மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episoode 4Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episoode 4

Quote from monisha on May 8, 2023, 6:06 PM

4
நந்தாவின் பேச்சுக்களால் மல்லி ரொம்பவும் மனஉளைச்சலில் இருந்தார். அதுவும் தன் வீட்டில் தன்னை மீறி எதுவும் நடப்பதை அவர் விரும்பவில்லை. பள்ளியில் எப்படியோ அப்படியேதான் வீட்டிலும். அவர் வைத்ததுதான் சட்டம். இந்நிலையில் பணிப்பெண் ரத்னா அந்தச் சமயத்தில் மல்லியிடம் வந்து வகையாகச் சிக்கிக் கொண்டார். “ஆமா… மதியம் சாப்பாடு எல்லாம் அவர் இங்கே சாப்பிடுறாரா? இல்ல மருமகளோடவா?” என்றவர் விசாரிக்க. ரத்னா முகம் வெளிறி போனது. உண்மையையும் சொல்ல முடியாமல் பொய்யும் சொல்ல முடியாமல் அவள் ஊமையாக நிற்க, “அப்போ அவர் அங்கேதான் சாப்பிடுறாரு அப்படிதானே?” என்று கேட்டு வைக்க, “அது இல்லைங்கம்மா… எப்பயாச்சும்” என்றவள் இழுக்க, மல்லி உக்கிரமானார். “உனக்கு இனிமே இந்த வீட்டுல வேலை இல்ல… நீ என்கிட்ட வாங்குன காசுக்கு இந்த மாசம் முழுக்க வேலை செஞ்சுட்டுப் போயிட்டே இருக்கணும்” என்றவர் ஒரே போடாகப் போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார். ரத்னா இடிந்து போய்விட்டாள். இந்த வேலையை வைத்துதான் அவளின் ஜீவனம் நடக்கிறது. வெங்கட்தான் அவளை இந்த வேலைக்கு சிபாரிசு செய்தது. மூளை குறைபாடுள்ள ஒரு பெண் குழந்தையைத் தனியாக வைத்து கொண்டு அவள் படும் சிரமத்தை அறிந்தவன், அவளுக்கு வேலையையும் வாங்கிக் கொடுத்து தன் மகளை மனநலம் குன்றியுள்ளவர்கள் படிக்கும் பள்ளியிலும் சேர்க்க உதவி புரிந்தான். வேறு எங்கே வேலை செய்தாலும் இந்தளவு சம்பளமும் சலுகைகளும் கிடைப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. ரத்னா கையைப் பிசைந்துக் கொண்டு நின்றார். வெங்கட்டிடம் சொன்னால் அம்மாவிடம் பேசுவான்தான். ஆனால் மல்லி ஒரு முடிவெடுத்துவிட்டால் யார் சொல்லியும் கேட்கமாட்டார். வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து பார்க்கிறாள். எல்லாமே அவருக்கு மிகச் சரியாக இருக்க வேண்டும். ஒரு சிறிய தப்பைக் கூட அவரால் ஜீரணித்து கொள்ளவே முடியாது. அதற்கு முன்பாகப் பணிப்பெண்ணாகச் சேர்ந்தவர்கள் எல்லாம் மல்லியின் அதிரடியில் ஒரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. வெங்கட் தன் அம்மாவின் குணத்தைப் பற்றிச் சொல்லித்தான் அவளை வேலைக்குச் சேர்த்துவிட்டான். இதுநாள் வரை அவளும் அந்த நம்பிக்கையைக் காப்பற்றியிருக்கிறாள். ஆனால் இன்றோடு எல்லாம் முடிந்துவிட்டது. இனி எங்கே போவது என்ற கேள்வி பூதாகரமாக அவள் கண் முன்னே வந்து நின்றது. வாழ்க்கையே போராட்டமாகக் கடத்தும் ரத்னா ஒரு ரகம் என்றால் உப்புக்குப் பெறாத விஷயத்திற்கு எல்லாம் மாடியிலிருந்து குதித்துவிடுவேன் என்று மிரட்டும் பாவனாக்கள் மற்றொரு ரகம். அந்தப் பள்ளி வேண்டாமென்று பாவனா எப்படி எப்படியோ உருண்டு புரண்டு அழுது பார்த்துவிட்டாள். கெஞ்சிக் கதறி பார்த்துவிட்டாள். அவள் அம்மா சித்ரா அசைந்து கொடுக்கவில்லை. ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு எனப் பெற்று வைத்திருக்கும் மகளைப் பார்த்து தந்தை ஜெயந்தனுக்கும் கொஞ்சம் பாவமாகதான் இருந்தது. ஆனால் வேதா வித்யாலயாவில் கட்டிய டொனேஷன் பணமெல்லாம் நினைவு வந்த போது பாவமாவது புண்ணியமாவது… என்று அமைதியோ அமைதி நிலைக்குப் போய்விட்டார். பாவனா இறுதியாக மாடியிலிருந்து குதித்து விடுவேன் என்று மிரட்டல் ஆயுதத்தை கையிலெடுக்க, சித்ரா அதற்கெல்லாம் துளியும் மசியவில்லை. “குதிக்கிறதுனு முடிவு பண்ணிட்டா நேரா குதிக்காதே… தலை கீழா குதி” என, பாவனா ஆடிப் போய்விட்டாள். “பெத்த தாயா நீ பெத்த பேயு… டாக்டராகி உயிரைக் காப்பத்தலாம்… ஆனா இப்படி டாக்டருக்குப் படிக்கச் சொல்லி என் உயிரை எடுக்குறியே” என்று பாவனா காண்டாக, “ஆமான்டி… நீ டாக்டர் படிச்சுதான் ஆகணும்… அதுக்காக உங்க அப்பா உனக்காக நிறைய இன்வெஸ்ட் பண்ணி இருக்காரு… இப்ப கூட ரொக்கமா ஐந்து லட்சம் கட்டியிருக்கு உனக்கு பயாலஜி க்ரூப் வாங்கிறதுக்கு… நீ ஒரு நாள் போயிட்டு இந்த ஸ்கூல் வேண்டாம்னு சொன்னா… அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவாங்களா என்ன?… மொத்தமா நாமம் போட்டுடுவாங்க… அப்புறம் நீ இல்ல… நாங்களும் சேர்ந்து உன் கூட குதிக்க வேண்டியதுதான் மாடியிலிருந்து” என்றவர் சொல்ல பாவனாவிற்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று புரியவில்லை. “பாவனா நான் சொல்றதைக் கேளு… இன்னும் ஒரு மாசம் அந்த ஸ்கூலுக்கு போ… அப்பவும் உனக்கு பிடிக்கலன்னா… மேல என்ன பண்றதுன்னு பார்க்கலாம்” என்று இறுதியாக சித்ரா உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று பொதுவான சமாதான உடன்படிக்கைக்கு வர, “இந்த டீலிங் ஓகே” என்று தற்கொலை முடிவை அப்போதைக்குக் கைவிட்டுவிட்டுக் கீழே இறங்கிவிட்டாள். அடுத்த நாள் பொறுப்பாக ஐடிகார்ட் எல்லாம் போட்டுப் புறப்பட்டுவிட்டாள் பாவனா. அன்று பள்ளியில் விட உடன் வந்து சித்ரா பாவனாவை மல்லியின் அறைக்கு அழைத்துச் சென்றார். “ம்மா பெரிம்மா கிட்ட எதுவும் சொல்லாதீங்க” என்றவள் கெஞ்ச, “நீ சும்மா இரு” என்றவர் மல்லியிடம் பாவனா சொன்ன பேய் கதையெல்லாம் ஒன்று விடாமல் போட்டுக் கொடுத்துவிட்டார். ‘எங்க வந்து யார்கிட்ட… மாட்டி விட்டிருக்காங்க’ என்ற பாவனாவிற்கு உள்ளுர குளிர் பரவியது. ஆனால் மல்லி இம்முறை கோபப்படவோ அறிவுரை வழங்கவோ இல்லை. அந்த ‘டெவில் ப்ளாக்’ பற்றிய கதையை விவரமாக உரைத்தார். பள்ளியில் நடந்தவை எல்லாமே தற்செயலாக நடந்த விபத்து என்றும் அதற்கும் அந்த மாயா குடும்பத்தின் இறப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நிதானமாகப் புரியவும் வைத்தார். “மாயாவோட இறப்பு ஸ்கூலிலயே நிறைய பேரை மனசளவில ரொம்ப பாதிச்சுது… வெங்கட் கூட ரொம்ப அப்சட்டாகிட்டான்… அவன் அதுல இருந்து மீண்டு வரேவே ஒரு மாசாமாகிடுச்சு… எக்ஸாம் எழுத முடியாம போயிடுமோன்னு கூட பயந்தேன்” என்றவர் வருத்தத்துடன் சொல்ல, “ஓ! இந்த விஷயம்தானா அது” என்று சித்ராவும் ஆவலாக கதை கேட்டுக் கொண்டிருக்க, இடையில் நின்று பாவனாவும் அந்தக் கதையைக் கேட்டு விவகாரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். ‘நேத்து அண்ணன் இதை பத்தி எதுவும் சொல்லலயே… ஒரு வேளை மாயாவுக்கும் அண்ணாவுக்கும் சம்திங் சம்திங் இருக்குமோ?’ என்ற தீவிர யோசனையில் பாவனா இருக்கும் போதுதான், “இன்னும் இங்கே நின்னு என்ன பண்ணிட்டு இருக்க… அதான் உன்கிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லி புரிய வைச்சுட்டேன் இல்ல… அப்புறம் என்ன? இன்னும் கிளேஸுக்குப் போகாம எங்க வாயைப் பார்த்துட்டு இருக்க?” என்று மல்லி கோபாமாக, சித்ராவும் மகளை முறைக்க, பாவனா ‘எஸ்கேப்’ என்றவள் அங்கிருந்து ஓட்டமாக ஓடிவிட்டாள். ஆனால் அவளுக்குப் பேய் என்பது ஒரு காரணம் மட்டும்தான். அவளுக்கு மொத்தத்தில் இந்தப் பள்ளிப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது இந்தப் பேய் கதையைப் பற்றி இன்னும் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆவல் பிறந்தது. அதற்காகவே இன்னும் கொஞ்ச நாட்கள் இங்கே தாக்குப் பிடிக்கலாம் என்று முடிவெடுத்தாள். மொத்தத்தில் ஐந்து லட்ச ரொக்கம் பேய் கதையை அலசி ஆராய பயன்பட போகிறது. எப்படியோ பேயிடம் அடிவாங்காமல் இருந்தால் சரி! பாவனா சென்ற பிறகு, சித்ராவும் அலுவலகத்திற்கு நேரமாகிறது என்று கிளம்பிவிட்டார். அதன் பின் மல்லியின் சிந்தனையையும் அந்தப் பேய் வீடு ஆக்கிரமித்துக் கொண்டது. எப்படியாவது இந்தப் பேய் கதைக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம் என்று பள்ளி நிர்வாகத்திடம் எத்தனையோ முறை அவர் பேசிப் பார்த்துவிட்டார். பேய் என்றால் எப்பேர்ப்பட்டவனுக்கும் கொஞ்சம் பீதியைக் கிளப்பதான் செய்கிறது. அதனால்தான் அவர்களும் அந்தக் கட்டிடத்தில் கை வைக்க பயப்படுகிறார்கள். இந்த யோசனையில் ஆழ்ந்திருந்தவரை அடுத்தடுத்து வந்து வரிசையான பள்ளி வேலைகள் உள்ளிழுத்துக் கொண்டன. வேலைகள் எல்லாம் முடித்த பின் வேறொரு பிரச்சனை ஆட்டி வைக்கத் தொடங்கியது. அதுதான் மகனின் திருமணம்! ஊரில் உள்ள அனைத்து மேட்ரிமோனி சைட்களிலும் வெங்கட்டின் பெயரைப் பதிவிட்டு வைத்திருக்கிறார். ஆனால் ஃபோட்டோவை மட்டும் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கே வெளிநாடு உள்நாடு என்று பல நூறு பிரபோஸல்கள். ஆனால் ஒன்று கூட அவருக்கு திருப்திகரமாக இல்லை. ஒருவேளை கணவர் சொன்னது போல நாம் வைத்திருக்கும் வரையறையைச் சுருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அவருடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. “நல்ல பொண்ணா பார்க்கணும்னா கொஞ்சம் லேட்டாகதான் செய்யும்… இதுல நான் எந்த காம்பிரமைஸும் பண்ணமாட்டேன்… பண்ணவும் கூடாது… இது என் பையனோட வாழ்க்கை பிரச்சனை” என்றவர் தன் செயலுக்கு நியாயம் கற்பித்து கொண்டார். இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் வீட்டில் நந்தாவின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இப்போது எல்லாம் அப்பட்டமாக மருமகள்களுடன் பேசத் தொடங்கிவிட்டார். ஒரு நாள் மல்லியின் கண் முன்னாடியே அவர் மருமகள்களுடன் கேரம் போர்ட் விளையாடிக் கொண்டிருக்க, திட்டலாம் என்று முன்னே சென்றவரிடம், “பையனுக்கு கல்யாணம் முடிக்கிற வரைக்கும் யாரோ என்கிட்ட பேசமாட்டேன்னு எல்லாம் சபதம் போட்டாங்க” என்று போட்டுவிட, அதற்கு மேல் மல்லியால் ஒன்றுமே பேச முடியவில்லை. பல்லைக் கடித்து கொண்டு உள்ளே சென்றுவிட்டார். சரியாக அதே சமயத்தில் அங்கே வந்த பாவனா நந்தாவுடன் அர்ச்சனாவும் லலிதாவும் கேரம் விளையாடுவதைப் பார்த்து ஷாக்கடித்த நிலையில் வாசலிலேயே நின்றுவிட்டாள். “ஒருவேளை பெரிம்மா இன்னும் வரலையோ?” என்றவள் சந்தேகத்துடன் நிற்க, நந்தா அவளைப் பார்த்துவிட்டு, “வா பாவனா… உள்ளே வா… நீயும் விளையாட வரியா” என்று அழைத்தார். அதிர்ச்சியுடன் உள்ளே வந்தவள், “பிஎம் இன்னும் வரலையா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்க, “உள்ளே உள்ளே” என்று மருமகள்கள் கைக் காண்பித்தனர். “எப்படி பெரிப்பா? கோட்டைத் தாண்டினா கும்பீபாகமாச்சே” என்றதும் நந்தா சத்தமாகச் சிரித்து, “அதெல்லாம் ஒன்னு பண்ணமாட்டா நீ வா” என்றார். பாவனா முன்னே காலெடுத்து வைக்கவும் அறை வாசலுக்கு வந்த மல்லி, “நீ என்ன அங்கே பண்ணிட்டு இருக்க?” என்றதுமே பயபக்தியுடன், “நான் உங்களைப் பார்க்கலாம்தான் வந்தேன்… நான் கோட்டைத் தாண்டவே இல்ல பெரிம்மா” என்று வாக்குமூலம் கொடுத்துக் கொண்டே உள்ளே சென்றாள். மல்லியின் சிவந்த முகமே அவர் க்ரில் சிக்கனாகச் சூடேறியிருக்கிறார் என்று காட்டியது. ‘ராங் டைமிங்ல வந்து சிக்கிட்டோமோ?’ என்றவள் உள்மனம் குரல் கொடுத்தது. ஆனால் அவள் பார்க்க வந்தது. மல்லியை இல்லை. வெங்கட்டைதான். ஆனால் சாமியைப் பார்க்கும் முன் பூசாரி வரம் கொடுக்க வேண்டுமே! “என்ன திடீர்னு… என்ன விஷயம்” என்று மல்லி கேட்க, “நோட்ஸ்… இல்ல நீட்ஸ்… இல்ல நீட்டோட நோட்ஸ் புக்ஸ் எல்லாம் வாங்க வந்தேன்” என்று பாவனா தட்டுத் தடுமாறிச் சொல்ல, ‘அம்புட்டு நல்லவளா நீ’ என்பது போல மேலும் கீழுமாக ஒரு பார்வையைப் பார்த்தார் மல்லி. “உண்மையிலேயே நோட்ஸ் வாங்கதான் வந்தேன் பெரிம்மா… அன்னைக்கு கூட நீங்க கொடுக்கிறேன்னு சொன்னீங்களே” “ஹும்” என்று தலையசைக்கும் போது வெளியில் கார் வரும் சத்தம் கேட்டது. “அண்ணன் வந்துட்டாங்க பெரிம்மா” என்று அவள் உற்சாகமாகச் சொல்ல, “அவன் இங்கே வரமாட்டேன்… நேரா மேலேதான் போவான்” என்றார்.  “நான் மேலே போய் அண்ணாக்கிட்ட பேசிட்டு வரேன்” என்றவள் கூடுதல் தகவலாக, “மெடிக்கல் படிக்கிறதைப் பத்திதான்” என்றாள். “சரி நீ மேலே போ… வெங்கட்டுக்கும் உனக்கும் நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சொன்னதுதான் தாமதம். பாவனா சிட்டாகப் பறந்து சென்று மாடியில் நிற்க, முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்து ஆச்சரியமாக விழிகள் விரித்தான்.  “ஏய் பாவனா… எப்போ வந்த” என்று விசாரித்தவன் மேலும் “காலில காயம் ஆறிடுச்சா…” என்று கேட்க, “அதெல்லாம் எப்பவோ ஆறிடுச்சு” என்றாள். “ஆமா ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொன்னியே… போனியா” “போனேன் போனேன்… போகலன்னா உங்க அம்மாவும் எங்க அம்மாவும் விட்டிருவாங்களா… மாடில இருந்து குதிக்கிறன்னு சொன்னா கூட ஆவியா வந்தாவது மெடிக்கல் படின்னு சொல்வாங்க… டூ மச் ஆஃப் டார்ச்சர்” என்றவள் தன் கவலைகளை அடுக்க அவள் தலையில் தட்டியவன், “பேச்சு ஓவராதான் இருக்கு… உன் நல்லதுக்குதானே சொல்றாங்க… கேட்டா என்ன குறைஞ்சு போயிடுவ?” என்றான். “நான் என்ன பத்தி யோசிக்கல… நான் அசலாட்டா மெடிக்கல் படிச்சிடுவேன்… ஆனா என்கிட்ட ட்ரீட்மென்ட் பண்ணிக்கிற பேஷன்ட்ஸோட நிலைமை” என்றவள் கேட்க, “அதென்னவோ உண்மைதான்… நீ வர பேஷன்டை பேசியே போட்டுத் தள்ளிடுவ” என்றான். “உங்களுக்கு தெரியுது… ஆனா அந்த சின்சியர் சிஸ்டர்ஸுக்கு தெரியலையே ண்ணா” என்றவள் மேலும், “அதை விடுங்க… நான் உங்ககிட்ட கேட்க வந்த விஷயமே வேற” என்றாள். “என்னது?” “மாயா… மாயா பத்தி சொல்லுங்க அண்ணா… அவங்க பேமிலிக்கு என்னாச்சு… எப்படி அப்படி ஒரு ஃபைர் ஆக்சிடென்ட் ஆச்சு? சொல்லுங்க அண்ணா… ப்ளீஸ்” என்றவள் கேட்கவும் அவன் அதிர்ந்துவிட்டான். “ஸ்டாப் இட் பாவனா… என்கிட்ட மாயாவைப் பத்தி எதுவும் கேட்காதே… எனக்கு எதுவும் தெரியாது… எதை பத்தியும் தெரியாது” என்றவன் கோபமாகச் சொல்ல அவளோ விடாக்கொண்டனாய், “பொய் சொல்லாதீங்க அண்ணா... பெரிம்மா சொன்னாங்க… நீங்க மாயா டெத்ல ரொம்ப அப்செட் ஆகிட்டீங்கன்னு” என்றதும் அவன் முகத்தில் லேசான மாற்றம் வந்து மறைந்தது. “என் கிளேஸ்ல இருக்க எல்லோரையும்தான் மாயாவோட டெத் பாதிச்சுது” “உங்களைக் கொஞ்சம் அதிகமா பாதிச்சதாமே?” என்று பாவனா ஒரு மாதிரி சந்தேக பார்வையுடன் கேட்க, “அப்படி எல்லாம் இல்ல” என்றவன் உடனடியாக மறுக்க, அதே நேரம் மல்லி காபி ட்ரேயுடன் மேலே வந்து கொண்டிருந்தார். அந்த நொடியே பாவனா, “நான் மாயா பத்திக் கேட்டதைப் போட்டுக் கொடுத்துடாதீங்க ண்ணா… அப்புறம் பெரிம்மா என்னை கைமா பண்ணிடுவாங்க” என்று ரகசியமாக அவன் காதைக் கடிக்க, “நீ திரும்பியும் மாயா பத்தி பேசுன நான் கண்டிப்பா சொல்லிடுவேன்” என்றவனும் ரகசியம் பேசுவது போல சொல்ல, “பேசல பேசல” என்றவள் உறுதி கொடுத்தாள். அதற்குள் மல்லி, “காபியை எடுத்துக்கோங்க” என்று வந்து நிற்க இருவரும் காபி கொடுப்பதில் மும்முரமாகிவிட்டனர். பாவனாவிற்கு பெருத்த ஏமாற்றம். அண்ணனிடமிருந்து ஒரு விஷயத்தைக் கூட கறக்க முடியவில்லையே என்று! காபியைக் குடித்துவிட்டு அவள் புறப்படுவதாகச் சொல்ல, “நீ நீட் புக்ஸ் எல்லாம் கேட்ட இல்ல… கீழே எடுத்து வைச்சு இருக்கேன்… வா கொடுக்கிறேன்” என்றார். “ஐயோடா!” என்று உள்ளுர கடுப்பான போதும் மல்லியின் பின்னோடு இறங்கியவள் மீண்டும் வெங்கட்டிடம் திரும்பி வந்து, “நீங்க மாயாவைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்… மாயாவோட ஃபோட்டோ மட்டுமாச்சும்” என்று இழுக்க, அவன் முறைக்க… இவள் கீழே ஓடிவிட்டாள். வந்ததற்கு தலைகாணி அளவுக்கு புத்தகம் கிடைத்ததுதான் மிச்சம் என்று பரிதாபமாக பாவனா புறப்பட்டுச் சென்றுவிட, வெங்கட்டோ தன்னறையில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான். சில விஷயங்களை நம் நினைவு பெட்டகத்திலிருந்து அழித்துவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் அது முடியாதே! மனித மூளை ஒன்றும் கணினி இல்லையே. வேண்டாததை அழித்து வேண்டியவற்றை மட்டும் சேகரித்துக் கொள்ள! ஆசைகள் துளிர்விடும் பருவ வயதிலும் படிப்பு படிப்பு படிப்பு என்று இருந்தவனின் வாழ்வில் பட்டாம்பூச்சியாகப் பறந்து வந்தவள். நொடி நேரத்தில் மறைந்தும் போனவள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா