மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Solladi Sivasakthi(Rerun)Solladi Sivasakthi - Episode 19Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 19

Quote from monisha on January 10, 2025, 10:57 PM

19

அரிதான புதையல் அவன்

சக்திசெல்வன் டைரியை கொடுக்காத காரணத்தினால் சிவசக்தி அவனிடம் பேச கூட விருப்பமின்றிக் கோபமாகவே இருந்தாள்.

காலையில் பள்ளிக்கு ஆனந்தியும் சிவசக்தியும் முன்னே நடந்து போக சக்திசெல்வன் பின்னோடு நடந்து வந்தான். அவனை நிராகரிக்க அவள் தன்னால் இயன்றவரை முயன்றாள்.

முன்னே வந்த சிவசக்தி ஜெயாவை எப்போதும் போல் பார்த்துப் பேசிவிட்டு சென்றாள். பின்னர்த் தனியாய் நடந்து வந்த சக்திசெல்வனை நோக்கி,

“என்ன ப்ரோ... ஒரே வீட்டில இருக்கிறீங்க... ஏன் தனித்தனியா வர்றீங்க” என்று கேள்வி எழுப்பினாள் ஜெயா.

“மேடமுக்கு என் மேல கோபம்” என்றான் சக்திசெல்வன்.

ஜெயா தன் இதழ்கள் விரிய,

“எப்போதுதான் அவளோட கோபம் எல்லாம் காதலா மாறப் போகுதோ?” என்று ஏக்கமாய் உரைத்தாள்.

“ரொம்பச் சீக்கிரம்” என்று சக்தி செல்வன் நம்பிக்கையோடு சொல்லிவிட்டு தன் வகுப்பறைக்கு விரைந்தான்.

அன்று ஜெயா எல்லா வகுப்பறைகளையும் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டே நடந்து வர, சிவசக்தியும் அவளோடு சேர்ந்துப் பேசிக் கொண்டே வந்தாள்.

“சக்தி ப்ரோ கிளாஸ் எடுக்கிறதை நீ பார்த்திருக்கியா?” என்று ஜெயா வினவினாள்.

“இல்லையே” என்றாள் சிவசக்தி.

“சரி வா... அந்தக் கிளாஸ்லதான் இருக்கிறாரு... எப்படிதான் நடத்திறாருன்னு... பார்ப்போமே ?!” என்று ஜெயா சக்தியை அழைத்தாள்.

“நீ போ எனக்கு வேலை இருக்கு... வீணா என்னை வம்பில மாட்டிவிடாதே...” என்று தப்பிக்கப் பார்த்தவளின் கையை ஜெயா பற்றி இழுத்தாள். அந்த வகுப்பறையின் கதவுபுறம் இருவரும் நின்று கொண்டனர்.

“எதுக்கு இந்தத் திருட்டுத்தனம்... வா போயிடலாம்” என்றாள் சிவசக்தி.

“திருட்டுத்தனம் நமக்கென்ன புதுசா... ஷ்ஷ்ஷ் “ என்று வாய் மீது விரல் வைத்து ஜெயா அமைதியாக இருக்கும்படி சைகை செய்தாள்.

சிவசக்தியும் மௌனமாகிவிட அந்தத் தளம் முழக்கக் கம்பீரமாய் அவனின் குரல் மட்டுமே கனிரென எதிரொலித்துக் கொண்டிருந்தது. அவன் பாடம் கற்பித்த விதமும், கேள்விகளை எழுப்பிய விதமும் அத்தனை தெளிவோடும் நேர்த்தியோடும் இருந்தது.

அந்த ஒட்டு மொத்த வகுப்பறையும் அவனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன என்பதை நன்றாகவே உணர முடிந்தது. அவன் அனுபவம் இல்லாதவன் என்ற சாயலே வெளிப்படவில்லை.

ஜோதி சார் எதற்காக அவனை இந்தளவுக்குப் புகழ்கிறார் என்பது இப்போது இரு தோழிகளுக்கும் நன்றாகவே விளங்கியது.

கடைசியாய் சக்திசெல்வன் தான் எழுதுவதை முடித்த பின்னர் அங்கிருந்த மேஜையில் சாய்வாய் நின்றபடி,

“ஸ்டூண்டஸ்... லிஸன் டூ மீ” என்று சொல்ல எல்லா மாணவர்களின் பார்வையும் அவன் மீது பதிந்தது.

அவன் சிறிது நிதானித்துவிட்டுப் பின்,

“மேக்ஸ் எக்ஸேம்னா உங்க எல்லோருக்கும் என்ன மைன்டுக்கு வருது?” என்று மாணவர்களை நோக்கி வினா எழுப்ப எல்லாரும் தங்கள் பல விதமான பதில்களை ஆர்வமாக உரைத்தனர்.

அதிகபட்சமானோர் பயம் என்றே சொல்ல, சக்திசெல்வன் கம்பீரமான சிறு புன்னகையோடு எல்லோரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு,

“பயமா இருக்கு... ஒகே... உங்க பயத்தைத் தெளிவுபடுத்த நான் ஒரு கதை சொல்லப் போறேன்... ஆனா எல்லோரும் அமைதியா இருந்தாதான் சொல்லுவேன்... புரிஞ்சிதா” என்றதும் அந்த வகுப்பறையின் மாணவர்கள் ஆரவாரித்து விட்டுப் பின் சக்திசெல்வனை நோக்கியபடி அமைதிக் காத்தனர்.

சிவசக்தி ஜெயாவிடம், “போயிடலாம்” என்றாள்.

“இருடி... கதையைக் கேட்டுட்டு போவோம்” என்று ஜெயா நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. சக்தியும் வேறுவழியில்லாமல் அவளுடன் நின்றாள்.

சக்திசெல்வன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

“ஒரு அழகான ஊர். அந்த ஊர்ல ரொம்ப உயரமான மலை. இரவான அங்கே பயங்கரக் குளிரா இருக்கும். அந்த மலையோட மேல் பகுதியில ஒரு புதையல் இருந்ததுன்னு எல்லோருமே பேசிக்கிட்டாங்க.

அதை எடுக்க அந்த ஊர்மக்களில் பலர் முயற்சியும் செஞ்சாங்க. ஆனா அந்த மலை ரொம்பவும் உயரமா இருந்ததால அந்த மலையோட மேல் பகுதிக்கே யாராலும் போகவே முடியல.

போகவே முடியலன்னு போது எப்படி அந்தப் புதையலை எடுத்துட்டு வர முடியும். அதுவும் யாராலுமே முடியாத காரியம்னு நினைச்சிட்டிருந்த போது. அந்த ஊர்ல ஒருத்தன் இருந்தான். ரொம்பத் திறமைசாலி, பலசாலி, புத்திசாலி. அவன் அந்தப் புதையலை எடுக்க முடிவெடுத்தான்.

அவன் பலசாலியா இருந்ததால எப்படியோ கஷ்டப்பட்டு அந்த மலையோட உச்சிக்கு போயிட்டான். அப்புறம் அந்தப் புதையலையும் திறமையோடு செயல்பட்டு கண்டுபிடிச்சிட்டான். அப்புறமா அந்தப் புதையலை தான் முதுகிலக் கட்டிக்கிட்டு ஏறி வந்த கயிறை பிடிச்சிக்கிட்டு கீழே இறங்க ஆரம்பிச்சான்.

ரொம்ப உயரமான மலை இல்லையா. அவன் இறங்கிட்டே இருக்கும் போது இருட்டிடுச்சு. ரொம்பக் குளிர வேற ஆரம்பிச்சிடுச்சு. அவனால முடியல. இருந்தும் முயற்சி செஞ்சி சிரமப்பட்டு மெல்ல மெல்ல இறங்கினான். இருட்டு அதிகமாக, அதிகமாக அவனுக்குப் பயமும் ஜாஸ்தியாகிடுச்சு.

அவனோட நம்பிக்கை எல்லாம் குறைஞ்சு... சோர்ந்து போய்... இதுக்கப்புறம் நம்மால முடியவே முடியாதுன்னு கயிறை கெட்டியா பிடிச்சுகிட்டுத் தொங்கிட்டிருந்தான்... எப்பவும் நம்மால முடியாத பட்சத்தில நாம யாரை நம்புவோம்... கடவுளைத்தானே...

அவனும் உடனே கடவுளே! என்னைக் காப்பாத்துன்னு உருகி உருகி வேண்டுகிட்டேன்... அவன் வேண்டுதலை கேட்ட கடவுளும் அவனுக்கு உதவி செய்ய வந்தாரு... கடவுள் அவன்கிட்ட நான் உன்னைக் காப்பாத்திறேன்... நீ கயிறை விட்டுவிட்டு... கீழே குதின்னாரு... அவன் எனக்குப் பயமா இருக்கு... கீழே குதிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்... நான் காப்பாத்திறேன்... நீ குதின்னு திரும்பவும் சொன்னாரு.

ஆனா அவனோட பயத்தால அவன் குதிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்... கடைசியா கடவுள் என்னை நம்பி நீ குதின்னு சொன்னாரு... அப்பவும் அவன் கேட்கல... அவன் மனசுப்பூரா பயம்தான் இருந்துச்சு... நம்பிக்கை இல்லாத அவனுக்கு உதவி செய்ய மனசில்லாம கடவுளும் மறைஞ்சிட்டாரு.

அவனுக்கிருந்த பயத்தால அவனால அந்தப் புதையலை எடுத்துகிட்டு கீழே இறங்க முடியாம இராத்திரி எல்லாம் அந்தக் குளிரில் விறைச்சி போய் இறந்துட்டான்... காலையில அந்த ஊர் மக்கள் வந்து பார்த்த போது அந்தக் கயிறிலயே தொங்கி மேலோகம் போய்ச் சேர்ந்துட்டான். இதுல என்ன ஆச்சர்யம்னா அவன் ஒரெட்டு கீழே குதிச்சிருந்தா தரையைத் தொட்டிருப்பான். தரைக்கு அவ்வளவு பக்கத்தில இருந்தும் அவன் நினைச்சதை அடைய முடியாத போயிடுச்சு...

பிரச்சனை என்னன்னா... அவனோட பயம்... எவ்வளவு புத்திசாலித்தனத்தோட நாம முயற்சி செஞ்சி வெற்றிக்கு பக்கத்திலயே இருந்தாலும் நம்மால அந்தக் காரியத்தில வெற்றி பெற முடியுமாங்கிற சந்தேகம்... அப்புறம் பயம் இதெல்லாம் வந்துட்டா... நம்மால அடுத்த அடியை வைக்கவே முடியாது...

எதையும் செய்ய முடியும்ங்கிற தைரியுமும் நம்பிக்கையும் இருக்கனும்... நீ முழுமையான முயற்சி செஞ்சா நிச்சயம் கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில உனக்கு உதவி செய்ய வருவாரு... அந்த வாய்ப்பையாச்சும் நாம பயன்படுத்திக்கனும்... இந்தக் கதை மூலமா உங்களுக்கு நான் என்ன சொல்ல வர்றன்னு புரிஞ்சிதா...” என்று அவன் கேள்வி எழுப்ப மாணவர்கள் எல்லாம்

“நல்லா புரிஞ்சிது சார்... நாங்க இனிமே பயப்படமாட்டோம்” என்று ஒரே குரலாக உரைத்தனர்.

சக்தியும் தன் குரலை உயர்த்தி,

“மை டியர் ஸ்டுடண்ட்ஸ்... முதல்ல உங்க பயத்தைத் தூக்கி போடுங்க... கடுமையா உழையுங்க... முக்கியமா உங்க மேல நம்பிக்கை வையுங்க... இதெல்லாமே இருந்தா கடவுளோட சப்போட்டும் தேவையான நேரத்தில் கிடைக்கும்... பீ போல்ட்... ஆல்வேஸ்... யூ வில் பீ” என்று கேட்க எல்லோருமே ஒரே சமயத்தில், “எஸ் சார்” என்று உரக்கச் சொல்லி தங்கள் புரிதலை உணர்த்தினர்.

நம் இரு தோழிகள் மெய் மறந்து நிற்க ஜெயா ஆர்வக் கோளாறில் கைத்தட்ட முயன்றாள். அதற்குள் சிவசக்தி அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“சக்தி ப்ரோக்கு செம டேலன்ட்... அப்பா அதான் அவரைத் தினமும் புகழ்ந்து தள்ளுறாரு... என்னடி” என்றாள் ஜெயா.

“ம்” என்று சிவசக்தியும் வார்த்தைகள் வராமல் அவனின் திறமையை எண்ணி வியந்தபடி தலையை மட்டும் அசைக்கச் சத்தமாய் மணியோசை இடைவேளை நேரத்திற்கான அறிவிப்பை அறிவித்தது.

மாணவர்கள் எல்லாம் தங்கள் வகுப்பை விட்டு வெளியே திரளாய் வந்து கொண்டிருக்க நம் இரு தோழிகளும் ஓரமாய் நகர்ந்து கொண்டனர். சக்திசெல்வனும் அவர்களை நோக்கி வர சிவசக்தி,

“எனக்குக் கிளாஸுக்கு டைமாச்சு” என்று நழுவப் பார்த்தவளின் கையை ஜெயா அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

“இது பிரேக் டைம்தானே வெயிட் பண்ணுடி... போலாம்” என்றாள் ஜெயா.

“விடு ஜெயா ப்ளீஸ்” என்று சிவசக்தி கெஞ்சிக் கொண்டிருக்கும் போதே சக்திசெல்வன் அவர்கள் அருகில் வந்து நின்றான்.

சிவசக்தி பாராமுகமாய் நிற்க சக்திசெல்வன் புன்னகையோடு

“என்ன ஜெயா... கதை நல்லா இருந்துச்சா?” என்று கேட்டான். ஜெயாவும் சிவசக்தியும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர். சிவசக்தி கண்களை உருட்டி ஜெயாவை கோபமாய் முறைத்தாள்.

“நாங்க அங்க நின்னுட்டிருந்ததைப் பார்த்திட்டீங்களா ப்ரோ” என்று ஜெயா திகைப்பாய் கேட்க, “ம்ம்ம்” என்பது போல் தலையாட்டி சிவசக்தியை பார்த்தபடி புன்னகைச் செய்தான்.

சிவசக்தி பெருமூச்சுவிட்டபடி,

'எது செஞ்சாலும் எப்படியோ தெரிஞ்சு போது... போன ஜென்மத்தில மாயாவியா இருந்திருப்பான் போல' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

“எப்படி ப்ரோ?” என்று ஜெயா இழுத்தாள்.

“டீச்சிங் வேலையில கண்ணு எல்லா இடத்திலயும் இருக்கனும்... யார் என்ன செய்றாங்கன்னு சுத்தியும் பார்க்கனும்... அப்போ உங்களை எப்படிக் கவனிக்காம மிஸ் பண்ணுவேன்... நீங்க வந்து நின்ன போதே கவனிச்சிட்டேன்” என்றான்.

“நீங்க சூப்பர் ப்ரோ... எது செஞ்சாலும் பெஸ்ட்ன்னு நிருப்பிச்சிரீங்க” என்று ஜெயா வெளிப்படையாகப் பாராட்ட சிவசக்தியும் அவனை மனதளவில் புகழவே செய்தாள்.

“சரி அதை விடு ஜெயா... கதை புரிஞ்சிதா?” என்று கேட்டான்.

“நல்லா புரிஞ்சிதே” என்றாள் ஜெயா.

“உன் புத்திசாலியான ப்ஃரண்டுக்கு புரிஞ்சுதா?” என்று மீண்டும் அழுத்தமாய் சக்திசெல்வன் கேட்க,

“ஏன் அப்படிக் கேட்க்கிறீங்க?” என்று ஜெயா குழம்பியபடி வினவினாள்.

“ஏன்னா இந்தக் கதை பசங்களுக்கு மட்டுமல்ல... உன் ப்ஃரண்டுக்கும் சேர்த்துத்தான் சொன்னேன்” என்றான் சக்திசெல்வன்.

சிவசக்தி அவனைக் கண்களாலயே அளவெடுக்க சக்திசெல்வன் அந்தக் கதையின் மூலம் சொல்ல நினைத்ததை ஜெயாவை பார்த்தபடி விவரித்தான்.

“காதல் செஞ்சாலோ இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாலோ நம்ம வாழ்க்கையில தோற்றிடுவோமோ... இல்ல தப்பாகிடுமோன்னு உன் புத்திசாலியான ப்ஃரண்டுக்குப் பயம்...

அதனாலதான் பிடிவாதங்கிற கயிறை பிடிச்சிக்கிட்டு கீழே இறங்கி வராம தொங்கிட்டிருக்கா... கடவுள்ங்கிறது வேற ஒண்ணும் இல்ல... அது நம்ம உள்ளுணர்வு... அது நமக்கு நல்லது சொல்லும் போதாவது அந்தப் பிடிவாதத்தை விட்டுவிட்டு இறங்கி வரனும்... இல்லன்னா கொஞ்சமாவது நம்பிக்கையோடு முயற்சி பண்ணி அந்தப் பயத்தை விட்டுவிட்டு இறங்கி வர பார்க்கனும்.

இல்லன்னா அப்படியே வாழ்க்கை பூரா தொங்கிட்டே இருக்க வேண்டியதுதான்... இப்பவும் டைம் இருக்கு... ஒரே ஒரு அடி தைரியமா எடுத்து முன்னாடி வைக்கச் சொல்லு... நான் இருக்கேன்... தப்பா எதுவும் நடக்காம பாத்துப்பேன்.

இதுக்கு மேல எப்படி இவ மரமண்டையில உறைக்கிற மாதிரி சொல்றதுன்னு எனக்குப் புரியல... சரி ஜெயா... கிளாஸுக்கு டைமாச்சு கிளம்பிறேன்...” என்று சக்திசெல்வன் சொல்லிவிட்டு சிவசக்தியை ஒரு பார்வை பார்த்தபடி அவர்களைக் கடந்து சென்றான்.

“ஒகே ப்ரோ” என்று தலையசைத்தாள் ஜெயா. சிவசக்தியின் முகம் இருளடர்ந்து போனது.

ஜெயா திகைத்து போய் நின்று கொண்டிருந்த சிவசக்தியின் தோள்களைத் தட்டி,

“இதை விடத் தெளிவா உனக்கு யாரும் புரிய வைக்க முடியாது சக்தி... உன் பிடிவாதத்தை விட்டுவிட்டு இறங்கி வா... சக்தி ப்ரோ உனக்கு அரிதா கிடைச்சிருக்கிற விலைமதிப்பில்லாத புதையல்... உன்னோட வீண் பயத்தாலையும், வறட்டு பிடிவாதத்தாலயும் தொலைச்சிடாதே... அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ... சொல்லிட்டேன்” என்று ஜெயா சொல்லிவிட்டு சக்தியை தனிமையில் விடுத்துச் சென்றாள்.

'அந்தக் கயிறை விட்டா அடிப்படாதுன்னு எனக்கெப்படி தெரியும். யாராச்சும் சொல்லனும்' என்று சிவசக்தி தனக்குத்தானே எண்ணிக் கொண்டாள்.

நாம் சில நேரங்களில் ஏதேனும் ஒன்றை காரணமின்றித் தொடங்கி விட்டு முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் தவிப்போம். இப்போதைக்குச் சிவசக்தியின் நிலைமையும் அதுதான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா