மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: AmaraAmara - Episode 4Post ReplyPost Reply: Amara - Episode 4

Quote from monisha on August 9, 2024, 10:26 AM

4

எழும்பூர் இரயில் நிலையம். விடியற்காலை பரபரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிக் கொண்டிருந்தது.

ஜெய்யும் இன்ஸ்பெக்டர் ரவியும் பேசிக் கொண்டே அந்த இரயில் மேடையில் நடந்தனர்.

“இங்கேதான் அந்தப் பொண்ணு இருக்காளா?” ஜெய் கேட்க,

“இல்ல சார்… நம்ம தேவாவைப் பார்க்க வந்திருக்கோம்” என்றான்.

“எனக்கு அந்தப் பொண்ணைதான் பார்க்கணும்… அவனை இல்ல” என்று ஜெய் சொல்ல,

“ஏரியா பக்கமெல்லாம் போய் அவளைப் பார்க்க முடியாது… தேவா மூலமாதான் அவளைப் பார்த்தாகணும்… நமக்கு வேற வழி இல்ல” என்று தெரிவித்த ரவி,

“அதோ கையில நியூஸ் பேப்பர் கட்டோட உயரமா நடந்து வரானே… அவன்தான் தேவா” என்று எதிர்புறமிருக்கும் அவனை ஜெயிற்குக் காட்டினான்.

“சரி… அவனைப் போய் பார்ப்போம்” என்று ஜெய் சொல்லி முடிக்கும் போது இடையில் இரயில் ஒன்று வேகமாக கடந்து சென்றது. அந்த சில நிமிடங்களில்,

“இன்னா சார்… என்னைய பார்க்க வந்துக்குறீங்க… சமீபமா சம்பவம் எதுவும் பெருசா பண்ணலயே” என்றபடி அதிரடியாக அவர்கள் பின்னோடு வந்து நின்று திகைக்க வைத்தான் தேவா.

அவன் கைகளில் அன்றைய நாளிதழ் கட்டுகள் இருந்தன. அவன் நின்றிருந்த தோரணையிலும் கண்களிலும் கொஞ்சம் கூட பயம் இல்லை.

இருபத்தைந்திலிருந்து இருபத்து ஏழு வயதிற்குள்ளாக இருக்கலாம். உடலைக் கட்டுகோப்பாக வைத்திருந்தானே தவிர ரவுடிக்கு உண்டான முகக்களையோ பயங்கர தோற்றமோ அவனிடம் இல்லை.

எதிரே நிற்பவனை ஜெய் கணித்துக் கொண்டிருக்கும் போதே ரவி திகைப்பிலிருந்து மீண்டவனாக தேவாவின் கேள்விக்குப் பதில் கூறினான்.

“அமியைப் பார்க்கணும் தேவா” என்று நேரடியாக விஷயத்திற்கு வர அவன் உதட்டைச் சுழித்துக் கொண்டு,

“எது… அவளைப் பார்க்கிறதுக்கு இன்னாத்துக்கு என்னைத் தேடிக்கின்னு வந்தசார்? நான் என்ன… அவளை என் இடுப்புல தூக்கி வைச்சுக்கின்னா சுத்தினுகிறேன்” என்று கடுப்பானான்.

“இல்ல… உனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிட்டதா ஏரியா பக்கம் சொன்னாங்க” என்று ரவி குழப்பத்துடன் கேட்க,

“ஆமா ஆமா ஆச்சு ஆச்சு” என்று எரிச்சலுடன் ஆமோதித்தவனின் உதடுகள் சில பல கெட்ட வார்த்தைகளை அனாயாசமாக உதிர்த்தன. சந்தேகமே இல்லாமல் அந்த வார்த்தைகள் எல்லாம் அவன் புது மனைவியைக் குறித்தது என்பது புரியவும் ஜெயிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

இரண்டு வார திருமணத்தில் அப்படியொரு வெறுப்பும் சலிப்பும் வந்துவிட்டதா?

தேவா மேலும் எரிச்சலுடன், “போய் ஏரியால பாருங்க சார்… அங்கேதான் கிடப்பா” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் செல்ல,

“தேவா தேவா ஒரு நிமிஷம்… நில்லு” என்று ரவி அவனை அழைத்துக் கொண்டே பின்னோடு ஓடினான்.

“இன்னா சார்” என்றவன் சலிப்புடன் திரும்ப,

“இது கொஞ்சம் அன்அஃபிசியல் மேட்டர்… அதான் ஏரியா பக்கம் போக வேண்டாம்னு… அப்புறம் தேவையில்லாத கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லணும்… உனக்குத் தெரியாதா? நானே இப்பதான் இன்ஸ்பெக்டர் போஸ்ட் வாங்கி இருக்கேன்” என்று ரவி தன் நிலைமையை எடுத்துரைக்க,

“அப்படி இன்னா சார் மேட்டரு?” என்றவன் சாய்வாக நின்று கொண்டு கேட்க, இம்முறை ஜெய் அவன் கேள்விக்குப் பதில் சொன்னான்.

“இது கேஸ் விஷயமா இல்ல… சின்ன க்ளாரிட்டி வேணும்… அவங்க கிட்ட பேசுனதான் அது கிடைக்கும்… ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்றவன் தாழ்மையாகக் கேட்ட நொடி தேவா மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தான்.

போலீஸ்காரர்கள் அவ்வளவு சீக்கிரம் இப்படி இறங்கி வந்து பேச மாட்டார்கள். ஏதோ முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்றவன் மூளைக்கு உரைக்க,

“முயற்சி பண்றேன்… அவ வந்தா பேசிக்கோங்க” என்று தன்னைப் போலவே நாளிதழ்களைத் தூக்கிக் கொண்டு சுற்றும் ஒருவனை அழைத்தான்.

“மாஸ்… அமியை ஃபோன் போட்டு இங்கே வர்ற சொல்லு” என,

“அண்ணிகிட்ட நீயே பேசலாமே ண்ணா” என்றான் அவன்.

“ஏய் சீ… ஃபோனைப் போட்டு வரச் சொல்லு”

அவன் தன் கைப்பேசி எடுத்துப் பேசிவிட்டு, “நீ வர சொல்லிக்கினேன்னு சொல்லிட்டே ண்ணா” என,

“அடிங்… என் பேரை எதுக்குடா சொன்னே” என்று தேவா முறைக்க,

“நீதானே ண்ணா சொன்ன” என்றவன் சாதாரணமாகச் சொல்ல தேவா முகத்தை அஷ்டகோணலாக மாற்றிவிட்டு,

“எனக்குன்னு வந்து சேர்ந்துக்கினா பாரு… சரி வரன்னு சொல்லிக்கினாளா” என்று சந்தேகமாகக் கேட்க,

“ம்ம்… வரன்னு சொன்னாங்க ண்ணா” என்றான்.

“சரி போய் தொலை” என்றவன் சொல்ல அவன்,

“பேப்பர் பேப்பர்… ஹிந்து எக்ஸ்பிரஸ்” என்று கூவிக் கொண்டே அகன்றுவிட்டான்.

“லூசு பயன்…அவ வந்ததும் என் மேல வந்து ஏற போறா” என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டேஜெய் ரவியை நோக்கி வந்து,

“இங்கேயே நில்லுங்க சார்… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவா… பேசிக்கோங்க” என்று சொல்லிவிட்டு,

“இதுக்கு மேல தொந்தரவு பண்ணாதீங்க… நான் என் புழைப்பைப் பார்க்கணும்” என்று அவன் அகன்றுவிட்டான்.

“வந்திருவாளா?” என்று ஜெய் சந்தேகமாகக் கேட்க,

“வெயிட் பண்ணி பார்ப்போம் சார்… வந்திருவா” என்றான்.

தேவா சொல்லிவிட்டுச் சென்ற அரைமணி நேரத்தில் அங்கே வந்து நின்றாள் அந்தப் பெண். ஒல்லியான தேகம். அவள் உடலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத தொளதொளவென்று ஒரு சுடிதார். கழுத்தில் சுற்றிக் கொண்டிருந்த துப்பட்டா!

இதெல்லாம் தாண்டி அவள் பார்வையில் ஒரு தீர்க்கம். அவள் விழிகள் நின்ற இடத்திலேயே சுழன்றன. அவள் பார்வை கணவனைத் தேடியதோ?

ஜெய் தன்னிடமிருந்த புகைப்படத்தை வைத்து அவளை அடையாளம் கண்டுகொண்டான்.

அவன் நேரடியாக அவளிடம் சென்று, “அமி” என்றபடி பேச ஆரம்பிக்க, அவள் அவனைப் பார்த்தாள்.

மேலும் உடனிருந்த ரவியைக் கண்டவள், “இன்னா சார்… ஏதாச்சும் புது கேஸா… நான் எங்கேயும் கை வைக்கல” என்று பட்டென்று சொல்ல,

“இல்ல… இது கேஸ் விஷயமா இல்ல… சார் உன்கிட்ட ஏதோ முக்கயமா பேசணுமாம்” என்று ரவி ஜெய்யைச் சுட்டிக்காட்டினான்.

அமி பதில் அவனைப் பார்வையால் அளவெடுத்த அதேநேரம் தூரத்தில் நின்று அவர்களை நோட்டமிட்ட தேவாவையும் கண்டாள்.

“ஓ… உங்களைப் பார்க்கத்தான் வர சொல்லிக்குனானா?” என்றவள் பார்வை தேவாவைக் கோபமாகக் குறி வைத்த அதேநேரம் ஜெய்யைப் பார்த்து, “இன்னா பேசணும்… சொல்லுங்க” என்றாள்.

“கொஞ்சம் முக்கியமா பேசணும்… ஆனா இங்கே வேண்டாம்” என்றான் ஜெய். அதற்கு ஏற்றார் போல அந்த இரயில் மேடையில் மக்களின் திரள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

மௌனமாக அவர்களுடன் நடந்த அமியின் பார்வை சில முறை கணவனைத் திரும்பி பார்த்தன. தூரத்திலிருந்து அவனும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

இரயில் நிலையத்திற்கு வெளியே கூட்டம் குறைவாக இருந்த இடத்தில் மூவரும் நின்றனர்.

“சொல்லுங்க” என்ற அமியின் பேச்சு பார்வை இரண்டிலும் இருபத்தொரு வயதிற்கும் அதிகமான முதிர்ச்சி இருப்பதாக ஜெயிற்குத் தோன்றியது.

ஜெய் பேசுவதற்கு முன்னதாக ரவியைப் பார்த்தான்.

‘வேலை முடிஞ்சதும் கழட்டி வுட்டிருவானுங்களே’ என்று அவன் பார்வையின் பொருள் உணர்ந்த ரவி அங்கிருந்து அகன்றுவிட ஜெய் அமியிடம் பேசத் தொடங்கினான்.

அவன் அமராவைத் தேடியதில் தொடங்கி கணினி மூலமாக வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் வரை அனைத்தையும் காண்பித்து,

“நீ நேர்ல வந்து கமிஷனரைப் பார்க்கணும் அமி” என்றான்.

“அந்த ஃபோட்டோ ஏதோ என் ஜாடைல கீது அவ்வளவுதான்… மத்தபடிக்கு நான் ஒன்னியும் அந்தப் பொண்ணு அமரா இல்ல” என்றவள் சட்டென்று அந்த உரையாடலை முடித்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அவன் சுதாரித்து திரும்புவதற்குள் அவள் அந்தக் கூட்டத்துடன் கலந்துவிட்டிருக்க, ஜெயிற்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

கீதாவிற்கு எப்படியோ ஹரீஷின் இணைப்பு கிடைத்துவிட்டது.

“நேத்தே உன்கிட்ட ஒரு விஷயமா பேசணும்னு நினைச்சேன்… அதுக்குள்ள உங்க அப்பா நடுவுல வந்து சொதப்பிட்டாரு”

“இன்னும் ஆறு மணி நேரத்துல ஃப்ளைட்… நேரா வீட்டுலையே வந்து பேசுறேன்மா” என்றான் ஹரீஷ்.

“இப்பவே எனக்குப் பேசணும்” என்று கீதா அழுத்தமாகச் சொல்ல,

“சரி சொல்லுங்க” என்றான்.

“டேய் அந்தப் பொண்ணு ஃபோட்டோ அனுப்பின இல்ல” என்று கீதா ஆரம்பிக்க,

“ம்மா அந்தப் பொண்ணைப் பத்திப் பேசாதீங்க… நான்தான் சொன்னேன் இல்ல… செட்டாகாதுன்னு” என்றவன் குரல் கடுப்பில் ஒலித்தது.

“உனக்கு செட்டாகலன்னா பரவாயில்ல… எனக்கு அந்தப் பொண்ணு பத்தின டீடைல்ஸ் வேணும்” என்று கீதா கேட்க,

“ம்மா அந்த விஷயத்தை விடேன் ம்மா… அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்… நாலு வயசுல ஒரு குழந்தை வேற இருக்கான்… ப்ராபோஸ் பண்ணலாம்னு போனா… அவ புருஷன் குழந்தைகளோட வந்து நிற்குறா… எனக்கு செம பல்பு” என்றவன் தன் சோக கதையைக் கூற,

“உனக்கு தேவைதான்டா… ஒரு பொண்ணைப் பார்த்ததும் அவளைப் பத்தி என்ன ஏதுன்னு விசாரிக்காம அவ பின்னாடி போயிட வேண்டியதா… கொஞ்சமாவது காமன் ஸென்ஸ் வேண்டாம்” என்று கீதா திட்ட ஆரம்பித்தார்.

“நானே ரொம்ப நொந்து போயிருக்கேன்… வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதம்மா” என்று ஹரீஷ் குரலில் வருத்தம் தெரிய,

“ஃபீல் பண்றியா… உனக்கு என்ன… இது ஒரு சிக்ஸிடீன் அப்புறம் செவன்டீன் அவ்வளவுதானே” என்றார் அவனைப் போலவே சாதாரணமாக.

“நோ ம்மா… நாட் ஆட் ஆல்… எனக்கு இந்தப் பொண்ணைப் பார்த்ததும் ஷீ இஸ் மை கேர்ள்னு தோனுச்சுமா… அதுவும் ரொம்ப தோனுச்சு… சீரியஸாவே ஐ வான்ட் டூ மேரி ஹேர்னு” என்றவன் பேசிக் கொண்டே அவன் குரல் உடைய கீதா ஆச்சரியமானார்.

எத்தனையோ பெண்கள் அவன் வாழ்வில் வந்திருக்கிறார்கள். கடந்தும் சென்றிருக்கிறார்கள். அவன் இப்படியெல்லாம் பேசியதில்லை.

‘இட்ஸ் ஓவர்… செட்டாகல’ என்று மிகச் சாதாரணமாக முடித்துவிடுவான்.

“ஹரீஷ் கண்ணா” என்று கீதா அழைக்க,

“கான்ட் ஆக்செபட் மா” என்றவன் அழுகையுடன் உரைத்தான்.

“இட்ஸ் ஓகே ஹரீஷ்… விடு… அவளுக்கு மேரேஜ் ஆகி இருக்கும் போது நீ என்ன பண்ண முடியும்” என்று கீதா சொல்ல,

“எஸ்” என்று அவன் ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினான்.

“ஹரீஷ் நான் உன்கிட்ட பேச நினைச்ச விஷயமே வேற… ப்ளீஸ் உன் பிரச்சனையெல்லாம் ஓரங்கட்டிட்டு… கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு” என்று கீதா பாலமுருகன் அமராவைத் தேட ஆரம்பித்த கதையிலிருந்து இப்போது நடந்த அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லி முடிக்க,

“இன்டரஸ்டிங்” என்ற ஹரீஷ்,

“ஆனா ம்மா… இதுக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்” என்று கேட்டான்.

“நான் உனக்கு சில ஃபோட்டோஸ் அனுப்புறேன் பாரு” என்று கீதா அவனுக்கு அந்தப் புகைப்படங்களை அனுப்பிவிட அதனைப் பார்த்தவன் வியப்புடன்,

“ம்மா…இது” என்று யோசனையுடன் நிறுத்த,

“நீ அனுப்பின ஃபோட்டோல இருக்க பொண்ணோட ஜாடையும் அமராவோட கிராபிக்ஸ் ஃபோட்டோவும் கிட்டத்தட்ட ஒத்துப் போகுது ஹரீஷ்” என்றார் கீதா.

“எஸ்… பட் இட்ஸ் நாட் பாஸிப்பிள்… இதுல ஒரு பெரிய லாஜிக் இடிக்குது… நிச்சயமா நான் சொன்ன பொண்ணுக்கு இருபது இருப்பதொரு வயசு எல்லாம் இல்ல… ஷி மே பீ டிவென்டி எய்ட் ஆர் நைன்” என்றான்.

கீதா சில நொடி மௌனத்திற்கு பின், “அப்போ அந்தப் பொண்ணு அமராவா இருக்காதுன்னு சொல்றியா?” என்று கேட்க,

“வாய்ப்பு இல்ல… ஆனா நீங்க சொன்ன மேட்டர் எல்லாம் வைச்சு பார்த்தா மே பீ… இவ அமராவோட ரிலேஷனா இருக்கலாம்” என்றான்.

“அப்படியும் இருக்குமோ?” என்று கீதா யோசனையுடன் கேட்க,

“ம்… இருக்க வாய்ப்பு இருக்கு… ஏன் னா இவ பேரு அமிர்தா” என்றதும் கீதாவிற்கு ஆச்சரியமானது.

“நிஜமாவாடா”

“ஆமா மா… நான் எதுக்கும் என்ன ஏதுன்னு விசாரிச்சு பார்க்கிறேன்… எனக்கு ஃபிளைட் பத்து மணிக்குதான்… அதுக்குள்ள என்னால முடிஞ்ச டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு உங்களைக் கூப்பிடுறேன்” என்றவன் தங்கள் உரையாடலை முடித்து அழைப்பைத் துண்டித்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா