மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Thooramillai vidiyalThooramillai Vidiyal - Final Epis …Post ReplyPost Reply: Thooramillai Vidiyal - Final Episode

Quote from monisha on February 14, 2025, 10:29 PM

29

ஜீவிதாவிற்கு உடல் நிலை சரியில்லை என்ற குறுந்தகவல் வந்த சமயத்தில் ஜீவா பள்ளியில் இருந்தான். யாரிடமும் அனுமதி கூடப் பெறவில்லை. உடனடியாகப் புறப்பட்டு பேருந்து நிலையம் சென்றான்.

திருச்சி பேருந்து ஏறி அவள் வீட்டை அடையும் வரை அவனுக்கு உயிரே இல்லை. எப்படி இருக்கிறாளோ என்னவோ என்று அவன் உள்ளம் தவியாய் தவித்தது.

அத்தனை தூரம் அவளுக்காக ஓடியவன், இப்படி எல்லாம் அவளிடம் பேசிவிட்டு வருவான் என்று அவனே நினைக்கவில்லை.

ஆனால் அவள் வீட்டில் நடந்த சம்பவங்கள்தான் அவனை அப்படிப் பேச வைத்தது. அதுவும் தனக்காக அவள் சாகக் கூட துணிந்ததாகச் சொன்னதைக் கேட்ட நொடி அவள் காதலுக்குத் தான் தகுதியானவனா என்று அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது.

எந்த வகையிலும் தன் குடும்பத்துடனும் வாழ்க்கையுடனும் அவளால் ஒத்து போக முடியாது. தனக்காக அப்படி அவள் ஒத்துப் போக முயன்றாலும் அது ஏதோ ஒரு வகையில் அவர்கள் உறவையும் சந்தோஷத்தையும்தான் பாதிக்கும்.

தன்னுடைய வாழ்வில் அவளை இணைத்துக் கொள்ள நினைப்பதே அவளுக்கும் அவள் காதலுக்கும் தான் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று தோன்றியது.

எல்லாவற்றிற்கும் மேல் அவள் பெற்றோர் அவள் மீது காட்டிய அன்பைப் பார்த்த போது அவள் மீது தான் கொண்டிருந்த காதல் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது அவனுக்கு.

அந்த நொடிதான் அவளைப் பிரியும் முடிவை அவன் எடுத்தான். அது அவனுக்கு அவ்வளவு சுலபமான முடிவில்லைதான். தன் வாழ்வில் அரிதிலும் அரிதாகக் கிடைத்த பொக்கிஷத்தைத் தூக்கியெறிய யார்தான் துணிவார்கள். ஆனால் அவன் துணிந்தான்.

அவள் காதலுக்கு அதுதான் தான் செய்யும் நியாயம் என்று பட்டது.

திருச்சியிலிருந்து சென்னை வரும் வழி முழுதும் கண்ணீர் விட்டபடிதான் பயணித்தான். ஆனால் வீட்டை அடைந்ததும் ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டான்.

இனி அவள் தன் வாழ்வில் இல்லை என்ற நிதர்சனத்தை ஏற்று வாழப் பழகிக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான்.

வேண்டாமென்று முடிவு எடுத்துவிட்டாலும் மீண்டும் அவள் எதிரே வந்து நின்றால், தன் முடிவில் எந்தளவு உறுதியாக இருக்க முடியும் என்று அவனுக்குத் தெரியவில்லை.

அதற்காகவே அவள் தன் கண்முன்னே வராமல் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான். ஆனால் இத்தனை போராட்டங்களும் அவன் மனதிற்குள் நிகழ்ந்ததே ஒழிய வெளியே அவன் யாரிடமும் அதனைக் காட்டிக் கொள்ளவில்லை.

எப்போதும் போல சாதாரணமாக நடமாடினான். இயந்திரத்தனமாகத் தன்னுடைய பணிகளைச் செய்தான். மகன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காண முடியாத செல்வி அவன் ஜீவிதாவை விட்டுவிட்டான் என்று நம்பி கொஞ்சம் நிம்மதியானார்.

ஆனால் அவன் உடலளவில்தான் அவளைப் பிரிந்திருந்தான். அவன் திரும்பிய பக்கமெல்லாம் மனதளவில் அவளைப் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். மின்தூக்கியில் ஏறும் போது இறங்கும் போது, மாடிக்குச் செல்லும் போது என்று அவன் நினைவுகள் வழியாக அவள் எங்கெங்கும் நிறைந்திருந்தாள்.

அதேபோல வாயிலைத் தாண்டியதும் பூட்டியிருந்த அவள் வீட்டைப் பார்க்காமல் அவன் கடந்ததே இல்லை.

கீழே இறங்கியதும் வாகன நிறுத்தத்தில் நிற்கும் அவள் பைக்கை ஒரு முறையாவது தொட்டுத் தீண்டாமல் அவன் இருந்ததில்லை. அதே போல பால்கனியில் இருக்கும் அந்த மஞ்சள் ரோஜாச் செடிக்குத் தினமும் தண்ணீர் ஊற்ற அவன் மறந்ததில்லை. அது காய்ந்து போயிருந்தாலும்.

அன்றும் பூவாளியை எடுத்து மற்ற செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிவிட்டு அந்தச் செடிக்கு ஊற்றத் திரும்பிய போதுதான் கவனித்தான்.

அதில் துளிர் விட்டிருந்தது. அதன் அருகே அமர்ந்து நன்றாக உற்றுப் பார்க்க, கிளை பசுமையாக மாறியிருந்தது. அவனுக்கு அப்படியொரு ஆனந்தம்.

ஆனால் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அவள் தன்னுடன் இல்லை என்ற எண்ணம் வந்த போது அவன் சந்தோஷம் மொத்தமும் வேதனையாக மாறி மனதை அழுத்தியது.

இத்தனை நாளாக அவனுள் அடக்கி வைத்திருந்த தவிப்பெல்லாம் அந்த நொடி பீரிட்டுக் கொண்டு வெளியே வர எத்தனிக்க, அவன் அம்மா மற்றும் சித்ரா முன்னிலையில் அழுதுவிடப் போகிறோம் என்று பயந்து அவசரமாக வீட்டை விட்டு வெளியே வந்தான்

மேல் மாடிக்கு சென்றவன் யாரும் இல்லாமல் தனிமையில் அழ வேண்டுமென்று நினைத்தான். ஆனால் அங்கே வந்த நின்றதுமே அவன் கண்ணீர் உறைந்து விட்டது. அவன் முன்னே ஜீவிதா நின்றிருந்தாள்.

இது தன்னுடைய கற்பனைதானா? இல்லை நிஜமா?

அவன் நின்ற இடத்திலிருந்து அசையவில்லை. அவளும் அசையவில்லை.

ஒரு வேளை கற்பனை பிம்பமாக இருந்து அவன் அருகே சென்றதும் அது மறைந்துவிட்டால்... அவன் அத்தகைய முயற்சியைச் செய்ய விழையவில்லை.

நொடிகளோ அல்லது நிமிடமோ? அந்த பிம்பம் மறையும் வரை அதனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமென்று நினைத்தான்.

சில நிமிடங்களுக்குப் பிறகு அவள் நடந்து அவனிடம் வந்தாள். அப்போதும் கூட எதிரே நிற்பவள் நிஜ ரூபம் என்று அவன் நம்பவில்லை.

ஆனால் அவள் அவன் கன்னங்களைப் பற்றி இதழ்களோடு இதழ்கள் கலந்து போதுதான் அவன் உணர்வு பெற்றான்.

அத்தனை நாட்களாகச் செத்துக் கிடந்த அவன் உணர்வுகளுக்கு எல்லாம் புதிதாக அவள் உயிர் கொடுத்தது போன்றிருந்தது. அந்த உணர்வை விட்டு சுலபத்தில் அவனால் வெளியேற முடியவில்லை.

அந்த முத்தத்துடனேயே இந்தப் பூவுலக பந்தத்தை முடித்து கொண்டு விட்டால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் நினைத்தான். ஆனால் அந்தளவு அதிர்ஷ்டம் அவனுக்கு இல்லை.

அவள் மெல்ல விலகி நின்று அவன் முகம் பார்த்தாள். அந்த நொடி அவன் உள்ளத்தில் பிரவாகமாகப் பொங்கித் தளும்பிய உணர்வுகள் அத்தனையும் வடிந்து போனது.

“ஜீவி” என்ற ஒற்றை வார்த்தைக்கு மேல் ஒன்றுமே அவனால் பேச முடியவில்லை. ‘எப்போ வந்த எப்படி இருக்க?’ என்றெல்லாம் கேட்க நினைத்து எதையும் கேட்க முடியவில்லை.

தெளிவும் தீர்க்கமுமாக அவனை நோக்கிய அவளது விழிகளை அவனால் நேர்கொண்டு பார்க்கக் கூட முடியவில்லை.

வீம்பாக ஏதேதோ பேசிவிட்டு வந்து, இப்போது அவளுடைய ஒரே ஒரு முத்தத்தில் அடங்கி நிற்கிறோமே என்று கொஞ்சம் அவமானமாகக் கூட இருந்தது. ஆனால் என்ன செய்வது.

அவனால் அவளை விட்டு ஒரு அடி கூட பின்னே நகர முடியவில்லையே.

ஆனால் அவள் மெல்லத் தன் கரத்தை பிரித்துக் கொண்டு திரும்பி நடந்தாள். கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டு வானத்தை வெறித்தபடி பேசினாள்.

“நீ அன்னைக்கு என்கிட்ட அப்படி எல்லாம் பேசிட்டு வரலனா எங்க அம்மா அப்பாவை நான் புரிஞ்சிக்கிட்டே இருக்க மாட்டேன்... தேங்க்ஸ் பார் தட்” என்று விட்டு ஒரு நொடி திரும்பி சன்னமாக அவனைக் கண்டு புன்னகைத்தாள்.

அவள் பேச்சில், நடையில், செயலில் முன்பில்லாத ஒரு முதிர்ச்சியும் நிதானமும் தென்பட்டதை உணர்ந்தான். அதுவும் சற்று முன்பு அவள் தந்த அந்தப் புன்னகை. அவனைத் தலைகுப்புற புரட்டிப் போட்டது.

மெதுவாக நடந்து அவள் அருகே வந்து நின்றான். அந்த முகத்தைப் பார்க்க வேண்டுமென்று. ஆனால் அவள் அதே புன்னகையுடன் திரும்பி, “எனக்கு துபாய்ல வேலை கிடைச்சிருக்கு” என்று சொல்லி அவன் இதயத்தை இரண்டாகப் பிளந்துவிட்டாள்.

இதை சொல்வதற்குத்தான் இத்தனை தூரம் வந்தாயா? அந்த முத்தம். பிரிவுக்கு முன்பாகக் கொடுக்கும் முத்தமா?

‘போ போ.. என் வாழ்க்கையை விட்டு போ’ என்று சொன்னான்தான். ஆனால் அவளாகப் போகிறேன் என்ற போது வலித்தது. தாங்க முடியவில்லை.

‘போகாதே’ என்று அவள் கை பிடித்துக் கதற வேண்டும் போலிருந்தது. அப்படி எல்லாம் உணர்ச்சிவசப்பட்டுச் செய்து விடக் கூடாது என்று தன் கரங்களை அந்தச் சுவரின் பிடியில் அழுத்திக் கொண்டான்.

அவள் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். ஏதாவது பேசுவான் என்ற எதிர்பார்ப்புடன்.

தன்னுள்ளிருந்து வெடித்து வெளியே வர இருந்த அழுகையை அப்படியே தொண்டைக் குழியில் இருத்திக் கொண்டு, “நல்லபடியா போயிட்டு வா” என்றான்.

சில நிமிட மௌனத்திற்குப் பின் அவள் மெல்லிய குரலில்,

“நான் போக கூடாதுனு நீ இப்போ நினைச்சதானே” என்று கேட்டுத் துளையிட்ட அவள் விழி விசை அவனைத் தடுமாறச் செய்தது.

“நான் என்ன நினைக்குறங்குறது எல்லாம் முக்கியம் இல்ல” என்று ஒரு மாதிரி அவன் சமாளிக்க,

“ஏன் முக்கியம் இல்ல?” என்று கை கட்டிக் கொண்டு அதே தீர்க்கப் பார்வையை அவன் மீது வீசினாள்.

அந்த கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.

“நான் உன் கூட இல்லாம போனா நீ சந்தோஷமா இருப்பியா?” என்று அவள் மேலும் கேட்க அவன் அவளைப் புரியாமல் பார்த்தான்.

“அன்னைக்கு அவ்வளவு பேசுன... இன்னைக்கு ஏன் பேச மாட்டுற... பேசு” என்று அவள் முறைக்க,

“அன்னைக்கே நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்... இனிமே நான் சொல்ல என்ன இருக்கு” என்று அவன் பதிலளிக்க, அவள் கண்களில் கோபம் தெறித்தது.

“ஆமா பேசிட்ட... உன் மனசுல இருக்க அத்தனையும் கொட்டிட்ட இல்ல... ஆனா இன்னும் கொஞ்ச நேரம் நீ அங்கே இருந்திருந்தனு வைய்யு... உன்னை கொன்னிருப்பேன்... ஆனா அதுக்குள்ள நீ போயிட்ட” என்றவள் வெடிக்க அவன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.

“அதுக்கு என்ன... இப்போ நான் உன் முன்னாடிதானே இருக்கேன்... கொல்லு” என்றான்.

“அதுக்குதான் நான் இங்க வந்ததே... உன்னை விட்டு தூரமா போக போறேன்னு சொல்லி உன்னை நோகடிச்சு... அழ வைச்சு பார்க்கனும்னுதான் வந்தேன்

ஆனா உன்னை நேருக்கு நேரா பார்த்த அந்த செகண்ட்... நீ என்னை பார்த்த அந்த பார்வை... என்னால முடியல

நான் என்ன எல்லாம் யோசிச்சுட்டு வந்தேனோ எல்லாமே ஒன்னும் இல்லாம ஆகிடுச்சு” என்றவள் கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை மூடி கொண்டு அழுதாள்.

“ஜீவி” என்றவன் பதறி போய் அவள் தோளைத் தொடப் பட்டென்று அவன் கரத்தை தட்டிவிட்டவள்,

“என்னை தொடாத” என, “சரி தொடல... ஆனா நீ அழாதே... ப்ளீஸ்” என்றான்.

“ஆமா நான் ஏன் அழணும்... நீதாண்டா அழணும்... என்னை விட்டுட்டு வந்த நீதான் அழணும்... உன்னை நல்லா அழ வைச்சுட்டு நான் தூரமா போயிடணும்” என்றவள் சொன்னதைக் கேட்டு,

“நீ என்னை விட்டு போயிடுறதுதான் நல்லது ஜீவி” என்றான்.

அந்த நொடியே அவன் சட்டையை இழுத்துப் பிடித்து, “முடியாதுடா... நான் போக மாட்டேன்... நான் உன் கூடத்தான் இருப்பேன்... உன் கூடத்தான் வாழ்வேன்” என்றாள்.

“ஜீவி”

“என்ன இப்போ... நான் உன் கூட வாழ்ந்தா... உன் குடும்பத்தால நான் உன்னை வெறுத்துடுவேனோனு நீ பயப்படுறியா” என்று வினவ,

“பயம் இல்லடி அதுதான் நிஜம்” என்று அவன் தவிப்புடன் சொல்ல அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு,

“சரி அதுவே நிஜமா இருக்கட்டும்... எதிர்காலத்துல ஒரு வேளை எனக்கு இந்த வாழ்க்கை வேணாம்னு தோணுச்சுனா அப்போ பார்த்துக்கலாம்... இப்பவே நடக்க போறதை யோசிச்சுட்டு ஏன் பயப்படணும்?” என்று கேட்டாள்.

“நான் அதுக்கான காரணத்தை உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்”

“என்ன... நம்ம டிவோர்ஸ் பண்ணிட்டா நம்ம குழந்தைங்களை அது பாதிக்கும் அதானே... அப்படினா நம்ம குழந்தைங்களே பெத்துக்க வேண்டாம்” என்றாள்.

அதிர்ந்து அவளை நோக்கியவன், “நீ என்ன பேசுறனு புரிஞ்சுதான் பேசுறியா” என,

“நல்லா புரிஞ்சுதான் பேசுறேன்... நமக்கு குழந்தைங்க வேண்டாம்... ஏற்கனவே உனக்கு இருக்க கமிட்மென்ட் போதும்... புதுசா எதையும் ஏற்படுத்திக்கிட்டு நம்ம வாழ்க்கையை குழப்பிக்க வேண்டாம்” என்றாள்.

நம்ப முடியாமல் அவளை பார்த்து, “நீ சொல்றது எல்லாம் எவ்வளவு தூரம் பாசிபிள்னு நீ நினைக்குற” என்று கேட்க அவள் கடுப்புடன்,

“பப்ளிக் எக்ஸாம்ல கெமிஸ்ட்ரில உன் கிளாஸ்ல இருக்க எல்லோரும் பாஸாயிடுவாங்களா... அது பாசிபிளா?” என்றாள்.

“இது என்ன கேள்வி”

“பதில் சொல்லு”

“இரண்டு மூணு பேர் வீக்கா இருக்காங்க.... ஆனா அவங்களும் பெயில் எல்லாம் ஆக விட மாட்டேன்”

“ஸோ எவ்வளவு வீக் ஸ்டூன்டட்டா இருந்தாலும்... நீ விட்டு கொடுக்க மாட்ட இல்ல... ட்ரை பண்ணுவ இல்ல... அப்புறம் நம்ம ரிலேஷன்ஷிப்ல மட்டும் ட்ரை பண்ணாம ஏன் நீ விட்டு கொடுக்கணும்னு நினைக்குற”

“ஏன் னா என் வாழ்க்கையை பத்தி எனக்கு தெரியும்... நான் மாட்டிட்டு இருக்க ட்ரேப்ல உன்னையும் கொண்டு போய் மாட்டிவிட நான் விரும்பல... யூ டிஸவ் பெட்டர் லைப்” என்றவன் அழுத்தமாகச் சொல்ல,

“ஸோ டூ யூ” என்றாள் அவளும்.

“என் வாழ்க்கைல நீ எதையும் மாத்த முடியாது ஜீவி”

“ஆனா என் வாழ்க்கையை நீ மாத்துனியே... என்னை சுத்தி இருக்கிற எல்லா விஷயங்களையும் நீ பாஸிட்டிவா மாத்துனியே”

“உன்னுடையதை மாற்ற முடியும்... என்னுடையது முடியாதுனு சொல்றேன்... புரியுதா உனக்கு”

“சரி... மாற்ற வேண்டாம்... உன் கமிட்மெண்ட்ஸ் கூட நீ இரு... நான் உன் கூட இருக்கேன்... உன் வீட்டுல இருக்க முடியலனா... உன் பக்கத்து வீட்டுல இருக்கேன்... ஆனா உன் கூட இருப்பேன்... அவ்வளவுதான்” என்றவள் உறுதியுடன் சொன்னதை கேட்ட பிறகு அவனுக்கு வார்த்தையே வரவில்லை.

“நீ உன் வாழ்க்கையை விட்டுதான் என்னை போக சொல்ல முடியும்... என் வீட்டை விட்டு போக சொல்ல முடியாது இல்ல” என்றவள் பேசி கொண்டே போனாள்.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அது போல அவளின் வார்த்தைகளும் அவன் உறுதியை சிதில் சிதிலாக நொறுக்கிவிட்டது.

“எனக்கு மட்டும் என்ன... உன்னை பிரியணும்னு ஆசையாடி... நானும் உன் கூட சந்தோஷமா வாழணும்தான்டி ஆசைப்படுறேன்” என்றறு சொன்னவன் குரல் உடைந்தது.

அவன் முகத்தைப் பார்த்தவள், “அப்போ வாழ்வோம்?”என்று கூற, அவன் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

அவள் கன்னங்களைப் பற்றிக் கொண்டவன், “வாழ்வோம்... ஆனா இந்த முடிவை நினைச்சு என்னைக்காவது ஒரு நாள் நீ வருத்தப்பட்டனு வை” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“ஜீவா ப்ளீஸ்” என்றவள் குறுக்கிட்டாள்.

“இல்லடி... அப்படி ஒரு நாள் வர கூடாது... அதுக்காகவே உன்னை நான் சந்தோஷமா பார்த்துக்க என்னால முடிஞ்சளவு முயற்சி செய்றேன்... ஆனா அதெல்லாம் மீறி நம்ம உறவுல உனக்கு மூச்சு முட்டுற மாதிரியான ஒரு நிலைமை ஏற்பட்டுச்சுனு வைச்சுக்கோ... தயங்காம என்னை விட்டுட்டு போயிடு... போயிடு ஜீவி... யோசிக்காத” என்று அவன் சொல்ல வியப்படங்காமல் அவனை பார்த்தவள்,

“இதை விட பெட்டரா யாருமே அவங்க காதலை சொல்ல முடியாது ஜீவா... இதுக்காகவே உன்னை நான் அவ்வளவு காதலிக்கிறேன் ”என்றவள் அவனுள் தன்னை புதைத்து கொள்ள பத்திரமாக அவளை தன்னுள் அவனும் பொத்திக் கொண்டான்.

‘happily lived ever after’ என்ற வாக்கியம் எல்லா காதல் கதைகளுக்கும் சாத்தியம் இல்லை. அது அவரவர்களின் வாழ்க்கையை மற்றும் சூழ்நிலையை பொருத்தது.

அப்படிப் பார்த்தால் காதல் என்பது எப்போதுமே இணைந்தே இருப்போம் என்று சங்கல்பம் எடுத்து கொள்வது மட்டும் இல்லை. ஒரு வேளை இணைந்திருக்க முடியாமல் போகும் போது அதன் பிடியைத் தளர்த்திவிட்டு விலகிச் செல்ல அனுமதிப்பதும் தான்.

*************நிறைவு***************

Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா