மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: IrumunaiKathiIrumunaiKathi - Episode 9Post ReplyPost Reply: IrumunaiKathi - Episode 9

Quote from monisha on November 19, 2023, 7:59 PM

9

மாமல்லபுரம்

நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த சிற்ப வல்லுநர்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பங்களின் அணிவகுப்புகள், காலங்கள் தாண்டி தன் வரலாற்றை நிமிர்ந்து நின்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் கற்கோவில்! கட்டடக் கலையின் ஆச்சரியமாய் ஐந்து ரதங்கள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம் மாமல்லபுர நகரத்தின் சிறப்பைப் பற்றி!

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திரவர்மனின் கலை மீதான ஆழமான காதலுக்கு ஆதாரமாய் காலங்கள் தாண்டி அழியா புகழோடு தமிழனின் கர்வமாய் நின்று கொண்டிருந்தது அந்தச் சிற்பநகரம்!

நிறைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துக் கொண்டிருக்க, கடலலைகளின் இறைச்சல்களோடு மனித இறைச்சல்களும் அந்த இடத்தை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கின!

கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள் மெல்லச் சூடுப் பிடிக்கத் தொடங்க, அந்தக் கடைகள் இருந்த சாலையின் ஓரத்தில் யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் நின்றிருந்தாள் தமிழச்சி!

கருப்பு நிற பேன்ட்டும் ஊதா நிறத்தில் ஷர்ட்டும் அணிந்து கொண்டு மிடுக்காய் நின்றிருந்தவள், அடிப்பட்ட கரத்தில் கட்டுக்குப் பதிலாக ஆர்ம் ஸ்லிங் அணிந்திருந்தாள். அது அவள் தோள்பட்டையை தாங்கிப் பிடித்திருந்தது.

அவள் விழிகள் உன்னிப்பாய் அங்கிருந்த ஒரு கடையின் மீது பதிந்திருந்தது. ஆர்.எஸ் ஸ்டாச்சு ஷாப்... பார்க்க சிறியளவிலான கடைதான். ஆனால் அது அப்போது மூடி இருந்தது.

தமிழச்சி தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்து, “என்ன வினோத்? கடைங்க எல்லாம் ஓபன் பண்ணிட்டாங்க... இவன் மட்டும் இன்னும் கடையை ஓபன் பண்ண வரல... நாம வர்ற விஷயம் தெரிஞ்சிருக்குமோ?!” என்று கேட்கவும்,

“தெரியலையே மேடம்!” என்றான் இன்ஸ்பெக்டர் வினோத்.

“அவன் வீட்ல ஆள் போட சொன்னேனே... போட்டீங்களா?!” என்றதும் அவன் ஆமோதிக்க, “கால் பண்ணி அவன் வீட்ல இருக்கானான்னு கேளுங்க” என்றாள்.

அதே போல் வினோத் தன் பேசியை எடுத்து பேச, அவள் முன்னேறி நடந்து அந்தக் கடையின் அருகாமையில் இருந்த கடைக்காரரிடம் விசாரித்தாள்.

“சீக்கிரம் திறந்திருவாப்ல... ஆனா என்னன்னு தெரியல... இன்னும் ஆளைக் காணோம்” என்றார் அந்தக் கடைக்காரர்.

“நேத்துக் கடைத் திறந்திருந்துச்சா?!” என்றவள் கேட்க,

“ஹ்ம்ம்... நைட்டு வர திறந்து இருந்துச்சே!” என்று அவர் சொல்லவும் அவள் முகம் குழப்பமாய் மாறியது. அப்போது அவர், “நீங்க யாரு... என்ன விஷயமா விசாரிக்கிறீங்க?” என்று கேட்க,

“ஒரு பெரிய கிருஷ்ணன் சிலை செஞ்சு தரச் சொல்லி ஆர்டர் கொடுத்திருந்தேன்” என்றவள் சாதாரணமாக பொய்யுரைக்க, “அதெல்லாம் பக்காவா பண்ணிக் கொடுத்திடுவாரு மேடம்” என்றார்.

யோசனையோடு அவள் வெளியே வர வினோத் அவள் அருகே வந்து, “மேடம் அவன் நைட் வீட்டுக்கு வரலையாம்... அவன் வொய்ஃப் குழந்தைங்க மட்டும்தான் இருக்காங்க” என்று தெரிவிக்க,

“ஷிட்” என்று சொல்லி அவள் முகம் அபரிமிதமான ஏமாற்றத்தைப் பிரதிபலித்தது.

“இப்ப என்ன பண்றது மேடம்?”

“அவன் வீட்டை சர்ச் பண்ண சொல்லு... கடையோட லாக்கையும் உடைக்க ஏற்பாடு பண்ணு” என்றவள் அந்தக் கடையை நோக்கி நடக்க, அப்போது ஒரு பைக் கட்டுப்பாடில்லா வேகத்தோடு வந்து அவள் முன்னே நின்றது.

அவள் நொடியில் பதறிக் கொண்டு பின்வாங்கி, “இடியட்” என்று திட்டும் போதே அவள் பார்வை அந்த பைக்கை உற்றுப் பார்த்து, ‘விக்ரமோட பைக்காச்சே இது?!’ என்று யோசித்தது.

அதனை ஒட்டி வந்த நபரைப் பார்க்க, இவான் தன் தலைக்கவசத்தைக் கழற்றிவிட்டு அவளைப் பார்த்து வசீகரமாய் புன்னகைத்தான்.

“ஹாய்!” என்று அவன் தன் கரத்தை உயர்த்த, ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இன்னும் கொதிநிலைக்குச் சென்றாள்.

நேற்று அவன் கேட்ட அந்த ஒற்றை வார்த்தை அவள் காதில் மீண்டும் ஒலிக்க, அவள் பார்வை அனலைக் கக்கியது. அவன் கொஞ்சமும் அதைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல்,

“என்னை மறந்திடீங்களா... நான் விக்ரமோட நண்பன்” என்றவன் ஆங்கிலத்தில் உரைக்க, அவளுக்குக் கோபம் ஏகபோகமாய் ஏறியது. இருந்தும் அந்தச் சூழ்நிலையில் அவள் தேவையில்லாமல் அவனிடம் வம்பு வளர்க்க விரும்பவில்லை. அதேநேரம் தானாக வந்து சிக்கியவனை அவள் விடுவதாக இல்லை.

அவனை ஆழ்ந்து பார்த்தவள் அவன் யார்? ஏன் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? விக்ரம் வீட்டில் ஏன் தங்கியிருக்கிறான்? என்று வரிசையாக அவனிடம் கேள்விகளைத் தொடுத்து கலங்கடிக்க, அவன் தன் புன்னகை மாறாமல் விக்ரமிடம் என்ன சொன்னானோ அதைப் பாரபட்சம் பார்க்காமல் இவளிடமும் உரைத்தான்.

அவள் அவனை குழப்பமாய் ஏறிட்டாள். அவன் மேலும் மகாபலிபுரம் சிற்பங்கள் பற்றி வர்ணிக்க ஆரம்பிக்க, “போதும்... நீங்க கிளம்புங்க” என்று அவனை வேண்டா வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்துப் புறப்படச் சொன்னவள் அவனை விட்டு விலகி நடந்தாள். ஆனால் அவனோ அங்கிருந்து போகும் நிலையில் இல்லை.

தமிழச்சி அவனைக் கடந்து வந்த அதேசமயம், ‘விக்ரமுக்கும் இந்த மாதிரி தமிழ் ஆராய்ச்சி செய்றவனுக்கும் என்ன சம்பந்தம்?’ என்று யோசிக்க, மின்னலென அவளுக்கு அப்போது தன் தமையனின் நினைவு வந்தது.

“மிஸ்டர் ஸ்மித்!” என்று அவள் மீண்டும் திரும்பிக் குரல் கொடுக்க, அவன்தான் அங்கேயே நின்றிருந்தானே!

அவள் அவன் பைக் அருகில் செல்ல அவனும் ஆர்வமாய் அவள் புறம் திரும்ப, “டு யு நோ மை பிரதர் சிம்மபூபதி?” என்று கேட்டாள்.

அவன் முகத்தில் துளி கூட சலனம் கட்டாமல், “ஹூ இஸ் ஹி?” என்று கேட்டு வைக்க, அவள் ஏமாற்றமானாள்.

அப்போது வினோத் அவள் அருகில் வந்து, “ஷ்யுரா லாக்கை உடைச்சிடலாமா மேடம்... இல்ல இன்னும் கொஞ்ச நேரம்?” என்று கேட்க, “உடைங்க வினோத்!” என்றாள்.

வினோத் பூட்டை உடைக்கச் சொல்லி கான்ஸ்டபிள்களிடம் தெரிவித்துக் கொண்டிருக்க, சரியாய் அந்த சமயம் இருவர் அந்தக் கடைக்கு நேராய் பைக்கை நிறுத்தினார். பின்னிருந்தவன் கையில் ஒரு சாக்குப் பை!

தமிழச்சி உடனே வினோத்திடம் முன்னேறிச் செல்ல வேண்டாமென சைகைச் செய்தாள். அவர்கள் சந்தேகத்திற்கு இடமாய் அந்தக் கடை மூடியிருப்பதைப் பார்த்துவிட்டு தங்கள் கைப்பேசி எடுத்து அழைப்பு விடுத்துக் கொண்டிருக்க, “வினோத் அவங்களை நிறுத்தி கையில என்ன இருக்குன்னு செக் பண்ணுங்க” என்றாள்.

வினோத் அவர்களை நெருங்கிச் செல்வதற்குள் அவர்கள் இவனைப் பார்த்து சுதாரித்து பைக்கைத் திருப்பிக் கொண்டுச் செல்ல, அவன் அவர்கள் பின்னோடு ஓடினான்.

அவள் படபடப்பாக அவள் தன் காதிலிருந்த ப்ளுடூத் வழியாக, ‘உடனே வண்டியை எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு வாங்க!” என்று கட்டளையாய் உரைக்க,

வினோத் அவர்களைப் பிடிக்க முடியாமல் அந்த பைக் வேமெடுத்து சென்றுவிட்டது. அப்போது அவர்கள் கையிலிருந்து பை நழுவி சாலையில் விழ, அதில் ஏதோ உலோகம் வீழ்ந்தது போன்ற சத்தம் எழுந்தது.

வினோத் அதைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சியோடு அதிலிருந்த ஒரு நடராஜர் சிலையை அவளிடம் காண்பித்தான்.

“மை காட்” என்று பதறியவள் அவர்களைத் தவறவிட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு தவிப்பாய் சுற்றும் முற்றும் பார்க்க, அப்போது அந்தக் காட்சிகளை ஆர்வமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்த இவான் அவள் கண்ணில் பட்டான்.

அவளுக்கு மின்னலென ஒரு யோசனை தோன்ற, “டூ மீ எ ஃபேவர்... சேஸ் தட் பைக்” என்றபடி பைக்கில் அவன் பின்னோடு ஏறி அமர்ந்து கொள்ள, அதற்காகவே காத்திருந்தவன் போல அவன் முகத்தில் ஒரு ஒளிவட்டம் பிரகாசித்தது. ஆனால் அதைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.

இவான் பைக்கை இயக்க ஆரம்பித்தபடி, “ஹோல்ட் மீ டைட்லி” என்றதும் அவள் கடுப்பாய், “நாட் நெசஸரி.” என்று அவள் வார்த்தை கட்டளையாய் வர, “ஓகே” என்று சொன்ன நொடிப் பொழுதில் அவன் பைக் அந்தச் சாலையில் சீறிப் பாய அவள் தேகம் அவன் பின்னோடு போய் முட்டிக் கொண்டது.

அவள் பின்னோடு நகர்ந்தபடி, “கேர்ஃபுல்” என்று கடுப்போடு சொல்ல,

“தட்ஸ் ஒய் ஐ செட்? ஹோல்ட் மீ டைட்லி” என்று அவன் சொல்ல அவள் முகம் எரிச்சலாய் மாறிய அதே சமயம் அவனிடம் தன் கோபத்தைக் காட்டும் சமயம் இது இல்லை என்று எண்ணியவளாய், முன்னே தப்பிச் சென்ற அந்த பைக்கில் தன் விழிகளை ஆழப் பதித்தாள்.

ஒரு பக்கம் அதன் எண்ணை அவள் குறித்து கண்ட்ரோல் ரூமுக்குத் தெரிவிக்க, பின்னோடு அவர்கள் போலீஸ் வாகனமும் வேகமாய் பின்தொடர்ந்தது.

இவானின் வேகத்திற்கு முன்னே சென்ற பைக் நிச்சயம் ஈடுகொடுக்க முடியாது. ஆனால் அவன் வேண்டுமென்றே அந்த நேரத்தையும் தூரத்தையும் நீட்டித்துக் கொண்டிருந்தான்.

போதாக் குறைக்கு சைட் மிரரில் தெரிந்த அவள் பிம்பத்தை அவன் ரசித்துக் கொண்டு வர, அவளோ அந்த பைக்காரர்களைப் பிடிப்பதிலையே ஆர்வமாய் இருந்தாள். கூடவே அவனைச் சீக்கிரம் போகச் சொல்லி ரன்னிங் கமெண்ட்ரி வேறு!

“வண்டி ஈசிஆர் தாண்டி சிட்டிகுள்ள போயிட்டா டிஃராபிக்ல பிடிக்க முடியாது” என்றவள் அவனிடம் ஆங்கிலத்தில் சொல்ல, “ஓ!” என்ற இவான், “ஹோல்ட் மீ டைட்டிலி” என்று மீண்டும் உரைக்க,

இம்முறை அந்த வார்த்தை கொஞ்சம் அழுத்தமாக அவனிடம் இருந்து வந்தது.

அவள் விலகியே அமர்ந்திருக்க, “தமிழச்சி! டு வாட் ஐ சே?” என்று அவன் குரல் அதிகாரமாய் அதேநேரம் சற்றே உயரத்தலாய் வர, அவன் அவ்விதம் சொன்னதன் காரணத்தை அவள் ஒருவாறு கணித்துக் கொண்டாள்.

பின் அவள் தன் கரத்தால் அவன் இடையை வளைத்துப் பிடிக்க, நொடி நேரத்தில் அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்த அவன் பைக் முன்னே சென்ற அவர்கள் பைக்கை இடித்து சாய்த்துத் தள்ளியது.

அதேநேரம் இடித்த வேகத்தில் இவானின் பைக்கும் சாய முற்பட, அவளை அறியாமல் இன்னும் அழுத்தமாய் அவனை அணைத்துப் பிடித்துக்கொண்டாள். இவான் சாமர்த்தியமாய் சுதாரித்து தன் கால்களை இறக்கி அவர்களும் பைக்கும் விழாமல் நிலைநிறுத்திவிட்டான்.

அந்த நொடி அவள் இதயம் வேகமாய் படபடக்க, இவானோ அவள் இறுக அணைத்திருந்ததில் மேலே பறந்து கொண்டிருந்தான்.

ஆனால் அவள் அந்த சந்தோஷத்தை நொடி நேரம் கூட நிலைக்கவிடாமல் பட்டென தன் கரங்களை விலக்கிக் கொண்டு கீழே விழுந்த பைக்காரர்களைப் பிடிக்கச் சென்றுவிட்டாள்.

அவர்கள் விழுந்த வேகத்தில் பைக் அடியில் சிக்குண்டனர். அவர்கள் சுதாரித்து எழுந்த சமயம் தமிழச்சி அவர்கள் பைக்கிலிருந்த சாவியைக் கைப்பற்றினாள்.

அதேநேரம் அவர்களின் போலீஸ் வாகனமும் அங்கே வந்துவிட, வினோத்தும் அவன் உடன் வந்த மற்ற காவலாளிகளும் இறங்கி வந்து அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டனர்.

ஒரு வழியாய் அவர்களைப் பிடித்துவிட்ட திருப்தியில் அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ள, அந்த நொடி அவர்கள் செய்த களேபரத்தில் அந்தச் சாலையில் கூட்டம் கூடி வாகன நெரிசல் உண்டாகியிருந்தது.

“ட்ராபிஃக்கை கிளியர் பண்ணுங்க வினோத்” என்றவள் பைக்கை ஓரமாய் நிறுத்தியிருந்த இவானைக் கவனித்து அவனிடம் சென்றாள்.

அப்போது பைக்கின் முன்புற விளக்கு உடைந்து நசுங்கி இருப்பதைப் பார்த்து, “என்ன இப்படியாயிடுச்சு? நான் வேணா இந்த டமேஜூக்கு” என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே,

இவான் பெருந்தன்மையோடு, “மச்... இட்ஸ் ஓகே... ஸ்லைட் டேமேஜ்தான்” என்றான். ( ஊரான்வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே... இதுல ஸ்லைட் டேமேஜா... அப்படின்னு ரீட்ர்ஸ் பொங்குறது எனக்கு புரியுது... பட் சேசிங்க்ல இதெல்லாம் சகஜம்)

‘என்னவோ இவன் பைக் மாதிரி சொல்றான்... இது என் விக்ரமோட பைக்... அவன் இதைப் பார்த்தா’ என்றவள் மனம் தன்னவனுக்காக பொரும, அவள் ஈகோ பட்டெனத் தலைதூக்கி, ‘அவன் பைக் என்ன ஆனா நமக்கென்ன?’ என்று அந்த எண்ணத்தை உள்ளே தள்ளியது.

பிறகு அவள் தன் பார்வையை அதன் புறம் இருந்து அகற்றி, இவானைப் பார்க்க... அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஹ்ம்ம்... வாட்ஸ் யுவர் நேம்?” என்றவள் அவன் பெயரை மறந்துவிட்ட தொனியில் கேட்க, “இவான் ஸ்மித்” என்றான்.

“யா யா... ஸ்மித்” என்று அவள் சொல்ல அவன் மறுப்பாய் தலையசைத்து, “கால் மீ இவான்... ஜஸ்ட் இவான்” என்று அழுத்தமாய் உரைத்தான்.

“ஓகே இவான்... தேங்க்ஸ்... தேங்க்ஸ் எ லாட்” என்றவள் சொல்லும் போது அவன் அவளை ஆழமாய் ஊடுருவிப் பார்த்து,

“இவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணதுக்கு... இதுவே எங்க ஊரா இருந்தா டைட்டா ஹக் பண்ணி கிஸ் பண்ணி இருப்பாங்க” என்று சரளமான ஆங்கிலத்தில் தோரணையாகச் சொல்லி முடித்தான்.

அவனை அளவெடுத்துப் பார்த்தவள், “இன் அவர் கல்ச்சர்... வீ யூஸ்ட் டு சே தேங்க்ஸ் லைக் திஸ்” என்று சொல்லி தன் இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து, “நன்றி” என்றாள்.

அவன் முகம் சுணங்கி, “குட்... கல்ச்சர்” என்று கடுப்பாய் உரைத்தவன் அவளைப் பார்த்து ஏக்கமாய் பெருமூச்செறிய, அவளுக்கு அவன் பார்வை புரியாத புதிராய் இருந்தது. அவன் தன்னிடம் வேறெதையோ எதிர்பார்க்கிறான் என்பதைக் கணித்துக் கொண்டவள்,

“ஓகே ஸ்மித் பை” என்று புறப்பட எத்தனித்தாள்.

“கால் மீ இவான்” என்றவன் மீண்டும் அழுத்திச் சொல்ல, “ஓகே இவான்! தேங்க்ஸ் அகைன்... பை!” என்று சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்தாள்.

“வென் இஸ் ஆர் நெக்ஸ்ட் மீட்டிங்?” (எப்போது நம்முடைய அடுத்த சந்திப்பு) என்றவன் அவள் பின்னோடு குரல் கொடுக்க,

“இட்ஸ் நாட் நெசஸ்சரி இவான் (அவசியமில்லை)” என்று சொல்லி அவள் அவனை அலட்சியமாய் பார்த்து சொல்லிவிட்டு தங்கள் வாகனத்தில் ஏறி சென்றுவிட்டாள்.

“இட்ஸ் நெசஸ்சரி டார்லிங்!” என்றவன் அவள் சென்ற திசையைப் பார்த்து சொல்ல, அப்போது அவள் சென்ற வாகனம் அவனைக் கடந்து சென்றுவிட்டது.

காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த தமிழச்சியின் சிந்தனை அப்போது என்ன காரணத்தினாலோ இவானைப் பற்றியே எண்ணமிட்டது.

இவான் அவர்களைப் பிடிக்க செய்த வீரசாகசத்தைப் பற்றி எண்ணியவளுக்கு அவன் செயலைக் குறித்து மெச்சுதலாய் ஒரு புன்னகை வெளிவந்து வீழ்ந்தது. அதேநேரம் பயிற்சி இல்லாமல் ஒரு சாதாரணமானவன் அவ்விதம் செய்துவிட முடியுமா? என்ற கேள்வி எழும்ப இன்றைய காலகட்டங்களில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று அந்த சந்தேகத்தை ஒதுக்கிவைத்தாள்.

பின்னர் அவள் இவான்... சிற்பக்கலை தமிழனின் தொன்மையான வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுத வந்திருப்பதாகவும் சொன்னதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்று யோசிக்க, அப்போது அவன் பேசியின் திரையில் பார்த்த தஞ்சைக் கோபுரம் நினைவு வந்தது. அவன் சொன்னது ஒரு வேளை உண்மையாகக் கூட இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டாள்.

இவை எல்லாம் ஒரு புறமிருக்க, அவன் தன்னை பார்க்கும் விதத்தில் ஏதோ ஆழமான அர்த்தம் பொதிந்திருந்தது என்று தோன்றியது அவளுக்கு!

முதல்முறை அவன் தன்னை சந்தித்த போது ரொம்பவும் தெரிந்தவன் போல விசாரித்ததை அவள் மூளை இப்போது நினைவு கூர்ந்தது. ஒரு வேளை நம் சந்தேகம் சரியோ? தன் தமையனை இவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று யோசித்தவள், அவன் கேட்டது போல் இன்னொரு முறை அவனைச் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவெடுத்தாள். ஆனால் எப்படி என்ன காரணத்தோடு என்று அவள் யோசிக்க, அந்த கஷ்டத்தை அவளுக்குக் கொடுக்காமல் அவனே அவளை மீண்டும் தேடி வருவான்.

இந்த சிந்தனையோடு அவர்கள் வாகனம் காவல் நிலையம் வாசலில் நிற்க தமிழச்சி வினோத்திடம், “இவங்க ரெண்டு பேரையும் செல்லில் போடுங்க... நான் ஏடிஜிபியைப் பார்த்து ரிபோர்ட் பண்ணிட்டு வந்திடறேன்” என்றாள்.

அதே போல் வினோத் மற்றும் அவளுடன் வந்த காவலாளிகள் அந்த இருவரையும் இழுத்துக் கொண்டு சென்று விட, அவள் அந்த வாகன ஓட்டுநரிடம் புறப்பட சொல்லிக் கையசைத்தாள்.

பின்னர் அவள் தயாளனின் அலுவலக வாசிலில் இறங்கி விறுவிறுவென உள்ளே நடந்து சென்றாள்.

அப்போது, “தமிழச்சி!” என்ற ஒரு குரல் அவள் வேகத்தைத் தடைப்படுத்த,

சரண் வந்து அவள் அருகில் நின்று, “எப்படி இருக்க தமிழச்சி?” என்று நக்கலாய் கேட்டான்.

“பார்த்தா தெரியலையா?” என்று அவள் எகத்தாளமாய் திருப்பிக் கேட்க,

“தெரியுது... உன் இடத்தை நான் பிடிச்சிடப் போறேங்கற பயத்திலேயே மேடம் க்யூர் ஆயிட்டீங்க போல” என்று திமிரான பார்வையோடு உரைத்தான்.

“ஹ்ம்ம்... கனவுதான்... என் இடத்தை யாரும் பிடிக்க முடியாது” என்று அவள் அவனிடம் பதிலடி கொடுத்துவிட்டு முன்னேறி நடக்க,

“ஆமா ஆமா பிடிக்க முடியாதுதான்... டியுட்டிக்கு சேர்ந்த முதல் வருஷத்திலேயே ஆர்வக் கோளாறுல சஸ்பென்ஷன் வாங்கின அதிபுத்திசாலிதானே நீ” என்று அவள் காதுபட அவன் எள்ளலாய் சொல்ல அதைக் கேட்டவளுக்கு உள்ளம் எரிமலையாய் குமுறியது.

இருப்பினும் அந்த மனநிலையைச் சிரமப்பட்டு ஒதுக்கியவள் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு தனது மேலதிகாரியின் அறையில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள். அவள் அவருக்கு சல்யூட் செய்துவிட்டு நிற்க,

“வாங்க தமிழச்சி... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றவர் உற்சாகமாய் அவளைப் பார்த்தார்.

“என்ன விஷயம் சார்?” என்றவள் அவரின் சந்தோஷத்திற்குக் காரணம் புரியாமல் கேட்க,

அவர் தன் டேபிளில் இருந்த சில பிரிண்ட் அவுட்களை நீட்டி, “பாருங்க” என்றார். அவள் அவற்றை எல்லாம் பார்த்து, “இந்தச் சிலைகள் எல்லாம்...” என்று கேட்டு அவரைக் குழப்பமாய் ஏறிட,

“நம்ம நாட்டில் இருந்து கடத்தப்பட்ட கற்சிலைகள்... பிரான்ஸ் போலீஸ் கண்டுபிடிச்சிருக்காங்க” என்று கூற, அவள் அந்த நொடி வியப்பின் விளிம்பிற்கே சென்றாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா