மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: IrumunaiKathiIrumunaikathi - Episode1Post ReplyPost Reply: Irumunaikathi - Episode1

Quote from monisha on October 31, 2023, 6:04 PM

1

துவாரபாலகன்
பலர் சரித்திரம் படிப்பார்கள்… சிலர் சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெறுவார்கள்… வெகுசிலர் மட்டுமே சரித்திரம் படைப்பார்கள்… இராஜராஜசோழன் அந்த வெகுசிலரில் ஒருவன்! அந்த மாபெரும் மன்னன் உருவாக்கியத் தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை சாதாரணமாய் கடந்த அசைக்க முடியா ஒரு சரித்திரப் படைப்பு. இயற்கைச் சீற்றங்களையும் கூட எதிர்த்து நிற்கும் ஓர் அசாத்திய கட்டமைப்பு... செம்மொழியான தமிழ் மொழியும் கூட தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானத்தின் அதிகம்பீரத்தை விவரிக்க வார்த்தைகள் தேடும். அறிவியல் ஆச்சரியங்கள், வரலாற்றின் அதிசயங்கள், விவரிக்க முடியா கட்டடக்கலையின் உயரிய தொழில்நுட்பங்கள், சிற்பக்கலையின் நுணுக்கங்கள், இவையெல்லாம் தாண்டி தமிழனின் சிறந்த ஆளுமைத் திறமைக்குச் சான்று எனச் சொல்லிக்கொண்டே போகலாம் தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி! அத்தகைய சிறப்பம்சம் பொருந்திய கோயிலின் வெளிகோபுர வாயிலில் நின்று கொண்டிருந்த அந்த அயல்நாட்டவனின் உலகம்... தற்சமயம் தன் சுழற்சியை நிறுத்திக் கொண்டது. பிரமித்துப் போய் அங்கிருந்த சிலைகளோடு சிலையாய் அவனும் சமைந்திருந்தான். பளீரென்ற வெண்மை கலந்த தோலோடு... அவனின் கூர்மையான விழிகள் கோதுமை நிறத்தில் பளபளக்க, அவன் முடியும் கிட்டத்தட்ட அதே நிறத்தையே ஒத்திருந்தது. அவன் உயரத்தோடு சரிவிகிதமாகவும் சீராகவும் இருந்த அவன் உடற்கட்டமைப்பைப் பார்க்கும் போது... அவன் உடற்பயிற்சி செய்வதில் வல்லவன் என்பது புலப்பட்டது. ஆனால் அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸும் அவன் ஆர்ம்ஸைத் தத்ரூபமாகக் காட்டும் அந்தக் கையில்லா டிஷர்டும்தான் அந்த இடத்தின் ஆளுமைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது. இவையெல்லாம் தாண்டி அந்த அயல்நாட்டினன்... எந்த நாட்டுப் பெண்ணையும் நொடி நேரத்தில் வசீகரிக்கும் ஆண்மகன்தான் என்பது மறுக்க முடியாத உண்மை! அவன்தான் இவான் ஸ்மித்!(Ivan Smith) அவன் அணிந்திருந்த உடையும் அவன் கரத்திலிருந்த அந்த நுட்பமான புகைப்படக் கருவியும் அவனை ஒரு சுற்றுலாப் பயணி என்றே தோன்றச் செய்தது. அத்தகையவன் இப்போது வியந்து நோக்கி ஆச்சர்யத்தில் மூழ்கி நின்றது அந்த நுழைவு கோபரத்தில் சுவற்றோடு சுவராய் செதுக்கப்பட்டிருந்த துவாரபாலகர் சிலையைப் பார்த்துத்தான். சில நொடிகள் அந்தச் சிலையைப் பார்த்து பிரமிப்பில் ஆழ்ந்திருந்த இவான்... மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினான். அப்போதே அவன் கவனித்தான். அவனருகில் நின்று கொண்டிருந்த அவன் கைட் (சுற்றுலா வழிகாட்டி) தொடர்ச்சியாய் தஞ்சைக் கோயிலைப் பற்றிய வரலாற்று விவரங்களை ஒப்பித்துக் கொண்டிருந்ததை! அவன் மூச்சுவிடாமல் சொல்லிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்தால் அவையெல்லாம் அவன் பெரும்பாடுப்பட்டு மனப்பாடம் செய்தவை என்பது நன்றாகவே புரிந்தது. அதுவும் அவன் தப்பும் தவறுமாய் பேசிய ஆங்கிலத்தைக் கேட்க கேட்க இவானுக்குச் சிரிப்பு தாளவில்லை. இவான் அந்த கைடிடம் கைக் காண்பித்து அவன் பேச்சை நிறுத்த, அவன் மெல்ல மூச்சு வாங்கிக் கொண்டான். இவான், “வாட் தி மீனிங் ஆஃப் திஸ் ஸ்டேச்யூ?” என்று வினவ, அவன் பேசிய ஆங்கிலம் கொஞ்சம் தாமதமாகவே அந்த கைடுக்குப் பிடிப்பட, “திஸ் ஸ்டேச்யூ... துவாரபாலகர்.... தி கிரேட் லார்ட் சிவா செக்யூரிட்டி” என்று விளக்கமளித்தான். இவானின் விழிகள் அகல விரிந்தன. அதாவது அந்தக் கம்பீரமான துவாரபாலகர் சிலை தன் ஒற்றைக் காலைத் தூக்கி ஓர் பாம்பை மிதித்துக் கொண்டிருக்க, அந்தப் பாம்போ தன் வாயில் ஒரு யானையைப் பாதி விழுங்கிக் கொண்டிருந்தது. யானையை விழுங்கும் பாம்பு எத்தனை பெரியதாயிருக்கும். அந்தப் பாம்பைத் தன் காலில் மிதிக்கும் துவராபாலகன் எத்தனை சக்தி படைத்தவன். அத்தகைய சக்தி படைத்தவனைப் பாதுகாவலனாய் கொண்ட எம்பெருமானின் சக்தி எத்தனை அபாரமானதாக இருக்கும் என்பதே அதன் உள்ளார்ந்த தத்துவம்! இவானின் வியப்பெல்லாம் கருவறையில் அரூப ரூபமாய் கட்சியளிக்கும் சிவபெருமானின் அபார சக்தியைக் கோபுர வாயிலின் துவாரபாலகர் வழியாக சொல்லிய அந்தச் சிற்பியின் அறிவின் உச்சத்தைப் பற்றிதான்! இந்தத் தத்துவம் அங்கேயே வசிக்கும் அந்த கைடுக்குப் புரிந்ததோ இல்லையோ! அயல்நாட்டினன் இவானின் மூளைக்கு எட்டி அவனை எண்ணிலடங்கா வியப்பில் ஆழ்த்தியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா