மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Tips for Terrace gardenTerrace garden- introPost ReplyPost Reply: Terrace garden- intro <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on February 27, 2020, 3:52 PM</div>மாடித்தோட்டம் நேரம்+கொஞ்சம் உழைப்பு+கொஞ்சம் பணம்= ஆரோக்கியமான உணவு. எது எதுக்கோ எவ்வளவோ செலவு செய்கிற நாம் ஒரு சில ரூபாய்களில் நம்முடைய நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை காத்து கொள்ள முடியுமென்றால் அதை ஏன் நாம் முயற்ச்சிக்க கூடாது. கதைகளில் ஹீரோயின்களுக்கு மட்டுமே வரும் கேன்சர் என்கிற உயிர் கொல்லி நோய் தற்போது அடுத்த தெருவில எதிர் வீட்டில, மாமா பையனுக்கு, கூட படித்தவனுக்கு வந்திருக்கு என்று கேள்விப்படும் போது மனம் பதறுகிறது. அதைவிட அதிகமாக நாம வாங்கிற காய்கறிகள் முழுக்க பூச்சி கொல்லிகளில் முக்கி எடுக்கப்பட்டது என்று கேட்கவே குலை நடுங்குகிறது. இன்று கணவன் மனைவி இருவருமே வேலைக்கு போகும் நிலை. வருகின்ற வருமானத்தில் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. கூடவே கார் லோன் வீட்டு லோன் வாரத்திற்கு ஒரு நாள் ஹோட்டல் சாப்பாடு, சினிமா, மருத்துவ செலவுன்னு இந்த அன்றாய்ட் காலத்தில் நாம ஆரோக்கியமான உணவு என்ற விஷயத்தை மறந்துவிட்டோம்னு தோணுது. நீண்ட ஆயுளோட நல்லா இருக்கனும் என்ற வாழ்த்து எல்லாம் நம்ம பாட்டி காலத்தோட போயிடுச்சு. நல்லா படிக்கணும். பெரிய வேலைக்கு போகணும்னு நம் வாழ்க்கை தேடல் திசை மாறி போயிக்கிட்டே இருக்கு. ஆடம்பரமான வாழ்க்கை இரண்டு மூன்று டிகிரி கூடவே ஒரு பயங்கரமான நோய். நம்மோட வெற்றியெல்லாம் முடக்கி போட அது ஒன்னு போதாதா? வந்த பின் காப்போம் என்று மருத்துவமனைக்கு செலவு செய்வதை விட வரும் முன் காப்போம்னு மாடி தோட்டங்கள் வைத்தால் என்ன? சொந்த வீடு வைத்திருக்கும் ஒவ்வொருக்கும் அது நிச்சயம் சாத்தியம்தான். எப்படி அதை சுலபமாக சாத்தியப்படுத்தலாம்னு எங்க அம்மா வீட்டு மாடி தோட்டம் வைத்த சுய அனுபவம் மூலமாக நான் பகிர்ந்து கொள்கிறேன். இருபது தொட்டி வேண்டாம். முதலில் இரண்டு தொட்டியில் ஆரம்பிப்போம். அதுவே தானாக இருபது தொட்டியாக மாற்றும் சூட்சமத்தை நீங்களே கற்று கொள்வீர்கள். Youtubeல மாடி தோட்டம் வைக்க எண்ணற்ற வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் முதலில் பார்வையிடுங்கள். தொடரும்…. </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா