மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E 53Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E 53

Quote from monisha on August 14, 2023, 12:25 PM

53
திருச்சியிலிருந்து கிளம்பிய அந்த பேருந்து நெடுஞ்சாலையில் காற்றின் வேகத்தில் விர்ரென பறந்து கொண்டிருந்தது. லெனினின் நினைவுகளும் கூட…  முகுந்தன் நந்தினியை வேதனைப்படுத்தி அனுப்பிய பின் அவள் பாரதியைப் பார்க்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, சுவற்றிலடித்த பந்து போல லெனினும் விஜ்ஜுவும் தங்கியிருந்த அந்த பாழடைந்த வீட்டிற்கே வந்துச் சேர்ந்தாள். “என்ன அண்ணா இவ… திரும்பி வந்துட்டா” என்று விஜ்ஜு குழப்பமாகக் கேட்க லெனினுக்கும் கூட ஒன்றும் புரியவில்லை. “என்னாச்சு? நீ உங்க அத்தை வீட்டுக்கு போகல” என்றவன் கேட்க, “போகல” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள். அவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.  விஜ்ஜுவிற்கு கடுப்பானது. “அங்கே போகலன்னா வேற எங்கயாச்சும் போ… இங்கே எதுக்கு திரும்பி வந்த” என்று அவளிடம் சத்தமிட்டான். “இனிமே நான் இங்கேதான் இருக்க போறேன்” என்றவள் அவர்கள் இருவரையும் பொருட்படுத்தாமல் அந்த வீட்டிற்குள் சென்று சட்டமாய் அமர்ந்துவிட்டாள். “என்ன விளையாடுறியா? அதெல்லாம் முடியாது… ஒழுங்கா கிளம்பிடு…” என்று விஜ்ஜு அவளை துரத்த முற்பட, “கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா… நான் பேசுறேன்” என்ற லெனின் நந்தினியிடம், “என்னாச்சு நந்தினி… ஏதாச்சும் பிரச்சனையா?” என்று நிதானமாக விசாரித்தான். “ஆமா பிரச்சனைத்தான்… எனக்கு ரொம்ப பசிக்குது… உன் தம்பியை போய் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லு” என்றவள் சற்றும் அலட்டி கொள்ளாமல் சொல்ல, விஜ்ஜு கொதிப்பானான். “அடிங்க… எங்க வீட்டுல வந்து உட்கார்ந்துட்டு எங்களையே அதிகாரம் பண்ணிட்டு இருக்க… நாங்க என்ன உனக்கு வேலைகாரங்களா?” “விஜ்ஜு ப்ளீஸ்” என்று அவனை தடுத்த லெனின், “போ… போயிட்டு டிபன் வாங்கிட்டு வா” என்றான். “என்ன அண்ணா நீயும்” “எனக்காக விஜ்ஜு” என்று லெனின் இறைஞ்சுதலாகச் சொல்ல, அவனால் மறுக்க முடியவில்லை. அவன் அவளை முறைத்துவிட்டு செல்ல அவளோ வாசல் வரை சென்றவனை அழைத்து, “ஆன்… விஜ்ஜு… சாப்பாடு வாங்கிறதுக்கு முன்னாடி பிரஷ் பேஸ்ட் வாங்கிட்டு வந்திரு… அப்புறம் அந்த பாத்ரூம் பக்கெட் சுத்தமா நல்லா இல்ல… நீ ஒரு பக்கெட்டும் ஜக்கும் கூடவே வாங்கிட்டு வந்திடு” என்றவள் பாட்டுக்கு ஒரு பட்டியலை போட, “அடிங்க” என்று அவன் பொறுக்க முடியாமல் மீண்டும் திரும்பி வர, “ப்ளீஸ் விஜ்ஜு… நீ போ… நான் அவகிட்ட பேசி அனுப்பி வைக்கிறேன்” என்று லெனின் அவனை அமைதிப்படுத்தி வெளியே அனுப்பி வைத்துவிட்டு நந்தினியிடம் வந்தான். “என்ன பிரச்சனை உனக்கு… ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க… முதல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோ நீ இங்கெல்லாம் தங்க முடியாது” என்றவன் பொறுமையாக எடுத்துரைக்க,  “ஏன் தங்க முடியாது… நீங்க இரண்டு பேரும் இங்கதானே தங்கி இருக்கீங்க” என்றவள் சாதாரணமாகக் கேட்டாள். “எங்க கதையே வேற… நாங்க ஆம்பளைங்க…” என்றவன் சொன்ன நொடி,  "அதென்ன ஆம்பளைங்கன்னா ஒன்னு… பொம்பளைங்கன்னா ஒன்னு… நீங்க எங்க வேணா இருக்கலாம்… என்ன வேணா பண்ணலாம்… எப்படி வேணா ட்ரஸ் பண்ணலாம்… ஆனா எங்களுக்கு மட்டும் எது பண்ணனும்னாலும் ஆயிரத்து எட்டு ரூல்ஸ்… பொண்ணுங்க மட்டும் என்ன வேற்று கிரகத்துல இருந்து குதிச்சவங்களா” என்றவள் கேட்கவும் அவனுக்குச் சங்கடமானது. “நீ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுற… நான் உன் கன்வினியன்ட் பத்திதான் பேசுறேன்… ” “அதெல்லாம் எனக்கு தெரியும்… இனிமே நான் இங்கேதான் இருக்க போறேன்” என்றவள் முடிவாக கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள். அவன் சொல்வதைக் கேட்கப் போவதில்லை என்ற பாவனையில்! அவனுக்கும் அதற்கு மேல் அவளிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை. அவன் மௌனமாக வெளியே வர விஜ்ஜு வாசலில் நின்றிருந்தான். “அவளுக்கு எவ்வளவு திமிரு பார்த்தியா அண்ணா” என்று சீறி கொண்டு உள்ளே நுழைய பார்த்தவனை தடுத்த லெனின், “அவ இங்கேயே இருந்துட்டு போகட்டும்… விடு” என்றான். “என்ன ண்ணா நீ இப்படி சொல்ற… அவ எல்லாம் இங்கே… உஹும் முடியவே முடியாது” என்று விஜ்ஜு அழுத்தமாக மறுக்க, “ப்ச்… சொல்றதை கேளு… இரண்டு நாலு இருந்துட்டு அவளே போயிடுவா… அவளால இங்க எல்லாம் தாக்கு பிடிக்க முடியாது… அதுவும் வசதியா வளர்ந்தவ” என்று லெனின் ஒருவாறு பேசி அவனைச் சமாதானப்படுத்தினான். விஜ்ஜுவும் வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தான். ஆனால் நந்தினியின் அலப்பறை அதோடு முடியவில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்று அவள் இன்னுமொரு நீண்ட பட்டியலை போட்டுக் கொடுத்து அவர்கள் இருவரையும் கடுப்பேற்றிக் கொண்டிருந்தாள். விஜ்ஜுவால் பொறுக்கவே முடியவில்லை. அவளுக்கும் அவனுக்கும் ஒத்து போகவேயில்லை. “அவ என்ன அண்ணா பெரிய இளவரசியாட்டும் இது வேணும் அது வேணும்னு லிஸ்ட் போட்டு கொடுத்துட்டு இருக்கா… நீயும் சைலன்டா வாங்கி கொடுத்திட்டு இருக்க... இதெல்லாம் தேவையா நமக்கு… பேசாம அவ எப்படியோ போகட்டும்னு நீ வுட்டுட்டு வந்திருக்கணும்… கூட்டிட்டு வந்து காப்பாத்துனதுக்கு நமக்கு இதுவும் வேணும்… இதுக்கு மேலயும் வேணும்” என்றவன் புலம்பி தீர்க்க, நந்தினிக்கும் அவனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு லெனின்தான் பாடாய் பட்டான். மூன்று தினங்கள் கடந்துவிட்டன. அவள் அங்கிருந்து நகர்வதாக இல்லை. அதுவுமில்லாமல் வந்த நாளிருந்து ஒருநாள் இரவு கூட நந்தினி நிம்மதியாக உறங்கி அவன் பார்த்ததே இல்லை. எதையாவது யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். அன்று இரவு லெனின் அவளருகில் வந்து அமர்ந்து, “என்ன பிரச்சனை நந்தினி உனக்கு? ஏன் நீ இங்கே இருக்கணும்” என்று நட்புணர்வுடன் அவளிடம் கேட்டான். எங்கேயோ தூரமாக வெறித்திருந்தவள் அவன் புறம் திரும்பி, “உன்னை பார்த்தா நல்லா படிச்சவன் மாதிரி தெரியுது… நீ ஏன் இங்கே இருக்க… உனக்கு என்ன பிரச்சனை?” என்றவள் அவனிடம் அதே கேள்வியைத் திருப்பி கேட்க, “நான் உன்கிட்டகேட்ட கேள்விக்கு முதல பதில் சொல்லு” என்றான். “நீங்க மட்டும் சொல்ல மாட்டீங்க… நான் மட்டும் சொல்லணுமா… நல்ல கதையா இருக்கே” என்றாள். “நான் உன் மேல இருக்க அக்கறையிலதான் கேட்டேன்” “அப்படி எந்த அக்கறையும் எனக்கு வேண்டாம்… ஆம்பளைங்கள பத்தி தெரியாது… முதல ஆறுதல் கொடுப்பீங்க… அப்புறம் ஆதரவு கொடுக்கிறேன்னு தோள் மேல கை போடுவீங்க” என்றவள் சொன்ன வார்த்தையில் லெனின் முகம் சிவந்தது.  “ரொம்ப ஓவரா பேசாதே… நான் மட்டும் அப்படிப்பட்டவனா இருந்தா இங்கே நீ இப்படி என் முன்னாடி உட்கார்ந்து பேசிட்டு இருக்க முடியாது” என்றவன் கோபமாகச் சொல்லிவிட்டு, “சை… உன்கிட்ட போய் பேச வந்தேன் பாரு” என்று எரிச்சலுடன் அங்கிருந்து எழுந்து செல்ல, “லெனின் ஒரு நிமிஷம்” என்றவள் அமைதியாக அழைத்தாள். அவன் அவள் புறம் திரும்பவும், “சாரி நான் அப்படிச் சொல்லி இருக்க கூடாது… ஒரு வகையில நீ எனக்கு நிறைய உதவி இருக்க” என்றவள் தயக்கத்தோடு அவனை பார்த்து, “எனக்கு ஒரு பெரிய பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணணும்… நிறைய நிறைய சம்பாதிக்கணும்… அதுக்கு நான் ஏதாச்சும் பண்ணணும்” என்றாள். “இதெல்லாம் ஏன் நீ என்கிட்ட சொல்ற?” என்றவள் அலட்சியமாகப் பார்க்க, “எனக்கிட்ட பிஸ்னஸ்கான புதுப்புது ஐடியா இருக்கு… ஆனா நான் நினைச்சதெல்லாம் செய்யணும்னா பணம் வேணும்… அதுவும் நிறைய வேணும்” என்றவள் கம்மிய குரலில் கூறவும், அவன் யோசனையாக நின்றான். “என்கிட்ட பணம் இல்லன்னு மட்டும் சொல்லாதே லெனின்… எனகென்னவோ உன்கிட்ட இருக்குன்னுதான் தோணுது” என்றவள் அவனை கூர்ந்து பார்த்துச் சொல்ல, “அதெப்படி இருக்குன்னு சொல்ற” என்றவள் அவளை முறைத்தபடி கேட்டான். “எனக்கு தோணுது… உன்கிட்ட இருக்கும்னு… அதுவுமில்லாம நீ ராஜனை கொலை செய்றளவுக்கு போயிருக்கன்னா நீ ஏதோ பெருசா செய்ய ப்ளேன் பண்ணிட்டு இருக்க… கண்டிப்பா நீ பணம் வைச்சு இருக்கணும்” என்றவள் சொன்ன நொடி எகத்தாளமாக புன்னகைத்தவன், “இருக்கு… ஆனா அதெல்லாம் திருட்டு பணம்… அரசு அதிகாரிகளோட கள்ள பணம்” என்றான். நந்தினியின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அவள் வாயடைத்து நிற்க,  “என்ன சைலன்ட் ஆகிட்ட… இதுக்குதான் உன்கிட்ட அப்பவே சொன்னேன்… இங்கே இருக்காதுன்னு… ஏன் னா எங்களை தேடி எப்ப வேணா போலிஸ் வரலாம்… அப்புறம் நாங்க செய்ற தப்புக்கு எல்லாம் சேர்த்து நீயும் மாட்டிப்ப” என்று சொன்னவன் மேலும் அவளிடம், “நாளைக்கு காலையில பேசாம நீ ஏதாவது உமன்ஸ் ஹாஸ்டலுக்கு போயிடு… நீ அங்கே தங்கிக்கிறதுக்கான பணத்தை வேணா நான் கொடுக்கிறேன்” என்றான். அவன் சொல்வதை அவள் பதிலேதும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆதலால் அவள் காலையில் புறப்படத் தயாராகிவிடுவாள் என்று அவன் நினைத்தான். ஆனால் நடந்ததே வேறு.   “நான் எங்கேயும் போக போறதில்ல… இங்கதான் தங்க போறேன்” என்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதென முடிவெடுத்தவள் அடுத்து ஒரு மிக பெரிய குண்டையும் அவர்கள் தலையில் தூக்கிப் போட்டாள். “என்னையும் உங்களோட பார்ட்னர்ஸா சேர்த்துக்கோங்க” என்றவள் கூற, “எது? பார்ட்னர்ஸா” என்று விஜ்ஜு அதிர, “ம்ம்ம் ஆமா… பார்ட்னர்ஸ் இன் க்ரைம்” என்றவள் சாதாரணமாய் தன் கரத்தினை நீட்ட, லெனின் அதிர்ந்தான். அவன் உடனடியாக, “அதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று மறுப்பு தெரிவிக்க, “ஏன் சரிபட்டு வராது… அதெல்லாம் வரும்… நான் ஒரு பெரிய ப்ளேன் வைச்சு இருக்கேன்… அது மட்டும் வொர்க் அவுட் ஆச்சுனா பல கோடி ரூபாய்க்கு மேல சுருட்டலாம்” என்றாள். அவள் பேசியதைக் கேட்டு விஜ்ஜு வாயடைத்து நின்றுவிட்டான். ஆனால் லெனின் சம்மதிக்கவில்லை. “இல்ல நந்தினி… என் கான்ஸ்ப்ட் பணத்தை திருடுறது இல்ல… நேர்மை இல்லாத அதிகாரிங்களை பழி வாங்குறதுதான்… அதுக்கு மேல நான் செய்ய நினைக்கிற சில காரியங்களுக்குப் பணமும் தேவைப்படுது… அவ்வளவுதான்” என்றான். “இத பாரு லெனின்… நீ சொல்ற கான்ஸ்படும் நான் சொல்ற கான்ஸ்ப்டும் ஒன்னுதான்… ஆனா என் டார்கெட் அதிகாரிங்க இல்ல… அரசியல்வாதிங்க… அதே போல என் மோட்டிவ் பணத்தை திருடுறது இல்ல… இன்பர்மஷன்ஸை திருடுறது” என்றவள் சொல்ல, “புரியல” என்றான் லெனின். “நாம பணத்தை திருடினா அவங்க திரும்பியும் அந்த பணத்தை சம்பாதிக்க இன்னும் இன்னும் லஞ்சம் வாங்குவாங்களே ஒழிய திருந்த மாட்டாங்க… அதுவே இன்பர்மேஷன்ஸை திருடுனா… அவங்களை பயமுறத்துலாம்… நம்ம விருப்பம் போல ஆட்டிவிக்கலாம்… தேவைபட்டா பெருசா ஊழல் வழக்கில சிக்க வைக்கலாம்… இது எல்லாமும் செய்யலாம்… ஆனால் அதுக்கு நம்ம பணத்தைத் திருடக் கூடாது… ஒவ்வொருத்தனோட தகவல்களை திருடணும்…” என்றாள். விஜ்ஜுவிற்கு எதுவும் புரியவில்லை. என்ன உளறுகிறாள் இவள் என்றுதான் நினைத்தான். ஆனால் அவள் மிகத் தெளிவான திட்டத்துடனே அவர்களிடம் பேசினாள். லெனின் தீவிரமாக யோசித்துவிட்டு, "நீ சொல்றது எல்லாம் சாத்தியமா?” என்று கேட்டான். “கம்புயூட்டர் வார்ல்ட்ல எல்லாமே சாத்தியம்… ஹேக்கிங்… இருந்த இடத்துல இருந்தே திருடறது… அதுவும் மூளையை வைச்சு…” என்றவள் மேலும் தொடர்ந்தாள். “என்கிட்ட பெரிய ஐடியா இருக்கு… கேமிங் இன்டஸ்டிரி… ஒவ்வொருத்தரோட கம்புயூட்டர் குள்ளயும் நாம நுழையணும்… நான் நினைச்ச மாதிரி மட்டும் நடந்துச்சு… ஒட்டுமொத்த இந்த ஊழல் அரசியல்வாதிங்களோட உச்சிக் குடுமியையும் நம்ம கைக்குள்ள கொண்டு வரலாம் ஆனா நான் இதெல்லாம் செய்ய எனக்கு நிறைய பணம் வேணும்… என் ஐடன்ட்டிட்டி எல்லாம் எரிஞ்சு போச்சு… அதெல்லாம் புதுசா வாங்கணும்… முக்கியமா அட்வான்ஸ்ட் மாடல் கம்புயூட்டர் ஒன்னு வாங்கணும்” என்று சொல்ல, விஜ்ஜு அவளை சந்தேகமாக பார்த்துவிட்டு, “இவ நம்மக்கிட்டயே ஆட்டைய போட பார்க்குறா… வேண்டாம் அண்ணா… பணம் எல்லாம் கொடுத்துடாதே” என்று எச்சரிக்கை செய்தான். “இல்ல லெனின்… நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்… நீ என்னை நம்பலாம்” என்றவள் அழுத்தமாகச் சொல்ல, சில நிமிடங்கள் யோசித்த லெனின் பின் ஆமோதிப்பாக கண்ணசைத்தான். ஆண் பெண் உறவுகளில் நந்தினியும் லெனினும் ஒரு விதிவிலக்கு. நட்பு அன்பு பாசம் பணம் என்ற எந்தவொரு அடிப்படை உறவுமின்றி அவள் மீது அவனும் அவன் மீது அவளும் நம்பிக்கை வைத்தனர். இருவரும் அன்றிலிருந்து ‘பார்ட்னர்ஸ் இன் க்ரைம்’ ஆனார்கள். நந்தினியின் துணிச்சலும் தைரியமும் அவனுக்கு முன்னமே தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் அவளின் புத்திக்கூர்மையை கண்டு அவன் அதிசயிக்கும்படி அவள் சொன்னதை எல்லாம் நடத்தி காட்டினாள். ஒரு மிகப் பெரிய கேமிங் நிறுவனத்தை உருவாக்கினாள். ஆனால் அதற்குள் பாரதி கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற செய்தி வந்து அவளை மொத்தமாகப் புரட்டிப் போட்டது.  இதெல்லாவறிற்கும் மூலகாரணம் முகுந்தன் என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தும் அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பாரதியை காப்பாற்றுவதற்கான எந்த வழியும் கிடைக்கவில்லை. தன் மாமா அறிவழகனிடம் அவள் மன்றாடினாள். முகுந்தனைப் பற்றிச் சொன்னாள். ஆனால் அவர் இவளை நம்பவே இல்லை. அதற்காகப் பின்னாளில் அவர் நிறைய அனுபவித்தார். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை… பாரதியைக் காப்பாற்ற முடியவில்லையே… என்ற இயலாமை நந்தினிக்குக் கோபமாய் வெறியாய் மாறியிருந்தது. சிலருடைய கோபமானது அவர்களை அழித்துவிடும். ஆனால் நந்தினியின் கோபம் அவளை வெறித்தனமாக உழைக்க வைத்தது. ஒரு வருடத்தில் அவளுடைய கேமிங் நிறுவனம் உலகெங்கிலும் பிரபலமானது. அதனை ஆதாரமாகக் கொண்டு நந்தினியின் என்.பி நிறுவனம் நிறைய நிறையத் தொழில்களில் கோலோச்சி நின்றது. அவளுடைய வயதிற்கும் வளர்ச்சிக்கும் முற்றிலும் சம்பந்தமில்லாதளவில் இந்தியாவின் வியாபார ஜாம்பவான்களின் பட்டியல்களில் அவள் பெயரும் இடம்பெற்றது. அந்த பத்து வருடத்தில் அவள் எட்டி பிடித்த உயரம் அசாத்தியமானது. அதனை அசுர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். முகுந்தன் அவள் வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு போனான். அவளுக்கு யார் துணை நின்றிருப்பார்கள். இத்தனை நாள் அவள் எங்கே இருந்திருப்பாள். இதெல்லாம் அவள் தனிப்பட்ட முறையில் எப்படிச் செய்திருப்பாள்… எப்படி எப்படி என்று கேட்டு அவன் தன் மூளையை குடைந்த போதும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. ‘நந்தினி’ என்ற ஒற்றை பெயரை வைத்துக் கொண்டே அவள் இத்தனையும் சாதித்தாள். ஆனால் அவளின் முதலீடுகள் எதுவும் நியாயமானது அல்ல. அதேநேரம் நியாயமானவர்களிடமிருந்து எடுத்ததும் அல்ல. பலவும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கருப்பு பணங்கள். யாருக்கும் தெரியாமல் அவள் பின்னணியில் விளையாடிய விளையாட்டு அது. கண்ணுக்கு தெரியாமலே பல ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பின்னிருந்து அவள் ஆட்டுவித்தாள். அவள் சொன்னது போலவே பலருடைய ரகசியங்கள் அவளின் மூன்றாவது கண்ணுக்குச் சிக்கியிருந்தன. சிக்கியவர்கள் பலரை அவள் தன் வழிக்கு கொண்டு வந்திருக்கிறாள். தேவைப்படும் பணங்களை மிரட்டி வாங்கியிருக்கிறாள். இன்னும் சிலரைச் சின்னாபின்னமாக்கி இருக்கிறாள்.  அவற்றுள் டில்லியை சேர்ந்த சிபிஐ ஷர்மா பல வழக்குகளை நேர்மையாக விசாரிப்பதை விடுத்துப் பல அரசியல்வாதிகளுக்குக் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதிலும் ராணுவ அமைச்சராக இருந்த வர்மாவுக்கு எதிரான மிக முக்கிய ஆயுத ஊழல் வழக்கில் ஆதாரங்களை அழித்துவிட்டு வழக்கைத் திருப்பி போட்டார். இந்த வரிசையில் கர்நாடகாவில் ஒரு அரசு மருத்துவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு பல வழக்குகளுக்குப் பொய்யான அறிக்கைகளை தயாரித்து குற்றவாளிகள் தப்பிக்கத் துணை போயிருக்கிறார். இதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பத்து வயது சிறுமிக்கு நடந்த கொடூரத்திற்கு மனசாட்சியே இல்லாமல் இதே பொய் அறிக்கை தந்திருக்கிறார். யசோதரன் தஞ்சையின் மாவட்ட ஆட்சியராக இருந்த போது அந்த மாவட்டத்தை அழித்து பாலைவனமாக்குமளவுக்கான ஒரு பயங்கர திட்டத்திற்குப் பணம் வாங்கிக் கொண்டு ஆதரவாக ஒப்புதல் கையெழுத்திட்டான். அவன் ஒரு காலத்தில் பாரதியின் நண்பனாக இருந்தவன். ஆனால் பணம் பத்தும் செய்யும். எப்பேர்பட்டவனையும் மாற்றி விடும்.  இறுதியாக அமைச்சர் வேதநாயகமும் இந்தப் பட்டியலில் அடக்கம். அவரும் ஊழலுக்குப் பேர் போனவர்தான். மேலும் வர்மாவின் விசுவாசி. ஆனால் இதெல்லாம் விட அவர் இறுதியாகச் செய்ய நினைத்த மிகப் பெரிய குற்றம் தன் மருமகன் முதலமைச்சராக வேண்டுமென்ற காரணத்திற்காக பாரதியை சிறையிலிருந்து வெளியே எடுத்து கொலை செய்யத் திட்டம் தீட்டியது. இந்த விஷயம் நந்தினியின் காதுக்குச் சென்ற நொடி அவரை முடித்துவிட முடிவு செய்தாள். அதனையும் அவர் மகள் விஷாலியினை வைத்தே செய்து முடித்தாள். இப்படியாகப் பல. ஆனால் இந்த செய்திகள் மட்டும்தான் அதிகாரிகளின் மர்ம கொலைகள் என்று பரபரப்பாகப் பேசப்பட்டன. இது எல்லாமே நந்தினி லெனின் திட்டம்தான். அவள் அர்ஜுனன் என்றால் அவன் அவளின் சாரதியாக முன் நின்று அவளை வழிநடத்திச் சென்றான். நாட்டை சீரழிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக அவர்கள் நடத்திய தர்மயுத்தம் அது. பத்து வருட காலமாக இப்படி நந்தினி பலரும் மிரளக் கூடிய நிறைய அரசியல் ரகசியங்களை சேகரித்து வைத்திருந்தாள். ஆனால் அதை எங்கே எப்படி வைத்திருக்கிறாள் என்பது லெனினுக்கும் கூட தெரியாத ரகசியம். தற்சமயம் அந்த ரகசியங்கள் அனைத்தும் நந்தினியின் மூளைக்குள் முடங்கியிருந்தன. அவளுக்கே தெரியாமல்! ஆனால் இது எதைப் பற்றியும் அறியாத துர்கா மிகப் பெரிய அரசியல் கனவைக் கண்டு கொண்டிருந்தாள். பெரும் ராஜாங்கத்தை ஆளும் அரசியாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டிருந்தாள். எல்லாம் பிரச்சாரத்தில் மக்கள் செய்த ஆரவாரத்தில் உண்டான மயக்கம். அவள் பிரச்சாரம் முடிந்து காரில் புறப்பட்டு சில மணி நேரங்கள் கடந்திருந்தன. அப்போது அவள் கனவைக் கலைப்பது போலக் கருணா அழைத்தான். “நீங்க அனுப்பின அந்த போட்டோவிலிருந்த ஆளை நம்மாளுங்க பார்த்திருக்காங்க” என, “யாரை சொல்ற… லெனினையா?” என்று கேட்டாள். “ஆமா… அவனேதான்… திருச்சி பஸ் ஸ்டான்ட்ல” என்று சொன்ன நொடி, “திருச்சிலயா?” என்ற கேட்டு ஜெர்க்கானாள். அவள் சற்று முன்பு அங்கிருந்துதானே புறப்பட்டாள். அவள் அதிர்ச்சியைத் தொடர்ந்து கருணா, “ஆனா கண்ணுல சிக்கினவன்… கையில மாட்டல ம்மா… கூட்டத்தில ஆள் தப்பிச்சிட்டான்” என்றான். “இதை சொல்றதுக்குதான் எனக்கு ரொம்ப அவசரமா கால் பண்ணியா” என்று எரிச்சலானவள், “ஆமா அவன் அங்கிருந்து எங்கே போயிருப்பான்னு ஐடியா இருக்கா?” என்று கேட்க, “நம்ம மாநிலத்தோட மைய பகுதியே திருச்சிதான்… அங்கிருந்து அவன் எங்கே போயிருப்பான்னு கண்டுபிடிக்கிறது கஷ்டம்தான்… ஆனா கண்டுபிடிக்க சொல்லி இருக்கேன்” என்றவன் சொல்ல, “எதையும் கண்டுப்பிடிக்கல… ஆனா தகவல் சொல்ல போன் மட்டும் பண்ணிட்ட” என்றவள் கடுகடுக்க, “அது இல்ல ம்மா… அவன் கூட ஒரு பொண்ணு இருந்தாளாம்… நம்மாளுங்க சொன்னாங்க… அதை பத்தி சொல்லத்தான்” என்றவன் தயக்கமாக இழுக்க, அவளுக்கு அந்த நொடி ராஜேந்திரன் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அப்போது அவளுக்கு பயங்கரமான ஒரு யூகம் வந்தது. அந்த யூகம் தவறாக இருக்க வேண்டும் என்று மனதில் எண்ணி கொண்டவள் பரபரப்புடன் ,  “ஆளைத்தான் மிஸ் பண்ணீங்க… அவங்களை போட்டோவாச்சும் எடுத்தீங்களா?” என்று கேட்க, “சேஸ்ஸிங்ல போட்டோலாம் எப்படி ம்மா எடுக்க முடியும்” என்றவன் குரலில் சுருதி இறங்கியது. அடுத்து அவள் என்னவெல்லாம் வசை பாட போகிறாளோ என்ற பயத்தில்! “எதையுமே உருப்படியா செய்யாதீங்க” என்று அவனிடம் காய்ந்தவள் சட்டென்று ஒரு யோசனை வர, “அந்த பஸ் ஸ்டாப் சுத்தி இருக்க சிசிடிவி எல்லாத்தையும் செக் பண்ணுங்க… உள்ளே வெளியேன்னு ஒன்னு விடாதீங்க… கண்டிப்பா அவங்க முகம் ஏதாச்சும் ஒண்ணுலயாவது பதிவாகி இருக்கும்… அதை எடுத்து எனக்கு உடனே அனுப்பி விடுங்க” என்றாள். “சரி ம்மா… அனுப்புறேன்” என்றவன் அழைப்பை துண்டித்த பிறகு அவளுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகங்களாய் கடந்தன. சரியாக அவள் விமானம் வழியாக மதுரையில் இறங்க, அவள் பேசியில் ஒரு குறுந்தகவல் கிறீச்சிட்டது. அவள் அதனை திறந்து பார்த்தாள். அந்த கணமே சரசரவென அவள் நெற்றியில் வியர்வை துளிர்த்து வழிந்தன. அவளது யூகம் மிகச் சரியாக இருந்தது. அந்த பெண் வேறு யாரும் இல்லை. சாட்ஷாத் நந்தினியேதான். சற்று முன்புதான் நந்தினியே உயிருடன் வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றவள் கர்வப்பட்டுக் கொண்டாள். ஆனால் அந்த நம்பிக்கை இப்போது லேசாக ஆட்டம் கண்டுவிட்டது. நந்தினி உயிருடன் வந்துவிட்டாள்.  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா