மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Anbin Vazhiyathu (Rerun)Anbin Vazhiyathu - Episode 21Post ReplyPost Reply: Anbin Vazhiyathu - Episode 21

Quote from monisha on November 10, 2024, 8:31 PM

21

Everything is fair in love and war

மஹா கருத்தரித்தச் செய்தி ஏற்படுத்திய சந்தோஷ உணர்வைத் தொடர்ந்தார் போல நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன. எங்கள் மசாலா மற்றும் இதர உணவுகளின் ஒட்டுமொத்தமான விளம்பரப் படம் தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பட்டு சில நாட்களில் அது மக்களிடம் பெரியளவில் பேசப்பட்டது.

அந்த விளம்பரப் படத்தின் பிரதான நோக்கம் நாங்கள் உற்பத்திச் செய்யும் உணவுப் பொருட்களின் தரத்தைக் காட்டுவதுதான். நான் நினைத்ததுப் போலவே அந்த விளம்பரம் பிரபலமானதோடு எங்கள் பொருட்களின் விற்பனையும் அடுத்த ஒரு மாதத்தில் முப்பது சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்தது.

அவற்றுடன் கையை விட்டுபோன மலேசியா டீல் மீண்டும் எங்களைத் தேடி வந்திருந்தது. விஷயத்தைக் கேட்டதும் அப்பா உற்சாகமானார். என்னைக் கட்டியணைத்து வாழ்த்தியதோடு, “இதைப் பெருசா செலபிரெட் பண்ணனும் அறிவு” என்றதும் நான் அவரை முறைக்க,

“சரி சரி அன்பு” என்றார்.

நான் அதன் பின், “எதுக்கு... செல்பிரேஷன் அதெல்லாம் வேண்டாம்” என்றேன்.

“எல்லோரையும் கூப்பிட்டுக் கண்டிப்பா பண்ணனும்... நீ பொறுப்பேத்துக்கிட்ட பிறகு இப்படியொரு கெட் டு கெதர் வைக்கவே இல்ல... ஸோ கண்டிப்பா நம்ம மத்த பிரான்ச் மேனேஜர்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு ஜே ஜே பேலஸ்ல ஒரு பார்ட்டி மாதிரி அரேஞ் பண்ணிடலாம்” என்றார்.

நான் யோசனையாக அவரைப் பார்க்க, “வைக்கலாம் அன்பு... நீயும் எல்லோரையும் நேர்ல மீட் பண்ண மாதிரி இருக்கும்... அவங்களுக்கும் உன்னை இன்ட்ரோ கொடுத்த மாதிரி இருக்கும்” என, அதன் பின் நான் மறுக்கவில்லை.

அடுத்த வாரத்திலேயே அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாகச் செய்யபட்டன. சந்த்ரூ அத்தனைக்கும் பொறுப்பேற்று செய்து முடித்தான். அப்பா சொன்னது போல அந்தச் சந்திப்பின் முதல் கட்டக் கொண்டாட்டமாக சென்னை கிளையில் ஊழியர்களுடன் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்பா சொன்னது போல அது எனக்கும் மற்ற கிளையின் தலைமை பொறுப்பாளர்களுக்குமான அறிமுகப்படலமாகவும் அமைந்தது. காலையில் நடந்த விழாவில் அப்பாவுடன் மஹா மதியழகியும் இணைந்து கலந்து கொண்டனர்.

அன்று ஊழியர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டதில் அனைத்துமே மகிழிச்சியாக அதேநேரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவும் முடிந்திருந்தது. அதேசமயம் அன்றைய இரவு ஜே ஜே பேலஸில் முக்கியமான பெரும் வியாபார புள்ளிகளுடன் பெருவிருந்து ஆடம்பரமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த விருந்தில் நானும் அப்பாவும் மட்டும் கலந்து கொண்டோம். அங்கு வந்திருந்த அனைவருடனும் அப்பா என்னைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார்.

பார்ட்டி தொடங்கி எல்லோரும் மது அருந்தினார்கள். நான் முடிந்தவரை என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றேன். மது அருந்தும் கூட்டத்தைத் தவிர்த்து விட்டு விலகி வந்த போதிலும் சபலம் யாரை விட்டது. ஏற்கனவே எனக்கு மதுப்பழக்கம் உண்டு.

ஆனால் அன்புவாக வேடம் தரித்தப் பிறகு அந்தப் பழக்கத்தை முற்றிலும் நிறுத்தி வைத்திருந்தேன். இன்றைய இந்தச் சூழ்நிலை என்னுடைய மனஉறுதியை அசைத்துப் பார்க்க,

“கம்மான் அன்பு” என்று அவர்கள் மது கோப்பையை நீட்டிய போது என்னால் மறுக்க முடியவில்லை.

சில கோப்பைகளை உள்ளே தள்ளிய பிறகுதான் நான் என் நிலை தப்புக்கிறேன் என்று புரிந்த போதும் அந்தப் போதை நிலையை நான் இரசித்தேன். வெகுநாளைக்குப் பிறகான அந்த உணர்வு எனக்குப் பரவசம் அளித்தது.

பார்ட்டி முடிந்து அனைவரும் களைந்து செல்லவும் என்னருகே வந்த அப்பா, “என்னடா குடிச்சியா?” என்று கேட்க, அவரைக் குழப்பமாக நிமிர்ந்து பார்த்தேன்.

“அறிவு இருக்காடா உனக்கு?” என்று அப்பா கடிந்து கொள்ள அந்தக் கேள்வி எனக்குச் சிரிப்பை வரவழைத்துவிட்டது.

“அறிவுக்கிட்டயே அறிவு இருக்கானு கேட்குறீங்களா?” என்று நக்கலாகக் கேட்டு நான் சத்தமாகச் சிரிக்க,

“டேய் டேய்” என்று அப்பா என் கையைப் பிடித்து ஓரமாக இழுத்து வந்து,

“என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா... உனக்கு அன்பு குடிக்க மாட்டான்னு தெரியாதாடா” என்று கடுப்புடன் கேட்டார்.

“இங்க வந்தவங்க யாருக்கும் அன்புவையே தெரியாதுதானே” என்று நான் சொல்ல,

“கிரி வந்திருந்தான்... அவன் உன்னை இந்தக் கோலத்துல பார்த்து இருந்தான்னா?” என்று டென்ஷனாகக் கேட்டவர், “நல்ல வேளை அவன் சீக்கிரம் கிளம்பிட்டான்” என்றார்.

அவர் பேசுவது எல்லாம் என் செவியை எட்டிய போதும் மூளையில் முழுவதுமாகச் சென்று சேரவில்லை. ஒரு நாள் குடித்தால் என்ன தெய்வ குத்தமாகிவிடுமா என்ன?

அப்பா மேலும், “இப்படியே நீ வீட்டுக்கு வர வேண்டாம்... மஹா உன்னை இந்தக் கோலத்துல பார்த்தா ஏதாவது பிரச்சனையாகிடும்... அதனால இன்னைக்கு நீ நம்ம ஹோட்டல் ரூம்லயே ஸ்டே பண்ணிக்கோ” என,

“நோ நோ... நான் ஹோட்டல் ரூம்ல எல்லாம் ஸ்டே பண்ண மாட்டேன்... எனக்கு மஹா இல்லாம தூக்கம் வராது... நான் வீட்டுக்குப் போகணும்” என்று எழுந்து கொள்ள முற்பட்ட போது பூமி வேகமாகச் சுற்றியது.

அதன் பின் எனக்கு என்ன நடந்தது நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. அப்பா ஏதோ சொல்கிறார் என்று அவர் வாயசைப்பை வைத்து கணித்த போதும் ஒன்றுமே புரியவில்லை. செவிடாகிவிட்டது போலவும் ஏதோ ஊமைப்படம் பார்ப்பது போலவும் இருந்தது.

யாரோ என்னை இழுத்துக் கொண்டு போனர்களோ அல்லது கூட்டிக் கொண்டு போனார்களோ?

ஆனால் அடுத்த சில நிமிடத்தில் நான் படுக்கையில் மல்லாந்து கிடந்தேன்.

அதன் பின் மெல்ல மெல்ல காட்சிகளும் மறைந்துவிட்டன. உறங்கிவிட்டேனா மயங்கிவிட்டேனா என்று எதுவுமே தெரியவில்லை. சட்டென்று விழப்பு வந்த போதுதான் நான் எங்கேயோ பழக்கமில்லாத இடத்தில் படுத்திருக்கிறேன் என்று விளங்கியது.

மெல்ல அது ஹோட்டல் அறை என்று புரியவும் அப்பா இரவு பேசியதெல்லாம் நினைவு வர என் செல்பேசியைப் பார்த்தேன்.

நேரம் காலை பதினொன்று என்று காட்டியது. கூடவே மஹாவின் சில ஏற்கப்படாத அழைப்புகள்.

‘என்ன பண்ணி வைச்சு இருக்கேன் நான்... அறிவுன்னு பேருதான்... ஆனா எனக்கு அறிவே இல்ல’ என்று என்னை நானே கடிந்து கொண்டு தலையிலடித்துக் கொண்ட போது தலை பாரமாக அழுத்திப் பிடித்தது.

குளியலறை சென்று காலை கடன்கள் முடித்து போதையும் களைப்பும் தீரக் குளித்துவிட்டுத் திரும்பிய போது நான் ஆர்டர் செய்த காபியும் காலை உணவும் வந்திருந்தது.

காலை உணவை முடித்துவிட்டு பின் காபியை அருந்தி கொண்டே மஹாவிற்கு அழைத்தேன். அவள் எதுவும் ஏடாகுடமாகக் கேள்வி கேட்பாளோ என்று பயந்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

“மதி ஸ்கூலுக்குப் போயிட்டாளா?” என்று இயல்பாக உரையாடினேன்.

“ஆன் போயிட்டா” என்றாள்.

“சரி... நான் அப்படியே ஆஃபிஸ் போயிட்டு... ஈவினிங் வரேன்” என, அவளும் சரி என்றாள்.

அதன் பின் அப்பாவிற்கு அழைத்தேன். அவர் கோபித்துக் கொள்ளாவிட்டாலும் கொஞ்சம் அக்கறையுடன் பேசினார்.

“இனிமே இப்படி கேர்லெஸா இருக்காதடா” என்றவர் சொல்ல,

“சரிபா... நான் மஹாகிட்ட பேசிட்டேன்... ஆஃபிஸ் போயிட்டு ஈவினிங் வந்துடுறேன்” என்றேன்.

அதன் பின் உடையணிந்து என் தோற்றத்தைச் சீர் செய்து கொண்டு அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கே நான் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

அனுஷயா வந்திருந்தாள். ‘இவ எங்க இங்க வந்தா?’ என்று மனதில் நினைத்தப் போதும் என் எண்ணத்தைக் காட்டிக் கொள்ளாமல்,

“வா அனு” என்று அவளை இயல்பாக வரவேற்று என் அலுவலக அறைக்குள் அழைத்து வந்தேன்.

“காபி கூல்ட்ரிங்ஸ் என்ன குடிக்குற?” என்று விசாரிக்க,

“இல்ல இப்பதான் காபி குடிச்சேன்... உன் பி ஏ கொடுத்தாரு” என்றாள். அவள் முகம் இறுகியிருந்தது. எதற்கு வந்திருப்பாள்? யோசித்துக் கொண்டே,

“ஓ... ஒகே... ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருந்தியா அனு?” என்று கேட்கவும்,

“ஆமா ரொம்ப நேரமா... ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட் ஆஃபிஸ் வர” என்றவள் பதிலுக்கு என்னைக் கேட்க,

“நேத்து ஒரு முக்கியமான ஆஃபிஸ் பார்ட்டி... அதான் இன்னைக்கு எழுந்திருச்சு கிளம்பி வர லேட்டாகிடுச்சு” என்று நான் கூற,

“போதை தெளிஞ்சு எழுந்து வர லேட்டாகிச்சுன்னு சொல்லு” என்றவள் நக்கலாகச் சொன்னாலும் அவள் கண்கள் என்னை மிரட்டியது.

என் பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல், “அவாயிட் பண்ண முடியாம கொஞ்சமா குடிச்சேன்... பிஸ்னஸ் லைன்ல வரும் போது இதெல்லாம் சகஜம்தானே” என்று நான் சூழ்நிலையைச் சமாளிக்க முற்பட்டேன்.

“சகஜம்தான்... வேற வழி இல்லாம கொஞ்சமா குடிச்சு இருந்தா சகஜம்தான்... ஆனா நீ பரம்பரை குடிகாரன் மாதிரி இல்ல குடிச்ச” என்றவள் மேலும் தன் செல்பேசி எடுத்து,

“ஸீ திஸ்” என்று நான் குடிக்கும் ஒரு காணொளியைக் காட்டினாள்.

‘இவ பார்ட்டிக்கு வந்தாளா... சை! எல்லாம் என்னோட முட்டாள்தனம்... கொஞ்சம் கண்டிரோலா இருந்து தொலைச்சிருக்கலாம்’ என்று என் மீதே எனக்கு கடுப்பும் கோபமும் வந்தது.

இப்போதைக்கு இவளைச் சமாளிக்க வேண்டுமென்று எண்ணி, “ஃபர்ஸ்ட் டைம்... கன்ட்ரோல் இல்லாம போயிடுச்சு அனு... நானே எதிர்பார்க்கல” என்று இலகுவாகவே பேச,

“என்ன ஒரு நடிப்பு... பிச்சி ஒதறடா டேய்” என்றாள்.

உள்ளுர எனக்கு நடுங்க ஆரம்பித்தது. அவள் தொடர்ந்து, “நீ கதை எழுதுறவன் இல்ல... அதான் உனக்கு நடிப்பும் சர்வ சாதாரணமா வருதுன்னு நினைக்குறேன்” என, எனக்கு கதிகலங்கியது.

ஆனால் காட்டிக் கொள்ளாமல், “என்ன பேசிட்டு இருக்க அனு நீ?” என்று புரிந்தும் புரியாதவன் போலப் பேசினேன்.

“நான் என்ன பேசிட்டு இருக்கேன்னு உனக்குச் சத்தியமா புரியலனு சொல்லு” என்றவள் அழுத்திக் கேட்க,

“எனக்கு சத்தியமா புரியல” என்றேன்.

“ஆனா எனக்குப் புரிஞ்சிடுச்சு மிஸ்டர் அறிவு... இத்தனை நாளா எங்களை எல்லாம் எவ்வளவு தூரம் முட்டாளாக்கி இருக்கன்னு புரிஞ்சிடுச்சு” என்றவள் இறுதியாகச் சொன்ன போது என் இதயம் அதிவேகமாகப் படபடத்தது.

கிரி அங்கிளின் அலுவலகத்தில் அட்மினாக அன்பு கொஞ்ச நாட்கள் வேலை பார்த்தான். அப்போதுதான் அனுவுடன் அன்புவிற்கு நட்பும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது.

அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்த போது அனுதான் வீட்டிற்கு வந்து உடனிருந்து பார்த்துக் கொண்டாள். நான் தெருவோரங்களில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து என்னைச் சிலமுறைகள் முறைத்திருக்கிறாள். நிறைய நேரங்களில் நானும் பிரேமியும் இணைந்து செல்வதையும் பார்த்திருக்கிறாள். என்னைப் பற்றி அன்புவிடம் ஏடாகுடமாக வத்திவைத்து சண்டை மூட்டி விட்டிருக்கிறாள்.

அந்தக் கோபத்தில் குடித்துவிட்டு இவளிடம் ஒருமுறை போதையில் சண்டைக்கு வேறு சென்றிருக்கிறேன். அவளைப் பொறுத்தவரை நான் அப்பட்டமான பொறுக்கி.

அதேநேரம் அவளின் சாமர்த்தியத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஒருமுறை கூட என்னை அன்பு என்று இவள் தவறாக விளித்ததே இல்லை.

உஹும். இவளைச் சமாளிப்பதும் சமாதானம் செய்வதும் சாதாரண காரியம் இல்லை என்று தெரிந்த போதும் சுலபத்தில் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று எண்ணி,

“நீ ஏதோ குழப்பத்துல பேசிட்டு இருக்க அனு” என்றேன் அதே நிதானத்துடன்.

அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன. “டேய்... நான் கண்டுபிடிச்சிட்டேன்... இனிமேயும் நடிச்சு ஏமாத்தப் பார்க்காதே... நீ அறிவுதான்டா... எனக்கு நல்லா தெரியும்” என்றாள் தெளிவாக.

“அறிவா? நானா?... என்ன பேசுற அனு நீ” என்று நான் குழம்பவும் அவள் முகம் கோபமாக மாறியது.

“நீ ஒத்துக்க மாட்ட?” என்றவள் மேலும் கீழுமாக என்னைப் பார்த்து, “சரி... நீ அன்புதானே? அந்த பிரேமிக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்?” என்று முறைப்புடன் கேட்டாள்.

“பிரேமியை ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன்... பாவமா இருந்துச்சு... ஆஃபிஸ்ல வேலை போட்டுக் கொடுத்தேன்... இதுல என்ன தப்பு இருக்கு அனு” என்று நான் சாதாரணமாகக் கேட்க,

“தப்பே இல்ல... ஆனா பைக்கை கணேஷ் கிட்ட கொடுத்துட்டு... ஏன் சர்வீஸ் விட்டிருந்தேன்னு பொய் சொன்ன?” என்று அவள் கேட்ட போது எனக்கு பதட்டம் அதிகரித்தது.

இவள் அவசரமாக முடிவெடுத்துவிட்டு இங்கே வந்து நிற்கவில்லை. தீர விசாரித்துப் பின்னரே என் முன்னே வந்து நிற்கிறாள்.

ஆனாலும் அவ்வளவு சீக்கிரம் இவளிடம் சரண்டராகிவிடக் கூடாது. எவ்வளவு தூரம் சமாளிக்க முடிகிறது என்று பார்ப்போம் என்று என் நடிப்பைத் தீவிரமாகத் தொடர்ந்தேன்.

“கணேஷ் கிட்ட கொடுத்ததைச் சொல்லலங்குறது எல்லாம் ஒரு தப்பா... ஹெல்பா கேட்டான்... கொடுத்தேன்... அதை எல்லார் கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நீயே சொல்லு” என்றதும்,

“கிளவர்... நல்லா சமாளிக்குற... அப்போ நைட்டே மார்ச்சுவரி போனதுக்கும் ஏதாவது கதை டிசைன் பண்ணி வைச்சு இருப்ப இல்ல... அதையும் சொல்லு... கேட்குறேன்” என்றவள் கேட்டு வைக்க எனக்குத் தூக்கிவாரி போட்டது. சில நொடிகள் நான் மௌனமாக அமர்ந்துவிட்டேன்.

“என்னடா சைலன்டாகிட்ட... சமாளிக்க முடியலயா?”

அவளை நிதானமாக நிமிர்ந்து பார்த்து, “நீ நினைக்குற மாதிரி இல்ல அனு... நைட்டு நான் போனேன்தான்... விஷயம் தெரிஞ்சு அவன் உடம்பை அந்த நிலையில பார்த்த போது என்னால தாங்க முடியல... அழுதேன்... வேதனைப்பட்டேன்... விஷயத்தை எல்லோர்கிட்டயும் சொல்லலாம்னு நினைச்ச போதுதான் மஹாவோட முகம் என் ஞாபகத்துக்கு வந்துது.”

”கல்யாணம்னு எவ்வளவு சந்தோஷமா இருந்தா... அவ ஆசையை சந்தோஷத்தை சிதைக்கணுமான்னு தோனுச்சு... செத்துப் போனவன் போயிட்டான்... ஆனா மஹா மதி அவங்களுக்குக் கிடைக்கப் போற அந்த சந்தோஷம்... வாழ்க்கை... அதை ஏன் குலைக்கணும்... அவசியம் இல்லன்னு தோனுச்சு...”

”அறிவும் கூட என் முடிவை நிச்சயம் புரிஞ்சிட்டு இருப்பான்னு நினைச்சேன்... என் வலியை வேதனையை எனக்குள்ள புதைச்சுக்கிட்டேன்... அந்த நிமிஷம் நான் மஹாவைப் பத்தியும் மதிக்குட்டியைப் பத்தியும்தான் யோசிச்சேன்”

”அறிவும் என்னை விட்டுப் போயிட்ட பிறகு அவங்க மட்டும்தானே எனக்குன்னு தோனுச்சு... உனக்கு என் முடிவு உச்சபட்ச சுயநலமா தெரியலாம்... எனக்கு அதுதான் நியாயம்னு பட்டுச்சு” என்று நான் சோகத்துடன் பேசி முடிக்கும் போது அனு திகைப்புடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் காதிலிருந்து ப்ளூடூத்தைச் சரி செய்து, “அங்கிள் ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளுங்க... இவன் பொய் சொல்றான்... இவனை நம்பாதீங்க” என்றாள்.

எனக்குப் புரிந்துவிட்டது. ‘இவள் என் அப்பாவைத் தன் செல்பேசி இணைப்பில் வைத்துக் கொண்டுதான் என்னிடம் இவ்வளவு நேரம் பேசி இருக்கிறாள். என்னைத் தூண்டிவிட்டு என் வாயிலிருந்தே உண்மையை வரவழைக்கவும் முயன்றிருக்கிறாள். புத்திசாலிதான். ஆனால் நான் முட்டாள் இல்லை என்று இவளுக்கு யார் சொல்வது?’

அவள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டுப் பின் என் புறம் திரும்பி, “நீ நடிக்குறடா சத்தியமா நடிக்குற... எனக்குத் தெரியும்... எனக்கு நிச்சயமா தெரியும்” என்றாள்.

“நீ எதுனால இப்படி குழம்பிப் போய் பேசிட்டு இருக்கன்னு எனக்கு புரியல அனு... ஆனா நீ நினைக்குற மாதிரி இல்ல... நான் அன்புதான்” என,

“பொய் பொய்... நீ அன்பு மாதிரி இருக்குறதால அன்புவா ஆகிட முடியாது... ஆரம்பத்துல இருந்தே எனக்கு உன் மேல சந்தேகம் இருந்ததுதான்... ஆனா நீ ரொம்ப புத்திசாலித்தனமா எங்களை எல்லோரையும் ஏமாத்திட்ட... முக்கியமா மஹாவை...”

”அவளை ஏமாத்தி கல்யாணம் பண்ணி அவ கூட வாழ்ந்திட்டும் இருக்க... எவ்வளவு சீப்பானவன்டா நீ... உன்னை விட மாட்டேன்டா... உன் ஃபோர்ஜெரியை பிராடுத்தனத்தை நான் நிரூபிக்காம விட மாட்டேன்... அதை எப்படி நிருபிக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றவள் விறுவிறுவென்று என் அறையை விட்டு வெளியேற, இனி இவள் என்ன மாதிரி குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறாளோ என்று எனக்குப் பயமும் படபடப்பும் உண்டானது.

நான் அப்பாவிற்கு உடனடியாக அழைத்து, “என்னபா... அனுவுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சுன்னு முன்னாடியே ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம் இல்ல” என்று கேட்க,

“நீ வேற டா... அவ திடீர்னு ஃபோன் பண்ணி லைன்ல இருங்க அங்கிள்... ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரியப்படுத்தணும்னு சொன்னா... எனக்குப் புரியல.”

”ஆனா அவ உன்கிட்ட பேசப் பேசதான் எனக்கே விஷயம் புரிஞ்சுது... நீ எங்க அவசரப்பட்டு வாயை விட்டுட போறன்னு நெஞ்சைப் பிடிச்சிட்டு உட்கார்ந்திருந்தேன்...”

”கொஞ்சம் விட்டிருந்தா எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும்... தெரியுமா? எப்படியோ நீ சமாளிச்சுட்ட... நானும் அவளைத் திட்டிட்டு ஃபோனை வைச்சுட்டேன்” என்றார்.

“ஆனா அவ நம்பலயே பா... நிருபிக்குறன்னு என்கிட்ட சவால் விட்டுட்டுப் போயிருக்கா... இப்போ என்னோட கவலை அவ மஹாகிட்டயோ இல்ல கிரி அங்கிள்கிட்டயோ உளறி இருப்பாளோங்குறதுதான்”

“கிரி ஊர்ல இல்ல... காலைலதான் அவன் சிங்கப்பூர் கிளம்பிப் போனான்... இப்போ அவளால அவன்கிட்ட பேசி இருக்க முடியாது... அப்படியே அவ சொல்லி இருந்தா கிரி எனக்குதான் முதல ஃபோன் பண்ணி இருப்பான்”

“மஹாகிட்ட பேசி இருப்பாளா?”

“இல்ல... மஹா இப்பதான் எனக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்துட்டுப் போனா... அவ நார்மலாதான் இருக்கா... விஷயம் தெரியல”

“இப்போதைக்குத் தெரியல... ஆனா இதுக்கு அப்புறம் அனு ஃபோன் பண்ணி பேசுனா?” என்று நான் படபடக்க,

“இப்போ என்ன பண்றது?” என்று அதே படபடப்புடன் அவரும் கேட்க,

நான் யோசித்துவிட்டு பின், “அப்பா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க... உங்க ஃபோன் ஆன் ஆகமாட்டேங்குதுன்னு ஏதாச்சும் சொல்லி மஹா ஃபோனை வாங்கி அவ சிம் கார்டை டேமேஜ் பண்ணி போட்டு விடுங்க... அவ ஃபோனுக்கு எந்த காலும் ரிசீர்வ் ஆகக் கூடாது” என்றேன்.

“என்னடா சொல்ற... இப்படி பண்றது சரியா?” என்றவர் தயங்க,

“ப்ளீஸ் பா... எனக்காக பண்ணுங்க” என்று கெஞ்சியதும் அவர் சம்மதித்தார். நான் அழைப்பைத் துண்டித்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். எப்படியாவது அனுவைச் சமாளிக்க வேண்டும்.

அடுத்து இங்கிருந்து அவள் எங்கே சென்றிருப்பாள் அவள் வீட்டிற்கா அல்லது அலுவலகத்திற்கா? ஒரு வேளை என் வீட்டிற்கா என்று யோசிக்கும் போதே எனக்குக் குலைநடுங்கியது.

மின்தூக்கியில் இறங்கி காரை எடுக்கத் தரைத்தளம் வந்த போது அனு கீழேதான் நின்றிருந்தாள். தன் செல்பேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.

‘நான் உண்மையாதான் சொல்றேன்... என்னை நம்பு’ என்றவள் வார்த்தையைக் கேட்ட போது என்னைத் திகில் பற்றிக் கொண்டது.

யாரிடம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறாள் என்று தெரியவில்லையே. இவளை விட்டு வைத்தால் மொத்தமாகத் தம்பட்டம் அடித்து விடுவாள் என்று பயமாக இருந்தது.

அவள் சமீபமாக வாங்கிய புது பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட நானும் என் காரில் அமர்ந்திருந்தேன். வெகுஜாக்கிரதையாக அவள் பார்வையில் படாமல் பின்தொடர்ந்தேன்.

கொஞ்ச தூரம் சென்றதிலேயே அவள் என் வீட்டிற்குதான் போகிறாள் என்று தெரிந்துவிட்டது. இவள் நேரடியாகச் சென்று மஹாவிடம் உண்மையைச் சொல்லிவிட்டால்...

என்னுடைய வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் நிர்மூலமாகிவிடும்.

எனக்குள் ஒரு சாத்தான் புகுந்து கொண்டது. நடமாட்டம் இல்லாத அந்தச் சுரங்க பாதையில் அவள் பைக் உள்நுழைய போவதை அறிந்து அதிவேகமாகச் சென்ற நான் பின்னிருந்து அவள் பைக்கை இடித்து சாய்த்துவிட்டேன்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா