மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Anbin VazhiyathuAnbin Vazhiyathu - Episode 14Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 14

Quote from monisha on October 28, 2024, 10:07 AM

14

Vengeance and revenge are two words for pain

விஸ்தாரமான தோட்டம். நீச்சல் குளம். இரண்டு மாடிகள் கொண்ட உயரமும் பிரமாண்டமுமான பங்களா. எந்த மாற்றமும் இல்லை. அப்படியேதான் இருந்தது. ஆனால் முன்பிருந்த பழைய பொலிவும் கம்பீரமும் இல்லாதது போல தோன்றியது.

இருபது வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் வசிப்பிடம் திருச்சிதான். அங்கேதான் தாத்தா தன் அக்காவின் கைப்பக்குவத்தில் மசாலா பலகாரம் போன்றவற்றை சிறியதாக வீட்டுக்கு வீடு விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

பின் அவரின் அயராத முயற்சி உழைப்பு மற்றும் விற்பனை செய்யும் திறமையாலும் அவர்களின் சிறிய வியாபாரம் ஜே ஜே மசாலா நிறுவனமாக முன்னேறியது. பின்னர் அந்த நிறுவனம் பல விதமான பதப்படுத்தப்பட்ட மசாலா பொருட்களை பேக்கெட் செய்து ஊர் நகரங்கள் தாண்டி தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கத் தொடங்கியது.

மேலும் தன் நிறுவனத்தின் பெயரைப் பாரம்பரியமான உணவு முறையின் வித்தாகப் பரவும்படி செய்தார். அதன் பின்புதான் வியாபாரம் அப்பாவின் கைக்கு மாறியது. அப்பா உணவு பொருட்களை விற்பது பேக்கெட் செய்வதோடு நிறுத்தாமல் தங்கள் நிறுவனத்தின் பெயரில் பல உணவகங்களையும் சென்னையைச் சுற்றித் திறந்து அதனையும் வெற்றிகரமாக நடத்தினார்.

அதன் பிறகுதான் ஜே ஜே நிறுவனத்தின் தலைமை இடமாக சென்னை மாறியது.

அதன் பின்புதான் அப்பா சென்னையில் இடம் வாங்கி இந்த வீட்டைக் கட்ட ஆரம்பித்தார். எங்களுடைய பத்தாவது வயதில்தான் சென்னையில் உள்ள இந்தப் பிரமாண்டமான பங்களாவிற்கு குடிபெயர்ந்திருந்தோம்.

அன்று நான் ஏதோ சினிமாக்களில் பார்க்கும் பங்களாக்களைப் பார்ப்பது போலதான் வாயைப் பிளந்து வியந்து பார்த்தேன். துள்ளிக் குதித்துக் கொண்டாடினேன். ஆனால் நிரஞ்சனா சொன்ன ஒரு கேவலமான பொய்யால் இந்த வீட்டுடனான எனக்கிருந்த உறவும் பிணைப்பும் ஒரே நொடியில் அறுத்தெறியப்பட்டுவிட்டது.

இன்று இந்த வீட்டைப் பார்க்கும் போது ஒருவித அந்நியத்தன்மைதான் எனக்கு வருகிறது. அதுவும் இப்போது இந்த வீட்டில் வசிக்கும் ஒவ்வொருவரின் மீதும் தீராத வன்மமும் கோபமும் கொண்டிருக்கிறேன் நான். அப்படி இருக்கையில் இந்த வீட்டுடன் எனக்கு என்ன உறவு இருக்க முடியும்?

கார் உள்ளே வந்து நின்றது. அந்தப் பயணத்தின் சொகுசில் மதியழகி என் தோள் மீதே சாய்ந்தபடியே உறங்கிவிட்டாள். அவளைத் தூக்கித் தோளில் கிடத்தியபடி நான் இறங்கிவிட்டு மஹாவிற்கும் கதவைத் திறந்துவிட்டேன்.

அவள் இறங்கியதும், “குட்டிமாவை நான் தூக்கிக்கிறேன்” என்று கை நீட்ட,

“வேண்டாம்” என்று மறுத்தேன். “பெட்டியெல்லாம்” என்றவள் கேட்க,

“அதெல்லாம் ட்ரைவர் எடுத்துட்டு வருவாரு மஹா... நீ வா” என்றபடி முன்னே நடக்க என் அப்பா வாயிலேயே காத்திருந்தார்.

என்னைப் பார்த்ததும் அவர் கண்களில் ஆவலும் சந்தோஷமும் மின்னியது.

நான் நடந்து வருவதற்குள், “அன்பு” என்று அவரே ஆர்வமாக முன்னே வந்து என்னை வரவேற்றார். அப்பா என்ற உறவையே வெறுக்க தொடங்கிப் பல வருடங்களாகிறது.

என் வெறுப்பை மறைத்துக் கொண்டு புன்னகைத்தேன்.

“வா அன்பு... வா ம்ம்மா” என்று மஹாவையும் என்னையும் அழைத்தவர், “என்ன பாப்பா... தூங்கிட்டாளா?” என்று சகஜமாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தார்.

நானும் அவரிடம் சகஜமாகப் பேச எண்ணி, “நீங்க எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு எப்படி இருக்கு?” என்று விசாரிக்க,

“பரவாயில்ல அன்பு” என்று புன்னகை முகமாகப் பேசினார். அன்று அன்புவின் இறப்பில் பார்த்ததை விட ஆள் பார்க்க இன்று கொஞ்சம் திடமாகதான் தோன்றினார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கபட்டு அமெரிக்காவிற்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.

அப்போதுதான் அன்புவிற்கு அவர் மீதான கோபம் மறைந்து இரக்கம் பிறந்தது. உடல் நலம் குன்றியிருந்த அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று அன்பு என்னை அழைத்தான். ஆனால் நான் மறுத்துவிட்டேன். என் கோபத்தை அத்தனை சீக்கிரத்தில் என்னால் விட்டொழிக்க முடியவில்லை.

அவன் மட்டும் நேரில் சென்று பார்த்து விசாரித்துவிட்டு வந்தான். அதன் பின்புதான் அவர்களுக்கு இடையிலான அப்பா மகன் உறவு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது.

இதெல்லாம் யோசித்துக் கொண்டே அந்த வீட்டின் வாசலைக் கடந்த போது அவர் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காட்சி கண் முன்னே நிழலாடியது.

உள்ளே செல்லாமல் அப்படியே நின்றுவிட்டேன்.

“என்ன அன்பு வா” என்றவர் அழைக்க முகப்பறையில் என்னை வரவேற்பதற்காக தேவிகாவும் நிரஞ்சனாவும் நின்றிருந்த காட்சியைப் பார்த்தேன். அவர்கள் இருவரும் என்னைப் பார்த்து இயல்பாகப் புன்னகைத்தார்கள்.

அந்தப் புன்னகை நிச்சயமாகப் பொய்யானதுதான். நான் அறிவாக வந்தாலும் சரி. அன்புவாக வந்தாலும் சரி. அவர்களுக்கு என்னுடைய வருகை சந்தோஷத்தைத் தராது.

அவர்கள் சந்தோஷத்தைப் பறிக்கவாவது நான் இந்த வீட்டிற்குள் வர வேண்டுமென்ற வன்மத்துடன்தான் உள்ளே காலடி எடுத்து வைத்தேன். உள்ளே வந்ததும்தான் மஹாவின் நினைவு வந்து திரும்பிப் பார்க்க அவள் தயக்கத்துடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அந்தப் பிரமாண்டமான பங்களா அவளுக்கு மிரட்சியை ஏற்படுத்தி இருக்கலாம் என்று யோசித்த நான், “வா மஹா” பின்னே நடந்து சென்று அவள் கரத்தைப் பிடித்து உள்ளே அழைத்து வந்து,

“என்னோட அப்பா” என்று அறிமுகம் செய்துவிட்டு நிரஞ்சனா தேவிகாவை எப்படி அறிமுகம் செய்வதென்று ஒரு நொடி யோசித்துப் பின்,

“அப்பாவோட வொய்ஃப்... அவங்க டாட்டர் நிரஞ்சனா” என்றேன்.

“அதென்ன டாட்டர்... உன் சிஸ்டர்னு சொல்லு அன்பு” என்றாள் நிரஞ்சனா. எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. மனதில் என்ன நினைத்து கொண்டு இப்படி எல்லாம் பேசுகிறாள் என்று உள்ளுர பொறுமிய போதும் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஆமா... சிஸ்... டர்” என்றேன்.

“ஹாய் மஹா” என்று சகஜமாக மஹாவிடம் கைக் குலுக்கிய நிரஞ்சனா,

“ஆமா அன்பு நீ எப்படி இருக்க? கிரி அங்கிள் நீ ரொம்ப அப்செட்டா இருக்கிறதா சொன்னாரு... இப்போ கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றியா?” என்று நிரஞ்சனா என்னிடம் அக்கறையாக விசாரித்தாள்.

இவளுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் போல. எவ்வளவு இயல்பாக நடிக்கிறாள் என்று எண்ணிய போதும் அதனைக் காட்டிக் கொள்ளாமல்,

“ஃபைன் இப்போ நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க?” என்று பதிலுக்கு விசாரித்தேன். அவளுக்குப் போட்டியாக நேஷனல் அவார்ட் அளவுக்காவது நான் நடிக்க வேண்டாமா?!

“ஹான் குட்” என்று அவள் புன்னகையுடன் சொல்ல, ‘நான் வந்துட்டேன் இல்ல... இனி பேட் தான்டி’ என்று எண்ணிக் கொண்டு திரும்பிய நான் தேவிகாவையும் பார்த்து, “எப்படி இருக்கீங்க ஆன்டி?” என்றேன்.

அவர் கண்களில் திகைப்பு. நான் பேசுவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். அதுவும் நானாகப் பேசுவேன் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டார்.

“நல்லா இருக்கேன் அன்பு” என்று அதே திகைப்புடன் பதில் சொன்னவர்,

“நீங்க காபி குடிப்பீங்க இல்ல” என்று எங்களைக் கேட்டுவிட்டு பணிப்பெண்ணிடம் காபி எடுத்து வரச் சொல்லிப் பணித்தார்.

“ஆமா உன் ஹஸ்பென்ட் ராஜேஷ் எங்கே? வீட்டுல இல்லையா?” என்று நான் நிரஞ்சனாவிடம் கேட்க, “ரூம்லதான் இருக்காரு... கூப்பிடுறேன்” என்று சென்றாள்.

“நீ உட்காரு அன்பு” என்று அப்பா என்னை அமரச் சொல்லிவிட்டு அவரும் அமர்ந்து கொள்ள, நான் மதியழகியை வாகாக என் மடியில் சாய்த்துக் கொண்டு அமர்ந்தேன்.

அதற்குள் அவள் சிணுங்கி அசைந்து விழித்துக் கொண்டாள்.

“எழுந்துட்டா போல” என்று அப்பா சொல்ல, மதிக்குட்டி மலங்க மலங்க விழித்தபடி அந்தப் பெரிய பங்களாவையும் என் எதிரே அமர்ந்திருந்த அப்பாவையும் குழப்பத்துடன் பார்த்தாள்.

“இவ பேரு மதியழகிதானே” என்று சொல்லி அப்பா, “தாத்தாகிட்ட வரீங்களா மதிக்குட்டி?” என்று கை நீட்ட,

“உஹும்” என்று அவள் இன்னும் என்னிடம் நெருக்கமாக ஒண்டிக் கொண்டாள்.

“தாத்தாதான் மதி” என்று நான் சொன்ன போதும் அவள் அவரிடம் போக மறுத்துவிட்டாள்.

“இருக்கட்டும் அன்பு... இங்கேதானே இருக்கப் போறா... பழக பழக வந்துடுவா” என்ற அப்பா மேலும்,

“நீ ஏன்மா நிற்குற... உட்காரு” என்று பின்னே பார்த்து சொல்லவும்தான் நான் மஹாவைத் திரும்பிப் பார்த்தேன். அவள் இன்னும் நின்று கொண்டிருந்தாள்.

“இல்ல இருக்கட்டும்” என்று சொல்லவும்,

“மஹா உட்காரு” என்று கொஞ்சம் அதட்டலான குரலில் சொல்லவும் அவள் அமைதியாக உட்கார்ந்து கொள்ள, மதியழகி அவளிடம் தாவிவிட்டாள். இன்னும் அவளுக்குத் தூக்கம் தெளியவில்லை.

வேலைக்காரப் பெண்மணி எங்களுக்கு காபி கோப்பைகளைப் பரிமாறிவிட்டுச் சென்ற சில நொடிகளில் நிரஞ்சனா தன் கணவன் ராஜேஷை அழைத்து வந்திருந்தாள்.

அவன் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும். இதுதான் முதல் முறை அவனை நான் நேரில் பார்ப்பது. அன்பு ஒரு முறை பார்த்துப் பேசி இருப்பதாகச் சொன்னான். ஆள் பார்க்க நல்ல சிவப்பு நிறத்தில் உயரமாகவும் வாட்டசாட்டமாகவும் இருந்தான்.

என்னைப் பார்த்த அவன் கண்களில் ஒரு வித ஏமாற்றம் கோபம் என எல்லா உணர்வுகளும் தொக்கி நின்றது. என் வருகையால் அவன் உள்ளுர காய்ந்து கொண்டிருக்கிறான் என்று நன்றாகவே தெரிந்தது.

“ஹாய் ராஜேஷ்... எப்படி இருக்கீங்க?” என்று நான் எழுந்து கைக் கொடுக்க, “நல்லா இருக்கேன் அன்பு” என்று அவனும் வேறு வழி இல்லாமல் எனக்குக் கைக் குலுக்கினான்.

“சாரி... அறிவோட டெத்துக்கு என்னால வர முடியாது போயிடுச்சு... ஒரு முக்கியமான வேலையா இலண்டன் போயிட்டேன்... வர்ற ட்ரை பண்ணேன்... டிக்கெட்ஸ் கிடைக்கல” என்று வருத்தப்படும் பாவனையில் பேசினாலும் அவன் பொய் சொல்கிறான் என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

“புரியுது... இட்ஸ் ஓகே” என்று நான் இலகுவாக எடுத்து கொண்டு தலையசைக்க அந்த சில நொடிகளில் அவன் கண்களில் மின்னி மறைந்த உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பொறாமையா கோபமா? தெரியவில்லை.

“காபி குடி அன்பு... ஆறிட போகுது” என்று சொல்லிக் கொண்டு அவன் என் எதிரே கொஞ்சம் அதிகாரத் தோரணையில் அமர்ந்தான். அந்த வீட்டில் அவனுக்கு இருக்கும் மதிப்பையும் அதிகாரத்தையும் காட்ட விழைகிறான் போல.

நான் அமைதியாக அமர்ந்து காபியைப் பருகினேன்.

“ரீஸன்ட்டா உனக்கு கல்யாணம் ஆனதா நிரு சொன்னா... இவங்கதான் உன் வொய்ஃபா” என்று அவன் ஒரு மாதிரி அலட்சியமான தொனியில் மஹாவைச் சுட்டிக் காட்டிக் கேட்க,

“ஆமா... மகாலக்ஷ்மி... பாப்பா பேர் மதியழகி” என்று நான் அவர்களை அறிமுகம் செய்விக்க,

“ஓஓ... மதியழகி உன்னோட ஸ்டெப் டாட்டர் இல்ல... ஷி இஸ் க்யூட்” என்றவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த எல்லோர் முகமும் மாற, மஹாவின் முகம் துவண்டதை நான் கவனித்தேன்.

அந்த வார்த்தை அவசியமற்றது. இருந்தும் உபயோகித்துத் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தினான்.

நான் அந்த நொடியே அவனை நக்கலாகப் பார்த்து , “எஸ்... நீங்க ஸ்டெப் சன் இன் லா... அவ ஸ்டெப் டாட்டர்” என்று குத்தலாகச் சொல்லிவிட அப்போது அவன் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே. பட்டென்று அவன் வாய் மூடிக் கொண்டது.

இதனால் அங்கே ஓர் இறுக்கமான சூழ்நிலை உருவாகிவிட அதனை மாற்ற எண்ணிய அப்பா என்னிடம், “ஆ அன்பு... உனக்கும் மஹாவுக்கும் கீழே லெஃப்ட்ல இருக்க ரூமை ரெடி பண்ணச் சொல்லி இருக்கேன்... உங்க திங்க்ஸ் எல்லாம் அங்க வைக்கச் சொல்லிட்டேன்... நீங்க கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க” என்றார்.

அவரை ஆழமாகப் பார்த்த நான், “எங்க ரூம் மேலதானே இருக்கு?” என,

“இல்ல... ரூம் கீழேதான் லெஃப்ட்ல” என்றார் மீண்டும்.

“இல்ல... நான் சொல்றது... நாங்க தங்கி இருந்த ரூம்... நானும் அன்ப்ப்ப்ப்” என்று வந்த வார்த்தையைத் தொண்டை குழியிலேயே விழுங்கிக் கொண்டு, “அறிவும் தங்கி இருந்த ரூம்” என,

“இல்ல அன்பு... கீழே இருக்க ரூமும் நல்ல வசதியாதான் இருக்கும்” என்றார் அப்பா.

“இல்ல... எனக்கு அந்த ரூம்தான் வேணும்... நாங்க இருந்த ரூம்” என்றதும் அப்பா திருதிருவென்று விழித்துக் கொண்டே நிரஞ்சனாவைப் பார்த்தார்.

உடனே நிரஞ்சனா, “அந்த ரூம்லதான் இப்போ நானும் ராஜேஷும் இருக்கோம் அன்பு” என்றாள்.

“சாரி ரஞ்சு... எனக்கு அந்த ரூம்தான் வேணும்” என்று நான் அழுத்திச் சொல்ல யார் முகத்திலும் ஈயாடவில்லை.

நிரஞ்சனா அப்பாவையும் அப்பா நிரஞ்சனாவையும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

தேவிகா இடையில் வந்து, “மாப்பிளையும் ரஞ்சுவும் அந்த ரூம்ல தங்கி இருக்கும் போது” என்று இழுக்க,

அப்போது மஹா மெல்லிய குரலில், “நாம கீழேயே இருந்துக்கலாமே அன்பு” என்று என் காதில் ஓதினாள்.

நான் அவளைக் கண்டு கொள்ளாமல் என் அப்பாவைத் திடமாகப் பார்த்து, “அப்பா... எனக்கு மேலே இருக்க எங்க ரூம் வேணும்... அது என்னோட ரூம்... எங்களோட ரூம்... எனக்கும் அறிவுக்கும் அந்த ரூம்ல நிறைய மெமரீஸ் இருக்கு... ஸோ” என்று நிறுத்தியதும் அவர் தலைகுனிந்து யோசித்தார். பின் நிரஞ்சனாவை நிமிர்ந்து பார்த்து,

“ரஞ்சு... நீயும் ராஜேஷும் கீழே இருக்க ரூம்ல உங்க திங்க்ஸ் எல்லாம் ஷிஃப்ட் பண்ணிக்கோங்களேன்” என,

“வாட்?” என்று ராஜேஷ் அதிர்ந்து எழுந்தான். அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.

ஏதோ இரசாபாசமாக நடக்கப் போகிறது என்று நான் எண்ணிக் கொண்டிருக்கையில் நிரஞ்சனா கணவன் கையைப் பிடித்து,

“இட்ஸ் ஓகே ராஜி... நாம கீழே இருந்துக்கலாமே... அதுவும் பெரிய ரூம்தானே... அதுல என்ன இருக்கு?” என்று சாமர்த்தியமாகச் சமாளித்தாள்.

ராஜேஷின் முகம் கடுகடுத்த போதும் மனைவியை எதிர்த்து அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சற்று முன்பு அவன் காட்டிய அதிகாரத் திமிரெல்லாம் போலித்தனமானது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

ஒரு நொடியில் அவன் மதிப்பெல்லாம் காற்றில் சரியும் சீட்டுக்கட்டைப் போலப் பொலபொலவென்று உதிர்ந்து போய்விட்டதில் அவமானம் தாங்காமல் அவன் விறுவிறுவென்று மாடிக்குச் சென்றுவிட்டான்.

தேவிகாவின் முகமும் இருளடர்ந்து போனது.

நிரஞ்சனா தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சாமர்த்தியமாக மறைத்து கொண்டு, “ஓகே அன்பு... நான் ஒரு ஒன் ஹவர்ல உனக்கு ரூமை ஷிஃப்ட் பண்ணிக் கொடுத்துடுறேன்” என்று சொல்லிவிட்டு அவளும் மேலே சென்றாள்.

“ஏன் அன்பு இப்படி எல்லாம் பண்றீங்க? நாம கீழே இருக்க ரூம்லயே இருந்தாத்தான் என்ன?” என்று மஹா மீண்டும் என் காதிற்கு அருகே ஓத நான் அவளைப் பொருட்படுத்தாமல் மதியழகியிடம்,

“மதிக்குட்டி... பின்னாடி பெரிய கார்டன் இருக்கு... நாம சுத்திப் பார்த்துட்டு வரலாம் வர்றியா?” என்று எழுந்து நின்று கை நீட்டினேன். அவள் ஒரே தாவலாக என்னிடம் வந்துவிட,

“நாங்க பின்னாடிப் போயிட்டு வரோம் பா” என்று அப்பாவிடம் சொல்லி விட்டு நகர்ந்துவிட்டேன்.

“அன்பு” என்று மஹாவின் அழைப்பைக் கண்டும் காணாமல் நான் மதியழகியைத் தூக்கிக் கொண்டு பின்னிருந்து தோட்டத்திற்குள் புகுந்துவிட்டேன்.

மாலை நேரத்து சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது. தோட்டத்திற்குள் நடக்கும் போது மனதில் பழைய நினைவுகள் அலைக்கழித்தது. சிரமப்பட்டு என் எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

பச்சைப் புல்தரைகளும் பூச்செடிகளும் வண்ண வண்ண நிறங்களில் பராமறிக்கப்பட்ட குரோட்டன் செடிகளும் என்று அந்தத் தோட்டம் அழகாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. பார்க்க இரசனையாக இருந்தது.

மதியழகி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, “சூப்பரா இருக்கு ப்பா” தோட்டத்தின் பசுமையிலும் அழகிலும் இலயிக்க தொடங்கிவிட்டாள்.

அங்கிருந்த ஊஞ்சலில் அவளை அமர்த்தி நான் ஆட்டிக் கொண்டிருக்கும் போதே, “அன்பப்பா... தண்ணி” என்று உற்சாகமாகக் கைக் காட்ட,

“அது ஸ்விம்மிங் பூல் மதி” என்றேன்.

“ஸிம்மிங் பூல்” என்று குதுகலமாக அதனைக் காட்டி, “நாம தண்ணில குதிச்சு விளையாடலாம் பா” என்றாள்.

“விளையாடலாமே” என்று நான் சொல்லவும்.

“விளையாடுவீங்க... விளையாடுவீங்க... அப்புறம் இரண்டு பேருக்கும் உதைதான் கொடுப்பேன்” என்று மஹா அதட்டிக் கொண்டே எங்கள் முன்னே வந்து நின்றாள்.

“இப்போ ஏன் நீ டென்ஷனாகுற?” என்று நான் அசட்டையாகக் கேட்க,

“ஏன் டென்ஷனாகுறேனா... நைட்டெல்லாம் உடம்பு சரி இல்லாம அவ என்ன பாடுபடுத்துனா நம்மல... மறந்துட்டீங்களா?” என்று கடுகடுத்தாள்.

“ஆமா மதிக்குட்டி... இன்னைக்கு வேண்டாம்... நாம நாளைக்கு வந்து குளிப்போம்” என்றேன்.

“எனக்கு இன்னைக்கே குளிக்கணும்? இன்னைக்கே குளிக்கணும்” என்று அவள் அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘இவ அவ்வளவு சீக்கிரம் அடங்க மாட்டேளே’ என்ற கலவரத்துடன் நான் பார்க்க,

“எல்லாம் உங்களாலதான்... உங்களை யார் இப்போ இங்க கூட்டிட்டு வரச் சொன்னது... அதுவும் பொழுது போயிடுச்சு... இருட்டிட்டு வருது” என்ற மஹா முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

“நான் சும்மா காண்பிக்கலாம்னுதான் கூட்டிட்டு வந்தேன்... ஸிவிம்மிங் பூல் பத்தி நான் யோசிக்கவே இல்ல” என்று நான் பவ்வியமாகப் பதில் சொல்ல,

“அப்போ நீங்களே உங்க பொண்ணைச் சமாதானப்படுத்துங்க” என்றவள் சொல்லவும் நான் மதிக்குட்டியைப் பாவமாகப் பார்த்து,

“அப்பா... சொன்னா கேட்க மாட்டியா மதி?” என்று நான் கெஞ்ச,

“எனக்குக் குளிக்கணும்” என்று அவள் பிடித்தப் பிடியில் நிற்க, நான் இப்போது மஹாவைப் பாவமாகப் பார்த்தேன்.

மஹா உடனே, “நீ போய் இப்போ தண்ணில குளிச்ச... அம்மா உன்னை இங்கேயே விட்டுட்டுப் போயிடுவேன்... போயிடட்டுமா?” என்று மிரட்டினாள். மதிக்குட்டியின் முகம் சுருங்கிவிட, “நான் போறேன்... போ” என்று மஹா முன்னே செல்லவும்,

“வேணாம் வேணாம்... நான் குளிக்கல” என்று மதிக்குட்டி ஓடிப் போய் மஹாவின் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

“சரி சரி நானும் போகல... நீ அப்பா இல்லாம அந்தத் தண்ணிக்கிட்ட எல்லாம் போகக் கூடாது... அது ரொம்ப பெரிய குளம்” என்று மகளிடம் கீழே அமர்ந்த வாக்கில் அறிவுரை கூற,

“ஆமாம் மதி... அப்புறமா உடம்பு சரியானதும் நான் உன்னைக் குளிக்க வைக்கிறேன்” என்றேன் நானும்.

“நீங்களும் இனிமே பாப்பாவை இங்க கூட்டிட்டு வந்தா... அவளைக் கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க... அவ சேட்டையைப் பத்தி தெரியும் இல்ல உங்களுக்கு” என்று மஹா என்னிடமும் சொல்ல,

“சரி சரி பார்த்துக்கிறேன்... ஆமா நீ ஏன் ரொம்ப பயந்த மாதிரி இருக்கே?” என்று நான் அவளிடம் கேட்க,

“எனக்கு என்னவோ இங்க வந்ததுல இருந்தே ரொம்ப பயமாத்தான் இருக்கு அன்பு” எனறாள்.

“இந்த இடம் மனுஷங்க எல்லாம் புதுசா இருக்குறதால உனக்கு அப்படி இருக்கும்... பழக பழக சரியாயிடும் மஹா” என்று நான் சொல்ல,

“இந்த இடம், மனுஷங்க, இவங்கள பார்த்து எல்லாம் கொஞ்சம் பயமா இருக்குதான்... ஆனா இப்போ உங்களைப் பார்த்துதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றாள்.

“என்னைப் பார்த்தா?”

“ஆமா உங்களைப் பார்த்துதான்” என்று அழுத்தமாகச் சொல்ல நான் அவளைப் புரியாமல் பார்த்தேன்.

மஹா மேலும், “நான் பார்த்துப் பழகி காதலிச்ச அன்புவா நீங்கன்னு எனக்கு இப்போ சந்தேகமா இருக்கு... எல்லோர்கிட்டயும் அன்பா இருக்கணும் விட்டுகொடுக்கணும்னு சொல்ற நீங்களா ஒரு சாதாரண ரூமுக்காகப் பிடிவாதம் பிடிக்குறீங்க.

நீங்க அவங்க கிட்ட பேசுன விதத்தைப் பார்த்தா உங்களுக்கு அவங்க யார் மேலயும் எந்தப் பிடிப்பும் இல்லன்னு எனக்குத் தோணுது... அப்படி இருக்கும் போது நம்ம ஏன் இந்த வீட்டுக்கு வந்தோம்? யாருக்காக வந்தோம்? எதுக்காக வந்தோம்? எனக்குப் புரியல” என்று படபடவெனக் கேட்க, என்னால் பதில் பேச முடியவில்லை.

‘உன்னால எப்பவுமே அன்புவா இருக்கவே முடியாதுன்னு’ அன்று அவன் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

“ஆனா நீங்க யாருக்குமே அடங்க மாட்டீங்க போல” என்று குத்தலாகப் பார்த்தாள். நான் பேசாமல் முன்னே நடக்க,

“நீங்க செய்றது சரி இல்ல அன்பு... நாம கீழே இருக்க ரூம்லயே தங்கிக்கலாம்தானே” என்றாள்.

நான் அவள் புறம் திரும்பி வந்து, “அது என் ரூம்... நான் ஏன் அதை விட்டுக் கொடுக்கணும்” என்று கேட்க,

“நீங்க இப்படி பேசுறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு! எல்லோர்கிட்டயும் அன்பா இருக்கணும் விட்டுக் கொடுக்கணும்னுதானே நீங்க எப்பவும் பேசுவீங்க... இது என்ன இப்படி பேசுறீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க பேசுனதுக்கும் இப்போ உங்க நடவடிக்கைக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு” என்றாள்.

Cancel “சூலி” புத்தம் புது நாவல்… புது களம்… புது தளம்… “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படுகிறது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா