மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: AmaraAmara - Episode 20Post ReplyPost Reply: Amara - Episode 20

Quote from monisha on September 6, 2024, 10:59 AM

20

அமிர்தா தன் கால்களிரண்டையும் இறுகப் பிணைத்துக் கொண்டாள். அவள் மறக்க நினைக்கும் அந்தக் கோர சம்பவம் அவள் நாடி நரம்புகள் மூளை என்று அனைத்தின் வழியாகவும் புகுந்தது. அவளின் அட்ரினல் சுரப்பியை ஏற்றிவிட்டது. அவளின் இதயம் படபடவெனத் துடித்தது.

அதற்கு பிறகாய் அவள் எதிரே இருந்த காட்சிகள் மங்கி இருண்டு போயின.

திடீரென்று ஒரு பத்து வயது சிறுமியாக மாறி ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் அவள் ஓடுகிறாள். தலை தெறிக்க ஓடுகிறாள். தட்டுத் தடுமாறாமல் அசாத்திய வேகத்துடன் தாவி குதித்து ஓடுகிறாள்.

எதை நோக்கி எங்கே ஓடுகிறோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. இன்னும் இன்னும் வேகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று தடுக்கி விழவும் யாரோ அவளை உலுக்கி எழுப்பவும் சரியாக இருந்தது.

மெதுவாக கண்களைத் திறந்தவள் ஹரீஷின் முகத்தைக் கண்டதும் நெகிழ்ச்சியுடன் உணர்வுகள் பெருக கண்கள் கலங்கினாள். அவன் கைகள் அவள் கரத்தைப் பற்றியிருந்தன. அவள் இன்னும் அழுத்தமாக அவன் விரல்களில் தன் கரங்களைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள். அமிர்தாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவன் பதறிவிட்டான்.

“ஏ அமிர்து… என்னாச்சு?” என்றவன் அவள் கன்னங்களைப் பற்றிக் கேட்க அவள் பதில் சொல்லாமல் உடைந்து அழ, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அமிர்தாவின் சோர்ந்து களைத்த முகத்தை கூட அவன் இதுவரை பார்த்ததில்லை. அவளா அழுகிறாள்?

அவனால் நம்ப முடியவில்லை. அமிர்தா அவன் பார்த்த பெண்களில் மிகவும் வித்தியாசமானவள். அவளின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பார்த்து அவன் வியப்படைந்திருக்கிறான்.

ஆனால் அவளின் இந்த முகம் அவனுக்கு ரொம்பவும் புதிது.

வெகுநேரமாக அவன் கையணைப்பில் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவள் ஒருவாறு தானாகவே சமாதான நிலைக்கு வர ஹரீஷ் அவள் முகத்தை நிமிர்த்திப் பிடித்து, “என்னாச்சு அமிர்து?” என்று மெதுவாக கேட்க, அவள் அவன் முகம் பார்த்தாலே ஒழிய எதுவும் பேசவில்லை.

அந்த மௌனத்தில் சொல்ல முடியாத ஏதோ ஒரு ஆழ்ந்த சோகத்தை அவள் சுமந்திருக்கிறாள் என்பதைக் கணித்தவனுக்கு அவள் உதடுகள் எதையோ சொல்லத் துடிப்பதையும் அதேநேரம் சொல்ல முடியாமல் தவிப்பதும் விளங்க,

“அமிர்து ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு” என்றான் அவள் கரங்களை அழுந்த பற்றிக் கொண்டு. அந்தத் தொடுகை அவளுக்கு நம்பிக்கை தந்தது.

அவனை நிதானித்து ஏறிட்டவள், “சில உணர்வுகளை… வலிகளை விவரிக்கவே முடியாது ஹரீஷ்” என்றாள் தழுதழுத்தக் குரலுடன். அவளின் அந்தக் குரலில் நிரம்பியிருந்த வலி அவன் இதயத்தை நேரடியாகத் தாக்கியது.

“நீ எதைப் பத்திப் பேசுற?”

“ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன்… நான் என்னோட பத்தாவது வயசுல ரேப் பண்ணப்பட்டேன்னு” என்றவள் ஆரம்பிக்கவும்,

“ஆமா… சொன்ன...” என்றவன் அடுத்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்ற படபடப்புடன் நோக்க,

“நான் அந்த மோசமான சம்பவத்துல இருந்து மீண்டு வந்துட்டேன்… என்னை மீட்டுக் கொண்டு வந்தது சாராம்மாதான்… அதேநேரம் அவங்க என்னோட பயாலிஜிக்கல் மதர் இல்ல” என்றதும்,

“அப்படியா?” என்றவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“ஸ்டில் அவங்கதான் எனக்கு உயிர் கொடுத்தவங்க… லைக் மறுஜென்மம்… என்னைப் பொறுத்த வரைக்கும் ஷி இஸ் எ கிரேட் மதர்… ஏன்? அவங்க அம்மா என்ற உறவுக்கெல்லாம் மேலன்னு சொல்லணும்.”

”என்னைத் தைரியமா தன்னம்பிக்கையோட வளர்த்தவங்க… எனக்கு தெரிஞ்சு நான் அவங்க தோளில் மட்டும்தான் சாய்ஞ்சு அழுதிருக்கேன்…” என்றவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து,

“அவங்களுக்கு அப்புறமா நான் உன் தோளிலதான் சாய்ஞ்சு அழுறேன் ஹரீஷ்” என்றாள்.

அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “இதை விட நீதான் எனக்கு முக்கியம்னு நான் வேற எப்படி டா சொல்றது” என்று கேட்ட நொடி அவன் கண்களிலும் கண்ணீர் பெருகிவிட்டது.

“சாரி அமிர்து… ஐம் எக்ஸ்டிரீம்லி சாரி… சில்லியா உன்கிட்ட அப்படியொரு கேள்வியைக் கேட்டுட்டேன்”

“உனக்கே தெரியுதா… நீ கேட்ட கேள்வி ஸில்லின்னு”

“ம்ம்ம்” என்றவன் ஆமோதிக்க அவள் அவன் தோளில் செல்லமாக அடிக்கவும்,

“சாரி அமிர்து” என்றபடி அவளை இறுகக் கட்டிக் கொண்டான்.

அந்த அணைப்பில் இருவருமே ஆழ்ந்து மூழ்கியிருந்த நிலையில் சட்டென்று ஏதோ நினைவு வந்தவனாக ஹரீஷ் அவள் முகத்தை நிமிர்த்தி கண்களைப் பார்த்து, “ஆமா நீ எதுக்கு அழுத? ஏன் மயக்கம் போட்டு விழுந்த? திடீர்னு என்னாச்சு? வேணா நம்ம போய் டாக்டரைப் பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்க,

“நான் மயக்கம் போட்டு விழுந்தேனா?” என்றவள் நடந்தவற்றை உணராதவள் போல பதில் கேள்வி கேட்டாள்.

“ஆமா… நீ மயக்கம் போட்டு விழுந்துட்டன்னு தேவாதான் எனக்கு இன்ஃபார்ம் பண்ணான்” என,

“நான் நீ அனுப்பின ஃபோட்டோவை பார்த்தேன்” அவள் தலை கவிழ்ந்தபடி பேசினாள்.

“ஆல்வின் ஃபோட்டோவையா?”

“ம்ம்ம்”

“உனக்கு ஆல்வினைத் தெரியுமா?”

“ம்ம்ம்” என்றவள் மௌனமாகத் தலையசைக்க,

“எப்படி தெரியும்?” அவன் வியப்புடன் கேட்டான்.

“தெரியும்… ஆனா எப்படி தெரியும்னு என்னால சரியா கனெக்ட் பண்ணிக்க முடியல” என்றவள் சொல்ல, அவன் புரியாமல் விழித்தான்.

“என் மனசுக்குத் தோணுது ஹரீஷ்… இந்த ஆளு நல்லவன் இல்லன்னு… ஆக்சுவலி சின்ன வயசுல எனக்கு நடந்த அந்த மோசமான சம்பவத்துக்கும் இவனுக்குமே சம்பந்தம் இருக்கும்னு என் மனசுக்குத் தோணுது… என்னவோ இருக்கு? எல்லாத்துக்கும் மேல இவன்கிட்ட அமரா பாதுகாப்பா இருப்பான்னு எனக்கு தோணல… ஷி மஸ்ட் பீ இன் டேஞ்சர்னு என் உள்ளுணர்வு சொல்லுது” என்று தெரிவித்துவிட்டு ஹரீஷின் சட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு,

“நாம அமராவைக் கண்டுபிடிக்கணும் ஹரீஷ்…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சே ஆகணும்… இதுல நீ எனக்கு சப்போர்ட் பண்ணணும் ஹரீஷ்” என்றவள் நிமிர்ந்து அவன் என்ன பதில் சொல்ல போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் நோக்க,

“கண்டிப்பா நான் உனக்கு சப்போர்ட் பண்றேன் அமிர்தா… நாம அமராவைக் கண்டுபிடிப்போம்” என்றான்.

அந்த வார்த்தைகளை அவன் சொன்ன நொடி அவள் மனதில் அப்படியொரு நிம்மதி பரவியது. தன் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொள்ளவும், எந்நிலையிலும் தனக்கு துணையாக நிற்கவும் ஒரு உறவு கிடைத்துவிட்ட நிம்மதி. அதனால் ஏற்பட்ட பேரமைதி அவள் மனதில் பொங்கிய வேதனைகளையும் வலிகளையும் ஒருவாறு மட்டுப்படுத்தியிருந்தது.

தேவா, ஹரீஷ், அமிர்தா மூவரும் அந்த டைனிங் மேஜையை சுற்றி அமர்ந்திருந்தனர். தேவாவிற்கு ஹரீஷை எதிர்கொள்ள சங்கடமாக இருந்த போதும் அமிர்தா அவனைக் கட்டாயப்படுத்தி அங்கே அமர வைத்திருந்தாள்.

“உங்களுக்கு இன்னாச்சு மேடம்?” என்று தேவா விசாரிக்க,

“ஒன்னும் இல்ல… பிபி லோவாகிடுச்சு… எப்பவாச்சும் இப்படி நடக்கும்” என்றவள் சமாளிப்பாக ஒரு காரணத்தைக் கூற அவன் குழப்பத்துடன்,

“அது ஏன் ஆல்வின் ஃபோட்டோவைப் பார்த்ததும் உங்களுக்கு அப்படி ஆச்சு மேடம்?” என்று கேட்டான்.

“இல்ல… எனக்கு ஆல்வின் ஃபோட்டோவை பார்த்து எல்லாம் மயக்கம் வரல… ஜஸ்ட் சாதாரணமாதான்” என தேவா அவளை சந்தேகத்துடன் நோக்க அவள் மிகச் சாதாரணமாக இருந்தாள்.

ஆனால் அவன் சந்தேகம் தீரவில்லை. தலையைக் குனிந்தபடி அவன் தீவிரமாக யோசிக்க ஹரீஷ் அமிர்தாவின் முகத்தைப் பார்த்து புரிதலாக தலையசைத்தான்.

தேவாவிற்கு ஒரு வேளை தான் சொன்ன விஷயம் தெரிந்தால் அவன் அமராவைக் குறித்து ரொம்பவும் பயப்பட கூடும் என்று எண்ணியே அவள் அவ்வாறு பொய்யுரைத்தாள். ஆல்வின் பற்றி அவள் சொன்ன விஷயம் தேவாவிற்குத் தெரிய வேண்டாமென்று அவள் ஹரீஷிடமும் முன்னமே சொல்லி இருந்தாள்.

தேவா சிந்தனையை கலைக்கும் விதமாக ஹரீஷ், “இப்போ ஆல்வின் ஃபோட்டோ கிடைச்சிடுச்சு… அடுத்து நம்ம என்ன பண்ண போறோம்?” என்று அமிர்தாவிடம் வினவ,

தேவா ஆவலுடன் நிமிர்ந்து அவளின் பதிலை எதிர்பார்த்தான்.

“நான் ஏற்கனவே ஒரு டிடக்டிவ் ஏஜென்ஸி கிட்ட பேசி இருக்கேன்… அவங்களுக்கு கெனடா மெக்ஸிகோல எல்லாம் பிராஞ்சஸ் இருக்கு… அவங்க ஆல்வின் ஃபோட்டோ மட்டும் போதும்… கண்டுபிடிச்சு தரன்னு சொல்லி இருக்காங்க” என,

“சீரியஸ்லி” என்று ஹரீஷ் வியப்புடன் நோக்க தேவாவின் கண்களிலும் நம்பிக்கை ஒளிர்ந்தது.

“நான் ஃபோட்டோவை அவங்களுக்கு மெயில் பண்ணதும் நிச்சயமா நமக்கு டீடயில்ஸ் கிடைக்கும்” என்று அமிர்தா உரைக்க,

“அப்படினா சட்டுன்னு ஃபோட்டோவை அனுப்பி வுடுங்க மேடம்” என்று தேவா பரப்பரபாகச் சொல்ல அவள் தலையசைத்துவிட்டு தன் செல்பேசி எடுத்து அந்தப் பணியை செய்து முடித்தாள்.

பின்னர் அவள் அந்தத் துப்பறியும் நிறுவனத்துடன் பேசிவிட்டு தேவாவையும் ஹரீஷையும் பார்த்து தன் ஆட்காட்டி விரலைக் காட்டினாள்.

எந்தளவு அந்த முயற்சி பலனளிக்கும் என்று தெரியாத போதும் அவர்கள் அமராவின் தேடலில் முதல் படியில் கால் வைத்துவிட்ட திருப்தியைப் பெற்றனர்.

அந்தத் துப்பறியும் நிறுவனத்திலிருந்து அவளைத் தொடர்பு கொண்டு பேசிய மனிதன் இன்னும் இரண்டு நாட்களில் கண்டுபிடித்து சொல்வதாகத் தெரிவித்திருந்தான்.

இந்நிலையில் அடுத்த நாள் பாலமுருகன் அமிர்தாவை சந்திக்க வீட்டிற்கு வந்திருந்தார். அவரே ஆல்வின் விஷயத்தில் என்ன நேர்ந்திருக்கிறது என்று புரியாமல் குழம்பி இருப்பதாக தேவாவிடம் தெரிவிக்க அப்போது அமிர்தா,

“எனக்கு ஒரு டவுட்… உண்மையிலேயே அமரா ஆல்வினோட மகளா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு அவரை அதிர செய்தாள்.

இந்தக் கேள்வியில் தேவாவும் கூட அதிர்ந்துவிட்டான். இப்போது வரை அவன் அப்படியொரு கோணத்தில் யோசிக்கவில்லை.

பாலமுருகனோ அவள் கேள்வியில் சீற்றமாகி, “என்னமா பேசுற நீ? அமரா ஆல்வினோட மக இல்லன்னா எதுக்கு அந்த மனுஷன் அந்தப் பொண்ணைப் பதினைந்து வருஷமா பைத்தியக்காரன் மாதிரி நாடு நாடா தேடி அலையணும்?” என்றார்.

“சரிதான்பா… ஆனா அமரா ஆல்வினோட மகங்குறதுக்கு என்ன ப்ரூஃப்? ஒரு வேளை நீங்க அமராவை அனுப்புறதுக்கு முன்னாடி அவங்க இரண்டு பேருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து கன்ஃபார்ம் பண்ணீங்களா?” என்று கேட்க, அவர் முகம் இருளடர்ந்து போனது.

அவர் ஆல்வினிடம் மரபணு சோதனை செய்து பார்த்துவிடலாம் என்று சொன்னார். ஆனால் ஆல்வின்தான் ஏதோ காரணம் சொல்லி மறுத்துவிட்டார்.

ஒரு வேளை அமிர்தா சொல்வது போல… என்று நொடியில் தடுமாறிய அவர் மனம் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “இல்ல… நீ ரொம்ப யோசிக்கிற… ஆல்வின் அமராவோட அப்பாதான்… அவனோட கண்களில் அமராவுக்கான ஏக்கத்தைத் தவிப்பை நான் பார்த்தேன்… என்னோட இத்தனை வருஷ அனுபவத்தில சொல்றேன்… நிச்சயம் ஆல்வின் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்ல” என்றவர் திட்டவட்டமாகச் சொல்ல,

தேவாவும் உடன் சேர்ந்து கொண்டு, “எனக்கும் சார் சொல்ற மாறிதான் மேடம் தோணுது… ஆல்வின் சார் அமியை முத தபா பார்த்த போது அவர் கண்ணில அந்தப் பாசத்தை நான் பார்த்துக்குனேன்… அது பொய்யா இருக்கும்னு தோணல மேடம்” என, அமிர்தாவும் ஹரீஷும் தங்கள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆல்வின் குறித்த அவர்களின் நம்பிக்கையை உடைக்க விரும்பாத அமிர்தா அதற்கு பிறகு அந்தச் சந்தேகத்தை எழுப்பவில்லை. ஆனால் ஹரீஷிடம், “ஒரு வேளை என் கணிப்பு தப்போ… ஆல்வின் இவங்க சொல்ற மாதிரி நல்லவரா இருப்பாரோ?” என்று தெரிவிக்க,

“நாமளா எந்த முடிவுக்கும் வர வேண்டாம்… டிடக்டிவ் ஏஜென்ஸில என்ன சொல்றாங்கன்னு பார்ப்போமே” என்றான்.

அவன் சொல்வதும் சரிதான் என்று பொறுமையாக அவள் காத்திருக்க, அடுத்த நாள் அந்தத் துப்பறியும் நிறுவனத்திலிருந்து ஜாக்ஸன் என்ற பெயர் கொண்ட நபர் அவளைத் தொடர்பு கொண்டு பேசினான்.

அவளுக்கு ஆல்வின் குறித்த இணைப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாகச் சொல்ல அவள் அதனை உடனடியாக எடுத்துப் பார்க்க, அது ஒரு விக்கிபிடியாலிங்க்.

அவள் ஆச்சரியம் மேலிட அதனைத் திறந்து பார்க்கலானாள்.

ஆல்வின் தேவராஜ். உயிரியலாளர் (Biologist)

இளம் வயது விஞ்ஞானி என்ற புகழைப் பெற்றவர்.

அவள் ஆச்சரியத்திற்குள்ளானாள்.

நாம் தேடிக் கொண்டிருக்கும் மனிதனோ உலகமறிந்த ஒரு முன்னணி விஞ்ஞானி. அதுவும் திறமை வாய்ந்த இளம் விஞ்ஞானி. அவளால் நம்ப முடியவில்லை.

கனடாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மரபணு ஆராய்ச்சி மையத்தில் தன்னுடைய பதினெட்டு வயதிலேயே ஆராய்ச்சி மாணவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். அவரின் அறிவியல் ஆர்வம் மூலமாக அதனைச் சாதித்துக் காட்டியதோடு அல்லாமல் அடுத்தடுத்த எட்டிய உயரங்களும் சாதனைகளும் வியப்பின் விளம்பிற்கே அவளைக் கொண்டுச் சென்றன.

தன்னுடைய இருபத்து மூன்றாம் வயதில் இளம் விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்பட்டு உயிரியல் சார்ந்த துறையில் விருதும் பெற்றிருக்கிறார்.

மற்றபடி அவருடைய குடும்ப தகவல்கள் என்று ஒன்றும் அதில் இல்லை. தேவராஜ் என்ற இந்திய வம்சாவெளி அமெரிக்கருக்கும் ஒரு நீக்ரோ தாயிற்கும் மகனாகப் பிறந்தவர் ஆல்வின் என்று மட்டும் இருந்தது.

தன் லேப்டாப்பை விட்டு எழுந்தவள் மீண்டும் ஜாக்ஸனைத் தொடர்பு கொண்டு ஆல்வினின் குடும்ப பிண்ணனி மற்றும் விலாசம் குறித்து விசாரித்துச் சொல்ல சொன்னாள்.

அடுத்த சில நிமிடங்களில் டிங் என்ற சத்தத்துடன் அவளுக்குக் குறுந்தகவல் ஒன்று வந்தது.

ஆல்வினின் குடும்ப விவரங்கள் மொத்தமும் அடங்கிய தகவல் அது. ஆல்வினின் தாத்தா குமாரசுவாமி லக்ஷ்மி இருவரும்1970களில் இந்தியாவை விட்டு அமெரிக்காவில் குடிபெயர்ந்த தமிழர்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் தேவராஜ். இளையவர் அருள்ராஜ்.

தேவராஜ் தன் குடும்பத்தை எதிர்த்து நீக்ரோ பெண் ஒருத்தியை மணம்புரிந்த கையோடு கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டார். அவர்களின் ஒரே மகன்தான் ஆல்வின்.

ஆல்வின் பிறந்த சில நாட்களில் அந்த நீக்ரோ பெண் தேவராஜை விவகாரத்து செய்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் போதைக்கு அடிமையான தேவராஜ் சில நாட்களில் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்.

ஆல்வின் குமாரசுவாமி லக்ஷ்மியின் பொறுப்பில் வளர ஆரம்பித்த போதும் அவன் அப்படியே அந்த நீக்ரோ பெண்ணின் ஜாடையில் இருப்பதால் அவனை அவர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அவனை அரவணைத்துக் கொண்டதும் வளர்த்ததும் அருள்ராஜ்தான்.

அடுத்ததாக ஆல்வின் மனைவி பெயர் அமுதா. அமுதா மரபணு ஆராய்ச்சியில் பட்டப்படிப்பு முடித்து, தன் திறமை மற்றும் முயற்சியால் கனடா மரபணு ஆராய்ச்சி மையத்தில் நேரடியாக வேலைக்கு அழைக்கப்பட்டாள்.

அங்கே ஆல்வினும் அமுதாவும் சந்தித்துப் பழகி அடுத்த ஒரு வருடத்தில் காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த ஒரே மகள் அமரா.

இதுவரை அவர்கள் சேகரித்து அனுப்பியிருந்த தகவல்கள் முடிந்திருந்தன.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா