மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Anbin VazhiyathuAnbin Vazhiyathu - Episode 13Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 13

Quote from monisha on October 26, 2024, 9:22 PM

13

Injuries were forgotten, but insults never

அந்த கார் பயணம் தொடர்ந்ததில் என் வாழ்வில் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத சம்பவங்கள் எல்லாம் என் மூளைக்குள் அணிவகுத்தன.

அப்பாவுக்கு தேவிகாவுடன் இருக்கும் தொடர்பை அறிந்து நான் மனதளவில் சுக்குநூறாக உடைந்துதான் போனேன். யாரிடமும் நான் அதிகம் நெருக்கமாகப் பேசவும் பழகவும் செய்யாததால் என்னுடைய வேதனைகள் யாரையும் பாதிக்கவும் இல்லை.

அன்பு மட்டும் ஒரு சில முறைகள், ‘என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க’ என்று கேட்டுப் பார்த்தான். பின் நான் எதுவும் பதில் சொல்லாததில் அவனும் என்னைக் கேட்பதை விட்டுவிட்டான்.

இதை எல்லாம் யோசித்து வருந்தி என்னவாகப் போகிறது, இல்லை சொல்லித்தான் என்னவாகப் போகிறது என்ற விரக்தி மனநிலைக்கு நான் வந்துவிட்டேன். ஆதலால் எப்போதும் போல காலையில் எழும்பி தயாராகி கல்லூரிக்குச் சென்றுவிடுவேன்.

நிரஞ்சனாவைப் பார்த்தால் கூட கண்டும் காணாமல் கடந்துவிடுவேன். சில முறைகள் அவளாக என்னிடம் பேச வந்த போதும் நான் அவளைத் தவிர்த்து விட்டதில் அவளும் என்னிடம் பேச முயற்சிப்பதை நிறுத்திக் கொண்டாள்.

ஆழ்கடலின் அமைதி போல கடந்து சென்ற நாட்களில் புயலாக வந்து எங்கள் குடும்பத்தையே புரட்டிப் போட்டது அந்த நாள்.

அப்பா தேவிகாவைத் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். எனக்கு அந்த அதிர்ச்சி புதிது இல்லை. ஆனால் அன்புதான் நிலைகுலைந்து நின்றுவிட்டான். எப்போதும் கலகலவென்று சிரித்து சந்தோஷமாக இருக்கும் அவன் உடைந்து நின்று பார்த்தது அதுதான் முதல் முறை.

அப்பாவின் மீது எனக்கிருந்த அன்பையும் மதிப்பையும் விட அவனுக்கிருந்தது அதிகம். அந்த விஷயம் அவனுக்குப் பேரிடியாகத்தான் இருந்தது.

ஆனால் அம்மா எந்தவித உணர்வுமின்றி நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கும் அன்புவுக்கும் அதுதான் அதிகமான அதிர்ச்சியைத் தந்தது.

எங்களைப் போல அவளுக்கு அதிர்ச்சி இல்லையா? கோபம் இல்லையா? அழுகை வரவில்லையா? என்றெல்லாம் நாங்கள் குழம்பிக் கொண்டிருந்த போதுதான் விஷயம் புரிந்தது.

ஏற்கனவே அப்பா தேவிகாவுடனான உறவுப் பற்றி அம்மாவிடம் பேசி ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார். திருமணம் செய்யப் போவதாகவும் முன்னமே தெரிவித்து இருக்கிறார்.

இது ஏதும் அறியாத அன்பு திருமணக் கோலத்தில் வந்து நின்ற அப்பாவிடம் கோபமாகச் சண்டையிட்டான். அப்போது அம்மா அவனைத் தடுத்து அறைக்கு இழுத்து வந்தார். நானும் அவர்கள் பின்னோடு சென்றேன்.

அப்போதுதான் அம்மாவிற்கு இதெல்லாம் முன்னமே தெரிந்திருக்கிறது என்று எங்களுக்குத் தெரிய வந்தது.

“எப்படிமா நீ இதுக்கு சம்மதிச்ச?” என்று அன்பு சீறலாகக் கேட்க, நான் ஓரமாக நின்று நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அம்மா எந்தவித பதட்டமும் இல்லாமல், “உங்க அப்பா செஞ்சதுல எந்த தப்பும் இல்ல அன்பு... இதுக்காக நீ உங்க அப்பாகிட்ட கோபப்படாதே” என்று சொல்ல,

‘என்ன மனுஷி இவள்?’ என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது.

அதேநேரம் அன்பு அம்மாவிடம், “எப்படி ம்மா? எப்படி உன்னால இப்படி பேச முடியுது?” என்றவன் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் பொறும,

“இதுநாள் வரைக்கும் உங்க அப்பா என்னை நல்லாத்தான் பார்த்துக்கிட்டு இருந்திருக்காரு... ஆனா நான் அவருக்கு நல்ல பொண்டாட்டியா இருந்தேனான்னு கேட்டா... இல்லதான்” என்றார்.

“என்னம்மா பேசுற நீ?” என்று அன்பு அதிர,

“ஆமான்டா... உங்க அப்பாவுக்கு நல்ல மனைவியா நான் இருக்கல... சதா சர்வகாலமும் ஹாஸ்பிட்டல் வீடுன்னு ஒரு நோயாளியா உங்க அப்பாவுக்குப் பாரமாதான் இருந்திட்டு இருக்கேன்” என்றதும் அன்புவின் கோபம் அதிகரித்துவிட்டது.

“என்னம்மா... உனக்கு உடம்பு சரி இல்லாம இருக்கிறது அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குறதுக்கு ஒரு காரணமா? அப்படி அவருக்கு உடம்பு முடியாம இருந்தா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிப்பியா ம்மா? அதுக்கு அவர் ஒத்துக்குவாரா?” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் பளாரென்று ஒரு அறை அவன் கன்னத்தில் விழுந்தது.

அம்மா அடிப்பாளா? அடிக்கும் அளவுக்கு அவளுக்கு கோபமெல்லாம் வருமா? நாங்கள் இருவருமே அதிர்ந்து நிற்க அம்மாவின் குரல் உயர்த்தலாக ஒலித்தது.

“இதுவரைக்கும் உங்க அப்பா உங்களுக்கு ஏதாவது குறை வைச்சிருக்காரா? படிப்பு வீடு வாசல் வசதின்னு உங்களுக்குத் தேவையானதை என்ன? தேவைக்கு அதிகமாவே எல்லாமே செஞ்சிருக்காரு இல்ல?” என்று கேட்க, அன்புவின் கோபம் சட்டென்று அடங்கிவிட்டது.

என்ன பேசுவதென்று அவன் திகைத்து நின்ற நேரம் நான் அம்மாவின் முன்னே வந்து, “ஓஒ... இதெல்லாம் செஞ்சாருங்குறதுக்காக... இந்த வயசுல அவரு கல்யாணம் பண்ணி ஒரு பொம்பளைய வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாரு... நாங்க அதை ஏத்துக்கணுமா?” என்று கேட்டேன்.

“நீங்க அதை ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்கனாலும் அது அவருக்கு ஒரு பிரச்சனையே இல்ல” என்றவர் மேலும், “இனிமே இந்த விஷயத்தைப் பத்தி நீங்க இரண்டு பேரும் பேசக் கூடாது... முக்கியமா உங்க அப்பா கூடப் பேசவோ சண்டை போடவோ கூடாது” என்று முடிவாகச் சொல்லிவிட்டு அகன்றார்.

நாங்கள் இருவரும் நம்ப முடியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள அன்பு குழப்பத்துடன், “என்னடா பேசிட்டுப் போறாங்க இவங்க?” என்று கேட்டான்.

எனக்கு அந்த நிலையிலும் சிரிப்புதான் வந்தது. எள்ளல் புன்னகையுடன், “கையாலாகத்தனம்... வேற என்ன?” என்றேன்.

இருவரும் அன்று முழுக்க அறையிலேயே அடைந்து கிடந்தோம். அன்பு படுக்கையில் விழுந்து வெகுநேரம் அழுது தீர்த்தான். எனக்கு அழுகை வரவில்லை. முன்னமே இந்த அதிர்ச்சி என்னைத் தாக்கிவிட்டதில் நான் கொஞ்சம் திடமாகவே இருந்தான்.

அன்புவிற்கு ஆறுதல் கூறி நான் தேற்ற முனைந்த போது, “அப்பா எப்படிறா இப்படியொரு காரியத்தைப் பண்ணாரு?” என்று புலம்பித் தீர்த்து ஒரு நிலைக்கு மேல் உணர்ச்சிவசப்பட்டவனாக, “இனிமே இந்த வீட்டுல நம்ம இருக்கவே கூடாது அறிவு... போயிடலாம்” என்றான்.

நான் நிதானமாக அவனைப் பார்த்து, “நம்ம ஏன் அன்பு போகணும்... நமக்கு இந்த வீட்டுல எல்லா உரிமையும் இருக்கு... நம்ம உரிமையை ஏன் நாம விட்டுக் கொடுக்கணும்” என்று வினவ,

“அப்படினா இந்தக் கர்மத்தை எல்லாம் நாம சகிச்சுக்கணுமாடா?” என்று என்னிடம் கடுப்பாகக் கேட்டான்.

“இப்போ நம்ம வீட்டை விட்டு வெளியே போனா நமக்கு என்ன சப்போர்ட் இருக்கு... படிப்பைக் கூட முடிக்காம என்ன பண்ணுவோம்னு யோசிச்சு பார்த்தியா? எல்லாத்துக்கு மேல இப்போ நாம ரோஷமா பெட்டியை எடுத்துட்டு வெளியே போனா யாருக்கு இலாபம்னு நினைக்குற? அந்தப் பொம்பளைக்கும் அவ பொண்ணுக்குதானே” என்று நான் சொன்னதைக் கேட்டுக் கொண்ட அன்புவிற்கும் என் வாதம் சரியென்று பட்டது.

பிறந்ததிலிருந்தே வசதியான வாழ்க்கைக்குப் பழகியவர்கள் நாங்கள். எல்லாவிதமான ஆடம்பரங்களையும் அந்த வயதிலேயே நாங்கள் பார்த்து அனுபவித்துவிட்டோம். இனி அதை எல்லாம் விட்டுவிட்டுப் போய் எப்படி எங்கே வாழ்வது என்ற பயம்தான் எனக்கு. ஒருவகையில் அதே பயம் அன்புவிற்கும் இருந்ததால்தான் அவன் நான் சொன்னதற்கு சம்மதித்தான்.

ஒரு வேளை அன்று அன்பு சொன்னது போல வெளியேறி இருந்தால் அப்படியொரு அவமானத்தை நான் எதிர்கொள்ள நேர்ந்திருக்காதோ என்னவோ?

ஆனால் எது நடக்க வேண்டும்... நடக்கக் கூடாது என்பதை இங்கே யார் தீர்மானிக்கிறார்கள். சம்பவங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரங்கேறிவிட, எதையும் யாரும் நிறுத்த முடிவதில்லை.

அடுத்து வந்த நாட்களில் வீட்டில் நிலுவிய இறுக்கமான சூழ்நிலை தளர தொடங்கியது. தேவிகா மெல்ல மெல்ல எங்கள் வீட்டின் பொறுப்பை தன் வசமாக்கிக் கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு எப்போதுமே வீட்டு நிர்வாகம் பொறுப்புகள் இதில் எல்லாம் பெரிதாக ஈடுபாடு இல்லை. தனக்குப் போட்டியாக ஒரு பெண் தன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு தன்னுடைய உரிமையைப் பறித்துக் கொள்கிறார் என்ற கவலையும் வருத்தமும் அவருக்குச் சற்றும் இல்லை.

எனக்கு அவரைப் பார்க்கும் போது அப்படிதான் தோன்றியது. ஆனால் உண்மையில் அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்ததோ அது அவருக்குதான் தெரியும். ஆனால் அன்பு தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் அப்பாவின் மீது வெறுப்பைக் காட்டினான்.

அப்பா அவனிடம் பேச வரும் போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போனான். எனக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும் போது கொஞ்சம் சந்தோஷமாகதான் இருந்தது.

அப்பாவிற்கு அன்புவின் மீதுதான் அதிகமான பாசம். அதிகம் என்ன? அவன் மீது மட்டும்தான் பாசம். அவர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த விலகலை உள்ளூர நான் கொண்டாடினேன்.

ஒரு வகையில் அப்பாவின் பிம்பம் உடைந்ததில் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. என்னுடைய வருத்தம் கோபமெல்லாம் அந்த நிரஞ்சனா மீதுதான். அவளைத் தினம் தினம் என் வீட்டில் பார்ப்பதுதான் எனக்கு எரிச்சலையும் கடுப்பையும் கொடுத்தது.

அதுவும் எங்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து இன்னும் சுகபோகமாக இருந்தாள். ஆடம்பரமான உடைகளை உடுத்தினாள். திட்டமிட்டே எங்கள் அப்பாவை வளைத்துப் போட்டிருப்பார்கள் என்று தோன்றியது எனக்கு.

அடிக்கடி வீட்டில் நிரஞ்சனாவை நேருக்கு நேராகப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையும். அப்படியான சந்தரப்பங்களில் அவளை எரிப்பது போல ஒரு பார்வையைப் பார்த்துவிட்டுதான் கடப்பேன்.

இப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டிருந்த நிலையில் ஒரு நாள் அன்புவும் நிரஞ்சனாவும் தோட்டத்தில் நின்று சகஜமாக உரையாடி கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்தக் காட்சியைப் பார்த்த கணம் எனக்குக் கோபமேற,

“இவ கூட எல்லாம் என்னடா பேச்சு உனக்கு?” என்று நேரடியாக சென்று அவ்விடத்தில் வைத்தே அன்புவைக் கண்டித்தேன்.

“இல்ல அறிவு... அவதான் கூப்பிட்டா நான் என்னன்னு கேட்டுட்டு இருந்தேன்” என்று அன்பு நிதானமாகப் பதிலளிக்க, எனக்குதான் தாங்கவில்லை.

“அவ கூப்பிட்டா நீ எதுக்குடா பேசுற?”

“இல்ல என்னன்னுதான்னு கேட்கலாம்னு” என்று அன்பு தயக்கமாக இழுக்க,

“முதல வா... இங்கிருந்து போலாம்” என்று நான் அன்புவின் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றதை நிரஞ்சனா வஞ்சத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

ஆமாம். அவள் கண்களில் அத்தகைய வஞ்சம் இருந்தது. அப்போது எனக்கு அது சரியாகப் புரிபடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அசட்டையாக அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டு சென்றுவிட்டேன்.

என்னுடன் அப்போது அறைக்கு வந்த அன்பு, “அவங்க அம்மா செஞ்ச தப்புக்கு அவ என்னடா பண்ணுவா பாவம்... நம்ம ஏன் அவகிட்ட கோபத்தைக் காட்டுனோம்” என்று அவளுக்கு வக்காலத்து வாங்கவும் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“நீ அவளைச் சாதாரணமா எடை போடாதே... அவ அவங்க அம்மாவுக்கு மேல இருப்பா” என்று நான் எரிச்சலுடன் மொழிய,

“உனக்கும் அவளுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா அறிவு?” என்று அன்பு யோசனையுடன் கேட்க, என் முகம் சிவந்தது.

அவள் மீது நான் கொண்ட ஈர்ப்பையும் காதலையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தையும் சொன்னால் இவன் புரிந்து கொள்வானா? நிச்சயமாகப் புரிந்து கொள்ள மாட்டான் என்றே தோன்றியது.

“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல... நீ அவகிட்ட பேசாதேனா பேசாத” என்று முடிவாகச் சொல்லிவிட்டு அகன்றுவிட, அன்பு அதற்கு பிறகு நிரஞ்சனாவிடம் பேசவில்லை. அவளாகப் பேச வந்த போதும் தவிர்த்துவிட்டான்.

அந்தக் கோபத்தை மனதில் வைத்துக் கொண்டிருந்த நிரஞ்சனா அந்தக் கோபத்தைக் காட்ட சரியான சந்தரப்பத்திற்காகக் காத்திருந்தாள். அன்று அன்பு தன் கல்லூரி நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தான்.

என்னையும் கூப்பிட்டான். ஆனால் நான் வர விருப்பமில்லை என்று சொல்லிவிட்டுத் தனியாக மாடியில் பேப்பரும் பேனாவுமாக வந்து அமர்ந்து கொண்டேன்.

அப்போதுதான் முதல் முறையாக எனக்குக் கதை எழுதுவதில் ஆர்வம் பிறந்திருந்தது. நிஜ உலகத்தில் எனக்கு ஏற்படுகின்ற மோசமான அனுபவங்களை ஏமாற்றங்களை இலகுவாக மறந்துவிட்டு கற்பனை உலகத்தில் புகுந்து கொள்ள அது ஒரு வழியாக இருந்தது.

எதிரே நிரஞ்சனா வந்து நின்றதைக் கூட நான் கவனிக்காமல் மெய்மறந்து எழுதிக் கொண்டிருக்க, “அறிவு” என்று அவள் அழைத்து என் கவனத்தைச் சிதறடித்தாள்.

அவளைப் பார்த்த கணம் அப்படியொரு வெறுப்புணர்வு எனக்குள் ஊற்றெடுக்க, “என்ன வேணும் உனக்கு?” என்று கடுகடுத்தேன்.

“என்ன பிரச்சனை உனக்கு? என்கிட்ட அன்புவைப் பேசக் கூடாதுன்னு எதுக்குச் சொல்லி வைச்சு இருக்க?” என்று கேட்டவளை எழுந்து நின்று ஏற இறங்க பார்த்து,

“அவன் எதுக்குடி உன்கிட்ட பேசணும்?” என்றேன்.

“இந்த டீ போட்டுப் பேசுற வேலை எல்லாம் வேண்டாம் அறிவு”

“அப்படிதான்டி பேசுவேன்... என்னடி பண்ணுவ? உன் வேலையைப் பார்த்துட்டுப் போடி” என்றதும் என்னை முறைத்துக் கொண்டு அவள் அங்கேயே நிற்க,

“இப்போ இங்கிருந்து போகப் போறியா இல்லையா?” என்று நான் சீற,

“முடியாது... என்னடா பண்ணுவ?” என்றாள்.

“என்னடி? வம்பிழுக்க வந்திருக்கியா?”

“நான் ஒன்னும் வம்பிழுக்க எல்லாம் வரல... நாம நார்மலான பிரதர் சிஸ்டர்ஸா இருக்கலாம்னுதான் சொல்ல வந்தேன்” என்றவள் சொன்ன நொடி என் உடலெல்லாம் தீயாக எரிந்தது.

“எங்க அப்பா உங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டா... நீ எங்களுக்கு சிஸ்டராகிடுவியா? சீ பே... உன் மூஞ்சி எல்லாம் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல” என,

“பார்க்கப் பிடிக்கலையா... பொய் சொல்லாதே... நீ என்னை சைட் அடிச்சது... லவ் பண்ணது எல்லாம் எனக்குத் தெரியும்” என்றாள்.

அந்த வார்த்தையில் எரிகுழம்பாக நான் கொதிக்க அவளோ தொடர்ந்து, “அந்தக் கோபத்தையம் கடுப்பையும்தான் நீ என்கிட்ட காண்பிக்குற... அன்புவையும் என்கிட்ட பேச விடாம பண்ற” என்றாள்.

அவளை அழுத்தமாகப் பார்த்த நான், “அப்போ என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுதான் என் கூட பழகுனியா?” என்று உக்கிர பார்வையுடன் கேட்க,

“நான் எங்கடா பழகுனேன்... நீதானேடா என் பின்னாடியே வழிஞ்சிட்டு சுத்துன” என்றவள் சொன்னதைக் கேட்டு என் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அந்தக் கணமே பளாரென்று அவளை அறைந்துவிட்டேன்.

அவள் தடுமாறி கீழே விழுந்துவிட, “எங்க அப்பா உன் வீட்டுக்கு வர்றது போறது எல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கு... நான் உன்கிட்ட எப்படி பழகனேன்னும் உனக்குத் தெரிஞ்சிருக்கு... ஆனா எல்லாம் தெரிஞ்சிருந்தும் என்கிட்ட நீ ஒரு வார்த்தை கூடச் சொல்லல இல்ல” என்று கேட்க,

அவள் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே எழுந்து நின்று, “நீ முட்டாள்த்தனமா என் மேல ஃபீலிங்ஸ் வளர்த்துகிட்டதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என்றாள்.

“அடிங்க... இன்னும் ஒரு வார்த்தை பேசுனன்னு வை... இன்னொரு கன்னமும் பேந்திரும்” என,

“எங்க அடிடா பார்ப்போம்... அடி” என்றவள் எகிறிக் கொண்டு வந்தாள். நான் யோசிக்கவே இல்லை. மீண்டும் மறுகன்னத்திலும் அறைந்துவிட அவள் முகம் கறுத்துவிட்டது.

“உன்னை என்ன பன்றன்னு பாருடா” என்றவள் சவால் விட,

“என்ன? எங்க அப்பாகிட்ட நான் உன்னை அடிச்சிட்டன்னு சொல்ல போற... அதானே... சொல்லிக்கப் போடி” என்று நான் அசட்டையாகச் சொல்லிவிட்டு அமர்ந்து மீண்டும் எழுதத் தொடங்க அவள் இறங்கிச் சென்றுவிட்டாள்.

அந்தப் பிரச்சனைக்கு பிறகு ஒரு வார்த்தை கூட எழுத முடியவில்லை. என்னுடைய கற்பனை ஊற்று மொத்தமும் வற்றிப் போக, ‘சை! வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டுப் போயிட்டா’ என்று என் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு படிக்கட்டில் இறங்கவும்,

“என்னடா காரியம் பண்ணி வைச்சு இருக்க” என்று அப்பா என் கன்னத்தில் ஓங்கி அறையவும் நான் தடுமாறிப் படியில் உருண்டு விழுந்தேன்.

அதோடு அவர் நிறுத்தாமல் தன் பெல்ட்டைக் கழற்றி என்னை சரமாரியாக அடிக்கத் தொடங்கிவிட எனக்கு வலி உயிர் போன்து.

“பப்பா வலிக்குது பா” என்று நான் கதற அவர் என் மீது இரக்கம் காட்டவே இல்லை.

“உன்னைய போய் என் புள்ளன்னு சொல்லவே அசிங்கமா இருக்கு” என்றவர் அடித்துக் கொண்டே சொல்ல அந்த நொடி சீற்றமான நான்,

“எனக்கு கூடத்தான் உங்களை அப்பான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு” என்று சொன்னேன்.

அவர் மீண்டும் பெல்டைத் தூக்கவும் அதனை அவர் கையிலிருந்து உருவித் தூக்கிப் போட்டுவிட்டு, “என்ன அடிக்க... உங்களுக்கு என்ன அருகதை இருக்கு?” என்று கேட்க, அப்பா அதிர்ச்சியாக நின்றார்.

“அறிவு என்ன பேசுற நீ?” என்று அம்மா முந்தி கொண்டு வந்து கேட்க,

“இவ்வளவு நேரம் அவர் என்னை அடிக்கும் போது சும்மாதானே நின்ன... இப்போ மட்டும் உனக்கு என்ன வந்துச்சு?” என்று அம்மாவையும் எதிர்த்து கேள்வி கேட்டேன். நான் எப்படி அவ்வளவு தைரியமாகப் பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

ஆனால் எனக்குள் அடக்கி வைத்திருந்த வலிகளும் வேதனைகளும்தான் அன்று என்னையும் அறியாமல் வெடித்து வார்த்தைகளாக வெளி வந்தன.

அப்பாவின் கண்களில் பொறிப் பறந்தது. “எவ்வளவு அசிங்கமான ஒரு காரியத்தைப் பண்ணிட்டு எப்படி பேசிட்டு இருக்கான் பாரு” என்று அம்மாவிடம் சொல்ல,

“அப்படி என்ன உங்களை விட அசிங்கமான காரியத்தை நான் பண்ணிட்டேன்?” என்று நான் திருப்பிக் கேட்க,

“பேசாதே டா பொறுக்கி நாயே” என்று உக்கிரத்துடன் அப்பா என் கன்னத்தில் மீண்டும் அறைந்துவிட்டார். அதுவும் நிரஞ்சனாவின் முன்னிலையில்...

நான் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கவும், “ரஞ்சுகிட்ட அசிங்க அசிங்கமா பேசி அவகிட்ட தப்பா நடந்துக்கப் பார்த்து இருக்க... அவ ஒத்துழைக்கலனதும் கன்னா பின்னான்னு அவளை அடிச்சிருக்க... சீ...”

”நீ எல்லாம் என்னடா ஜென்மம்... உன்னை புள்ளன்னு சொல்லிக்கவே எனக்குக் கேவலமா இருக்கு” என்று அவர் அப்போது பேசியதை எல்லாம் கேட்டு எனக்குக் கூசிப் போனது.

இப்படியொரு கேவலமான பழியையா அவள் என் மீது போட்டால் என்று திரும்பி அவளை நான் முறைக்க, “அவளை ஏன் டா முறைக்குற?” அப்பா மீண்டும் என்னை அடிக்கவும்,

இம்முறை வலியுடன், “இல்லபா... அவ பொய் சொல்றாபா” என்றேன்.

ஆனால் அவர் என்னை நம்பவில்லை. “வாயை மூடுறா” என்றார்.

அதேசமயம் அம்மா என்னைக் கலவரத்துடன் பார்த்து, “அடப்பாவி ஏன் டா இப்படி பண்ண?” என்று கேட்க, நான் நொறுங்கிப் போய்விட்டேன்.

அம்மாவிற்கு கூட என் மீது நம்பிக்கை இல்லை. இப்படியொரு கேவலமான காரியத்தை நான் செய்வேன் என்று அவருமே நம்பிவிட்டார். அதற்கு மேல் நான் என்ன பேசுவது? எப்படி நான் தப்பு செய்யவில்லை என்று புரிய வைப்பது?

தேவிகா நிரஞ்சனாவின் பின்னே நின்று அழுது கொண்டிருந்தாள். ஒரு பெண்ணின் அழுகைக்கு இருக்கிற சக்தி ஒரு ஆணின் சொல்லுக்கு இருப்பதில்லை.

என் வார்த்தைக்கு எப்போதுமே என் அப்பாவிடம் மதிப்பு இருந்ததில்லை. ஆதலால் நான் எதுவுமே பேசவில்லை. எனக்குப் பேசத் தோன்றவில்லை. நான் தப்பு செய்யவில்லை என்று அவரிடம் மன்றாடவும் எனக்கு விருப்பம் இல்லை.

என் மீது துளி கூட நம்பிக்கை இல்லாத மனிதரிடம் என்ன சொல்லியும் உபயோகம் இல்லை.

இந்த நாடகத்தின் இறுதி கட்டமாக தேவிகா, “இனிமே நானும் என் பொண்ணும் இந்த வீட்டில இருக்க மாட்டோம்” என்று சொல்ல,

“நீங்க ஏன் வீட்டை விட்டுப் போகணும்... இந்தப் பொறுக்கிதான் வீட்டை விட்டுப் போனோம்” என்ற அப்பா என் பின்னங்கழுத்தை ஆவேசமாகப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.

“ஐயய்யோ... வேணாங்க” என்று அம்மா பதறிக் கொண்டு ஓடி வர,

“இப்படியொரு புள்ள நமக்கு வேண்டவே வேண்டாம்... நீ உள்ள வா” என்று அப்பா கதவை மூடிவிட்டார். மூடிய கதவுகளைப் பார்த்த நான் ஒரு நொடி கூட அங்கே நிற்கவில்லை.

எழுந்து என் பாட்டுக்கு நடந்தேன். எவ்வளவு தூரம் நடந்தேன். எங்கே செல்கிறேன் என்று எதுவுமே தெரியாமல் நடந்தேன். ஒரு நிலைக்கு மேல் மனமும் உடலும் சோர்ந்து போக சாலையோரமாக இருந்த நடைப்பாதையில் அப்படியே அமர்ந்து கொண்டேன்.

அவ்வளவு கீழ்த்தரமான பழியை அவள் என் மீது போடுவாள் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. அவள்தான் என் மீது அப்படியொரு பழியைச் சுமத்தினால் என்றால் அதை என் பெற்றோர்களும் அப்படியே நம்பியதுதான் என்னால் தாங்க முடியவில்லை.

ஒரு வேளை இதே பழியை அவள் அன்புவின் மீது போட்டிருந்தால் அவர்கள் நம்பி இருப்பார்களா? மாட்டார்கள். நிச்சயமாக மாட்டார்கள்.

அத்தனை அதிர்ச்சிக்கும் அவமானத்திற்கும் பிறகும் நான் அழவே இல்லை. அப்படியே கல்லாக உட்கார்ந்திருந்தேன். சுயநினைவே இல்லாமல் நான் உட்கார்ந்திருக்கும் போதுதான் அன்பு வந்து என்னை உலுக்கினான்.

“எங்கெல்லாம்டா உன்னைத் தேடுறது?” என்று பதற அப்போதுதான் நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். முற்றிலுமாக இருட்டி விட்ட அந்தச் சாலையில் நான் மட்டும் தன்னந்தனியாக அந்த நடைபாதையில் அமர்ந்திருக்கிறேன் என்று புரிந்தது.

“டேய் அறிவு... எழுந்திருடா... வாடா போலாம்” என்று அவன் அழைக்கவும் நான் அசையவே இல்லை.

“நான் அந்த வீட்டுக்கு வரல” என்று ஒற்றை வரியில் பதில் சொல்ல,

“நானும் அந்த வீட்டுக்குக் கூப்பிடல... நம்ம வேற எங்கயாச்சும் போயிடலாம்” என்ற போதுதான் கொஞ்சம் உணர்வு வந்தவனாகத் திரும்பி அவன் புறம் பார்த்தேன்.

“அந்த நிரஞ்சனா லூசுதான் உன் மேல அபாண்டமா ஒரு பழியைப் போட்டு இருக்கான்னா அவ சொன்னதைப் போய் நம்பிட்டு... அப்பா உன்னை அடிச்சு அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்பி இருக்காரு... எனக்கு விஷயத்தைக் கேட்டதும் தாங்கவே முடியல... சை மனுஷனாடா அவரு” என்று அன்பு ஆவேசமாகப் பேசினான்.

அவன் பேசியதைக் கேட்டதும்தான் எனக்கு உயிரும் உணர்வும் வந்தது. அத்தனை நேரம் எனக்குள் இருந்த மனவலிகள் மொத்தமும் கரைந்து காணாமல் போய்விட்டது.

அந்த நொடியே அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு அழுதேன். இந்த உலகிலேயே அவன்தான் என்னைப் புரிந்து கொண்டே ஒரே ஜீவன் என்று தோன்றியது.

என்னை அணைத்துத் தேற்றிய அன்பு, “செத்தாலும் இனிமே அந்த வீட்டுக்கு நாம போகக் கூடாதுடா... போகவே கூடாது” என்று திடமாக சொன்னதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் கார் அந்த வீட்டு வாயிலிற்குள் நுழைந்தது.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா