மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Anbin Vazhiyathu (Rerun)Anbin Vazhiyathu - Episode 5Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 5

Quote from monisha on October 12, 2024, 5:17 PM

5

In our life, every decision has its own good and bad consequences

மரணங்கள் எந்த வயதிலும் நிகழலாம். நம்முடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். அது எப்படி எப்போது எங்கே யாருக்கு எவ்விதமாக நிகழும் என்பதெல்லாம் நம் கணிப்புகளுக்கும் தீர்மானங்களுக்கும் அப்பாற்பட்டவை.

ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. அது நம் கையில் இருப்பது. நாம் தீர்மானிக்கக் கூடியது. மீண்டுமொரு முறை என் வாழ்க்கையைச் சரியாகத் தீர்மானித்துக் கொள்ளவும் அதனைப் புதிதாகச் சீரமைத்துக் கொள்ளவும் ஓர் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது.

இது போன்று வாய்ப்பு யாருக்கும் கிட்டிவிடாது. அரிதினும் அரிதாகக் கிடைத்த இந்த வாய்ப்பை நான் வீணாக்கிவிடக் கூடாது.

எனக்கு ராபர்ட் ஃப்ராஸ்டின், ‘தி ரோட்ஸ் நாட் டேகன்’ என்ற பிரபலமான கவிதை ஒன்று இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வந்தது.

Two roads diverged in a wood ang I –

And sorry I could not travel both

And be one my traveler,

என் முன்னே இரண்டு பாதைகள் நீண்டிருக்கின்றன. ஒன்று நான் ஏற்கனவே பயணித்து வந்த பாதை. வறண்ட பாலைவனக்காட்டில் தனித்து நடப்பது போன்றானது அது. தண்ணீருக்காக ஏங்குவது போல உறவுக்காகவும் அன்புக்காவும் ஏங்கிய பாதை.

ஆனால் மற்றொரு பாதை அன்பு கட்டமைத்தது. அன்பால் கட்டமைக்கப்பட்டது. பசுமையானது. மரங்கள் பறவைகள் சலசலக்கும் ஓடைகள் என்று அழகானது. இரசனையானது. அப்படியொரு பாதை எனக்காகக் காத்திருக்கும் போது நான் மீண்டும் அந்தப் பாலைவனக்காட்டிற்குள் செல்ல வேண்டுமா என்ற எண்ணம் வந்தது.

Yet knowing how way leads on to way,

I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh

Somewhere ages and ages hence:

Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,

ஆனால் அன்புவின் பாதையில் செல்வதில் நிறைய எதார்த்த சிக்கல்களும் உண்டு. அதுவும் வழித்தடம் தெரியாத பாதையில் செல்லும் போது அதில் என்ன மாதிரியான ஆபத்துக்கள் ஒளிந்திருக்கும் என்று நிச்சயமாகத் தெரியாது.

இதெல்லாம் தாண்டி அந்தப் பாதைதான் என்று தீர்மானித்துவிட்டால் மீண்டும் பின்வாங்க கூடாது. பின்வாங்கவும் முடியாது.

ஷவரில் நனைந்து கொண்டே கண் மூடி எனக்குள்ளாகவே யோசித்தேன். அப்படியும் தெளிவாக என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“அன்பு... நேரமாச்சு... அனு இப்பதான் ஃபோன் பண்ணா?” என்று கதவைத் தட்டி நச்சரித்தான் சிவா.

‘இவன் ஒருத்தன்’ என்று நான் ஷவரை அணைத்துவிட்டுத் துண்டை இடையில் கட்டிக் கொண்டு வெளியே வந்து, “நிம்மதியா குளிக்கக் கூட விட மாட்டியா?” என்று எகிற,

“எது? நிம்மதியா குளிக்குறியா... அடேய் இன்னைக்கு உனக்கு கல்யாணம்டா... இன்னும் முப்பது நிமிஷத்துல நாம கோவில இருக்கணும்” என்றவன் என்னைத் தள்ளிக் கொண்டு குளியலறை வாசலுக்குச் சென்று, “சரி சரி தள்ளு... நான் போய் குளிச்சிட்டு வந்திடுறேன்... அனு ஃபோன் பண்ணா எடுக்காதேடா... இன்னும் கிளம்பலயான்னு கேட்டு அசிங்க அசிங்கமா திட்டுவா” என்றான்.

“என்னய்யா?”

“பின்ன என்னையா... உன்னைத்தான்டா திட்டுவா... உனக்குதானே டா கல்யாணம்” என்றவன் அழுத்திச் சொல்லிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு உள்ளே போய்விட்டான்.

‘எனக்கு கல்யாணம்’ அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தைதான் கொஞ்சம் எனக்கு நெருடியது.

அன்புவின் வாழ்க்கையில் நான் காலடி எடுத்து வைக்க இப்போதைக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கல் இதுதான்.

தலையைத் துவட்டிக் கொண்டே தீவிரமாக யோசித்தேன்.

இந்தத் திருமணத்தை எப்படி நிறுத்துவது. எப்படி எப்படி எப்படி?

ஹான்... ஒரு வழி இருக்கிறது. அறிவு அதாவது... நான் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் திருமணம் தானாகவே நின்றுவிடலாம்.

குழப்பம் இல்லாமல் நான் அன்புவின் வாழ்க்கைக்குள் பிரவேசித்துவிடலாம்.

ஆனால் அதை நானே சொன்னால்... ஒரு வேளை யாருக்காவது என் மீது சந்தேகம் வந்துவிட்டால்...

இருவரும் ஐடெண்டிக்கல் ட்வின்ஸ்(Identical twins)... மரபணு சோதனை மூலமாகக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் கை ரேகை எங்களுக்கான வித்தியாசத்தைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்துவிடும்.

அன்புவின் ஒரு பாதி உடல் சிதைந்திருந்த நிலையில் அதில் கையும் சிதைந்திருந்தனவா?

உஹும்... நினைவுக்கு வரவில்லை. அந்த அரைகுறை வெளிச்சத்தில் அவன் முகத்தையும் சிதைந்த உடலையும் பார்த்த மாத்திரத்தில் குமட்டியது. வெளியே ஓடி வந்துவிட்டேன். மீண்டும் சென்று பார்க்கவில்லை.

நான் அன்புவாக மாற வேண்டுமென்றால் அவன் உடல் விரைவாகத் தகனம் செய்யப்பட வேண்டும். முக்கியமாக யாருக்கும் நான் அன்பு இல்லை என்று துளி சந்தேகம் கூட வரக் கூடாது. அப்படி சந்தேகம் வந்துவிட்டால் பிரச்சனைதான்.

அவன் கைரேகை இல்லாவிட்டாலும் என் ஆதார் கார்ட்டில் பதியப்பட்டிருக்கும் கைரேகை நான் யார் எனபதைக் காட்டிக் கொடுத்துவிடலாம். பின்னாளில் இந்த ஐடிக்களை நமக்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ளலாம்தான். ஆனால் இப்போதைக்கு எந்தவித சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கவே கூடாது.

முக்கியமாக அன்புவின் நண்பர்களுக்கு சந்தேகம் வரக் கூடாது. இன்று அவனின் திருமணம் என்பதால் அவனது முக்கியமான நண்பர்கள் அத்தனை பேரும் கோவிலுக்கு வருவார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக நம்ப வைத்துவிட்டால் போதும்.

பிறகு அன்புவின் இறப்பை அறிவின் இறப்பாக மாற்றிவிடலாம். அந்தப் பிணவறை ஊழியனையும் காவல் துறையினரையும் சுலபமாகச் சமாளித்து நான் நினைத்ததைச் செய்ய வைத்துவிடலாம்.

அதன் பின் எந்தவித பிரச்சனையும் குழப்பமும் வராது.

‘அப்படினா நான் இப்போ மஹாவைக் கல்யாணம் பண்ணிக்கணும்... அதுதான் நான் முழுசா அன்புவா மாற முதல் படி’

அதன் பிறகு நான் தாமதிக்கவில்லை. ஓரமாக கிடந்த அன்புவின் பெட்டியைத் திறந்த போது அதன் மேலேயே புத்தம் புது வேட்டிச் சட்டை இருந்தது. எனக்கே அளவெடுத்து தைத்தது போல...அதனை எடுத்து அணிந்து கொண்டேன்.

தலை வாருவது உடையணிவது என்று எனக்கும் அவனுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை. என் சட்டையை அவனும் அவன் சட்டையை நானும் இப்போது வரை மாற்றி மாற்றிதான் போட்டுக் கொள்வோம். சில நேரங்களில் உள்ளாடைகளும் கூட!

சிறு வயதிலிருந்து பழக்கமான விஷயம் இது. ஆனால் அவனுக்கும் எனக்கும் தோற்றத்தில் காட்டப்படும் சிறியளவிலான வித்தியாசம் ஒன்று இருக்கிறதென்றால் அது அவன் நெற்றியின் மத்தியில் இருக்கும் திருநீர் கோடு. ஆனால் அதுவும் அவன் கடவுள் நம்பிக்கையின் பால் வைத்துக் கொள்வது அல்ல.

அம்மா எப்போதும் இருவருக்கும் வைத்து விடுவாள். அம்மா இறந்தப் பிறகு நான் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டேன். அவன் இன்னும் தொடர்கிறான். அவ்வளவுதான். மற்றபடி அவனுக்கும் அந்தளவுக்கு சாமி நம்பிக்கை எல்லாம் கிடையாது.

இந்த வித்தியாசம் ஒரு பெரிய விஷயம் இல்லை. திருநீறுதானே வைத்துக் கொள்ளலாம். ஆனால் குடிக்காமல் சிகரெட் பிடிக்காமல்... இப்பவே கைப் பரபரவென்று இருக்கிறது.

ஒரு சிகரெட் புகைத்தால் நன்றாக இருக்கும் போல மனம் அல்லாடியது. எப்படி இந்தப் பழக்கங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் போகிறேன் என்றுதான் கவலை.

மற்றபடி சமாளித்துக் கொள்ளலாம். அந்த வீட்டின் ஓரமாக இருந்த பூஜையறைக்குச் சென்று திருநீற்றை நெற்றியில் வைத்துக் கொண்டேன்.

கண்ணாடியில் பார்த்தேன். கச்சிதம்.

இனி நான்தான அன்பு. அன்பு ஜெயகுமார்.

அன்புவின் கதையில் இனி வரும் அத்தியாயங்களை நான்தான் எழுதப் போகிறேன். இந்த அறிவு அன்புவாக மாறி எழுதப் போகிறேன். எழுத்தாளனாகிய எனக்கு அது பெரிய கஷ்டமில்லை. எப்போதும் நான் படைக்கும் கற்பனை பாத்திரங்களுக்குள் வாழ்பவன் நான். இதுவும் ஒரு வகையில் அப்படிதான்.

“மாப்பிள்ளை ரெடியாயாச்சு போல” என்று சிவா என் தோளைத் தட்ட, நான் அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன். அன்புவின் அகமார்க் புன்னகை!

“சரி சரி நானும் கிளம்பி ரெடியாகிடுறேன்... நீ விஜிக்கு ஃபோன் பண்ணி கார் எடுத்துட்டு வரானான்னு கேளு” என்றான்.

“என் ஃபோன்ல சார்ஜ் இல்ல சிவா... சார்ஜ் போடவே மறந்துட்டேன்” என்று நான் அப்போதுதான் பார்ப்பது போல என் செல்பேசியை எடுத்துப் பார்த்துச் சொல்ல,

“என்னடா நீ?” என்று சலித்துக் கொண்டவன்,

“சீக்கிரம் நீ ஃபோனை எடுத்து சார்ஜ் போடு... நான் கால் பண்றேன்” என்று அவன் சட்டையை அணிந்து கொண்டே செல்பேசி எடுத்துப் பேசினான். அடுத்த சில நிமிடத்தில் கார் வந்துவிட இருவரும் தயாராகி காரில் ஏறிவிட்டோம்.

எந்தக் கோவில்? எங்கே போகிறோம்? எந்த விவரமும் எனக்குத் தெரியவில்லை.

“ஃபோன்ல சார்ஜ் ஏறிடுச்சா அன்பு?” சிவா கேட்க,

“ஆன்... ஒரு நாற்பது இருக்கு... அது போதும்” என்றேன். என்னுடைய செல்பேசி அணைந்துவிட்டது.

“அப்படினா அனுகிட்ட பேசு... அவங்க கோவிலுக்குப் போயிட்டாங்களா கேளு” என்றான்.

‘யாரு இந்த அனு? அன்புவோட ஃப்ரண்டுல நான் கேள்விபடாதப் பேரா இருக்கு’ என்று நான் யோசித்திருக்கும் போதே,

“டேய்... என்னடா யோசிக்குற? கூப்பிட்டு கேளு” என்றவன் சொல்ல,

“வேண்டாம் சிவா... நம்மதான் இன்னும் கொஞ்ச நேரத்துல ரீச்சாகிடுவோம் இல்ல” என்று தவிர்த்தேன். தெரியாத ஆட்களிடம் எதுவும் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளக் கூடாது.

“ஆமா நேத்து மஹாவைப் போய் பார்த்து ஏதோ ஸ்பஷலா அவகிட்ட காட்டப் போறன்னு போனியே... என்ன காட்டின?” என்று சிவா என்னை மெல்ல துருவினான்.

“அதென்னடா எங்களுக்குத் தெரியாம ஸ்பெஷலு” என்று வண்டியை ஓட்டிக் கொண்டே விஜயும் கேட்டு வைத்தான்.

‘என்னத்தக் காட்டித் தொலைச்சான்னு எனக்கு என்ன தெரியும்? சரி சமாளிப்போம்’ என்று எண்ணிக் கொண்டு,

“அது எனக்கும் மஹாவுக்கும் மட்டும்... பெர்ஸ்னல்” என்று சொல்லிச் சிரித்தேன். எப்போதும் புன்னகை மாறாத உதடுகள்தான் அன்புவின் அக்மார்க் அடையாளம். அதை நான் தீவிரமாகக் கடைப்பிடித்தேன்.

அவர்களுக்கும் கோவில் வரும் வரை என்னைக் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டே வந்தார்கள். நானும் எப்படி எப்படியோ சமாளித்துக் கொண்டே வந்தேன்.

கார் கோவில் வாசலில் வந்து நின்றது. ஏனோ இத்தனை நேரம் இல்லாமல் கொஞ்சம் படபடப்பானது. மற்றவர்களிடம் அன்புவாக நடிப்பதும் பேசுவதும் சரி. ஆனால் அன்புவின் காதலி மஹாவை ஏமாற்றுவதும் திருமணம் செய்வதும் துரோகம் என்று இப்போதுதான் தூங்கி விழித்த என் மனசாட்சி குத்தி வைத்தது.

அந்த நொடி என் கால்கள் கோவில் வாசலில் தயங்கி நின்றன.

“வா அன்பு... பெர்ஃபெக்ட் டைமிங்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் அந்தப் பெண்.

‘இவளா? இவள் கிரி அங்கிளின் அசிஸ்டென்ட் அனுஷயா இல்ல... இவளைத்தான் அனு அனு என்றார்களா?’

இவள் கொஞ்சம் ஆபத்தான பேர் வழியாயிற்றே. அதுவும் என்னை இவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. இரண்டு மூன்று முறை பிரேமியுடன் என்னைப் பார்த்திருக்கிறாள். அது பற்றி அன்புவிடம் போட்டுக் கொடுத்துத் தேவை இல்லாமல் எனக்கும் அவனுக்கும் இடையில் சண்டையை மூட்டி விட்டிருக்கிறாள்.

‘கிராதகி’ என்று நான் மனதில் திட்டினாலும் அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தேன்.

“வாடா மாப்பிள்ளை... உனக்காகதான் பொண்ணு ரொம்ப நேரமா வெயிடிங்” என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அனு என்கிற அனுஷியா. அவளுக்கும் என் மீது சந்தேகம் வரவில்லை.

மஹாவை எப்படி எதிர்கொள்வது என்றுதான் எனக்கு இப்போது கொஞ்சம் பயமாக இருந்தது. இது சரியாக வருமா? இவ்வளவு தூரம் வந்துவிட்டுப் பின் இந்த யோசனையே வீண்.

சமீபமாகப் பார்த்த கமல் படத்தின் வசனம் ஒன்று நினைவுக்கு வந்தது.

‘இந்த மாதிரி நேரத்துல வீரனுங்க எல்லாம் அடிக்கடிக் சொல்ற டையலாக் என்னனு தெரியுமா? தா.. பார்த்துக்கலாம்’

நானும் ஒரு போருக்குக் கிளம்பும் வீரனின் மனநிலையில்தான் இப்போது இருந்தேன். ஒரு வகையில் இதுவும் ஒரு போர்தான். தனி மனித போர். என்னுடைய தனிப்பட்ட போர்.

அன்பு என்ற என் சகோதரனின் அடையாளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ள நான் தொடங்கி இருக்கும் போர்.

‘ம்ம்ம்... பார்த்துக்கலாம்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தேன்.

அங்கிருந்த கருவறை மண்டபத்தில் தங்க நிற பட்டுப்புடவையில் லேசான ஒப்பனையில் அளவாக நகைகள் அணிந்து அழகு பதுமையாக நின்றிருந்தாள்.

மஹா என்கிற மஹாலக்ஷ்மி. சுடிதாரில் பார்த்திருக்கிறேன். புடவையில் இதுதான் முதல் முறை.

வட்டமான வதனம்... பிறை நுதல்... செந்தாமரை இதழ்கள்... நேர்த்தியான உடலமைப்பு அளவான உயரம் கண்கள் கூசாத நிறம்... பார்க்க அழகாகத்தான் இருந்தாள்.

கதைகளில் எழுதி எழுதி மூளையும் அது போலவே சிந்திக்கிறது. கதையில் நான் படைக்கும் நாயகிகளுக்கு உயிர் கொடுத்ததுப் போலதான் நின்றாள்.

இரசிக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. அது என்னையும் மீறி நிகழ்கிறது. அவள் விழிகள் என்னைப் பார்த்ததும் அதாவது.... அன்புவின் முகத்தைப் பார்த்ததும் அழகாய் மலர்ந்தது. அவளது செந்தாமரை உதடுகள் விரிந்தன. மயக்க கூடிய அழகுதான். இந்த அழகைப் பார்த்துதான் அன்பு மயங்கிவிட்டான் போல.

இரவெல்லாம் என்னுடன் பேசிக் கொண்டிருந்த அன்புவின் பிரமை இப்போது இல்லாதது நல்லதாகப் போய்விட்டது. அவன் என் கற்பனையாகவே இருந்தாலும் இப்படியொரு சூழ்நிலையில் அவனை எதிர்கொள்வது சங்கடம்தான்.

திருமண ஏற்பாடுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. எளிமையான முறையில்தான் செய்யப்பட்டிருந்தன. அவனுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் குழுமியிருந்தனர். அதிகபட்சம் பத்து பேர். எல்லோரும் ஓரளவுக்கு எனக்கும் தெரிந்தவர்கள்தான். ஒன்றும் பிரச்சனை இல்லை.

அன்புவிடம் நான் வெளிப்படையாக இருக்கிறேனோ இல்லையோ. அவன் ஒரளவு தன்னுடைய பழக்கங்கள் மற்றும் நண்பர்கள் பற்றிச் சொல்லி இருக்கிறான்.

மஹாவை முதல் முதலாகப் பேருந்தில் பார்த்த சம்பவம் உட்பட. அவன் விவரித்த விதத்தில் இப்போதும் என் கற்பனை திரையில் அந்தக் காட்சிப் படமாக ஓடுகிறது.

மஹாவை எனக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் அவள் அழகுதான். இன்று கொஞ்சம் அதீதமான அழகில் இருக்கிறாள். கல்யாணக் கோலம் பூண்டிருக்கிறாள் இல்லையா?

ஒரு வேளை இந்தக் காட்சி மாறியிருந்தால்... அவளுக்கு அன்பு விபத்தில் இறந்த செய்தி மட்டும் தெரிந்திருந்தால்.. ஏமாற்றம் துக்கம் வேதனை என்று நொந்துப் போயிருப்பாள்.

இப்போது ஒப்பனையுடன் கல்யாணக் கோலத்தில் நிற்கும் இவள் தலைவிரி கோலமாக அழுது வடிந்துக் கொண்டிருப்பாள். ஒரு வகையில் நான் அவளுக்கும் நல்லதுதான் செய்திருக்கிறேன். செய்யப் போகிறேன்.

இதற்காக அவள் காலம் முழுக்க எனக்கு நன்றி கடன்பட்டிருக்க வேண்டும்.

திருமணத்திற்கான தொடக்கக் காட்சி அரங்கேறியது. பெரிதாக சடங்கு சம்பிராதியங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

என்னைப் போலதான் அன்புவும். போலித்தனமான சடங்கு சம்பிராதயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன். ஆனால் தாலிப் பொட்டு இதெல்லாம் நாம் வாழ்வில் தவிர்க்க முடியாதது. நம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துவிட்டவை.

அவன் நண்பர்கள் மாலை தாலியுடன் நின்றார்கள். நான் இயல்பாக இருக்க முயற்சித்தேன். நான் விளையாடும் இந்த விளையாட்டுக் கொஞ்சம் விபரீதமாகதான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் விளையாட்டு சுவாரசியமாக இருந்தது.

அந்தக் கோவில் அர்ச்சகர் தாலியைச் சுவாமி காலில் வைத்துப் பூஜை செய்து எடுத்து வந்தார். நானும் மஹாவும் மாலை மாற்றிக் கொண்டோம். அவள் கண்கள் சந்தோஷத்தில் மின்னின. சில நிமிடங்களில் தாலியும் எடுத்து என் கரத்தில் கொடுக்கப்பட நான் எவ்வித தயக்கமும் இன்றி அவள் கழுத்தில் கட்டினேன்.

மூன்று முடிச்சு. அதானே கணக்கு. அன்புவின் வழி என்று முடிவெடுத்தப் பின் இதில் தயங்க என்ன இருக்கிறது?

சிவா புகைப்படக் கருவி வைத்திருந்தான். ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாக அந்தக் கருவியில் படமாக்கிக் கொண்டிருந்தான். நான் அவள் நெற்றியிலும் தாலியிலும் குங்குமம் வைக்க, உணர்வுபூர்வமாக என்னைப் பார்த்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அந்தக் கண்ணீருடன் நன்றி, காதல், அன்பு என்று அத்தனை உணர்வுகளும் கலந்திருந்தன. அவளுக்குச் சொந்தம் யாருமில்லை என்று அன்பு சொல்லி இருக்கிறான்.

மற்றப் பெண்களுக்குத் திருமணம் என்பது எத்தனை முக்கியமோ அதை விடவும் இவளுக்கு இது பல மடங்கு முக்கியம். அவளுக்கென்று ஒரு உறவை ஏற்படுத்திக் கொடுக்கும் சடங்கு இல்லையா?

ஆதலால்தான் அவள் கண்களில் கண்ணீர் பெருகிவிட்டது. இப்போது அவளுடைய உணர்வுக்கு நான் ஏதாவது எதிர்வினையாற்ற வேண்டுமே!

இந்தச் சூழலில் அன்பு என்ன செய்வான். உஹும்! அன்பு என்ன செய்வான் என்பதை விட பெண்கள் என்ன விரும்புவார்கள்.

பெரும்பான்மையான பெண்கள் உணர்வுகளுக்கு கண்மூடித்தனமாக அடிப்பணிந்துவிடுபவர்கள். கதையாக இருந்தால் இந்தக் காட்சியில் என் கதாநாயகன் என்ன செய்திருப்பானோ அதைதான் நானும் செய்தேன்.

அவளை மிதமாக என் தோளோடு அணைத்துப் பிடித்து நெற்றியில் உதடுகள் பதித்த நொடி அவள் நெகிழ்ந்துவிட்டாள்.

அவள் மனம் நிறைந்துவிட, என் கையணைப்பில் பாந்தமாகப் பொருந்திவிட்டாள். நானும் என் கையை விலக்கிக் கொள்ளவில்லை.

அங்கிருந்த அத்தனை பேரும் சந்தோஷமாக என் செய்கையைக் கொண்டாடினர். சிவா அந்தக் காட்சியைத் தெள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டினான்.

இந்த இடத்தில் அன்பு இருந்திருக்க வேண்டும். நான் அவன் உணர்வுகளை, அவன் வாழ்க்கையே, மொத்தமாக அவனையே களவாடிவிட்டேன்.

‘அவ என் லவர் டா’ அன்பு என்னிடம் பொங்கியது நினைவுக்கு வந்தது.

‘வேறு வழி இல்ல.... சாரி அன்பு’ என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் எனக்கு வேறு வழிகள் இருந்தன. நான்தான் வம்படியாக இந்த வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

‘அதில் தவறு ஒன்றும் இல்லை. இனி யாருக்கும் உபயோகப்படாத ஒன்றைத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். எனக்கு அது தேவைப்பட்டது’

அப்போது பார்த்து ‘அன்பப்பா’ என்று ஒரு குட்டிப் பெண் அனுவின் கையிலிருந்து என்னிடம் தாவிக் கொண்டு வந்தாள். கோவிலுக்குள் வந்தவுடனேயே பட்டுப் பாவாடை சட்டையில் இருந்த அந்தக் குட்டிப் பெண்ணைப் பார்த்தேன். என்னிடம் தாவிக் கொண்டு வர முயன்றாள். ஆனால் அனு அவளைத் தூக்கி கொண்டாள். அவளுடைய குழந்தை என்றல்லவா நினைத்தேன்.

‘ஆனா என்னை அன்பப்பான்னு கூப்பிடுறா’ என்று யோசித்துக் கொண்டே அந்தக் குட்டிப் பெண்ணைப் பார்த்தேன்.

“உன் பொண்ணைப் பிடி... இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது” என்று அனு அச்சிறுப் பெண்ணை என் கையில் திணிக்க வேறு வழி இல்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டேன்.

“அம்மாவுக்கு மட்டும்தானா... எனக்கு முத்தா பா” என்று உரிமையாகத் தன் கன்னத்தைக் காட்டிக் கேட்டாள்.

‘இதென்ன டா புது கதையா இருக்கு? மஹா அம்மா... நான் அப்பாவா?’ புரியாமல் நான் குழம்ப,

சிவா புகைப்படக் கருவியுடன் என்னைப் பார்த்து, “நீ மஹா... இரண்டு பேரும் சேர்ந்தாப்ல பாப்பாவுக்கு முத்தம் கொடுங்க” என்றான்.

‘இவன் வேற ஃபோட்டோ எடுக்கிறேன் பேர் வழி ன்னு என் உயிரை எடுக்கிறான்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்தக் குட்டிப் பெண்,

“ம்மா வாம்மா... நீயும் முத்தா கொடு” என்று மஹாவையும் இழுத்தாள்.

‘என்னடா நடக்குது இங்க?’ யோசிக்கக் கூட முடியாமல் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டியதாகிப் போனது.

அந்தப் பெண் குழந்தை மஹாவிடம் ஒட்டிக் கொண்டதையும் இவள் அவளைக் கொஞ்சிய விதத்தையும் பார்க்கப் பார்க்க எனக்குத் தலை சுற்றியது. சந்தேகமே இல்லாமல் அவள்தான் இந்தக் குழந்தைக்கு அம்மா என்று தெரிந்தது. முக ஜாடை கூட இருக்கிறதே!

அவளுக்கு யாருமில்லை என்றுதானே சொன்னான். ஆனால் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்று சொல்லாமல் விட்டுவிட்டானே. படுபாவி!

‘சரி இந்தக் குழந்தைக்கு இவ அம்மான்னா... ஒரு வேளை இவ விடோவோ? இல்ல டிவோர்ஸியா... இல்லாட்டிக் காதலிச்சு எவனாச்சும் ஏமாத்தி கிமாத்தி குழந்தை கொடுத்துட்டானா... போதும் போதும்... நான் ஓவரா யோசிக்கிறேன்’ தாறுமாறாக யோசிக்கும் என் மூளைக்கு ரெட் சிக்னல் போட்டேன்.

‘அடேய் அன்பு... உனக்கு வேறப் பொண்ணே கிடைக்கலயா? இன்ஸ்டன்டா மூணு வயசுல ஒரு பொண் குழந்தையோட இருக்கவளதான் கல்யாணம் பண்ணனுமா? நல்லவனா இருக்க வேண்டியதுதான்... ஆனா அதுக்காக இப்படியா?’

ஏற்கனவே அன்புவின் மரணத்தில் நான் பாதி பித்தாகிக் கிடக்கும் நிலையில் இவளைப் பற்றி வேறு யோசித்துப் பைத்தியமாக விரும்பவில்லை. அவள் எத்தனை குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும் சரி.

இப்போதைக்கு அவள் என் மனைவி. அன்புவாகிய எனக்கு மனைவி.

தட்ஸ் இட். டாட்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா