மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Thooramillai vidiyalThooramillai Vidiya - Episode 17Post ReplyPost Reply: Thooramillai Vidiya - Episode 17

Quote from monisha on January 9, 2025, 6:43 PM

17

அலுவலகத்திற்குச் சென்ற போதும் ஜீவிதாவால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் செய்த வடிவமைப்பைச் சொதப்பி வைத்ததில் ராஜசேகர் அவளைச் சரமாரியாகத் திட்டினார்.

‘என்ன இப்படி பண்ணி இருக்க... இது டிசைனா? இல்ல நான் இப்படியா சொன்னன்... உன் இஷ்டத்துக்கு எதையாவது பண்ணிடுவியா’ என்று சத்தமிட அந்த காட்சியைப் பார்த்த ராஜனுக்கு குளுகுளுவென்று இருந்தது.

எல்லோர் முன்பும் அவர் இப்படிப் பேசியதில் ஜீவிதாவின் கண்கள் கலங்கிவிட, அவள் அமைதியாக வந்து பால்கனியில் நின்று கொண்டாள்.

இது போன்ற சமயங்களில் அந்த மாடித் தோட்டத்தை பார்த்துத்தான் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வது. ஆனால் இன்று அந்தத் தோட்டமும் வீடும் இருந்ததற்கான எந்தவிதத் தடமும் இல்லாமல் அழிக்கப்பட்டிருந்தன.

அப்போது அவளைப் பின்தொடர்ந்து வந்த ராஜன்,

“என்னாச்சு மேடமுக்கு... ஒன்னும் சரியா வரலயா” என்று வெறுப்பேற்ற அவள் திரும்பி முறைத்தாள். அவன் எள்ளலாக நகைத்தபடி சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும் அதனை அவள் பிடுங்கிக் கொண்டாள்.

“ஏய்” என்று அவன் சத்தமிட அலட்சியமாக அந்த புகையை சிலமுறைகள் உள்ளே இழுத்து வெளியே விட அவன் அதிர்ந்தான்.

மீண்டும் அதனை அவன் கையிலேயே கொடுத்து விட்டு அவள் உள்ளே செல்ல,

‘அன்னைக்கு ஏதோ சும்மாதான் சொன்னான்னு பார்த்தா... உண்மையாவே அடிப்பாளா... காலம் ரொம்ப கெட்டு போச்சு பா’ என்று புலம்பிக் கொண்டே அவன் அதே சிகரெட்டைப் புகைக்க ஆரம்பித்தான்.

மீண்டும் சென்று தன் இருக்கையில் அமர்ந்த ஜீவிதா தன் மடிக்கணினியில் உள்ள வடிவமைப்பைக் கூர்ந்து பார்த்தாள். அதில் அவள் என்ன மாதிரியான தவறுகளைச் செய்திருக்கிறாள் என்று அலசினாள்.

ஒரு வழியாக எப்படி சரி செய்வது என்ற யோசனை வரவும் தன் வேலையைத் துவங்கினாள். மதிய உணவிற்குக் கூட எழவில்லை.

வேலையில் தீவிரமாக மூழ்கிவிட்டவள் மாலை சந்திரசேகர் கிளம்பும் தருவாயில், “சார் முடிச்சுட்டேன்... பாருங்க” என்று தன் வடிவமைப்பைக் காட்ட அதனைப் பார்த்த அவர் கண்கள் வியப்பில் நின்றுவிட்டன.

“ஓகேவா சார்?” என்று அவள் கேட்கவும், “பெர்க்ட்” என்று தலையை அசைத்தார். மேலும் அவர் வியப்பிலிருந்து மீண்டு அவளைப் பாராட்ட நினைப்பதற்குள்,

“நான் மெயில் பண்றேன் சார்” என்று விட்டு தன் மடிக்கணினியை உள்ளே வைத்து கொண்டு விறுவிறுவென்று நடந்து சென்றாள். சந்திரசேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.

உண்மையில் இந்தப் பெண் மிகவும் திறமைசாலி என்று அவர் நினைத்துக் கொள்ள, அவளோ வண்டியை எடுத்துக் கொண்டு வந்து ஓர் உணவகத்தில் நிறுத்தினாள்.

அவள் அந்த உணவு பட்டியலை பார்த்தபடி, ‘ஒரு மட்டன் பிரியாணி... தந்தூரி ஹாவ்... பிங்கர் பீஷ்... ஆம்லேட்’ என்று நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போக, “வேற யாராவது வராங்களா மேடம்” என்று அந்தச் சிப்பந்தி சந்தேகமாகக் கேட்டான்.

“நான் மட்டும்தான்... ஏன்?” என்றதும் அவன் ஒன்றும் இல்லை என்று விட்டு அவள் சொன்னதை எல்லாம் குறிப்பெடுத்து கொண்டான்.

ஆனால் அவளுடைய ஒல்லியான தேகத்தைப் பார்த்த போது இத்தனையும் அவள் ஒருத்தியாக உண்டு முடித்துவிடுவாளா என்று சந்தேகமாகத்தான் இருந்தது.

அதே சந்தேகத்துடன் அவள் கேட்டதை எல்லாம் எடுத்து வந்து வைக்க, “ஆ அப்புறம் நெத்திலி ப்ரையும் எடுத்துட்டு வாங்க” என, அவன் அதிர்ச்சியானான்.

‘அடங்கப்பா’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்று அதனையும் எடுத்து வந்து வைக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து நிதானமாக அத்தனையும் சாப்பிட்டு முடித்திருந்தாள்.

இறுதியாக, ‘வெண்ணிலா ஐஸ்க்ரீம்’ என்று கேட்டு அதனையும் ஒரு கால் மணிநேரமாகக் கரைத்து ருசித்துச் சாப்பிட்டு விட்டே எழுந்து கொள்ள, அவனால் நம்ப முடியவில்லை.

அவள் எதையுமே மிச்சம் வைக்கவில்லை.

‘ஆளுக்கும் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லபா’ என்று நினைத்து கொண்டே பில்லை முதலாளியிடம் கொடுத்தான்.

‘எந்த டேபிள்’ என்று கேட்டவர், ‘அந்த ஒரு பொண்ணா’ என்று அவருமே ஆச்சரியப்பட அவள் காசை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

எப்போதும் தனித்து இருப்பதாலேயே அவள் தன்னுடைய கோபத்தை வெறுப்பை எல்லாம் தன் மீதே காட்டி கொள்வாள். தெரிந்தோ தெரியாமலோ அப்படியே அவள் வளர்ந்தும் பழகிவிட்டாள்.

தூங்காமல் இருப்பது ஒரு வகையில் அவளுக்கு வழக்கமாகிவிட்ட நிலையில் சாப்பிடாமல் இருப்பதும், கோபம் எல்லையை மீறும் போது கட்டுக்கடங்காமல் சாப்பிடுவதும் கூட அவளுடைய மோசமான பழக்கங்களில் ஒன்று எனலாம்.

அதுவும் சில நேரங்களில் இப்படி வரைமுறை இல்லாமல் சாப்பிட்டு வாந்தி பேதி என்று உடல் உபாதைகளை எல்லாம் சந்தித்த போதும் அவள் திருந்தவில்லை.

நைனம்மா இருந்த வரையில் அவளைத் தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தார். ஆனால் அவரும் இல்லாமல் போன பிறகு அவளுடைய எல்லைகளை அவள் மட்டுமே வகுத்துக் கொண்டாள். தன் வாழ்வில் எதைச் செய்ய வேண்டும் செய்யக் கூடாது என்று அத்தனையும் அவள்தான் முடிவு செய்தாள்.

ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் சோபாவில் சரிந்ததுதான் தெரியும். நன்றாகத் தூங்கிவிட்டாள். ஆனால் இரவு இரவு ஒன்பது மணிக்கு டானென்று அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.

சுற்றிலும் இருட்டாக இருக்க விளக்கைப் போட்டுவிட்டு மடிக்கணினியைத் திறந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தவள் விடியும் வரை வேலை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அதன் பின் ஒரு காபியுடன் தன் காலைப் பொழுதை ஆரம்பித்தவள் முகப்பறையில் துவண்டு கிடந்த அந்த மஞ்சள் ரோஜாச் செடியை பார்த்தாள்.

அவள் நட்ட அன்று அது ஓரளவு நிமிர்ந்திருந்தது. உயிர் பிழைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தன. இப்போது அது சுத்தமாகச் சுருண்டுவிட்டது . மழைக்கும் காற்றுக்கும் பயந்து உள்ளே கொண்டு வந்து வைத்தவள் மீண்டும் அதனைப் பழைய இடத்திற்கு மாற்ற மறந்ததுதான் அவள் செய்த தப்பு.

கண்ணீருடன் அதன் அருகே அமர்ந்தவள், ‘உன்னை காப்பாத்தி கொண்டு வந்து நானே கொன்னுட்டேன் இல்ல... இதுக்கெல்லாம் நான் சுத்தமா லாயக்கே இல்ல’ என்று தன்னை தானே நிந்தித்துக் கொண்டாள்.

இதற்கு மேல் அது பிழைத்துக் கொள்வது சிரமம்தான். இருப்பினும் மனதிற்குள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஒட்டியிருந்த காரணத்தால் அந்தச் செடியை மீண்டும் பழைய இடத்தில் வைத்து தண்ணீர் ஊற்றினாள்.

அதன் பின் எப்போதும் போலத் தன் காலை பணிகளைத் தொடங்கியவள், காலை உணவு உண்ணப் பிடிக்காமல் வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பினாள். பக்கத்து வீட்டிலிருந்து ஜீவா மற்றும் அவன் அம்மாவின் சம்பாஷணைகள் கேட்டன.

‘ம்மா டைமாச்சு’

‘ஒரு இரண்டே நிமிசம்டா... டிபன் பாக்ஸ்ல போட்டுடுறேன்’

அவனை சந்திக்காமல் தவிர்ப்பதா? அல்லது அவனிடம் தானாகவே சென்று பேசுவதா?

இப்படியாகச் சிந்தனைகள் அவள் மனதிலோட, மெதுவாக நடந்து மின்தூக்கி முன்னே சென்று நின்றாள். அவள் பொத்தானை அழுத்தவும் ஜீவா வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அவனிடம் பேசி புரிய வைக்கப் பார்க்கலாமா என்ற ஓர் எண்ணம் அவளுக்கு எட்டிப் பார்த்தது.

ஆனால் செல்பேசியில் நேரத்தைப் பார்த்தவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தான். என்ன பார்வை அது?

அடுத்த கணமே மடமடவென்று படிக்கட்டில் அவன் இறங்கி, ‘என்ன பிரச்னை இவனுக்கு’ என்று கடுப்பான அதேசமயம் மின்தூக்கி கதவும் திறந்து கொள்ள உள்ளே ஏறியவள் தரைதளத்திற்கு வந்ததும் நேராகப் படிக்கட்டின் முன்னே சென்று கை கட்டி நின்றாள்.

மூச்சு வாங்கிக் கொண்டே இறங்கி வந்த ஜீவா எதிரே அவளைக் கண்டதும் திகைப்புற்றான். அடுத்த நொடியே அவளைக் கண்டும் காணாதது போலக் கடந்து செல்லப் பார்த்தான்.

ஆனால் ஜீவிதா வழிவிடவில்லை. வம்படியாக அவனை வழிமறித்து நிற்க ஜீவாவின் முகம் கோபமாக மாறியது.

“என்னங்க பிரச்னை உங்களுக்கு?”

“அதேதாங்க நானும் கேட்குறேன்... உங்களுக்கு என்னங்க பிரச்னை... நேத்து பால் எடுத்துட்டு வந்துட்டு... அப்புறம் கொடுக்காமலே திருப்பி எடுத்துட்டு போயிடீங்க... இப்போ என்னடானா நான் லிப்டுக்காக வெயிட் பண்றேன்னுதும்... நீங்க பாட்டுக்கு படிக்கட்டில இறங்கி போறீங்க

இத பாருங்க உங்க வீட்டை இடிச்ச பிரச்னையில நான் அப்பவே உங்ககிட்ட சாரி கேட்டுட்டேன்... ஆனா அதுக்கு அப்புறமும் நீங்க இப்படி நடந்துக்கிறது நல்லா இல்ல” என்று தெளிவாகச் சொல்ல,

“எப்படி நடந்துக்கிட்டேன்” என்று புரியாதவன் போலக் கேட்டான்.

“எப்போ என்னை பார்த்தாலும் ஒரு மாதிரி வெறுப்பா கோபமா பார்க்குறீங்க... அப்படி என்னங்க பண்ணிட்டேன் நான் உங்களுக்கு”

“ஆரம்பத்துலயே உங்களுக்கும் எனக்கும் செட் ஆகல... அதனாலதான் உங்களை விட்டு ஒதுங்கி இருக்குறது நல்லதுன்னு நினைக்கறேன்... நீங்களும் பெட்டர் என்னை விட்டு விலகியே இருங்க” என்று அவன் தீர்க்கமாக சொல்லிவிட்டு அவளை கடந்து செல்ல, அவள் முகம் சுண்டிப் போனது.

அதே கடுப்புடன் தன் பைக்கில் சென்று அமர்ந்தவள், ‘ஷிட்’ என்று கையை குத்தினாள். அப்போது அவள் செல்பேசியில் சத்தம் கேட்டது.

அதனை அவள் எடுத்து பார்க்க, ‘என்னங்க... பதிலே போடல?’ என்று கேட்டு அனுப்பியிருக்க, ‘இவனை’ என்று கடுப்பும் கோபமுமாக வந்தது.

‘எதாவது பிரச்னையா?’ என்று அவன் தொடர்ந்து அனுப்ப,

‘நீதான்டா என் பிரச்னை’ என்று அனுப்ப நினைத்த போதும் அனுப்பவில்லை. எதையுமே அனுப்பவில்லை.

‘ஏன் அனுப்ப வேண்டும்’ என்று இருந்தது. ‘ஒதுங்கி போராறாரும்ல... அப்படியே ஒதுங்கியே போகட்டும்’ என்று நினைத்துக் கொண்டு செல்பேசியை உள்ளே போட்டுவிட்டு வண்டியை எடுத்தாள்.

அவன் சாலையைக் கடந்து நடந்து செல்வதைப் பார்த்ததும் அவளின் கோபம் தாறுமாறாக ஏறிவிட்டது. வேண்டுமென்றே அவனை இடிப்பது போல எடுத்து சென்று சடாரென்று திருப்பி விட, அவன் மிரண்டுவிட்டான்.

அவனுக்கு ஒரு நொடி உயிர் போய் உயிர் வந்துவிட்டது.

“ஏய்... அறிவிருக்கா” என்று கத்த அவள் ‘இல்லை’ என்று கையசைப்பில் காட்டிக் கொண்டே சென்றுவிட்டாள். திரும்பி கூட பார்க்கவில்லை.

‘சரியான திமிரு பிடிச்சவளா இருப்பா போல’ என்று எரிச்சலுடன் சொல்லி கொண்டே அவன் தன் பள்ளியை நோக்கி நடந்தான்.

ஏற்கனவே தாமமாகிவிட்டது. முதல் வகுப்பே அவனுடையது என்பதால் வருகை ஏட்டில் நேரம் எழுதி கையெழுத்து போட்டான்.

‘பக்கத்துலயே குடி வந்தோம் நம்ம லேட்டா வந்திருக்கும்... நம்மள எல்லாம் என்ன சொல்ல... இதுல அந்த திமிரு பிடிச்சவ வேற’ என்று புலம்பிக் கொண்டே வகுப்பிற்குள் நுழைந்தவன் காலை வணக்கம் எல்லாம் முடித்து மாணவர்கள் வருகை ஏட்டில் பெயர்களைப் படித்தான்.

அப்போது லலிதா, “சார் நீங்க லில்லி அபார்ட்மென்ட்ல புதுசா குடி வந்திருக்கீங்கதானே” என்று கேட்க, “ஆமாம்” என்றான்.

“நானும் அங்கேதான் சார் இருக்கேன்” என்று அவள் கூற குதர்க்கமாகப் புன்னகை செய்தவன், “அப்போ இனிமே நீ ஒழுங்கா படிக்கலனா... நேரா உங்க வீட்டுக்கு வந்தே கம்பிளைன்ட் பண்ணிடலாம்” என,

“ஐயோ சார்” என்றாள். அவர்கள் வகுப்பே சிரிப்பொலியில் அதிர, “சரி சரி எல்லோரும் அப்படியே சிரிச்சுக்கிட்டே புக் எடுங்க பார்க்கலாம்” என்று விட்டு அவன் பாடம் நடத்த துவங்கினான்.

அடுத்தடுத்து மூன்று வகுப்புகள் நின்றபடியே பாடம் நடத்தியவன் களைப்புடன் ஆசிரியர் அறைக்கு வந்தான்.

அங்கே யாருமே இல்லை. ஓய்வாக அமர்ந்தவன் தன் செல்பேசி எடுத்து அவன் அனுப்பிய தகவலுக்கு விஜியிடமிருந்து பதில் வந்திருக்கிறதா என்று ஆவலாகப் பார்த்தான். ஆனால் எந்தப் பதிலும் வந்திருக்கவில்லை.

‘என்னாச்சு இவங்களுக்கு... இல்ல நம்ம போன வாரம் மெசஜ் பண்ணலன்னு கோபமா இருக்காங்களா... ஒரு வேளை பதிலுக்குப் பதில் செய்றாங்களோ? ச்சே ச்சே அப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க... எதுவும் பிரச்னையா இருக்குமோ?’ என்று தன் மனதில் நினைத்ததை அவளுக்கு மீண்டும் தகவலாக அனுப்பினான்.

அப்போது வேலையில் இருந்த ஜீவிதா அருகே இருந்த செல்பேசி ஒளிரவும், எடுத்துப் பார்த்தாள். ஜீவாவின் தகவலைப் பார்த்தவள் முகத்தில் கோபம் மின்னியது.

‘நான் எதுக்கு பதில் போடணும்... போட மாட்டேன்’ என்று விட்டு அவள் தன் வேலையைத் தொடர்ந்தாள்.

மாலை பள்ளியிலிருந்து கிளம்பி ஜீவா வீடு வந்து சேர, “ஜீவா வந்துட்டியா” என்று சித்ரா புன்னகை செய்தாள் .

“என்ன க்கா ரொம்ப ஹாப்பியா இருக்க”

“உங்க அக்காவுக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று செல்வி சொல்ல, “அப்படியா அக்கா” என்று கேட்க அவளும் குழந்தைத்தனமாக தலையாட்டிவிட்டு,

“நீ இங்க வாயேன்” என்று அவனை பால்கனிக்கு இழுத்துச் சென்று கீழே தெரியும் பூங்காவைக் காட்டினாள்.

“ஓ இதான் உன் சந்தோஷத்துக்கு காரணமா?”

“ஆமா ஆமாமா... அம்மா கூப்பிட்டா வரமாட்டேங்குது... நீ வா... நீ வா ஜீவா” என,

“நான் டிரிஸ் மாத்திட்டு பிரஷ் ஆகிட்டு வந்துடுறேன் க்கா... போலாம்” என்றான்.

“இல்ல இல்ல இப்பவே வா” என்று அவனை இழுக்க, “ஏய் இருடி வருவான்” என்று செல்வி மகளை அதட்டினார்.

“இரண்டே இரண்டு நிமிஷம்... வந்துடுறேன்” என்று விட்டு அறைக்குள் போனவர் அங்கே அடுக்கி வைக்காமல் கிடந்த பெட்டிகளை எல்லாம் பார்த்தான்.

‘இதெல்லாம் வேற அடுக்கணுமா’ என்று பெருமூச்சுவிட்டவன், “சரி வந்து அடுக்கிக்குவோம்” என்ற போது அவன் செல்பேசி சத்தமிட விஜி தகவல் அனுப்பி இருக்கிறாளா என்று ஆர்வமாகப் பார்த்தான். ஆனால் அது வேறெதோ தகவல்.

அவன் முகம் துவண்டுவிட்டது. அதன் பின் உடை மாற்றிக் கொண்டு முகப்பறைக்கு வர,

“போலாமா ஜீவா?” என்று சித்ரா அவன் கையை பிடித்து கொள்ள, “ஏய் இருடி காபி குடிச்சிட்டு வருவான்” என்றபடி செல்வி காபியை ஜீவாவிடம் கொடுக்க அவன் அதனை வாங்கி பருகிக் கொண்டே, “ஏம்மா உனக்கு வீடு பிடிச்சிருக்கா... எல்லாம் ஓகேவா” என்று கேட்க,

“பிடிச்சிருக்கு... இருந்தாலும் ரொம்ப சின்னதா இருக்க மாதிரி இருக்கு... நிறைய பொருளை எங்கே வைக்கிறதுனு தெரியல”

“அதான் பெரிய லாவ்ட் இருக்கு இல்ல... தேவை இல்லாதது எல்லாம் தூக்கி மேலே போட்டிறலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சித்ரா ஓரிடத்தில் உட்காராமல் அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள்.

ஜீவாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சரி க்கா... வா போலாம்” என்று அவன் எழ, “இருங்க இருங்க” என்று செல்வி உள்ளே சென்று ஒரு துப்பட்டாவை எடுத்து வந்து மகளின் மேலாடையில் போட்டுவிட்டார்.

“இதெல்லாம் வேணாம்” என்று அவள் தள்ளிவிட,

“விடும்மா பரவாயில்ல” என்று ஜீவா சொல்ல,

“அதெல்லாம் இல்ல... போடணும்... அந்த வீட்டுல நம்ம மட்டும்தான்... இங்க அப்படியா... எவன் எப்படினு ஒன்னும் தெரியல” என்று சொல்லி வீம்பு பிடித்த மகளை கட்டாயப்படுத்தி கழுத்தை சுற்றி அதனை பின் செய்தார்.

“பாரு ஜீவா” என்று சித்ரா முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள,

“அது ஒன்னும் இல்ல க்கா... நீ வா” ஜீவா அவளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க அவர்களின் பெற்றோர்கள் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள்.

சித்ராவின் வளர்ச்சியையும் குழந்தை போல அவள் நடந்து கொள்ளும் விதத்தையும் அவர்கள் எல்லோரும் விசித்திரமாகப் பார்த்தனர்.

அங்கே விளையாடும் குழந்தைகளும் அவள் கத்தி கொண்டே ஊஞ்சலில் ஆடுவதைப் பார்த்துச் சிரித்தனர். ஜீவாவிற்கு சங்கடமாக இருந்தது.

இருந்தாலும் அக்காவின் சந்தோஷத்தை அவன் கெடுக்க விரும்பவில்லை. அவன் பின்னே நின்று அவளுக்கு ஊஞ்சலை ஆட்டிவிட அப்போது அங்கிருந்த ஒரு பெண், “யாருபா உன் தங்கச்சியா?” என்று விசாரிக்க அவன் தயக்கத்துடன், “என்னோட அக்கா” என்றான்.

“ப்ச் பாவம்” என்று அவர் உச்சு கொட்டினார்.

அப்போது சித்ரா அவசரமாக ஊஞ்சலிலிருந்த இறங்கி விட, “எங்க க்கா போற” என்றான். ஆனால் அவள் அவன் கேள்வியைக் கவனிக்காமல் ஒரு சிறுமி தூக்கிப் போட்ட பந்தை எடுக்க ஆர்வமாக ஓடினாள்.

அவள் பூங்காவைத் தாண்டிச் செல்ல, “அக்கா பார்த்துக்கா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜீவிதாவின் பைக் அவள் மீது மோதிவிட்டது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை.

“அக்கா” என்று பதறி கொண்டு ஜீவா ஓடிவர ஜீவிதாவும் பைக்கை நிறுத்திவிட்டு, “ஐயோ சாரி” என்று சித்ராவை தூக்க வந்தாள்.

“கையை எடுத்துட்டு தள்ளி போ” என்று சீற்றமாக அவளைப் பார்த்தான்.

“இல்ல நான் தெரியாம” என்றதும் ஜீவா, “எப்படி... தெரியாம காலையில என்னை இடிக்க வந்தியே... அப்படியா?” என்று கேட்டு வைக்க, அவள் வாயடைத்து நின்றுவிட்டாள்.

அப்போது கூட்டமாகக் கூடிவிட்ட அந்த குடியிருப்பு வாசிகள் ‘இவ இதுக்கு மேலயும் செய்வா’ என்றும், ‘இவ விட்டா ஆளையே ஏத்தி கொல்லுவா தம்பி’ என்று அவள் மீதிருந்த முந்தைய வெறுப்பை எல்லாம் சேர்த்துக் கொட்டினார்கள்.

அதேநேரம் ஜீவா சித்ராவிற்கு காயம் ஏதாவது பட்டிருக்கிறதா என்று பார்த்துத் தூக்கிவிட, அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

'இவள்தான் அந்த மனநலம் குன்றிய பெண்ணா?' என்று யோசித்த ஜீவிதாவிற்கு கஷ்டமாக இருந்தது. 'ச்சே இப்படி பண்ணிட்டோமே' என்ற பர்திபாத்துடன், “சாரிங்க... நான் சத்தியமா வேனும்டே செய்யல... அவங்கதான் நடுவுல" என்றதும் ஜீவா முறைத்தான்.

"இல்ல என் தப்புதான்... நான் கொஞ்சம் மெதுவா வந்திருக்கணும்சாரி” என்று மன்னிப்பு வேண்டினாள்.

இம்முறையும் ஜீவா கேட்ட மன்னிப்பைத் துளியும் மதிக்காமல், "நீ வா க்கா நான் வீட்டுக்கு போய் மருந்து போட்டுவிடுறேன்" என்று தன் தமக்கையைத் தோளோடு அணைத்து நடத்தி செல்ல, "வலிக்குது ஜீவா" என்று அழுது கொண்டே அவனுடன் சென்றாள்.

'நமக்கு நேரமே சரி இல்ல' என்று புலம்பியபடி ஜீவிதா வண்டியில் ஏற இன்னும் அந்த கூட்டம் அவளை விடாமல் திட்டிக் கொண்டிருந்தது. அவர்களைப் பொருட்படுத்தாமல் அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

சோபாவில் சென்று விழுந்தவள் சில நிமிடங்களுக்கு அசையவே இல்லை. 'ஏன் இப்படி எல்லாம் நடந்து தொலைக்கிறது?'

முகம் பார்க்காமல் பேசி பழகிய போது இருந்த புரிதலும் ஏற்பட்ட நெருக்கமும் நேரில் சந்தித்த பின் சுத்தமாகத் தொலைந்து போய்விட்டனவே!

ஒரு வேளை தான்தான் விஜி என்று தெரிந்தால் அவன் தன்னை புரிந்து கொள்வானா? அவனிடம் பேசி பார்க்கலாமா என்று நினைத்தவள் தன் செல்பேசியை எடுத்தாள்.

'இந்த சண்டே மீட் பண்ணலாம்... எங்கன்னு நான் அப்புறம் சொல்றேன்' என்று குறுந்தகவலைத் தட்டச்சு செய்துவிட்டு அனுப்பும் குறியைத் தயக்கத்துடன் பார்த்தாள். பின் மூச்சை இழுத்துவிட்டவள் அதனை அழுத்திவிட்ட மறுகணமே அந்தத் தகவல் ஜீவாவின் செல்பேசியில் மின்னியது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா