மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E33Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E33

Quote from monisha on July 20, 2023, 11:03 AM

33
தியாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் கழித்து அவரது மயக்கம் தெளிந்தது. “இனிமே ஒன்னும் பயப்படுறதுக்கு இல்ல” என்ற மருத்துவரின் குரல் கேட்டது. “எப்படி இருக்கீங்க ஐயா?” என்று மாலதியின் தந்தை வருணனின் நலம் விசாரிப்பை தொடர்ந்து, “நீங்க கண்ணை திறக்கவே இல்லயா… நான் ரொம்ப பயந்துட்டேன் தாத்தா” என்று அக்கறையும் அன்பும் தளும்பிய மாலதியின் குரலை கேட்டதும் அவர் கண்கள் பனித்தன. ‘எந்த உறவும் இல்லாத தனக்காக இந்த பெண் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறாளே?’ என்றவர் உள்ளம் நெகிழ்ந்த அதேநேரம், இன்று தன் மகள் இருந்தாலும் இப்படித்தான் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருப்பாள் என்று பல வருடங்கள் முன்பு தொலைத்த உறவுக்காக அவர் நெஞ்சம் தவித்தது. “தாத்தா என்னாச்சு? ஏன் அழுறீங்க?” என்று மாலதி அவர் கையை ஆதரவாகப் பற்றிக் கொள்ள, “என் பொண்ணு ஞாபகம் வந்துருச்சு ம்மா” என்றபடி அவள் தலையை வருடிக் கொடுத்தார். “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க தாத்தா… உங்க பொண்ணு இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ அப்படி உங்களை நான் பார்த்துக்கிறேன்” என்றவள் கூறியதோடு மட்டுமல்லாது வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து அவரை கண்ணும் கருத்துமாக உடனிருந்து பார்த்துக் கொண்டாள். அவருக்கான உணவையும் தன் வீட்டிலிருந்தே கொண்டு வந்து கொடுத்தாள். “நான் நல்லா இருக்கேன் மா… நான் பார்த்துக்கிறேன்… நீ வீட்டுக்கு போ” என்றவர் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. “ஒரு வாரமாச்சும் ரெஸ்ட் எடுங்க தாத்தா” என்றவள் இரவு வரை அவருடன் இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்தாள். எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னிடம் அன்பை பொழியும் மாலதியைப் பார்க்கப் பார்க்க அவருக்கு வியப்பாக இருந்தது. மேலும் அவளது அக்கறை வசுமதியை அதிகமாக நினைவுபடுத்தி அவர் மனதை வாட்டியது. இப்படியாக ஒரு வாரம் கழிந்துவிட தியாகுவின் உடல் நலமும் ஒருவாறு தேறியிருந்தது. அன்றும் வழக்கம் போல மாலதி மதிய உணவு எடுத்து வரவும்,  “இனிமே சாப்பாட்டெல்லாம் எடுத்துட்டு வாராதே… நான் இப்போ நல்லா இருக்கேன்… என்னால சமைச்சுக்க முடியும்… யாருக்கும் தொந்தரவா இருக்க நான் விரும்பல” என்று தியாகு கண்டிப்புடன் சொல்லவும், “ஒகே ஒகே இனிமே எடுத்துட்டு வரல… இப்ப மட்டும் சாப்பிட்டுடங்க… ப்ளீஸ்” என்றவள் இறைஞ்சுதலாக கேட்ட தொனியில் மனம் இறங்கியவர்,  “சரி… இப்ப மட்டும்தான்… இனிமே எடுத்துட்டு வர கூடாது… அப்படி எடுத்துட்டு வந்தன்னா நான் அதுக்கப்புறம் உன்கிட்ட பேச மாட்டேன்” என்றவர் முடிவாகச் சொல்ல, “உஹும்… எடுத்துட்டு வர மாட்டேன்” என்றவள் தான் எடுத்து வந்த உணவை அவரிடம் கொடுத்தாள்.  “ஆமா நீ ஏன் இந்த ஒரு வாரமா எங்கயும் போகவே இல்ல… வேலை எதுவும் இல்லயா?” “இருந்துச்சு… நான்தான் வரலன்னு சொல்லிட்டேன்” “ஏன் மாலதி… நான்தான் ஹாஸ்பெட்டில இருந்து வந்த அன்னைக்கே நல்லாயிட்டேன் இல்ல… நீ வேலைக்கு போக வேண்டியதுதான்” “நீங்க மயக்கம் போட்டு விழுந்த அன்னைக்கு நான் எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா? அப்படியே மூச்சு பேச்சில்லாமல் கிடந்தீங்க… தண்ணி தெளிச்சும் கூட எழுந்திருக்கல… எனக்கு அப்படியே வெலுவெலுத்து போச்சு… அப்புறம்தான் அப்பாகிட்ட சொல்லி ஹாஸ்பெட்டில சேர்த்து… ப்ப்ப்பா” என்றவள் பரபரப்பாக அவள் அனுபவத்தை விவரிக்கவும் அவர் மிதமாகச் சிரித்தார். “நான் எவ்வளவு சீரியஸா சொல்லிட்டு இருக்கேன்… நீங்க சிரிக்குறீங்க… உங்களுக்கு கொஞ்சமாச்சும் சீரியஸ்னஸ் புரியுதா? இந்த வயசுல நீங்க இப்படி தனியா தங்குறது கொஞ்சமும் சரியில்ல… அன்னைக்கு நீங்க மயக்கம் போட்டு விழுந்த போது நல்ல வேளையா நான் பக்கத்துல இருந்தேன்… ஒரு வேளை நான் இல்லாத நேரத்துல நடந்திருந்ததா… இல்ல நடுராத்திரில நடந்து இருந்தா” என்றவள் அடுக்கி கொண்டே போக, “யார் விதி எப்படி போகனும்னு இருக்கோ அப்படித்தான் போகும்” என்றவர் மிக சாதாரணமாக சொல்லவும் அவள் சீற்றமானாள். “சும்மா இப்படியெல்லாம் பேசாதீங்க… உங்க பையன்தான் உங்களை துபாய்க்கு வந்துற சொல்றாராமே… போக வேண்டியதுதானே… எதுக்கு தனியா இருந்து இப்படி கஷ்டப்படணும்?” என்றவள் கேட்ட நொடி, அவர் ஆயாசமாக மூச்சை இழுத்துவிட்டார். அவர் மனதில் சொல்ல முடியாத வேதனைகள் பல மண்டி கிடக்க, அவர் மௌனித்திருந்தை பார்த்தவள்,  “உங்க பையன் மேல எனக்கு செம கோபம்… நீங்க மயக்கம் போட்டு விழுந்த அன்னைக்கு ஃபோன் பண்ணி செம்மையா ஏறு ஏறுன்னு ஏறிட்டேன்… அப்புறம்தான் தெரிஞ்சுது… தப்பு அவர் பேர்ல இல்ல… உங்க பேர்லதான் இருக்குன்னு… அங்கே எல்லோரும் நீங்க வரனும்னு ஆசைப்படுறாங்களாம்… நீங்கதான் போகவே மாட்டிறீங்களாமே… அப்படியென்ன உங்களுக்கு இங்க?  இந்த வீடா? இல்ல நான் பிறந்த நாட்டை விட்டு போக மாட்டேன்… வாழ்ந்தாலும் இங்கதான் செத்தாலும் இங்கதான்னு ஏதாச்சும் உருப்படாத கொள்கை வைச்சுட்டு சுத்திட்டு இருக்கீங்களா? அப்படி ஏதாவது இருந்தா தூக்கி போடுங்க… இந்த வயசுல உங்களுக்கு வேண்டியது அன்பும் அரவணைப்பும்தான்… உறவுகளும் குடும்பத்தையும் இழந்து என்ன பெருசா சாதிக்க போறோம் சொல்லுங்க” என்று மாலதியின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவர், “நான் இந்த வீட்டை விட்டுட்டு போறதை பத்தியோ நாட்டை விட்டுட்டு போறதை பத்தியோ கவலைப்படல மாலதி” என்று நிறுத்தி உள்ளம் குமுற, “என் பாரதியை பார்க்கணும்… அவன் நல்லா வாழுறதை பார்க்கணும்… அதை மட்டும் பார்த்துட்டா போதும்… அதுக்கப்புறம் நான் எங்க வேணா போக தயாரா இருக்கேன்… இந்த உலகத்தை விட்டு போனா கூட பரவாயில்ல… அவனைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு அந்த கடவுள்கிட்ட தினமும் நான் வேண்டிக்கிறேன்” என்று உணர்ச்சி பொங்கப் பேசியதைக் கேட்டு மாலதியின் புருவங்கள் நெரிந்தன. “யாரு தாத்தா பாரதி?”  மாலதியின் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் தியாகு பதினாறு வருடம் பின்னோக்கி செல்ல வேண்டும். காலம் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிடுகிறது. தான் பெற்ற மகனை விடவும் ஒரு படி அதிகமாக பாரதியை நேசித்தார். அவன் யுபிஎஸ்ஸி தேர்வில் வென்றுவிடுவான் என்று நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் இருந்தார். காலத்தின் ஓட்டத்தில் எல்லாமே கானல் நீராகப் போனது. ஒரு வேளை துர்கா பாரதியின் வாழ்க்கைக்குள் நுழையாமல் இருந்திருந்தால் அவன் வாழ்க்கை இப்படி தடம் மாறிப் போயிருக்காது. அவன் லட்சியத்தை அடைந்திருப்பான். இன்று அவன் எல்லோரும் மெச்சும் உயரத்தை எட்டியிருந்திருப்பான். வித்யாவின் மரணத்தால் தவற விட்ட வாய்ப்பை அடைவதற்குக் கடினமாக அவன் உழைத்திருக்கும் போதுதான் துர்கா மீண்டும் அவன் வாழ்க்கையில் நுழைந்தாள். கருணா துர்காவின் பெயரை வைத்து நிறைய குழப்பங்களை ஏற்படுத்தினான். அவர்கள் இருவரின் உறவையும் கொச்சைப்படுத்தி காலனியில் அவதூறுகள் பரப்பிய காரணத்தால் துர்காவை திருமணம் செய்து கொள்ள பாரதி முடிவெடுத்தான். “கல்யாணத்தை ரெஜிஸ்டர் ஆபிஸ்லேயே வைச்சுக்கலாம் மாமா” என்று பாரதி முடிவெடுத்த பின்னர் எல்லாமே சுமுகமாகத்தான் இருந்தது. அப்போதுதான் வசுமதி ஒரு புது குழப்பத்தை ஆரம்பித்தாள். “அப்பா… துர்காகிட்ட ஏதோ தப்பா இருக்கு ப்பா” அவள் திடீரென்று இவ்விதம் சொல்ல, தியாகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்ற வசு நீ?” “அவ காலேஜ் போற வழில யார் கூடயோ பேசுறா… பெரிய கார்ல யாரோ அவளை கூட்டிட்டு போனதைப் பார்த்தேன்” என்று வசுமதியின் வார்த்தையில் தியாகுவின் முகம் சுருங்கியது. “உனக்கும் துர்காவுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா?” “ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்ல” “அப்புறம் ஏன் இப்படிக் கண்ட மாதிரி உளறிட்டு இருக்க” “இல்ல ப்பா நான்” “வாயை மூடு வசு… துர்காவை பத்தி இப்படியெல்லாம் பேசுற வேலை வைச்சுக்காதே… பாரதி கிட்டயோ வேற யார்கிட்டாயாச்சும் நீ இப்படி சொல்றதை பார்த்தேன்… நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று வசுமதியை காட்டமாகக் கண்டித்துவிட்டார். இந்த நிலையில் திருமண நாள் நெருங்கியிருந்தது. எல்லோரும் பதிவாளர் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் துர்கா மட்டும் அருகிலிருக்கும் கோவிலுக்குப் போய்விட்டு வரலாம் என்று பாரதியை அழைத்தாள். “ரெஜிஸ்டர் ஆபீஸ் போகணும்… லேட்டாகிடும்” என்று பாரதி அவள் அழைப்பிற்கு உடன்படாத நிலையில், “கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு வா… எவ்வளவு நேரம் ஆகிட போகுது… பத்து மணிக்குததானே… போயிடலாம்” என்று தியாகு அவர்களை அனுப்பிவைத்தார். கோவிலுக்குச் சென்ற இருவரும் பலமணி நேரமாகியும் திரும்பவில்லை. பாரதி கைதான செய்திதான் வந்தது. வியாசர்பாடி சங்கர் மற்றும் அவர்களின் ஐந்து கூட்டாளிகளைக் கொன்றதாக அவன் கைது செய்யப்பட்டிருந்தான். பாரதி கொலை செய்தானா? தியாகுவால் நம்பவே முடியவில்லை. துர்கா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.  “என்னாச்சு பாரதி? என்னடா என்னவோ கொலை அது இதுன்னு சொல்றாங்க?” என்று தியாகு வினவவும், “ஆமா மாமா… நான் கொலை பண்ணிட்டேன்… அந்த வியாசர்பாடி சங்கரை கொலை பண்ணிட்டேன்… அவன் துர்காவை கடத்திட்டு போய் சை!… எனக்கு வேற வழி தெரியல… ஆனா அவங்க கூட்டாளிங்க யாரையும் நான் கொலை பண்ணல… அடிக்க மட்டும்தான் செஞ்சேன்” என்று பாரதி சொன்னதை கேட்டு தியாகு அதிர்ந்து நின்றார். அவரால் நம்பவே முடியவில்லை. சங்கர் உட்பட மொத்தம் ஆறு நபர்களை அடித்து கொடூரமாக கொன்றதாக பாரதி மேல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துவிட்டனர். துர்கா வீட்டிற்கு வந்ததிலிருந்து ஓயாமல் அழுது கொண்டிருந்தாள். வசுமதி தன் கோபத்தை எல்லாம் மறந்து அவளுக்கு ஆறுதலாக இருந்தாள். ஆனால் அடுத்த பத்து நாளில் மீண்டும் அவர்களுக்கு இடையில் ஒத்துவராமல் போனது. வசுமதி துர்காவிடம் கோபமாகப் பேசி கொண்டிருப்பதைக் கேட்ட தியாகு என்னவென்று விசாரிக்க, “அவ கர்ப்பமா இருக்கா… நம்ம யார்கிட்டயும் எதுவும் சொல்லாம மறைச்சு இருக்கா… உண்மையா இல்லையான்னு கேளுங்க” என, அவர் வாயடைத்துப் போனார். துர்கா பதில் சொல்ல முடியாமல் முகத்தை மூடி அழ தியாகுவிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. ஆனால் வசுமதி கட்டமாக, “சீ… நீயும் ஒரு பொண்ணா… பாரதி அண்ணாவை இப்படி ஏமாத்திட்டியே” என்று கேட்ட நொடி துர்கா அதிர்ச்சியாக நிமர, தியாகுவும் மகளை கொந்தளிப்பாகப் பார்த்தார். “என்ன பேசுற வசு நீ?” “ஆமா ப்பா… நிச்சயமா இவ வயித்துல வளர கருவுக்கும் பாரதி அண்ணாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது… வாய்ப்பே இல்ல… எனக்கு தெரியும்… இவ சரியில்ல ப்பா… நான்தான் அன்னைக்கே சொன்னேன்… நீங்க நம்பல” என்று வசுமதி துர்காவின் மீது அடுக்கடுக்காக பழி சுமத்த, தியாகு குழம்பி நின்றார். ஆனால் துர்காவோ அந்த நொடியே ஓடி சென்று சமையலறையிலிருந்து கிருஷ்ணாயிலை எடுத்து மேலே ஊற்றிப் பற்ற வைத்துக் கொள்ள போய்விட்டாள். “துர்கா வேணாம்” என்று தியாகு அவளை தடுத்து பிடித்தார். “உஹும் நான் சாக போறேன்… வசுவே இப்படி என்னை பத்தி பேசுறானா காலனில இருக்கவங்க எல்லாம் எப்படி பேசுவாங்க… வேண்டாம்… என்னால அதெல்லாம் கேட்க முடியாது… நான் சாகிறேன்” என்று முரண்டு பிடித்தவளை எப்படியோ பேசி சமாதனம் செய்து அமைதிப்படுத்திய அடுத்த கணமே, “இப்படி வரைமுறை இல்லாம பேசுவியா? வரைமுறை இல்லாம பேசுவியா?” என்று வசுமதியை பயங்கரமாக அடித்து காயப்படுத்திவிட்டார்.  “அப்பா நான் சொல்றது உண்மை ப்பா” என்று அப்போதும் வாதிட்டவளை அவர் நம்ப தயாராக இல்லை. “என்கிட்ட இனிமே நீ பேசவே பேசாதே… உன் வாயால என்னை அப்பான்னு கூப்பிடாதே… அசிங்கமா இருக்கு… சை! நீயெல்லாம் ஒரு பொண்ணா” என்று மகளைத் திட்டி தீர்த்துவிட்டார். அதற்குப் பிறகு வசமதியின் பேச்சு எடுபடவே இல்லை.  இந்த நிலையில் பாரதியின் வழக்கு மிகப் பிரசித்தமாக பேசப்பட்டது. ஆதாரங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக இருந்தன. பாரதியின் உண்மையும் நேர்மையும் அவனுக்கு எதிராகவே முடிந்தது. சங்கரின் கொலையை அவன் ஒப்புகொண்ட காரணத்தால் அவன் கூட்டாளிகள் ஐந்து பேரை அவன் கொல்லவில்லை என்ற வாதம் எடுபடவில்லை. அவனுக்கு நீதிமன்றம் ஆயள் தண்டனை விதித்துவிட, துர்கா மனமுடைந்து போனாள்.  “அவர் இல்லாம நான் இந்த குழந்தையை பெத்துக்க மாட்டேன்… என்னால முடியாது… ஊர்ல இருக்கவங்க எல்லாம் தப்பா பேசுவாங்க… ஏற்கனவே என்னை பத்தி தப்பு தப்பா பேசுறாங்க… உஹும் இந்த குழந்தை எனக்கு வேண்டாம்… எனக்கு வேண்டாம்… நான் இந்த குழந்தை கலைச்சிடலாம்னு இருக்கேன் ப்பா… நீங்க பாரதிக்கிட்ட இதை பத்தி எப்பவுமே சொல்லிடாதீங்க” என்றவள் தியாகுவிடம் நயமாகப் பேசி சத்தியம் வாங்கிக் கொண்டாள். கணவனின் துணையில்லாமல் பத்தொன்பது வயதில் ஒரு குழந்தைக்கு தாயாகும் தண்டனை துர்காவுக்கு வேண்டாம் என்றுதான் தியாகுவும் அவள் கருத்திற்கு உடன்பட்டார். தவறாமல் ஒவ்வொரு வாரமும் சிறைக்கு சென்று பாரதியை பார்க்கும் போதெல்லாம் துர்காவும் உடன் வருவாள். சிறைகைதிகளும் பார்வையாளர்களும் முண்டி அடித்துக் கொண்டு நிற்கும் போது எதுவும் பேசுவதற்கே வழி இருக்காது. அப்படியும் பாரதி தியாகுவிடம், “இனிமே துர்காவை இங்க கூட்டிட்டு வராதீங்க மாமா… இங்கெல்லாம் அவ வர வேண்டாம்” என்று சொல்லிவிட தியாகுவும் ஆமோதித்தார். அடுத்து முறை பாரதியை பார்க்கச் சிறைக்கு தனியே சென்றிருந்த போதுதான் அந்த கோரமான சம்பவம் நிகழ்ந்தது. பாரதி வீட்டில் கேஸ் வெடித்துவிட்டதாக அவர்கள் காலனி முழுக்க களேபரமாகிப் போனது. உள்ளே ஒரு பெண்ணின் கதறல் கேட்டது. நெருப்பின் தீவிரத்தில் யாராலுமே உள்ளே சென்று அவளைக் காப்பற்ற முடியவில்லை. தீயணைப்புத் துறையினர் வந்து நெருப்பை அணைக்கும் போது முற்றிலுமாக எரிந்த நிலையில்தான் துர்கா மீட்கப்பட்டாள். எல்லோரும் அப்படித்தான் நம்பினார்கள். பராதியிடம் விஷயத்தைச் சொல்லி அவனை பரோலில் அழைத்து வரவும் முடியாது. துர்காவுக்கும் அவனுக்கும் என்ன உறவு என்ற கேள்வி எழும். ஆதலால் ஈமச்சடங்கை தியாகுவே செய்து முடித்தார். ஆனால் இந்த கலவரத்தில் வசுமதி காணாமல் போனதை யாருமே கவனிக்கவில்லை. எங்கு தேடியும் வசுமதி கிடைக்கவே இல்லை. காவல் துறையில் புகார் கொடுத்த போதும் அவர்கள் அதனை விசாரிக்கவில்லை. “வயசு பொண்ணுதான்… எவனாயாச்சும் இழுத்துட்டு ஓடியிருப்பா… உங்க பொண்ணுக்கு லவ்வர் யாராச்சும் இருக்காங்களான்னு முதல போய் விசாரிச்சிட்டு வாங்க” என்ற அலட்சியமாக பேசினர். ‘அவளுக்கு படிப்புல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல… அதான் யாரையோ இழுத்துட்டு ஓடிட்டா?’ காலணியில் எல்லோரும் பலவாறாக வசுமதியைப் பற்றி அவதூறு பேசினார்கள். அந்த இடத்தில் இருக்கவே பிடிக்காமல் தியாகு சென்னையிலிருந்த வீட்டை விற்றுவிட்டு திருச்சி வந்து சேர்ந்துவிட்டார். ஆனால் அப்பொழுதும் மாதத்திற்கு ஒருமுறை புழல் சிறைக்குச் சென்று பாரதியை பார்த்து வரும் வழக்கத்தை மட்டும் விடவில்லை. அவன் சிறையிலிருக்கும் தருணத்தில் துர்கா இறந்தது, வசு காணாமல் போனது, இதன் காரணத்தால் சென்னை வீட்டை விற்றது என்று எதை பற்றி சொல்லியும் அவனுடைய கொஞ்சம் நஞ்சம் நிம்மதியையும் அவர் கெடுக்க விரும்பவில்லை.  வசுமதியின் தீவிரமான தேடல் படலம் கொஞ்சம் கொஞ்சமாக தொய்ந்து போனது. அவருக்கும் கூட மற்றவர்கள் பேசுவது போல வசுமதி ஓடித்தான் போயிருப்பாள் என்று தோன்றியது. எங்கேயோ சந்தோஷமாக இருக்கட்டும் என்று அவளைத் தேடுவதை நாளடைவில் விட்டுவிட்டார். அந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவர் மகன் ராஜாவிற்குத் திருமணம் முடிந்திருந்தது. துபாயில் வேலையும் கிடைத்தது. பத்து வருடம் ஓடிப்போனது. ராஜா எத்தனையோ முறை அழைத்தும் அவர் அவனுடன் துபாய் செல்ல மறுத்துவிட்டார், மாதத்திற்கு ஒருமுறை பாரதியை சென்று பார்க்க முடியாமல் போய் விடுமோ? அவனுக்கு இருப்பதே தான் மட்டும்தான். அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாததால் வருடத்திற்கு இருமுறை அவன் தமிழகம் வந்து செல்வான். அப்படியொரு முறை அவன் துபாயிலிருந்து விமானத்தில் பயணிக்கும் போதுதான் அந்த நம்ப முடியாத காட்சியை பார்த்தான். அவன் முன்பாக உயிரும் உடலுமாக துர்கா நின்றிருந்தாள். அவளின் வித்தியாசமான தோற்றமும் உடையும் பார்த்தவனுக்கு முதலில் அது துர்காவாக இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. எனினும் தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள எண்ணியவன் டில்லியில் துர்கா இறங்கத் தயாராக நின்ற போது அவளை நோக்கி, “துர்கா” என்று பெயரிட்ட அழைக்க, அவள் திரும்பிப் பார்த்தாள். அத்தனை நேரம் அவனுக்கு இருந்த சந்தேகம் ஊர்ஜிதமான அதேநேரம் அவனைப் பார்த்த நொடி அவள் தீயை மிதித்தவள் போல அவசரமாக அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். தியாகு சொன்னதை எல்லாம் அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த மாலதி ஜெர்க்காகி, “அப்போ துர்கா சாகலையா? அப்போ அன்னைக்கு நடந்த அந்த பைர் அக்ஸிடென்ட்??” என்று கேட்டவளைக் கண்ணீரோடு பார்த்த தியாகு, “அந்த செங்கன்ட் வரைக்கும் நெருப்புல கருகிச் செத்துப் போனது என் பொண்ணு வசுமதின்னு நான் நினைச்சு கூட பார்க்கல... என் பொண்ணுன்னு தெரியாமலே” என்று அவர் மேலே வார்த்தைகள் வாரமல் துக்கம் தொண்டையை அடைக்க முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழுதார். “தாத்தா அழாதீங்க… திரும்பியும் உடம்புக்கு ஏதாச்சும் வந்துட போகுது…. ப்ளீஸ் தாத்தா அழாதீங்க” என்று மாலு கேட்டு கொண்டதில் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியவர், “அப்பத்தான் என் பொண்ணு எனக்கு சொன்னதெல்லாம் உரைச்சுது… பாரதியை நான்தான் வளர்த்தேன்… அவன் ஒழுக்கத்தை பத்தியும் நேர்மையை பத்தியும் எனக்கு நல்லா தெரிஞ்சிருந்தும் அன்னைக்கு துர்காவோட கர்ப்பத்துக்கு பாரதி காரணம்னு எப்படி நினைச்சேன்… எனக்கு இதுல ஏதோ குழப்பம் இருக்கு… துர்காகிட்ட ஏதோ பெருசா தப்பு இருக்குன்னு தோனுச்சு அப்பவே எல்லா உண்மையையும் பாரதிக்கிட்ட சொல்லிடணும்னு நானும் ராஜாவும் ஜெயிலுக்கு போனோம்  பாரதி ரெண்டு நாள் முன்னாடியே ரிலீஸ் ஆகிட்டாதா சொன்னாங்க… எனக்கு சந்தோஷம் தாங்கல… அவன் என்னை தேடி காலனிக்கு போயிருப்பான்னு தோனுச்சு… உடனே அங்கே போய் பார்த்துடனும்னு புறபட்ட போதுதான் ராஜாவுக்கு ஒரு ஃபோன் கால் வந்துச்சு… துபாய்ல இருக்க அவன் பொண்டாட்டி பேசுனா… யாரோ அவளை கொன்னுடுவேன்னு மிரட்டறதாகவும் துப்பாக்கியை குழந்தை தலையில வைச்சு இருக்கிறதாகவும் சொன்ன போது எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல… ராஜா ரொம்ப பயந்துட்டான்…  அந்த கொலைகாரங்க எங்ககிட்ட போட்ட கண்டிஷன்… எந்த காரணத்தை கொண்டும் நாங்க பாரதியை பார்க்க போக கூடாது… இந்த உண்மையெல்லாம் சொல்லவும் கூடாதுங்குறதுதான்… அதுக்கப்புறமும் நாங்க என்ன பண்ண முடியும்… ராஜா உடனே துபாய் கிளம்பி போயிட்டான்” என்று நிறுத்தி முகத்தை அழுந்த துடைத்து கொண்டார். “அப்போ அதுக்கு அப்புறம் பாரதியை நீங்க பார்க்கவே இல்லையா தாத்தா?” “உஹும்… ஆறு வருஷம் ஓடி போச்சு… எங்கயாவது எப்பயாவது அவனை பார்த்திர மாட்டோமான்னு நானும் தினம் தினம் காத்திட்டு இருக்கேன்” “ஏன் தாத்தா? அன்னைக்கு ஒரு போட்டோவை கிழிச்சு போட்டீங்களே… அப்படியே சி எம் ஜாடையில இருந்துச்சே… அந்த பொண்ணுதான் துர்காவோ?” என்று மாலதி ஆர்வமாகக் கேட்க, “சி எம் ஜாடையிலயா?” என்று கேட்டு ஏளனமாக சிரித்தவர், “சி எம்மே அந்த துர்கா கிரிமனல்தானே” என்று சொல்ல, “வாட்?” என்று மாலதி உச்சமாக அதிர்ந்துவிட்டாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா