மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Kalyanam@Kalyanam@ - Episode 4Post ReplyPost Reply: Kalyanam@ - Episode 4

Quote from monisha on December 16, 2023, 10:27 AM

4

ஜஸ்டின் அலுவலகத்திற்குப் புறப்படுவதற்கு முன்னதாக ரெஜினாவிடம், “ஆனந்த் வந்திட்டு இருக்கான்” என்று தெரிவிக்க,

“ஓகே டேடி... நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் எப்போதும் போல அவள் வெண்பற்கள் பளிச்சிட உரைக்க, ஜஸ்டினின் முகம் மலர்ந்தது.

மகள் ஆனந்திடம் என்ன பேசுவாளோ எப்படி பேசுவாளோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர் அவளின் தோற்றப் பொலிவையும் புன்னகையையும் பார்த்து ஆசுவாசம் அடைந்து,

“ஓகே டியர்... நான் ஆஃபிஸ் போயிட்டு வர்றேன்.” என்றவர் அறை வாசல் வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து, “நீ ஓகேதானே…? இல்ல டேட் உன்னை இந்த விஷயத்துல ஃபோர்ஸ் பண்ற மாதிரி உனக்குத் தோணுதா?” என்றவர் தயங்கித் தயங்கிக் கேட்டார்.

“ஓ டேடி... நான் அப்படி எல்லாம் யோசிக்கவே இல்ல... ஸோ நீங்க டென்ஷன் இல்லாம ஆஃபிஸ் கிளம்புங்க... ஆனந்த் வந்தா நான் பேசிக்கிறேன்...” என்றவள் தெளிவுடன் கூறிவிட்டு,

“கூல்” என்று தம் கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

“தேங்க் யூ டியர்” என்று மகள் அருகே வந்து அவள் தலையை அணைத்து உச்சி முகர்ந்துவிட்டு வெளியேறிவிட அதன் பின் ரெஜினா தன் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள்.

தன் காலை உணவுகளை முடித்துவிட்டு முகப்பறை மேஜை மீதிருந்த செய்தித்தாளைக் கையிலிடுத்துப் புரட்டிக் கொண்டிருக்கும் போது அதில் நிக் என்று யாரோ வெளிநாட்டினரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவள் சிந்தனைகள் அனைத்தும் சில நொடிகள் அப்படியே தடைப்பட்டுவிட்டன. அவனை மறக்க நினைத்தாலும் ஏதோவொன்று திரும்ப திரும்ப அவனை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது.

அவளுக்கும் நிக்கிற்குமான பழக்கம் குறைந்தபட்சம் ஓரிரு வாரங்கள்தான்.

ஆனால் அந்த ஓரிரு வாரங்களிலேயே நிக்கை மனதளவில் மிகவும் நெருக்கமானவனாக அவள் உணர்ந்திருக்கிறாள். இன்று அவனை மறக்க முடியாமல் தவிக்கிறாள்.

யோசிக்கக் கூடாது என்று எவ்வளவு தடைப்பட்டாலும் நிக்குடன் இருந்த நாட்கள் அவள் நினைவுகளில் காட்சிகளாக விரிந்தன.

திரௌபதி சிகரத்தை ஏறுவதற்கான முந்தைய நாள் அவர்கள் குழு அருகிலிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தது. மரணத்தை நோக்கித் தாங்கள் பயணிக்கப் போகிறோம் என்று அறியாமல் அவர்கள் அன்றைய இரவை அத்தனை சந்தோஷமாகவும் கொண்டாட்டமாகவும் களித்தனர்.

மிதமான மதுபானங்கள், குழு விளையாட்டுகள் என்று இணைந்து விளையாடியவர்கள் இறுதியாக ட்ரூத் டேர் விளையாட்டை விளையாடுவது என்று முடிவெடுத்துச் சுற்றி அமர்ந்தனர்.

விளையாட்டு வெகு சுவாரசியமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் சுழற்றி விடப்பட்ட பாட்டில் ரெஜினாவின் புறம் திரும்பி நின்றது.

அவள் ட்ரூத் என்றாள். எல்லோரும் என்ன கேட்பது என்று யோசிக்கும் போதே, “ரெஜி... டூ யூ லவ் மீ?” என்று நேரடியாக கேட்டுவிட்டான் நிக்.

ரெஜினா திகைக்க மற்ற எல்லோரும் சிரித்தார்கள். கிண்டல் செய்தார்கள்.

“பதில் சொல்லு ரெஜி” என்று அவளைத் தூண்டினார்கள். அந்தக் கேள்வியைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத ரெஜி அதனைத் தவிர்க்க வேண்டி, “ட்ரூத் இல்ல டேர்” என்று மாற்றிவிட்டாள்.

அங்கிருந்த யாரும் அவள் மாற்றியதை ஒப்புக்கொள்ளவில்லை. அவள் பதில் சொல்ல வேண்டுமென்று கட்டாயப்படுத்த அவள் எழுந்து செல்ல முற்பட்ட போது நண்பர்கள் மீண்டும் சமாதானப்படுத்தி அவளை அமர வைத்தார்கள்.

“சரி சரி டேர்... ஓகே” என்று விட்டு இறுதியாக டேர் சவாலாக அவளைப் பாட்டுப் பாடச் சொன்னார்கள். சில நொடிகள் யோசித்துவிட்டு பின் தனக்குப் பிடித்த தமிழ் பாடல் ஒன்றைப் பாடினாள்.

‘சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லையே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்று வரை நம்பலையே

என் காதலா!!

நினைத்தாலே சுகம்தானாடா

நெஞ்சில் உன் முகம்தானாடா

அய்யய்யோ மறந்தேனாடா

உன் பேரே தெரியாதாடா

ஆஆ

மனம் விரும்புதே உன்னை... உன்னை...

மனம் விரும்புதே’

என்று அந்தப் பாட்டை அவள் பாட ஆரம்பித்தலிருந்து முடிக்கும் வரை அங்கிருந்தவர்கள் எல்லோரும் ஓஒ என்று கோஷம் போட்டார்கள்.

ஆனால் நிக்கிற்கு ஒரு வரி கூட அவள் என்ன பாடுகிறாள் என்று புரியவில்லை. ஆனால் குறுகுறுவென்று அவனைப் பார்த்து கொண்டே அவள் பாடுவதை வைத்து அந்தப் பாட்டின் அர்த்தத்தில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று மட்டும் அவனுக்குப் புரிந்தது.

அந்த விளையாட்டு முடிந்து எல்லோரும் அறைக்குத் திரும்பியதும் நிக் அவர்கள் குழுவிலிருந்த கணேஷை அழைத்து அந்தப் பாட்டின் வரிகளுக்கு அர்த்தம் உரைக்க சொல்லிக் கேட்டேன்.

அவன் சிரித்துக் கொண்டே அந்த வரிகளின் அர்த்தங்களை விவரிக்க அவன் முகம் சிவந்தது. தான் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் இப்படி பாட்டுப் பாடி விளையாடுகிறாளா என்று எண்ணியவன், அவளிடம் பேச வேண்டுமென்றும் தன் அறைக்கு வரச் சொல்லியும் குறுந்தகவல் ஒன்றை அவள் கைப்பேசிக்கு அனுப்பினான்.

அதனைப் பார்த்து முதலில் கலவரப்பட்டவள் பின்னர் செல்வது என்ற முடிவுடன் அவன் அறை கதவைத் தட்டினாள்.

அவன் கதவைத் திறந்து அவள் உள்ளே வந்த மறுகணம் அவன் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான். அவனின் இறுகிய பிடியிலிருந்து விலக முடியாமல்,

“நிக் ப்ளீஸ்” என்றவள் தவிக்க,

“அந்தப் பாட்டை நீ எனக்காகத்தான் பாடின... உன் மொழி எனக்குப் புரியாம இருக்கலாம்... ஆனா உன் உணர்வுகள் அது எனக்குத் தெள்ளதெளிவா புரியுது” என்றவன் சொல்லிக் கொண்டே அவள் கழுத்துப் புறத்தில் முத்தமிட்டான். அவள் மறுக்கவோ விலகவோ முடியாமல் உணர்ச்சி பிடியில் சிக்கிக் கொள்ள, அவளை அணைத்தபடியே படுக்கையில் தள்ளியவன் அவள் ஜெர்கினைக் கழற்றிவிட்டான்.

“நிக் என்ன பன்ற?” என்று சுதாரித்து அவள் எழ முற்படவும், அவனோ அவள் தேகத்தின் மீது ஆளுமை செலுத்தத் தொடங்கினான்.

அவன் அவள் உதடுகளை முத்தமிட நெருங்கிய கணத்தில் அவனைத் தடுத்து அவன் இதழ்களைக் கை வைத்து மூடி, “நிக் நோ” என்றாள்.

அவள் கரத்தை தன் உதட்டிலிருந்து எடுத்து, “ஒய்” என்று பொங்கிப் பெருகிய தாபத்துடன் கேட்க,

“ஃபர்ஸ்ட் லவ்... ஃபர்ஸ்ட் கிஸ்... இது இரண்டுத்துலயும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு என் டேட் சொல்லி இருக்காரு... வாழ்க்கை முழுக்கவும் நம்ம நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட கூடிய ஞாபகங்கள் இல்லையா அது.” என்றவள் சொன்னதைக் கேட்ட நொடி அவளை விட்டு விலகி வந்த நிக்,

“ஸோ யூ டோன்ட் வான்ட் மீ டூ கிஸ்” என்று அழுத்தமாகக் கேட்க, “இப்போ வேண்டாம் நிக்... கொஞ்சம் டைம் எடுத்து முடிவு பண்ணுவோம்” என்றாள்.

“ஃபைன்” என்றவன் அவளின் ஜெர்கினைக் கையிலெடுத்துக் கொடுக்க,

“புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்” என்று கூற அவளுக்காக அறை கதவைத் திறந்துவிட்டவன் அவள் வெளியேறும் போது,

“ஒன் க்விஷின்” என்றான்.

அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, “அந்தப் பாட்டை நீ எனக்காகதானே பாடின” என்று சந்தேகமாகக் கேட்க,

“எஸ்” என்று புன்னகையுடன் தலையசைத்து ஒப்பு கொண்டாள் ரெஜி.

அவன் முகம் பிரகாசமாக, “அப்படினா ரெஜி டியர்.... உன்னோட ஃபர்ஸ்ட் கிஸ்சும் எனக்குதான்... உன்னோட லாஸ்ட் லாஸ்ட் கிஸ்சும் எனக்கு மட்டும்தான்” என்று அத்தனை நம்பிக்கையாகக் கூற, அவள் முகத்தில் புன்னகை விரிந்தது. அவனுடைய காதலை விட அந்த உறுதியான நம்பிக்கை அவளுக்குப் பிடித்திருந்தது.

ஆனால் அவன் சொன்னது அடுத்த நாளே உண்மையாகிவிடும் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. இறந்து வெறும் உடலாக இருந்த அவனுக்குதான் அவள் தன் முதல் முத்தத்தை வழங்கினாள்.

அவன் சொன்னது போலவே அதுதான் தன்னுடைய முதலும் கடைசியுமான முத்தமுமாக இருக்கும் என்று இரத்தம் உறைந்து உடல் விறைத்து கொண்டிருந்த தருணத்தில் எண்ணமிட்டுக் கொண்டாள்.

ஆனால் விதி அவளைக் காப்பாற்றிவிட்டது. அதுவும் அரை குறை உடலாகச் செயலிழந்த கால்களுடன்.

சக்கர நாற்காலியில் நகரும் தன்னை இனி யார் காதலிப்பார்கள்? நிக்கைப் போன்ற ஒரு காதலனை இனி தன் வாழ்வில் சந்திப்பது சாத்தியமானா ஒன்றா?

ஒரு வேளை ஜஸ்டின் விருப்பப்படி ஆனந்தனைக் கல்யாணம் செய்தால் கூட அவன் நிக்கைப் போலத் தன்னைக் காதலிப்பான் என்று எதிர்பார்க்க முடியுமா? என்று தனக்குள்ளாக, அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டு நிமிர்ந்த போது ஆனந்தன் தன் காரை நிறுத்திவிட்டு நடந்து வந்தான்.

உயரமும் கச்சிதமான உடல்வாகும் கொண்டிருந்தான். அளவான மீசையுடனும் அளந்த புன்னகையுடனும், “ஹாய் ரெஜினா” என்று குனிந்து அவளிடம் கை நீட்டினான்.

மேடம் என்ற அழைப்பு ரெஜினாவாக மாறியிருப்பதை உணர்ந்து ஒரு நொடி தன் கண்களால் தீவிரமாக அவனை அளந்தவள்,

“ஹாய் ஆனந்த்” என்று நீட்டிய அவன் கரங்களைப் பற்றிக் குலுக்கினாள்.

“இங்கேயே பேசலாமா?” என்றவன் நேராக விஷயத்திற்கு வர,

யோசித்தவள் பின், “என் ரூமுக்குப் போலாம்” என்றவள் அவர்கள் இருவருக்கும் காபி எடுத்து வரச் சொல்லி தன் உதவியாளர் கீதாவிடம் பணித்துவிட்டு அறைக்குச் சென்றாள்.

அவனோ வாசலில் நிற்க திரும்பிப் பார்த்தவள், “ஏன் அங்கேயே நிற்குறீங்க... உள்ளே வாங்க” என,

அவன் உள்ளே வந்து கொண்டே, “நீங்க கூப்பிட்டதும் வரலாம்னு இருந்தேன்... இல்லாட்டி அடி வாங்கணுமே” என்று தன் கன்னத்தைத் தேய்க்க,

“குத்தி காட்டுறீங்களா?” என்று அவள் முறைப்பாகப் பார்க்க,

“குத்திக் காட்ட என்ன இருக்கு…? நடந்ததைதானே சொன்னேன்” என்றான்.

“அன்னைக்கு நீங்க நடந்துக்கிட்டதை இப்பவும் என்னால ஏத்துக்க முடியல” என்று ரெஜினா கூற,

“என்னாலையும்தான்” என்றவன் பதிலுக்குக் கூற அவள் விழிகள் கூர்மையானது.

“உங்களால என்ன ஏத்துக்க முடியல?” என்றாள்.

“அந்த நேரத்துல நான் உங்களுக்கு உதவிதான் செஞ்சேன்... யூ ஹேவ் டூ தேங்க் மீ... இன்ஸ்டட் யூ ஸ்லேப்ட் மீ... எனக்குப் புரியல... ஒருத்தர் விழுந்தா அவங்களுக்கு உடனே உதவிக்கு வருவாங்களா இல்ல உதவிக்கு ஆள் தேடுவாங்களா?” என்றவன் பார்வையில் அன்று இல்லாத கோபம் இன்று வெளிப்பட்டதைப் பார்த்து ஒரு பக்கம் ஆச்சரியமாகவும் இன்னொரு பக்கம் எரிச்சலும் வந்தது.

“யூ வான்ட் மீ டூ ஸே சாரி நவ்” அவள் தீவிரத்துடன் கேட்க,

“கேட்டா தப்பு ஒன்னும் இல்லையே” என்றவன் அடாவடியாகக் கூற முதலில் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவள்,

“ஓகே ஐம் சாரி” என்று விட்டு, “அன் லிஸன்... அன்னைக்கு எனக்கு ஏற்பட்ட கோபம் உங்க மேல இல்ல... என் மேல... என் இயலாமை மேல... அதோட வெளிப்பாடுதான் நான் காட்டின கோபம்... என்னோட அந்த எமோஷன்ஸ் எல்லாம் உங்களால புரிஞ்சிக்க முடியாத பட்சத்தில நமக்குள்ள வேற எந்த ரிலேஷனும் வொர்க் அவுட் ஆக முடியாது.”

”ஸோ இந்த மேரேஜ் ஐடியாவை இந்த செகண்டே டிராப் பண்ணிடலாம்... டேட்கிட்ட நான் சொல்லிக்கிறேன்... அன் இந்த டெசிஷனால நீங்க இருக்க பொசிஷனுக்கும் வேலைக்கும் எந்தப் பிரச்சனையும் வராது” என்று படபடவென்று பேசி முடித்து,

“தேங்க்ஸ் பார் கம்மிங்... நவ் ப்ளீஸ்” என்றவள் அறை வாசலைக் காட்டி சூசகமாக அவனைக் கிளம்ப சொன்னாள்.

அவள் பேசியதைப் பொருட்படுத்தாமல் அறையினுள் நுழைந்தவன் அவளைப் பார்த்து மிதமாகப் புன்னகைத்து, “அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி…? நாம இன்னும் பேசவே ஆரம்பிக்கவே இல்ல ரெஜினா.” என்றான்.

“இதுக்கு மேல நம்ம பேசறதுக்கு எதுவும் இல்லன்னு நினைக்குறேன் ஆனந்த்.”

“உங்களுக்கு இல்லன்னாலும் எனக்கு இருக்கே... ஐ நீட் டூ டாக்... கேன் ஐ சிட் ஹியர்” என்றவன் அங்கிருந்த சோஃபாவைக் காட்ட அவள் முதலில் யோசித்துவிட்டு பின் தலையசைத்தாள்.

“தேங்க்ஸ்” என்று அமர போகும் போது கீதா காபி ட்ரேயுடன் வர அதனை வாங்கிக் கொண்டவன், “நான் கொடுத்துக்கிறேன் நீங்க போங்க” என்று ப்ளேக் காபியை கப்பில் ஊற்றி அவளிடம் கொடுத்தான்.

அதன் பின் தனக்கான ஒரு கப்பை எடுத்து கலந்து கொண்டு அவள் எதிரே அமர்ந்தவன் காபியைப் பருகிக் கொண்டே, “நான் சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வரேனே... நம்ம கல்யாணத்தைப் பொறுத்தவரை என் மோட்டிவ் ரொம்ப சிம்பிள் ரெஜினா... இட்ஸ் மணி” என,

அவள் கண்கள் அவனை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டன. நேரடியான அவனின் அந்த வாக்குமூலத்தை அவள் எதிர்பார்க்கவில்லை.

“சீரியஸ்லி!!!” என்றவள் அதே அதிர்வுடன் வினவ,

“இதுல நீங்க ஷாக்காக எதுவும் இல்ல... நிச்சயம் நீங்க கெஸ் பண்ணி இருப்பீங்க” என்றான் நிதானமாக.

சற்று முன்பு அவள் மதியிடம் பேசிய வசனத்தை அவன் ஒட்டுக் கேட்டுவிட்டு வந்தது போல பேசுகிறானே என்று யோசித்தவளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவனிடம் பேசுவதற்குத் துளி கூட ஆர்வம் இல்லைதான். ஆனால் இப்போது அந்த எண்ணம் மாறியிருந்தது.

அவள் நிமிர்ந்து அமர அவன் காபியைக் குடித்து முடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“இங்க எல்லோருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கதான் செய்யுது... ஒருத்தரோட குறையை மத்தவங்க பேலன்ஸ் பண்றதுதானே வாழ்க்கை.”

”என் குடும்பம் ரொம்ப சாதாரணமான குடும்பம்தான்... எங்க அப்பா ஒரு ப்ரைவட் கம்பனில டிரைவரா இருக்காரு... ஆக்சுவலி இருந்தாரு... இப்போ அவர் பெருசா வேலைக்குப் போறது இல்ல.”

”நான் இங்க வேலைக்குச் சேர்ந்த பிறகு எங்க லெவல் எங்க குடும்பத்தோட ஸ்டேடஸ் உயர்ந்திருக்குன்னுதான் சொல்லணும்... முக்கியமா எங்களை இதுநாள் வரை கண்டுக்காத சொந்தக்காரங்க தேடி வந்து பேசுறாங்க மரியாதை கொடுக்குறாங்க.”

”மணிக்கு அப்படி ஒரு பவர் இருக்கு... ஸ்டில் ரெஜினா... உங்க ஸ்டேட்ஸ் லெவலை நாங்க தொடுறதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல.”

”அப்படியே நான் ஒரு ஸ்டார்ட் அப் இந்த வயசுல ஆரம்பிச்சாலும் என்னோட நாற்பாதாவது வயசுல... இந்த மாதிரி வசதியான வாழ்க்கையை வாழ முடியலாம்... பட் அதுவும் எவ்வளவு தூரம் நினைச்சபடி நடக்கும்னு சொல்ல முடியாது.”

”வெற்றில வெறும் உழைப்பு மட்டும் இல்ல... கொஞ்சம் லக்கும் தேவையா இருக்கு... நம்ம எதிராபாராத சம்பவங்கள் இழப்புகள் எப்ப வரும்னு சொல்ல முடியாது... ஸோ என்னை மாதிரி ஒரு மிடில் கிளாசுக்கு பிஸ்னஸ் ரிஸ்க்தான்.”

”ஆனா இப்போ எந்த ரிஸ்க்கும் எடுக்காம என்னோட இருபத்தெட்டு வயசுல இந்த மாதிரி ஒரு ஆப்பர்ச்சுன்ட்டி கிடைக்குதுனா அதை ஏன் நான் வேண்டான்னு சொல்லணும்?”

”என்னோட குறையும் உங்களோட குறையும் ஒன்னோட ஒன்னு பேலன்ஸ் பண்ண முடியும் போது நாம ஏன் அதைப் பத்தி யோசிக்கக் கூடாது” என்றவன் மிகத் தெளிவாகவும் எதார்த்தமாகப் பேசியதை அவள் கொஞ்சம் இரசித்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

சாய்ந்து அமர்ந்து மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள், “நீங்க இவ்வளவு வெளிப்படையா பேசுறதை நான் அப்ரிஸியேட் பண்றேன்... ஸ்டில் பணத்தை வைச்சு நீங்க உறவுகளை பேலன்ஸ் பண்றதா சொல்றதைதான்...” என்று தயக்கத்துடன் நிறுத்தி அவனை ஆழ்ந்து பார்க்க,

“பணத்தை வைச்சு நம்ம உறவுகளை பேலன்ஸ் பண்ணலாம்னு சொல்லல... நம்மோட குறைகளையும் தேவைகளையும்தான் பரஸ்பரம் பேலன்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னன்... மத்தபடி கல்யாணத்துக்குப் பிறகு எல்லா கணவன் மனைவி போலவும் நம்ம உறவும் இருக்கும்... நல்ல கணவனா உங்க எதிர்பார்ப்புகளை என்னால முடிந்தளவு பூர்த்திச் செய்ய நான் முயற்சிக்கிறேன்” என்றான்.

“ரைட்... உங்களால முடிஞ்சளவு நீங்க செய்வீங்க... ஆனா பிஸிக்கலி சேலஞ்ச்ட் பெர்ஸனா எவ்வளவு தூரம் ஒரு திருமண உறவுக்கு நான் நியாயம் செய்ய முடியும்னு எனக்குத் தெரியல”

“இங்க பெர்க்ட்னு ஒன்னு இல்ல ரெஜினா... உடலளவுல எல்லா தகுதியும் இருக்கவங்க செஞ்சிருக்க கல்யாணங்கள் கூடத் தோத்துப் போகுது... பாதிலேயே முறிஞ்சு போகுது... ஏன்? விருப்பமே இல்லாம குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழுற எத்தனையோ தம்பதிகள் இங்க நிறைய பேர் இருக்காங்க.”

”உடலாள மனதால இப்படி ஒருத்தனோ ஒருத்தியோ இருந்தாதான் அந்த உறவு சக்ஸஸ் ஆகும், ஆகாதுன்னு எல்லாம் நாம உறுதிக் கொடுக்க முடியாது... இங்க எந்த உறவுக்கும் கியாரன்டி எல்லாம் கிடையாது... ஒரு பெஸ்ட் பார்ட்னரா வாழ்கை முழுக்க இருக்க உடல் தகுதியை விட பரஸ்பர புரிதல்தான் முக்கியம்னு நான் நினைக்குறேன்... அதனால உங்ககிட்ட நான் ஓபனா பேசணும்னு நினைச்சேன்…”

”நாம ஒருத்தரை ஒருத்தர் சரியா புரிஞ்சிக்கிட்ட பட்சத்துல நம்ம வாழ்க்கையை ஸ்மூத்தா கொண்டு போக முடியும்னு நம்புறேன்... ஸோ லெட்ஸ் கோ வித் ஆ ஃப்ளோ” என்றவன் சொன்னதை எல்லாம் கேட்டவளுக்கு தன் பெற்றோர்களின் திருமண வாழ்க்கை நினைவுக்கு வந்துவிட்டது.

ஒரு வேளை அதை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டுதான் இதை எல்லாம் பேசுகிறானா என்று கூர்மையாகப் பார்க்க, “என்ன ரெஜினா... சைலன்டா ஆகிட்டீங்க” என்று அவன் கேட்க,

“ம்ம்ம்... இம்பிரஸிவ்... நல்லா பேசுறீங்க... டேடுக்கு ஏன் உங்களை ரொம்ப பிடிச்சிருக்குனு இப்போ புரியுது.” என்றாள்.

“ஜஸ்டின் சாருக்கு என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்... வாட் அபவுட் யூ... உங்களுக்கு?” என்று கேட்க,

“தட்ஸ் டூ ஃபாஸ்ட் ஆனந்த்... வெறும் அரை மணிநேர கான்வஸேஷன்ல என்ன சொல்ல முடியும்?”

“நான் சார்கிட்ட வேலைக்குச் சேர்ந்து ஆறு வருஷம் ஆகுது... நான் உங்க வீட்டுக்கு மூணு வருஷத்துக்கு மேல வந்துட்டுப் போயிட்டு இருக்கேன்... ஸோ உங்களுக்கு என் மேல ஏதாச்சும் ஒப்பினியன் இருக்கணுமே.... அதாவது உங்களோட தனிப்பட்ட ஒப்பினியன்” என்றதும் அவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“இப்படி சொல்றதுக்கு சாரி... நேத்து வரைக்கும் அப்படி எந்த ஒப்பினயன்ஸும் இல்ல... உங்களைப் பத்திப் பெருசா எதுவும் யோசிக்கவும் இல்ல” என்றவள் உடனடியாக, “ஆனா இப்போ இந்த செகன்ட்... கொஞ்சம் யோசிக்கலாம்னு தோனுது” என்றாள்.

“ஆ... தட்ஸ் நைஸ்” என்றவன் புன்னகைக்க,

“சரி என்னைப் பத்தி உங்களோட ஒப்பினியன் என்ன?” என்று அவளும் பதிலுக்குக் கேட்க அவன் ஒரு மாதிரி யோசித்துவிட்டு,

“சார் சொன்னதை வைச்சு நீங்க ரொம்ப அட்வெஞ்சரஸ் லவ்வர்னு தெரிஞ்சுக்கிட்டேன்... ” என்றான்.

“இது ஒன்னும் உங்க ஒப்பினியன் இல்ல”

“சாரி... இப்பவும் நீங்க என் பாஸோட டாட்டர் ரெஜினா... நான் ஏதாவது சொல்லப் போக அதனால என் வேலை போயிடுச்சுனா என்ன பண்றது?”

“இவ்வளவு நேரம் நீங்க பேசுனதுக்கு எல்லாம் வேலை போகாதா?”

“அது வேற... நம்ம மேரேஜ் பத்தின என்னோட தாட்ஸ்... ஆனா இது அப்படி இல்ல... ஒரு பாஸோட டாட்டரைப் பத்தி இப்படி எல்லாம் யோசிப்பீங்களானு நீங்க கேட்டுட்டா... இட்ஸ் ரிஸ்கி”

“அப்போ ஏதோ ஏடாகுடமா யோசிச்சு இருக்கீங்க என்னைப் பத்தி”

“அப்படி சொல்ல முடியாது... பட் கொஞ்சம் பெர்ஸ்னலா இருக்கும்”

“பரவாயில்ல சொல்லுங்க... உங்க வேலை போகாம நான் பார்த்துக்கிறேன்”

“நோ” என்று மறுத்தவன், “ஒரு வேளை நம்ம ரிலேஷன்ல ஸ்டேட்டஸ் மாறுனா சொல்றேன்” என்று புன்னகையாகத் தலையசைத்துக் கூறிவிட்டு,

“சாரி ரெஜினா... ஒரு மீட்டிங் இருக்கு” என்று அவன் தன் செல்பேசியில் நேரத்தைப் பார்த்துவிட்டுக் கூற,

“தட்ஸ் ஓகே... நைஸ் டாக்கிங் டூ யூ” என்றவள் அவனுக்குக் கைக் குலுக்க,

“பை” என்றபடி எழுந்து கொண்டவன் அறை வாசல் வரை செல்ல இருந்தவனை, “ஆனந்த்” என்று அழைத்தாள். அவன் திரும்பி நின்று அவளைப் பார்த்தான்.

“உங்க வீட்டுல நம்ம மேரேஜ் விஷயமா பேசிட்டீங்களா?” என்று கேட்க,

“இன்னும் இல்ல... உங்க முடிவைக் கேட்டப் பிறகுதான் சொல்லணும்” என்றான்.

“ஒரு வேளை என்னை மாதிரி மாற்றுத்திறனாளியான ஒருத்தியை நீங்க கல்யாணம் பண்ணிக்குறதுக்கு அவங்க ஒத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா?”

“இது நம்மோட கல்யாணம்... இதுல என் முடிவும் உங்க முடிவும்தான் முக்கியம் ரெஜினா.” என்றான்.

அவள் அடுத்த கணமே, “ரைட்... எனக்கு சம்மதம்... நீங்க உங்க வீட்டுல பேசுங்க.” என்றவள் கூற அவன் வியப்புடன் அவளைப் பார்த்து,

“அரைமணி நேத்துல ஒப்பினியனே சொல்ல முடியாதுன்னு சொன்னீங்க... இப்போ நம்ம கல்யாணத்துக்கே சம்மதம் சொல்லிடீங்க” என்று அவன் கதவில் சாய்ந்து நின்று கேட்க,

“எனக்கு என்ன தோனுதோ அதை நான் உடனே சொல்லிடுவேன்... ஸோ எனக்கு ஓகே... ஆ... இப்போ உங்களோட ஒப்பினியனைச் சொல்லாலாம்தானே ஆனந்த்” என்று அவள் பதிலுக்குக் கேட்கவும்,

“நோ” என்று தீர்க்கமாகத் தலையசைத்து மறுத்தவன், “நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா சொல்றேன்... பை” என்று ஒரு மாதிரி கள்ளப்புன்னகையுடன் கூறிவிட்டு வெளியறினான்.

அவன் சென்ற திசையைப் புன்னகையுடன் பார்த்திருந்தவள், ‘இவன் புத்திசாலி மட்டும் இல்லை. சாமார்த்தியசாலியும் கூட’ என்று நினைத்துக் கொண்டாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா