மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: AmaraAmara - Episode 22Post ReplyPost Reply: Amara - Episode 22

Quote from monisha on September 9, 2024, 6:07 PM

22

பல வகை மக்கள் வாழும் பண்பாடுடைய நகரமாக விளங்கும் ஒட்டாவா, உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் தலைநகரமாகும்.

அத்தகைய பிரமாண்டமான நகரத்தில்தான் ஆல்வினின் தனிக்குடியிருப்பு அமைந்திருந்தது. அந்தச் சாலையில் உள்ள அனைத்துமே தனித்தனி குடியிருப்புகள்தான். கொஞ்சம் அதீத ஆடம்பர குடியிருப்புகளும் கூட. ஒவ்வொரு குடியிருப்பும் கண்களுக்கு எட்டிய தூரத்தில் நின்றன.

அந்த அதிகப்படியான இடைவெளி குடியிருப்புகளுக்கு மட்டுமல்ல. மனிதர்களுக்கு இடையிலும் இருந்தது. அக்கம்பக்கத்தினர் யாருக்கும் பெரிதாக ஆல்வின் பற்றி தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

அங்கே ஆல்வினின் சித்தப்பா அருள்ராஜ் மட்டும் அவ்வப்போது வந்து செல்வதாக சிலர் சொன்னார்கள். ஆனால் அவர் ஒரு மர்ம மனிதர் போல தன் முகத்தை மூடிக் கொண்டுதான் வருவார், போவார் என்றதோடு மட்டுமல்லாது அவர் முகத்தைக் கூட அங்கு வசிப்பவர் எவரும் பார்த்ததில்லை என்ற பதில்தான் கொஞ்சம் விசித்திரமாகவும் வியப்பாகவும் இருந்தது ஜாக்ஸனுக்கு.

அதுவும் சமீப காலமாக அருள்ராஜும் அங்கே தங்கி இருக்கவில்லை என்று சொல்லப்பட்டதில் அந்தத் துப்பறியும் நிபுணன் கொஞ்சம் ஏமாற்றமடைந்தான்.

இருப்பினும் தன்னுடைய வேலை அதிகப்படியான சவாலாக இருக்க போகிறது என்று சுவாரசியமானான். இருள் மெல்ல அவ்விடத்தைக் கவ்வி கொள்ள, ஜாக்ஸன் அந்த இருளோடு இருளாக மாறி ஆல்வினின் வீட்டைச் சுற்றிலும் ஆராய்ந்தான்.

அந்தத் தன்னந்தனி குடியிருப்பின் அருகிலிருந்த மரத்தின் இலைகள் சுற்றிலும் காய்ந்து சருகாகி அதன் வாயிலில் சிவப்பு கம்பளம் விரித்திருந்ததைப் பார்க்கையில், ஜாக்ஸனுக்கு அங்கே மாதக்கணக்கில் மனித வாசம் இல்லையென்று தோன்றியது. அதுவும் அந்த இடமே பார்க்க ஏதோ ஹாலிவுட் படப் பேய் வீடுகளின் காட்சியைக் கொடுத்தது.

உள்ளே நுழைவது அத்துமீறல் என்ற போதும் அவனுக்கு வேறு வழியில்லை. வீட்டில் ஏதாவது பாதுக்காப்பு கருவி இணைக்கப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்த, அடுத்தப் பத்தாவது நிமிடத்தில் தன்னிடமிருந்த கருவிகள் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே குதித்துவிட்டான் அந்தத் துப்பறிவாளன்.

இருளடர்ந்த அந்த முகப்பறையில் சிறிய டார்ச் லைட் வசதியுடன் உள்ளே நடந்தவன் ஆல்வின் குறித்துக் கிடைத்த சிற்சில உறுப்படியான தகவல்களைப் படம் பிடித்து அமிர்தாவின் கைப்பேசிக்கு உடனடியாக அனுப்பியும் வைத்துவிட்டான்.

கண்டங்களைக் கணபொழுதில் கடக்கும் ஆற்றல் இன்றைய காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சியின் சாதனைகள் என்று சொன்னால் அது மிகையில்லை.

அனுப்பிய விநாடி பொழுதுகளில் அமிர்தாவும் அந்தப் படங்களை ஒவ்வொன்றாக தள்ளிப் பார்த்தாள். அந்த வீட்டின் ஒரு பகுதி அறிவியல் ஆராய்ச்சி கூடம் போல காட்சியளித்தது.

வேறொன்றும் புதிதாக இல்லை. மற்றவை எல்லாம் அமுதாவும் ஆல்வினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள். அப்படங்களைப் பார்க்கையில் அவர்களின் அன்யோன்யம் நன்றாகவே புலப்பட்டது. அதில் ஒரு படத்தில் மட்டும் அமரா இடையில் நின்றிருக்க, தம்பதிகள் இருவரும் அவளை அணைத்துப் பிடித்திருந்தனர்.

அவர்களின் குடும்பம் பார்க்க அழகான சிறிய குருவி கூடு போல தோன்றியது. ஆனால் அமிர்தாவின் விழிகள் ஆல்வினின் விழிகளில் ஏதேனும் கள்ளத்தனம் தெரிகிறதா? பொய்மை புலப்படுகிறதா? என்று கூர்ந்து ஆராய்ந்தது.

அப்படியொன்றும் தெரியவில்லை. ஆல்வினுக்குச் சற்றே கடினமான முகத்தோற்றம்தான் என்றாலும் அந்தச் சிரிப்பு அவரை அன்பானவராகக் காட்டியது. எல்லோரையும் போல குடும்பத்தை நேசிக்கும் மனிதராகக் காட்டியது. அதுதான் அபரிமிதமான அறிவியல் முன்னேற்றங்களுடன் கூடிய இன்றைய காலக்கட்ட மனிதர்களின் ஆபத்தான மாற்றங்கள்.

பலரும் தங்கள் முகத்திற்கு மிகச் கச்சதிமாகப் பொருந்தும் முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். எது முகம்? எது முகமூடி? என்றே நாம் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு.

இது ஆல்வினின் முகமா அல்லது முகமூடியா? இந்தச் சிந்தனை வந்ததும் அவள் பார்வை அனிச்சை செயலாக அமராவின் தாய் அமுதாவினை ஆராய்ந்தது. தென்னிந்திய பெண்களின் மாநிற அழகுடன் கூடிய கம்பீரம் அவர் முகத்தில் மிளிர்ந்தது.

அந்தக் கணம் அவள் மனதில் எழுந்த சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவள் நேரடியாக பாலமுருகனுக்கு அழைத்தாள்.

“ஹெலோ யாரு?” என்று கீதாவின் குரல் ஒலிக்கப் பேசுவதா வேண்டாமா என ஒரு நொடி தயங்கியவள் பின் மெல்ல,

“நான் அமிர்தா பேசுறேன்… ப்ளீஸ் கட் பண்ணிடாதீங்க… நான் ஹரீஷ் அப்பாகிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்” என்று தெரிவிக்க, கீதா கோபமானார்.

“உனக்கென்ன அவர்கிட்ட முக்கியமா பேசணும்?”

“அமரா விஷயமா?” என்றவள் சுருக்கமாகக் கூற, கீதா எதுவும் பேசவில்லை.

“ஹெலோ… அம்மா” என்று அமிர்தா குரல் கொடுக்க,

“அம்மாவா? யாருடி உனக்கு அம்மா? அப்படி என்னைக் கூப்பிட்டேனா உன்னைக் கொன்னுடுவேன்” என்று கீதாவின் குரல் சீறலாக வெளிவரவும்,

“சாரி… ஒரு மரியாதைக்காக அப்படி கூப்பிட்டேன்… இனிமே அப்படி கூப்பிடல” என்றவள் அமைதியாகக் கூறிய போதும் கீதாவின் கோபம் குறையவில்லை.

“யாருடி நீ? எங்கிருந்தோ வந்து என் குடும்பத்துல இப்படி புதுசா புதுசா குழப்பத்தைப் பண்ணிட்டிருக்க?”

“நான் யாரு என்னன்னுதான் அன்னைக்கே உங்ககிட்ட விலாவரியா சொல்லிட்டேனே.”

“எப்படி உன்னால இப்படி வெட்கமே இல்லாம பேச முடியாது?”

“எதுக்கு நான் வெட்கப்படனும்? எனக்கு புரியல?”

“ம்ம்ம்… உங்க ம்மா அப்படியொரு தொழில் பண்றாங்கன்னு கூச்ச நாச்சமே இல்லாம எல்லோர் முன்னாடியும் சொல்ற.”

“கூச்ச நாச்சமா… எதுக்கு?” என்று சற்றே எள்ளலான நகைப்புடன் பேசத் தொடங்கியவள், “உங்க ஊர்ல எல்லாம்… மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துட்டு ஏமாத்திட்டு இருக்க அரசியல்வாதிங்களுக்கு அதெல்லாம் இருக்கா? இல்ல லஞ்சம் வாங்கி சம்பாதிக்கிற அரசாங்க அதிகாரிகளுக்கு இருக்கா?”

”இல்ல தரமில்லாதப் பொருளை விக்குற வியாபாரிகளுக்காவது இருக்கா? இல்ல பிரைவட் ஹாஸ்பிட்டல ட்ரீட்மெண்ட்ங்குற பேர்ல கொள்ளை அடிக்குற டாக்டர்ஸ்காச்ச்சும் இருக்கா?”

”ஏன் ஸ்கூல் நடந்துறோங்குற பேர்ல இலட்சம் இலட்சமா அநியாயமா ஃபீஸ் வாங்கி கல்வியை வியாபாரமா மாத்திட்டு இருக்கவங்களுக்காவது நீங்க சொன்ன அந்தக் கூச்சமெல்லாம் இருக்கா என்ன?”

”அப்புறம் ஏன் எனக்கு மட்டும் இந்த கூச்சமெல்லாம் இருக்கணும்? எனக்கு தெரிஞ்சு அப்படி ஒன்னும் எங்க அம்மா யாரு குடியையும் அழிக்கல… யார் வாழ்க்கையையும் கெடுக்கல… அவங்களுக்குத் தோணின மாதிரி அவங்க வாழ்ந்தாங்க… அவங்க இஷ்டபடி அவங்க இருந்தாங்க… தட்ஸ் இட்” என்றவள் தீர்க்கமாகக் கூற கீதா எரிச்சலுடன்,

“உங்க அம்மா செஞ்சதை நீ இப்படி எல்லாம் பேசி நியாயப்படுத்துறியா?” என்று கேட்டார்.

“நான் நியாயப்படுத்த மாட்டேன்… எங்க அம்மா அந்தத் தொழில் செஞ்சதுக்குப் பின்னாடி ஏதாவது பெரிய சோக ஃப்ளாஷ் பேக் சொல்லி பச்சாதாப உணர்வையும் உருவாக்க மாட்டேன்.”

”அப்படி எல்லாம் செய்ய வேண்டிய அவசியமும் இல்ல… எங்க அம்மா அந்தத் தொழிலை விருப்பப்பட்டுதான் செஞ்சாங்க… ஆனா எந்த விதத்திலயும் அவங்களால யாரும் பாதிக்கப்படல… இன்னும் கேட்டா நிறைய பேர் அவங்களால பயனடைஞ்சு இருக்காங்க.”

”ஏன்? அவங்க இறந்த பிறகும் கூட பல நாடுகளில் உள்ள தன்னுடைய சொத்துக்களை அந்தந்த நாடுகளில் உள்ள ஆதரவற்றவங்க ஆசிரமங்களுக்கு எழுதி வைச்சு இருக்காங்க”

”அதான் எங்க அம்மா… எங்க அம்மாவோட வாழ்க்கை தப்பு பிடிக்கலங்குறது எல்லாம் உங்க விருப்பம்… அதுக்காக எங்க கல்யாணத்துக்கு நீங்க தடை சொல்றது நியாயம் இல்ல.”

”நான் ஒன்னும் உங்க மகன் போல பத்து பதினைஞ்சு பேரைக் காதலிச்சிட்டுப் பதினாறாவதா உங்க மகனை விரும்பல… நான் இதுநாள் வரையில் நேசிச்ச காதலிச்ச… கல்யாணம் பணிக்கணும்னு விருப்பட்ட ஒரே ஆண் ஹரீஷ் மட்டும்தான்… அது அவனுக்கும் நல்லா தெரியும்” என்றவள் தான் சொல்ல வேண்டியதைத் தெள்ளத்தெளிவாகச் சொல்லி முடிக்க, கடைசியாக மகனைப் பற்றிச் சொன்னதில் கீதாவிற்குச் சுருக்கென்று குத்தியது.

அதற்கு என்ன பதிலுரைப்பதென்று புரியாமல் அவர் தடுமாறிய சமயம் குளியலறையிலிருந்து துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்த பாலமுருகன், “யாரு ஃபோன்ல?” என்று கேட்டார்.

கீதா பதில் பேசாமல் அலைபேசியை அவரிடம் கொடுத்துவிட்டு வெளியே நகர்ந்துவிடவும் யாரென்று திரையைப் பார்த்து வியப்புற்றவர், “என்ன விஷயம் அமிர்தா?” என்று கேட்டார்.

“அவங்க கோபமா போறாங்களா?”

“அப்படி ஒன்னும் தெரியலேயே… ஏன் உன்கிட்ட ஏதாச்சும் கோபமா பேசுனாளா?” பாலமுருகன் பதட்டத்துடன் வினவ,

“கோபமா எல்லாம் பேசல… நார்மலாதான் பேசுனாங்க… ப்ச் அது ஒரு விஷயம் இல்லபா” என்றவள் தான் கேட்க வந்த விஷயத்திற்கு வந்தாள்.

“நான் ஆல்வின் வொய்ஃப் அமுதா பத்தி உங்ககிட்ட விசாரிக்கலாம்னுதான் கால் பண்ணேன்”

அமைதியாக யோசித்தவர் பின் அவருக்கு நினைவு வந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டு, “அமுதா தமிழ்நாடுதான்… கனடாவுக்கு வேலை கிடைச்சு போய் அங்கே ஆல்வினை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்… அவங்க வளர்ந்த ஆசிரமம் வில்லிவாக்கம் பக்கத்துல இருக்கு… பேர் கூட ஏதோ ஜோதி இல்லம்னு… பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அமரா காணாம போன போது அந்த ஆசிரமத்தோட நிர்வாகி கணேஷ் கிட்ட கூட விசாரிச்ச ஞாபகம் இருக்கு” என்று தனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்க,

“தேங்க்ஸ் பா” என்றவள் அவர் அடுத்த வார்த்தையைப் பேசுவதற்குள் அழைப்பைத் துண்டித்தாள்.

பின்னர் இலண்டனுக்கு அழைத்து தன் காரியதரிசி ஷெரினிடம் பேசி சாரா அம்மாவின் அறையில் உள்ள கப்போர்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தைக் கைப்பேசியில் படம் பிடித்து அனுப்பச் சொன்னாள்.

அவர் அந்தப் படத்தை எடுக்கும் போது அதனுடன் வேறொரு கோப்பு உள்ளே இருந்ததாக ஷெரின் தெரிவிக்க, அமிர்தா அதனையும் சேர்த்துப் படம் எடுத்து அனுப்பச் சொன்னாள்.

அந்தக் கோப்புவின் மேலுறையைப் பார்த்ததும் ஆச்சரியமான அமிர்தா அதனுடன் ஷெரின் அனுப்பியிருந்த மற்றொரு படத்தையும் பார்த்தாள். ஏற்கனவே அந்தப் படத்தை அவள் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது அதனைக் கூர்ந்து பார்த்தாள்.

அந்தப் படத்திலிருந்த பெண்களுக்கு பதினெட்டிலிருந்து இருபது வயதிருக்கும். இருவரும் தோள் மீது கைப் போட்டு மிகவும் நெருக்கமாக நின்றிருந்தனர். வலது பக்கம் சாரா நின்றிருக்க, இடது பக்கம் நின்றிருப்பது அவருடைய நெருங்கிய தோழி அம்மு. அப்படிதான் ஒரு முறை அந்தப் படத்தைப் பார்த்து அவள் விசாரித்த போது சாரா உரைத்தார்.

அந்த அம்முதான் இந்த அமுதா.

அம்மு தன்னுடைய உற்றத் தோழி ஒரே உறவு என்றெல்லாம் சாரா சொல்லுவார். ஆனால் பெரிதாக அவரைப் பற்றி எந்தத் தகவலையும் உரைத்ததில்லை.

இந்தக் கதையின் புள்ளிகள் எல்லாம் எங்கே இணைகின்றன? அமிர்தாவிற்குக் குழப்பமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரு வகையில் சாரா அல்லது அமுதா இருவரில் யாரேனும் ஒருவர் உயிருடன் இருந்தால் அவளுக்குப் பதில் கிடைத்திருக்கலாம். ஆனால் இல்லை. இப்போது அவளுக்கான பதிலை வைத்திருப்பவன் ஆல்வின் மட்டும்தான்.

அவன் எங்கே இருக்கிறான்?

மீண்டும் அவள் தேடல் ஒரு கேள்வியில் வந்து முடிந்திருக்கிறது.

இரவெல்லாம் இந்தச் சிந்தனையில் அவள் உறக்கத்தைத் தொலைத்திருந்தாள். தாமதமாகவே காலை விழித்தவள் எழுந்து படுக்கையறையிலிருந்து வெளியே வரும் போதே சோஃபாவில் ஹரீஷ் அமர்ந்திருக்க வியப்பாகப் புருவத்தை ஏற்றிவிட்டு, “ஹாய் ஹரீஷ்… குட் மார்னிங்” என்று புன்னகைக்க,

“குட் மார்னிங்” என்றபடி மெலிதாக அவனும் புன்னகைத்தான். ஆனால் அவன் முகத்தில் தெளிவில்லை என்பதைக் கண்டவள்,

“என்னாச்சு… காலையிலயே வந்திருக்க?” என்று விசாரிக்க,

“அம்மா நேத்து நைட் நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேசுனாங்க” என்றான்.

“ஓ! என்ன சொன்னாங்க?” என்றவள் ஆர்வத்துடன் அவன் அருகே அமர்ந்து கேட்க,

“உனக்கு அந்தப் பொண்ணைதான் கல்யாணம் பண்ணிக்கணும்னா பண்ணிக்கோ… ஆனா நான் கல்யாணத்துக்கு வர மாட்டேன்… நீயும் கல்யாணம் முடிஞ்சு என்னைப் பார்க்க வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க”

”நான் எக்ஸ்ப்ளைன் பண்ணலாம்னு பார்த்தா… என்ன பேச போறன்னு கூட கேட்காம எழுந்து போயிட்டாங்க… எனக்கு அவங்க சொன்னதை எப்படி எடுத்துக்கிறதுன்னே தெரியல அமிர்தா” என்றவன் வருத்தத்துடன் சொல்ல,

“அவங்க நம்ம கல்யாணத்துக்கு சம்மதம்தான் சொல்லி இருக்காங்க… ஆனா சட்டுன்னு என்னை ஏத்துக்க தயங்குறாங்க… அவ்வளவுதான்” என்றவள் சாதாரணமாக முடித்துவிட்டாள்.

“அப்படியா சொல்ற?”

“ம்ம்ம்”

“சரி… இப்ப நாம என்ன பண்ணலாம்?”

“நாம ஸிம்பிளா ஒரு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றாள் உடனடியாக.

“ஆர் யூ ஷுர்?”

“ஐம் டேம் ஷுர்” என்றவள் பதில் சொல்ல,

“இல்ல… அம்மா முழு மனசோட சம்மதிக்காத மாதிரி இருக்கும் போது” என்றவன் தயக்கத்துடன் இழுக்க,

“அப்படினா ஒன்னு பண்ணு ஹரீஷ்… நீ உங்க அம்மாவுக்குப் பிடிச்ச பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ… அப்போ அவங்க முழு மனசோட சம்மதிப்பாங்க” என்றவள் பட்டென்று சொல்லிவிட்டு எழுந்து கொள்ள,

“ஏய்… என்ன விளையாடுறியா?” என்று கேட்டு அவள் கையை அழுந்த பற்றி அவளை நிறுத்தினான்.

“நான் விளையாடுல ஹரீஷ்… ஐம் சீரியஸ்… ஏதாவது ஒரு பக்கமா நின்னு முடிவெடு… இதுவா அதுவான்னு டைலாமல நிற்குறதா இருந்தா என்னை விட்டுடு” என்றவள் வெட்டு ஒன்னு துண்டு என்று தன் முடிவைச் சொல்லிவிட,

ஒரு நொடி நிதானித்து யோசித்தவன், “சரி… நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.

“குட்… நீ நம்ம கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பட்டெல்லாம் பண்ணு… அதுக்குள்ள இந்த அமரா கதைக்கு ஒரு என்ட் பாயின்டைப் போட்டுட்டு வந்துடுறேன்” என்றவள் தெரிவிக்க அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

“ஆல்வின் எங்க இருக்காருன்னு தெரிஞ்சுடுச்சா?” என்றவன் விவரம் கேட்க,

“அது பத்தி தெரியல… பட் நேத்து ஒரு ஃபைல் இலண்டன்ல எங்க அம்மா ரூம்ல இருந்து கிடைச்சிருக்கு” என,

ஹரீஷ் ஆவலுடன், “என்ன ஃபைல் அது அமிர்து?” என்று கேட்டான்.

“ஃபைல் மேல ‘அமரா’ன்னு பெருசா டைட்டில் இருந்துச்சு… சம்திங் இம்பார்ட்டன்ட்… பட் அந்த ஃபைலில் என்ன இருக்குன்னு இன்னும் எனக்கு தெரியல… ஷெரின் கிட்ட அந்த ஃபைல்ல இருக்க பேபர்ஸ் ஒன்னு விடாம ஸ்கேன் பண்ணி பி.டி.எஃப்பா(pdf) மாத்தி எனக்கு மெயில் பண்ணச் சொல்லி இருக்கேன்… லெட்ஸ் ஸீ” என்றவள் எதிர்பார்ப்புடன் சொன்னாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா