மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Thooramillai vidiyalThooramillai Vidiyal - Episode 7Post ReplyPost Reply: Thooramillai Vidiyal - Episode 7

Quote from monisha on December 2, 2024, 10:55 PM

7

ஜீவிதா பணியில் சேர்ந்து இரண்டு வாரமானது. ஆனால் இன்னும் யாரிடமும் அவளுக்குப் பெரிதாக நட்பு உண்டாகவில்லை.

அவளது தலைமை அதிகாரி சந்திரசேகர் சரியான கறார் பேர்வழி. அவர் கொடுக்கும் வேலைகளைத் தாமதிக்காமல் செய்து முடித்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அதேநேரம் குழுவிலுள்ள மற்றவர்கள் உதவி செய்வது போல, அருகே வந்து நின்று கொண்டு வயது வித்தியாசம் இல்லாமல் அவளிடம் சிரித்துச் சிரித்துப் பேசி கடலைப் போடும் வேலையைத்தான் செய்கிறார்கள்.

ஆதலால் அலுவலகத்தில் யாருடனும் அவள் பெரிதாகப் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. உதவியும் எதிர்பார்ப்பதில்லை. அவளே தன் வேலையைச் செய்து முடித்து விடுகிறாள்.

இதனைக் கவனித்து வந்த உஷாராணி அவள் அன்று அலுவலகத்தில் நுழையும் போதே, “உன் டிசைன்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு... நீ ரொம்ப சின்ஸியரா வொர்க் பண்றனு சந்திரசேகர் பாராட்டிட்டு இருந்தாரு... கீப் இட் அப் ஜீவிதா... வெரி குட்” என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.

அந்தச் சந்தோஷத்துடன் அவள் தன்னிடத்தில் வந்து அமர்ந்து வேலைகளைச் செய்யத் துவங்கிய சமயத்தில் அங்கே வந்த சந்திரசேகர் அவர்கள் டிசைனிங் குழுவிலுள்ள விஜயனிடம்,

“நேத்து வந்த பொண்ணு எவ்வளவு சின்சியரா வேலை செய்யறா பார்த்த இல்ல... டைமுக்கு எல்லாம் டிசைனையும் முடிச்சு கொடுத்துட்டா... ஆனா நீ என்ன பண்ற விஜயன்... இன்னும் உன்கிட்ட இருந்து ஒண்ணுமே வரல” என்று எல்லோர் முன்பும் தாறுமாறாகத் திட்டித் தீர்த்துவிட்டார்.

அவர் திட்டியது என்னவோ விஜயனைத்தான். ஆனால் எல்லோர் பார்வையும் அவள் மீதுதான் விழுந்தது. “சாரி சார்” என்று மன்னிப்பு கேட்டு நின்ற விஜயன் முகத்தைப் பார்த்த ஜீவிதாவிற்கு மிகவும் சங்கடமானது.

என்னதான் தலைமை அதிகாரிகளிடம் எல்லாம் நல்ல பெயர் வாங்கிவிட்டாலும் சகபணியாளர்களிடம் இப்படித் தள்ளி நிற்பது நல்லதில்லை என்று நினைத்தாள்.

ஆதலால் உணவு இடைவேளை சமயத்தில் விஜயனிடம் பேசச் சென்றாள்.

பால்கனியில் அவன் சிகரெட்டை புகைத்துக் கொண்டு நிற்க அவளே சென்று,

“ஹாய் விஜய்” என்றாள்.

“டிசைன் எக்ஸ்பட்... வாங்க வாங்க... உங்களைப் பத்திதான் ஆபிசே பேசுது” என்று சற்றே நக்கல் தொனியில் அழைத்தவன்,

“பிடிப்பீங்களா?” என்று தன் கையிலிருந்த சிகரெட்டை அவள் முன்பாக நீட்டினான்.

அந்த நொடி அவள் மனம் பழைய நினைவுகளுக்குள் புகுந்தது.

“சும்மா பிடி... ஜீவி” என்று அவள் நண்பன் அதனை வாயில் நுழைத்ததும், அவள் உலகம் தனியாகக் கழன்று சுழன்றதெல்லாம்... நினைக்க நினைக்க அவளுக்கு நெற்றியில் சரசரவென்று வியர்வை துளிகள் இறங்கின.

அப்போது விஜயன் அலட்சியப் பார்வையுடன்,

“இன்னைக்கு இருக்க பொண்ணுங்க எல்லாம் அசால்ட்டா பிடிக்குறாங்க... ஸோ உனக்கும் பழக்கம் இருக்குமோனு நினைச்சேன்... என்ன ஜீவிதா மேடம்... பழக்கம் இல்லீங்களா?” என்று இன்னும் குத்தலாகப் பேச, அவளின் கோபமும் தூண்டப்பட்டது.

“ஓ இருக்கு மிஸ்டர் விஜயன்... பட் இந்த மாதிரி சீப்பான பிரான்ட் எல்லாம் நான் பிடிக்குறது இல்ல” என்று பதிலுக்கு அவளும் அவனை வசமாகக் குத்தி விட்டு உள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

மாலை அவள் வேலை எல்லாம் முடித்துக் கிளம்பும் சமயத்தில் சந்திரசேகர் அவர்கள் குழுவினரிடம் புதிதாக வரப் போகும் ஒரு பெரிய கட்டுமான திட்டத்தை பற்றிக் குறிப்பிட்டு, அதற்கான வடிவமைப்புகளைப் பற்றி விவரித்தார்.

“இந்த ப்ரொஜெக்ட் எங்க வருது?”

“கிளாம்பாக்கம் பக்கத்துல... விஜயன், ஜீவிதா நீங்க இரண்டு பேரும் நாளைக்கு அங்கே சைட்டுக்கு வந்துடுங்க” என்றதும் அவள் முகம் தயக்கமாக மாறியது. இதுவரையில் சைட் விசிட் என்று எங்கும் அவள் அழைக்கப்பட்டது இல்லை.

“என்ன ஜீவிதா எனி பிராப்ளம்”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்... வந்துடுறேன்” என்றவள் அத்தனை தூரம் எப்படிப் பயணிப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.

அதன் பின் அவள் தோள் பையை மாட்டிக் கொண்டு கிளம்பவும் பின்னோடு வந்து நின்ற விஜயன், “ஜீவிதா” என்று அழைத்து,

“உங்ககிட்ட வண்டி இல்லைதானே?” என்று கேட்டான். பதில் சொல்லாமல் அவனை ஆழ்ந்து பார்க்க,

“இல்ல நீங்க டெயிலி பஸ்லதானே போயிட்டு வரீங்க... அதான் கேட்டேன்” என்றான்.

இல்லை என்று சொல்வதற்கு அவள் ஈகோ தடுக்க,

“புதுசு வாங்கணும்... மாடல் பார்த்துட்டு இருக்கேன்” என்றாள்.

“அப்படினா நாளைக்கு எப்படி... நான் வேணா பிக் அப் பண்ணிக்கட்டுமா? இந்த மாதிரி சைட் விசிட்டுக்கு எல்லாம் பஸ்ல போயிட்டு வர்றது ரொம்ப கஷ்டம்... தூரம் வேற இல்ல?” என்று குழைவாகக் கூற ஜீவிதா உதட்டைச் சுழித்து,

“உங்க அக்கறைக்கு தேங்க்ஸ்... நான் பார்த்துக்கிறேன்”என்று விட்டு முன்னே நடக்க,

“டைமுக்கு வரலனா... சந்திரசேகர் டென்ஷன் ஆகிடுவாரு” என்று அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் நடந்தாள்.

அவன் உதவியை ஏற்றுக் கொண்டிருக்கலாமோ என்று அவள் மனம் சலனப்பட்டது. ஆனால் இது போன்ற உதவிகளால்தான் அவள் நிறைய வம்புகளில் சிக்கி இருக்கிறாள். வேண்டவே வேண்டாம் என்று தீர்க்கமாக முடிவு செய்தவள் சாலையில் இறங்கி நடக்க, அதே சாலையில் எதிரே ஜீவா நடந்து வந்து கொண்டிருந்தான்.

‘அவன் பெயர் என்ன?’, ‘அவன் என்ன வேலை செய்கிறான்?’ இப்படி எதுவும் தெரியாத போதும் அவனை அவளுக்கு தெரியும்.

அந்த மாடித்தோட்டத்தில் அவன் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தாள். பேனரில் இருந்த அந்த வயதான பெண்மணியின் மரணச் செய்தியை வைத்து அவன் தன் பாட்டியின் இறப்பிற்காக அழுதான் என்பதாக அவளே புரிந்தும் கொண்டாள்.

ஒரு வகையில் அவள் பாட்டியின் இறப்பு அவளையும் அதிகமாகப் பாதித்திருக்கிறது. மனம் இயல்பாக அவன் துயரத்தில் தன்னை நிறுத்திப் பார்த்துக் கொண்டது.

சாலைகளில் எதிர் எதிராக வந்த போதும் அவன் கவனம் அவள் மீது விழவில்லை. மிகவும் களைத்துப் போயிருந்த அவன் விழிகளுக்கு எதையும் கவனிக்கும் ஆர்வமுமில்லை.

மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடந்தவள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தாள்.

வீட்டை அடைந்ததும் மீண்டும் நாளை என்ன செய்வது என்ற குழப்பம் அவளை ஆட்கொண்டது. இப்போதைக்குப் புது பைக்கை வாங்கும் அளவுக்கு அவளின் பொருளாதார நிலைமை அத்தனை வளமாக இல்லை.

யாரிடமும் உதவி கேட்கவும் வழி இல்லை. அந்த நொடி மகேஷிடமிருந்து கிட்டத்தட்ட இரண்டு வாரம் முன்பு அவளுக்கு வந்த குறுந்தகவல் பற்றிய நினைப்பு வந்தது.

‘சிஸ் இதான் என் நம்பர் சேவ் பணிக்கோங்க... எதாவது ஹெல்ப்னா கேளுங்க’

அந்தச் சமயத்தில் அதனை அவள் பொருட்படுத்தவில்லை. அவனுக்குப் பதில் கூட போடவில்லை. இப்போது அவனைக் கேட்டால் என்ன என்ற சிந்தனை உதித்தது.

ஆனால் அன்று அவன் ‘பிரதர்’ என்று சொன்ன போது ‘ஸ்டெப் பிரதர்’ என்று முகத்திலறைந்தது போலக் கூறிவிட்டு இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் உதவி கேட்பது.

செல்பேசியை வைத்துக் கொண்டு பால்கனியில் நடந்தவள் இறுதியாகத் தன் தயக்கத்தை உடைத்து அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

“ஹெலோ சிஸ்... எப்படியோ கால் பண்ணிடீங்க... ஆமா எப்படி இருக்கீங்க?” என்று ஆர்வத்துடன் விசாரித்தான். அவள்தான் தயங்கித் தயங்கி பேசினாள்.

“எனக்கு ஒரு பைக் வேணும்... நாளைக்கு சைட் ஒன்னை போய் பார்க்கணும்.. ஒரே ஒரு நாள்தான்” என்றதும் மகேஷ் குரல் அமைதியாகிவிட,

“முடியலனா பரவாயில்ல” என்றவள் சொல்லவும்,

“அதெல்லாம் இல்ல... என் பைக்கே இருக்கு... நீங்க கியர் பைக் ஓட்டுவீங்கதானே?” என்று கேட்டான்.

“காலேஜ் டேஸ்ல ஓட்டி இருக்கேன்... பழக்கம்தான்” என்றவள் கூறவும்,

“அப்போ ஓகே நான் கொண்டு வரேன்” என்றவன் இரவு பத்து மணி போல அவள் குடியிருப்பிற்கு வந்து நின்று கதவைத் தட்டி,

“இந்தாங்க சிஸ்... சாவி ஹெல்மெட்... பைக் கீழே நிற்குது... பேப்பர்ஸ் எல்லாம் வண்டிலேயே இருக்கு... ப்ளேக் கலர் ஹோண்டா... நம்பர் இதுல எழுதி இருக்கேன்” என்று வாசலில் நின்று கொண்டே நீட்டினான்.

அவளுக்கு அவன் செயல் நெகிழ்ச்சியாக இருந்தது. திகைப்புடன் அவனைப் பார்த்தவள், “உள்ளே வா மகேஷ்” என்று அழைத்தாள்.

“இருக்கட்டும் சிஸ்... கிளம்பணும்... பிரண்டு கீழே வெயிட் பண்றான்” என்றவன் கிளம்ப எத்தனிக்க,

“தேங்க் யூ ஸோ மச்” என்றாள்.

திரும்பி நின்று புன்னகை செய்தவன், “ஸ்டெப் பிரதரா இருந்தாலும் நான் உங்க பிரதர்தானே சிஸ்” என்று விட்டு செல்ல அவளுக்குக் குற்றவுணர்வாக இருந்தது.

அவன் தந்த சாவி, தலைக்கவசத்தை எல்லாம் மேசை மீது வைத்தவள் சோபாவில் சாய்ந்தபடி படுத்துக் கொண்டாள். உறக்கம் வருமா என்று தெரியாது. நாளைய பயணத்தை பற்றிய டென்ஷன் ஒருவாறு விலகிவிட்டது. ஆனால் மனம் மகேஷை பற்றி யோசித்தது.

அவள் அப்பா ஷீலாவை மணக்கும் போது மகேஷிற்கு ஐந்து வயது. ஷீலா அவளிடம் அன்பாக நடந்து கொண்ட போதும் அவளுக்கு என்னவோ தன் தந்தையை அவர்கள் அபகரித்துக் கொண்டதாகவே தோன்ற அவள் வெறுப்பைத்தான் காட்டினாள்.

அவர்கள் அன்பை நிராகரித்தாள். அதனாலேயே மகேஷிடமும் அவள் பழகவில்லை. அவன் பேச வந்த போதெல்லாம் முகம் கொடுத்துப் பேசாமல் ஒதுங்கிச் சென்றுவிடுவாள்.

ஆனால் அது பற்றி எல்லாம் யோசிக்காமல் உதவி என்றதும் அவன் ஓடி வந்து நின்றது அவளுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் அவள் ஒதுக்கியது அவனை மட்டும் இல்லை. அவள் அம்மா அப்பா துவங்கி அவளை நேசித்த அத்தனை பேரையும் அவள் தன் வாழ்விலிருந்து ஒதுக்கித்தான் வைத்திருந்தாள். பாட்டியைத் தவிர. அவரிடம் மட்டும்தான் அவளுடைய பழக்கம் நெருக்கம் எல்லாம்.

அவளுடைய அந்தக் குணம்தான் இன்று அவளை மொத்தமாகத் தனிமைப்படுத்திவிட்டது. சர்வேஷ் சொன்னது ஒரு வகையில் சரிதான்.

யாரையாவது அவள் நேசிக்க வேண்டும். ஆனால் எப்படி? நட்புடன் எந்த நபரையும் நெருங்கவும் நெருங்கவிடவுமே அவளுக்குப் பயமாக இருந்தது.

அந்தப் பயத்தைச் சுலபத்தில் அவளால் கடக்க முடியவில்லை. ஒரு வகையில் அவள் வாழ்க்கையில் பட்ட சூடு அப்படி.

ஆனால் அதற்கும் ஒரு வழி அவளுக்குக் கிடைத்தது. அவள் பார்த்துக் கொண்டிருந்த ஓடிடி தொடரில் டேட்டிங் ஆப் மூலமாகச் சந்தித்த இருவர் காதலில் விழுந்த கதை ஒன்றைப் பார்த்தாள்.

அப்போதுதான் அவளுக்கு அந்த யோசனை வந்தது. தானும் அந்த வழியை முயலக் கூடாது என்ற எண்ணம் எழ, உடனடியாகப் பாதுகாப்பான டேட்டிங் ஆப் ஒன்றைத் தேர்வு செய்து செல்பேசியில் தரவிறக்கம் செய்தாள்.

அதில் அவளுடைய பெயர் மற்றும் பிடித்த விஷயங்கள், ஈடுபாடுகள், வசிக்கும் இடம் போன்ற தகவல்களை எல்லாம் பதிவு செய்தாள்.

எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதால் பெயரை மட்டும் விஜி என்று மாற்றி போட்டாள்.

அவள் முகம் தெரியாமல் பாலைவனத்தில் திரும்பி நின்றிருந்த படங்களைப் பகிர்ந்தாள். அந்தச் செயலியில் நிராகரி அல்லது விருப்பக்குறி என்று இரண்டு சின்னங்கள் உண்டு.

நிராகரித்தால் அந்த நபர் இவளைத் தொடர்பு கொள்ள முடியாது. அதேநேரம் பரஸ்பரம் இருவருமே மாறி மாறி விருப்பக்குறி கொடுத்துக் கொண்டால் அவர்கள் பேசிக் கொள்ளலாம்.

அவள் தன் விவரங்களைத் தந்த சில நிமிடங்களில் நிறைய நபர்கள் அவளுக்கு விருப்பக்குறிகள் தந்தார்கள். மிகவும் ஆளுமையாக அழகாக இருந்த அந்த ஆண்மகன்களின் படங்களில் பெரும்பாலானவை போலியானவை என்று அவளுக்குத் தெரியும்.

சோபாவில் மல்லாக்க படுத்துக் கொண்டு ஒவ்வொரு படங்களாகத் தள்ளிக் கொண்டே வந்தாள். எதுவுமே அவளுக்குத் திருப்தியாக இல்லை.

மணி இரண்டைத் தொட்டது. கண்களைச் சுழற்றிக் கொண்டு வர அப்படியே தன்னை மறந்து அவள் உறங்கிவிட்டாள்.

அலாரம் அடித்து அவளை உலுக்கியது. சோம்பலாக எழுந்தவள் செல்பேசியில் நேரத்தைப் பார்த்த போது அந்தச் செயலி திறந்திருந்தது.

அப்போதுதான் அதிலிருந்த ஒருவனின் படம் அவள் கவனத்தை ஈர்க்க, அவள் எழுந்து குதித்து அமர்ந்தாள்.

‘இவன் அந்த வீட்டுல இருக்க ஆள் இல்ல’

அந்தப் படத்தை இன்னும் நெருக்கமாகப் பார்த்தாள். அவனுக்குப் பின்புறம் அதே மாடித்தோட்டமும் அவர்கள் அலுவலகமும் தெரிந்தது.

‘அப்படினா?’ என்று யோசித்துக் கொண்டே அவன் பெயரைப் பார்த்தவள் இன்னும் அதிகமாக வியந்து போனாள்.

‘ஹிஸ் நேம் இஸ் ஜீவா? வாட் ஆ கோ இன்சிடன்ஸ்?’ அவள் உதடுகள் பெரிதாக விரிந்தன.

உடனடியாக அவன் கொடுத்திருந்த விவரங்கள் மற்றும் பிடித்தங்களைப் படித்த ஜீவிதா, அவனுக்கு விருப்பக்குறி இட்டாள்.

பதிலுக்கு அதே விருப்பக்குறியை அவளுக்கு அவனும் கொடுத்தால்தான் இருவரும் அந்தச் செயலியின் மூலம் உரையாட முடியும் என்பதால் அவன் எதிர்வினைக்காக அவள் காத்திருந்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா