மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E32Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E32

Quote from monisha on July 18, 2023, 11:29 AM

32
முந்தைய வருடம் நடந்தேறிய நாடாளுமன்றத் தேர்தலில் வென்று கோபால் வர்மா பிரதமராகப் பதவியேற்றிருந்தார். தமிழகத்திற்கு பிரதமராக முதன்முறை வர்மா வருகை தருவதால் வரவேற்பு ஏற்பாடு கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் செய்யப்பட்டது. அவ்வாறாக மாநாடும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது. அன்று மாலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வர்மா ஜீயை சந்தித்துப் பேச துர்கா சென்றிருந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே, "ம்ம்ம்ம்... துர்கா ஜீ ஆஹியே ஆஹியே!!" என்று அழைக்கவும், அவளுக்குப் பக்கென்றானது. எல்லோரும் விலகி நின்றிருந்ததால் யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று சற்றே நிம்மதி பெருமூச்சுவிட்டவள், அந்த கணமே சுதாரிப்பாக தன்னுடன் வந்தவர்களை வெளியே நிற்கச் சொல்லி ஆணையிட்டாள். "ம்ம்ம்ம் ... பைட்டோ?" என்று அவர் சோபாவை காண்பித்து உட்கார சொல்லிவிட்டு மீண்டும் நக்கலாக, "எப்படி இருக்கே துர்கா?" என்று அவள் பெயரை அழுத்திச் சொன்னார். "வர்மா ஜீ" என்றவள் பேச தடுமாறவும், "சி எம் மேடமுக்கு அமினிஷியா வந்துருச்சோ? பழைய விஷயமெல்லாம் மொத்தமா மறந்து போச்சு போல... நாம எங்க இருந்தோம்... எப்படி இந்த பதவிக்கு வந்தோம்னு எல்லாம்... எல்லாம் மறந்து போச்சு?" என்று வர்மா ஜீ எகத்தாளமாகக் கேட்க "நான் எதையும் மறக்கல ஜீ... எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு... உங்களாலதான் இந்த பதவிக்கு வந்தேன்... இப்போ உங்களாலதான் இந்த ஆட்சியும் நடக்குது" என்றவள் பதிலளித்தாள். ஆனால் வர்மாஜீயின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக் கொண்டே போனது. "அச்சா... ஞாபகம் இருக்கு" என்று எள்ளலாக நகைத்தவர், அடுத்த நொடியே உக்கிரமாக எழுந்து நின்று, "அப்போ ஏன் இன்னும் தஞ்சாவூர்ல ப்ரொஜெக்டை ஆரம்பிக்கல... அஞ்சு வருஷமாச்சு… ஒரு கல்லை கூட நீ நகர்த்தல… ஒய்" என்று கொந்தளித்தார். "நான் பதவில உட்கார்ந்த அப்பவே அந்த ப்ரொஜக்டுக்கு அப்ரூவ் பண்ணிட்டேன் ஜீ” என்றவள் பதில் அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. “அப்படின்னா ஏன் இன்னும் ஆரம்பிக்கல?” “மக்கள் போராட்டம் மறியல்னு பண்ணி நடத்தவிடாம பண்ணிட்டு இருக்காங்க... அவங்க ஒத்துழைப்பு இல்லாம இவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட் எப்படி ஜீ கொண்டு வர முடியும்" என்றவள் இறங்கி பேச, "இதே காரணத்தைத்தான் நீ பதிவில உட்கார்ந்த நாளில இருந்து சொல்லிட்டு இருக்க துர்கா... உனக்கு தெரியுமா? பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி தொடங்கி இருக்க வேண்டிய ப்ரொஜெக்ட் இது” என்று கத்த தொடங்கினார். துர்கா மௌனமாக ஏறிட்டாள். வர்மா ஜீயின் கண்கள் உஷ்ணமேறியிருந்தது. “அந்த அறிவழகன் என்ன எதையும் செய்ய விடாம முட்டுக்கட்டை போட்டுட்டு இருந்தான்... அதான் அவனை தூக்கிட்டு முகுந்தனை இந்த சீட்ல உட்காரு வைக்கனும்னு முடிவு பண்ணேன்... சேஷாத்திரியை என் கைக்குள்ள போட்டுக்கிட்டேன்... அறிவழகனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்க வைச்சேன் எல்லாம் நான் நினைச்ச மாதிரி நடந்துக்கிட்டு இருக்கும் போது நடுவுல அந்த நந்தினி புகுந்துட்டா... சவஸ் சமான்யப்பட்டவ இல்லன்னு அப்புறம்தான் புரிஞ்சுது என்னோட தலையிலேயே கை வைச்சு இருக்கான்னா அவ எவ்வளவு பெரிய ஆளா இருப்பா... டீமானட்டைஸஷன் பண்றதுக்கு முன்னாடி கட்சில கணக்குல வராத பணம் எல்லாத்தையும் வெளிநாட்டு அக்கெளன்ட் மொத்தமா மாத்துனா... உள்ள புகுந்து மொத்தமா அந்த நாற்பத்து மூணாயிரம் கோடியை ஹேக் பண்ணி அடிச்சு இருக்கான்னு தெரிஞ்சுது புத்திசாலித்தனமா அந்த பணத்தை வைச்சு துபாய்ல ஹோட்டல ஆரம்பிச்சிட்டா... அவளை சும்மா விட கூடாதுன்னு முடிவு பண்னேன்... ஆனா அவ செத்துட்டா அந்த சொத்தெல்லாம் எப்படி என் கைக்கு வர்றது நந்தினி மாதிரி ஒரு டுப்ளிகேட் உருவாக்குனும்னு நினைச்சேன்… அதான் நீ முகுந்தனோட வந்த அன்னைக்கே உன்னை நந்தினியோட கம்பேர் பண்ணி பார்த்தேன்… உனக்கும் அவளுக்கும் நிறைய ஒத்துமை இருந்துச்சு… அப்பவே முகுந்தன்கிட்ட உன்னை நந்தினியா மாத்த ட்ரைன் பண்ண சொன்னேன்... அவளை கொன்னுட்டு அந்த இடத்துக்கு உன்னை கொண்டு வரணும்னு நினைச்சேன் எல்லாம் நான் நினைச்ச மாதிரியே நடந்துட்டு இருந்துச்சு... ஆனா கடைசில அந்த நந்தினி என் திட்டத்துல பெரிய கல்லா போட்டுட்டு செத்து போயிட்டா... அறிவழகன் வாரிசா முகுந்தனை சி எம் ஆக்கலாம்னு பார்த்தா அவன் பேரை சேனலில் போட்டு கிழிச்சு ஊழல் வழக்கிலயும் மாட்டிவிட்டுட்டா... சரியா அந்த சமயத்துல அறிவழகனும் செத்து தொலைச்சிட்டான் முகுந்தன் கேஸ்ல மாட்டி இருக்க நேரத்துல சி எம் செத்துட்டான்னு மக்களுக்கு தெரிஞ்சா ஆட்சியை கலைச்சிடுவாங்க... என் திட்டம் மொத்தமா ஸ்பாயிலாகிடோம் அதுக்கு முன்னாடி எனக்கு விசுவாசமான ஒரு ஆளை தமிழ்நாட்டுக்குள்ள கொண்டு வரணும்னு முடிவு பண்ணினேன்... வெளிநாட்டுல இருந்த பெரிய பெரிய டாக்டரை வரவழைச்சு அறிவழகன் உடம்பை ப்ரஸவ பண்ண சொன்னேன் இந்த சூழ்நிலையில மக்கள் மத்தில நந்தினி பத்தின பேர் அடிப்பட்டுச்சு... தீபம் சேனல் எம் டி நந்தினிதான் முகுந்தனோட ஊழலை வெளிய கொண்டு வந்தான்னு மக்கள் பெருமையா பேசுக்கிட்டாங்க அதை நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.. நந்தினி இதுநாள் வரை மீடியா முன்னாடி வந்தது இல்ல... யாருக்கும் பெருசா நந்தினியை பத்தி ஒன்னும் தெரியாது... அவ கூட நெருக்காம இருந்தவங்க கூட ரொம்ப குறைவு... மத்தபடி எல்லோரும் அவளை ஒன்னு இரண்டு தடவைத்தான் பார்த்திருக்காங்க அவளை மாதிரியே ட்ரஸ் பண்ணி உனக்கு மேக் அப் போட்டா நீ நந்தினி மாதிரியே இருப்ப... அதுவுமில்லாம நம்ம இதை ஏற்கனவே போட்ட ப்ளேன்தானே... அது சரியான நேரத்துல நமக்கு கை கொடுத்துச்சு நந்தினி அறிவழகனுக்கு நெருக்கமானவ... அவதான் ஹாஸ்பெட்டில அவரை பார்த்துக்கிட்டான்னு கதை கட்டனோம்… அதுக்கு மேல அவ புத்திசாலி... தைரியமான பெண்... இளம் பெண் தொழிலதிபர்... இப்படி அவளை பத்தின நியுஸ் மக்கள் மத்தில பரவினது நமக்கு நல்லதா போச்சு அறிவழகன் சாவை இராத்திரோயோட இராத்திரியா அறிவிச்சு அவர் பக்கத்துல சோகமா நின்னுட்டு இருந்த உன்னை எல்லா டிவிலயும் காட்டி நீதான் நந்தினின்னு எல்லோர் மனசுலயும் ஆழமா பதியவும் வைச்சாச்சு நந்தினியை நல்லா தெரிஞ்சவங்க யாரும் குழப்பம் பண்ணாம இருக்கு அவங்க வாயையும் அடைச்சாச்சு... ஒத்து வந்தவனுக்கு பணம்… ஒத்து வராதவன் பிணம் அதுக்கப்புறம் மொத்தமா அவ அடையாளத்துல எல்லாம் உன் முகத்தை பதிய வைச்சேன்... முகுந்தன் ஒத்துக்க மாட்டேன்னு அடம் பிடிச்சதால அவனை உள்ள போட்டேன்.. ஆட்சில குழப்பத்தை உண்டு பண்ணி கலைச்சிட்டு அடுத்த எலெக்ஷன்லயே உன்னை நிற்க வைச்சு ஜெயிக்க வைச்சு இருக்கேன்" என்று மூச்சு பிடித்து கொண்டு பேசியவரை ஏறிட்டு நிதானமாக பார்த்தவள், “நான் இது எதையும் மறக்கல ஜீ” என்றாள் மீண்டும். "மறக்க கூடாது துர்கா… குப்ப மேட்டுல இருந்த உன்னை கோபுரத்துல உட்கார வைச்ச எனக்கு திரும்பவும் உன்னை குப்ப மேட்டுக்கு அனுப்ப ரொம்ப நேரமாகாது” என்றவர் மிரட்டலாக சொன்ன மாத்திரத்தில் துர்காவின் முகம் இருளடர்ந்து போனது. ஆனால் அடுத்த நொடியே தன் முகமாற்றத்தை உடனடியாக மறைத்து கொண்டு இயல்பாக புன்னகைத்தாள்.  “இவ்வளவு வேலை நான் பார்த்தது நீ சி எம் ஆகணும்கிறதுக்காக இல்ல... தமிழ்நாட்டுல என் கை ஓங்கி இருக்கணும்கிறதுக்காக... இந்த பொக்கிஷ பூமியை மொத்தமா என் வசப்படுத்தனும்கிற ஒரே காரணத்துக்காக" என்று ஆக்ரோஷமாக அவர் சொல்லி முடிக்க துர்கா அமைதியாக பேச ஆரம்பித்தாள்.  "ஏன் வர்மா ஜீ டென்ஷனாகுறீங்க... நான் ப்ரொஜெக்ட்டை முடிச்சு கொடுக்கிறேன்னுதானே இப்பவும் சொல்றேன்... பிரச்சனை என்னன்னா மக்களோட ஒத்துழைப்பில்லாம நம்ம எந்த திட்டத்தையும் செய்ய முடியாது... அதுவும் இந்த நேரத்தில மக்களை எதிர்த்துக்கிட்டு எது செஞ்சாலும் அது தேர்தலில் எதிரொலிக்கும்... நம்ம கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் செஞ்சதெல்லாம் வீணாயிடும்... ஆட்சி கையை விட்டு போயிடும்" என்றவள் சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டவர், "என்கிட்டயே அரசியல் செய்றியா துர்கா?" என்று அவர் கூர்மையாக முறைக்க, "ஐயோ ஜீ... உங்ககிட்ட போய் அரசியல் பண்றதா? யாராச்சும் பழனிக்கே பஞ்சாமிர்தம் கொடுப்பாங்களா?" "விட்டா நீ பழனிக்கே லட்டையும் திருப்பதிக்கு பஞ்சாமிர்தத்தை கொடுப்ப... உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும் துர்கா... வர போற எலெக்ஷன்ல ஜெயிக்க நீ என்னவெல்லாம் ப்ளான் பண்ணிட்டு இருக்கன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா?" "எலெக்ஷன்ல ஜெயிச்சாதானே ஜீ உங்க ப்ரொஜ்க்டை முடிச்சு கொடுக்க முடியும்" "இவ்வளவு நாளா ஆட்சில இருந்த செய்யாததை அடுத்த எலெக்ஷ்ன்ல ஜெயிச்சு செஞ்சு முடிச்சிடுவ?" என்றவர் எகத்தாளமாக கேட்க, "திடீர்னு பதவிக்கு வந்ததும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஜீ... இப்பதான் நான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் கத்துக்கிட்டிருக்கேன்... நீங்க வேணா பாருங்க... கண்டிப்பா அடுத்த வருஷத்துல அந்த ப்ரொஜக்டை நான் நடத்தி முடிச்சிடுவேன்" என்றவள் உறுதியாக கூறினாள். "இப்ப என்ன சொல்ல வர்ற... வர போற எலெக்ஷன்ல நான் உன்னை ஜெயிக்க வைக்கணுமா?" "உங்க சப்போர்ட் இருந்தா கண்டிப்பா முடியும் ஜீ" "நான் சப்போர்ட் பண்ணி என்ன பண்றது... மக்கள் சப்போர்ட் உனக்கு இருக்கணும்" என்றவர் விட்டேற்றியாக பதில் சொல்ல, "உங்களால முடியாததுன்னு ஏதாச்சும் இருக்கா ஜீ... யூ ஆர் அ கிங் மேக்கர்" என்றவள் கணபொழுதில் அவர் தோளோடு உரசி கைகளை பற்றி கொண்டாள். அத்தனை நேரம் தீயாக தகித்த வர்மாஜீயின் கோபமெல்லாம் ஐஸ் மலைக்குள் அமுங்கியது போல உருகி கரைந்திருந்தது. வர்மா ஜீயை எல்லோருக்கும் பிரம்மச்சாரியாகவும் பெண்கள் வாசமே இல்லாதவர் என்ற ஒரு பொய்யான பிம்பம் உலவி கொண்டிருந்தது. ஆனால் அவருக்கு பெண்கள் பலவீனம் இருப்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அவற்றை தெரிந்து கொண்ட வெகுசிலரில் துர்காவும் ஒருத்தி! ஒருமுறை மும்பை வந்து தங்கியிருந்த வர்மாஜீயை சந்திக்க முகுந்தன் வந்திருந்தான். அப்போது தன்னுடன் வந்திருந்த துர்காவை தோழியாக அறிமுகப்படுத்தி வைத்தான். அவன் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு அதுவாகத்தான் இருக்கும். அவர்கள் இருவரின் விதியையும் அந்த ஒரு சந்திப்பு தலைகீழாக புரட்டி போட்டது. அதற்குப் பிறகு சிலமுறைகள் வர்மாஜீ துர்காவை தனியாகச் சந்திக்க அழைத்த கதையெல்லாம் முகுந்தனுக்கே தெரியாது. புத்திசாலிகளை விட சந்தர்ப்பவாதிகளைதான் இந்த உலகம் பெரிதுமாக அங்கீகரிக்கிறது. துர்கா அத்தகைய புத்திசாலியான சந்தர்ப்பவாதி. ஆளுக்கு ஏற்ற மாதிரியும் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் தன்னை மாற்றிக் கொள்வதில் அவளுக்கு நிகர் அவள்தான். புத்திசாலியான தைரியசாலியான பெண்களை விடவும் தங்கள் அழகையும் அழுகையையும் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்ட பெண்கள்தான் பெரிய பெரிய ராஜாங்கங்களை கட்டியாண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். மஹாபாரதத்தில் சத்தியவதியும் இராமாயணத்தில் கைகேயியும் இந்த ஆயுதங்களை பயன்படுத்தித்தான் ராஜ்ஜியத்தையே மாற்றியமைத்தார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்த இதிகாசங்களே இருந்திருக்காது. இப்படி உலக வரலாற்றில் பதிவான பெண்களில் துர்காவும் கொஞ்சமும் சளைத்தவள் இல்லை. அவளை ஆட்சியில் அமர்த்த திட்டமிட்டது வர்மாஜீயாக இருந்தாலும் வந்த வாய்ப்பை மிகச் சாமர்த்தியமாகப் பிடித்து கொண்டது துர்காதான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா