மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E 45Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E 45

Quote from monisha on August 14, 2023, 12:13 PM

45
அந்த இடிந்த கட்டிடத்தின் அருகிலிருந்த சவுக்கு தோப்பிற்குள் நந்தினியை தேடியபடி லெனின் ஓடிக் கொண்டிருக்க, அவனை பின்தொடர்ந்த விஜ்ஜு, “அவ எப்படி போனா நமக்கு என்ன அண்ணா… நீ எதுக்கு இப்படி ஓடிட்டு இருக்க” என்று கேட்க, “தலையில அடிப்பட்டு இருக்கு டா… எங்கேயாச்சும் விழுந்து தொலைச்சிட்டா… இல்ல எவனாவது பொறுக்கி பையன் கிட்ட மாட்டிக்கிட்டா” என்று பதட்டமாகக் கூறினான். “அவ்வளவு அறிவு அவளுக்கு இருக்கணும் இல்ல? அவளாதானே ஓடி போனா… நம்ம என்ன பண்ண முடியும்” “வாயை மூடிட்டு தேடு… இல்ல முடியாதுன்னா… நீ போ… நான் பார்த்துக்கிறேன்” என்று லெனின் பதட்டமாக நந்தினியைத் தேடுவதில் மும்முரமாக இருந்தான். “சரி சரி… நானும் தேடுறேன்” என்று சலித்தபடி அவனும் பின்னோடு நடக்க, இருவருமாகச் சேர்ந்து அந்த சவுக்கு தோப்பு முழுவதுமாக அலைந்து தேடினர். ஆனால் நந்தனி அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தோப்பிற்கு வெளியே அவர்கள் தேடி வர, சாலையில் போலிஸ் ஜீப் நின்றிருந்தை பார்த்து இருவரின் முகத்திலும் அதிர்ச்சி பரவியது. “அண்ணா போலிஸ் ண்ணா” என்று விஜ்ஜு ஜெர்க்காகி பின்வாங்கிய அதேநேரம், “அண்ணா அந்த பொண்ணு” என்று கைக்காட்டினான். இருவரும் அப்படியே ஓரமாக ஒளிந்தபடி நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.  “நம்மல பத்தி ஏதாச்சும் போட்டு கொடுக்க போறா ண்ணா” என்று விஜ்ஜு படபடக்க, லெனினுக்கும் உள்ளூர அதே பயம் இருந்தது. இருவரும் வியர்த்து கொட்டி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கேட்டனர். அந்த ஜீப்பின் உள்ளே அதிகாரியின் கம்பீரத்தில் ஒருவன் அமர்ந்திருந்தான். கான்ஸ்டபிள் மட்டும் இறங்கி வந்து நந்தினியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். “யாரும்மா நீ… ஏன் இப்படி ஓடி வந்து வண்டி முன்னாடி விழுந்த” என்றவர் வினவ, அவள் பின்னோடு பார்த்தபடி மூச்சு வாங்கி கொண்டு நின்றாள். அவள் படபடப்பை கவனித்தவர், “என்னாச்சு ம்மா… ஏதாச்சும் பிரச்சனையா? சொல்லு” என்று நிதானித்து கேட்க,  “என்னை காப்பாத்துங்க… இரண்டு பேர் என்னை துரத்திட்டு வராங்க” என்றாள். ஒளிந்து நின்று கேட்டிருந்த விஜ்ஜுவிற்கு கிலி பற்றிக் கொண்டது. “போட்டு கொடுத்திட்டா அண்ணா… இனிமே நம்ம இங்கே நிற்க வேண்டாம்… ஓடிடலாம்”  “கொஞ்ச நேரம் அமைதியா இரு” என்று லெனின் அவனை அமைதிப்படுத்த, “நீ அவளை காப்பத்துனதுக்கு நல்லா செஞ்சிட்டா… சனியனைத் தூக்கி பனியன்ல போட்டுகிட்ட கதைதான்” என்று விஜ்ஜு வாயிற்குள் முணுமுணுத்தான். நந்தினியை பார்த்தபடி ஜீப்பிலிருந்து இறங்கிய அந்த இன்ஸ்பெக்டர், “இங்கே பொறுக்கி பசங்க ஜாஸ்தி… உன்னை யாரு தனியா இந்த சவுக்கு தோப்புக்குள்ள போகச் சொன்னது… ஆமா நீ யாரு… எதுக்கு இங்கே வந்த… எப்படி உன் தலையில அடிப்பட்டுது” என்று அவளிடம் மானாவாரியாகக் கேள்விகளை அடுக்க, “இல்ல சார்… நானா இங்கே வரல… அவங்கதான்… அவங்க யாருன்னு எனக்கு தெரியல… பார்க்க ரவுடிங்க மாதிரி இருந்தாங்க… அவங்கதான் என்னை இங்கே தூக்கிட்டு வந்தாங்க” என்றவள் நடுக்கமும் பயமுமாகக் கூற,  “உள்ளே போய் யாராவது இருக்காங்களான்னு பாருங்க” என்றவன் கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பிவிட்டு நந்தினியை ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வை அவளை ஆழமாக ஊடுருவ, அவளுக்கு ஏனோ சரியாகப்படவில்லை. அவன் ஒரு மாதிரியாக பார்ப்பதில் அவள் நெஞ்சம் படபடக்க, “அவங்கதான் உன் தலையில அடிச்சாங்களா?” என்று அவள் தலையிலிருந்த கட்டை பார்த்தபடி கேட்கவும், “இல்ல சார்” என்றாள். “அப்புறம் எப்படி தலையில அடிப்பட்டது” என்றவன் பார்வை அவளைத் துருவியது. அவள் என்ன சொல்வதென்று புரியாமல் தவிப்புற்றாள். முகுந்தனைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாது. சொன்னாலும் ஒன்றும் உபயோகமில்லை. அவள் இவ்வாறாக யோசித்திருக்கும் போதே, “பயப்படாம சொல்லு… யாரு அடிச்சது?” என்று வினவ, “எனக்கு தெரியல சார்… எப்படி அடிப்பட்டுச்சுனு” என்றாள். அவளைச் சந்தேகமாகப் பார்த்தவன், “சரி உன் பேர் என்ன? உன் அம்மா அப்பா என்ன பண்றாங்க… அட்ரஸ் சொல்லு” என்று விசாரித்து கொண்டே தன் கைபேசியை எடுத்து,  “ஃபோன் நம்பர் இருந்தா சொல்லு… கூப்பிடுறேன்” என்றான். இந்த கேள்விக்கு எல்லாம் அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அம்மா அப்பா என்ற வார்த்தைக்கு எல்லாம் அவள் வாழ்க்கையில் அரத்தமே இல்லை. விலாசம் என்பது கூட அவள் தங்கியிருந்த இடம். அவ்வளவுதான். மீண்டும் அங்கே செல்ல அவளுக்கு துளியும் விருப்பமில்லை. பாரதியைச் சென்று சந்திக்க வேண்டுமென்பதுதான் அவள் எண்ணம். அவன் விலாசம் தெரிந்தாலும் அவனுக்கு இவளைத் தெரிய வேண்டுமே! அவளின் துரதிஷ்டம். இந்த இக்கட்டான நிலையில் அவளைக் காப்பாற்ற வித்யாவும் உயிருடன் இல்லை. இப்போது எந்த விலாசத்தைச் சொல்வது? அவள் யோசனையில் ஆழ்ந்துவிட அவன் பொறுமையிழந்து,  “என்ன நீ… உன் பேர் கேட்டாலும் திருதிருன்னு முழுக்கிற… வீட்டு அட்ரஸும் சொல்ல மாட்டுற… என்ன பிரச்சனை உனக்கு… லவ்வா? எவனோடவாச்சும் ஓடி வந்துட்டியா” என்று அதட்டி கேட்க, அதற்கும் அவள் மௌனமாக நின்றாள். அவளை வில்லங்கமாக பார்த்தவன், “என்ன? ஏதாச்சும் தப்… பான தொழில் பண்றியா?” என்று கேட்டு வைக்க, அவள் துடிதுடித்துப் போனாள். அவளுக்கு அந்த நொடி தன் நிர்கதியான நிலையை எண்ணி விழிகளில் கண்ணீர் பெருகியது. அப்போது அந்த கான்ஸ்டபிள் தோப்பிற்குள் தேடி விட்டு வந்து, “உள்ளே யாரும் இல்ல சார்” என்று கூற, “நினைச்சேன்… இவளுக்கு வேறெதோ பிரச்சனை… கேட்டா எவனோ துரத்திட்டு வந்தான்னு கதை விடுறா… பேர் ஊர் எதையும் சொல்ல மாட்டுறா” என்று கடுகடுத்தவன், “ஜீப்பில ஏத்துங்க… ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிச்சா விஷயம் என்னன்னு தெரிஞ்சிடும்” என்றவன் சொன்ன நொடி நந்தினிக்கு தூக்கிவாரி போட்டது.  ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்து வேறொரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்று அவளுக்கு உள்ளூர எச்சரிக்கை மணி அடிக்க, “இல்ல… நான் வரல… நான் என் வீட்டுக்கு போயிக்கிறேன்” என்று பின்வாங்கினாள். “ஏய் என்ன? நேரா வந்து ஜீப்பில முட்டி எவனோ துரத்தறான் காப்பாத்துங்கன்னு இஷ்டத்துக்கு கதை அளந்துட்டு… இப்போ நானே வீட்டுக்கு போயிக்கிறேங்குற… எங்களைப் பார்த்தா எப்படி தெரியுது… ஒழுங்கா இப்போ நீயா ஜீப்பில ஏறியா” என்றவன் மிரட்ட, நந்தினி கைகளை பிசைந்து கொண்டு நின்றாள். ‘இப்போ என்ன பண்றது?’ என்றவள் தவிப்புற, பின்னிருந்து ஒரு குரல், “நந்தினி” என்று அழைத்தது. அவள் திரும்பி பார்க்கவும், “எங்கே போன நீ? உன்னை எங்கெல்லாம் தேடுறது?” என்று கேட்ட லெனினைப் பார்த்து அவள் அதிரவும், ‘நான் உன்னை காப்பாத்தணும்னுதான் நினைக்கிறேன்… புரிஞ்சிக்கோ’ என்றவன் சமிஞ்சையில் சொல்லி நம்பிக்கை தரும் விதமாக கண்ணசைக்கவும் அவள் மௌனமானாள். “நீங்க யாரு? உங்களுக்குத் தெரியுமா இந்த பொண்ணை” என்று அந்த போலீஸ்காரன் விசாரிக்க, “என் வொய்ப் சார்” என்று லெனின் சொன்ன நொடி நந்தினி அதிர்ச்சியாகப் பார்க்க, “எங்க போன நீ… உன்னை வீட்டை விட்டுட்டு வெளியே போக வேண்டாம்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்றான் கண்டிப்போடு. “இவங்களை யாரோ துரத்திட்டு வராங்கன்னு சொன்னாங்க… பேர் அட்ரஸ் கேட்டா சொல்லவே இல்ல” “தலையில அடிப்பட்டதுல இருந்து கொஞ்சம் இப்படித்தான் சார்… யாரோ துரத்திட்டு வராங்க ன்னு அடிக்கடி இப்படி பயந்து ஓடி வந்துடுறா… பேரெல்லாம் கூட மறந்துடுறா” என்றவன் சொல்லி கொண்டே போக நந்தினிக்குத் தான் ஏன் இவன் சொல்வதற்கெல்லாம் உடன்பட்டு அமைதியாக இருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது. போலீஸிற்கு பயந்து யாரிடமிருந்து தப்பித்தோமா மீண்டும் அவர்களிடமே சென்று சிக்கிக் கொள்ளப் போகிறோமோ? என்று அச்சத்தில் அவள் இதயம் படக் படக்கென்று அடித்துக் கொண்டது. ஆனால் அவளுக்கு வேறு வழியும் இல்லை. அதேநேரம் அந்த போலீஸ்காரன் அவளைச் சந்தேக பார்வையோடு ஆராய்ந்து பார்த்தபடி கேட்ட கேள்விக்கு எல்லாம் லெனின் சாமர்த்தியமாகச் சமாளித்துவிட்டான். இப்போதைக்கு அவள் மனம் லெனின் பக்கம் நிற்பதே உசிதம் என்று எண்ணியது.  அந்த போலிஸ் ஜீப் நகர்ந்த மாத்திரத்தில் லெனினை பார்த்தவள், “என்னை என்ன பண்ண போறீங்க… கொல்ல போறீங்களா? இல்ல அடைச்சு வைக்க போறீங்களா” என்று கேட்டாள்.  “இப்ப கூட நீ என்னை நம்பலையா?”  “நான் அந்த போலிஸ்காரன் கூட போகக்கூடாது… அவன் எங்க அப்பா அம்மா யாருன்னு கேட்பான்… அந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றதை காட்டிலும் நான் செத்தே போகலாம்… அதான் அவன்கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல… மத்தபடி நான் ஒன்னும் உன்னை நம்பல… நீயும் ரவுடி பையன்தானே” என்று சொன்னவளை அவன் குழப்பமாக ஏறிட்டுப் பார்த்தான். அத்தனை நேரம் காவலர்களுக்குப் பயந்து உள்ளே ஒளிந்திருந்த விஜ்ஜு அவள் சொன்னதைக் கேட்டு, “யாருடி ரவுடி? எங்க அண்ணன் ஒன்னும் ரவுடி இல்ல” என்று கொந்தளித்தான். அவன் மேலும் நந்தினியை நோக்கி, “இன்னைக்கு நீ உயிரோட இருக்கன்னா அது எங்க அண்ணன் போட்ட பிச்சை… இப்போ கூட நீ அந்த போலிஸ்காரன் முன்னாடி என்ன சொல்றதுன்னு தெரியாம பேந்த பேந்த முழிச்சிட்டு நின்ன போது உன்னை ரிஸ்க் எடுத்து காப்பாத்தினது எங்க அண்ணன்தான்… நீ என்னடான்னா கொஞ்சம் கூட நன்றியே இல்லாம எங்க அண்ணனை பார்த்து ரவுடி பையங்குற” என்று படபடவென பட்டாசாக பொறிந்து தள்ளிவிட்டு,  “நீ வா அண்ணா போலாம்… இவ எக்கேடு கெட்டு போனா நமக்கு என்ன?” என்று லெனின் கையை பிடித்து இழுத்து செல்ல முன்றான், “சும்மா இரு விஜ்ஜு… நீ வேற நிலைமை தெரியாம” என்று அவனை கண்டித்து அடக்கியவன், “சத்தியமா நாங்க முகுந்தனோட ஆளுங்க இல்ல… எங்களை நம்பு” என்றான். நந்தினிக்குத் தலையில் பாரமாக அழுத்தியது. யாரை நம்புவது… யாரை நம்ப கூடாது என்று அவளுக்கு அப்போதும் குழப்பமாக இருந்தது. “இங்கே நாம் ரொம்ப நேரம் நிற்க வேண்டாம்… ஃசேப் இல்ல… வா” என்று லெனின் மீண்டும் அழைக்க, சில நொடிகள் அமைதியாக யோசித்தவள் லெனின் பின்னோடு நடந்தாள். ஆனால் விஜ்ஜுவிற்கு அவளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்தான். லெனின் நந்தினியை மீண்டும் தான் தங்கியிருந்த பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றான். பின்னர் அவன் குடிக்கப் பழச்சாறு தயாரித்துக் கொடுக்க அவள் அதனை வாங்காமல் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.  “மயக்க மருந்து கொடுத்து இந்தமாவை கற்பழிச்சுட போறோம்னு பயப்படுறாங்க போல” என்று விஜ்ஜு பட்டென சொல்லிவிட, நந்தினி முகம் கோபத்தில் சிவந்தது. “நீ உன் வாயை வைச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா” என்று லெனின் அவன் தலையில் தட்ட, “அவ அப்படிதான் அண்ணா நம்மல சந்தேகமா பார்குறா” என்றான். லெனின் உடனடியாக நந்தினியிடம், “நாங்க இரண்டு பேரும் வேணா ஒரு ஸிப் குடிச்சிட்டு குடுக்கட்டுமா?” என்று கேட்க அருகிலிருந்து விஜ்ஜு பொங்கி எழுந்துவிட்டான். “இதெல்லாம் ரொம்ப டூ மச்… அவ்வளவு கூட நம்பிக்கை இல்லனா எதுக்கு நம்ம பின்னாடி வரணும்” என்று கடுப்பாகிவிட்டு நந்தினியை நேராகப் பார்த்து, “இத பாரு… நாங்க அப்படி செய்யணும்னு நினைச்சிருந்தா நீ தலையில அடிபட்டு மயங்கி கிடந்த போதே செஞ்சிருக்க மாட்டோமா?” என்று சொல்ல இருவரையும் எகத்தாளமாகப் பார்த்தவள், “அப்படியொரு நினைப்பு வேற இருந்துச்சா இரண்டு பேருக்கும்?” என்று கேட்க, லெனின் அதிர்ந்தான். அவர்களை நிதானமாக ஏறிட்டவள், “இந்த ஒட்டு மொத்த உலகத்துல என் நம்பிக்கைக்குரியவன் ஒரே ஒருத்தன் மட்டும்தான்... அவனைத் தவிர வேறு யாரையும் நான் நம்பறதுமில்லை… இனியும் நம்ப போறதுமில்லை” என்று சொல்லிவிட்டு, “ஆனாலும் இந்த ஜூசை நான் குடிக்கிறேன்… ஏன்னா என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… நான் மயங்கி இருந்தா மட்டும் இல்ல… வேற எப்பவும் யாரும் என்னை நெருங்க முடியாது” என்று உறுதியாகக் கூறிவிட்டு அந்த பழச்சாற்றை மடமடவென வாங்கி பருகிவிட்டாள். லெனின் அவளை வியப்பாகப் பார்க்க, ‘ஆமா இவ பெரிய கண்ணகி’ என்று விஜ்ஜு முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டான். அவள் மெதுவாக லெனினிடம் திரும்பி,  “நீங்க முகுந்தனோட ஆளு இல்ல சரி… ஆனா என்னை எப்படி நீங்க கப்பாத்துனீங்க… என் பேர் எப்படி உங்களுக்கு தெரியும்” என்று கேட்டாள். தான் ராஜீவை கொலை செய்ய வந்ததை சொன்னால் இவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற யோசனையில் அவன் மௌனமாக இருக்க, “என்ன… பதில் வரல… அப்போ நீங்க சொல்றது பொய்யா?” என்று கேட்டு நந்தினி அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.  “இல்ல” என்று மறுத்தவன் அதன் பின் மறைக்காமல் நடந்த உண்மையை முழுவதுமாக உரைத்தான். சட்டென்று அவள் பார்வையிலும் பேச்சிலும் இருந்த மரியாதை மறைந்தது. “ஓ… அப்போ நீ அந்த ராஜீவை கொலை செய்ய வந்த… ஆனா நான் உனக்கு முன்னாடி உன் வேலையை செஞ்சு முடிச்சிட்டேன்… அப்படிதானே” என்று கேட்டு புருவத்தை உயர்த்த, அவன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.  “உன்னை ரவுடின்னு சொன்னதுக்கு அந்த ஆளு அவ்வளவு டென்ஷன் ஆனான்… கொலை செய்றதெல்லாம் ரவுடிஸத்துல வராதோ?” என்று கேட்டு அவள் நக்கலாகப் பார்க்க, “நான் ஒன்னும் ரவுடி இல்ல… ராஜீவை கொலை செய்ய உனக்கு ஒரு நியாயமான காரணம் இருந்த மாதிரி எனக்கும் இருந்துச்சு” அவனை ஆழ்ந்து பார்த்தவள், “அதென்ன காரணம்” என்று கேட்க, “அதை நான் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்ல” என்ற லெனின் அந்த பேச்சை அதோடு நிறுத்தி கொண்டு எழுந்து சென்றுவிட, நந்தினிக்கும் அவன் கதையை கேட்டு தெரிந்து கொள்ள எந்தவித ஆர்வமும் இல்லை. அவளுக்கோ பாரதியை எப்படிச் சென்று சந்திக்கப் போகிறோம் என்ற சிந்தனை மட்டும்தான். தான் அடுத்து என்ன செய்வதென்று கவலையில் ஆழ்ந்திருக்க லெனின் அவளுக்கு இரவு உணவு வாங்கிவந்தான். மேலும் அவளுக்கு அக்கறையாக மாத்திரைகளைத் தந்து உட்கொள்ளச் சொன்னான். அவன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் அவளுக்கு தவறாக எதுவும் தோன்றவில்லை. ஆதலால் அவனிடம், “எனக்கு நீங்க ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?” என்று கேட்டாள். “செய்றேன்… ஆனா திடீர் திடீர்னு இப்படி மரியாதை கொடுத்து பேச வேண்டாம்.. நீ வா போவே ஒகேதான்” என்றவன் கூற,  “இல்ல… அப்போ கோபத்துல” என்று அவள் முகத்தை சுருக்கினாள்.  “பரவாயில்ல… ஏதோ உதவின்னு கேட்டியே… அதை சொல்லு” என்றான். சில நொடிகள் அவள் தயங்கிவிட்டு பின் மெல்ல, “நான் என் அத்தை வீட்டுக்கு போகணும்… எனக்கு கொஞ்சம் காசு வேணும்” என்று கேட்க, அவன் கொஞ்சமும் யோசிக்காமல், “அதுக்கு என்ன? கொடுக்கிறேன்” என்றான். “கடனாதான்… நான் திருப்பி கொடுத்துடுறேன்” என்றவள் சொல்லவும் புன்னகைத்து சரியென்று தலையசைத்தவன், “ஆனா இப்போ போக வேண்டாம்… காலையில போகலாம்” என்றான். நன்றாக இருட்டிவிட்டதால் அவன் சொன்னதற்குச் சம்மதித்து இரவு அங்கேயே தங்கினாள். லெனின் விடிந்ததும் அவளை துணி கடைக்கு அழைத்து சென்று புது உடை வாங்கி கொடுத்து, அவள் அணிந்திருந்த இரத்தக்கரை படிந்திருந்த உடையை மாற்றிக் கொள்ளச் சொன்னான். அதன் பின் அவனே அவள் சொன்ன விலாசத்திற்கு ஆட்டோவில் உடன் வந்து பத்திரமாக இறக்கிவிட்டான். அவள் “தேங்க்ஸ்” என்று சொல்ல, “ஆமா… உன் அத்தை பையன் பேரு பாரதியா?” என்று அவன் கேட்க, “எப்படி உங்களுக்கு?” என்றவள் வியப்பானாள்.  “நீ மயக்கத்துல கூட அந்த பேரை மட்டும்தானே சொன்ன” என்றான். அவள் அசட்டுத்தனமாக உதட்டை கடித்து கொள்ள, “சரி பார்த்து பத்திரமா போ” என்றவன் புறப்படும் தருவாயில் அவள் கையில் ஒரு புது தோள் பையை கொடுத்து, “இதுல பணம் வைச்சு இருக்கேன்” என்று கொடுத்துவிட்டுச் சென்றான். அதனைப் பிரித்துப் பார்த்தவளுக்கு ஆச்சரியம். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் கத்தையாக இருந்தது.  அவள் வாழ்க்கையில் பாரதிக்கு பிறகாய் லெனின் மீது நம்பிக்கை உண்டானது.  அதன் பின் நந்தினி பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் பாரதியின் வீட்டை நோக்கி நடந்தாள். முதல் முறையாக பாரதியை நேருக்கு நேராகச் சந்திக்கப் போகிறோம் என்ற பரபரப்பும் தவிப்பும் அவளை ஆட்கொண்டது. அவனைப் பார்த்துத் தான் என்ன சொல்வது. தான் சொல்பவற்றை அவன் நம்புவானா? அவனுக்கு தன்னுடைய மனதையும் உறவையும் புரிய வைத்துவிட முடியுமா என்ற நெருட, தயக்கத்துடன் அவன் வீட்டின் முன்னே சென்று நின்றாள்.  கதவு பூட்டப்படாமல் இருந்ததில் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். ஆனால் கதவைத் தட்டுவதற்கு ஏதோ ஒரு தயக்கம்! தவிப்பு!  வெகுநேரம் அந்த கதவையே உற்றுப் பார்த்துக் கொண்டு அவள் நிற்க, “யாருங்க நீங்க… ரொம்ப நேரமா வாசலில நிற்குறீங்க” என்று ஒரு ஆண் குரல் கேட்க, அவள் திரும்பி நோக்கினாள். அந்த இடமும் அங்கிருப்பவர்கள் யாரும் அவளுக்கு புதிதல்ல. தூரமாக இருந்து பாரதியை பார்க்கும் சாக்கில் அவர்கள் எல்லோரையும் அவள் முன்னமே பார்த்திருக்கிறாள். அவன் பாரதியின் நண்பன் யசோதரன். அவனும் பாரதியை போல ஐஏஎஸ் தேர்விற்குப் பயின்று கொண்டிருப்பதாக வித்யா சொன்னது அவளுக்கு நினைவு வந்தது. “பாரதியை பார்க்கணும்”  “கதவு பூட்டி இல்லையே… அப்போ அவன் உள்ளேதான் இருப்பான்… கதவு தட்டுங்க… திறப்பான்” என்று சொல்லிவிட்டு அவன் அகன்றுவிட மிகவும் சிரமப்பட்டு அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் தட்டினாள். அவள் சற்றும் எதிர்ப்பாரா விதமாகக் கதவை துர்கா திறக்க நந்தினியின் தவிப்பையும் வேதனையையும் அந்த நொடி வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. செய்திதாளில் துர்கா பாரதியை அணைத்திருந்த காட்சி கண்முன்னே நிழலாடியது. அதேநேரம் பாரதியை அவள் காதலித்த விஷயத்தை குறித்து வித்யா அவளிடம் முன்பே சொல்லியிருந்தாள். நந்தினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவள் துர்காவை கண்டும் காணாமல் பாரதியைத் தேடி வீட்டிற்குள் எட்டி பார்க்க, “ஹலோ… யாருங்க நீங்க? உள்ளே என்ன பார்க்குறீங்க” என்று காட்டமாகக் கேட்டாள் துர்கா.  நந்தினிக்கு உள்ளுர எறிந்தது. பாரதியின் வீட்டிலிருந்து இவள் ஏன் வர வேண்டும் என்று பொங்கிய கோபத்தை பிராயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு, “நான் பாரதியை பார்க்கணும்… அவன் இல்லையா?” என்று வினவ, “அவனா? என்னங்க நீங்க… கொஞ்சம் கூட மரியாதை இல்லாம அவன் இவன்னு சொல்றீங்க?” என்று துர்கா எகிற, நந்தினிக்கு கோபம் மூண்டது. “நான் அப்படித்தான் சொல்லுவேன்… அவன் என்னோட ப்ரெண்ட்” என்று கூற துர்காவின் முகம் சுருங்கி போனது. “நீ விலகி நில்லு… நான் பாரதியை பார்க்கணும்” என்று அவள் உரைக்க, “அவரு வீட்டுல இல்ல” என்று சாவகாசமாக கூறிய துர்கா கூடுதல் தகவலாக, “வர லேட்டாகும்” என்றாள். “லேட்டாகுமா… எங்கே போயிருக்கான்?” “அதெல்லாம் எனக்கு தெரியாது” என்று அசட்டையாக கூற நந்தினியின் முகம் வாடி போனது. அவள் அசையாமல் நிற்க, “போயிட்டு அப்புறமா வாங்க” என்றாள். “இல்ல… நான் இங்கேயே வெயிட் பண்றேன்” என்று தயங்கி நின்றவளிடம், “அதெல்லாம் அவங்க வர ரொம்ப நேரமாகும்… நீங்க போயிட்டு நாளைக்கு காலையில வாங்க” என்று துர்கா அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள். “நாளைக்கா?” என்று அவள் இழுக்க, “ஆமா… அவர் கச்சேரிக்கு போனா மிட் நைட்டாகும்… எனக்கு தெரிஞ்சு அவர் கச்சேரிக்குதான் போயிருக்கனும்” என்று சந்தேகமாக இழுத்தவள், “உங்க பேர் என்னன்னு சொல்லுங்க… நான் வந்தா சொல்றேன்” என்றாள். “என் பேர் நந்தினி” என்று வேண்டா வெறுப்பாகச் சொல்லிவிட்டு மௌனமாக அந்த காலனியை விட்டு வெளியே நடந்தாள். அவளுக்கு உண்டான ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. எங்கே போவது என்று புரியாமல் நின்றவளுக்கு எதிரே இருந்த சிறிய பிள்ளையார் கோவில் தென்பட அங்கே சென்று அமைதியாக நின்று கொண்டாள். பாரதியை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற நம்பிக்கையோடு அவள் காத்திருக்க, எத்தனை மணிநேரம் கடந்தது என்பதைக் கூட அவள் உணரவில்லை. மாலை சூரியன் மறைந்து மெல்ல இருட்டியது. அந்த தெரு முழுக்க சந்தடியாக இருந்தது. சட்டென்று அங்கே ஏதோ கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. நந்தினிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் என்னவென்று புரியாமல் குழம்ப, அந்த நொடி எதிர்பாராமல் சில கைகள் அவள் வாயைப் பொத்தி ஒரு பெரிய காரில் கடத்தி சென்றுவிட்டன.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா