மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: AmaraAmara - Episode 27Post ReplyPost Reply: Amara - Episode 27

Quote from monisha on September 16, 2024, 9:36 PM

27

அமிர்தாவிற்கு இருபது வயது நிறைவடைந்த போது சாரா அவளிடம், “உன் கடந்து கால வாழ்க்கையை என்னைக்காவது தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சுனா என் லாக்கர்ல ஒரு ஃபைலும் லெட்டரும் இருக்கு… அதை நீ எடுத்துப் படிக்கலாம்” என்று சொல்ல,

“ஐ டோன்ட் வான்ட் டூ… எனக்கு என் கடந்து காலம் வேண்டாம்… எந்தக் காலத்துலயும் வேண்டாம்… அது என்ன லெட்டரா இருந்தாலும் நான் அதைப் படிக்க விரும்பல” அன்றைய மனநிலைக்கு அவள் திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.

சாரா இறக்கும் தருவாயில் கூட ஒரு முறை அமிர்தாவிடம் இது விஷயமாகப் பேசியும், அவள் பிடிக் கொடுத்துப் பேசவில்லை. ஏனோ அவள் தன் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ள கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை. முடிந்த போன கிட்டத்தட்ட அவளுக்குள் தொலைந்து போன கடந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லையென்று கருதினாள்.

எந்தக் காலத்திலும் அக்கடிதத்தைப் படிப்பது இல்லை என்று அமிர்தா முடிவாக இருந்தாள். ஆனால் விதி விளையாடும் விளையாட்டில் நாமெல்லாம் வெறும் பொம்மைகள்தானே!

அமிர்தா அவள் விரும்பாத தன் கடந்த காலத்தை இப்போது அவளை அறியாமலே படித்துக் கொண்டிருந்தாள்.

அமுதா சாராவிற்கு எழுதிய கடிதம் அது. தோழியைப் பிரிந்தபிறகாய் நடந்த சம்பவங்களை அவள் அதில் விரிவாக எழுதியிருந்தாள்.

அந்த கடிதம் ‘அமரா’ என்று பெயரிட்ட கோப்பினில் கடைசியில் இணைக்கப்பட்டிருந்ததை அவள் படிக்கத் தொடங்கி சில நிமிடங்கள் கடந்துவிட்டன.

அமிர்தா என்று தன் பெயரைப் படித்த இடத்தில் மேலே அக்கடிதத்தைப் படிக்க முடியாமல் நிறுத்திக் கொண்டாள். அவள் கண்கள் கலங்கி வார்த்தைகள் மங்கிப் போய்விட்டன.

காற்றடித்துப் பறந்த காகிதம் போல அவள் விதி கண்காணாத திசையில் அவளைத் தூக்கி வீசியிருக்கிறது. தன்னுடைய சுய அடையாளத்தை மொத்தமாக தொலைத்துவிட்டதை எண்ணுகையில் அவள் இதயம் விம்மியது.

அவள் ஓடியாடி விளையாடிய காட்டின் காட்சிகள் இப்போதும் அவள் நினைவுகளில் பதிந்திருக்கின்ற காரணத்தால்தான் அது அவள் கனவில் உயர் பெற்றிருக்கிறது என்பதை தற்சமயம் அவளால் உணர முடிந்தது.

மீண்டும் அக்கடிதத்தைப் பார்த்தாள். விட்ட இடத்திலிருந்து தொடர ஒரு மாதிரி பதட்டமாக இருந்தது அவளுக்கு. இன்னும் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்று யோசிக்கும் போதே உடல் நடுங்கியது. பாறாங்கல்லை வைத்தது போல உள்ளம் கனத்தது.

சரியாக அந்த சமயத்தில் அவள் அலைபேசி ரீங்காரிமிட அமிர்தா அதனைச் சோர்வுடன் எடுத்துப் பார்த்தாள். ஜாக்ஸன் என்ற பெயர் ஒளிரவும் இணைப்பை ஏற்றவள்,

“யா ஜாக்ஸன்… எனி இன்பர்ஃமேஷன் அபவுட் ஆல்வின்” என்று விசாரிக்க,

“எஸ்… வீ ட்ரெஸ்ட் ஹிம் வித் ஹிஸ் பாஸ்போர்ட் டீடையில்ஸ்… ஹீ இஸ் இன் அந்தமான் ஐலேன்ட்” என்று சொல்ல, அந்தமான் தீவு என்று கேட்ட நொடி அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது.

“ஆர் யூ ஷுர்?”

“எஸ்… 100 %” என்றவன் மேலும் ஆல்வின் பெயரில் தற்சமயம் போர்ட் பிளையரிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கும் அங்கிருந்து தொடர் பயணமாக அவர் கலிஃபோர்னியாவிற்கும் செல்வதற்கான பயணச்சீட்டுப் பதிவாகி இருப்பதாகத் தெரிவித்தான்.

“இஸ் இட்” என்றவள் ஆவலுடன் கேட்க, ஆமென்று அந்தத் தகவலை உறுதிபடுத்தியவன் அவர் சரியாக அந்தமானில் எங்கே தங்கி இருக்கிறார் என்பது பற்றிய தகவலைக் கண்டறிய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டான்.

“ஓ” என்று அவள் குரலின் சுருதி இறங்க, ஜாக்ஸன் தங்கள் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் மூலமாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய முயன்று கொண்டிருப்பதாகவும் விரைவில் அவளுக்குத் தகவல் தருவதாகவும் சொல்லிவிட்டு தன் உரையாடலை முடித்து இணைப்பைத் துண்டித்தான்.

‘அமரா’ ஃபைலைப் படித்த போதே அமிர்தா ஆல்வின் அந்தமான் தீவில் இருக்கக் கூடுமோ என்று ஒருவாறு யூகித்தாள். தற்சமயம் அதனை ஜாக்ஸன் உறுதிப்படுத்திவிட, அவள் உடனடியாக அந்தமான் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டாள்.

மேலும் அவள் தேவாவிடம், “ஆல்வின் இருக்கிற இடத்தைக் கண்டு பிடிச்சாச்சு” என்று தெரிவிக்க,

“எங்கே மேடம்?” என்றவன் கண்கள் எதிர்பார்ப்புடன் மின்னின.

“அந்தமான் நிக்கோபார்… நாம உடனே கிளம்புறோம்… அமராவை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கிறோம்” என்றாள்.

அவனுக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. இந்த ஒரு தகவலிலேயே அமராவைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டது போன்ற ஆனந்தம் அவன் முகத்தில்.

“ஒரு நாலு அஞ்சு நாளைக்குத் தேவையான டிரஸஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணிக்கோ… ஏதாச்சும் வாங்கணும்னா நாம போற வழியில வாங்கிக்கலாம்… நம்ம இன்னைக்கே கிளம்புறோம்” என்றவள் பரபரப்பாகச் சொல்லிவிட்டு அடுத்ததாக ஹரீஷை அலைபேசியில் அழைத்து அவனிடமும் விஷயத்தை உரைத்தாள்.

அடுத்த நொடியே அமிர்தாவின் வீட்டிற்கு அவன் வந்து நின்றுவிட,

“என்ன ஹரீஷ்? நீ பேக் எடுத்துட்டு வரல… நம்ம உடனே அந்தமான் கிளம்பணும்… உன்கிட்டதான் ஃபோன்ல நான் எல்லா டீடைல்ஸும் சொன்னேன் இல்ல” என்றவள் கேட்க,

“இல்ல அமிர்து… படத்தோட ரீலிஸ் டேட் நெருங்கிடுச்சு… இன்னும் கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை எல்லாம் இருக்கு… இந்த நேரத்துல பட வேலையெல்லாம் விட்டுட்டு” என்றவன் தயங்க,

“ஓ… அதை நான் மறந்துட்டேன்… இட்ஸ் ஓகே… நானும் தேவாவும் போறோம்” என்றாள்.

“இல்ல அமிர்து” என்றவன் தயக்கத்துடன் அவளைப் பார்க்க,

“இட்ஸ் ஓகே ஹரீஷ்… நீ ஒன்னும் கில்டியா எல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்” என்றவள் அவனை அணைத்து சமாதானம் கூற அவனும் அவளை இறுக அணைத்தபடி,

“ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி… இப்பன்னு பார்த்து என்னால உன் கூட வர முடியல” என்று வருத்தப்பட்டான்.

அதன் பின் அவர்கள் விமானம் ஏறும் வரை உடனிருந்து வழியனுப்பி விட்டு வீடு வந்து சேர்ந்த ஹரீஷின் மனம் சஞ்சலப்பட்டது. ஏனோ அந்தப் பிரிவை அவனால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

எதற்காக தன் உள்ளம் இப்படி படபடத்துக் கொள்கிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தானும் அவளுடன் சென்றிருக்க வேண்டுமோ? என்றவன் மனம் அடித்துக் கொண்டது. ஆனால் இந்தச் சமயம் பார்த்துதான் பட வேலைகள் அவனை சென்னையை விட்டு நகர முடியாத இக்கட்டான நிலையில் முடக்கி வைத்துவிட்டன என்று தன் நிலையை எண்ணி நொந்து கொண்டவனுக்கு அமிர்தாவிற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற கவலை உள்ளூர அழுத்தியது.

மறுபுறத்தில் அமிர்தாவோ தன் பயணத்தை உற்சாகமாகத் தொடங்கி இருந்தாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்த ஊரை நோக்கிச் செல்கிறோம். தான் பிறந்த மண்ணில் கால் வைக்க போகிறோம் என்றெல்லாம் அவள் மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.

இந்தப் புதுவிதமான உணர்வுக்கு இடையில் தான் அந்தக் கடிதத்தை இன்னும் முழுவதுமாக படித்து முடிக்கவில்லை என்ற நினைவு எழ, அவள் தன் கைப்பேசியைத் திறந்தாள்.

அதேசமயம் ராபர்ட்டை காண ஆல்வின் தன் பயணத்திற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் தன் தோள் பையில் சில முக்கியமான ஃபைல்களை நுழைக்கும் போது உள்ளிருந்த ஒரு புகைப்படம் தவறி கீழே விழுந்தது.

அவனும் அமுதாவும் நெருக்கமாக நின்றிருந்த படம் அது. அதனை குனிந்து எடுத்தவனின் கண்கள் அமுதாவினை ஆழ்ந்து நோக்கின. சராசரியான உயரம். மாநிறம். சிறிய விழிகள். அலையலையாகக் காற்றில் அசைந்தாடும் கேசம். மெலிதாக குவிந்தபடி இருக்கும் தாமரை இதழ்கள்.

பேரழகி என்றெல்லாம் அவளை விவரிக்க முடியாது. ஆனால் கண்கள் கூசாத அழகு அவள்.

அந்தப் புகைப்படத்தில் ஐஸ் கட்டிகளுக்கு இடையில் ஆல்வினின் கையணைப்பிற்குள் பாந்தமாக பொருந்தியிருந்த அமுதாவின் தேகத்தின் மென்மை தன்மையை இப்போதும் தன் நினைவிலும் உணர்விலும் நிறுத்த முடிகிறதெனில் இன்னும் தனக்குள் அவள் ஆழமாக நிறைந்திருக்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது.

“ஐ லவ் யூ ஆல்வின்” மென்மையாக அவன் செவிகளைத் தழுவும் அவள் குரலை இப்போதும் அவனால் நினைவுப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவள்தான் முதல் முதலாக காதலைச் சொன்னது.

அவனது ஒட்டுமொத்த வாழ்வில் இன்பகரமாகப் பதிந்திருக்கும் நினைவு எனில் அது அமுதாவுடன் பயணித்த நாட்கள் மட்டும்தான்.

கண்களை மூடி அந்த நாட்களுக்குள் சென்றுவிட்டார்.

மரபணு. உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளைச் சந்ததிகளுனூடாகக் கடத்தவல்ல ஒரு மூலக்கூறு. இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.

ஒவ்வொரு இனமும் மரபணுக்களின் தனித்துவமான தொகை (genome).

அந்த வகையில் ஹோமோ சேபியன்ஸ் என்றழைக்கப்படும் தற்கால மனிதனின் மரபணுத் தொகையில் அவனது வாழ்நாளில் தேவையுறும் 80,000 மரபணுக்கள் ஒழிய உபரியாய் 40,000 உள்ளன. இவ்விரண்டு வகை மரபணுக்களும் கடந்த காலத்தின் ஆவணங்கள் ஆகும்.

அவ்வாறு கடந்த காலங்களில் கடத்தப்பட்ட ஞாபகங்கள் மற்றும் திறமைகளில் பல்லாயிரம் வருடங்கள் தாண்டி மனிதன் சில அரிய திறமைகளைத் தொலைத்தும் இருக்கிறான். சில புதுமையான திறமைகளைப் பெற்றும் இருக்கிறான்.

இப்படியாக இயற்கை சூழலுக்கும் வாழ்வியலுக்கும் ஏற்றார் போல தம் கட்டுமானத்தையும் இயக்கத்தையும் தகவமைத்துக் கொள்வதைதான் பரிணாமிப்பது என்கிறோம்.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமித்ததன் சாட்சியாக நிறைய மிச்சம் மீதியான குரங்கின் பண்புகளையும் தன்னுடைய மரபியல் ஞாபகங்களில் சேகரித்து வைத்திருக்கும் அதேசமயம் தனக்கு பயனற்ற பல பண்புகளைக் காலப்போக்கில் ஒன்று ஒன்றாக இழந்து வந்திருக்கிறான்.

எடுத்துக்காட்டிற்கு வால்களையும் மோப்பச் சக்திக்கான மரபணுக்களில் பாதிக்கு மேலும் இழந்துவிட்டிருக்கிறான்.

இதுபோன்ற மனிதன் இழந்து விட்ட ஞாபகங்கள் குறித்த ஆராய்ந்து அறிவதற்காகவே பழங்குடியினர்களின் வாழ்வியல் மற்றும் மரபணுக்களை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கினர். ஆய்வு செய்யும் குழுவின் தலைமையாக ஸ்டீவ் செயல்பட, ஆல்வினும் அவருடன் இணைந்திருந்தான்.

அந்த வகையில் அமேசான் மற்றும் ஆப்ரிக்கா காடுகளில் வாழும் பழங்குடியினர்கள்தான் அவர்களின் முக்கிய குறிக்கோள். அதில் பெரும்பாலான பூர்வகுடியினர் நாகரிக வாழ்விற்குத் தங்களை மாற்றிக் கொண்டு விவசாயங்களில் ஈடுப்பட தொடங்கிய அதேசமயம் காடுகள் அழிப்பினால் நிறைய ஆதிவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் அமுதா அனுப்பிய ஆய்வறிக்கை ஒன்று அவர்கள் அலுவலக தகவல் மையத்தை வந்தடைந்தது. அதனைத் திறந்து படித்தது ஆல்வின்தான்.

அவன் எதிர்பாராத அதேநேரம் அவன் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று அந்தக் கோப்பினில் இருந்தது. அந்தத் தகவல்களைப் படித்து அவன் வியப்படையவில்லை. நிச்சயமாகப் பழங்குடியினர்களிடம் இருந்த ஆரோக்கியமான உடல் அமைப்பைத் தற்கால மனிதன் இழந்துவிட்டிருக்கிறான் என்பது திண்ணம்.

இருப்பினும் முழுக்க முழுக்க இயற்கையைச் சார்ந்து வாழும் கற்கால மனிதனின் உடலமைப்பு இன்றைய மாசுப்பட்ட பூமியில் வாழ்வதற்கு சாத்தியப்படலாகாது.

அந்த வகையில் முழுக்க முழுக்க இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்த மொலாஸா அந்தக் காட்டை விட்டு வெளியேறிய மறுகணம் மறித்துப் போகக் கூடும். ஆனால் இதில் அவனை ஆச்சரியப்படுத்தியது அமிர்தாவின் மரபணு மாதிரிதான்.

அது மிகவும் விசித்திரமான தகவலைக் கொடுத்தது. அவளது மரபணு எதிர்கால சந்ததியில் பெரும் புரட்சியையும் அதிசயத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என்பது அவன் கணிப்பு.

ஆனால் அதற்கு அமிர்தாவின் தேகத்தைச் சோதனைக்கு உட்படுத்திக் கண்டறிய வேண்டும்.

ஒரு வேளை அவன் நினைத்தது சரியாக நடந்துவிட்டால் ‘அமரா’ ஆய்விற்காக அவள் பயனப்பட கூடும் என்று எண்ணினான்.

ஆதலால் அமுதாவின் ஆய்வு கோப்பினை இரகசியாக நகலெடுத்துக் கொண்டவன் மேலும் அதில் உள்ள அமிர்தா பற்றிய மரபணு தகவல்களை மட்டும் நீக்கிவிட்டு ஸ்டீவிடம் ஒப்படைத்தான்.

அதனை ஆராய்ந்த ஸ்டீவும் வியப்படைந்த அதேநேரம் அமுதாவின் திறமையை அங்கீகரித்து காத்திருப்பிலிருந்த அமுதாவின் வேலைக்கான ஆணையை உடனடியாக உறுதி செய்து அனுப்பி வைத்தார்.

வேலைக்கான ஆணையைப் பெற்ற மாத்திரத்தில் அமுதா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள். எதிர்பார்த்திருந்த கனவு நடந்தேறிவிட்ட களிப்பில் மிதந்தாள். அதேநேரம் இந்த சந்தோஷமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள தன்னுடைய ஒரே தோழி உடன் இல்லையே என்ற லேசான வருத்தமும் அவளுக்குள் எட்டிப் பார்த்தது.

தன் தோழி இல்லையென்றால் இதுவெல்லாம் சாத்தியமே இல்லையென்று அவளை நன்றியுடன் நினைவுப்படுத்திக் கொண்டு அமெரிக்காவிற்கான தன் பயணத்தைத் தொடங்கினாள்.

அமெரிக்க நிலத்தின் பூர்வகுடியினரான செவ்விந்தியர்களைக் கொன்று அவர்களின் பிணக்குவியல் மீது கட்டி எழுப்பிய பிரமாண்ட தேசம்தான் இன்றைய ஐக்கிய அமெரிக்கா. உலகின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் தன் கைக்குள் வைத்துச் சுழற்றிக் கொண்டிருக்கும் வியாபார தேசம மட்டுமல்ல அது.

கற்பனை கூட செய்து பார்த்திட முடியாதளவுக்கு அறிவியல் வளர்ச்சியில் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு சர்வாதிகார கண்டம்.

அத்தகைய தேசத்தில் காலடி எடுத்து வைக்கும் அனுபவத்தைப் பெருமைக்குரியதாகக் கருதினாள் அமுதா.

தன் உயிரைப் பணயம் வைத்துதான் இதைச் சாதித்துள்ளோம் என்பதில் அவளுக்குத் தன் மீதே தனி கர்வமும் உண்டு.

அவளுடைய பணி நியமனம் வடஅமெரிக்காவில் உள்ள கனடா நாட்டின் மரபணு ஆராய்ச்சி மையத்தில்தான். அங்கே அவளுக்கு யாரும் நண்பர்கள் இல்லாத போதும் தனி ஒருத்தியாக அனைத்தையும் சமாளிக்கும் தைரியம் அவளுக்கு இருந்தது.

அமுதா அங்கே வந்து வேலைக்குச் சேருவதற்காக அவளை விடவும் அதிக ஆவலுடன் காத்திருந்தது ஆல்வின்தான்.

சென்ட்டினல் மக்கள் வாழும் தீவிற்குத் தனியே செல்வது சாத்தியமில்லை என்பதை ஒருவாறு அறிந்து கொண்டவனுக்கு அவள் ஒருத்திதான் அந்தத் தீவிற்குச் சென்று உயிருடன் திரும்பி வந்த முதல் பெண் என்பது வியப்பை அளித்தது.

அவளின் உதவி இருந்தால் தான் வெகுசுலபமாக அந்தத் தீவிற்குள் நுழைந்துவிடலாம் என்று எண்ணியவன் இரைக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போல அவளிடம் பழகுவதற்கான சரியான வாய்ப்பிற்காகக் காத்திருந்தான்.

அதேநேரம் ஆல்வின் அவள் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதம் தூரத்திலிருந்து மட்டுமே அவளைக் கண்காணித்தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளை நெருங்கிப் பேசும் வாய்ப்பை அவனாக உருவாக்கிக் கொள்ளவில்லை. அவனுடைய எண்ணத்தை அவள் கணித்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

ஆனால் அங்கே வேலைக்குச் சேர்ந்த புதிதிலேயே அமுதாவிற்கு ஆல்வினின் பெருமையெல்லாம் உடன் பணிப்புரியும் பெண் ஊழியர்கள் மூலமாகப் பறைசாற்றப்பட்டுவிட்டது. இளம் வயதிலான அவனின் திறமையைப் பற்றி அந்த ஆய்வுக் கூடத்தில் பாராட்டிப் பேசாதவர்களே கிடையாது.

அதுவும் அவன் திறமையானவன். அமைதியானவன். இப்படி பார்க்கிறவர்கள் எல்லாம் ஓயாமல் ஆல்வினின் புகழைப் பாட, அமுதாவிற்கு அவன் மீது ஒருவித இனம் புரியாத ஈர்ப்பு உருவாகியிருந்தது. அதுவும் அவளாக அவனிடம் பேசுவதற்கு முயலும் போதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ அவன் விலகிச் சென்றுவிடுவது அவன் மீதான ஈர்ப்பை அவளுக்கு இன்னும் இன்னும் அதிகரித்திருந்தது.

விளக்கின் மீது தானே சென்று விழும் விட்டில் பூச்சியைப் போல ஆல்வினின் திறமையாலும் ஆளுமையினாலும் அமுதா கவர்ந்திழுக்கப்பட்டிருந்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா