மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 5Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 5

Quote from monisha on May 10, 2023, 5:19 PM

5
அந்தப் பொட்டல் காட்டில் விவி கட்டுமான நிறுவனம் லேஅவுட் போட்ட சில வருடங்களில் அங்கே வேதா வித்யாலயாவும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது என்பது முன்னமே நாம் அறிந்த கதைதான். சென்னை கிளையில் வேலை செய்திருந்த மல்லியை இங்கே முதல்வராகப் பணியமர்த்த, அவர் தன் மகன்கள் மூவரையும் இந்த கிளையில் இடம் மாற்றம் செய்தார். அந்த சமயத்தில் வெங்கட் ஒன்பதாவது படித்திருந்தான். வேதாவிலும் ஒன்பதாவது வரைதான் வகுப்புக்கள் இருந்தன. அங்கே முதல் முதலாகப் பத்தாவது பொதுத் தேர்வு எழுதிய பேட்ச் அவனுடையதுதான். அப்போதுதான் வசந்தம் காலனியில் முதல் வீடு கட்டி முடிக்கப்பட்டது. அதன் உரிமையாளர்தான் ஸ்டீபன்ராஜ். அவரின் செல்ல பேத்திதான் மாயா! வீட்டைக் கட்டி முடித்த கையோடு மாயாவை அங்கே பதினோராம் வகுப்பு சேர்த்துவிட்டிருந்தார். அவளது மதிப்பெண்ணிற்கு உயிரியல் பிரிவு கிடைப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. இருந்தும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி என்பதால் டொனேஷன் சில பல உயர் அதிகாரிகளின் சிபாரிசு மூலமாக அது சாத்தியப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் மாயா என்பவளை வெங்கட்டிற்கு பெயரளவில் தெரியும். அதிகப்படியாக அவனுக்கு தெரிந்த தகவல் படிப்பை விட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். மற்றபடி அவனுக்கு அவளுடன் எந்தப் பழக்கமுமில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கிய பிறகு தடுக்கி விழுந்தால் தேர்வு என்று ஒவ்வொன்று நாளும் பரபரப்பு. படபடப்புதான். யாருக்கு விடுமுறை இருந்தாலும் இருக்கும். பன்னிரெண்டாம் வகுப்பிற்கும் பத்தாம் வகுப்பிற்கும் அப்படியொன்று கனவிலும் கிடையாது. அந்த மாதிரியான விடுமுறை நாள் அது. பள்ளிக்கூடமே வெறிச்சோடியிருந்த நிலையில் மல்லிதான் அன்று பன்னிரெண்டாம் ஏ வகுப்பிற்கு கணக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். இண்டக்ரலின் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து அவர் வெளியே வருவதற்குள் அங்கிருந்த மாணவ மாணவிகளுக்கு எல்லாம் விழி பிதுங்கி வெளியே வந்து விழாத குறை. “ஓகே எல்லாரும் எழுதி முடிச்சு… நோட்ஸ் சப்மிட் பண்ணிடுங்க” என்றவர் வெங்கட்டை அழைத்து ஏதோ சொல்லிவிட்டுப் போனார். அவன் எழுதி முடித்த புத்தகங்களை எல்லாம் ஒன்றாக அடுக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டு மீண்டும் வகுப்பிற்கு திரும்பிய அந்தச் சிறிய இடைவேளையில்தான் மாயா மல்லிக்காக டிஆர் ஸ்டைலில் கவிதை பாடியது. ‘சுவத்துல இருக்கும் பல்லி வீடு கட்ட வேணும் ஜல்லி அடியேய் மல்லி நீதான்டி எங்க எல்லோருக்கும் வில்லி வில்லி” அவள் தனது குட்டை முடியை ஆட்டி ஆட்டிப் பாடிய விதத்தில் அந்த வகுப்பே சிரித்து மாய்ந்தது. வாசலில் வந்து நின்ற வெங்கட்டிற்கு கோபம் தலை கால் புரியாமல் ஏறியது. மாயா அவனைப் பார்த்ததும் பவ்யமாக தன்னிடத்தில் வந்து பதுங்கிவிட்டாள். அப்போதுதான் அவளருகிலிருந்த பெண் அவன் மல்லியின் மகன் என்ற உண்மையைச் சொன்னாள். அந்தப் பள்ளியில் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரியாது. இருவருமே காட்டிக் கொண்டதில்லை. ஆனால் மாயாவின் அருகிலிருந்த பெண்ணும் அதே பள்ளியில் பணி புரியும் மற்றொரு ஆசிரியர் மகள். அந்த வகையில் அவளுக்கு இந்த விஷயம் தெரியும். மாயாவின் முகம் பயத்தில் வெளிறிவிட்டது. வெங்கட்டோ வகுப்பிற்குள் வராமல் மீண்டும் பின் வாங்கி செல்ல, அவள் பதறிப் போனாள். அவன் எங்கே நேராக மல்லியிடம் சென்று போட்டுக் கொடுத்துவிட போகிறான் என்று. அவளும் எழுந்து அவன் பின்னோடு சென்று, “ஏய் ஐம் சாரி… எனக்கு அவங்க உங்க அம்மான்னு தெரியாது” என, “அவங்க என் அம்மாங்கிறதுக்காக மட்டும் நான் கோபப்படல… அவங்க நமக்கு டீச்சர்… அந்த மரியாதை வேண்டாமா உனக்கு” என்றவன் திரும்பி நின்று அவளை முறைத்தபடி கேட்க, “சாரி சாரி… ஐம் எக்ஸ்ட்ரிம்லி சாரி… நீ மல்லிகிட்ட… இல்ல இல்ல மேடம் கிட்ட சொல்லிடாதே” என்று அவள் இறைஞ்ச அவன் கோபம் இன்னும் அதிகமானதுதான் மிச்சம். “நான் கண்டிப்பா மேடம் கிட்ட சொல்லதான் போறேன்” என்றவன் முன்னே நடக்க, “நீ ரொம்ப ஓவரா பண்ற வெங்கட்… யாரும் டீச்சர்ஸ்ஸ கிண்டல் பண்றது இல்லையா? இல்ல நிக் நேம் வைக்கிறது இல்லையா? அதான் நான் அத்தனை தடவை சாரி கேட்கிறேன் இல்ல… நீ பாட்டுக்குப் போயிட்டே இருக்க” என்றவள் அவனைப் பின்தொர்ந்து பேசிக் கொண்டே வந்து அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள். “ஏய் கையை விடு… யாரச்சும் பார்க்க போறாங்க” அவன் பதட்டத்தோடு கூறினான். அவர்கள் பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசினாலே குற்றம். அதிலும் கையெல்லாம் பிடித்தால் கொலை குற்றம்தான். அவசரமாக அவள் கையை விலக்கியவன், “கையைப் பிடிக்கிற… உனக்கு அறிவே இல்லையா?” என்று கேட்க, “கையைப் பிடிக்க கூட அறிவிருக்கணுமா என்ன?” என்றவள் எகத்தாளாமாக பதில் கேள்வி கேட்க, அவன் எரிச்சலாகப் பார்த்தான். “வெங்கி ப்ளீஸ் ப்ளீஸ்… இந்த விஷயத்தைச் சொல்லாதே” என்றவள் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வர, “வெங்கி இல்ல… வெங்கட் ஆர் வெங்கடேஷ்வர்” என்றவன் அழுத்தமாகக் கூறினான். அவள் வாயிற்குள் ஏதோ முனங்கவும் அவளை விழிகள் இடுங்கப் பார்த்தவன், “இப்ப என்ன சொன்ன?” என்று கேட்டான். “எதுவும் சொல்லையே?” “இல்ல சொன்ன” “உஹும்” என்றவள் மறுக்க, அவன் முறைத்து பார்க்க, “ஆமாம் சொன்னேன்… இங்கி பிங்கி பாங்கி…. வெங்கி இஸ் எ மங்கின்னு சொன்னேன்… போதுமா?” என்றாள். “உன்னை” என்றவன் கோபமாக அவளைத் துரத்திக் கொண்டு வர, அவள் தப்பிக்க ஓடிச் சென்று, எதிரே நடக்க முடியாமல் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்த கெமிஸ்ட்ரி ஆசிரியரை குப்புற கவிழ்த்துவிட்டிருப்பாள். நல்ல வேளையாக அவர் சுதாரித்து பின் வாங்கிவிட்டார். “ஐயோ கெமிஸ்ட்ரி சார்… பொண்ணுங்க சைடு பார்த்தாலே விசாரணை கமிஷன் வைப்பாரு… இவளைத் துரத்திட்டுப் போய் இவர் கிட்டமாட்டினா அவ்வளவுதான்” என்று மிரண்ட வெங்கட் அவர் கண்களில் படாமல் இருக்க, அருகிலிருந்த அறைக்குள் பதுங்கிவிட்டான். அந்த அறை முழுக்க புத்தகங்கள் நிரம்பி வழிந்தன. ஆதலால் அவன் ஒரு ரேக் மறைவில் ஒளிந்து கொள்ள வசதியாக இருந்தது. மாயா எப்படியோ கெமிஸ்ட்ரியை சமாளித்துவிட்டுத் திரும்பி அவனைத் தேடிக் கொண்டு வந்தாள். அவன் அந்த அறையில்தான் இருப்பான் என்ற யூகத்துடன் அவள் உள்ளே வந்து நின்று, “வெங்கிகீகீகீ” என்று அழைத்து வெறுப்பேற்ற, “வேண்டாம் மாயா… அப்படி கூப்பிடாதே” என்றவன் எச்சிரிக்கையோடு வெளியே வரவும், அவள் வேகமாகச் சென்று வெளிக்கதவை மூடித் தாழ்பாளிடவும் சரியாக இருந்தது. “மாயா கதவைத் திற” என்றவன் கதவைத் தட்ட, “யாரும் இப்போதைக்கு இந்த ப்ளோருக்கு வர மாட்டங்க வெங்கி… கெமிஸ்டிரியும் கிளேஸ் எடுக்க மேலே போயிடுச்சு… நீ தட்டுத் தட்டுன்னு தட்டிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்றவள் எகத்தாளமாகக் கூறினாள். “நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல… எப்படி இருந்தாலும் என்னைத் தேடிகிட்டு வருவாங்க… அப்படி வந்து கதவைத் திறக்கும்போது நீதான் இப்படி பண்ணேன்னு உன் பேரைச் சொன்னேன்னு வை” “சொன்னா… என்ன பண்ணுவாங்க… டீசி கிழிச்சுக் கொடுத்துடுவாங்களா… மூஞ்சி… பேரண்ட்சை கூப்பிடுவாங்க… வார்ன் பண்ணுவாங்க… நீ ப்ரின்ஸி பையன்னு கொஞ்சம் அதிகமா ரியாக்ட் பண்ணுவாங்க… அவ்வளவுதான். என் தாத்தா வந்தா எல்லாத்தையும் பார்த்துப்பாரு… அவருக்கு வேதாவோட முக்கியமான தலைங்களை எல்லாம் தெரியும்… என்னை எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது… உனக்குதான் தேவையில்லாம நோஸ் கட் ஆகும்” என்று அலட்சியமாகச் சொன்னவள் மேலும், “சாரி கேட்டபோதே சமாதானமா போயிருக்கலாம் இல்ல… தேவையா உனக்கு” என்று சொல்லிவிட்டு அவள் சென்றுவிட, அரைமணி நேரம் அந்தப் பூட்டிய அறைக்குள் கிடந்தான். கழிவறை சுத்தம் செய்ய வந்தவர் அந்த வழியாக வர, கதவைப் பலமாகத் தட்டியவன், “செல்விம்மா… கொஞ்சம் கதவைத் திறந்து விடுங்க… வெளிப்புறமா தாழ்பாள் போட்டிருக்கு” என்றதும் அவர் அவசரமாகத் தாழ்பாளைத் திறந்தார். “யாருப்பா இப்படி பண்ணது?” என்றவர் பதட்டத்துடன் கதவைத் திறந்துவிட்டு விசாரிக்க, அவன் அவருக்கு எந்தப் பதிலுரையும் வழங்கவில்லை. உள்ளுக்குள் அவள் மீது கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அவன் வேக வேகமாக தன்னுடைய வகுப்பிற்குச் செல்ல அங்கே பாடம் எடுத்து கொண்டிருந்த ஆசிரியர், “இவ்வளவு நேரமா எங்கே போன வெங்கட்… உன்னைதான் தேடிட்டு இருந்தேன்” என, “இல்ல சார்… மேக்ஸ் நோட் மேடம் ரூம்ல வைச்சுட்டு… அப்படியே வாஷ்ரூம் போய்ட்டு வந்தேன்… அதுக்குள்ள யாரோ நான் இருக்கன்னு தெரியாம லாக் பண்ணிட்டாங்க…” என்றான். “வாட்… யாரு வெங்கட் அப்படி பண்ணது?” என்றவர் கேட்க, அவன் மாயாவை ஓரப்பார்வை பார்த்தான். அவள் கண்களில் துளி கூட பயமோ பதட்டமோ தெரியவில்லை. “இல்ல சார்… தெரியாமதான் யாரோ பண்ணிட்டாங்க… நான் கதவு தட்டின சத்தம் கேட்டுத் திறந்துட்டாங்க”  “ஓகே ஓகே… உள்ளே வா” என்றவர் அனுமதி கொடுக்க, அவள் நக்கல் சிரிப்புடன் அவனைப் பார்த்து கண்ணடிக்கவும் அவன் கண்டும் காணாதவன் போல அமைதியாகச் சென்று அமர்ந்துவிட்டான். ‘மாட்டிவிடல… பாவம் பையன் பயந்துட்டான் போல’ என்றவள் மனதில் எண்ணிச் சிரித்துக்கொண்டாள்.  ஆனால் அவனின் அந்த அமைதிக்குப் பின்னணியிலிருந்த ஆபத்து அடுத்தடுத்த நாளில்தான் அவளுக்குத் தெரிய வந்தது. “மாயா” என்று வகுப்பே அதிருமளவுக்கு கத்திய ஃபிசிக்ஸ் ஆசிரியர், “என்ன இது… எதுவுமே எழுதாம நோட்டை சப்மிட் பண்ணி இருக்க… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு” என்றவர் உக்கிர தாண்டவமாட, “இல்ல சார்… நான் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டேன்… முடிச்சுதான் வைச்சேன்… எப்படி?” என்று வெற்று காகிதங்களைப் புரட்டிப் பார்த்து குழம்பியவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. சட்டென்று ஏதோ யோசனை வர பின்னே திரும்பி பார்த்தாள். வெங்கட் அவள் பாணியில் நக்கல் சிரிப்புடன் கண்ணடித்தான். உடனடியாக அவள், “நான் எழுதுனேன் சார்… பேஜை கிழிச்சிட்டாங்க” என்றாள். “யாரு கிழிச்சது…. நானா?” என்று ஆசிரியர் கேட்க, வெங்கட் என்று அவளால் சொல்ல முடியவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள். நல்லவனாக இருப்பதில் இப்படியொரு நன்மை உள்ளது. அவன் திருவிளையாடல் அதோடு முடியவில்லை. இது போல மூன்று சப்ஜக்ட் நோட்களில் கை வைத்துவிட்டான் அந்த நல்லவன். “பழிக்குப் பழி வாங்கிட்ட இல்ல?” என்று மனதில் கறுவிக் கொண்டே கை வலிக்க வலிக்க எழுதி முடித்தாள். அவள் அடுத்த நாள் அவன் முன்னே கோபமாக வந்து நின்று, “உன்னை நான் விட மாட்டேன்…” என்றவள் சீற்றத்துடன் கூற அவன் கூலாகச் சிரித்துக் கொண்டே, “இன்னும் முடியலயே… மேக்ஸ் மிஸ் இன்னும் நோட்டோட வரலையே” என்றானே பார்க்கலாம். அவளுக்குப் பதறிவிட்டது. “ஓ மை காட்… ப்ளீஸ் இதோடு விட்டுடு வெங்கட்… எழுதி எழுதி என் கை எல்லாம் வலிக்குது… பாரேன்… இப்ப கூட நடுங்குது… ஐம் சாரி… தப்புதான்… அப்படி பேசி இருக்கக் கூடாது” என்று அவள் அந்த நொடி பல்டி அடித்து விடவும், “அன்னைக்கு எவ்வளவு திமிரா பேசுன நீ… நான் கூப்பிட கூப்பிட காது கேட்காத மாதிரி கதவை லாக் பண்ணிட்டு போன இல்ல” என்றான். “தப்புதான்… ஐம் சாரி… ப்ளீஸ் இந்த ஒரு தடவை” என்றவள் இறைஞ்சவும், “நீ சாரி கேட்கிறதால நான் இதோட விடுறேன்… ஆனா மூணு கண்டிஷன்” என்றான். “என்னது அந்த மூணு கண்டிஷன்” “நீ இனிமே எந்த டீச்சரையும் கிண்டல் பண்ணக் கூடாது” “ஹு… ஹ்ம்… ஓகே பண்ணல” “என்னை வெங்கின்னு கூப்பிட கூடாது” “ஓகே ஓகே கூப்பிடல” “கிளேஸ்ல கூட நீ என் பக்கம் திரும்பவே கூடாது… உனக்கும் எனக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் கிடையாது… இதுதான் லாஸ்ட்” என்றவன் முடிக்க, “ம்ம்ம்ம்” என்றவள் வேக வேகமாகத் தலையை அசைத்தாள். “சரி போ” என்றவன் செல்லவும் தன் இருக்கைக்கு திரும்ப இருந்தவள் மீண்டும் அவனிடம் வந்து, “மேக்ஸ் நோட்லயும் எழுதினது எல்லாம் கிழிச்சிட்டியா?” என்று பாவம் போல் கேட்க, “இல்லை… சும்மா சொன்னேன்” என்றான். அப்போதே அவளுக்கு மூச்சு வந்தது. அதன் பிறகு மாயா வகுப்பில் கூட சத்தமிட்டுப் பேசவில்லை. அப்படியொரு ஜீவன் இருக்கிறது என்று கூட தெரியாதளவுக்கு நடந்து கொண்டாள். அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் அது மாயாவின் குணாதிசியம் இல்லை. அடுத்த இரண்டொரு வாரத்தில் அவள் அவனுக்கு வேறு மாதிரியாக தொல்லைக் கொடுக்க ஆரம்பித்தாள். அவன் புத்தகத்தின் பின்புறமாக ‘ஐ லவ் யூ வெங்கி’ என்று பெரிதாக எழுதி வைத்திருந்தாள். அதனைப் பார்த்தவன் முகமெல்லாம் கோபத்தில் சிவந்தது. அவளைத் தனியாக அழைத்தவன், “என்னடி பண்ணி வைச்சு இருக்க” என்று சீற, “இதை நான் ஒன்னும் எழுதல… வேற யாரோ” என்று அவள் மறுக்க, “பொய்… நீ மட்டும்தான்… என்னை வெங்கின்னு கூப்பிட்டு வெறுப்பேத்துவ… கண்டிப்பா இது நீதான்” என்றான் அவன் உறுதியாக! “சரி நான்தான் இப்ப என்னங்குற?” “என்னவா… இதை மட்டும் கொண்டு போய் காண்பிச்சேன்… வார்னிங் எல்லாம் இல்ல… ஸ்ட்ரைடா டீசிதான்” “டீசியா? எதுக்கு? லவ்னா… காதல்னுதான் எடுத்துக்கணுமா? அன்பா இருக்க கூடாதா… ஏன் நல்ல நட்பா இருக்க கூடாதா? நான் உனக்கு அன்பான ஒரு தோழியா இருக்கணும்னு ஆசைப்படுறேன்… லவப்பில் ஃப்ரண்டுன்னு வைச்சுக்கோ” என்று கதை அளந்தவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன், “ஒரு தடவை கையை உடைச்சேனே பத்தலயா உனக்கு” என்றான். “ரொம்ப பண்ணாதே வெங்கி… நாம நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்” என்றவள் தன் கரத்தை நீட்ட, அவன் தன் நோட்டிலிருந்த கடைசி தாளைக் கிழித்து அவள் கையில் திணித்துவிட்டு, “போய் வேற வேலை இருந்தா பாரு… அடுத்த தடவை நான் இப்படி பேசிட்டு இருக்கமாட்டேன்… நேரா மேடம் கிட்ட போய் சொல்லிடுவேன்” என்று எச்சரித்துவிட்டுச் சென்றான். ஆனால் அவள் அடங்குவதாக இல்லை. எங்கு போனாலும் விடாமல் அவள் பார்வை அவனைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவன் பார்த்துவிட்டால் ‘ஹாய்’ என்று சொல்லி சிரிப்பதும் சமயங்களில் யாரும் பார்க்காதபோது கண்ணடிப்பதும் என்று அவள் சீண்டல்கள் அவனைத் தொடர்ந்த வண்ணம் இருந்தது. தொந்தரவு என்பதைத் தாண்டி அவன் வயது கொஞ்சமாக அந்தச் சீண்டல்களைப் புன்னகையை உள்ளுர ரசிக்கத் தொடங்கியது. இப்படியாக ஒருமுறை அவன் பிறந்த நாளை தெரிந்து கொண்டு அவனுக்காக ஒரு சிறிய பரிசொன்றை வாங்கி அவன் இருக்கையில் வைத்திருந்தாள். அதனை அவன் பிரித்து கூட பார்க்காமல் அவளிடம் திருப்பி கொடுத்து, “உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்” என்று கோபமாகக் கூற, “பிரிச்சுப் பார்த்துட்டு வேணாம்னா நீயே எடுத்துட்டு போய் குப்பைத் தொட்டில போட்டுடு” என்றாள். சில நொடிகள் அமைதியாக யோசித்தவன் பின் அந்தப் பரிசைப் பிரித்துப் பார்த்தான். அதில் அவனுடைய முகம் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்ததைக் கண்டு அவன் விழிகள் ஆச்சரியமாக விரிந்தன. அது ஒரு பென்சில் ஸ்கெட்ச். கீழே வித் லவ் மாயா என்று இருந்தது. தள்ளி அமர்ந்து படித்து கொண்டிருந்தவளிடம் சைகையில், “நீயா இதை வரைஞ்ச” என்றவன் வியப்புடன் கேட்க, அவள் புன்னகை முகமாகத் தலையசைத்தாள். அதனைத் தூக்கியேறிய அவனுக்கு மனம் வரவில்லை. உணவு இடைவெளியில் அவளைத் தனியே சந்தித்தவன், “தேங்க்ஸ்… நான் இதை ஒரு ஃப்ரண்டிலி கிஃப்டா எடுத்துக்கிறேன்” என்றவன் சொல்ல, “அப்போ ஃப்ரண்ட்ஸ்” என்றவள் தன் கரத்தை நீட்ட, அவனும் கைக் குலுக்கினான். முதல் முறையாக அவன் அம்மாவிற்குத் தெரியாமல் ஒரு பொருளை அவன் மறைத்து வைக்கிறான் என்றால் அது அந்த ஓவியம்தான். அதன் பின் நிறைய பார்வை பரிமாறல்கள், புன்னகைகள், சந்தேகங்கள் கேட்பது போல பேசுவதற்கான சாக்குகள் என்றவர்கள் நட்பும் அதில் கள்ளமாக ஒளிந்திருக்கும் எதிர்பாலின ஈர்ப்பும் வளர்ந்தது. ஆனால் திடீரென்று இதெல்லாமே ஒரு அழகான கனவு போல களைந்துவிட்டது. மாயா என்ற ஒருத்தி ஒரே நாளில் சாம்பலாகி போய்விட்டதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் வயதிற்கு அது மிக பெரிய அதிர்ச்சிதான். அவள் பேசியது சிரித்தது சீண்டியது என்று திரும்பும் திசையெல்லாம் அவள் தெரிந்தாள். அவனால் படிக்க முடியவில்லை. தூங்க முடியவில்லை. சிரிக்க முடியவில்லை. அவள் இறந்துவிட்டாள் என்பதை நம்பவும் முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மாயாவின் பிம்பம். அவனுடைய நிலைமை மிகவும் மோசமாக, மல்லி மகனை மனநல மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்ல வைத்தார். பேசி பேசி மாயாவின் இறப்பை இயல்பான ஒரு நிகழ்வாக ஏற்க வைத்தார். அதனை கடந்து போக வேண்டிய நிர்பந்தத்தைப் புரிய வைத்தார். அவன் அந்த மனநிலையிலிருந்து மீண்டு வந்தான். “நீ கண்டிப்பா எக்ஸாம் எழுதணும்… டாக்டர் படிக்கணும்… ஒய்நாட் என்னை மாதிரி சைக்காட்டிரிஸ்டா கூட நீ ஆகலாம்… ஆனா நீ என்னவானாலும் உன்னால மாயாவை மறக்க முடியாது… மறக்கணும்னு அவசியமும் இல்ல… ஒரு அழகான கனவு மாதிரி அவளோட ஞாபகங்களை நீ எப்பவும் வைச்சுக்கலாம்… எப்பவாவது யோசிச்சு பார்க்கலாம்… கொஞ்சமா அழக் கூட செய்யலாம்… ஆனா அப்புறமா கண்ணைத் துடைச்சிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடணும் வெங்கட்” என்றவர் சொன்னதை இப்போது நினைவுப்படுத்திக் கொண்டான். அவனுக்கு அவள் மீதிருந்தது காதல் இல்லை. அது நட்பும் இல்லை. அந்த வயதிற்கு உண்டான அழகான ஈர்ப்புணர்வு. அவன் படித்த அழகான ஹைக்கூ கவிதை ஒன்று காற்றில் பறந்துவிட்டது போல… அற்புதமான வண்ண ஓவியம் ஒன்று தண்ணீரில் நனைந்து பாழாகிவிட்டது போல… மனம் வருந்தியது அவள் இழப்பிற்காக. பெருமூச்சுடன் அவள் பரிசளித்த ஓவியத்தையும், க்ரூப் ஃபோட்டோவிலிருந்த அவளையும் மாறி மாறி பார்த்தான். அழகாக வெட்டிய குட்டை முடியுடன் புன்னகை முகமாக இருந்தாள். அவள் உயரமும் குறைவு என்பதால் பார்க்க அவள் வளர்ந்த டோரா போல இருப்பாள். அதே போன்ற துருதுருப்பான கண்கள். பால்கனியில் நின்று அவன் அவற்றைப் பார்த்து ரசித்திருக்க, மல்லி மாடியேறி வந்தாள். வேகமாக அவற்றை தன் சட்டைக்குள் அவன் ஒளித்து கொள்ள, இரவு உணவை எடுத்துக் கொண்டு வந்தவர், “சப்பாத்தி எடுத்துட்டு வந்திருக்கேன்… வா வெங்கட் சாப்பிடலாம்” என்று அழைத்தார். “ஓ சாப்பிடலாமே” என்றவன் அவர் கையிலிருந்த ஹாட்பாக்ஸை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான். ஆனால் வினாடிக்கும் குறைவான நேரம்தான் எனினும் மகனின் விழியோரம் கசிந்திருந்த நீரையும் சிவப்பேறிய விழிகளையும் மல்லி பார்த்துவிட்டார். மகன் தன்னிடம் சொல்ல முடியாத ஏதோ ஒரு வலியை மறைக்கிறான் என்று அந்தத் தாயுள்ளத்திற்குப் புரிந்தது. அப்போது கீழே வாசலில் அமிர்தாவிற்கு அர்ச்சனா உணவு ஊட்டிக் கொண்டிருக்க, தப்பித்து ஓடும் மகளை சர்வேஷ் ஆஃபீஸ் கால் பேசிக் கொண்டே தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். “சீக்கிரம் ஊட்டு டி… வேலை இருக்கு” என்றவன் கடுப்பாக, “உங்கப் பொண்ணு எங்க வாயைத் திறக்கிறா” என்று அர்ச்சனா தவிப்புற்றாள். மல்லிக்கு மனம் நெருடியது. ஒரு வேளை மகன் குடும்ப வாழ்க்கைக்காக ஏங்க ஆரம்பித்துவிட்டானோ? தன்னிடம் அதைச் சொல்ல முடியாமல் மருகுகிறானோ? என்றவர் உள்ளம் அந்த நொடியிலிருந்து மகனின் திருமணத்தை எண்ணி ரொம்பவும் தவிப்பிற்குள்ளானது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா