மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 3Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 3

Quote from monisha on May 7, 2023, 5:34 PM

3
“பாவனா எங்கே? உன் கூட மேல வந்திருப்பான்னு நினைச்சேன்” என்று படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தவனிடம் மல்லி விசாரிக்க, “என் கூடத்தான் பேசிட்டு இருந்தா… இப்பதான் கிளம்பி போனா” என்றான் வெங்கட். “போயிட்டாளா? அவளுக்கு நீட் புக்ஸ்… நோட்ஸ் எல்லாம் கொடுக்கலாம்னு நான் எல்லாத்தையும் தேடி எடுத்து வைச்சுட்டு இருந்தா அவ பாட்டுக்குப் போயிட்டாளா? கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல இந்தப் பொண்ணுக்கு” “வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனாம்மா… வந்து வாங்கிப்பா… நீங்க டென்ஷன் ஆகாதீங்க… வாங்க” என்றவன் அம்மாவின் தோளில் கைப்போட்டு வீட்டிற்குள் அழைத்துச் செல்ல எத்தனிக்க, “நான் உள்ளே வரலப்பா… வா நாம மேல போலாம்” என்றவர் முகத்தில் கடுப்புடன் இதர பல எல்லா எரிச்சல் உணர்வுகளும் கலவையாக இருந்தன. “என்னாச்சும்மா?” “ம்ம்ம்… நீயே போய் பாரு… உங்கப்ப்ப்ப்ப்பா பண்ணிட்டு இருக்க வேலையை” என்ற போது மல்லியின் வார்த்தைகளுக்கு இடையில் அப்பா என்ற வார்த்தைக் கடிப்பட்டு வந்த விதத்திலேயே அவர் ஏதோ எடாகுடமாகச் செய்து மாட்டியிருக்கிறார் என்பது புரிய மெல்ல வீட்டினுள் சென்று எட்டிப் பார்த்தான். அந்தப் பரந்து விரிந்த முகப்பறையிலிருந்து இடது புறத்திலிருந்த சமையலறை அப்பட்டமாகக் காட்சியளித்தது. அது ஒரு ஓபன் கிச்சன் டைப். அங்கேதான் நந்தக்குமார் தங்கள் மருமகளுடன் சேர்ந்து லூட்டி அடித்துக் கொண்டிருந்தார். அதாவது சமைத்துக் கொண்டிருந்தார். வெங்கட்டின் முகத்தில் புன்னகை அரும்ப பின்னோடு வந்த மல்லியைப் பார்த்ததும் சட்டென்று தன் புன்னகையை மறைத்துக் கொண்டான்.  “பார்த்தியாடா உங்க அப்பா பண்றதை… நான் அவங்க உறவே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன் இவர் என்னடான்னா… அவங்க கூடவே போய் சமைச்சுக்கிட்டு என் மானத்தை வாங்கிட்டு இருக்காரு. இதுல அவர் போட்டிருக்க லுங்கியும் தலையில கட்டி இருக்க தலைப்பாகையும்… பார்க்க அப்படியே சமையல்காரன் மாதிரி… சை!” என்றவர் கடுப்புடன் தலையிலடித்துக் கொள்ள, அவன் வாயிற்குள் சிரித்துக் கொண்டான். “ஆமா… இது எத்தனை நாளா நடக்குது… உனக்கும் தெரியுமோ?” என்றவர் மகன் புறம் தன் சந்தேக பார்வையைத் திருப்ப, “ஐயோ! எனக்கு தெரியாது ம்மா… நான் கீழேயே வர்றது இல்ல… அப்படியே ஹாஸ்பெட்டில இருந்து வந்தா கூட நேரா மேல போயிடுவேன்” என்றவன் சொல்ல, மகன் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அவன் எப்போதும் அவர் கிழித்தக் கோட்டைத் தாண்ட மாட்டான். ஆனால் கணவன் மீது அவருக்குத் துளி கூட நம்பிக்கை இல்லை. ஏதோ பேரன் பேத்திகளோடுக் கொஞ்சி விளையாடுகிறார் என்று விட்டால் இன்று எல்லையை மீறிவிட்டார். வெங்கட்டும் மல்லியும் அவர்களைப் பார்த்துவிட்ட போதும் இன்னும் நந்தா குழு இவர்களைப் பார்க்கவில்லை. அவர்கள்தான் மிக மும்முரமாக நளபாகத்தில் இருந்தார்களே! அப்போது நந்தாவின் லுங்கியை இழுத்தச் செல்ல பேத்தி அமிர்தா, “தாத்தா… தாத்தா” என, “இருடா குட்டி…. பஜ்ஜி இதோ ரெடியாயிடுச்சு” என்றார் அவர் நிலைமைப் புரியாமல். “அது இல்ல… ஜிஎம் வந்துட்டாங்க… உங்களைத்தான் முறைச்சுப் பார்க்கிறாங்க” என்றவன் எதிரே கை நீட்டிக் காண்பித்தாள். அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த எண்ணெயை விட மல்லியின் பார்வை அதிக சூடாகக் காய்ந்திருந்தது. மடமடவென நந்தாவின் தலையிலிருந்த துண்டு தோளுக்கும் லுங்கி கீழுக்கும் இறங்கியது. இதை பார்த்ததும் மல்லியிடம் நந்தாவிற்குப் பயமென்று எண்ணிவிடக் கூடாது. அது ஒரு விதமான பயம் கலந்த மரியாதை. மல்லி விரல்களை மடக்கி பல்லைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு தமது அறைக்குள் சென்றுவிட்டார். இந்தக் காட்சியைப் பார்த்தபடி வந்த வெங்கட் அப்பாவின் அருகில் வரவும் அர்ச்சனா தன் மாமனாரிடம், “எண்ணெய் காஞ்சிடுச்சு… பஜ்ஜியைப் போடலாமா மாமா?” என்று கேட்கவும் சரியாக இருந்தது. நடப்பது என்னவென்று தெரியாமலே இருக்கும் மருமகளை எரிச்சலாக அவர் திரும்பி நோக்க வெங்கட் புன்னகையுடன், “ஆமா ஆமா எண்ணெய் செமையா காஞ்சிருக்கு… உள்ளே போனா ரோஸ்டாகித்தான் வெளியே வரும்” என்றான் ஜாடை மாடையாக!  “ஏன் டா? உங்க அம்மா வராங்கன்னு எனக்கு முன்னாடியே வார்னிங் மெசேஜ் கொடுக்க மாட்டியா” என்றவர் கேட்டு மகனை முறைக்க, “நானே இப்பத்தான் வந்தேன்… நான் வரத்துக்கு முன்னாடியே அம்மா உங்களைப் பார்த்துட்டாங்க” என்றவன் அசட்டையாகத் தோள்களைக் குலுக்கினான். பரிதாபமாக மகனைப் பார்த்தவர், “உங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து ஏன் டா இவ்வளவு சீக்கிரம் வந்துட்டா” என்று கேட்க, அப்போதுதான், “எம் எல் வந்துட்டாங்களா?” என்று இரு மருமகள்களும் ‘இதுதான் உங்க டக்கா’ என்பது போல மிகத் தாமதமாக தங்கள் அதிர்ச்சியைக் காட்டினர். நந்தா உடனே, “ஷாக்கை குறை ஷாக்கை குறை… ரொம்ப லேட் ரியாக்ஷன்… வந்தாச்சு பார்த்தாச்சு… போயாச்சு” என்று சொல்ல, “இப்ப என்ன பண்றது மாமா?” என்று மருமகள்கள் பயபக்தியுடன் வினவ… வெங்கட் சிரித்து கொண்டே இடைபுகுந்து, “நீங்க வாழைக்காய் பஜ்ஜி போடுங்க… உள்ளே எங்க அம்மா உங்க மாமானாரை உரிச்சு தோள் சீவி பஜ்ஜி போடுவாங்க” என்றான். நந்தா மகனின் தோளில் ஓங்கி குத்துவிட்டு, “இரு… உன்னை வந்து வைச்சுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக பஜ்ஜி மாவில் வாழைக்காய் துண்டு சிலவைகளை முக்கி எடுத்து கொதிக்கும் எண்ணெயில் லாவகாமாகப் போட்டு பொறித்து தட்டில் வைத்து கொண்டு, “எப்படி என் பொண்டாட்டியை நான் சமாதானப்படுத்திறேன் மட்டும் பாருடா” என்று சவால் விடுத்துவிட்டு அறைக்குள் போனார். நந்தகுமார் அப்படியே மல்லிக்கு நேர்மார். ஆண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர் பணி ஓய்வு பெற்று தற்சமயம் வீட்டில்தான் இருக்கிறார். நந்தகுமார் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் கூட மாணவர்களை அவர் தம் நண்பர்கள் போல்தான் நடத்துவார். அவர்களும் நந்தாவிடம் நெருங்கிய நண்பனிடம் பழுகுவது போலதான் பழகுவார்கள். மாணவர்களுடன் கபடி, கிரிக்கெட் என்று வித்தியாசம் பார்க்காமல் அவரும் களத்தில் மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கி விளையாடுவார். பலருக்கும் அவரை ஆசிரியராகப் பார்க்க தோன்றியதே இல்லை. தான் ஒரு தலைமை ஆசிரியர் என்ற கெத்தை எல்லாம் ஒரு நாளும் அவர் காட்டிக் கொள்ளவே மாட்டார். மொத்தத்தில் நந்தா சரியான ஜாலி டைப். ஆனால் மல்லி சிடுசிடு டைப். கசக்கும் டிகாஷனில் இனிக்கும் பாலுடன் ஒன்றிணைந்து வருமே ஒரு காம்பினேஷன். அதுதான் மல்லியும் நந்தாவும். சுவையான அதேநேரம் சுவாரசியமான கலவை. தற்சமயம் அந்தக் கலவை கொஞ்சம் எக்குத்தப்பாகி ஸ்ட்ராங்காகி விட்டது. மூடிய கதவைப் பார்த்த மருமகள்கள் இருவருக்கும் வடிவேல் கோவை சரளாவிடம் அடி வாங்கிய காட்சிதான் நினைவுக்கு வந்தது. “அப்படி நடக்குமோ?” என்று அர்ச்சனா கேட்க, “ம்ம்ம் இருக்கலாம்” என்று கடைசி மருமகள் லலிதா பரிதாபமாகத் தலையசைத்தாள். “பஜ்ஜி இப்போதைக்குப் போடுவீங்களா மாட்டீங்களா?” என்று வெங்கட் கேட்கவும்தான் மாமானாருக்காக சோக கீதம் பாடியவர்கள் இயல்பு நிலைக்கு மீண்டு வந்தார்கள். “தோ இருங்க மாமா… போட்டுத் தந்துடுறோம்” “எனக்கு இல்ல… பசங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றவன் அந்தச் சின்ன வாண்டுகளுடன் ஐக்கியமாகிவிட்டான். ஐந்து வயது அமிர்தாவும் மூன்று வயது சவீதாவும் அர்ச்சனா சர்வேஷ் ஜோடியின் வாரிசுகள். நான்கு வயது நகுலும் சகாவும் கபில் லல்லி ஜோடியின் இரட்டையர்கள். ஏற்கனவே சொல்லி இருந்தோம் இல்லையா? சர்வேஸ்வரும் கபிலேஸ்வரும் வேண்டா வெறுப்பாக மல்லி பெற்றெடுத்த புத்திரர்கள் என்று! மல்லி படிப்பை முடித்ததுமே அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால் மல்லிக்கு நிறைய கனவு இருந்தது. நிறைய படிக்க வேண்டும். பெரிய வேலைக்குப் போக வேண்டும். எல்லோரும் மதிக்குமளவுக்கு உயர வேண்டும். இப்படியாக நிறைய நிறைய கனவுகள்… திருமணம் அந்தக் கனவை கலைத்துவிடுமோ என்ற கவலையில் இருக்கையில் கணவர் நந்தகுமார் மல்லிக்குத் துணை நின்றார். மல்லி மேலே படிக்கவும் வேலைக்குப் போகவும் அவருக்கு உதவி புரிந்தார். இதனால் குழந்தை வேண்டாமென்று இருவரும் ஒத்த மனதுடன் முடிவெடுத்திருந்தனர். நல்ல படிப்பு நல்ல வேலை என்று மல்லி நினைத்தெல்லாம் நடந்துவிட்டது. ஆனால் குழந்தை பேறு அவர்கள் நினைத்தது போல நடக்கவில்லை. “வேலை படிப்புன்னு சொல்லி குழந்தையைத் தள்ளிப் போட்டு இப்ப என்னவாகிடுச்சு பார்த்தியா?” உறவினர்கள் எல்லோரும் இதற்காக மல்லியைக் குறை கூற ஆரம்பித்தனர்.  ஆனால் மனைவியை நந்தகுமார் விட்டுக் கொடுக்கவில்லை. ‘பிறக்கும் போது பிறக்கட்டும்’ என்று விட்டு விட்டார். ஆனால் மல்லியால் அப்படி முடியவில்லை. குழந்தை இல்லை என்ற குறையும் தன் வாழ்வில் இருக்கக் கூடாது என்று எண்ணினார். நம் கைகளில் இல்லாத விஷயங்களுக்கு கடவுளைத்தான் நம்ப வேண்டியிருந்தது. அந்த நொடி பகுத்தறிவு எல்லாம் பயனற்று பக்தி வந்து மனதில் புகுந்து கொள்கிறது. அவர் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. அப்படி ஒரு முறை வேண்டிக் கொண்டு திருப்பதி சென்று வந்த சில நாளில் மல்லி கருத்தறித்தார்.  இப்போது புரிந்திருக்கும் அவருடைய மூத்த புதல்வனுக்கு வெங்கடேஷ்வர் என்று எப்படி பெயர் வந்தது என்று. ஆனால் அடுத்து பிறந்த இரண்டும் வேண்டா வெறுப்பில் பெற்று காண்டாமிருகத்திற்கு கொடுத்த கதைதான். மல்லி ஒன்றே போதுமென்று மனநிறைவு அடைந்துவிட்ட நிலையில் மீண்டும் அடுத்த வருடமே அவர் கருத்தறித்தது அவருக்கு அத்தனை உவப்பான செய்தியாக இல்லை. அதுவும் பழையபடி தன் வேலையிலும் முன்னேற்றத்திலும் அவர் கவனம் செலுத்த எண்ணியிருக்கையில் இன்னொரு குழந்தையை வளர்த்து அதற்கான தன் நேரத்தை எல்லாம் கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால் நந்தகுமார் அவர் முடிவிற்கு இசையவில்லை. இந்நிலையில்தான் வயிற்றிலிருப்பது இரட்டை என்று தெரிய வந்தது. மல்லிக்கு அல்லு விட்டது. அதற்கு பிறகு அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கபிலும் சர்வுவும் பிறந்த கதை இதுதான். அவர்கள் பிறப்பில் மட்டுமல்ல. வளர்ந்த பிறகும் கூட மல்லியை வெறுப்பேற்றும் வேலையை செவ்வெனே செய்து கொண்டிருந்தார்கள். வெங்கட்டை வளர்ப்பதில் இருந்த மல்லியின் ஈடுபாடு இவர்கள் இருவர் விஷயத்ததில் சுத்தமாக இல்லை. மல்லிக்கு எப்போதும் வெங்கட் வெங்கட் வெங்கட்தான். அவனுக்கும் அப்படித்தான். மல்லி அவனைத் தலைக் கீழாகக் குதி என்று சொன்னால் என்ன ஏதென்று ஒரு வார்த்தை கேட்காமல் அவன் குதித்துவிடுவான். ஆனால் அவர் அதை விடவும் கஷ்டமான வேலையான மருத்துவம் படிக்க சொன்னார். அவனும் அம்மா சொல்லே மந்திரமென்று மருத்துவம் சேர்ந்துவிட்டான். படித்துவிட்டான். இன்று மனநல மருத்துவனாகப் பிரபல மருத்துவமனையில் வேலைப் பார்க்கிறான். மல்லி வெங்கட்டிடம் சொன்னது போல இளையவர்களிடம் மருத்துவம் படிக்கச் சொன்னார். ஆனால் அவர்களோ நேருக்கு மாறாகப் பொறியியல் சேர்ந்தார்கள். கபில் சிவில் முடித்தான். சர்வு ஐடியில் சேர்ந்தான். படித்தார்கள். நல்லதொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். அந்த வரையில் மல்லிக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் பிடித்தப் பெண்ணைப் பார்த்து திருமணத்தையும் முடித்துவிட்டு வந்து நிற்கும் போது மல்லிக்கு ஏகத்திற்கும் கடுப்பாகிப் போனது. அர்ச்சனாவும் லலிதாவும் தோழிகள். ஒன்றாகப் பார்த்து ஒன்றாக சைட் அடித்து ஒன்றாகவே காதல் சொல்லி சம்மதிக்க வைத்தனர் அந்த இரட்டையர்கள். அர்ச்சனா வீட்டில் ஜாதி மாற்றி திருமணம் என்றால் வெட்டு ஒன்னு துண்டு இரண்டுதான். மல்லியிடம் கேட்டாலும் சம்மதிக்க மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் முடிவை அவர்களே எடுத்து, அந்த இரட்டையர்கள் இருவரும் ஒன்றாகவே திருமணம் முடித்துவிட்டனர். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல லல்லி கபில் திருமணம் ஒரு ஓசி இணைப்பு. எல்லாம் சரிதான். ஆனால் மூத்தவன் ஒருவன் இருக்கும் போது இளையவர்கள் இப்படியா சுயநலமாக நடந்து கொள்வார்கள். அதுதான் மல்லியின் மனதை அறுத்தது. ஆனால் அதற்கும் காரணம் மல்லிதான். அவர் மூத்தவன் மீது அன்பைப் பொழிந்து தள்ளியதால் இவர்கள் இருவருக்கும் வெங்கட் மீது வெறுப்பு. கொஞ்சம் கடுப்பு. அதேநேரம் பிடித்தம் இல்லை என்று சொல்ல முடியாது. பிடிக்கும். அவ்வளவுதான். ஆனால் மல்லி இந்தத் திருமண விஷயத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. இருவரையும் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டார். நந்தகுமாரும் வெங்கட்டும்தான் எப்படியோ பேசி அப்போதைக்கு அந்தப் பிரச்சனையை சுமுகமாக முடித்து வைத்தனர்.  ஆனால் மல்லி மனம் ஆறவில்லை. ‘சம்சாரம் அது மின்சாரம்’ விசு போல ’கோதாவரி கோட்டைக் கிழி’ என்பதைக் கொஞ்சம் மாற்றி நந்தாவைக் கிழிக்கச் சொன்னார். முன்னிருந்த படுக்கை அறையும் டைனிங் அறையும் தங்களுடையது என்றும் பின்னிருந்த இரண்டு படுக்கையறையும் சமையலறையும் அவர்களுடையது என்று பிரித்துவிட்டார். மல்லி மேலும் தங்கள் அறை பக்கத்தில் ஒரு சிறிய சமையலறையும் வெங்கட்டிற்கு மாடியில் ஒரு தனி அறையும் அமைத்துக் கொடுத்தார். தனியாக அவர்களுக்கு என்று ஒரு வேலைக்காரப் பெண் வைத்திருக்கிறார். காலையும் மாலையும் அவள் வந்து அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து விடுவாள். ஒரே வீட்டில் இருந்தாலும் சமையல் முதற்கொண்டு எல்லாமே தனித்தனிதான். பெரும்பாலும் வெங்கட் எங்கே இருக்கிறானோ அங்கேதான் மல்லியும் இருப்பார். இரவு உணவெல்லாம் கூட மாடியறையில்தான் உண்பார்கள். இதெல்லாம் நடந்து ஆறு வருடம் ஓடிவிட்டது. பேரன் பேத்திகளும் வந்துவிட்டனர். ஆனால் மல்லி இப்போது வரை கோட்டை அழிக்கவில்லை. மருமகள்களையும் மட்டும் அல்ல. பேரன் பேத்திகளை கூட ஏற்றுக் கொள்ளவில்லை. “நான் யாருக்கும் அத்தையும் இல்ல… பாட்டியும் இல்ல… ஒரு டெனெட்போல அவங்களை இருந்துக்க சொல்லுங்க… அதுக்கு மேல எந்த உரிமையும் அவங்களுக்கும் இல்ல எனக்கும் இல்ல” என்று மல்லி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.  பாகுபலி சிவகாமி போல இந்த வீட்டில் மல்லி வைத்ததுதான் கட்டளை. அவர் கட்டளையே சாசனம். ஆதலால் சர்வு மற்றும் கபிலின் குழந்தைகள் மல்லியைப் பாட்டி என்று அழைக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக கிரேன்ட்மாவைச் சுருக்கி ஜி.எம் என்றும் மருமகள்கள்… மதர் இன் லாவை சுருக்கி எம்எல் என்றும் அழைப்பார்கள். அதையும் கூட அவர் காதுப்பட சொல்ல மாட்டார்கள். இந்தளவு மல்லி ஈகோவுடன் இருக்கும் போது நந்தா மட்டும் அவர்களுடன் உறவாடினால் அவருக்குப் பற்றிக் கொண்டு வராதா? ஏதோ பேரன் பேத்திகளிடம் பேசுவதைப் போனால் போகிறதென்று விட்டுவிட்டார். ஆனால் மருமகள்களிடம்… அவருக்குத் தாங்கவில்லை. வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை போல மல்லி குமுறிக் கொண்டிருக்க அறைக்குள் சூடான பஜ்ஜியுடன் நுழைந்தார் நந்தா. அந்தத் தட்டை பார்த்ததுமே மல்லி இன்னும் அதிகச் சீற்றமானார். “யாரைக் கேட்டு அவளுங்க சமையற்கட்டுல இருந்து சமைச்சு எடுதுக்கிட்டு இங்கே வந்து நிற்கிறீங்க… அந்த மானங்கெட்ட பஜ்ஜியைத் தூக்கிட்டு வெளியே போங்க” என்றவர் பொங்க, “மானங்கெட்ட பஜ்ஜி இல்ல மல்லி… வாழைக்காய் பஜ்ஜி” என்று நந்தா கூலாக பதில் சொல்ல, மல்லி நெற்றி கண்ணைத் திறந்துவிட்டார். அதற்கெல்லாம் பயப்படுபவரா நந்தா? “அப்படி பார்க்காதே மல்லி… ஏதோ பஜ்ஜி செய்றதுக்கு நான் ஹெல்ப் பண்ணேன் அவ்வளவுதான்… நம்ம வீட்டுல டெனட்டா இருந்தா ஹெல்ப் பண்ண மாட்டோமா என்ன?” நந்தா சமாளிக்க, மல்லிக்கு உள்ளுர கோபம் திகுதிகுவென ஏறியது. “பண்ணுங்க பண்ணுங்க… உங்களுக்குத்தான் மானம் ரோஷம் வெட்கம் சூடு சொரணை இப்படி எதுவும் இல்லையே… நல்லா ஹெல்ப் பண்ணுங்க” என்றவர் மேலும் பழைய கதையெல்லாம் பேச ஆரம்பித்தார். “நான்தான் அவங்களுக்கு ஸ்ட்ரிக்ட் அம்மா… பிடிக்காதவ… நீங்க நல்ல அப்பாதானே... உங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு… ஒரே ஒரு வார்த்தை சொன்னானுங்களா? நன்றி கெட்டவனுங்க… கூட பிறந்த அண்ணனைப் பத்தி கூட யோசிக்கல… நீங்க என்னடான்னா அவனுங்க பொண்டாட்டிங்களோட லூட்டி அடிச்சிட்டு இருங்கீங்க… பஜ்ஜி செய்றேன் போண்டா செய்றேன்னு” என்றவர் வெறுப்பாகச் சொல்ல, அவர் தட்டை ஓரமாக வைத்து விட்டு மனைவி அருகில் வந்து நிதானமாகப் பேசினார். “நீ இன்னும் எவ்வளவு வருஷத்துக்கு இந்தப் பழைய கதையே பேசிட்டு இருக்க போறன்னு எனக்கு தெரியல… வருஷம் பாட்டுக்குப் போயிட்டே இருக்கு… உனக்கும் எனக்கும் வயசாகிடுச்சு… இனி இருக்கிற காலத்துல பேரன் பேத்தி மகன் மருமகன்னு சந்தோஷமா இருந்திட்டு போவோமா… அதை விட்டுட்டு” என்று எடுத்துரைத்தவர் மனைவியின் கரத்தை தன் கரத்திற்குள் எடுத்துக் கொண்டு, “ப்ளீஸ் மல்லி உன் கோபத்தை விட்டுடு… நாம போதும் போதுமென்றளவுக்கு நாம அவங்களைத் தண்டிச்சாச்சு… தள்ளியும் வைச்சாச்சு… இதுக்கு மேலயும் வேண்டாம். பேரன் பேத்திங்கன்னு நாம சந்தோஷமா இருக்கலாம்” என்று புரிய வைக்க, மல்லி வெடுக்கெனக் கையை உதறிக் கொண்டார். “எனக்கு பேரன் பேத்தினா அது என் வெங்கட்டுக்குப் பிறக்கிற குழந்தைங்க மட்டும்தான்… வேற யாரும் எனக்கு பேரனும் இல்ல பேத்தியும் இல்ல” “அதுக்கு நீ முதல அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்ற நந்தாவின் வார்த்தை மல்லியை நோக்கிக் குத்தலாக வந்து விழுந்தது. “நான் அவனுக்குப் பொண்ணு பார்த்துட்டுதான் இருக்கேன்… சீக்கிரமே ஒரு நல்லப் பொண்ணா பார்த்து அவனுக்குச் சீரும் சிறப்புமா ஊரே மெச்சுறளவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்” “ஆமா ஆமா நீ அப்படியே பண்ணி வைச்சுட்டாலும்…” என்றவர் ஒரு மாதிரி நக்கலாக இழுக்க,  “பண்ணி வைச்சுட்டாலும்னா… என்ன பண்ணி வைக்க மாட்டேனா?” என்று கணவரை முறைத்தபடி கேட்டார் மல்லி. “பண்ணி வைச்சுருவ… அவன் கிழவனான பிறகு” என்றவர் வார்த்தையில் மல்லிக்கு புசுபுசுவெனக் கோபமேற, “என்ன சொன்னீங்க… திரும்ப சொல்லுங்க” என்று அடங்கா கோபத்துடன் கேட்க, “நான் சொன்னதுல என்ன தப்பு மல்லி… நீ வெங்கட்டுக்குப் பொண்ணு பார்க்கிறங்குற பேர்ல பண்ற அலப்பறையைதான் நான் பார்க்கிறேனே… ஊர் உலகத்துல நான் பார்த்தாலும் பார்த்தேன்… உன்னை மாதிரி யாரையும் பார்க்கல…  பொண்ணு படிச்சிருக்கா அழகா இருக்கன்னு பார்க்கிறதை விட்டுவிட்டு ஜாதகம் ஜாதி எல்லாம் பார்க்கிறது பத்தாதுன்னு படிப்பு அழகோட சேர்த்து அடக்க ஓடுக்கமா ஒழுக்கமா வேற இருக்கணும்… இதுக்கு தனியா இன்டர்வியூ வேற வைச்சு… ஷப்பா முடியல… ஏன்டி ஏன்டி நீ இப்படி இருக்க?” என்றவர் மனதிலிருந்த கோபத்தை எல்லாம் கொட்டிவிட மல்லியின் முகம்தான் சுண்டிவிட்டது. “நீங்க சொல்றீங்கங்குறதால எல்லாம் என் பையனுக்கு நான் ஏனோ தானோன்னு ஏதோ ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைக்கக் முடியாது… அவன் குணத்துக்கும் அறிவுக்கும் ஏத்த மாதிரி ஒரு நல்லப் பொண்ணா பார்க்கிறேன். அதுக்கு கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும்” என்றவர் சொன்ன நொடி, “லேட்டுனா எப்படி? ஒரு பத்து வருஷம் ஆக்குவியா?” என்றவர் எகத்தாளமாகக் கேட்க மல்லிக்குதான் தாங்கவில்லை. “வேண்டாம் நீங்க ரொம்ப ஓவரா போறீங்க” “நீ பண்றது அப்படி இருக்கு மல்லி… பொண்ணு பார்க்கிறேன்னு ஒரேடியா இப்படியா” “நீங்க பார்த்துக்கிட்டே இருங்க…வெங்கட்டுக்கு ஏத்தப் பொண்ணா… அழகானப் பொண்ணா… அதுவும் குணமான நல்லப் பொண்ணா… அவ இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு நான் என் பையனுக்குக் கட்டி வைப்பேன்” “தேடு தேடு… நீ தேடுற மாதிரியான குணமான அழகான… நல்ல்ல்லல்ல்ல்ல பொண்ணு இந்த கிரகத்துல இல்ல வேற கிரகத்துல கூட கிடைக்க மாட்டா” என்றார் நந்தா. “அப்படி மட்டும் கிடைச்சுட்டா உங்க மூஞ்சியைத் தூக்கிட்டுப் போய் எங்க வைச்சுப்பீங்க மிஸ்டர் நந்தக்குமார்” “ஹும்… தனியா ஒரு ஸ்டேன்ட் செஞ்சு… அதுல வைச்சுக்கிறேன் மிஸஸ் மல்லி நந்தக்குமார்” என்றவர் பதிலடிக் கொடுத்தார். “வெங்கட்டுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் என்கிட்ட நீங்க பேசவே கூடாது” என்றவர் முறுக்கிக் கொள்ள, “முதல நீ கல்யாணம் பண்ணி வை… அப்புறம் பார்க்கலாம்” என்றவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டுச் செல்ல, “பண்ணி வைக்கிறேன்… இன்னும் ஆறே மாசத்துக்குள்ள பண்ணி வைக்கிறேன்… அப்படி பண்ணி வைக்கல என் பேர் மல்லி இல்ல” என்றார். “ஏன்? வில்லின்னு மாத்தி வைச்சுக்கப் போறியா?” என்றவர் கிண்டலாகக் கேட்க, அவ்வளவுதான்… மல்லி என்ற எரிமலை வெடித்துவிட்டது. “உங்களை உங்களை” என்றவர் கோபமாக அங்கிருந்த பொம்மை ஒன்றைக் கைகளில் தூக்க, நந்தா அதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கதவை மூடிவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டார். அதற்கு மேலாக அவராலும் மனைவியின் கோபத்தை சமாளிக்க முடியாது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா