மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E34Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E34

Quote from monisha on July 21, 2023, 5:09 PM

34
முதலமைச்சர் நந்தினியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. “தஞ்சாவூரில ஐட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வராம இருக்க என்னால என்ன பண்ண முடியுமோ எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கேன்… பிரதமர்கிட்டயும் பேசியிருக்கேன்… அவரும் கன்சிடர் பண்றேன்னு சொல்லி இருக்காரு” என்றவள் இறுதியாகச் சொல்லி பேட்டியை முடித்துவிட்டு புறப்பட்டாள். இதனை டில்லியிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்திருந்த வர்மாஜீ துர்காவின் பேசியில் இணைப்பில் வந்தார்.  “பிரஸ் மீட்ல உன் இஷ்டத்துக்கு அடிச்சு விட்டிருக்க? நீ என்கிட்ட கேம் ப்ளே பண்றியா இல்ல மக்கள் கிட்டயா… எனக்கே சந்தேகமா இருக்கு?” என, “அதுல என்ன ஜீ சந்தேகம்… யாரை சுலபமா ஏமாத்த முடியுமோ அவங்ககிட்டதான்” என்றாள் அலட்சியமாக! “அப்படின்னா?” “மக்களை ஏமாத்துறதுதான் சுலபம் ஜீ… வாக்கு கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு தேர்தலில் ஜெயிச்சதும் மாத்தி பேசிக்கலாம் இல்ல… அதான் சொன்னேன்” என்றாள். “ம்ம்ம்.. நீ வர எலெக்ஷன்ல ஜெயிச்சிருவ துர்கா” என்று வர்மா ஜீ அவள் திறமையை மெச்சிவிட்டு இணைப்பை துண்டிக்க, அவள் பரபரப்பாக தம் அலுவல்களை முடித்துவிட்டுப் புறப்பட்டாள். அவள் கார் வீட்டை அடைய அவளுக்கு முன்னதாக அங்கே வந்துவிட்ட காரியதரிசி ராஜேந்திரன், “உங்களை பார்க்க அம்மா அப்பா வந்து வெய்ட் பண்ணிட்டு இருக்காங்களாம் மேடம்” என்றான். “என்ன ராஜேந்திரன்… இங்கேயுமா? நிம்மதியே இல்ல” என்று கடுப்பாக புலம்பியபடி, “ஆமா யாரோட அம்மா அப்பா… அப்பாயின்மென்ட் இருக்கா?” என்றவள் யோசனையாக கேட்க, “மேடம்… உங்க பேரன்ட்ஸ்தான்… சேஷாத்திரி சாரும் மதியழகி மேடமும்” என்றவன் சொன்ன நொடி, “ஒ… ஒகே…என்னோட அம்மா அப்பா” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள். “அவங்களை ஏன் வெய்ட்டிங் ரூம்ல உட்கார வைச்சீங்க… உள்ள உட்கார வையுங்க” என்று சொல்ல, “இல்ல மேடம்… அவங்கதான்” என்று இழுக்க, “நான் ப்ரெஷாகிட்டு வரேன்… உள்ளே கூப்பிட்டு உட்கார வைய்யுங்க… சாப்பிட ஏதாச்சும் கொடுங்க” என்றவள் பணித்துவிட்டு, ‘இவங்க எதுக்கு வந்திருக்காங்க’ என்று முனகியபடி மாடியேறினாள். முகம் கழுவி கீழே வந்தவள் சேஷாத்திரியும் மதியும் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்து, “வாங்க ப்பா வாங்க ம்மா” என்றபடி முகமன் கூறி வரவேற்க, அவர்கள் முகம் ஒரு மாதிரி தெளிவில்லாமல் இருந்தது. இருவரும் எதையோ கூற தயக்கத்தோடு அமர்ந்திருப்பதை உணர்ந்தவள், “வாங்க உள்ளே போய் பேசுவோம்” என்று தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள்.  அடுத்த கணமே அவளது மென்மையான முகமூடியை கழற்றிவிட்டு கடினமாகப் பார்த்தவள், “என்ன விஷயமா வந்தீங்க?” என்று கடுப்பாக, மதியழகி கணவன் முகத்தைப் பார்க்க, “ம்ம்ம் சொல்லுங்க… என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்க” என்று எரிச்சலானாள். “இல்ல… முகுந்தனை ரிலீஸ் பண்ற விஷயமா?” என்று தயங்கியபடி சேஷாத்திரி மெதுவாக ஆரம்பிக்க, “நினைச்சேன்” என்று உதட்டைச் சுழித்தவள், “அவன் இப்போ வெளியே வந்து என்ன கிழிக்க போறான்… உள்ளேயே இருக்கட்டும்… அப்புறமா பார்த்துக்கலாம்” என்றவள் அலட்சியமாகப் பதிலுரைக்க மதியழகியின் முகம் கோபத்தில் சிவந்தன.  “என்ன பேசுற நீ? அவன் செஞ்ச தப்புக்கான தண்டனைக்குத்தான் ஆறு வருஷம் ஜெயில இருந்துட்டான் இல்ல… இனிமேயும் அவன் எதுக்கு ஜெயில இருக்கணும்” என்று பொங்க, “மதி… நீ பொறுமையா இரு… நான் பேசுறேன்” என்று மனைவியை அடக்க துர்கா அலட்சிய பாவனையோடு அவர்களை பார்த்து,  “முகுந்தனை வெளியே எடுக்க அபராத தொகை ரெடி பண்ணிட்டீங்களா?” என்று கேட்டாள். “இல்ல… வடபழனில இருக்க கல்யாண மண்டபத்தை விற்கலாம்னு விலை பேசி இருக்கோம்… வித்துட்டவுடனே பணத்தை ரெடி பண்ணி கட்டிடலாம்னு” என்றவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இடைநிறுத்தியவள், “பணத்தை ரெடி பண்ண விடமாட்டேன்… நீங்க என்ன குட்டிக் கரணம் அடிச்சாலும் உங்களால அந்த கல்யாண மண்டபத்தை விற்க முடியாது… விற்கவும் விட மாட்டேன்… உங்க பையனை வெளியே எடுக்கவும் விட மாட்டேன்” என்று திமிராக பேசியவளை சேஷாத்திரி அதிர்ச்சியாக பார்த்தார். மதியழகி அந்த நொடியே ரௌத்திரமானார். “என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல… என் பொண்ணு பேர்ல நீ நடிச்சிட்டு இருக்கன்னு மட்டும் நான் வெளியே சொன்னன்னு வை” என்று மிரட்ட, துர்கா சற்றும் அசராமல் நக்கலாக சிரித்துவிட்டு, “என்னன்னு சொல்லுவீங்க… உங்க பொண்ணு நந்தினி பேர்ல நான் நடிக்கிறேன்னு சொல்லுவீங்களா? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு நீங்க இந்த உண்மையை சொன்னதும் மக்கள் எல்லோரும் நம்பிடுவாங்களா? சரி நான் நந்தினி இல்லைனா உண்மையான நந்தினி யாருன்னு மக்கள் கேட்பாங்களே? அதுக்கு என்ன சொல்லுவீங்க? நீங்க நந்தினியோட சேர்ந்து எடுத்துக்கிட்ட பேமிலி போட்டோஸ் ஏதாச்சும் உங்ககிட்ட இருக்கா?” என்று கேட்டவள், மேலும் அவளே பதிலும் உரைத்தாள்.  “கண்டிப்பா இருக்காது… ஏன் னா நீங்க அவளை உங்க குடும்பத்துல ஒருத்தியாவே நடத்தல… அதனால அப்படி எந்த போட்டோவும் உங்ககிட்ட இருக்க வாய்ப்பு இல்ல” என்றவள் மேலும், “ஒரு வேளை டி என் ஏ டெஸ்ட் எடுத்து நான் நந்தினி இல்லன்னு ப்ரூவ பண்ணுவீங்களோ?… ஆனா அதுலயும் சிக்கல் இருக்கே… நந்தினி உங்க தத்து மகன்னுதானே நீங்க ஊரெல்லாம் சொல்லி நம்ப வைச்சு இருக்கீங்க… அது பொய்யின்னு ஆகிடுமே மதி ம்மா… அப்புறம் எப்படி டெஸ்ட் எடுத்து ப்ரூவ பண்ணுவீங்க?” என்று எகத்தாளமாக கேட்டாள்.  மதி ஊமையாக நிற்க துர்காவே தொடர்ந்து, “இன்னொரு வழி இருக்கு மதி ம்மா… நந்தினி உங்க தத்து மக இல்ல… கல்யாணத்துக்கு முன்னாடி அவ உங்களுக்கும் எவனுக்கோ பிறந்த மகன்னு உண்மையை ஒத்துக்கிட்டா வாயிப்பிருக்கு” என, மதியழகி விக்கித்து போய் நின்றார். அவர் வாயை மூடிக் கொண்டு அழத் தொடங்க துர்கா அலட்டி கொள்ளாமல், “போங்க… உங்களால என்னை என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க… என்னால என்ன முடியுமோ நான் பண்றேன்… இப்ப கிளம்புங்க” என்றாள். சேஷாத்திரி பதட்டமாக, “மதி பேசுனதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்… ப்ளீஸ் முகுந்தன் வெளியே வரதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க… நீங்க நினைச்சாத்தான் அவன் வெளியே வர முடியும்…. ப்ளீஸ்” என்று கையெடுத்துக் கும்பிட, துர்கா முகவாயைத் தடவியபடி யோசித்தவள், “ம்ம்ம்… முகுந்தன் வெளியே கொண்டு வந்திரலாம்… ஆனா இப்ப கொஞ்ச நாளாவே அவன் லூசு மாதிரி பேசிட்டு இருக்கான்னு ஜெயிலர் சொன்னாரு? தேர்தல் நேரத்தில அவனை வெளியே கொண்டு வந்து அவன் ஏதாச்சும் லூசுத்தனமா உளறி வைச்சுட்டானா? ரொம்ப ரிஸ்க்கு அதனால தேர்தல் முடியட்டும்… முகுந்தன் வெளியே வர நான் ஏற்பாடு பண்றேன்… ஆனா அப்பவும் அவன் வெளியே வந்து என்னை பத்தி ஏதாச்சும் வாயை விட்டான்… அவன் கதையை முடிச்சிட்டு போயிட்டே இருப்பேன்” என்று கடுமையாக எச்சரித்தவளை அவர்கள் இருவரும் அரண்டு போய் பார்த்தனர். முதல் முதலில் சேஷாத்திரிக்கும் மதியழகிக்கும் வர்மாதான் துர்காவை அறிமுகப்படுத்தினார்.  “இனிமே இவதான் உங்க பொண்ணு நந்தினி… அப்படித்தான் நாம மக்களை நம்ப வைக்க போறோம்” என்ற போது வேறுவழியில்லாமல் அவர்கள் இருவருமே சம்மதிக்க வேண்டியதாகப் போயிற்று. முகுந்தன் ஊழல் வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற நிலையில் சேஷாத்திரி மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கிக் கொண்டார். அறிவழகன் உடலை பதப்படுத்தி வைத்திருந்து கிட்டத்தட்ட முப்பது நாட்கள் அவர் உடல்நிலை கவலைக்கிடம் என்று மக்களை ஏமாற்றியதெல்லாம் உச்சக்கட்ட நாடகங்கள். ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் துர்காவை நந்தினியாக மாற்றி மக்கள் முன்னே கொண்டு வந்து நிறுத்திய போது மதியழகிக்கும் சேஷாத்திரிக்கும் கூட நம்ப முடியாத அதிர்ச்சிதான். அப்போது கூட துர்காவின் அப்பாவி முகத்தைப் பார்த்து ஏமாந்துவிட்டார்கள். அவளை சாதாரணமாக எடைப்போட்டுவிட்டார்கள். அடுத்தடுத்து அவளை முன்னிறுத்தி வர்மா செய்த சூட்சமங்கள் எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியைக் கிளப்பியது. அவளை முதலமைச்சராக அறிவித்த போது கூட இதெல்லாம் எப்படிச் சரிப்பட்டு வரும் என்றுதான் தோன்றியது. ஆனால் துர்கா விஷயத்தில் அவர்கள் கணிப்பெல்லாம் முற்றிலும் தப்பாகிப் போனது. துர்கா பதவிக்கு வருவதில் முகுந்தன் பெரிய தடையாக நின்றதால் அவன் மீதான குற்றத்தை நிரூபித்து சிறைக்கு அனுப்பிவிட்டார் வர்மா. முகுந்தனைக் காப்பாற்ற முயன்றால் சேஷாத்திரியின் பதவியும் பறிபோகும். வேறுவழியில்லாமல் வர்மா சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் தலையாட்ட வேண்டியதாகப் போனது.   சேஷாத்திரி அன்றிலிருந்து பல் பிடுங்கிய பாம்பானார். அவரின் அரசியல் வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்க தொடங்கியது. இதற்கிடையில் அவரின் இளைய மகன் கிருஷ்ணன் சினிமா படம் எடுக்கிறேன் பேர் வழி என்று அவர் சொத்தையெல்லாம் கரைத்தான். பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாது போதை பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிந்து போனான். அவர் குடும்பம் நிலைகுலைந்து போன நிலையில் அவராகவே அரசியல் வாழ்க்கையை விட்டு ஒதுங்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.  “எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்… நான் சொன்னதை மட்டும் செஞ்சா போதும்” என்ற வர்மாவின் வார்த்தையை நம்பியதால் வந்த நிலை. மெது மெதுவாகத் தேகத்தைச் சுற்றிக் கொண்டு இரத்தம் சதை எலும்புகளை எல்லாம் உருக்கி பிழிந்து உணவாக உட்கொள்ளும் மலை பாம்பை போலத் தமிழகத்தை தன் வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தது வர்மா என்ற மலைப்பாம்பு. சேஷாத்திரியும் மதியழகியும் தோற்றுப் போன மனநிலையோடு அங்கிருந்து புறப்பட துர்கா கடுப்பாக தலையிலடித்து கொண்டாள். “இருக்கிற டென்ஷன் போதாது… இதுங்க வேற… ஆ… தலை வலிக்குதே” என்று நெற்றியை அழுத்தி கொண்டவள், “மலர்… கொஞ்சம் தைலம் எடுத்துட்டு வந்து மசாஜ் பண்ணி விடு” என்று தன் உதவியாளரை அழைத்துவிட்டு அறையில் சென்று படுத்துக் கொண்டாள். மிதமாகத் தலையைப் பிடித்துத் தேய்த்துவிட்ட மலரிடம், “இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்கு… ஆனா தூக்கமே வர மாட்டேங்குது” என்று முனகவும், “மைல்டான சாங்க்ஸ் போட்டுவிடுறேன் மேடம்… அப்படியே கேட்டுகிட்டே கண்ணை மூடுங்க…தூக்கம் வரும்” என்றாள். “ம்ம்ம் ஒகே” என்றவள் சொன்னதும் மலர் இசைப்பானில் மிதமான பாடல்களை ஒலிக்கவிட்டுச் சென்றாள். பாடல்களைக் கேட்டுக் கொண்டே படுத்திருந்தவளுக்கு மனம் லேசாக அமைதியடைய மெல்ல கண்களை மூடி கொண்டாள். “எனக்கு தூக்கமே வரல… நான் உங்க மடில படுத்துக்கிறேன்… நீங்க பாட்டு பாடுங்க… நான் அப்படியே தூங்கிடுறேன்” என்றவள் சொல்ல, “குழந்தையாடி நீ… எழுந்திரு முதல” என்றவன் மிரட்ட, “மாட்டேன்” என்று அவள் அவன் மடியில் தலைசாய்த்துக் கொண்டாள்.  “ஏய் விளையாடுறியா… எனக்குப் படிக்கிற வேலை இருக்கு… எழுந்திரு துர்கா” என்று பாரதி கண்டிப்பாகச் சொல்ல, “ப்ளீஸ் ப்ளீஸ்… ப்ளீஸ் ப்ளீஸ்… ஒரே ஒரு பாட்டு” என்றவள் கெஞ்சவும் அவன் புன்னகைத்து அவள் தலை தடவிக் கொண்டே பாட்டு பாட, அவள் அவன் குரலில் கரைந்து நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். சட்டென்று இடையூறாக வேறெதோ ஒலி இடையிட்டதும் தூக்கம் களைந்து எழுந்தவளுக்கு மீண்டும் போன தலைவலி வந்துவிட்டது. அருகிலிருந்த தன் கைப்பேசியின் அழைப்பு மணி சத்தம்தான் அந்த இடையிட்ட ஒலி என்பது புரிய, அதனை எடுத்து தூள் தூளாக நொறுக்கி விடலாம் என்று கோபமாக வந்தது. அவள் தலையை உலுக்கியபடி எழ உறக்கத்தில் கண்ட காட்சி நினைவுக்கு வந்தன. அந்த நொடியே நிமிர்ந்து அமர்ந்தவளுக்கு பாரதியின் குரல் இன்னும் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பது போல ஒரு பிரமை! “கனவா இருந்தா பாட்டு சத்தம் இப்போ நின்னு போயிருக்கனும் இல்ல” என்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அந்த இசைப்பான் (ம்யூசிக் சிஸ்டம்) வழியாகக் கசிந்த அவன் குரலைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. “மனமே மனமே எழுவாய் வீழ்ந்த நொடிகள் ஒவ்வொன்றும் தோல்வியின் படிகள்தான் துவண்டு போகாதே… சரிந்து சாயாதே… வானத்தின் எல்லைகளை முடிவென்று எண்ணாதே எத்தனை தூரமெனத் துவண்டு தேங்காதே உன் மீதும் விழும் அடிகள்தான் உன்னை செதுக்கும் உளிகள் பயணிக்கப் பாதைகள் தேவை இல்லை… பாதங்கள் போதும் மனமே மனமே எழுவாய் வீழ்ந்தாலும் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் வீறு கொண்டு எழுவாய்” அந்த இசைப்பானுக்கு மிக நெருக்கமாகச் சென்று செவியை வைத்துக் கேட்டவளுக்கு, “இது பாரதியே எழுதி… இசையமைத்து பாடுன பாட்டாச்சே… இந்த குரலும் அவனோடதுதான்… இதெப்படி?” என்று பதட்டமானாள். அவள் இதயத்துடிப்பு வேகமாக அடிக்க துவங்கியது. அவளை ஒரு காலத்தில் அமைதியாக நித்திரையில் ஆழ்த்திய அதே குரல் அவளை இனி உறங்க விடாமல் செய்ய போகிறது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா