மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Nijamo NizhaloNijamo Nizhalo - Episode 31Post ReplyPost Reply: Nijamo Nizhalo - Episode 31

Quote from monisha on July 17, 2023, 12:13 PM

31
‘எனக்கு இந்த மாதிரி லெட்டர் எழுதுறது எல்லாம் சுத்தமா வரல சாரு… ஒரே தப்பு தப்பா வருது…உனக்குதான் என்னைப் பத்தி தெரியுமே… கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ… பேப்பர்ல எழுதுனா வேற யாராவது எடுத்து படிச்சுட்டா… அதான் உன் மெயிலில இருந்து உனக்கே மெயில் போட்டேன்… இப்ப நான் உன் கூட இல்லன்னு உனக்கு வருத்தமா இருக்கும் இல்ல… எனக்கு தெரியும் நீ அழுவ. எனக்கும் அழுகையாதான் வந்தது… உன்னை பிரியனும்னு யோசிக்கும் போது… என்ன செய்றது… நம்ம நட்பு அந்த மாதிரி… இந்த உலகத்துல எந்த நட்பும் நம்முடைய நட்பு மாதிரி இருந்திருக்கவே முடியாது… மரணத்தையும் வென்ற நட்பு இல்லையா நம்முடையது. செத்தும் கூட இந்த உலகத்து மேல இருந்த பிடிப்பு எனக்கு போகல… எவ்வளவு எல்லாம் எதிர்காலத்தைப் பத்தி கனவு கண்டிட்டு இருக்கும் போது திடீர்னு செத்து போறதெல்லாம்… எனக்கு எழுத வரல சாரு… அழுகையா வருது… ஆனாலும் உனக்காக எழுதுறேன்… ஏன்னா நீதான் எனக்கு எல்லாம்… அதேபோல நான்தான் உனக்கு எல்லாம்… உன்னாலதான் நான் இப்பவும் எப்பவும் சந்தோஷமா இருந்தேன்… உன் மாமா பையனைப் பேய் பயம் காட்டி ஓடவிட்டது… உன் வீட்டுல இருக்கவங்க எல்லோரையும் உன்னைப் பார்த்து பயப்படுற மாதிரி மிரட்டி வைச்சது பாஸ்போர்ட் இல்லாம ஆஸ்திரேலியா சுத்திப் பார்த்தது… அதெல்லாம் வேற லெவல் சந்தோஷம்… பேயா இருக்கிறதுல கூட நிறைய நல்ல விஷயம் இருக்குன்னு தோனுச்சு. ஆனா எத்தனை நாளைக்கு இப்படியே… நான் என்னைக்கா இருந்தாலும் உன்னை விட்டுப் போய்தானே ஆகணும்… நீயும் உனக்கான வாழ்க்கையை வாழ்ந்துதானே ஆகணும். போகனும்னு முடிவு பண்ணின போதுதான் வெங்கியைத் திரும்பியும் பார்த்தது… அப்பத்தான் சின்னதா ஒரு ஆசை… விட்ட இடத்துல இருந்து கொஞ்சம் வாழ்ந்து பார்த்தா என்னன்னு? உன் அனுமதி இல்லாம நான் உனக்குள்ள வந்திருக்கக் கூடாதுதான்… கொஞ்சம் சுயநலமா நடந்துக்கிட்டேன்… எனக்கு வேற வழித் தெரியல சாரு…  வித விதமா ட்ரெஸ் பண்ணிக்கிட்டது… மேக்அப் போட்டுகிட்டது… ஐஸ் க்ரீம் சாப்பிட்டது… வெங்கி கூட ஊர் சுத்துனதுன்னு அந்த ஒரு மாசம் நான் இழந்த மொத்தத்தையும் அடைஞ்சுட்ட மாதிரி ஒரு உணர்வு. இப்போ நான் ரொம்ப திருப்தியா இந்த உலகத்தை விட்டுப் போறேன் சாரு… ஆனா போறதுக்கு முன்னாடி உன்னைத் தனியா விட்டுட்டுப் போகப் போறேனேன்னு ரொம்ப கவலையா இருந்துச்சு… நான் போயிட்டா நீ தனியாயிடுவ… என்னாலதான் இப்பவரைக்கும் உனக்கு ஏற்பாடான ஒரு கல்யாணம் கூட நடக்காம போச்சு… அதான் நான் அப்படி உனக்கும் வெங்கிக்கும் கல்யாணங்குற மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில உன்னை விட்டுட்டுப் போறேன்… இவ்வளவு ஏற்பாடான பிறகு நீயே நினைச்சாலும் இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு எனக்கு தெரியும். வெங்கி உனக்கு ரொம்ப பொருத்தமான ஜோடி… அவனை விட உன்னை நல்லா புரிஞ்சுக்கிற, பார்த்துக்கிற ஒரு கணவன் எங்கே தேடினாலும் கிடைக்கமாட்டான்… நீயும் வெங்கியும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணும்… என்னை மாதிரி ஒரு அழகான கியூட்டான துறுதுறுப்பான பெண் குழந்தையை நீங்கப் பெத்துக்கணும்… அதுக்கு என் ஞாபகமா மாயான்னு பேர் வைக்கணும்… என்னை மாதிரி இல்லாம அந்தக் கடவுள் அந்த மாயாவுக்குத் தீர்க்காயுளைக் கொடுக்கணும்… கொடுப்பாரு… எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னை விட்டு ரொம்ப தூரம் போகப் போறேன்... நீ வர முடியாது தூரத்துக்கு… பை சாரு… டேக்கேர்’ ஸ்ரீயால் தன் கண்ணீரைக் கட்டுபடுத்தவே முடியவில்லை. கடிதத்திலிருந்து ஒவ்வொரு வரிகளும் அவள் உயிரை உருக்குவது போல அத்தனை வேதனையளித்தது என்றால் அது மிகையில்லை. ‘எனக்கு உன்னை விட்டா யாரும் இல்ல மாயா… திரும்பி வந்துடு மாயா’ திரும்ப திரும்ப இதையே சொல்லிக் கொண்டு அவள் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள். நிறுத்தாமல் அழுதபடியே இருந்தாள். வீட்டில் பூஜை முடித்த கையோடு பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த மல்லி அமிர்தாவுடன் பாவனா விளையாடி கொண்டிருப்பதைப் பார்த்து, “இன்னும் எத்தனை நாளுக்கு லீவ் போட்டுட்டு இருக்க போற… ஒழுங்கா நாளையில இருந்து ஸ்கூலுக்கு வரணும்” என்று சொல்ல, “நாளைக்கு சாட்டர்டே பெரிம்மா… நான் மண்டேல இருந்து” என்றவள் பதில் சொல்ல, “உதை விழும்… நாளைல இருந்து ஸ்கூலுக்கு வரலன்னா” என்று எச்சரித்துவிட்டுச் செல்ல பாவனா தன் அம்மாவை முறைத்து, “இதுக்குதான் நான் பூஜைக்கு வர மாட்டேன்னு சொன்னேன்” என,  “இதுக்குதான் நான் பூஜைக்கு உன்னைக் கூட்டிட்டே வந்தேன்” என்றாள் சித்ரா பதிலுக்கு. அதேநேரம் கிளம்பி வாசலுக்கு வந்த மல்லி நந்தாவிடம், “எங்க வெங்கட்டையும் காணோம்… அவளையும் காணோம்” என்று கேட்க, “வெங்கட் ஏதோ ஹாஸ்பிட்டல இருந்து கால் வந்துதுன்னு போனான்… அந்தப் பொண்ணு மாடில இருப்பாளாம் இருக்கும்” என்றார். “அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?” என்று மல்லி விசாரிக்க, “தெரியல… ஆனா என்னவோ இருக்குன்னு தோனுது” என்றார் நந்தா. “சரி… நான் ஈவினிங் வந்து இரண்டு பேர்கிட்டயும் பேசுறேன்” என்று மல்லி புறப்பட்டுச் செல்ல, நந்தா மாடியேறிச் சென்று வெங்கட்டின் அறைக் கதவைத் தட்டினார். வெகுநேரம் திறக்கப்படவில்லை. முகத்தை அலம்பிக் கொண்டு ஸ்ரீ கதவைத் திறந்த போதும் அழுததடங்கள் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன. “அழுதிட்டு இருந்தியாமா” என்று கேட்க, “அது… அம்மா ஞாபகம் வந்திருச்சு” என்றவள் சொன்ன காரணம் அவருக்கு நம்பும்படியாக இல்லை. இருப்பினும் அவர் தோண்டித் துருவி எதையும் கேட்டுக் கொள்ளாமல், “சரி பரவாயில்ல… கீழே வந்து கொஞ்ச நேரம் பசங்களோட இரு” என்றார். “இல்ல மாமா… ப்ளீஸ்… நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கேன்… அப்புறமா கீழே வரேன்” என்றவள் சொல்ல, அவரால் அவளைக் கட்டாயப்படுத்த முடியவில்லை. அவர் அமைதியாகக் கீழே இறங்கி விட்ட போதும் அவளின் வேதனை நிரம்பிய முகம் அவர் மனதை என்னவோ செய்தது. அதே சமயத்தில், “நாங்க கிளம்புறோம் மாமா” என்று சித்ராவும் பாவனாவும் வீட்டிற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, “பாவனாவை இங்கே விட்டுட்டுப் போ சித்ரா” என்றார். “அவ சும்மா இருக்கமாட்டா… இங்கே இருந்தா டிவி பார்த்துட்டே இருப்பா”  “வெங்கட் அவளுக்காக ஏதோ ஒரு மெடிக்கல் என்ட்ரன்ஸ் சம்பந்தப்பட்ட புக் எடுத்து வைச்சு இருக்கானாம்… அவன் வர வரைக்கும் வெயிட் பண்ணச் சொன்னான்” என்று நந்தா சொல்ல, ‘புக்கா’ பாவனாவிற்கு பக்கென்றானது. அவள் தப்பித்துக் கொள்ளும் எண்ணத்துடன். “அண்ணா என்கிட்ட எதுவும் சொல்லலயே பெரிப்பா” என்று கேட்க, “வெளியே போயிருக்கான்… வந்து கொடுப்பான்… நீ மாடில அவன் ரூம்ல இரு… அவன் வந்ததும் போ” என்றார். “சரி பாவனா… அண்ணா கொடுக்கிற புக்கை வாங்கிட்டு வா… நான் கிளம்புறேன்” என்று சித்ரா புறப்பட்டுவிட, ‘இருக்கிற புக்கையே இங்க படிக்க காணோம்… இதுல புதுசு புதுசா புக்ஸ் வேற’ என்று உள்ளுர பாவனா கடுப்பானாலும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை. வெங்கட் வரும் வரை ஸ்ரீயுடன் பாவனா இருக்கட்டும் என்று யோசித்தே நந்தா அவ்விதம் பொய்யுரைத்தார். இது தெரியாமல் பாவனா மாடி அறைக்குச் சென்றாள். அறை வாசலில் நின்ற பாவனாவைப் பார்த்ததும் ஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏதோ புக்ஸ் கொடுக்கிறதுக்காக அண்ணன்தான் ரூம்ல வெயிட் பண்ண சொன்னாராம்” என்று பாவனா சொல்ல, ஸ்ரீ அவளை அறைக்குள் விட்டாள். “ஏன் அண்ணி ஒரு மாதிரி இருக்கீங்க… என்னாச்சு?” “ம்ம்… ஒன்னுமில்ல… அம்மா ஞாபகம் வந்திருச்சு… அதான் கொஞ்சம் அழுதுட்டேன்” என்றவள் அதே பொய்யைச் சொல்ல, “இந்த அம்மாக்கள் எல்லாம் கல்யாணம் ஆகிற வரைக்கும் ஒரே டார்ச்சரோ டார்ச்சர் பண்றாங்க… ஆனா கல்யாணமாகிப் போயிட்டா நம்மல ஃபீல் பண்ணி அழ வைச்சுடுறாங்க” என்றவள் சொன்னதைக் கேட்ட ஸ்ரீ, “ஸ்கூல்தானே படிக்கிற… அதுக்குள்ள என்ன ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஆன மாதிரி பேசுற” என்று கேட்க, “இதுக்கெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் ஆகணுமா அண்ணி… கல்யாணம் ஆகிட்டா மாமியார் டார்ச்சரை விட அம்மா டார்ச்சரே பெட்டர்னு தோனிடும்… அதைதான் சொன்னேன்” என்று சொல்ல ஸ்ரீயின் இதழ்கள் விரிந்தன. “ஆனா அண்ணி… பெரிம்மா வந்தா நான் மாமியாருங்களை இப்படி சொன்னேன்னு மட்டும் சொல்லிடாதீங்க… அப்புறம் அவ்வளவுதான்… அட்வைஸ் பண்ணிக் கொன்னுடுவாங்க” என்றவள் நாக்கை வெளியே தள்ளி சைகையில் சொல்ல, ஸ்ரீ அவள் கவலையெல்லாம் மறந்து சிரித்துவிட்டாள்.  “என்ன அண்ணி எதுவும் பேச மாட்டுறீங்க… நீங்க நல்லா பேசுவீங்கன்னு அண்ணன் சொல்லுச்சு” “பேசுவேன்… இப்ப என்னவோ தோனல” என்றவளுக்கு பாவனாவுடன் பேசிக் கொண்டிருந்ததில் அவளது வருத்தங்கள் கொஞ்சம் திசை மாற்றிவிட்டிருந்தது. ஸ்ரீயிடம் தொனதொனத்து கொண்டே இருந்த பாவனா மேஜை மீதிருந்த மாயா வரைந்த அந்த ஓவியத்தைக் கையிலெடுத்து பார்த்து, “இந்த பென்சில் ஸ்கெட்ச்… இதுல இருக்கிறது அண்ணாதானே?” என்று ஆச்சரியத்துடன் கேட்க, ஸ்ரீ துணுக்குற்றாள். வித் லவ் மாயா என்ற வரியை உற்றுப் பார்த்த பாவனா, “இது அண்ணாவுக்கு மாயா கொடுத்ததா? உங்களுக்குத் தெரியுமா இதை பத்தி… ஆமா நீங்களும் அதே ஸ்கூல்தானே… க்ளேஸ்மெட்னு கூட சொன்னாங்களே… அப்போ உங்களுக்கு மாயாவைத் தெரியும்தானே?” என்று அவள் பாட்டுக்குக் கேள்விகளை அடுக்க, ஸ்ரீ அவளை அதிர்ச்சியாகப் பார்த்து, “உனக்கெப்படி மாயாவைப் பத்தி தெரியும்” என்று பதில் கேள்விக் கேட்டாள். “நானும் இப்போ அதே ஸ்கூல்தான்… அந்த டெவில் ப்ளாக்… பின்னாடி இருக்க அந்த எரிஞ்ச வீடு பத்தி நிறைய பேய் கதை சொல்வாங்க… அண்ணன் ஒரு தடவை பேசும் போது… அவர் கூட படிச்ச மாயா… அவங்களோட வீடுதான் அதுன்னு சொன்னாரு… ஆனாலும் கிஃப்ட் எல்லாம் கொடுத்து வித் லவ் மாயான்னு எழுதிக் கொடுக்கிறளவுக்கு ஃபிரண்டுன்னு சொல்லல… ஏன் அண்ணி? இதை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” “இல்ல… எனக்கு எதுவும் தெரியாது… அதை நீ பத்திரமா எடுத்த இடத்துலயே வைச்சிரு… உங்க அண்ணன் வந்தா திட்டப் போறாரு” என்று ஸ்ரீ சொல்ல, “ஆமா ஆமா… திட்டுவாரு… மாயா பேச்சை எடுத்தாலே அவருக்குக் கோபம் வந்திரும்” என்றவள் அந்த ஓவியத்தை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, “ஏன் அண்ணி உங்களுக்கு அந்த எரிஞ்சு போன பேய் வீடு விஷயம் பத்தி தெரியுமா?” என்று கேட்க, “அது பேய் வீடெல்லாம் இல்ல பாவனா… சும்மா கதை கட்டிட்டு இருக்காங்க” என்றாள் ஸ்ரீ. அவள் மனம் மாயாவை நினைவு கூர்ந்தது.  மாயா ஒரு நல்ல ஆத்மா. அவளால் யாருக்கும் தீங்கிழைக்க முடியாது என்றவள் யோசித்திருக்கும்போதே பாவனா,  “நானும் அதையேதான் சொன்னேன் அண்ணி… யார் நம்புனா…அதான் ப்ரூப் பண்ணிக் காட்டுறேன்னு அந்த வீட்டுக்குள்ள போய் ஒரு பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்” என்றவள் ஏதோ ஆர்வத்தில் உளறிவிட்டு பின் உதட்டைக் கடித்துக் கொண்டாள். “என்ன பிரச்சனையில மாட்டிகிட்ட” என்று ஸ்ரீ அவளைக் கேட்கவும், “பிரச்சனை எல்லாம் எதுவும் இல்ல… நான் சும்மா சொன்னேன்” பாவனா சமாளிக்க, “நீ எதையோ சொல்ல வந்துட்டு… இப்போ சொல்ல கூடாதுன்னு மழுப்புற” என்று ஸ்ரீ அழுத்தமாகக் கேட்க, “ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்ல அண்ணி” என்ற பாவனா முகம் அச்சத்தை நிரப்பியிருந்தது “என்ன நடந்துச்சு பாவனா” என்று மீண்டும் கேட்டாள் ஸ்ரீ. “அது” என்று ஆரம்பித்தவள் சட்டென்று வாயைப் பொத்திக் கொண்டு, “அதை பத்தி சொல்லக் கூடாதுன்னு பெரிம்மா சொல்லி இருக்காங்க… நான் சொல்ல மாட்டேன்… நீங்க நான் முதல சொன்னதெல்லாம் ரப்பர் போட்டு அழிச்சிருங்க” என்று பயந்து பின்வாங்க, ‘என்ன விஷயமா இருக்கும்’ என்று ஸ்ரீக்கு ஆர்வம் கூடியது. “நீ முதல நடந்த விஷயத்தைச் சொல்லு… அப்புறமா நான் ரப்பர் போட்டு அழிக்கிறேன்” “இல்ல இல்ல பெரிம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்… நான் போறேன் பா” என்றவள் நழுவப் பார்க்க, “என்கிட்ட மட்டும் சொல்லு… நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் பாவனா… ப்ராமிஸ்” என்று ஸ்ரீ சொன்னதில் பாவனா தயக்கத்துடன் பார்த்தாள். அவள் இத்தனை நாள் அந்த ரகசியத்தைக் காப்பாற்றி வைத்திருந்ததே அதிசயம்தான். அதுவும் அந்த ரகசியம் அவள் மூளையைக் குடைந்து கொண்டே இருந்தது. தன் மனதிலிருந்து அனைத்தையும் யாரிடமாவது கொட்டிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் ஸ்ரீயிடம் அன்று நடந்தவற்றைச் சொல்ல தொடங்கிய அதேநேரம் வெங்கட்டின் கார் அந்தப் போக்குவரத்தின் நெரிசலுக்கு இடையில் புகுந்து சென்று கொண்டிருந்தது. அவன் ஸ்ரீயிடம் பேசி முடிக்கும் போது மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் வர முடியுமா என்றுதான் கேட்டிருந்தார்கள். கேட்டதே போதுமென்று அவனும் புறப்பட்டுவிட்டான். நடந்த விஷயத்தைப் பற்றித் திரும்ப திரும்ப யோசித்து கொண்டிருந்ததில் அவன் மூளை சூடேறியிருந்தது. அதுவும் ஸ்ரீயிடம் அப்படி பேசிய பிறகு அங்கே இருந்து அவள் முகத்தைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. என்னவோ அவள் இறுதியாக சொன்னவற்றை எல்லாம் கேட்ட பிறகு தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டோம் என்று குற்றவுணர்வு ஆட்கொண்டுவிட இதுதான் வாய்ப்பு என்று வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டான். என்னதான் மனதையும் உளவியலையும் படித்திருந்தாலும் அவனும் சாதாரணமான உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட மனிதன்தான். பூஜையில் தன் குடும்பத்தினரின் சந்தோஷத்தைப் பார்த்த பிறகு அதை யாராவது சிதறடித்து விடுவார்களோ என்ற பயம் அவனுக்கு… அந்த உணர்வைதான் ஸ்ரீயின் மீது கோபமாகக் காட்டிவிட்டான். இப்போது யோசித்து பார்த்தால் தான் ஸ்ரீயிடம் நடந்து கொண்ட விதமே தவறு. ஒரு மனநல மருத்துவனாக இருந்து கொண்டு தான் எப்படி உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டோம்… எதிரே நின்றிருந்தவளின் உணர்வுகளைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் காயப்படுத்திவிட்டோம் என்று அவனுக்குப் புரியவில்லை. கோபமும் பயமும் எப்பேர்ப்பட்டவனின் யோசிக்கும் திறனையும் மொத்தமாக முடக்கிவிடுகிறது என்பது எந்தளவு உண்மை என்று அவனுக்கு அப்போது புரிந்தது. அவன் கை கால்கள் அந்த காரை இயக்கிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் அங்கே இல்லை. அப்போது அவன் கைக்பேசி ரீங்காரமிட அதனை எடுத்துப் பார்த்தான். அதில் ஸ்ரீ என்ற பெயரைப் பார்த்ததும் அவன் காரின் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, “ஸ்ரீ” என்றான். அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவதென்று புரியவில்லை. “வெங்கட்… எங்கே இருக்கீங்க…” “ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்… என்ன விஷயம் ஸ்ரீ… சொல்லு” “வர லேட்டாகுமா?” “நீ விஷயத்தைச் சொல்லு” “அந்த உருவம் உங்க அம்மாவைதான் தேடி வந்திருக்கு” என்றவள் நேரடியாக விஷயத்தைச் சொல்லிவிட அவன் அதிர்ந்து, “என்ன சொல்ற ஸ்ரீ… நிஜமாவா?” என்று கேட்க, “நிஜமாதான்” என்று பதில் வந்தது. ஆனால் அந்தப் பதிலைச் சொன்னது ஸ்ரீ இல்லை. அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்த அமானுஷ்யம். வெங்கட் அந்த உருவத்தைப் பார்த்து விதிர்விதிர்த்து போனான். அவன் கையிலிருந்து ஸ்டியரிங் பிடி நழுவிய போதும் கார் மிகச் சீரான பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. வெங்கட் அச்சத்திலிருந்த போதும், “நீ யாரு… நீ எதுக்கு வந்திருக்க?” என்று அந்த அமானுஷ்யத்திடம் கேட்க, “உங்க அம்மாவைக் கொல்ல” என்றதும் வெங்கட்டின் நாடி நரம்புகள் புடைத்துக் கொண்டன. “அதுக்கு நான் விட மாட்டேன்” என்றவன் சீற்றமாக, “கொல்ல போறதே நீதான்” என்றது அது கொஞ்சமும் இரக்கமே இல்லாமல். அவன் அப்படியே ஸ்தம்பித்துவிட, “இந்த உருவத்துல இருந்து என்னால அவங்களை நெருங்க முடியல… எனக்கு உன் உடம்பு வேணும்” என்று அந்த அமானுஷ்ய உருவம் சொன்ன சில நொடிகளில் அந்த கார் தன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற காரின் மீது மோதிவிட்டது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா