மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilkilla Vithigal Avan - E36Post ReplyPost Reply: Vilkilla Vithigal Avan - E36

Quote from monisha on July 27, 2023, 10:33 AM

36
துர்காவைப் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்தே சேஷாத்திரியின் மனம் வேதனையில் புழுங்கியது. அவரின் ஆழ்ந்து மௌனத்திற்குள் கொந்தளிக்கும் கடல் போல பழைய நினைவுகள் அலைமோதின. அவர் ஒரு ஞானியைப் போலச் சூனியத்தை வெறித்தப்படி வீற்றிருக்க, மதியழகி உள்ள குமுறலோடு துர்காவைத் திட்டி தீர்த்தபடி இருந்தார்.  “அந்த நந்தினி பிசாசு செத்து ஒழிஞ்சிட்டான்னு பார்த்தா அதே பேரை வைச்சுட்டு இன்னொருத்தி நம்ம உயிரை எடுக்குறா? நந்தினிங்குற பேர்லையே சனியன் இருக்கு போல… நான் சாகுற வரைக்கும் அந்த பேரு என்னை நிம்மதியா விடாது” என்று மதியழகி மேலும் கடுப்பில் புலம்ப, “இப்போ எதுக்கு இந்த பிரச்சனையில நந்தினியை இழுக்குற?” என்று கேட்டு சேஷாத்திரி மனைவியை முறைத்தார். “அவதான் எல்லா பிரச்சனைக்கும் முக்கிய காரணம்… முகுந்தன் ஜெயிலுக்கு போனது கூட அவளாலதான்… அவளை திட்டாம” என்று மதியழகி கோபமாகச் சீறவும் இடைமறித்தவர், “செத்து போனவளை பத்தி இப்படி பேசுறது தப்பு மதி… என்னதான் இருந்தாலும் அவ உன் வயித்துல புறந்தவ” என்று நிதானமாக எடுத்துரைத்தார். “அப்படி மட்டும் சொல்லாதீங்க… அந்த சனியன் ஏன்டா என் வயித்துல பிறந்துச்சுன்னுதான் நான் வருத்தப்படாத நாளே இல்ல… சனியன் சனியன்… நான் சுயநினைவுல இல்லாத சமயத்துல எவனோ ஒரு பொறுக்கி நாய் என் வாழ்க்கையை சீரழிச்சிட்டான்… அவன் செஞ்ச தப்புக்கு நான் அவமானப்படுறேன்… அசிங்கப்படுறேன்… இன்னைக்கு கூட அந்த துர்கா என்ன பேச்சு பேசுனா பார்த்தீங்க இல்ல… சை! எனக்கு அப்படியே நாண்டுக்கிட்டு சாகலாம் போல இருந்துச்சு…. அந்த சனியன் வயித்துல இருக்கும் போதே கொன்னு போட்டிருந்தா எனக்கு இந்த அவமானம் அசிங்கமெல்லாம் வந்திருக்குமா சத்தியமா சொல்றேன்… அவ செத்துட்டான்னு நான் உண்மையிலேயே சந்தோஷப்பட்டேன்… ஆனா திரும்பவும் அந்த நந்தினிங்குற பேரை வைச்சுட்டு இந்த துர்கா செய்ற அட்டூழியம் தாங்கல எல்லாமே அந்த நந்தினியாலதான்… நமக்கு வர பிரச்சனைக்கு எல்லாம் அவதான் காரணம்” என்று மதி உணர்ச்சி பொங்க பேசிய அதேநேரம் சேஷாத்திரி, “நந்தினி எதுக்கும் காரணம் இல்ல… நான்தான் காரணம்… நான்தான் எல்லாத்துக்கும் காரணம்… நம்ம பசங்க வாழ்க்கை அழிஞ்சதுக்கும் நான்தான் காரணம்” என்று கத்த தொடங்கினார்.  மதியழகி மிரண்டு பார்க்கச் சேஷாத்திரியின் விழிகளில் கண்ணீர் தளும்பியது. “மிருகம் கூட தான் பசிக்கு தன்னோட சொந்த குட்டியை சாப்பிடாது… ஆனா நான் என் அரசியல் பசிக்கு என் சொந்த மகளோட வாழ்க்கையை பலியாக்கிட்டேன்… கூட பிறந்தவளை கொல்ற பாவத்தை நம்ம மகனை செய்ய வைச்சுட்டேன்… எல்லாமே என்னாலதான்… எல்லாத்துக்கும் நான்தான் காரணம்” என்றவர் பொறுமி வேதனையுற, “என்னங்க சொல்றீங்க… எனக்கு எதுவும் புரியல” என்று மதியழகி குழம்பினார். “நந்தினி நம்ம மக… உனக்கும் எனக்கும் பிறந்த மக மதி” என்றவர் சொல்லிக் கதறி அழ, மதியழகி அதிர்ந்து நின்றார். அரசியலில் பேரும் புகழும் அடைய சேஷாத்திரி பாரபட்சமின்றி பலரின் வாழ்க்கையை பலி கொடுத்திருக்கிறார். அப்படி பலி கொடுத்தவர்கள் பட்டியலில் அவரது மனைவியான மதியழகியும் அடக்கம்! புகழும், பணமும் பெருகி உச்சாணி கொம்பில் நிற்கும் போது யாருக்கும் தான் செய்த பாவ கணக்குகள் நினைவுக்கு வருவதில்லை. வீழ்ந்து சரியும் போதுதான் அவை யாவும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வரும். சேஷாத்திரிக்கும் அப்படித்தான் நினைவு வந்தது. இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த நந்தினியின் பிறப்பு ரகசியத்தை இன்று தன் மனைவியிடம் வேதனை தாளாமல் போட்டு உடைத்தார். தான் சுமந்து பெற்ற மகளையே தாய் வெறுக்கும் கொடூரம் வேறு எங்குமே நிகழாது. ஒரு வகையில் அதற்கும் தான்தான் காரணம் என்று யோசித்த போது சேஷாத்திரியின் உள்ளம் வெதும்பியது. கடந்த காலங்களில் அவர் செய்த பாவத்தின் விளைவுகளை அவர் இன்று அனுபவிக்கிறார். பெற்ற மகளுக்காகத் தந்தையாகக் கண்ணீர் கூட வடிக்க முடியாத நிலையில் தவிக்கிறார். தான் செய்த பாவங்களை மறைக்க மேலும் மேலும் பாவங்கள் செய்திருக்கிறார். அறிவழகனை தன் குடும்பத்தைவிட்டு பிரித்து தனித்து நிற்கச் செய்ததும் இந்த இரகசியத்தை மறைக்கத்தானே! அறிவழகனுடன் நண்பனாக இருந்த போதும் சேஷாத்திரிக்கு அரசியல் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கட்சியில் பெரிதாக மதிப்பும் இல்லை. கொக்கு இரைக்காகக் காத்திருப்பது போலச் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த போதுதான் மதியழகி அவர் கண்ணில்பட்டாள்.  கல்லூரி நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில் குடிபோதையில் மதி கிறங்கி இருந்ததைப் பார்த்தார். மதியழகிதான் தன் அரசியல் வாழ்க்கைக்கான கடைசி வெளிச்சம் என்பதை முடிவு செய்தவர் மதிக்கு தெரியாமல் அவளை பலாத்காரம் செய்துவிட்டார். போதையிலிருந்து விழித்து பார்த்தவளுக்குப் பேரதிர்ச்சி! இரவு நடந்தது எதுவும் அவளுக்கு நினைவிலில்லை. போதையிலிருந்து விழித்த மதியழகி தன் நண்பர்களை எல்லாம் சந்தேகப்பட்டாள். பைத்தியம் பிடித்தவள் போல எல்லோரிடமும் சண்டையிட்டாள். வீட்டில் யாரிடமும் இது பற்றி சொல்லாமல் மறைத்துவிட்டாள். ஆனால் விதி ஒரு வகையில் சேஷாத்திரிக்கு சாதகமாக அமைந்தது. மதியழகி கர்ப்பமானதும் அவளுக்கு வாழக்கை கொடுப்பது போல அவர் ஒரு நாடகத்தை நடத்தித் தன் அரசியல் அரங்கேற்றத்தை நடத்தி கொண்டதும் முழுக்க முழுக்க அவர் பின்னிய சூழ்ச்சி வலை என்பது யாருக்கும் தெரியாது.  அதன் பிறகு சேஷாத்திரி தீபம் கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கிருந்து சுமுகமாக சென்றிருந்த அவரின் அரசியல் பயணத்தில் நந்தினியின் பிறப்பு ரகசியம் மீண்டும் அறிவழகனின் மனைவி வித்யாவின் மூலமாக விஸ்வரூபம் எடுத்தது. அன்று நந்தினியும் பாரதியும் சந்தோஷமாக மேல் மாடியில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்கள். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சேஷாத்திரியிடம் பேச வித்யா அழைக்கவும் அவர்கள் இருவரும் மாடிக்கு வந்தனர். “சொல்லுங்க… என்ன விஷயம்?” “மதியோட காலேஜ் ப்ரெண்ட் ராகுல் ரெண்டு நாள் முன்னாடி சூப்பர் மார்கெட்ல என்னை பார்த்து பேசுனான்” என்று வித்யா கூறிவிட்டு “அவன் இந்த போட்டோவை என்கிட்ட காண்பிச்சான்” எனவும், “என்ன போட்டோ?” என்றவர் சற்றே தயக்கத்தோடு வினவினார். வித்யா சேஷாத்திரி முன்னே அந்த புகைப்படத்தை உயர்த்தி காட்டினார். அந்த புகைப்படத்தில் எல்லோரும் சந்தோஷமாக ஆடி கொண்டிருக்க, அவர்களின் பின்புறம் மயக்கத்திலிருந்த மதியை சேஷாத்ரி தோளில் சாய்த்து அழைத்துச் சென்ற காட்சி மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தது. “போதைல மதி தடுமாறும் போது நான் தாங்கி பிடிச்சேன்… இதுல என்ன இருக்கு?” என்றவர் சாதாரணமாகக் கூறினாலும் அவரிடமிருந்த தடுமாற்றத்தை மிக துல்லியமாக கவனித்த வித்யா, “சமாளிக்காதீங்க… இந்த போட்டோவை எடுத்தது ராகுலோட பர்த்டே பார்ட்டில… மதி கெட்டு போனதும் அன்னைக்கு அதே ஹோட்டலிலதான் உங்க நல்ல நேரம் இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் இந்த போட்டோவை அவன் டெவலப் பண்ணி பார்த்திருக்கான்” என்றவர் அழுத்தமாக உரைக்க, “இப்போ இந்த போட்டோவை வைச்சு என்ன சொல்ல வரீங்க… நான்தான் மதி வாழ்க்கையை கெடுத்தேனா?” என்று ஆவேசமாகக் கேட்டார். “அப்படி யோசிச்சு இருந்தா இந்த போட்டோ என் கைக்கு வந்ததுமே என் வீட்டுகாருக்கிட்ட நான் காட்டி இருப்பேன்” என்றதும் சேஷாத்திரியின் முகம் இருளடர்ந்து போனது. “ஆனா நான் காட்டல… அவசரப்பட்டு உங்க மேல பழியை போட கூடாதுன்னு முடிவு பண்ணிதான் நான் அமைதியா இருந்தேன்… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் டீடையல விசாரிச்சிட்டுதான் உங்ககிட்ட கேட்குறேன்… உண்மையை நீங்களா ஒத்துக்கிட்டீங்கன்னா” என்று வித்யா கேட்ட நொடி, “ஆமா நான்தான் மதியை கெடுத்தேன்… இப்ப அந்த உண்மை தெரிஞ்சு என்ன மாறிட போகுது… அதான் நான் மதியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்ல” என்றவர் அலட்சியமாகக் கூற,  “அப்போ மதியை கெடுத்துட்டு நீங்களே அவளுக்கு வாழ்க்கை கொடுக்குற மாதிரி டிராமா பண்ணி இருக்கீங்களா?” என்றார் வித்யா கோபமாக! “நான் மதியை கல்யாணம் பண்ணிக்கிட்டதோட இந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு… அந்த போட்டோவை கிழிச்சு போடுங்க” என்றார். “முடியாது… நீங்க உங்க அரசியல் ஆதாயத்துக்காக மதியோட வாழ்க்கையைப் பலி கொடுத்திருக்கீங்க” “நான் மதியை நல்லாத்தான் பார்த்துக்கிறேன்… அது உங்களுக்கும் தெரியும்” “இருந்தாலும் நீங்க செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு” என்று வித்யா அழுத்தமாகக் கூற,  “சரி… நான் செஞ்சது பெரிய தப்புதான்… ஆனா இப்போ இந்த விஷயத்தை பெருசாக்கி எங்க வாழ்க்கையை கெடுத்துடாதீங்க… நான் மதியை சந்தோஷமாதானே வைச்சு இருக்கேன்… அவளும் சந்தோஷமாதான் இருக்கா… இந்த உண்மையை சொல்லி எங்க வாழ்க்கையில தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க… ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்குறேன்” என்றவர் மிக பணிவாக இறங்கி வந்தார். “இப்போ கூட உங்க வாழ்க்கையில குழப்பம் வந்திரும்னுதான் யோசிக்கிறீங்க… கொஞ்சமாச்சும் நந்தினியை பத்தி யோசிக்கிறீங்களா?” “அவளுக்கு என்ன? அவ நல்லாதான் இருக்கு… அவளுக்கு நான் செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சிட்டுதான் இருக்கேன்… இனிமேயும் செய்வேன்” “படிப்பும் வசதியும் கொடுத்தா மட்டும் போதுமா? அவளுக்கு கிடைக்க வேண்டிய தாய் பாசம் கிடைக்கலயே… அவளுக்கான அங்கீகாரம் கிடைக்கலேயே… அந்த சின்ன பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்கலேயே… இன்னும் கேட்டா இந்த வீட்டுல இருக்க வேலைக்காரங்களை விட கேவலமா அவ நடத்தப்படுறா… இது உங்களுக்கும் தெரியும்தானே” சேஷாத்திரியால் இந்த கேள்விக்குப் பதில் சொல்ல இயலவில்லை. அவர் குற்றவுணர்வோடு தலையை குனிந்து கொள்ள, “இதுவரைக்கும் நடந்தது எல்லாம் போகட்டும்… நீங்க ஏன் மதிக்கு இப்படி செஞ்சீங்க… எதுக்காக செஞ்சீங்கங்குறதை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல… எனக்கு நந்தினி சந்தோஷமா இருக்கணும்… அவளுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கணும்… அதுக்கு இந்த உண்மையை நீங்க மதிக்கிட்ட சொல்லியே ஆகணும்… ஒரு வேளை நீங்க சொல்லல… நான் இந்த உண்மையை என் கணவர்கிட்ட சொல்லிடுவேன்… அப்புறம் உங்க அரசியல் வாழ்க்கையே அஸ்தமிச்சிடும்” என்று மிரட்டலாகச் சொல்லிவிட்டு வித்யா படியிறங்கி சென்றுவிட்டார். “உண்மையை சொல்லுடுவியா? உன்னை உயிரோட விட்டாத்தானே” என்று அவர் கோபமாகப் புலம்பிய அதேநேரம் மாடியின் படிக்கட்டுகள் பின்னே ஒளிந்து கொண்டிருந்த பாரதி அவரை உஷ்ணமாகப் பார்த்திருந்தான். அவன் சிறுவனாக இருந்தாலும் மிக முதிர்ச்சியாக யோசிக்க கூடியவன். அவர்கள் பேசியவற்றை அவனால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.  “நீங்க இவ்வளவு மோசாமானவருன்னு நான் சத்தியமா நினைக்கல மாமா… எங்க அம்மாவை கொன்னுடுவன்னு சொல்றீங்களா? நான் அப்பாக்கிட்ட சொல்றேன்” என்று அவன் சீற்றமாக மொழிய, அவர் கொலை வெறியுடன் பார்க்கவும் அங்கிருந்து ஓடிவிடப் பார்த்தான்.  ஏற்கனவே மிகுந்த கோபத்திலிருந்தவர் பாரதி சொன்ன வார்த்தையில் பொறுமை இழந்து அவன் பின்னங்கழுத்தைப் பிடித்து வெறியோடு தள்ளிவிட, அவன் வேகமாகப் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டு குருதி பெருக்கெடுத்தது. பாரதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். வித்யா மனதளவில் உடைந்து நொறுங்கிப் போனார். மலர் கண்காட்சிக்கு உதகை வரை சென்றிருந்த அறிவழகன் விஷயமறிந்து சென்னை திரும்பினார். பாரதியின் தலையில் ஏற்பட்ட பலமான காயத்தால் அவன் ஆபத்தான கட்டத்தில் இருந்தான். அவன் கண் விழிக்கவே இல்லை.  இதனால் அறிவழகனின் மொத்த கோபமும் மனைவியின் புறம் திரும்பியது.  “பையனை பார்த்துக்கிறதை விட அப்படியென்னடி உனக்கு” என்று பொங்கியவர், வித்யா சொல்ல வரும் எதையும் காது கொடுத்து கூட கேட்கவில்லை. “உனக்கு எப்பவும் கச்சேரி பாட்டுதான்… அருளை பத்தியெல்லாம் கொஞ்சம் கூட அக்கறையே இல்லையில்ல” “என்ன? இப்படி பேசுறீங்க? நான் அவனை நல்லாத்தான் பார்த்துக்கிறேன்” என்று வித்யா பேச துவங்கவும், “நீ பார்த்துக்கிட்ட லட்சணம் போதும்… இனிமே நானே பார்த்துக்கிறேன்… நீ உன் பாட்டு கச்சேரி அதையே பாரு” என்றார். “நீங்க மட்டும் எப்படி பார்த்துப்பீங்க… மாசத்தில் பாதி நாள் உங்களால வீட்டுலையே இருக்க முடியாது” இவ்வாறாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. ஏற்கனவே இருவருக்கும் இடையிலிருந்த மனஸ்தாபம் பூதாகரமாக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் சேஷாத்திரி இன்னும் இன்னும் அவர்கள் பிரச்சனைக்குத் தூபம் போட்டுவிட்டார். இந்த நிலையில் நந்தினி தன் அத்தையிடம், “பாரதியை அப்பாத்தான் தள்ளி விட்டுட்டாரு அத்தை… அப்பாத்தான் தள்ளிவிட்டுட்டாரு… நான் பார்த்தேன் அத்தை… நான் பார்த்தேன்” என்றாள். வித்யா அதிர்ந்தே போனார். இந்த உண்மையை நந்தினி உறைத்தால் யாருமே நம்ப மாட்டார்கள். ஒரு வேளை அவள் இவ்வாறு சேஷாத்திரியை பற்றி சொன்னால் அந்த சிறு பெண்ணுக்காக எதிராகவே திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. வித்யாவிற்கு ஓரளவு நடக்கும் சூழ்ச்சிகள் புரிய துவங்கின சேஷாத்திரியிடம் வித்யா சீற்றமாக சண்டையிட்டார். “ஏன் பாரதியை மாடில இருந்து தள்ளிவிட்டீங்க?” “என்னை பத்தின உண்மையை நீங்க சொல்லிட கூடாது இல்ல?” என்றவர் அலட்சியமாகப் பதில் கூற, “அவனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்… அவனை ஏன் இந்த பிரச்சனைக்குள்ள இழுக்குறீங்க” “எனக்கு இந்த உண்மை யாருக்கும் தெரிய கூடாது… அப்புறம் அந்த போட்டோ நெகட்டிவ் எல்லாம் எனக்கு வேணும்… இல்லைனா உங்க பையன் உயிரோடவே இருக்க மாட்டான்” “நான் எல்லாத்தையும் தந்துடுறேன்… பாரதியை எதுவும் பண்ணிடாதீங்க… ப்ளீஸ்… நான் இந்த உண்மையை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்…. சத்தியமா சொல்ல மாட்டேன்” அந்த நொடி ஒரு தாயாக மட்டுமே வித்யா சிந்தித்தார். “இன்னைக்கு பயத்துல நீங்க சொல்லாம விட்டுடலாம்… ஆனா எப்பவுமே அப்படி இருப்பீங்கன்னு சொல்ல முடியாது இல்ல” என்ற சேஷாத்திரி வித்யாவை கூர்ந்து பார்த்து, “நீங்களும் உங்க பையனும் அறிவழகன் கூட இருக்க கூடாது… எங்கயாவது போயிடுங்க… அறிவழகனை விட்டு பிரிஞ்சு போயிடுங்க… எந்த சந்தரப்பத்துலயும் நீங்களும் உங்க பையனும் திரும்பி வரவே கூடாது… அப்படி திரும்பி வந்தா உங்க பையனோட உயிருக்கு உத்தரவாதம் இல்ல… சொல்லிட்டேன்” என்று அவர் எச்சரிக்கை செய்துவிட்டு சென்றுவிட, பாரதி அடுத்த இரண்டு நாட்களில் கண்விழித்திருந்தான். அவனுக்கு தன் தாயை தவிர யாரையும் அடையாளம் தெரியவில்லை. தன் தந்தையின் முகம் கூட அவன் நினைவிலில்லை. சேஷாத்திரி மிரட்டியதை குறித்து வித்யா தீவிரமாகச் சிந்தித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார். இந்த அரசியல் சகதிகள் பொய் புரட்டு இது எதுவுமே தன் மகனுக்கும் தனக்கும் வேண்டவே வேண்டாம் என்று அவர் தீர்மானித்திருந்தார். பாரதியின் உடல் நிலை ஒரு வாரத்தில் குணமாகி சீராகிவிட, அவர் இரவோடு இரவாக தன் மகனை அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார். அவர் கணவனுக்கு விட்டு சென்ற கடிதத்தில், “என்னை தேடி கண்டுபிடிக்கிறது உங்களக்கு பெரிய விஷயமே இல்லன்னு எனக்கு தெரியும். ஆனால் என்னையும் என் மகனையும் எந்த காரணத்தைக் கொண்டும் தேடி வராதீங்கன்னு நான் உங்களைக் கெஞ்சி கேட்டுகிறேன். எனக்கும் என் பையனுக்கும் உங்களுடைய இந்த கேவலமான அரசியல் வாழ்க்கை வேண்டாம். எங்களை நிம்மதியா விட்டுடுங்க அப்படியும் எங்களை நீங்க தேடி வந்தா நீங்கதான் அசிங்கப்படுவீங்க. இந்த விபத்துல நடந்த ஒரே நல்ல விஷயம் கடவுள் பாரதியோட நினைவுகளை அழிச்சதுதான். என்னை தவிர வேற யாரையும் அவனுக்கு நினைவுல இல்ல. ஒரு வேளை நீங்க அவனைத் தேடி வந்தாலும் கூட அவன் உங்களை யாருன்னு கேட்பான். உங்க பையனே உங்களை யாருன்னு கேட்கிற அவமானம் உங்களுக்கு வேண்டாம்னு நினைக்கிறேன் இனிமே அவன் முதலமைச்சர் அறிவழகன் வாரிசு அருள்பாரதி இல்ல. வெறும் பாரதி. அவன் அப்படித்தான் வளருவான். நான் அவனை அப்படித்தான் வளர்ப்பேன்” அந்த கடிதத்தை படித்த அறிவழகனுக்கு வித்யாவின் மீதிருந்த வெறுப்பும் கோபமும் பன்மடங்கு பெருகியது. “பார்க்கிறேன்.. என் தயவில்லாம அவ எப்படி வாழுறான்னு நான் பார்க்கிறேன். அவளா என்னை தேடி வரவரைக்கும் நானா அவளை தேடி போக மாட்டேன்” என்று சூளுரைத்தவருக்கு மகனை பிரிந்த வருத்தம் உள்ளுர இருந்த போதும் அவருடைய ஈகோ அவரை இறங்கி போகவிடவில்லை. போதாக்குறைக்கு சேஷாத்திரியும் உடனிருந்து அவரை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தார். இப்போது யோசித்துப் பார்த்தால் சேஷாத்திரிக்கு தான் செய்த அனைத்து பாவங்களும் தனக்கே திரும்பியிருப்பதை அவரால் உணர முடிந்தது. பாரதியை தள்ளிவிட்டதை நந்தினி பார்த்ததிலிருந்த அவரை அவள் அடிமனதிலிருந்து ஆழமாக வெறுத்தாள். அவர் பாசமாக நெருங்கிய போதும் அவள் அவரை எதிரியாக மட்டுமே பாவித்தாள்.  வாழ்க்கையின் சுழற்சியில் நாம் செய்த பாவங்கள் நமக்கே ஒருநாள் திரும்பும். அன்று வித்யா இவரிடம் தன் மகனுக்காக மன்றாடியது போலவே இன்று அவர் முகுந்தனுக்காக துர்காவிடம் மன்றாடினார். அறிவழகனின் குடும்பத்தை அவர் நிலைகுலைத்தது போல இன்று அவர் குடும்பம் நிலைகுலைந்து போனது. நன்மையும் தீமையும் பிறர் தர வாரா. அவரவர்களின் செயல்களே அவரவர்களின் ஏற்ற தாழ்வுகளைத் தீர்மானிக்கின்றன.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா