மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Anbin VazhiyathuAnbin Vazhiyathu - Episode 10Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 10

Quote from monisha on October 21, 2024, 6:13 PM

10

Anger is nothing more than an outward expression of hurt, fear and frustration

“அறிவுக்கு இப்படியொரு ஆக்ஸிடென்ட் நடக்காம இருந்திருந்தா நீ இரண்டு வாரம் முன்னாடியே நம்ம கம்பெனில எம் டி பொறுப்பை ஏத்துக்கிட்டு இருந்திருப்ப” என்று கிரி அங்கிள் மேலும் சொன்னதைக் கேட்டு என்னுடைய அதிர்ச்சி நிலையை மறைக்க நான் மிகவும் பிராயத்தனப்பட்டேன்.

அன்பு அந்த வீட்டிற்குப் போவது என்றும், ஜே ஃபுட் ப்ரோடெக்ட்ஸ் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பது என்றும், இரண்டு வாரம் முன்பாகவே தீர்மானித்திருக்கிறான். அதனால்தான் அவன் தன் வேலையைக் கூட விட்டிருக்கிறான்.

நிச்சயம் இதெல்லாம் என்னிடம் சண்டையிட்டப் பிறகு எடுத்த தீர்மானமாகத்தான் இருக்க வேண்டும்.

நான் யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருக்க, “அறிவோட ஆக்ஸிடென்ட் உன் மனசை எவ்வளவு பாதிச்சிருக்கும்னு எனக்குப் புரியுது அன்பு... ஆனா அப்படியே இருந்திட முடியாது இல்ல... அடுத்த என்னன்னு யோசிக்கணும்.

அதுவும் இல்லாம உங்க அப்பா நீ எப்போ வீட்டுக்கு வருவ கம்பெனி பொறுப்பு எல்லாம் எடுத்துக்கப் போறன்னு காத்திட்டு இருக்காரு” என, எனக்குக் கோபம் கனலாக ஏறியது.

நான் அவரைப் பார்த்து, “அப்போ எனக்கும் அறிவுக்கும் கொஞ்சம் சண்டை... அந்தக் கோபத்துலதான் இப்படியொரு முடிவை அவசரப்பட்டு எடுத்தேன்... ஆனா இப்போ என்னால இந்தப் பொறுப்பை ஏத்துக்க முடியாது அங்கிள்... நான் அந்த வீட்டுக்குப் போகுறதை அறிவு எப்பவுமே விரும்ப மாட்டான்” என்று முடிக்க,

“என்ன அன்பு... திடீர்னு இப்படி பேசுற?” என்றவர் அதிர்ந்தார்.

“அந்த நிரஞ்சனா சொன்னதைக் கேட்டு அப்பா அறிவை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பினதை எப்படி அங்கிள் மறக்க முடியும்?” என்று நான் அவரிடம் கேட்க,

“ஏன் அன்பு திரும்பியும் பழசை எல்லாம் பேசிட்டு இருக்க?” என்று கேட்க நான் மெளனம் சாதித்தேன்.

அவருக்கு அது பழைய விஷயமாக இருக்கலாம். ஆனால் என்னுள்ளத்தில் அந்தச் சம்பவத்தின் தாக்கம் இன்னும் அதே அளவான உக்கிரத்துடன் தீயாக எரிந்து கொண்டுதான் இருந்தது.

கிரி அங்கிள் மெதுவாக, “நான் இப்படி சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காது அன்பு... அறிவு இன்னைக்கு இல்லாம போயிட்டதால அவன் செஞ்சது எதுவும் சரியாகிடாது” என நான் அவரைக் கூர்ந்து நோக்கி,

“என்ன சொல்ல வரீங்க அங்கிள்?” என்றேன்.

“நிரஞ்சனா விஷயத்துல நீ அறிவை நம்புற சரி... ஆனா அதுதான் உண்மைன்னு உனக்கு இப்பவும் தெரியுமா?” என்றவர் கேட்ட நொடி,

நான் அடங்கா கோபத்துடன், “அங்கிள்” என்று சீறிக் கொண்டு எழவும்,

“கோபப்படாதே அன்பு... முதல உட்காரு... நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளு” என்றவர் நிதானமாகப் பேசினார்.

என்னிடமே என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிவிட்டு நான் பொறுமையாக இருக்க வேண்டும் என்கிறார். அப்போதைக்கு எனக்கு வேறு வழியும் இல்லை. அமைதியாக அமர்ந்தேன்.

ஆனால் நெருப்பின் மீது அமர்ந்திருப்பது போன்ற உணர்வில் நான் உள்ளுர கொதித்துக் கொண்டிருக்க

“அறிவு இருந்த வரைக்கும் ஒவ்வொரு நாளும் அவனுக்காக நீதான் யோசிச்சு இருக்க... உனக்காக அவன் என்னைக்காச்சும் யோசிச்சு இருக்கானா... சொல்லு” என்றதும் என் தாடை இறுகியது. நான் அவனைப் பற்றி யோசிக்கவில்லை என்று இவருக்குத் தெரியுமா?

“ஏன் அன்பு... நீ நம்ம கம்பெனியை நிர்வாகம் பண்ணணும்னு எவ்வளவு விருப்பப்பட்ட... ஆனா அவனுக்கு விருப்பம் இல்லங்குற ஒரே காரணத்துக்காக நீ விருப்பப்பட்ட விஷயத்தை விட்டுக் கொடுத்துட்டு ஏதோ ஒரு கம்பனில மாச சம்பளத்துக்காக இத்தனை நாளா வேலை பார்த்துட்டு இருக்க... கஷ்டப்பட்டுட்டு இருக்க... அப்படி அவன் உனக்காக எதையாவது விட்டுக் கொடுத்திருக்கானா... நீயே சொல்லு”

”எல்லாத்துக்கும் மேல கதை எழுதுறேன், கதை எழுதுறேன்னு ஊர் சுத்திட்டு ஒட்டுண்ணி மாதிரி உன் கூடவே உன் உழைப்பை எல்லாம் சுரண்டிட்டு இருந்தான்.”

”இன்னைக்கு இந்த ஊரே அவனை எழுத்தாளனா கொண்டாடிட்டு இருக்குனா அதுக்கு யார் காரணம்... நீதானே காரணம்... உன் ஆசை இலட்சியத்தை நீ அவனுக்காக விட்டுக் கொடுத்துட்டு அவனுக்கும் சேர்த்து இல்ல நீ உழைச்சு கொட்டின... ஆனா அதுல உனக்கு என்ன அன்பு கிடைச்சது... யோசிச்சு பார்த்தியா?”

நான் அன்புவுடன் ஒட்டுண்ணிப் போல வாழ்ந்து கொண்டிருந்தேனா? என்ன பேசிப் கொண்டிருக்கிறார் இவர்? என் கைவிரல்களை அழுந்த மூடியபடி அமர்ந்திருக்க,

“இது எல்லாத்துக்கு மேல அவனோட மோசமான பழக்கங்களால நீ எவ்வளவு தூரம் அவமானப்பட்டு இருப்ப அன்பு?” என்றார்.

‘என்னால அன்பு அவமானப்பட்டானா? இப்போ இவர் என்னதான் சொல்ல வர்றாரு?’ என் உள்ளம் உலைகலனாகத் தகித்தது.

“நான் அறிவைப் பத்தி இப்போ இப்படி பேசுறது கஷ்டமாதான் இருக்கும்... ஆனா நான் சொன்னது எதுவும் பொய்யில்லையே... அவன் பொறுக்கித்தனம் பண்ணதெல்லாம் உனக்கும் தெரியும்தானே?” என்றார்.

நான் பல்லைக் கடித்துக் கொண்டேன்.

“அறிவு இருந்த வரைக்கும் நீ அவனுக்காக யோசிச்ச... கவலைப்பட்ட சரி... ஆனா இனிமேயும் அவனைப் பத்தியே யோசிச்சிட்டு உன் ஆசையை விருப்பத்தை விட்டுக் கொடுக்குறது நியாயமே இல்ல இப்போ உனக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு அன்பு... மஹா மதிக்குட்டி அவங்கள பத்தி எல்லாம் யோசி

மஹாவை நீ சந்தோஷமா வைச்சு பார்த்துக்கணும்னு என்கிட்ட சொன்னது... அவளுக்கு இந்த உலகத்துல இருக்க எல்லா சந்தோஷத்தையும் காட்டப் போறேன்னு உணர்ச்சிகரமா பேசுனது... அவளை வசதியா வைச்சுக்கப் போறன்னு சொன்னது... அதெல்லாம் பொய்யா அன்பு?”

எனக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு நான் மெளனமாக அமர்ந்திருந்தேன்.

“உனக்குதான் அன்பு நம்ம கம்பனியை நிர்வகிக்குற திறமை இருக்கு... ராஜேஷ் நிரஞ்சனாவோட முட்டாள்தனத்தால ரீஸன்டா நம்ம கம்பனியோட எத்தனை ஆர்டர் கையை விட்டுப் போயிடுச்சுன்னு தெரியுமா?”

”இப்படியே போனா கம்பனியோட நிலைமை ரொம்ப மோசமாயிடும்... அப்புறம் அங்க வேலை செய்ற ஆயிரக்கணக்கான நம்ம வொர்க்கர்ஸோட நிலைமை... அது முழுக்க முழுக்க உங்க தாத்தாவோட சொந்த உழைப்புல உருவானது... அவருக்கு அப்புறம் உனக்கும் அறிவுக்கும்தான் அதுல முழு உரிமை இருக்கு.”

”அதை ஏன் நீ விட்டுக் கொடுக்கணும்...இப்போ அறிவோட ஷேர்ஸ் உன் பேருக்குதான் வரும்... லீகலா இப்போ நீதான் கம்பனியோட எம்.டி” என்றவர் என் தோளைத் தட்டிக் கொடுத்து,

“எதுவும் தேவை இல்லாததைப் பத்தி எல்லாம் யோசிக்காம ஒரு நல்ல முடிவா எடு... நான் வேலை விஷயமா இரண்டு நாள் பெங்களூர் போறேன்... போயிட்டு வந்து உன்னைப் பார்க்கிறேன்” என்றவர் கிளம்பிவிட்டார்.

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னைக் குத்திக் கிழிக்க நான் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.

“அன்பு என்னாச்சு?” என்று மஹா விசாரிக்க, அவளை நிமிர்ந்து பார்த்தேன். எல்லாம் இந்தப் பெண்ணால்தான். இவளால்தான் அன்பு என்னை விட்டுப் பிரிந்து போக நினைத்தான்.

“ஏன் அப்படி பார்க்குறீங்க... கிரி சார் என்ன சொல்லிட்டுப் போறாரு” என்றவள் கேட்க, அவள் முகத்தைப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை.

பதிலேதும் சொல்லாமல் என் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றேன். எங்கே செல்வது என்று தெரியாமல் சுற்றி அலைந்து கொண்டிருந்த நான் இறுதியாக பிரேமியின் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினேன்.

அதன் பின்புதான், ‘ஏன் இங்க வந்து தொலைச்சேன்?’ என்று சுயவுணர்வு பெற்று பைக்கை திருப்பிக் கொண்டுவிட்டு மீண்டும் சுவரிலடித்தப் பந்தாக வீடு வந்து சேர்ந்தேன்.

“எங்க போனீங்க அன்பு? என்னாச்சு உங்களுக்கு?” என்று நான் வருவதைப் பார்த்ததும் மஹா பதட்டத்துடன் வினவ,

“நான் எங்க போறேன் எங்க வர்றேன்னு... எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணுமாடி” என்று எரிந்து விழவும் அவள் முகம் சுருங்கியது.

இருந்தும் தன்னைச் சமாளித்துக் கொண்டவள், “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்... சாப்பிட வாங்க” என்று அழைக்க,

“எனக்கு ஒன்னும் வேண்டாம்” என்றபடி அமைதியாக வந்து படுக்கையில் கண்கள் மூடிப் படுத்துக் கொண்டேன்.

இறுகியிருந்த என் மனம் மெல்ல மெல்ல தளரத் தொடங்கியது. கண்ணீர் திரையிட்டது. பழைய நினைவுகள் என் இமைகளுக்குள் உருண்டன.

‘நான் காபி அடிக்கலபா... நான் காபி அடிக்கலபா’ என்று கதறுகிறேன். அழுகிறேன். அப்பா என்னை நம்பவே இல்லை.

பரீட்சையில் காபி அடித்துவிட்டதாக அப்பா தன் பெல்ட்டைக் கழற்றி என் உடலெல்லாம் தடித்து வீங்கமளவுக்கு அடித்து விளாசுகிறார்.

‘உன்னால ஸ்கூல எல்லார் முன்னாடியும் நான் அவமானப்பட்டு நிற்க வேண்டியதா போச்சு’ என்று சொல்லிச் சொல்லி அடித்தவர்,

‘அன்பு எப்படி இருக்கான்... ஏன் டா நீ மட்டும் இப்படி இருக்க?’ என்று சீற்றத்துடன் கேட்கிறார். திரும்பத் திரும்ப கேட்கிறார்.

‘அன்பு மாதிரி ஏன் நான் இல்லை?’ எனக்கும் அப்போது அந்தக் கேள்விக்கான பதில் தெரியவில்லை.

என்னை அடித்தக் காட்சியை அம்மாவும் அன்புவும் கலக்கத்துடன் ஓரமாக நின்று பார்த்திருக்க அப்பா அன்புவைக் கூப்பிட்டு அருகில் அமர்த்திக் கொண்டு,

‘இவன்தான் என் புள்ள... என்னை இவன்தான் பெருமைப்படுத்தப் போறான்’ என்றார். எனக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது.

அவர் அடித்த வலியை விட அந்த வார்த்தைகள் அதிகமாக வலித்தன. அது போல அவர் நிறைய முறை பேசி இருக்கிறார்.

‘எனக்கு ஒரே ஒரு புள்ள பிறந்திருக்கலாம்... நான் என்ன இரட்டை புள்ள கேட்டேனா?’ என்பவர் மேலும் அன்புவிடம், ‘நீதான் என்னோட வாரிசு... நீதான் என் பிஸ்னஸ நடத்தணும்’ என்பார்.

பல நேரங்களில் பிள்ளைகளை அப்பா வெறுத்தாலும் அம்மா அன்புடன் அரவணைத்துக் கொள்வாள். ஆனால் அத்தகைய அதிர்ஷ்டம் கூட எனக்கில்லை.

அம்மா அழகாக இருப்பாள். பெண்களுக்கு அழகு மட்டுமே முக்கியம் இல்லை என்று அம்மாவைப் பார்த்துத் தோன்றியது. அதிகாரம் கம்பீரம் இது ஏதும் இல்லாதவள். அப்பாவின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்காதவள். கொடுக்கத் தெரியாதவள்.

விரதம், கோவில், பூஜை என்று கிடந்தவள் அல்சர் நோயினால் பாதிக்கப்பட்டாள். அதனைத் தொடர்ந்து ஆஸ்துமா மூச்சுத் திணறல் எனப் பல இத்யாதி இத்யாதி நோய்கள் அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டன.

எனக்கும் அன்புவிற்கும் பன்னிரண்டு வயதிருக்கும் போது நோய்வாய்ப்பட்டவள் அதன் பின் இயல்பாக நடமாடுவதையும் பேசுவதையும் குறைத்துக் கொண்டாள்.

இப்படியாக என் வாழ்க்கை அன்பும் அரவணைப்பும் அற்ற வறண்ட பாலைவனமாகக் கிடந்த நிலையில் நீரூற்றாக நிரஞ்சனா வந்தாள். என் மனதைச் சோலைவனமாக மாற்றினாள்.

பருவ வயதின் பாதிப்புகளில் அவளின் மென்மையான அழகும் மயக்கும் விழிகளும் என்னை அவளிடம் ஈர்த்தது. அவளை நான் என் வாழ்வில் நுழைந்த தேவதையாகதான் பார்த்தேன்.

வயசு கோளாறு! உடலால் பார்க்க அப்படி தெரிந்தாலோ என்னவோ? ஆனால் அவள் ‘தேவதை’ எல்லாம் இல்லை. அதே வார்த்தையின் முதலெழுத்தில் வரும் கெட்ட வார்த்தைதான் இப்போது அவளை நினைக்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருகிறது.

அவள் புதிதாக வேலைக்குச் சேர்ந்த அப்பாவின் செகரெட்டரி தேவிகாவின் மகள். பதினோராம் வகுப்பிலிருந்து அவளும் எங்கள் பள்ளியில் சேர்ந்தாள். அவளுக்கு இயற்பியல் பாடம் வரவே வராது. அன்புவிடம் சந்தேகங்கள் கேட்க அடிக்கடி வீட்டிற்கு வருவாள். தேர்வு சமயத்தில் இருவரும் சேர்ந்து படிப்பார்கள்.

நான் காமர்ஸ் க்ரூப். அவர்களுடன் என்னைச் சேர்த்து கொள்ள மாட்டார்கள். நான் தனியாகத்தான் படிப்பேன். அன்புவும் அவளும் நெருக்கமாக அமர்ந்து பாடம் படிக்கும் போது எனக்குப் பொறாமையாக இருக்கும். அப்போதுதான் நான் ஏன் சைன்ஸ் க்ரூப் எடுக்கவில்லை என்று என் மீதே எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

உண்மையில் எனக்கு அறிவியல் கிடைக்காமல் இல்லை. ஆனால் அன்பு எடுத்த க்ரூப்பை எடுக்கவே கூடாது என்றுதான் நான் பிடிவாதமாக காமர்ஸ் எடுத்தேன். ஆனால் அது இப்படி எனக்கு எதிராகவே முடியுமென்று நான் நினைக்கவில்லை.

தேர்வு முடிவுகள் வந்தன. பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமாக எடுத்த பத்து பேரின் மதிப்பெண்கள் பலகையில் வரிசை வாரியாக எழுதப்பட்டிருந்தன.

ஆயிரத்து நூற்றி அறுபத்து ஒன்று மதிப்பெண்களுடன் அன்பு மூன்றாவது இடத்திலும் ஆயிரத்து பத்து எடுத்து நான் எட்டாவது இடத்திலும் இருந்தேன்.

என் பெயரும் பலகையில் இருந்தது. ஆனால் எல்லோரும் அன்புவைதான் தேடித் தேடி போய் வாழ்த்தினார்கள்.

‘அவன் சயின்ஸ் க்ரூப் எடுத்து இவ்வளவு மார்க் எடுத்திருக்கான்...நீ காமர்ஸ் க்ரூப் எடுத்தே இவ்வளவு மார்க்தான் எடுத்திருக்க’ என்று அப்பா அன்புவுடன் ஒப்புமை செய்து எனது வெற்றியை மட்டுப்படுத்தினார்.

நான் அதைப் பொருட்படுத்தவில்லை. நாளுக்கு நாள் என் உணர்வுகள் இறுகிப் போய் கொண்டே இருப்பதாக உணர்ந்தேன். அந்த நிலையில்தான் ஓரமாக கவலையுடன் நின்ற நிரஞ்சனாவைக் கவனித்தேன்.

அவள் பெயர் அந்த போர்டில் கூட இல்லை. தேர்ச்சிப் பெற்றாலும் எல்லாவற்றிலும் குறைந்த மதிபெண்கள்தான். நாக்கைச் சுழற்றி ஆங்கிலத்தில் விளாசுகிறாள் என்று பார்த்தால் எல்லாம் வெறும் உதார்தான் போல. அவள் முகம் சோர்ந்து போயிருந்தது. பிஸிக்ஸ் மற்றும் மேக்ஸ் இரண்டிலும் அவளுக்கு மதிப்பெண்கள் ரொம்பவும் குறைந்துவிட்டிருந்தன.

அப்போது அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அருகே சென்று நான் பேச எத்தனிக்க என்னைப் பார்த்ததும் அவள் தன் கவலையை மறந்து, “கங்கிராட்ஸ் அன்பு” என்று எனக்குக் கைக் கொடுக்க வந்தாள்.

‘இவளுக்கு போய் ஆறுதல் சொல்ல வந்தன் பாரு’ என்று பற்றிக் கொண்டு வந்தது.

“நான் அன்பு இல்ல... அறிவு... அன்பு அங்கே இருக்கான்.” என்று நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு வீடு போய் சேர்ந்துவிட்டேன். இனி அவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைத்தேன்.

ஆனால் நான் நினைத்ததற்கு நேர்மாறாக எல்லாம் நடந்தது.

அன்பு அண்ணா பல்கலை கழகத்தில் ப்ரொடக்ஷன் இஞ்சினியரிங் சேர்ந்தான். எங்கள் குடும்ப நிறுவனமான ஜே புட் ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு அப்போதிலிருந்தே இருந்தது. அதற்கு ஏற்றப் படிப்பாகத் தேடி எடுத்துப் படித்தான்.

ஆனால் எனக்கு அது போன்ற ஆசைகள் எல்லாம் துளி கூட இல்லை. நான் பி ஏ தமிழ் சேர்ந்தேன். அப்பாவுக்கு உடன்பாடில்லை. என்னை பி.காம் அல்லது பிபிஏ சேரச் சொன்னார். அவர் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்?

நான் பிடிவாதமாகத் தமிழ் சேர்ந்து படித்தேன். பிறகுதான் நிரஞ்சனாவும் என் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரிந்தது. தனக்கு அறிவியல் அறவே வராது என்று தெளிவாகப் புரிந்து கொண்டவள் பி ஏ இங்கிலிஷ் சேர்ந்திருந்தாள். இம்முறை அவளே என்னிடம் பேசினாள். நெருங்கியும் பழகினாள்.

அதிகம் மனிதர்களிடமே நெருக்கமாகப் பேசிப் பழக்கமில்லாத எனக்கு அவளுடைய நட்பு ஒரு புதுவிதமான உணர்வைத் தோற்றுவித்தது. காற்றில் பறப்பதும் மேகத்தில் மிதப்பதும் போல அவளைப் பார்த்தாலே நான் பரவசம் கொண்டு விடுவேன்.

அவை எல்லாம் வெறும் ஹார்மோன் விளையாட்டுகள் என்று அப்போதைய என் மூளைக்கு உரைக்கவில்லை. ரஞ்சுவின் ஹோண்டா மூன்று நாளாக ரிப்பேர். என் பைக்கில் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

அவள் வீடும் பெரிதாக இருந்தது. பெரிய வாயிற் கதவு, தோட்டம், அதனைத் தாண்டி ஒற்றை மாடி வீடு. எந்த சங்கடமும் இல்லாமல் என்னை உள்ளே அழைத்துப் போவாள். அவள் அம்மா தேவிகா அலுவலகம் சென்றிருப்பார். அவளே காபி போட்டுத் தருவாள்.

இருவரும் எதிர் எதிரே அமர்ந்து காபி பருகிக் கொண்டே பேசுவோம். அவள்தான் நிறைய பேசுவாள். நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

ஒருமுறை அவளுடைய அப்பா இறந்து பத்து வருடமாகிறது என்றவர் புகைப்படத்தைக் காண்பித்துச் சொல்லிக் கொண்டிருந்தவள்,

“நான் எங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்” என்று அப்போது உணர்ச்சிவசப்பட்டவளாக முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். நான் அவள் அருகில் அமர்ந்து சமாதானம் செய்யவும் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு விம்மினாள்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் தேகத்தை ஸ்பரிஸிக்கும் அந்த உணர்வு ரொம்பவும் புதிதாக இருந்தது. என் உடலில் உஷ்ணமேறியது. நான் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் தவித்துக் கொண்டிருக்கையில்,

“ரஞ்சு” என்று தேவிகா குரல் எங்கள் இருவரின் உணர்வுகளையும் சமன்படுத்தியது. அவர் என்னையும் நிரஞ்சனாவையும் கோபமாகப் பார்த்தபடி நுழைய அவர் மனநிலை புரிந்து நான் அமைதியாக வெளியேறிவிட்டேன்.

அந்தச் சம்பவத்திற்கு பிறகு நிரஞ்சனா என்னுடன் பேசுவதையும் பார்ப்பதையும் கூட தவிர்க்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் அதை நான் கொஞ்சமும் உணரவில்லை. எனக்குள் நிரஞ்சனவால் ஏற்பட்ட கலவரம் தீரா தாபமாக உருவெடுத்து என் மூளையை மழுங்கடித்திருந்தது.

அவளைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று எப்போதும் ஒரு தவிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்த நிலையில்தான் அவள் உடல் நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு வரவில்லை.

அதைச் சாக்காக வைத்துக் கொண்டு அவளை வீட்டில் சென்று பார்க்கலாம் என்று கிளம்பி வந்தேன். வந்த இடத்தில் என் அப்பாவின் காரைப் பார்த்தேன்.

ஆஃபிஸ் விஷயமாக வந்திருப்பார் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு நான் ரஞ்சுவைப் பார்க்க வந்திருப்பது தெரிந்தால் நிச்சயம் கோபப்படுவார் என்ற பயம் உண்டாக, திரும்பிப் போய்விட நினைத்தேன்.

ஆனால் அப்பாவும் தேவிகாவும் அணைத்துக் கொண்டிருந்த ஒரு காட்சி கண்ணாடி ஜன்னல் வழியாகத் தெரிந்தது.

நான் பார்க்கும் காட்சி சரியானதுதானா? இல்லை நான் ஏதாவது தப்பாகப் புரிந்து கொள்கிறேனா?

இல்லை. நான் தப்பாகத்தான் பார்க்கிறேன். அப்பா எதற்கு நிரஞ்சனாவின் அம்மாவை அணைக்க வேண்டும் என்று யோசித்துவிட்டு வண்டியைத் திருப்பும் போது அப்பா காரை எடுக்க வெளியே வந்துவிட்டார்.

நான் அவர் கண்ணில் பட்டுவிடாமல் மெதுவாக என் பைக்கை ஒதுக்குபுறமாகத் தள்ளிக் கொண்டு மறைந்து கொள்ளும் போது, “எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க... எத்தனை நாளைக்கு இப்படியே” என்று தேவிகா அப்பாவிடம் சத்தமிட்டுப் பேசுகிறார்.

“கொஞ்சம் பொறுமையா இரு தேவி”

“பொறுமையா எல்லாம் என்னால இருக்க முடியாது... ஒன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க... இல்ல இதோட இங்க வர்றதை நிறுத்திடுங்க” என்றவர் திட்டவட்டமாகப் பேச,

“கண்டிப்பா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் தேவி” என்று அப்பா சொல்ல, அந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அதிர்ச்சியிலும் அருவருப்பிலும் என் உடலெல்லாம் நடுங்கியது.

நான் காம்பவுன்ட் சுவர் அருகே ஒட்டி நிற்க அப்பாவின் கார் புழுதியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட, நான் உறைந்து போய் நின்றேன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டும் நான் வீடு வந்து சேர தாமதமாகிவிட்டது.

“என்னடா ஆச்சு ஏன் லேட்டு? ஆமா ஏன் நீ ஒரு மாதிரி இருக்க?” என்று அன்பு என் முகம் பார்த்துக் கேள்விகளை அடுக்க, அவனிடம் நான் எதுவும் சொல்லவில்லை.

நேராகப் படுக்கையில் வந்து விழுந்து தலையணையில் முகம் புதைத்து அழுதேன். யாரிடமும் என் வேதனையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. பகிர்ந்து கொள்ள முடியவில்லை.

எப்படி சொல்வது? எப்படி சொல்ல முடியும்?

நிரஞ்சனாவிற்கு இது முன்னமே தெரியுமா? தெரிந்துதான் என்னிடம் நெருங்கி பழகினாளா? என் மனதில் ஆசையை வளர்த்தாளா?

சை! அவமானம்... அசிங்கம்... என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

என் வாழ்வில் ஏற்பட்ட அந்த மோசமான ஏமாற்றத்தைக் கையாள முடியாமல் மனதிற்குள்ளாகவே அழுது நொந்து வெந்து புழுங்கிய நான் இன்னும் இன்னும் மனதளவில் ஒடுங்கிப் போனேன்.

அப்போது யாரோ காலை சுரண்டியது போன்ற உணர்வில் நான் பழைய நினைகளிலிருந்து மீண்டு எழுந்தேன்.

“அன்பப்பா... அன்பப்பா” என்று மழலையாக அழைத்தபடி மதியழகிதான் என் காலைச் சுரண்டிக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்த நொடி கொத்தாக சில காகிதங்களை என் கையில் கொடுத்தாள்.

அது என்னவென்று குழப்பத்துடன் பார்த்த போது அவை அத்தனையும் என்னுடைய நாவல்களின் பக்கங்கள் என்று தெரிந்தது. தரையில் என் நாவல்கள் அத்தனையும் பிரித்துக் களைத்து போடப்பட்டிருப்பது தெரிந்தது.

“என்ன பண்ணி வைச்சு இருக்க நீ” என்று கடுப்புடன் அந்தப் புத்தகங்களைக் கையிலெடுத்துப் பார்த்த போது அத்தனையும் பக்கம் பக்கமாகக் கிழிக்கப்பட்டிருக்க, என் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.

“மஹாஆஆஅ... ஏய் மஹா” என்று நான் அலற அவள் பதறித் துடித்து அறைக்குள் வந்து,

“என்னங்க... என்னாச்சு?” என்றாள்.

“இதான் நீ குழந்தையைப் பார்த்துக்கிற இலட்சணமா... பாரு என்ன பண்ணி வைச்சு இருக்கான்னு” என்று நான் எகிற, அவள் முகம் வாடியது.

“இல்ல நீங்க உள்ளே இருக்கீங்கன்னுதான்” என்றவள் என்னைத் தயக்கமாகப் பார்க்கவும்,

“இவளை ரூமுக்குள்ள விட்டுட்டு... நீ என்ன வெளிய கிழிச்சிட்டு இருந்த?” என்றதும் வாடிய முகத்துடன் என்னைப் பார்த்தவளின் கோபம் அப்போது மகள் புறம் திரும்பியது.

“ஏன்டி... இப்படி பண்ண?” என்று அவள் முறைத்துச் சத்தமிடவும் மதியழகி பயந்து, “அப்பா” என்று அடைக்கலமாக என் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

இருந்த கோபத்தில், “போ இங்கிருந்து” என்று நான் அவளைத் தள்ளி விட்டுவிட, மதியழகி நிலைத்தடுமாறி கட்டிலின் கூர்மையான மூலையொன்றில் வேகமாக முட்டிக் கொண்டதில் அவள் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தது.

“ஐயோ! குட்டிமா” என்று மஹா பதறவும்தான் நான் சீற்றத்தில் செய்த காரியம் என் மூளைக்கு உரைக்க,

‘கோபத்துல என்ன பண்ணி வைச்சுட்டேன்’ என்று நான் தலையைப் பிடித்துக் கொண்டேன்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா