மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 9Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 9

Quote from monisha on May 14, 2023, 6:31 PM

9
வேதா விலாஸிலிருந்து காரில் கிளம்பியதும் மல்லி நந்தாவை வசைப்பாடத் தொடங்கிவிட நந்தா உடனே ரேடியோவின் சத்தத்தைக் கூட்டி வைத்துவிட, அவர்கள் பயணம் அதகளமும் ரணகளமுமாக மாறியிருந்தது. “இப்போ ரேடியோ வால்யூமை குறைக்க போறீங்களா இல்லையா?” என்று மல்லி கடுப்பாக, “நீ முதல உன் வால்யூமை குறை… அப்புறமா நான் ரேடியோ வால்யூமை குறைக்கிறேன்” என்று நந்தாவும் விதாண்டவாதம் செய்தார். “வெங்கட் வால்யூமை குறை” என்று மல்லி மகனிடம் கட்டளையிட, “குறைக்காதே வெங்கட்” என்று நந்தா பதிலுக்குச் சொல்ல, காரை ஓட்டிக் கொண்டு வந்த வெங்கட்டிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நிலைமைப் புரியாமல் அந்த ரேடியோவில் வேறு, ‘நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா’ என்று பாட, மல்லிக்கு பிபி எகிறி கத்தத் தொடங்கிவிட்டார். “சும்மா நசைநசைன்னு என்ன சத்தம்… கொஞ்சம் கூட டிச்பிளினே இல்லாம” லோவர் பெர்த்திலிருந்து வந்த அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் ஆடிப் போய்விட்டனர். மல்லியின் அக்மார்க் வசனத்தைப் பேசியது வேறு யாருமில்லை. அமிர்தாதான். அப்படியே அச்சுப் பிசாகாமல் அதே போல பேசிய பேத்தியைப் பார்த்து மல்லி வாயடைத்துப் போனார். அதற்கு பிறகு அங்கே அமைதி சூழ்ந்துவிட்டது. ‘சில நேரங்களில் பெரிய மனுஷங்க சின்னவங்களாகிடுறாங்க… சின்னவங்க பெரிய மனுஷங்களாகிடுறாங்க’ என்று அமிர்தாவின் செயலை எண்ணி வெங்கட் வாயிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.  கார் நின்றதும் மல்லி பேத்தியைப் புன்னகையுடன் பார்த்து கன்னத்தைக் கிள்ளிவிட்டுச் செல்ல, நந்தாவும் வெங்கட்டும் இந்தக் காட்சியைப் பார்த்து அதிசயித்தனர்.  “இட்ஸ் அ மெடிக்கல் மிரக்கிள் … உங்க அம்மா அமிர்தாவைப் பார்த்து சிரிச்சிட்டுப் போறாடா” என்ற நந்தாஅமிர்தாவிடம் திரும்பி, “நீ கிரேட்டா பட்டுக்குட்டி… இப்படிதான் உங்க ஜிஎம்க்கு அப்பப்போ ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கணும்” என்று பேத்தியைத் தட்டிக் கொடுக்க, “அப்பா” என்று முறைத்தான் வெங்கட். அதற்குள் அமிர்தா தாத்தாவை முறைத்து, “போங்க தாத்தா உங்ககிட்ட பேச மாட்டேன்… நீங்க பேட் பாய்” என, “ஏன்டா தங்கம்?” என்றவர் பேத்தியைக் குழப்பமாகப் பார்க்க, “சண்டை போடுறவங்க எல்லாம் பேட் பாய் பேட் கேர்ள்னு நீங்கதானே சொல்லுவீங்க” எனப் பேத்தி அவரையும் சேர்த்து கவிழ்த்துவிட, “தேவையா உங்களுக்கு” என்றான் வெங்கட். “இவ கண்டிப்பா அப்க்ரேடட் வெர்சனா ஆஃப் மல்லியா இருப்பாடா… வெரி டேஞ்ஜரஸ்” என்று சொல்லியபடி நந்தா அங்கிருந்து நழுவிவிட்டார். வெங்கட் குழந்தைகளை எல்லாம் இறக்கிவிட்டு அமிர்தாவின் தலையை வருடிக் கொடுக்க அவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனைப் பார்த்தாள். “என்னடா குட்டி?” என்று அவன் கேட்க, “உங்க கிட்ட ரகசியமா ஒன்னு கொடுக்கலாம்னு” என்றவள் மெல்லிய குரலில் காற்றோடுப் பேசி தன் சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து நீட்டினாள். “சாக்லேட்டா? எனக்கா?” என்றவன் அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். “ம்ம்ம்… பெரிம்மா உங்க கிட்ட ரகசியமா கொடுக்க சொன்னாங்க… அப்புறம் எனக்கு சவீக்கு நகுல் சகாவுக்குக் கூட கொடுத்தாங்களே… இந்த சாக்லேட்டை நகுல் பார்த்தா இதையும் கொடுன்னு பிடுங்கிக்கிவான்… அதான் உள்ளே ஒளிச்சு வைச்சுருந்தேன்” என்று அந்தச் சின்னவள் சொல்வதைப் புன்னகையுடன் கேட்டவன், “பெரிம்மான்னா யாருடா குட்டி… உயரமா ப்ளூ கலர் சேரில நின்னிட்டு இருந்தாங்களே… அவங்களா?” என்று விசாரிக்க, “உங்களுக்குத் தெரியாதா… அவங்க பேர்தானே சீலட்சுமி… எனக்கு தெரியும்” என்றவள் மழலையுடன் சொல்ல அவன் இதழ்கள் பெரிதாக விரிந்தன. சின்னவள் அந்த சாக்லேட்டை அவனிடம் நீட்டிவிட்டு, “இந்தாங்க… சாப்பிடுங்க” என, அவன் மகளை தம் கரங்களில் அள்ளி அவள் கன்னங்களில் முத்தமிட்டு, “தேங்க்யூடா குட்டி” என்றான். “நீங்க இந்த தேங்க்ஸையும் கிஸ்சையும் பெரிம்மாவுக்குதான் கொடுக்கணும்… அவங்கதானே இதைக் கொடுத்தாங்க” என்றவள் கூற, அவனுக்குச் சிரிப்பு பீறிட்டது. “அடியேய் வாயாடி” என்றவன் மகளின் தலையில் செல்லமாக முட்ட, “வலிக்குது பெரிப்பா” என்று தலையைத் தேய்த்துக் கொண்டு ஓடிவிட்டாள் அந்தக் குட்டி அழகி! அவன் அதன் பின் தன் அறை நோக்கி நடந்தான். அறைக் கதவைத் திறந்து உள்ளே வந்தவன் அந்த சாக்லேட்டை மேஜை மீது வைத்துவிட்டு தன் உடைகளை மாற்றினான். பின்னர் தன் கைப்பேசி எடுத்து மருத்துவமனையிலிருந்து ஏதாவது அழைப்புகள் குறுந்தகவல்கள் வந்திருக்கிறாதா என்று பார்த்தான்.  அப்படி எதுவும் வந்திருக்கவில்லை என்று அறிந்ததும் தன் கைப்பேசியை மீண்டும் மேஜை மீது வைக்க போனபோது மீண்டும் அந்த சாக்லேட் அவன் கண்ணில் பட்டது. “அவங்க வீட்டுல என்னை நிமிர்ந்து கூட பார்க்கல… ஆனா குழந்தைகிட்ட தெரியாம சாக்லேட் கொடுத்து அனுப்பி இருக்கா… ஸ்கூல் டேஸ்ல இருக்க மாதிரி இப்பவும் பயந்தா கொள்ளியா ரொம்ப சைலன்டா இருப்பாளோ?” என்று அவனாகவே பேசிக் கொண்டே அந்த சாக்லேட்டை கையிலெடுத்து பார்த்த போதுதான் அதில் க்ளிட்டரிங் பேனாவில் எழுதியிருந்த அந்த பத்து இலக்கு எண்ணைக் கவனித்தான். “ஃபோன் நம்பரா?” என்று திகைத்தவன், “சாக்லேட் கவர்ல ஃபோன் நம்பர்… தெளிவான ஆள்தான்” என்றவன் அந்த எண்ணை அவன் பேசியில் ஸ்ரீ என்ற பெயரிட்டு பதிந்தான். சில நிமிடங்கள் யோசித்தவன் அந்த எண்ணிற்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டான். “ஹாய் ஸ்ரீ… ஐம் வெங்கட்” அனுப்பிய நொடிகளில் பதில் வந்தது. “ஹாய் வெங்கி… எப்போ நீங்க ரிப்ளை பண்ணுவீங்கன்னு ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” அதற்காகவே காத்திருந்தவள் போல நொடியும் தாமதிக்காமல் அவளிடமிருந்து பதில் வந்தது. ஆனால் ‘வெங்கி’ என்ற அழைப்பு அவனை ஏதோ செய்தது. இத்தனை வருடங்களில் மாயாவைத் தவிர வேறு யாருமே அவனை அப்படி அழைத்தது கிடையாது. அவன் மௌனித்திருந்த அந்த சில நொடிகளில், “வெங்கி ஆர் யு தேர்” என்றவள் கேட்க, மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன் அவளுக்குப் பதில் அனுப்பினான். “வெங்கி வேண்டாம்… ப்ளீஸ் கால் மீ வெங்கட்” “ஏன் ஏன் ஏன்? ஏன் வெங்கி வேண்டாம்… ஏன் அப்படி கூப்பிட கூடாது” படபடவென்று மீண்டும் அவளிடமிருந்து ரிப்ளை வர, சட்டென்று என்ன பதில் சொல்வதென்று யோசித்தவன், “எனக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காது” என்று டைப் செய்வதற்குள், “உங்களுக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காதோ?” என்று அவளே பதில் அனுப்பி இருந்தாள். “எஸ்” என்றவன் தான் எழுதியதை அழித்துவிட்டு ஒற்றை வார்த்தையில் பதில் அனுப்ப, “அப்போ மாயா அப்படி கூப்பிட்டா மட்டும் பிடிக்குமா?” என்றவளிடமிருந்து பதில் வந்தது. அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ‘எத்தனை வருஷமாகிடுச்சு… இப்போ எதுக்கு இவ மாயா பேரை இழுக்கிறா’ என்றவனுக்கு அப்போதுதான் ஸ்ரீலக்ஷ்மியும் மாயாவும் அருகருகே அமர்ந்திருந்தது நினைவு வந்தது. ஆனால் அப்போதும் ஸ்ரீலக்ஷ்மியை அவனால் சரியாக நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவன் யோசனையாக இருந்த அந்த சில கணங்களில் அவள் நிறைய கேள்விக்குறிகள் சோக இமொஜிக்கள் குழப்ப இமொஜிக்கள் என்று அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தாள். அதையெல்லாம் பார்த்தவனுக்கு இவள் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாளோ என்று தோன்றியது. அதற்குள் அவள் அலைபேசி எண்ணிலிருந்து நேரடியாக அழைப்பு வந்தது. சில நொடிகள் அவள் அழைப்பை உற்றுப் பார்த்தவன் அவள் மீண்டும் மாயாவைப் பற்றிய பேச்சை எடுப்பாளோ என்ற தயக்கத்துடன் எடுக்க, “வெங்கி” என்று ஒரு பெண் குரல் துள்ளலுடன் ஒலித்தது. அப்படியே மாயாவின் குரலைக் கேட்பது போன்ற உணர்வு. அது ஒரு வேளை தன்னுடைய பிரமையாக இருக்கலாம் அல்லது ஸ்ரீயின் குரலும் மாயவைப் போன்றதாக இருக்கக் கூடும். தான் ஸ்ரீயின் குரலைக் கேட்ட ஞாபகமே இல்லாததால் தனக்கு தெரிய வாய்ப்பில்லை என்றவன் சிந்தனை செய்ததில் பதில் பேச மறந்திருந்தான்.  அவளோ எதிர்புறத்திலிருந்து, “வெங்கி… வெங்கீகீகீ” என்றவள் அவன் பெயரை ஏலம் விடத் தொடங்கியிருந்தாள். “ப்ளீஸ் என்னை வெங்கின்னு கூப்பிட வேண்டாம்” “அப்போ நீங்களும் என்னை ஸ்ரீன்னு கூப்பிட வேண்டாம்” என்றாள் அவள். “ஏன்?” “ஏன் னா எனக்கு அந்தப் பேரே பிடிக்காது… ஸ்ரீலக்ஷ்மி உவேக்… எங்கப் பாட்டியோட பாட்டி பேர்… எனக்கு சாருன்னு கூப்பிட்டாதான் பிடிக்கும்… எல்லோரும் என்னை அப்படிதான் கூப்பிடுவாங்க… நீங்களும் அப்படியே கூப்பிடுங்க” என்றவள் சொல்ல, அவனுக்கு ஏனோ சாரு பிடிக்கவில்லை. ஸ்ரீலக்ஷ்மி என்ற பெயர்தான் பிடித்திருந்தது. “சாருவை விட ஸ்ரீ நல்லா இருக்கு” என்றவன் சொல்ல, “வெங்கட்டை விட வெங்கி நல்லா இருக்கே” என்றவள் குரலில் இழையோடிய குழந்தைத்தனத்தை அவன் ரசித்தான். “சரி ஓகே… நீ என்னை வெங்கின்னு கூப்பிடு… நானும் உன்னை ஸ்ரீன்னு கூப்பிடுறேன்” என்றவன் ஒரு மாதிரியாக சம்மதித்துவிட, “டீல்” என்றாள் அவள். அதன் பிறகு அவள் நிறைய நிறைய பேச அவன் மௌனமாகக் கேட்டிருந்தான். “என்ன வெங்கி… நான் பேசிட்டே இருக்கேன்… நீ பேசவே மாட்டுற” என்று அவள் வினவ, ‘நீ என்னைப் பேச விட்டாதானே’ என்று மனதில் எண்ணிக் கொண்டாலும் சொல்லவில்லை. “இல்ல… நீ ஃபோன்ல இவ்வளவு பேசுற… உங்க வீட்டுல நீ தலையைக் கூட நிமிர்ந்து பார்க்கல… ரொம்ப அடக்கமா அமைதியா நின்னுட்டு இருந்த” “அதெல்லாம் சும்மா டிராமா… அந்தக் கிழவி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு வெங்கி… இப்படி நிற்க கூடாது… அப்படி உட்கார கூடாது… இப்படி பேசக் கூடாதுன்னு சரியான ரூல்ஸ் ரங்கம்மா… மல்லியை விட பத்து மடங்கு இருக்கும்னா பாரேன்” என்றவள் சொல்லி முடிக்கவும், “என்னது? மல்லின்னு மரியாதை இல்லாம சொல்ற” என்றவன் குரல் சற்றே கடினமாக மாற, பட்டென்று அமைதி நிலைக்குப் போனவள் பின் தாழ்ந்த குரலில், “நான் மல்லின்னு சொல்லல… மல்லி மேடம்னுதான் சொன்னேன்… வாய்ஸ் ப்ரேக் ஆகிடுச்சு… அதான் மேடம் மட்டும் கேட்கல” என்றாள். “எனக்கு இங்கே எதுவும் ப்ரேக் ஆகலயே” அவன் அழுத்தமாகக் கூற, “அதான் ப்ரேக் ஆகிடுச்சே… அப்புறம் எப்படி வெங்கி உனக்கு கேட்டிருக்கும்… சைக்கார்ட்டிக்கா இருந்திட்டு நீ இப்படி வாய்ஸ் ப்ரேக் ஆனதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கக் கூடாது” இம்முறை மீண்டும் அந்தக் குழந்தைத்தனம் அவள் குரலில் எட்டிப் பார்த்தது. “நான் சீரியஸா எடுத்துக்கல” “அப்போ சூப்பர்… நாம நாளைக்கு வெளியே போகலாம்” என்று உடனடியாகப் பேச்சை மாற்றிய அவள் திறமை அவனுக்குப் பிடித்திருந்தது. சில நொடிகள் யோசித்துவிட்டு, “நாளைக்கு வெளியே வரது கொஞ்சம் கஷ்டம்… எனக்கு நாளைக்கு சில முக்கியமான ஆப்பாயின்மெண்ட்ஸ் இருக்கு” என்றவன் கூற, “அப்போ நாளன்னைக்கு” “நான் செக் பண்ணிட்டு கால் பண்றேன்” என்றான் அவன். “ஆ… கம்மான் வெங்கி… டாக்டர்னா பிஸியா இருக்க மாதிரி சீன் போடனுமா என்ன?” என்றவள் கேட்டுவிட, “நான் சீன் எல்லாம் போடல… சீரியஸா வொர்க் இருக்கு… ஃப்ரீயானதும் நானே கால் பண்றேன்” என்றான். “ம்ம்ம் ஓகே… நான் வெயிட்பண்றேன்” என்றவள் குரலில் சுருதி இறங்கியிருந்தது. மனமே இல்லாமல் அவள் அழைப்பைத் துண்டிக்க அவன் யோசனையாக பால்கனியில் நடந்தான்.  சலசலவென அருவி கொட்டுவது போல இருந்த அவள் பேச்சு அவனுக்கு குழப்பமாக இருந்தது. ஸ்ரீ இவ்வளவு எல்லாம் பேசுவாளா? ஒரு வேளை நெருக்கமானவர்களிடம் பேசுவாளோ? ஆனால் தன்னிடம் பள்ளியில் ஒருமுறை கூட பேசியது இல்லையே. அதுவும் தன்னிடம் அவள் இந்தளவு பழக்கமானவள் போல பேசியதும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதெல்லாம் தாண்டி படபடவென்ற அவள் பேச்சு, மீண்டும் மீண்டும் அவனுக்கு மாயாவை நினைவுப்படுத்தியது.  அவளை நேரில் பார்த்து பேசினால்தான் ஏதாவது முடிவுக்கு வர முடியும் என்றவன் யோசித்திருக்கும்போதே மல்லி மாடியேறி வந்தார். “என்ன வெங்கட்… ஏதோ பலமா யோசிச்சிட்டு இருக்கப் போல” “ஒன்னும் இல்லம்மா… சும்மாதான்” “சரி சரி… நீ என்ன யோசிச்சிட்டு இருப்பன்னு எனக்கு தெரியும்” என்றவர் புன்னகையுடன், “இப்பதான் திலகா பேசுனாங்க… அவங்க வீட்டுல எல்லோருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்… மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்றதைப் பத்தி பேசுனாங்க… அடுத்த மாசமே நல்ல முகூர்த்த நாள் இருக்காம்” என்றதும் வெங்கட் அதிர்ச்சியாக, “அடுத்த மாசமே… எப்படிம்மா?” என்றான். “எனக்கும் சீக்கிரம் முடிச்சிரலாம்னுதான் தோணுச்சு… அதுவும் பொண்ணு வீட்டுலையே சீக்கிரம் வைச்சுக்கலாம்னு சொல்லும் போது… அதுவுமில்லாம அவங்க குடும்ப மண்டபமே இருக்காம்… அதனால மண்டபம் புக் பண்ற பிரச்சனை இல்லை” என்றவர் பேசிக் கொண்டே போக, வெங்கட்தான் புரியாத குழப்பத்தில் நின்றிருந்தான். “ஸ்ரீக்கும் உனக்கும் ரொம்ப பொருத்தமா இருக்கும் வெங்கட்… இன்னைக்கு பார்த்தோம் இல்ல… எவ்வளவு அமைதியா அடக்கமா” என்றவர் அவள் புகழ் பாட, வெங்கட் புரியாமல் விழித்தான். ‘அமைதி அடக்கம்’ அந்த வார்த்தையைக் கேட்கும்போதே அவன் நெஞ்சை அடைத்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா