மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E40Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E40

Quote from monisha on August 4, 2023, 12:37 PM

40
சரியாக மூன்று நாள்… எழுபத்து இரண்டு மணி நேரம்… காற்றோட்டமே இல்லாத அந்த இருளறைக்குள் துர்கா அடைந்து கிடந்தாள். அறைக்குள்ளிருந்து எந்த சத்தமும் எழும்பாததில், “மேடம்… மூணு நாளாகிடுச்சு… பாப்பா உள்ளே உயிரோட இருக்குமான்னு” என்று அந்த ஆசிரமத்தின் பணிப்பெண் பயத்தோடு தெரிவிக்கவும்,  “சாகட்டுமே… என்ன இப்போ… *******” என்று கோபமாக அந்த பெண் நிர்வாகி நிந்திக்க,  “எதுக்கும் திறந்து பார்த்துடலாம் மேடம்?” என்று பணிப்பெண் கூற,  “சரி போ… இந்தா சாவி” என்று அதனை எடுத்து தூக்கி போட்டாள்.  சாவியை எடுத்து அந்த இருளறையின் கதவை திறந்தாள். சடாரென்று அந்த இருளறைக்குள் வெளிச்சம் பரவியது.  ஆங்காங்கே பிசுபிசுப்பாக இரத்த கரைகள் தென்பட்டன. அவற்றை பார்த்ததும் அவன் நடுக்கமாக அவளை தேட, கால்களை மடித்து கொண்டு ஒரு ஓரமாக அவள் ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.  அவள் உயிரோடு இருக்கிறாளா என்று அவன் சந்தேகத்தோடு நடந்து சென்று அவள் அருகில் வந்து அமர்ந்து தோளை தொடவும், அவள் நிமிர்ந்து நோக்கினாள்.  முகம் அப்பட்டமான சோர்வை பிரதிபலித்தது. விழிகள் உள்ளே சென்றிருந்தது. அந்த பயங்கர இருளிலிருந்து திடீரென்று வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்கள் கூச மீண்டும் முகத்தை முழங்காலில் புதைத்து கொண்டாள்.  அந்த பணிப்பெண் உயிருடன்தான் இருக்கிறாள் என்று நிம்மதி பெருமூச்செறிந்துவிட்டு, “இனிமேயாச்சும் ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இரு” என்று அறிவுரை கூற, அந்த நொடியே அவள் உக்கிரமாக நிமிர்ந்தாள். கண்கள் கனலை கக்கின.  அவளது பார்வையின் கூர்மையில் அவன் சட்டென்று பின்வாங்க, அவனை ஆழ்ந்து முறைத்தவள் மெல்ல சுவற்றை பிடித்து கொண்டு நடக்க முடியாமல் அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.  அந்த பணிபெண்ணுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரும்பாலும் அந்த அறைக்குள் ஒரு நாள் அடைந்து கிடந்தாளோ மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள். அதுவும் இரண்டு நாள் இருந்ததற்கு ஒருத்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் இவள் மூன்று நாட்கள் நீராகாரம் இல்லாமல் காற்றோட்டம் இல்லாத இந்த இருட்டு அறையில் இருந்துவிட்டு இத்தனை சாதாரணமாக எழுந்து போகிறாள். அசாத்தியமான மனவலிமை இருந்தால் மட்டுமே முடிகிற காரியம்.  ஆச்சரியத்தில் தலையை உலுக்கி கொண்டவள் அப்போதே அந்த கொடூரத்தை பார்த்து அதிர்ந்தாள். அங்கிருந்த எலிகள் எல்லாம் மடிந்து கிடந்தன. கோபத்தில் அவற்றை எல்லாம் அவள் பிய்த்து எரிந்திருக்கிறாள்.  அந்த காட்சியை பார்த்து குமட்டியவள் அவசரமாக ஓடி சென்று, “மேடம் அந்த பொண்ணு” என்று மூச்சு வாங்க நிற்க,  “என்ன செத்துடுச்சா?” என்று அந்த பெண் நிர்வாகி மிக சாதாரணமாக கேட்டாள். அவளின் அந்த அலட்சியம் இந்த சமூகத்தில் எந்த ஆதரவும் இல்லாத பெண்களின் நிலைமையை அப்பட்டமாக எடுத்துரைத்தது.  “இல்ல மேடம்” என்று அந்த பணிப்பெண் நடந்தவற்றை விவரிக்க, அவளின் விழிகளும் பெரிதாகின. உடனடியாக துர்காவை சென்று பார்த்தாள். அவள் அப்படியே சோர்வாக தன் படுக்கையில் விழுந்து கிடந்தாள்.  அங்கிருந்த பெண்கள் அவளை பரிதபமாக பார்த்திருந்தனர்.  “மேடம்… பொண்ணுக்கு உடம்பு கொதிக்குது” என்று அங்கிருந்த பொறுப்பாளர் கூற,  “சாப்பிட கஞ்சி ஏதாச்சும் கொடுத்துட்டு… மாத்திரை கொடுங்க” என்று மீண்டும் அதே அலட்சிய தொனியில் கூறிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.  துர்கா உடல் நலம் தேறி எழுந்து கொள்ள முழுவதுமாக மூன்று நாட்களானது.  அங்கிருந்த பெண்களுக்கு அந்த இருளறையில் அவள் செய்த காரியம் காட்டு தீயாக பரவியிருந்தது. எல்லோரும் அவளை ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பார்த்தனர். அதேநேரம் அவளிடம் நெருங்கி சென்று பேசவும் யாரும் விழையவில்லை. ஆனால் அவளாக சென்று எல்லோரிடமும் பேசினாள்.  அந்த ஆசிரமத்தில் என்ன நடக்கிறது என்பதை அவள் பேசி தெரிந்து கொண்டாள். அங்கிருக்கும் பெண்கள் அவர்கள் விரும்பிய கல்லூரியில் படிக்க அல்லது நல்ல நிறுவனத்தில் வேலை வாங்க என்று நிறைய போராடி கொண்டிருந்தனர்.  தங்கள் வாழ்க்கையில் சொந்த காலில் நிற்கவும் இந்த மாதிரியான அசிங்கங்களை ஏற்று வாழ வேண்டியிருந்தது.  அதேநேரம் இங்கே நடக்கும் எதையும் வெளியே சொன்னால் அவர்களுக்குத்தான் ஆபத்து. இங்கே நடக்கும் அநியாயங்களில் மிக பெரிய அரசியல் தலைகளின் பங்கு இருப்பதால் காவல் துறையும் இந்த ஆசிரமத்தில் நடப்பதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி பிரச்சனை ஏதேனும் வந்தால் அதனை சரிக்கட்டும் விதத்தில் அவர்கள் சரி கட்டிவிடுவார்கள்.  அங்கிருக்கும் பெண்கள் பலரும் தங்களுக்குள்ளாகவே புலம்பி அழுது தீர்த்து கொள்வர். நல்ல வேலை கிடைத்து ஆசிரமத்தை விட்டு வெளியேறும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அசிங்கத்தை சொல்ல தயங்குவர். அப்படியே அவர்கள் சொன்னாலும் எந்த உபயோகமும் இல்லையென்று அவர்களுக்கு தெரியும்.  ஆதலால் அங்கிருந்த பெண்கள் எல்லோரும் இவற்றையெல்லாம் ஏற்று வாழ பழகிவிட்டிருந்தனர். அவர்களின் வேதனைகளை எல்லாம் கேட்டறிந்து கொண்டு துர்கா தீவிரமாக சிந்தித்தாள்.  அவள் எண்ணப்போக்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. யாரையும் நம்ப கூடாது. யாரை சார்ந்தும் வாழ கூடாது. நமக்கான பாதையும் நாமே வகுத்து கொள்ள வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று முடிவெடுத்தாள்.   இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் அவரவர்களின் தேவைகள் மற்றும் சுயநலங்கள் எனில் தானும் அப்படியே இருக்க வேண்டும். நாம் வாழ வேண்டுமென்றால் யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட கூடாது. புத்தருக்கு போதி மரம் போல துர்காவுக்கு அந்த இருளறை. அவள் அங்கே பெற்ற ஞானம்தான் வாழ்வின் அடுத்தடுத்த படிகளை கடக்க அவளுக்கு உதவியது. உச்சபட்ச சுயநலவாதியாக வாழ்ந்தால் மட்டுமே இந்த உலகில் வாழ முடியும்.  அதீத பயம்தான் தைரியத்திற்கான மூலாதாரம். தனக்குள் இருந்த தைரியத்தை அவளே உணர்ந்து கொண்ட தருணம் அது.  எத்தனை சிறிய ஜீவராசிகளும் இருளுக்குள் பலம் வாய்ந்ததாக மாறிவிடுகிறது. இருளுக்கான சக்தி அது. அந்த சிறு எலி கூட்டம் ராட்சனாக கொடூரனாகவும் தெரிந்ததன் காரணமும் அதுதானே! அன்றிலிருந்து உள்ளும் புறமும் அவள் பயங்கரமான இருளை நிரப்பி கொண்டாள். இந்த சமூகம் தனக்கு என்ன செய்ததோ அதனை இந்த சமூகத்திற்கு திருப்பி செய்ய வேண்டுமென்று சபதம் பூண்டாள்.  இங்கே நியாயமும் அநியாயமும் அவரவரின் கண்ணோட்டத்தை பொருத்து மாறுபடுகிறது. அவளுக்கு கிடைக்காத நியாயத்தையும் நீதியையும் அவள் வேறு யாருக்கும் வழங்குவதில்லை என்று அப்போதே முடிவெடுத்துவிட்டாள் .  இவையெல்லாம் அந்த இருளுக்குள் இருந்த ஒவ்வொரு நொடிகளிலும் அவள் கற்று கொண்ட பாடங்கள்… அன்றிலிருந்து துர்காவின் மனதில் மிக கொடூரமான இருள் மண்டியது.  அவள் அத்தகைய மனநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருந்த போதுதான் ஆசிரமத்து நிர்வாகிக்கு ஒரு இக்கட்டான நிலைமை வந்தது.  வியாசர்பாடி சங்கர் அலுவலக தொலைபேசிக்கு அழைத்து, “அன்னைக்கு அனுப்பினியே… அந்த பொண்ணு வேணும்னு தலைவர் கேட்குற” என்று கூற,  “யாரு சொல்ற… எந்த பொண்ணு?” என்றவள் புரியாமல் வினவினாள்.  “அதான் அந்த பொண்ணு… நல்ல வெள்ளையா அழகா இருந்துச்சு… பேர் கூட… ஆன் துர்கா” என்றவன் கூறவும், “அவளா… அவ வேணாம் சங்கரு… நான் வேற யாரையாச்சும் அனுப்புறேன்” என்றாள். “வேற யாரையாச்சுமா? அதெல்லாம் முடியாது… தலைவருக்கு அந்த பொண்ணுதான் வேணுமா… சும்மா பேசிட்டு இருக்காம அனுப்பி வை” என்று சொல்லி பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டான்.  துர்கா அன்று செய்த அளப்பரையை யோசித்து பார்க்கும் போதே அவளுக்கு கலக்கமாக இருந்தது. என்ன சொல்லி இப்போது துர்காவை அனுப்பி வைப்பது என்று தீவிரமாக சிந்தித்தவள் அங்கிருந்த பணிப்பெண்ணிடம் அவளை அழைத்து வர சொல்ல,  “இத பாரு… ஒழுங்கா நம்ம ஆளுங்க கூட போயிட்டு வந்திரு” என்க, “எங்கே?” என்று வினவினாள்.  “எங்கே ஏதுன்னு கேட்டுட்டுத்கான் போவியா… போய் ஒரு நல்ல ட்ரஸா போட்டுட்டு கிளம்பி வா” என்றாள்.  துர்கா அதன் பிறகு எதுவும் பேசாமல் உடனடியாக கிளம்பினாள். அந்த பெண் நிர்வாகிக்கு குழப்பமாக இருந்தது. இவள் ஏதாவது வில்லங்கமாக செய்து விடுவாளோ என்று அச்சம் கொண்டவள் சங்கரிடமும், “அந்த பொண்ணு கொஞ்சம் விவகாரமான ஆளு… பார்த்துக்கோ” எச்சரிக்கை செய்துவிட்டு அனுப்பி வைத்தாள்.  ஆனால் துர்கா அவள் நினைத்தது போல் எந்த வில்லங்கமும் விவகாரமும் செய்யவில்லை. அதேநேரம் இம்முறையும் அவளுக்கு பழச்சாறு பருக கொடுக்கப்பட்டது.  அவள் வேண்டாமென்று சொன்னாலும் அவர்கள் விடமாட்டார்கள் என்பதால் அதனை வாங்கி குடிப்பது போல பாவனை செய்தவள் அவர்கள் யாரும் பார்க்காத சமயம் அருகிலிருந்த பூஜாடியில் ஊற்றிவிட்டாள்.   “தலைவர் வந்துட்டு இருக்காரு… பாப்பாவை ரூமுக்கு அனுப்பி வையுங்க” என்று தன் ஆட்களிடம் கட்டளையிட்டான்.  அவளை அந்த பங்களாவின் மேல் மாடி அறைக்கு அழைத்து சென்றுவிட்டு அவள் மயங்கி விழுந்தது போல நடிக்கவும் அவளை அங்கிருந்த படுக்கையில் கிடத்தினர்.  அவர்கள் இருவர் அதன் பின் அவளை பற்றி பேசியபடி அங்கேயே நின்றிருந்தனர்.   “இந்த பொண்ணை பார்த்தாளே அப்பாவியா இருக்கு… இவளை போய் விவகாரம் வில்லங்கம்னு சொல்லிவிட்டுருக்கு” என்று ஒருவன் கூற,  “இரண்டு தடவை எல்லாம் யாரையும் தலைவர் கூப்பிட மாட்டாரே… இதென்ன புதுசா?” என்று மற்றவன் கேட்டான்.  “இந்த பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சாம்… பார்த்த இல்ல… என்னா கலரு… பக்கத்துல பார்க்கிற நமக்கே போதை ஏறது” “அதென்னவோ கரெக்ட்தான்… பிகரு செமையாத்தான் இருக்கு”  இவ்வாறாக இருவரும் உரையாடிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டனர். மூச்சை இழுத்து பிடித்து கொண்டிருந்தவர்கள் கதவு மூடும் சத்தம் கேட்ட நொடி மெல்ல விழிகளை திறந்து பார்த்துவிட்டு எழுந்தமர்ந்தாள்.  அவர்கள் பேசியதெல்லாம் யோசித்தபடி நிமிர்ந்தவளுக்கு படுக்கையின் பக்கவாட்டில் இருந்த ஆளுயர கண்ணாடியில் பிரதிபலித்த தன் தோற்றத்தை பார்க்க நேர்ந்தது.  எழுந்து சென்று அந்த கண்ணாடியின் முன் நின்று மேலும் கீழுமாக தன்னையே பார்த்தாள். அவள் பிறந்ததிலிருந்து ஏழ்மை அவளை துரத்தி கொண்டேயிருந்த காரணத்தால் இதுவரையில் இப்படி அவள் தன்னை பார்த்ததெல்லாம் கிடையாது.  அதற்கான நேரமும் சூழ்நிலையிலும் அவளுக்கு அமைந்ததும் இல்லை. மிக சிறிய கண்ணாடியில் தன் முகத்தை பார்த்ததோடு சரி. அப்போதும் கூட தான் அழகு என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு பெரிதாக வந்ததில்லை.  எல்லோரையும் ஈர்க்கவல்ல அழகு தன்னுடையது என்பதை உணர்ந்தவளுக்கு முதல் முறையாக தன் அழகின் மீது கர்வம் உண்டானது. இவையெல்லாம் தாண்டி தன்னுடைய பலமே தன் முகத்தில் பிரதிபலிக்கும் அப்பாவித்தனம்தான் என்பதையும் அவர்கள் பேசியதை வைத்து கணித்து கொண்டாள்.  கதவை திறக்கும் சத்தம் கேட்கவும் அவசரமாக சென்று படுக்கையில் படுத்து கண்களை மூடி கொண்டாள். இதயம் பந்தய குதிரையாக படபடக்க,   ‘யாரு அந்த தலைவன்… அவனை பார்க்க வேண்டும்’ என்ற ஆவல் மேலோங்கியிருந்தது அவளுக்குள்.  அவனுக்கு என்ன வயது இருக்க கூடும். அரசியல்வாதி என்றால் நிச்சயம் ஐம்பது அறுபது இருக்கும். இவ்வாறாக அவள் மனம் சிந்தித்திருக்கும் போதே உஷ்ணமாக அவளை தீண்டிய மூச்சு காற்றில் அவள் இதயம் அதிவேகமாக அடித்து கொண்டது.  கண்களை திறந்து அவனை பார்த்துவிட வேண்டுமென்று உள்ளிருந்து ஒரு குரல் அவளை உசுப்பிய போதும் அவளுக்கு தைரியம் வரவில்லை.  ஆனால் அவனுக்கோ அவள் தேகத்தை ஆட்கொள்ள வேண்டுமென்ற அவசரமே இருந்தது.  அவளை ஒரு ஜடப்பொருளை தன் தேவைக்கு ஏற்றார் போல இயக்கி கொண்டிருந்தவனை எண்ணுகையில் அவளுக்கு ஆசுயையாக இருந்தது.  பெரும்பாலான ஆண்களுக்கு பெண் என்பவள் வெறும் உடல் மட்டும்தானா என்ற கோபமும் வந்தது. ஆனால் அவள் தன்னுடைய எந்தவித உண்ரவையும் காட்டி கொள்ளாமல் இருக்கவே முயன்றாள். ஆனால் அது அவளால் இயலவில்லை.  அவன் அவள் இதழ்களை முத்தமிட்ட நொடி அவனை அவசரமாக விலக்கி தள்ளிவிட்டாள். அவன் அவளை அதிர்ச்சியாக பார்த்திருந்தது போல அவளும் அவனை அதிர்ச்சியாக பார்த்திருந்தாள். இருபது இருபத்தைந்து வயதிலிருந்த மிடுக்கான ஆண்மகன்தான் அவன்.  சட்டென்று அவள் மூளைக்குள் ஏதோ தட்டியது.  இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம்?’ என்ற யோசனை எழ, பாரதியின் வீட்டின் முன்னே இருந்த உயரமான பதாகையில் அவன் படத்தை பார்த்த நினைவு வந்தது.  இவன்தான் முதலமைச்சர் அறிவழகன் அடுத்த வாரிசு என்று அதில் பொரிக்கப்பட்டிருந்ததை கண்டு அவள் ஆச்சரியமுற்றிருக்க அவனோ அவளை கூர்ந்து பார்த்து, “நீ அப்போ மயக்கத்துல இல்லையா?” என்று கேட்க, அவளுக்கு நடுங்கியது.  “இவ்வளவு நேரம் மயங்கி இருந்த மாதிரி நடிச்சியா?” என்றவன் மீண்டும் கேட்க,  “இல்ல அது வந்து… நான் உங்களை பார்க்க” என்று அச்சத்தில் தத்து பித்து என்று உளறினாள். அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.  “பார்த்து என்ன பண்ண போற?” என்றவன் எள்ளி நகைக்க,  “இல்ல… ஒன்னும் பண்ண போறதில்லை… சும்மாதான்” என்று சொல்லிவிட்டு பயத்தில் அவள் அழவும்,   பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை நிதானமாக புகைத்தபடி அவளை அளவேடுத்து பார்த்தவன், “இல்ல நீ ஏதோ ப்ளானோடதான் வந்திருக்க… மயக்கத்துல இருக்கிற மாதிரி நடிச்சு என்னை ஏதாச்சும் பண்ணலாம்னு நினைச்சியா… இல்ல இங்கிருந்து தப்பிச்சிடலாம்னு நினைச்சியா” என்று சந்தேகமாக வினவினான்.  அவசரமாக கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்தவள், “உஹும்… அப்படி எல்லாம் இல்ல” என, அவளுடைய அப்பவித்தனமான பார்வையும் பேச்சும் அவனுக்கு பிடித்திருந்தது.  மிதமாக புன்னகைத்து கொண்டே அவளை நெருங்கியவன், “மயக்கத்துல நீ இல்லாம இருக்கிறதுதான் எனக்கு இன்னும் கிக்கா இருக்கு” என்று சொல்லி அவளை நெருங்கி முத்தமிட இம்முறை அவனை விலக்கும் முயற்சி எதுவும் செய்யவில்லை.  அவன் விழிகளிலிருந்த உணர்வை ஆழமாக படிக்க துவங்கினாள். அவனுக்கு அவள் அழகின் மீது ஓர் அலாதியான போதை இருந்ததை அவளால் அறிந்து கொள்ள முடிந்தது.  அவளும் இலகுவாக இணங்கி கொடுக்க, அவள் மீதான போதை அவனுக்கு இன்னும் இன்னும் அதிகரித்தது.  இருளுக்குள் மூழ்கும் வரைதான் பயம் எல்லாம். அதன் பின் அந்த உணர்வும் இருட்டும் நமக்கு பழக்கப்பட்டு விடுகிறது இல்லையா? துர்காவும் அந்த மனநிலையில்தான் இருந்தாள்.  சரியாக அந்த சமயத்தில் படபடவென கதவு தட்டும் ஓசை கேட்டது.  முகுந்தன் முகம் உச்சபட்ச எரிச்சலை பிரதிபலிக்க மீண்டும் மீண்டும் கதவு தட்டும் ஓசை தொடரவும் அவளை விலக்கி தள்ளிவிட்டு கதவை திறந்து வெறிப்பிடித்தவன் போல கத்தினான்.  “சாரி அண்ணா… சாரி அண்ணா… ஒரு பிரச்சனை” என்று சங்கர் அவன் கோபத்தை மட்டுப்படுத்தி நிலைமையை எடுத்துரைத்தான்.  “அந்த பொண்ணு” என்றவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும் துர்கா தன் காதுகளை கூர்மையாக்கி கொண்டாள். சங்கர் தொலைகாட்சியில் துர்காவை பற்றி ஒளிபரப்பாகும் செய்தியை பற்றி கூறினான்.  “ஆசிரமத்து முன்னாடி போராட்டம் பண்ணி பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்… டிவி சேனல் எல்லாம் அங்கே போயிட்டானுங்களாம்”  “இப்போதான் கமிஷனர் பேசினார் அண்ணா… அந்த பொண்ணை உடனே தேடி கண்டுபிடிக்க சொல்லி சி எம் ஆபீஸ்ல இருந்த ஃபோன்” என்றவன் விவரமாக சொல்லிவிட்டு, “அந்த பொண்ணை அனுப்பிவிட்டிருவோம்” என்றதும் அவனுடைய வெறி பன்மடங்காக கூடியது.  சங்கரின் கன்னத்தில் பளீரென்று அறை தந்தவன், “நீ பயப்படு… நான் எதுக்குடா பயப்படணும்… எவன்டா அவன்” என்று கேட்கவும் “அவன் பேர் பாரதி… இந்த பொண்ணு அவன் வீட்டுல கொஞ்ச நாள் இருந்துச்சாம்… அவன்தான் இவளை ஆசிரமத்துல சேர்த்ததான்… அந்த ஏரியால இருக்க நம்மாள் ஒருத்தனை கூப்பிட்டு விசாரிச்சேன்… இவனுக்கும் இந்த பொண்ணுக்கும் ஏதோ லிங்க் இருக்காம்” என்றவன் சொல்லிவிட்டு பாரதியின் படத்தை காண்பிக்க முகுந்தனின் முகத்தில் இரத்தம் வற்றிவிட்டது. “தலைவர் தலையிடலனா நானே இந்த பிரச்சனையை முடிச்சிருப்பேன்” என்றவன் அறிவழகனை குறிப்பிட்டு சொன்ன போது அவனுக்கு சம்மட்டையால் யாரோ ஓங்கி அடித்தது போல இருந்தது.  பாரதி தலையீடு அவனுடைய முதலமைச்சர் கனவை அடிப்பட்டு போக செய்துவிடுமோ என்ற பயம் அதிகமானது.  அப்போது சங்கர், “அந்த பொண்ணை மிரட்டிட்டு அனுப்பி விட்டுடலாம் அண்ணா… ஒன்னும் பிரச்சனை வராமா நான் பார்த்துக்கிறேன்” என்று பயந்து பயந்து கூற,  “அவ மயக்கத்துல இல்ல… அவ என்னை பார்த்துட்டா” என்ற முகுந்தன் முகம் கடுகடுத்தது.  “அதெப்படி?” என்று குழம்பிய சங்கரிடம்,  “அவ மயக்கத்துல இல்லன்னாலும் இருந்தாலும் அவளை நான் உயிரோட விட மட்டேன்… அந்த பாரதியை என்ன பெரிய இவனா… நான் எவனுக்கும் பயப்பட மாட்டேன்” என்று முஷ்டியை இறுக்கியவன்,  “இவளை கண்டம் துண்டமா வெட்டி மூட்டையா கட்டி அந்த பாரதி வீட்டு வாசலில் கொண்டு போடுங்க” என்றான்.  சங்கர் நடுங்கிவிட்டான். அவனுக்கு கொலை செய்வதை குறித்து பயமில்லை. ஆனால் முதலமைச்சர் வரை தலையிட்டிருக்கும் இந்த விஷயத்தில் தான் இப்படியொரு காரியத்தை செய்தால் பிரச்சனை தனக்குத்தான்.  முகுந்தன் சாதாரணமாக தப்பித்து கொள்வான். அவன் அந்த யோசனையில் தயங்கி தயங்கி, “இல்ல அண்ணா வேண்டாம்… பெரிய பிரச்சனையாயிடும்” என்று கூற,  “என்னடா? பயமா இருக்கா” என்றவன் வேகமாக தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுக்க,  “அண்ணா வேண்டாம் ணா… பிரச்சனை பெருசாகிடும்” என்று சங்கர் கெஞ்சியதை காதில் வாங்காமல் அறைக்குள் சென்றான்.  துர்காவை அவன் கண்கள் தீவிரமாக தேட, அவள் பயத்தில் சுவற்றோரமாக ஒண்டி கொண்டிருந்தாள். அவர்கள் பேசியது முழுவதையும் அவள் கேட்டிருந்தாள்.  அவன் அவளை கண்டம் துண்டமாக வெட்ட வேண்டுமென்று சொன்ன நொடி அவள் ஆணிவேரே ஆடிவிட்டது. முகுந்தன் அவள் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்தான். அவனுக்கு பாரதியிடம் தோல்வியற கூடாது என்ற பிடிவாதமும் ஈகோவும் வெறியாக ஏறியிருந்ததில் அவளின் உயிர் ஒரு பொருட்டே இல்லை.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா