மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Solladi Sivasakthi(Rerun)Solladi Sivasakthi - Episode 25Post ReplyPost Reply: Solladi Sivasakthi - Episode 25

Quote from monisha on January 21, 2025, 5:24 PM

25

ஆபத்பாந்தவன்

சக்திசெல்வன் ஹோட்டலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில், “சக்தி” என்று யாரோ அழைக்க நகராமல் அப்படியே நின்றான்.

பின்புறம் ஒரு பெண் தன் மகளைப் பிடிக்க வர அவள் ஓடிக் கொண்டிருந்தாள். சக்திசெல்வன் அந்தச் சின்னப் பெண்ணினை வழிமறித்தான்.

“இஸ் யுவர் நேம் சக்தி” என்று அவன் அந்தப் பெண்ணை ஆவலோடு வினவ அந்தப் பெண் மழலை மாறாமல், “ம்ஹூம்... தீப்தி” என்றாள்.

“நைஸ் நேம்” என்று சொல்லி சக்திசெல்வன் அசட்டுத்தனமாய்ச் சிரித்துவிட்டு அந்தச் சிறுமியை அவள் அம்மாவின் கையில் கொடுத்தான்.

அவன் வெளியே கார் அருகில் வந்து நின்றபடி வானின் நிலவை நிமிர்ந்துப் பார்த்து,

“மாம்கிட்ட வீம்புக்குன்னு சவால் விட்டுட்டேன்... ஆனா என்னால உன்னைப் பார்க்காம பேசாம இருக்க முடியல சக்தி... இப்ப உடனே உன்னைப் பார்க்கனும்னு தோணுது... எப்படி முடியும்... நீ சென்னையில இருக்க... நான் டெல்லியில் இருக்கேன்”என்று தவிப்போடு ஏக்கமாய் எண்ணிக் கொண்டான்.

சக்தி செல்வனிடம் யார் சொல்வது சிவசக்தி அங்கேதான் இருக்கிறாள் என்று...

சூரியனை பூமி அரவணைத்துக் கொண்டான். அந்த நாளின் தொடக்கம் சக்தியின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கிவிடும் என எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கு ஏமாற்றமும் மோசமான ஆனுபவமே காத்திருந்தது.

அப்போது ராம் நம் தோழிகளிடம், “குட் நீயூஸ் கூடவே கொஞ்சம் பேட் நீயூஸ்” என்றான்.

“என்ன?” என்று சிவசக்தி குழப்பத்தோடு வினவ, “மிஸ்டர். எஸ். எஸ் அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரு... பட் இன்னைக்கு நைட்... நம்ம ஆக்ரா விசிட் முடியாதுன்னு நினைக்கிறேன்” என்றான் ராம்.

ஜெயா முகம் சுருங்க, “அச்சோ” என்றாள் ஏமாற்றத்தோடு.

“ஏன் ராம்... நான் போய் சக்தியை மீட் பன்றேன்... நீங்க இரண்டு பேரும் போயிட்டு வாங்களேன்” என்று சிவசக்தி சில நிமிடம் யோசித்த பின் உரைத்தாள்.

“எப்படிச் சக்தி... நீங்க மட்டும் தனியா?” என்றான் ராம் சந்தேகத்தோடு!

ஜெயா சிரித்தபடி, “அவ பிளானே அதுதான்” என்று சொல்ல சக்தியின் முகம் கோபத்தோடு சிவந்தது.

“ஆனா அப்பாயின்மென்ட் எனக்குதானே கொடுத்திருக்காரு?!” என்று ராம் தன் சந்தேகத்தை வெளிப்படுத்த,

“நீங்க எனக்குப் பதிலா என் ப்ஃரண்ட் வந்துமீட் பண்ணுவாங்கன்னு சொல்லிப் பாருங்களேன்” என்றாள் சக்தி.

ராமும், “சரி அவர் செகரெட்டிரி ரிஷி கிட்ட பேசிட்டுச் சொல்றேன்” என்றான்.

ஜெயா சக்தியின் தோள்களைப் பிடித்துக் காதோரம்,

“நாங்க காதல் சின்னத்தைப் பார்க்க போகிறோம்... நீ உன் காதலை பார்க்க போற... கரெக்டா ?” என்று சொன்ன மறுகணமே சக்தி அவளின் புறம் திரும்பி கன்னத்தில் தட்டிப் “போடி” என்று சொல்லி வெட்கப் புன்னகை புரிந்தாள்.

ராம் எப்படியோ சக்திசெல்வனின் செகரட்ரி ரிஷியிடம் பேசி புரிய வைத்தான். சிவசக்தி அவன் முகத்தைக் காணாமல் மறைந்து இருந்த போது கூட அவனைப் பார்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இவ்வளவு பெரியதாக இல்லை.

இம்முறை ஆவலும் காதலும் அதிகரிக்க அவளின் உணர்வுகளை நாம் விவரிக்கவே முடியாது. ஆனால் மலையென வளர்ந்திருக்கும் அவளின் எதிர்பார்ப்பு சரிந்து போகும் போது காயமும் வலியும் பெரியதாகவே இருக்கும்.

சந்திரன் பூர்ணமாய் வானில் தரிசனம் தந்து கொண்டிருக்க, சிவசக்தி தன் காதலனின் தரிசனத்திற்காக ஹோட்டல் எஸ். எஸிற்குள் நுழைந்தாள். அவனின் பெயரின் குறியீடு வண்ண விளக்குகளால் உயரமாய் அந்தப் பிரமாண்டமான ஹோட்டலின் முன்புறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கச் சிவசக்தியின் மனதில் தயக்கம் ஏற்பட்டது. அவனின் மீதான காதல் பேராசையோ என்ற எண்ணம் மின்னலெனத் தோன்றி மறைந்தது.

உள்ளே நுழைந்தவுடன் வரவேற்பாளராய் நிற்கும் பெண்களிடம் விவரத்தைத் தெரியப்படுத்தினாள். அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அந்தச் செய்தியை அனுப்பி வைத்தனர்.

சக்திசெல்வனின் அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்த செகரெட்ரி ரிஷியிடம்,

“நீங்க நேத்து அப்பாயின்மென்ட் தந்தீங்களே?” என்று அவன் நினைவுபடுத்த, “ம்... மிஸ்டர். ராமசாமி வந்தாச்சா?” என்று கேட்டான்.

“இல்ல சார்... அவரோட ப்ஃரண்டுக்காகதான் உங்ககிட்ட அப்பாயின்மென்ட் கேட்டாராம்... அவங்கதான் உங்களை மீட் பண்ண வந்திருக்காங்க” என்றான்.

“யாரு...?” என்று தன் லாப்டாப்பை பார்த்தபடியே வினவினான்.

“மிஸ். சிவசக்தி” என்று பெயர் சொன்ன மறுகணம் அவன் முகமே பிரகாசமாய் மாறியது.

உடனே சக்திசெல்வன் அந்த ஹோட்டலின் கண்காணிப்புக் கேமாராவில் ரிசப்ஷனில் காத்திருக்கும் சிவசக்தியை தன் கணினியில் நோக்கினான்.

'என்னைப் பார்க்கவா சக்தி... நீ இவ்வளவு தூரம் வந்திருக்க? ' என்று மனதிற்குள் கேள்வி எழக் கண்கள் லேசாய் கலங்க அதைத் தன் செகரெட்ரி முன்னிலையில் காட்டிக் கொள்ளாமல் மறைத்தான்.

அவளைப் பார்த்து அணைத்துக் கொள்ள ஏங்கும் மனதிடம் அவன் மூளை அது உன் முடிவுக்கு விரோதமானது என எச்சரித்தது. காதல் ஒரு புறம், அம்மாவின் நிபந்தனை மறு புறம் அவனுக்குள் பெரும் போராட்டத்தை உண்டாக்கியது.

சக்திசெல்வனின் செகரெட்ரி ரிஷி மீண்டும் அவன் யோசனை தடைப்படும் விதமாய், “மிஸ். சிவசக்தியை வரச் சொல்லட்டுமா?” என்று தயங்கியபடி கேட்டான்.

எந்த முடிவிலும் கடைசிவரை உறுதியாக நிற்க வேண்டும் என்ற அவனின் எண்ணம் காதலை இரண்டாம் பட்சமாய் மாற்றியது.

“நான் மீட்டிங்ல இருக்கன்னு சொல்லி அவாயிட் பண்ணிடுங்க” என்று சொல்லும் போதே சிவசக்தியின் மனம் எந்தளவுக்குக் காயப்படும் என்பதை எண்ணி வருத்தமுற்றான்.

ரிஷிக்கு அவன் சொன்னது ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது. அவன் அப்படிச் சுலபமாய் வேலையைக் காரணம் காட்டி யாரையும் தவிர்க்க மாட்டான். ஆனால் இப்பொழுது என்னவாயிற்று என்று எண்ணியபடி விஷயத்தை ரிசப்ஷனிஸ்ட்டிடம் சொல்ல, அந்தப் பெண் காத்திருப்போடு அமர்ந்திருக்கும் சக்தியை அழைத்தாள்.

“சாரி மேடம்... எஸ். எஸ் சார் மீட்டிங்ல “ என்றாள்.

சிவசக்திக்கு அவர்கள் சொல்வது பொய் என்று நன்றாகவே விளங்கியது.

மீண்டும் அந்தப் பெண்ணிடம், “நாளைக்கு அப்பாயின்மென்ட் கிடைக்குமா?” என்று வினவினாள்.

“சாரி மேடம்... நாளைக்கு எஸ். எஸ் சார் லண்டன் போறாரு... கணடிப்பா முடியாது” என்றாள்.

சிவசக்தி வந்ததிலிருந்து அவனை எல்லோரும் எஸ். எஸ் என்றே விளித்தனர். அவள் ஒரு வெள்ளைத் தாளை வாங்கி அதில் வேகமாய் எதையோ எழுதி, “இதையாச்சும் மிஸ்டர். எஸ். எஸ் கிட்ட கொடுத்திரீங்களா?” என்று கேட்டாள்.

அந்த ரிசப்ஷனிஸ்ட் யோசனையோடு நிற்க, கண்காணிப்புக் கேமராவில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சக்திசெல்வன் தொலைப்பேசி எடுத்து ரிசப்ஷனஸ்ட்டிடம் அந்த லெட்டரை வாங்கிக் கொள்ளச் சொன்னான்.

பிறகு அந்தப் பெண் கடிதத்தைப் பெற்றுக் கொள்ள, சிவசக்தி ஏமாற்றத்தோடு தன் கண்ணீரைத் துடைத்தபடி அங்கிருந்து சென்றாள்.

“ஐம் சாரி சக்தி” என்று சக்திசெல்வன் தன் அறைக்குள் இருந்தபடி தவிக்க அந்தக் கடிதம் அவன் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவன் ஆவலோடு அந்தக் கடிதத்தைப் பிரித்தான்.

“நான் பார்க்க வந்தது சக்திசெல்வனை... ஆனா இங்க இருக்கிறது மிஸ்டர். எஸ். எஸ்... சாரி... இட்ஸ் மை மிஸ்டேக்...” என்று சுருக்கமாய் அவள் எழுதி இருந்த போதும் அந்த வரிகள் சுருக்கென்று ஈட்டியாய் அவன் நெஞ்சில் பாய்ந்தன.

அவனுடைய வேலைகள் எல்லாம் ஸ்தம்பித்துப் போகத் தன் கைகளால் மேஜையை மீது குத்தி தான் செய்து கொண்டிருக்கும் தவறை எண்ணி அவனை அவனே நொந்து கொண்டான். நியாயமான அவளின் கோபத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தும் நேரில் சென்று நிலைமையைப் புரிய வைக்க முடியாமல் அவதியுற்றான். எது நடக்கவே கூடாது என்று நினைத்தானோ அது நிகழ்ந்துவிட்டது.

சிவசக்தி ஹோட்டலை விட்டு வெளியேறிய மறுகணம், “சக்தி” என்று ஒரு குரல் அழைக்கத் திரும்பிப் பார்த்து நோக்கிய போது விஜய் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் விருப்பமில்லாமல் தலையைத் திருப்பிக் கொள்ள, “இங்க எப்படி?” என்று வினவினான்.

“எனக்கு ஆயிரம் வேலை இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்லனுமா விஜய்...” என்று சக்தி பொறுமையாக எடுத்துரைத்தாலும் அதில் கோபம் குடிகொண்டிருந்தது.

“அவசியமில்ல... நான் இங்கதான் என் பிரண்ட்ஸுக்கு எல்லாம் டீரீட் அரேஞ்ச் பண்ணிருக்கேன்... நீயும் எங்களோட ஜாயின் பண்ணிக்கலாமே” என்றான்.

“நோ விஜய்... சாரி” என்று தவிர்க்க பார்த்தவளை, “என்ன பிரச்சனை சக்தி உனக்கு... காலேஜ்ல நடந்தது எல்லாம் இன்னும் மறக்காம மனசில வைச்சிருக்க... அதனாலதான் நீ என்னை இப்படி அவாயிட் பன்றியா?!” என்று கொஞ்சம் கோபமாய்ப் பேச அவளின் வேதனையும் நிலைமையையும் அவனுக்குப் புரிய வைக்க முடியாமல் சிலையென நின்றிருந்தாள்.

அவன் மீண்டும் சக்தியை நோக்கி,

“காலேஜ் டேஸ்ல எல்லாருமே கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருக்கத்தான் செய்வாங்க... அதுதான் அவங்க கேரெக்டர்னு நினைக்கிறது முட்டாள்தனம்... நான் தப்பானவன் எல்லாம் இல்ல” என்று உணர்ச்சிவசப்பட்டு விஜய் பேசிக் கொண்டிருக்க,

“ஒகே ஒகே விஜய்... நான் வர்றேன்... இன்னைக்கு உன் பர்த்டே... டென்ஷனாகதே... விடு” என்று சொல்லி சிவசக்தி சம்மதித்தாள்.

விஜயின் பேச்சினால் அவளுக்குள் ஏற்பட்ட குற்றவுணர்வே அவளைச் சம்மதிக்க வைத்தது. அரிதாய் அமைந்த அந்தச் சந்தர்ப்பத்தை விஜய் சுலபமாய் விட்டுவிட மனம் வரவில்லை. அதனால்தான் அவன் அவ்வாறு பொய்யாக நடித்து சக்தியை நம்ப வைத்தான்.

மீண்டும் சூழ்நிலைக் காரணமாய் அந்த ஹோட்டலுக்குள் சக்தி விஜயின் பிடிவாதத்தால் நுழைந்தாள். உள்ளே இருந்த பிரமாண்டமான ஹாலில் அவனுடைய ஆண், பெண் நண்பர்கள் எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்தான். விஜய் அவன் அப்பாவோடு இங்கே பிஸ்னஸை பார்த்துக் கொள்வதாலும் அங்கேயே மேல் படிப்பை முடித்ததினாலும் அவனுக்கு நண்பர்கள் பட்டாளம் நிறைய இருந்தது.

மொழி புரியாமையால் அவர்கள் பேசுவது சக்திக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அது விஜயிற்க்கு சாதகமாகவும் இருந்தது. சக்தியை எல்லோரும் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். ஆனால் அவள் இருந்த மனநிலையால் முடியாது என மறுத்துவிட்டாள்.

கடைசியாய் எல்லோரின் வார்த்தைக்கு இணங்க அருகிலிருந்த பானத்தை அருந்தினாள். சிவசக்திக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வலியால் குடிக்கும் பானத்தின் வாசமும் சுவையும் தெரியவில்லை. அதை அருந்திய மறுகணம் பூமியும் வானமும் மாறிமாறிச் சுழல ஆரம்பித்தது.

விஜயின் நண்பன் அவனிடம்,

“எப்படியோ நீ நினைச்சது நடந்திடுச்சு” என்றான்.

விஜய் சிரித்தபடி, “எத்தனை தடவை என்னை அவமானப்படுத்திருப்பா தெரியுமா மச்சான் ?... இன்னைக்கு எல்லோர் முன்னாடியும் இவ அவமானப்படப் போற... முதல் தடவை வேற குடிச்சிருக்கா... தலை கிறுகிறுன்னு சுத்த போது.

இந்த டிரிங்கினால பைத்தியம் மாதிரி ரியாக்ட் பண்ண போற... கீதா வீட்டில இருக்கிறவங்க எல்லார் முன்னாடியும் அசிங்கப்பட்டு நிக்கப் போறா... மறு நாள் இந்த விஷயம் தெரியும் போது அவளுக்கு வலிக்கும்... அப்போ அவ திமிரெல்லாம் தூள்தூளாய் போகும்... அதுதான் எனக்கு வேணும்” என்று வன்மமாய்ச் சிரித்தான விஜய்.

சக்தி உண்மையில் தெளிவான மனநிலையில் இருந்திருந்தால் அப்படி ஒரு தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

விஜயின் நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய் அவனிடம் விடைபெற்று புறப்பட்டுவிட சக்தி மட்டும் நடந்ததைச் சரியாக உணர்ந்து கொள்ள முடியாமல் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“சக்தி... வா நான் உன்னை டிராப் பன்றேன்” என்று விஜய் சொல்ல சிவசக்தி முயற்சித்து எழுந்து கொண்டாள். அவள் சிரமப்படுவதைப் பார்த்து அவன் அவள் கையைப் பிடிக்கப் போக சக்தி உதறிவிட்டு, “நோ... ஐ கேன்” என்று தள்ளாடியபடி நடக்கத் தொடங்கினாள்.

அந்தத் தருணத்தில் வேலை எல்லாம் முடித்துவிட்டுக் கீழ்த்தளத்திற்கு லிஃப்ட்டில் வந்திறங்கிய சக்திசெல்வனைக் கவனியாமல் சிவசக்தி மோதிவிட்டு விழப் போக என்றும் அவளை ஆபத்திலிருந்தும் காக்கும் அவன் இம்முறையும் ஆபத்பாந்தவனாய் அவளைத் தம் இரும்புக் கரங்களால் தாங்கிக் கொண்டான்.

ஆனால் சக்தி தன் தவறை உணராமல்,

“இடியட்... அறிவில்ல... கண்ணு தெரியல” என்று சரமாரியாய் திட்ட ஆரம்பித்தாள்.

அது அவளுக்கு எப்பவும் வழக்கமான ஒன்றுதான். தெளிவான நிலையிலேயே தன் தவறை உணராதவள் தெளிவற்ற நிலையிலா உணரப் போகிறாள்.

சக்திசெல்வன் தவிர்க்க நினைத்த சந்திப்பு விதி வசத்தால் அரங்கேறிவிட்டது. ஆனால் சிவசக்தி இப்படிப் போதையில் தன் நிலைதடுமாறி நிற்பாளென்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

சிவசக்தி சக்திசெல்வனை விட்டு விலக முயற்சி செய்து கொண்டிருக்க விஜய் அருகில் வந்து,

“சாரி... என் ப்ஃரண்ட்தான்” என்று சொல்லியபடி அவளை நெருங்கி வந்தான்.

சக்திசெல்வன் கோபத்தோடு “ஸ்டே அவே” என்று அவனைத் தடுத்து தள்ளி இருக்கச் சொன்னான்.

விஜய் ஒன்றும் புரியாமல்,

“ஹெலோ... அவ என் ப்ஃரண்ட்... விடுங்க அவளை” என்றான்.

சிவசக்தி தடுமாறிக் கொண்டிருக்க சக்திசெல்வன் அவளை அணைத்தபடி, “சக்தி சக்தி” என்று கன்னத்தைப் பிடித்து அழைத்துப் பார்க்க அவள் அறைமயக்கத்தில் அவன் குரலை உணர்ந்து பதில் சொல்ல முடியாமல் இருந்தாள்.

சக்திசெல்வன் கண்களில் நீர் துளிர்க்க விஜயோ அவன் செயலில் குழம்பியபடி நின்றான். சட்டென்று சக்திசெல்வன் எதிரே நிற்கும் விஜயை அனல் தெறிக்கும் பார்வையோடு நோக்கி,

“நீ யாருடா... சக்திக்கு...” என்று கேட்க விஜயும் கோபத்தோடு,

“ஹெலோ கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்க... நான் யாரு என் ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியாம பேசாதீங்க... சிவசக்தி என்னோட ப்ஃரண்ட்” என்று திமிரோடும் அழுத்தமாகவும் உரைத்தான்.

சக்திசெல்வன் அதே சினத்தோடு, “பொய் சொல்லாதா... நீ போய் சக்திக்கு ப்ஃரண்டா?” என்ற கேட்ட மறுகணம்,

சிவசக்தி அந்த நிதானமற்ற நிலையிலும் “அதானே நான் எப்படா உன்னை ப்ஃரண்டுன்னு சொன்னேன்?” என்று விஜயிடம் கேட்டாள்.

அந்தப் பதிலை கேட்டு சக்திசெல்வன் விஜயின் மீது தன் கோபப் பார்வையை வீச,

“அவ ஏதோ போதையில உளற்றா... நாங்க இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சவங்க” என்று பதட்டத்தோடு பதிலுரைத்தான்.

“போதையில உளற்றாலா... பல்லை பேத்துடுவேன் ராஸ்கல்... என்னையே அவ ப்ஃரண்டுன்னு ஒத்துக்கமாட்டா... நீ யாருடா அவளுக்கு... எந்தக் காலேஜ்டா நீ?” என்று சக்திசெல்வன் மீண்டும் கோபமாய்க் கேள்விகளை அடுக்க,

“அதெல்லாம் நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லனும்... நீங்க யாரு சக்திக்கு?” என்று கேள்வி எழுப்பினான்.

“நான் சக்திக்கு யாருன்னு உனக்குத் தேவையில்லாத விஷயம்... நீ சக்திக்கு நிச்சயமா ப்ஃரண்டு இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்... ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்திகிட்டு ஏதோ பண்ணிருக்க” என்று சக்திசெல்வன் சொல்ல விஜயிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

ரொம்பவும் துரிதமான நேரத்தில் தெளிவாகக் கணித்துவிட்டான். அவன் நிச்சயம் சக்திக்கு ரொம்பவும் தெரிந்தவனாகவே இருக்கக் கூடும்.

“நான் எதுவும் பண்ணல... ப்ஃரண்ட் கீதாவோட மேரேஜ்ல ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணோம்... என் பர்த்டே டீரிட்டுக்கு சக்தியை கூப்பிட்டேன்... அவளும் வந்தா... கொஞ்சம் டிரிங்ஸ் சாப்பிட்டா?” என்று விஜய் சொல்லிக் கொண்டே போக சக்திசெல்வனின் அவள் ட்ரீட்டுக்கு வந்தால் என்று சொன்னதே முன்னுக்குப் பின் முரணாய் இருந்தது. அவள் தன்னைப் பார்க்க தானே வந்தால் எனக் குழம்பியவன் ஏதோ தவறு நிகழ்ந்திருக்கும் என்று யூகித்தபடி கோபம் தெறிக்க,

“சக்தி டிர்ங்ஸ் சாப்பிட்டான்னு சொன்ன... உன்னைக் கொன்னுடுவேன்... இத பாரு... நான்தான் இந்த ஹோட்டல் எம். டி... நான் மனசு வைச்சா மட்டும்தான் இந்த ஹோட்டல் வாசலையே நீ தாண்ட முடியும்... ஒழுங்கா உண்மையைச் சொல்லு” என்ற அவன் மிரட்டிய தோரணையில் விஜய் உண்மையிலேயே கதிகலங்கினான்.

விஜயிற்கு இம்முறை எதிரே நிற்பவனின் செல்வாக்கு நன்றாகப் புரிந்தது. தன் பணம் பதவி இங்கே எடுபடாது என்பதை நன்றாக விளங்கிக் கொண்டான்.

அவன் முகம் வியர்க்க நடந்தவற்றை எல்லாம் விவரித்தான். இருப்பினும் அவன் தவறை ஒத்துக் கொள்ளாமல் சிவசக்தி தவறுதலாய்க் குடித்துவிட்டதாக உரைத்தான். சக்திசெல்வனுக்கு அவன் சொல்வது பொய் என்று விளங்கிக் கொண்டாலும் இதைப் பற்றி மேலும் விசாரிப்பது

சிவசக்திக்கு தேவையில்லாத அவப்பெயரும் வருத்தமும் என்று எண்ணினான். எங்கேயோ அவளின் இந்த நிலைக்குத் தானும் காரணம் என்று உள்ளூர குற்றவுணர்வு உண்டாக அதற்கு மேல் அந்த விஷயத்தைப் பற்றிச் சக்திசெல்வன் விசாரிக்க விரும்பாமல் விஜயிடம் அழுத்தம் திருத்தமாக,

“இந்த மாதிரி நிலையில சக்தியை உன்னை நம்பி அனுப்ப முடியாது... நீ போய் சக்தியோட ப்ஃரண்ட் ஜெயாவை இங்க கூட்டிட்டு வா... அவ வந்தாதான் நான் சக்தியை அனுப்புவேன்... புரிஞ்சிதா?” என்றான்.

“யாருன்னு தெரியாமா உங்களை நம்பி சக்தியை எப்படித் தனியா விட்டுட்டு போக முடியும்...?” என்று விஜய் வினவினான்.

சக்திசெல்வன் முறைத்தபடி,

“என்னை விட சக்தியை வேற யாராலையும் பத்திரமா பாத்துக்க முடியாது... நீ தேவையில்லாதது எல்லாம் கேட்காம ஜெயாகிட்ட சக்திக்கு உடம்பு சரியில்ல... ஹோட்டல் எஸ். எஸ்ல ஸ்டே பண்ண வைச்சிருக்கன்னு சொல்லிக் கூட்டிட்டு வா” என்றான்.

“நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கனும்...?” என்று விஜய் மீண்டும் திமிரோடு உரைத்தான்.

சக்திசெல்வன் ரிஷியின் புறம் திரும்பி, “போலீஸுக்கு கால் பண்ணி இவனை அவங்ககிட்ட ஒப்படைங்க” என்றதும் விஜய் தடுமாற்றத்தோடும் பயத்தோடும், “ஓகே... நீங்க சொன்ன மாதிரி சொல்லி ஜெயாவை கூட்டிட்டு வர்றேன்...” என்றான்.

“நீ யாரு... என்னன்னுங்கிற டீடைல்ஸை என் செகரெட்ரிகிட்ட கொடுத்துட்டு போ... அப்புறம் ஜெயாகிட்ட என்னைப் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சக்திசெல்வன் அதிகாரமாய் உரைக்க விஜய் மறுத்துப் பேசாமல் தலையாட்டிவிட்டுச் சென்றான்.

சக்திசெல்வன் இப்போது ரிஷியின் புறம் திரும்பி, “அவன் டீடைல்ஸை வாங்கிட்டு... அப்படியே இரண்டு லேடீஸ் ஸ்டாஃப்ஸை அழைச்சிட்டு வாங்க” என்றான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா