மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vilakilla Vithigal AVANVilakilla Vithigal Avan - E 55Post ReplyPost Reply: Vilakilla Vithigal Avan - E 55

Quote from monisha on August 14, 2023, 12:28 PM

55
கருணாவின் மரணம்தான் ஒட்டு மொத்த தமிழ் சேனல்களிலும் அப்போதைக்கான பிரேக்கிங் நியுஸ். தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆளுங்கட்சி அமைச்சரின் மரணம் என்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியிருந்தது. இந்த செய்தி துர்காவின் செவிகளை எட்டிய மறுகணமே அவள் அரண்டு போனாள். நந்தினி உயிருடன் இருக்கிறாள் என்ற அதிர்ச்சி தீர்வதற்குள் இப்படி ஒரு செய்தியா? அவளால் நம்பவே முடியவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்பாக அவளிடம் பேசியவன். இப்போது உயிருடன் இல்லை. இந்த வாழ்க்கையானது நிலையற்றது என்பதைப் புரிந்து கொள்ள இதை விடவும் சிறந்த சான்று வேண்டுமா? ஆனால் அதெல்லாம் துர்காவின் மூளைக்குக் கொஞ்சமும் எட்டவில்லை.  அவளுடைய அப்போதைய முக்கிய கவலை கருணா இல்லையென்றால் வேறு யாரைக் கொண்டு தம் ரகசிய வேலைகளை எல்லாம் செய்வது என்பதுதான். மற்றபடி அவன் இறப்போ அல்லது ஒரு அமைச்சரின் இழப்போ அவளை பெரியளவில் பாதிக்கவில்லை. இதெல்லாம் ஒரு புறமிருக்க பாரதிக்கும் கருணாவின் மரணத்திற்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் அவள் மனதிலோடியது. ஆனால் சேனல்களின் விவரணையைப் பார்த்தால் நடந்தது விபத்து என்றுதான் தோன்றியது. அதேநேரம் கருணா வைத்திருந்த ரகசிய தொடர்பு குறித்து அவளுக்கு நன்றாகத் தெரியும். அந்த பெண்ணை பார்க்க பெரும்பாலும் அவன் தனியாகத்தான் போவான். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.  ஒரு வேளை பாரதி இதனைத் தெரிந்து கொண்டு கருணாவைக் கொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கலாம். இப்படியொரு விபத்தை அவனே திட்டமிட்டு உண்டாகியிருக்கலாம். இருப்பினும் முகுந்தனைக் கொல்லாத பாரதி கருணாவை எதற்கு கொல்ல வேண்டும்? இவ்வாறாக முன்னுக்குப் பின் முரணாகச் சிந்தித்த அவள் குழம்பிய போதும் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமிடலும் அவள் மூளைக்குள் ஓடி கொண்டிருந்தது. உடனடியாக அவள் தம்முடைய பிரச்சார பயணங்களை ரத்துசெய்துவிட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்பட ஆயத்தமானாள். காலை விடிந்தும் விடியாததுமாக லெனின் செவிகளையும் கருணாவின் மரணச்செய்தி எட்டியது. பாரதி இரண்டு நாளாக பேசவில்லையே என்ற இரவெல்லாம் உறங்காமல் பதட்டத்திலிருந்தவனுக்கு இந்த செய்தி இன்னும் இன்னும் பதட்டத்தை உண்டுபண்ணியது. “ஏன் பாரதி இன்னும் கால் பண்ணல… கருணா டெத்துக்கு துர்கா எப்படி ரியாக்ட் பண்ணுவா… ஒன்னும் புரியலையே” என்று பால்கனியில் நடந்தபடி புலம்பி கொண்டிருந்தவனிடம் காபியை கொண்டு வந்து கொடுத்தாள் சீதா. “விஜ்ஜு எழுந்துட்டானா?” என்று கேட்டுக் கொண்டே காபியை எடுத்து கொண்டான். சீதா அவன் தூங்குவதாக சமிஞ்சை செய்ய, அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. இவ்வளவு காலையில் யாராக இருக்கும் என்றவள் முகம் யோசனையாக மாற, லெனின் காபியை அங்கேயே வைத்துவிட்டு அவசரமாகக் கதவைத் திறக்க ஓடினான். இவன் எதற்காக இப்படி ஓடுகிறான் என்றவள் புரியாமல் விழிக்க, லெனின் சென்று வாயிற்கதவைத் திறந்தான். அவன் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.  பாரதிதான் வந்திருந்தான். லெனின் பாரதியை அணைத்து கொண்டு, “நல்ல வேளை… நீ வந்துட்ட… டிவில வந்த நியூசை பார்த்து உனக்கும் ஏதாச்சும் ஆகி இருக்குமோன்னு பயந்துட்டேன்” என்றவனின் அத்தனை நேர பதட்டமெல்லாம் மொத்தமாக வடிந்திருந்தது.  பாரதியைப் பார்த்த சீதா முகமலர்ச்சியோடு அவனை வரவேற்றாள். “எப்படி ம்மா இருக்க?” என்று அவளிடம் பரிவாக விசாரிக்க, தலையசைத்துப் புன்னகைத்தவள் அவனுக்கு காபி கொண்டு வருவதாக உள்ளே சென்றாள். பாரதி ஆயாசமாக சோபாவில் அமர்ந்து கொண்டே, “நியூஸ்ல எல்லாம் என்ன சொல்றாங்க?” என்று லெனினிடம் வினவினான். “நியுஸ்ல சொல்றதுக்கு இருக்கட்டும்… நீ நடந்ததை சொல்லு” என்று அருகில் அமர்ந்தபடி அவன் ஆர்வமாகக் கேட்க, “நான் எதுவும் பண்ணலபா… அவன் பயத்துல ஹார்ட் அட்டேக் வந்து போயிட்டான்” என்றவன் தன் பையிலிருந்த செல்பேசியை எடுத்து லெனினிடம் கொடுத்தான். “ஏய் இது கருணாவோடதா?” என்று அதிர்ச்சியாக லெனின் கேட்கவும் அவன் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.  “ஃபோனை காணோம்னு போலிஸ் தேடுனா”  “நம்ம போலிஸ்காரங்க அவ்வளவு தெளிவெல்லாம் கிடையாது… அவனுங்க இருக்க பரபரப்பில ஃபோனை காணோம்னு எல்லாம் தேட மாட்டாங்க… வாய்ப்பு இல்ல” என்றவன் மேலும்,  “அப்படியே தேடினாலும் பிரச்சனை இல்ல… நான் ஆக்ஸிடென்டான லொக்கேஷ்ன்லயே ஃபோனை ஸ்விட்ச்ட் ஆப் பண்ணிட்டேன்… ஆனா அதுக்கு முன்னாடி அவன் துர்காவுக்கு அனுப்பன ஒரு மெஸ்ஜை பார்த்தேன்… எனக்கு பயம் வந்திருச்சு… அதான் உடனே உங்களை நேர்ல பார்த்துடணும்னு பதறி அடிச்சு ஓடி வரேன்” என்றான். “அப்படி என்ன மெஸஜ்?”  “உன்னையும் நந்தினியையும் பஸ் ஸ்டாண்ட்ல அந்த கருணாவோட ஆளுங்க பார்த்துட்டாங்க போல… துர்காவுக்கு நீங்க இரண்டு பேரும் இருக்க சிசிடிவி புட்டேஜ் ஒன்னு அனுப்பி இருக்கானுங்க” என்றவன் சொன்ன நொடி லெனின் அதிர்ந்தான்.  “அடக்கடவுளே! நான் எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தும் இப்படியாகிடுச்சே”  “விடு… அவங்க கைக்கு நீங்க சிக்கல இல்ல… அதுவே பெரிய விஷயம்” என்று பெருமூச்சுடன் பாரதி சொல்ல,  “நந்தினியை துர்கா பார்த்துட்டான்னா அவ சும்மா இருப்பாளா? பெருசா ஏதாச்சும் பண்ண பார்ப்பாளே?” என்றான் லெனின்.  “அவ இப்போ கருணாவோட டெத் பத்தின டென்ஷ்னல இருப்பா… அவ சுதாரிக்கிறதுக்குள்ள நீங்க நம்ம ப்ளேன்படி அந்தமான் போய் சேர்ந்துடுங்க” என்றான் பாரதி. “நாங்க போறதெல்லாம் இருக்கட்டும்… நீ என்ன பண்ண போற” என்று லெனின் தீவிரமாக கேட்க, அவன் பதில் பேசாமல் கருணாவின் கைப்பேசியை பார்த்தான்.  “துர்காகிட்ட நேரடியா பேச போறியா?”  “ம்ம்ம்… இப்பவரைக்கு அவளுக்கு நான் இங்கே இருக்கேன் அங்கே இருக்கேன்னு ஒரு மாயையை உருவாக்கி வைச்சு இருக்கேன்… இனிமே நேரடியா டீல் பண்ண வேண்டியதுதான்”  “அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்” என்று லெனின் மாலதியை சந்தித்ததை கூறினான். மேலும் தியாகுவின் மரணத்தை பற்றியும் தெரிவிக்க, பாரதியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  லெனின் அவன் தோளை தட்டி சமாதானம் செய்ய, “தியாகு மாமா பாவம்… அவரை நான் ஒரு தடவையாவது போய் பார்த்திருக்கலாம்” என்று அவன் வருந்த,  “நம்ம இப்படியெல்லாம் நடக்கும்னு யோசிச்சோமா என்ன?” என்றான் லெனின் அவனை அமைதிப்படுத்தும் விதமாக!  “நான் யோசிச்சேன் லெனின்… என்னால அவருக்கு எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னுதான் அவரை விட்டு நான் தள்ளி இருந்தேன்”  அப்போது காபியுடன் வந்த சீதா பாரதி கண்ணீருடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து பதட்டத்துடன் விசாரிக்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல ம்மா” என்று அவன் தன் கண்களை துடைத்து கொண்டான்.  அதேசமயம் அங்கே வந்த விஜ்ஜுவும் பாரதியை பார்த்து களிப்புடன் விசாரித்து கொண்டே அவர்கள் உரையாடலில் கலந்து கொண்டான். மேலும் லெனின் மாலதி சொன்ன திட்டத்தை பற்றி பாரதியிடம் விவரிக்க, “வேண்டவே வேண்டாம்” என்று மறுப்பு தெரிவித்தவன் மேலும், “யாரும் எதுவும் பண்ண வேண்டாம்… ஒழுங்கா அந்த பொண்ணுக்கு ஃபோன் பண்ணி ஊருக்கு புறப்பட சொல்லுங்க… இதுக்கு மேல என்னை வைச்சு யாரும் பாதிக்கப்படுறதுல எனக்கு விருப்பமில்லை…  என் அம்மா… வசு… நந்தினி… இப்போ தியாகு மாமா… போதும்டா சாமி… இதுக்கு மேல என்னால யாரையும் இழக்க முடியாது” என்றவன் நடந்த சம்பவங்களை எண்ணி உள்ளம் குமுற, லெனினால் அவன் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது.  “சரி பாரதி… நான் அந்த பொண்ணுக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்… நீ டென்ஷனாகாதே… ரிலேக்ஸ் பண்ணு” என்று அவனை அமைதிப்படுத்தி,  “போ… முதல போய் குளிச்சிட்டு… நந்தினியையும் அழைச்சிட்டு வா… எல்லோரும் ஒண்ணா சாப்பிடலாம்” என்றான்.  அதன் பின் பாரதி தன் பேகை எடுத்து கொண்டு மேலே சென்றான். அறை கதவை அவன் மெதுவாக திறக்க, மெல்ல திரைசீலைகளின் வழியே சூரியன் அப்போதுதான் உள்ளே எட்டி பார்த்து கொண்டிருந்தது.  நந்தினியோ போர்வைக்குள் சுருண்டிருந்தாள். சீரான அவளது மூச்சுக்காற்று அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள் என்பதை உணர்த்த, அவளை தொந்தரவு செய்யாமல் அவளருகில் அமர்ந்து தலையை மிருதுவாக வருடி கொடுத்தான். அவள் உடல் மட்டுமல்ல. மனமும் கூட மீளா ஆழ்ந்த உறக்கத்தில்தான் இருக்கிறது. இன்னும் எத்தனை வருடங்களுக்கு அது விழிக்காமல் அப்படியே இருக்குமென்று அவனுக்கு தெரியவில்லை.  காலம்தான் அதற்கான விடையை சொல்ல வேண்டும். நாளை இந்நேரத்திற்கு அவள் கடல் கடந்து அவனை விட்டு வெகுதூரம் போயிருப்பாள். அந்த எண்ணமே அவள் மனதை பாரமாக கனக்க செய்ய, கண்ணீர் அவன் கன்னம் நனைத்து கீழிறங்கியது. எங்கே தன் கண்ணீர் துளிகள் பட்டு அவள் உறக்கம் கலைந்தவிடுமோ என்று அவன் அவசரமாக அவளை விட்டு விலகி வந்தான்.  அவள் காத்திருந்த காலத்தில் அவனுக்கு அவள் காதல் புரியவில்லை. அவனுக்கு புரிந்து அவளை நாடி வந்த நேரத்தில் அவளுக்கு அவன் நினைவேயில்லை.  விதி அவர்கள் காதலை வைத்து கண்ணாமூச்சு விளையாடி கொண்டிருந்தது.  தன் மனதின் சோகத்தை சொல்லவும் முடியாமல் அதனை விழுங்கவும் முடியாமல் அவன் புழுங்கி தவித்தான். குளியலறைக்குள் சென்று வெகுநேரம் தன் மனவேதனைகள் தீரும் வரை கண்ணீர் விட்டு அழுதான். காதலிப்பதாக சொல்லி அவன் வாழ்க்கையையே ஒருத்தி காவு வாங்கிவிட்டாள். தன் காதலை சொல்லாமலே ஒருத்தி ஒவ்வொரு நாளும் அவனுக்காகவே வாழ்ந்து மெழுகாக உருகி தன்னை கரைத்து கொண்டிருக்கிறாள்.  முரண்பட்ட இந்த இரு பெண்களால் அவன் வாழ்நாட்கள் அனைத்தும் கண்ணீரும் காத்திருப்புமாகவே கரைகின்றன.  இப்படி ஒரு கொடூரமான விதியை அவன் தலையில் எழுதி வைக்குமளவுக்கு அந்த கடவுளுக்கு அவன் மீது அப்படி என்ன கோபமோ அவனுக்கு தெரியவில்லை.  ஆர தீர அழுதுமுடித்தவன் குளித்து முடித்து தலையை துவட்டி கொண்டு வெளியே வர, நந்தினி எழுந்துவிட்டிருந்தாள். திரைசீலைகளை விலக்கி அமைதியாக வெளியே பார்த்து கொண்டிருந்தாள்.  இத்தனை பரபரப்புக்கு இடையிலும் அவளுக்கு கிடைத்திருக்கும் இந்த அமைதி ஒரு வரம்தான்.  சூரிய ஒளி அவள் முகத்தில் பட்டு பிரகாசிக்க, அந்த காட்சியை அவன் விழிகள் ரசனையுடன் நோக்கின. இத்தனை நாள் இல்லாத திருநாளாக அவன் உடலும் மனமும் அவளிடம் சரணடைய துடித்தது, காதலுக்கும் மோகத்திற்குமான இடைப்பட்ட உணர்வு அது.  மெதுவாக அவள் பின்புறம் சென்று அவள் காதுமடலில் உரசி கொண்டே அவளை இறுக்கமாக அணைத்து கொண்டான்.  எந்த உணர்வு எப்படியிருந்தாலும் தன்னை தற்காத்து கொள்ளும் அவளின் பெண்மை உணர்வு மட்டும் அவளை விட்டு போகவேயில்லை. சிறு வயதிலிருந்த அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட போராட்ட உணர்வு. அது இன்னும் அவளுக்குள் உயிர்ப்புடன்தான் இருந்தது என்பதற்கு சாட்சியாக அவனை அந்த நிலையிலும் அத்தனை வீரியமாக தள்ளி விட்டு விலகி வந்தாள். ஆனால் அந்த உணர்வை தனக்கு உரிமையானவனிடம் காட்டுகிறோம் என்பதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை.  “ஏய் நான்தான்டி” என்று பாரதி அவள் கரத்தை பிடிக்க வரவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்த கண்களில் உணர்வில்லை. அதேநேரம் அவனை தெரிந்தவன் என்ற எண்ணத்தில் அவள் அமைதியடைந்தாள். ஆம். தெரிந்தவன். அவளை பொறுத்தவரையில் இந்த மூன்று வருட நினைவுகளில் அவன் அவளுக்கு ‘தெரிந்தவன்’. அவ்வளவுதான். மற்றபடி பிரத்யேகமாக எந்தவித உணர்வும் அவனிடம் இல்லை.  அதுவும் சிகிச்சையிலிருந்து அவள் மீண்டு எழுந்த காலகட்டத்தில் அவன் முகத்தை கூட அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. இப்போதாவது அவன் பேசினால் அவன் முகத்தை பார்க்குமளவுக்கு அவள் மாறியிருக்கிறாள்.  “நான் மயக்கத்தில இருந்த போது எனக்கு முத்தம் கொடுத்தவ நீ… இப்போ நானா உன்னை நெருங்கி வரேன்… நீ விலகி போற” என்றவன் ஆதங்கத்துடன் உரைக்க அவள் உணர்வற்ற பார்வை பார்த்தாள்.  “அப்படி யாரையோ பார்க்குற மாதிரி என்னை பார்க்காதேடி” என்றவன் ஏக்கத்துடன் சொல்ல அப்போதும் அவள் தன் பார்வையை மாற்றி கொள்ளவில்லை. “இப்படி என்னை நீ பார்க்குறதுக்கு நீ என் முகத்தை பார்க்காம இருக்கிறதே பெட்டர்” என்றான். அவள் மௌனமாக தலையை குனிந்து கொள்ள,  “பார்றா இப்ப சொன்னது மட்டும் மேடமுக்கு புரிஞ்சிடுச்சு… மத்த விஷயம் எது பேசினாலும் ஒன்னும் புரியாது மாதிரி அப்படியே பேந்த பேந்த விழி” என்றவன் தவிப்புடன், “ஏன்டி இப்படி என்னை படுத்துற?” அவள் தோள்களிரண்டையும் பற்றி உலுக்கினான். “கையை விடுங்க” என்றவள் மிகமிக அரிதாக அவனிடம் வாய் திறந்து பேசினாள்.  “இதெல்லாம் நல்லா பேசு… ஆனா மத்த எந்த கேள்வி கேட்டாலும் வாயே திறந்திடாதடி” என்றவன் சொல்ல, அவள் அவன் கைகளை விலக்கிவிட்டு சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.  “நான் பேசிட்டே இருக்கேன்… நீ பாட்டுக்கு இங்கே வந்து உட்கார்ந்துக்கிட்டா என்னடி அர்த்தம்” என்றவன் அவள் முன்னே சென்று அமர்ந்து,  “சாரின்னு உன்கிட்ட லட்சம் தடவைக்கு மேல சொல்லிட்டேன்… நான் செஞ்சதெல்லாம் தப்புன்னு உன்கிட்ட அழுது தீர்த்துட்டேன்… ஆனா அப்போ கூட உன் மனசு இறங்கல இல்ல… இதுக்கு மேல நான் என்னதான்டி பண்ணனும்னு எதிர்பார்க்குற” என்று அவன் ஆற்றாமையுடன் கேட்டான். ஆனால் அவன் வலியும் ஆற்றாமையும் அவளுக்கு கொஞ்சமும் புரியவில்லை.  அவள் கரத்தை எடுத்து தன் கன்னங்களில் அழுத்தி பிடித்து கொண்டவன், “ஞாபகப்படுத்திக்கோ நந்தினி… என்னை ஞாபகப்படுத்திக்கோ… உன்னை ஞாபகப்படுத்திக்கோ… நம்ம காதலை ஞாபகப்படுத்திக்கோ” என்று சொன்னவன் கண்ணீருடன்,  “சாரி… இப்ப வரைக்கும் நம்ம காதல்னு ஒன்னு இல்லவே இல்ல இல்ல… நீ என்னை காதலிக்கும் போது நான் உன்னை காதலிக்கல… நான் உன்னை காதலிக்கும் போது உனக்கு நான் ஞாபகத்திலயே இல்ல” என்றவன் தன் மனவலியை வார்த்தைகளாக கொட்டி தீர்க்க, அவள் ஏதோ கதை கேட்கும் உணர்வில்தான் அமர்ந்திருந்தாள்.  அவன் இப்படி அவளிடம் பேசி பேசி அவளுக்கு அது பழகி போய்விட்டதே ஒழிய வேறு எதுவும் புதிதாக அவள் நினைவுக்கு வரவில்லை.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா