுப்புமாக புலம்பியது பாரதியின் செவிகளையும் எட்டியது.  என்னதான் சுற்றுப்புறங்கள் மாறினாலும் இந்த அரசியல் கோமாளித்தனங்களும் மகள்ள அரசியல்வாதிகள் மீது கொண்டுள்ள வெறுப்புகளும் துளி கூட மாறவில்லை என்று அவன் எண்ணி கொண்டிருந்த சமயம் அவன் சற்றும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது, திடீரென்று அந்த அமைதி ஊர்வலம் கலவரமாக மாறியது. சிலர் தம் கைகளில் ஆயுதங்களை ஏந்தி கொண்டு வெளியே வர மக்கள் கூட்டம் தெறித்து ஓட தொடங்கியது. “அந்த ஆட்டோதான்… அவன்தான்” என்று சொல்லி கொண்டே பாரதி வந்த ஆட்டோவை வழிமறித்த சிலர் கத்தியை ஓங்கினர். பாரதிக்கு இன்னது நடக்கிறது என்று புரியவே சில நொடிகள் பிடித்தது. அந்த ஆட்டோக்காரன் தன் உயிரை காப்பாற்றி கொண்டால் போதுமென்று ஆட்டோவை கூட விட்டுட்டு தலை தெறிக்க ஓடிவிட்டான்.  ஒரு கூரிய அரிவாள் பாரதியின் சிரத்தை வெட்டுவதற்கு நீண்டன.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா