மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: AmaraAmara - Episode 5Post ReplyPost Reply: Amara - Episode 5

Quote from monisha on August 10, 2024, 9:44 PM

5

இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதும் அமி நேராக வீட்டிற்கு வர, அருகில் குடித்தனம் இருக்கும் பெண்,

“இன்னா அமி… போயிட்டு தனியா வந்துக்குன… தேவா வரல” என்று கேட்டாள்.

“நான் அவனைப் பார்க்கல க்கா”

“இன்னாது… அப்போ நீ அவனைப் பார்க்க போலையா… அப்பால எங்கே போயிக்கினே நீ” என்றவள் விடாமல் நச்சரிக்க,

“எனக்கு வூட்ல நிறைய வேலை கிடக்கு க்கா… முடிச்சுக்கினு பொறுமயா வந்து உன்னான்ட அல்லா கதையும் சொல்லிக்கிறேன் … இப்போ என்னை வுடு” என்றவள் பூட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூடிக் கொண்டாள்.

அத்தனை நேரம் அவளுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை யாரிடமாவது கொட்ட வேண்டும் போல மனம் அல்லாடியது. ஆனால் யாரிடம் சொல்வது.

கண்களில் கண்ணீர் நிறைய தலையணையில் சாய்ந்தபடி தன் சிறு வயது நினைவுகளை எண்ணிப் பார்த்தாள்.

“என்னைக்காச்சு ஒரு நாளிக்கு உங்க அம்மா இல்ல அப்பா உன்னைய தேடிக்கின்னு வருவாங்க அமி” என்று பாட்டி அவளிடம் அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்படி யாராவது அவளைத் தேடிக் கொண்டு வருவார்களா என்றவளும் காத்திருந்து காத்திருந்து ஒரு காலக்கட்டத்திற்கு மேல் சலித்தும் போய்விட்டாள்.

“போ ஆயா… அப்படி யாரும் வரவும் போறதில்ல… வரவும் மாட்டாங்க… சும்மாங்காட்டியும் நீ இப்படி சொல்றதை நிறுத்து” என்றவள் கோபித்துக் கொண்ட போதும் மனதினோரத்தில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது.

பாட்டி இறக்கும் தருவாயில் கூட அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, “உன்னைப் பெத்தவங்ககிட்ட உன்னைய ஒப்படைக்காமலே இந்தக் கிழவி கண்ணை மூடிட போறேன்” என்று வருத்தப்பட்டு பேசியதை எண்ணுகையில் அவள் மனம் வேதனையில் புழுங்கியது.

“எனக்கு ஆரும் வோணாம்… நீ மட்டும் என்னைய வுட்டு போயிடாதே ஆயா” என்றவள் கண்ணீர் விட்டு கதறும் போதே வசந்தி பாட்டியின் உயிர் நிராசையுடன் பிரிந்துவிட்டது.

அமரா என்கிற அமியை அவள் குடும்பத்துடன் இணைக்க முடியாமல் போன இயலாமையைச் சுமந்தபடி அவர் இறந்து போய்விட அன்றோடு அமிக்கு அம்மா அப்பா என்ற உறவின் மீதான ஏக்கமும் எதிர்பார்ப்பும் சேர்ந்தே மறித்துப் போனது.

ஆனால் எதிர்பார்க்கும் ஒன்றை எதிர்பாராத சமயத்தில் கொண்டு வந்து நிறுத்துவதுதானே விதி!

அமியின் விழிகளில் கண்ணீர் வழிந்தோட கதவு தட்டும் ஓசைக் கேட்டு அவசரமாக அதனைத் துடைத்துக் கொண்டாள். அவள் கதவைத் திறக்க தேவா உள்ளே நுழைந்தான். அவனைக் கண்டும் காணாமல் மீண்டும் படுக்கையறையில் சென்று அடைந்து கொண்டாள்.

அவள் கண்களில் உள்ள கண்ணீர் தடங்களைப் பார்த்தவன், “அங்கே அந்த போலீஸ்காரன்கிட்ட பொய் சொல்லிக்கின்னு… இங்கே வந்து படுத்துகின்னு அழுதுன்னு கீறியா” என்று வினவ, அவள் அவன் முகத்தைப் பார்க்காமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

வலுக்கட்டாயமாக அவளை தன் புறம் திருப்பியவன் அவள் அருகில் அமர்ந்து, “இன்னாத்துக்குப் பொய் சொன்ன… நீதான் அந்தத் தொலைஞ்சு போன பொண்ணுன்னு சொல்லி இருக்கலாம் இல்ல” என்று கேட்க, அவன் கைகளைத் தள்ளிவிட்டாள்.

“நம்ம சண்டையெல்லாம் அப்பால வைச்சுக்கலாம்… இப்போ நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு”

“இன்னா சொல்லனும்… உன் மவ ஒரு திருடி… உன் மருமவ ஒரு கஞ்சா விற்குறவன்னா…

ஹும்… என்னை இத்தனை வருசமா தேடிக்கிட்டு இருக்க… என் அப்பனுக்கு இதைக் கேட்டா எப்படி இருக்குமாம்” என்றவள் நேரடியாக அவனைப் பார்த்துக் கேட்க, அவன் வாயடைத்து நின்றான்.

அவள் மீண்டும் முகத்தைக் கால்களில் புதைத்துக் கொண்டு அழ தொடங்கிவிட, “அமி” என்று ஆறுதலாக அவள் தோளைப் பற்றியவன்,

“நீயும் நானும் இஷ்டப்பட்டு ஒன்னியும் இதெல்லாம் செய்யல… ஏதோ விதி… நம்மல இதுக்குள்ள இழுத்து வுட்டுடுச்சு” என்றவன் சொல்ல, கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தவள்,

“சும்மா விதி மேல பழியைப் போட்டுத் தப்பிச்சுக்கலாம் பார்க்காதே… நீ மனசை வைச்சா இந்தத் தொழிலை வுட்டுற முடியும்… ஆனா செய்ய மாட்ட… அந்த தயா காலில வூந்து கிடக்குறதுதான் உனக்குப் புச்சுகுது… இதெல்லாம் ஒரு பொழைப்பு” என்றாள். தேவா அந்த நொடியே சீற்றமாகி,

“அடிங்… சுத்தி சுத்தி ஏன் டி அந்த விசயத்துலயே வந்து நிற்குற” என்று கத்தவும் அவள் கையெடுத்துக் கும்பிட்டு, “தப்புதான்… இனிமே பேசல… நீயும் என்னான்ட பேசாதே… எதுவும் கேட்காதே” என்று அந்த உரையாடலை முடித்துவிட்டாள்.

அதற்கு மேல் தேவாவும் அவளிடம் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை.

திருமணமான முதல் இரண்டு நாட்கள் மட்டுமே அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தது. அன்பாக உரையாடியது. முத்தங்களால் நேரங்களைக் களவாடியது. இன்னும் இன்னும் நாட்கள் அவ்விதமாக நீள கூடாதா என்ற அவர்களின் கற்பனைகள் எல்லாம் தயாவின் வருகையால் சட்டென்று முடிந்துவிட்டது.

தயா. ஆஜானுபாகுவான தோற்றம். ஆளுங்கட்சியின் முக்கிய கை அவன். அவனுடைய முக்கிய கை தேவா.

சரக்கு மாற்றுவதில் தொடங்கி சம்பவங்கள் செய்வது வரை தேவாவின் திட்டமிடல்கள் அத்தனை துல்லியமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆதலால் தயா தேவாவிற்கு நிறைய சலுகைகள் தொடங்கி பணம் வரை அவன் கேட்டது கேட்காதது என்று அனைத்தையும் தந்தான்.

தேவாவும் அவனின் மிக முக்கிய விசுவாசியாக மாறிப் போனான்.

அன்று அவர்கள் திருமணத்திற்கு வாழ்த்து கூற வீடு தேடி வந்திருந்தான் தயா. தேவா மரியாதையுடன் அவனை வரவேற்க, அமி அமைதியாக ஒதுங்கி நின்றாள். அவனை அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

தயா சில ரூபாய் கட்டுகளை எடுத்துக் கொடுத்து, “இந்தா தேவா…. வைச்சுக்கோ… எங்கேயாவது வெளியூர் போய் சந்தோஷமா இருந்துக்கின்னு வாங்க” என,

“பணம் எல்லாம் எதுக்கு ண்ணா… இருக்கட்டும் ண்ணா… வோணாம்” என்று தேவா மறுக்க, தயா கட்டாயப்படுத்தி அவன் கைகளில் திணித்தான்.

வேறு வழியின்றி அவன் அதனைப் பெற்றுக் கொள்ள எத்தனித்த போது அமி அவனைத் தடுத்துவிட்டு,

“இந்தப் பணம் எங்களுக்கு வோணாம்… இனிமே தேவா சரக்கு மாத்துற வேலையெல்லாம் செய்யமாட்டான்” என்று அதிரடியாகச் சொல்லிவிட்டாள்.

தேவா அதிர்ந்து நிற்க அமி மேலும், “தப்பா எடுத்துக்காதீங்க… அவனை வுட்டுருங்க… கஷ்டமோ நஸ்டமோ… நாங்க வேற எதனாச்சும் புழைப்பைப் பார்த்திருக்கோம்” என்று உரைத்துவிட தயாவின் கண்களில் கனலேறியது.

அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவன் தேவாவை முறைத்துவிட்டு அகன்றுவிட தேவா அமியிடம் திரும்பி, “அடிங்கோ**… பைத்தியமாடி உனக்கு” என்று கோபமாக எகிறியவன்,

“உன்னை வந்து வைச்சுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு தயா பின்னோடு ஓடினான்.

“அண்ணா… நில்லு ண்ணா… அவ ஏதோ உளறா ண்ணா” என்று தயாவைப் பின்தொடர்ந்து சென்று ஒருவாறு அவனை சமாதானம் செய்துவிட்டான். அதேநேரம் தயாவால் தேவா மாதிரி ஒரு திறமைசாலியை விட்டு கொடுக்க முடியாது.

ஆனால் பிரச்சனை அதற்கு பிறகுதான் தொடங்கியது.

தேவா வீட்டிற்கு வந்து அமியிடம் அவள் அப்படி பேசியது தவறென்று சொல்லி சண்டையிட,

“நான் சரியாதான் பேசிக்கினேன்… நேத்து வரைக்கும் எப்படியோ… இனிமே நமக்கு இந்தப் புழைப்பு வோணாம்” என்றவள் திட்டவட்டமாக உரைத்தாள்.

“நான் என்ன செய்யணும்னு நீ இன்னாடி சொல்றது… கன்னம் பேந்திரும்… ஒழுங்கா அடக்கம் ஒடுக்கமா இருக்க பாரு”
என்றவன் பதிலுக்குக் கோபமாகக் கத்த,

“தகிரியம் இருந்தா அடிறா பார்க்கலாம்” என்றவள் சற்றும் பயமின்றி எதிரே நின்றாள். தேவாவின் முகம் சிறுத்துப் போனது.

அவளை அடிப்பதற்கு ஒரு நொடி ஆகாது. ஆனால் அவனால் அவளைக் காயப்படுத்த ஒரு நாளும் முடியாது.

இன்று இருவருக்குள்ளும் ஆயிரம் கோபங்களும் வருத்தங்களும் இருக்கலாம். ஆனால் அதெல்லாம் அவர்கள் காதலை ஒன்றும் செய்துவிட முடியாது. சிறு வயதில் இருந்தே அவர்களுக்குள் ஏற்பட்ட அன்பின் அடித்தளத்திலிருந்து ஏற்பட்ட உறவு அவர்களுடையது.

இரயில் நிலையத்தில் பழம் விற்க செல்லும் வசந்தி பாட்டி ஒரு நாள் தன் கையோடு ஒரு சிறுமியை அழைத்து வந்தது இப்போதும் தேவாவின் நினைவுகளில் பதிவாகியிருந்தது. அவனுக்கு அப்போது பன்னிரண்டு வயது.

அழுது கொண்டிருந்த அந்தச் சின்னவளைப் பாட்டியால் சமாதானம் செய்யவே முடியவில்லை.

“அழாதே கண்ணு… இதான் இந்தப் பழத்தை… சாப்பிடு” என்று அவர் எவ்வளவு சொல்லியும் அவள், “அம்மா அம்மா” என்று அழுத மேனிக்கே இருந்தாள்.

அவளின் அழுகுரல் கேட்டு அங்கே வந்த தேவா, “யாரு ஆயா இது… புச்சா கீது” என்று கேட்க,

“பாவம்… ரொம்ப நேரமா தனியா ட்ரைன்ல அம்மா அம்மான்னு அழுதுக்குன்னு இருந்தது… அதான் கூட கூட்டியாந்துட்டேன்… சாப்பிடவே மாட்டேங்குது… அழுதுனே கீது” என்றார்.

தேவா இரக்கத்துடன் அவள் அருகில் அமர்ந்து, “அழாதே பாப்பா… அம்மா வந்து உன்னைக் கூட்டின்னு போவாங்க” என்றான்.

எதனாலோ அவன் பேச்சைக் கேட்டதும் அவள் கண்ணீர் நின்றுவிட, “அம்மா வருவாங்களா?” என்று அவனிடம் நம்பிக்கையுடன் கேட்டாள்.

“சத்தியமா வருவாங்க… நீ அழாதே” என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி,

“உன் பேரு என்ன பாப்பா?” என்று கேட்டான்.

“அமரா” என்றவள் மேலும், “அம்மா என்னைச் செல்லமா அமி குட்டி அமி குட்டின்னு கூப்பிடுவாங்க” என்றதும் அவன் புன்னகைத்துவிட்டு,

“நானும் உன்னை அமின்னே கூப்பிடுறேன்” என்றான்.

“ம்ம்ம்” என்று அந்த சின்னவள் அழகாய் தலையசைக்க, அவளிடம் கொய்யா கனி ஒன்றை எடுத்துக் கொடுத்து சாப்பிடவும் வைத்தான்.

நான்கு வருடம் நீடித்த அவர்களின் நட்பு திடீரென்று ஒரு நாள் முடிந்து போனது. தேவா செய்யாத குற்றத்திற்காக அவனைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

அவன் வெளியே வந்ததும் விதி அவனை இழுத்துச் சென்ற பாதையில் அவனும் வெகுதூரம் சென்றுவிட்டான். ஆனால் மீண்டும் ஒரு நாள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிட்டது.

அந்தச் சந்திப்பில் அவர்களின் நட்பு மீண்டும் மலர்ந்து அது பின்னாளில் காதலாக மாறியது.

நீயின்றி நானில்லை… நானின்றி நீயில்லை என்ற சங்கல்பத்துடன்தான் இருவரும் தங்கள் காதல் பயணத்தைத் தொடங்கி அதனைத் திருமண உறவாக மாற்றிக் கொண்டார்கள்.

அதனால்தான் அந்த இரண்டு வாரமாக எத்தனை சண்டையிட்டு கொண்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய வேண்டுமென்று ஒரு நொடி கூட நினைக்கவில்லை.

அவர்கள் உறவின் ஆழத்தைப் புரிந்து கொண்ட தயாவிற்குதான் தேவாவை இழந்துவிடுவோமோ என்ற பயம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அதற்கு முன்னதாக அமியை அவன் வாழ்விலிருந்து இல்லாமல் செய்துவிட வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா