மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Tips for Terrace gardenTerrace garaden tips-1Post ReplyPost Reply: Terrace garaden tips-1

Quote from monisha on March 3, 2020, 1:08 PM

மாடிதோட்டம் – குறிப்பு1

குப்பையிலிருந்து…
மாடிதோட்டம் அமைக்க முதல் படி நம் வீட்டு குப்பைகளை பிரிப்பதுதான். மக்கும் குப்பை மக்காத குப்பை என்று குப்பைகளை பிரிக்க சொல்லி மாநகராட்சியின் கொண்டு வந்த திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் நடைமுறையில் அதை எத்தனை பேர் சாத்தியப்படுத்தி கொண்டிருக்கிறோம். ட்ரெண்டியான் செல்போன் டிவி என்று புதிபுதிதாக வந்து கொண்டிருக்கும் தொழில்நுட்பத்திற்கு தாவி கொண்டே இருக்கிறோம். வளர்ச்சி, முன்னேற்றம் என்று நாம் சொல்லி கொண்டாலும் இனி வரும் காலங்களில் இந்த மாதிரியான எலெக்ட்ரானிக் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளின் நிலைமை என்ன என்று யோசித்தால் நம்மிடம் அதற்கு நிச்சயம் பதிலில்லை. ஆனால் மக்கும் குப்பை… அதன் மூலம் என்ன செய்யலாம் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. சமீபமாக என் வீட்டில் பின்புறம் மக்கும் குப்பைகளை கொட்டும் தொட்டி ஒன்றை அமைத்திருக்கிறேன். சமையலறை கழிவுகளான வெங்காய தோல் பூண்டு தோல் காய்கறி மற்றும் பழ தோல்கள் வீட்டை சுற்றி கொட்டும் காய்ந்த சருகுகள் சாப்பிட்ட வாழ இலைகள் என எல்லாமே அந்த தொட்டிக்கு போய்விடும். அதனுடன் கூடவே கொஞ்சமாக மண் மற்றும் மோர் ஊற்றி அவ்வப்போது கிளறிவிட்டால் அந்த கழிவுகள் அதுவாக மக்கி மண்ணாகிவிடும். அதிகபடசம் ஒருமாதம். நான் பல மாதமாக நாதா தொட்டியை வைத்திருக்கிறேன். இதனால் வரை அதிலிருந்து துர்நாற்றம் வீசியதே இல்லை. ஆதலால் இவ்வாறு செய்வதால் எந்த பாதிப்பும் கிடையாது. முடிந்தவரை இரண்டு தொட்டிகளை வைத்து கொண்டு ஒன்று நிரம்பியதும் மற்றொன்று என்று நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அது ஒரு காலகட்டத்தில் அழுகி கருப்பாக மண் போன்றே மாறிவிடும். அதாவது அந்த குப்பையில் உருவாகும் கிருமிகள் அந்த கழிவுகளை தின்று வெளியேற்றும் கழிவுகள்தான் அந்த கருப்பு மண் போன்றிருப்பது. அதாவது compost நாம் உருவாக்க போகும் மாடித்தோட்டதிற்கு சுலபமாக ரசாயனம் இன்றி நாமே தயாரித்த உரம்தான் இந்த compost என்பது. செடி வைக்கும் போது மண் மற்றும் இந்த கழிவான compost கலந்து செடி அல்லது விதையிடுவது நல்லது. Compost தயாரிக்கும் முறை என்று youtubeல் தேடி பார்த்தால் ஏகப்பட்ட விடியோஸ் வரும். மாடிதோட்டம் வைக்கத்தான் இதை செய்ய வேண்டுமென்று இல்லை. குப்பைகளை பிரித்து கொட்டுவதன் மூலம் நமக்கும் நம் பூமிக்கும் நாளைய நம் சந்ததிகளுக்கும் கூட நல்லதுதானே!

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா