மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kannadi Thundugal - RerunKannadi Thundugal - Episode 2Post ReplyPost Reply: Kannadi Thundugal - Episode 2

Quote from monisha on February 23, 2025, 5:39 PM

2

'பெரும்பாலான நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் நம்முடையதாக இருப்பதில்லை. நம்மைக் கொண்டு வந்து அந்த முடிவுகளுக்குத் தள்ளிவிடுவார்கள் அல்லது அத்தகைய இக்கட்டான சூழலுக்கு நம்மை இழுத்து வந்துவிடுவார்கள்.'

அன்றைய அந்த விடியல் அவளுக்கு அமைதியாக விடியவில்லை. பரபரப்பும் போராட்டமுமாகவே தொடங்கியது.

சூரியன் அப்போதுதான் மெல்ல வானவெளியில் தலைக்காட்டத் தொடங்கியிருந்தான்.

விடுமுறை நாள் என்பதால் நந்திகா அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள். பாலாஜி ஐந்து மணிக்குக் கடைக்குச் சரக்கு எடுப்பதற்காகக் கிளம்பிச் சென்றுவிட்டார். அவரை வழியனுப்பிவிட்டு வந்த இராஜேஷ்வரி கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்று உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் பின்புறம் உள்ள குளியலறைக்குச் சென்றுவிட்டார்.

தீபிகாவிற்கு இதுதான் சரியான சமயம் என்று தோன்றியது. சத்தமில்லாமல் எழுந்து வந்து ஒரு பையில் தன்னுடைய துணிகளை வாரி எடுத்து ரொப்பிக் கொண்டாள். பூஜை அறை உண்டியலில் நிரம்பி இருந்த நோட்டுக்கள் சில்லறைகள் என்று கணக்குப் பார்க்காமல் மொத்தமாகத் தன் கைப்பையின் உள்ளே கொட்டிக் கொண்டாள்.

இதயத் துடிப்பு தாறுமாறாக அடித்தது. இறுதியாக சார்ஜிலிருந்த தங்கையின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டினாள்.

என்ன செய்கிறோம்? நாம் செய்வது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்கக் கூட அவளால் முடியவில்லை. இரவெல்லாம் யோசித்து யோசித்துக் களைத்துப் போனவளுக்கு இதைத் தவிர வேறு வழிகள் இருப்பதாகவும் தெரியவில்லை.

யாரோ பின்னே துரத்திக் கொண்டு வருவது போன்ற உணர்வு. அட்ரினல் சுரப்பியின் கைகங்கரியம். அடித்துப் பிடித்து அவள் வீட்டின் தெருவை நிமிட நேரத்தில் கடந்தவள் எந்த யோசனையும் இல்லாமல் சாலையில் சென்ற ஆட்டோவைக் கைக் காட்டி நிறுத்தினாள்.

“எங்கம்மா போகணும்?” என்று ஆட்டோக்காரரின் கேள்விக்கு, “அது” என்று ஒரு நொடி யோசித்தவள்,

“பஸ் டிப்போ போங்க அண்ணா” என்றபடி ஏறி அமர்ந்தாள்.

அந்த ஆட்டோ அங்கிருந்து நகர்ந்ததும்தான் லேசாக மனம் அமைதி பெற்றது.

தான் எடுத்து வந்திருந்த தங்கையின் கைப்பேசியில் விவேக்கின் எண்ணிற்கு அழைத்தாள். வெகுநேரம் அடித்து ஓய்ந்ததே ஒழிய அவன் எடுக்கவில்லை. திரும்ப திரும்ப அவனுக்கு அழைத்துப் பார்த்தாள். பலனில்லை.

“ம்மா டிப்போ வந்திருச்சு” என்று ஆட்டோகாரர் குரல் கேட்டு நிமிர்ந்தவள் இறங்கிவிட்டு, பணத்தைக் கொடுத்தாள்.

ஆட்டோ நகர்ந்துவிட, அந்தப் பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் பார்வையிட்டாள். வரிசையாகப் பேருந்துகள் நின்றிருந்த போதும் ஆள் அரவமே இல்லாமல் ஒருவித பயங்கர அமைதி அங்கே நிலுவியது. அவளுக்கு உள்ளுர நடுங்கத் தொடங்கிவிட்டது.

ஏதோ அத்துவானக்காட்டில் தனித்துவிடப்பட்டது போன்று உணர்ந்தவளுக்குக் கண்களில் கண்ணீர் பெருகிற்று. மீண்டும் வீட்டிற்குத் திரும்பிப் போய்விடலாமா என்று எண்ணமிட்டாள்.

சரியாக அந்தச் சமயம் தூரத்திலிருந்து வந்த நடத்துனரும் ஓட்டுனரும் அங்கிருந்த ஒரு பேருந்தை நகர்த்த, அத்தனை நேரம் ஆளரவமே இல்லாதிருந்த அவ்விடத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித தலைகள் தென்பட்டன.

ஒவ்வொருவராக அந்தப் பேருந்தில் சென்று ஏறினார்கள். என்ன செய்வதென்று அவள் குழம்பிய நிலையில் கைப்பேசி ஒலித்தது. விவேக் என்று எண்ணி அவள் ஆர்வத்துடன் பார்க்க, அம்மாவின் அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

அடுத்த நொடியே அவளைக் கடந்துச் செல்ல இருந்த பேருந்தைக் கைக் காட்டி நிறுத்தி அதில் ஏறிக் கொண்டாள். அவர்கள் தன்னைத் தேடி வருவதற்கு முன்பாகத் தான் ஏதேனும் பாதுக்காப்பான இடத்தை அடைந்துவிட வேண்டுமென்று எண்ணினாள். மீண்டும் மீண்டும் அம்மாவின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதனை அணைத்து வைத்துவிட்டாள்.

“எங்கம்மா போகணும்?” என்ற அருகே வந்து நின்று கேட்ட நடத்துனரின் கேள்விக்கு உண்மையிலேயே அவளுக்குப் பதில் தெரியவில்லை.

பதட்டத்தில் அந்தப் பேருந்து எங்கே செல்கிறது என்று பெயரைக் கூடப் பார்க்காமல் அவள் ஏறிவிட்டாள்.

“இந்த பஸ் எங்கே போகுது?” என்று அவள் தயங்கித் தயங்கிக் கேட்கவும் அவளை விசித்திரமாக ஒரு பார்வை பார்த்தவர்,

“பிராட்வே” என்று சொன்ன நொடி, “பிராட்வேக்கு டிக்கெட் கொடுத்திருங்க” என்று காசைக் கொடுத்து டிக்கெட்டை வாங்கிக் கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அலைபேசியை அணைத்து விட்டதால் விவேக்கை இப்போது எப்படி தொடர்பு கொள்வது என்று யோசித்தாள். தவிப்புடன் கைவிரல்களை இறுகப் பிணைத்துக் கொண்டு ஜன்னல் புறம் பார்வையைத் திருப்ப, கண்களில் தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. அப்படியே முன்புற கம்பியில் தலை சாய்த்துக் கொண்டு அழத் தொடங்கிவிட்டாள்.

உள்ளூர அடக்கி வைத்திருந்த உணர்வுகளும் வலிகளும் வெடித்து வெளியேறின.

வீட்டை விட்டு ஓடி வருவோம் என்றெல்லாம் அவள் நினைத்தாளா என்ன? எது கொடுத்த தைரியம்?

உண்மையில் அவள் தைரியத்தினால் ஓடி வரவில்லை. அதீத அச்சத்தின்பால் ஓடி வந்திருக்கிறாள். அந்த அச்சத்தைக் கொடுத்தது வேறு யாருமில்லை. இத்தனை நாள் அன்பும் பாசமும் கொட்டி வளர்த்த அவள் பெற்றோர்கள்தான்.

ஒரு வேளை அன்று தேர்வை முடித்துவிட்டு ஒழுங்காக வீடு போய் சேர்ந்திருந்தால் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை அவளுக்கு நேராமல் இருந்திருக்கும். ஆனால் அப்போது இப்படி எல்லாம் நடக்கும் என்று அவள் நினைக்கவில்லையே!

விவேக்குடன் செலவழிக்கும் சின்னச் சின்னத் தருணங்களும் கூட அத்தனை சந்தோஷமாகவும் இனிமையாகவும் இருந்தது. அதேநேரம் தன் பெற்றோர்களுக்குப் பயந்து இப்படியான சந்திப்புக்களை அவள் தவிர்த்த போதும் அன்று ஏனோ அவனைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியதாலேயே அவனை வரச் சொன்னாள்.

அதிகபட்சம் அருகே இருக்கும் ஐஸ் க்ரீம் பார்லரில் பேசிச் சிரிப்பதைத் தாண்டிப் பெரிதாக எங்கும் அவனுடன் அவள் ஊர் சுற்றியதில்லை. ஒரே ஒரு முறை சினிமாவிற்குச் சென்று வந்தாள். அதற்கே உள்ளுர அவள் எவ்வளவு பயந்து நடுங்கினாள் என்று அவளுக்குதான் தெரியும். படத்தின் ஒரு காட்சியைக் கூட அவளால் நிம்மதியாக இரசிக்க முடியவில்லை.

அதற்குப் பிறகு விவேக் எத்தனை கேட்டும் அவனுடன் அவள் சினிமா போன்ற இடங்களுக்குச் செல்ல மறுத்துவிட்டாள். எப்போதும் போலக் கல்லூரி முன்பு இருக்கும் பஸ் நிறுத்தத்தில் பேசுவதும் எப்போதாவது அருகே இருக்கும் ஐஸ் க்ரீம் பார்லரில் ஐஸ் க்ரீம் உண்பதைத் தாண்டி அவர்கள் காதலில் பெரிய சுவாரசிய அனுபவங்கள் எல்லாம் இல்லை.

அப்படிதான் அன்றும் இயல்பாக அவளுக்குப் பிடித்த பட்டர் ஸ்காட்ச்சை வாங்கிச் சுவைத்துக் கொண்டே அவனுடன் கதையடித்துக் கொண்டிருந்தாள். அப்போது எதேச்சையாக அவள் பார்வையைத் திருப்பவும் எதிரே இருந்த ஒரு ஆடவன் அவளை ஆழமாக ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வை ஒருவித அசௌகரியத்தையும் அச்சத்தையும் அவளுக்குத் தோற்றுவிக்க அந்தக் கணமே,

“விவேக் நாம கிளம்பலாம்” என்றாள்.

“ஏய்... என்ன இப்பதானே வந்தோம்” என்று விவேக்கின் முகம் சுணங்கியது.

“கிளம்பலாம்” என்று அவள் தன் கையிலிருந்த ஐஸ்க்ரீமைப் பாதி உண்ணாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

“தீபு இரு போலாம்” என்று அவள் நிலைமை புரியாமல் அவன் அவள் கரம் பிடிக்க,

“கையை விடு விவேக்... அங்க ஒரு ஆள் முறைச்சு முறைச்சு நம்மளயே பார்த்துட்டு இருக்கான்... எனக்கு என்னவோ சரியா படல” என்று மெல்லிய குரலில் பதட்டத்துடன் சொன்னவள்,

“நான் உனக்கு வீட்டுக்குப் போயிட்டு மெஸேஜ் பண்றேன்” என்று அப்போதே கிளம்பிச் சென்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்த பிறகு எந்தவிதப் பிரச்சனைகளும் இல்லாமல் எல்லாமே இயல்பாக இருந்ததில் அந்தப் பார்வையை அவள் அசட்டையாக விட்டாள். ஆனால் அந்தப் பிரச்சனை உள்ளுக்குள்ளேயே கனன்று பெரும் தீயாகக் கொழுந்துவிடும் என்று பெண்ணவள் அப்போது அறியவில்லை.

மாமா வீட்டில் குலத் தெய்வம் கோவிலுக்குப் பொங்கல் வைக்க அழைக்கிறார்கள் என்று சொல்லவும் எல்லோரும் குடும்பத்துடன் புறப்பட்டனர். சொந்தபந்தங்கள் எல்லாம் கிளம்பி வேனில் செல்ல, நடக்கப் போகும் விபரீதம் அறியாத தீபிகாவும் அவர்களுடன் சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தாள்.

அவர்களுக்கு முன்பாகவே அவளின் தாய்மாமன் குடும்பம் கோவிலில் காத்திருந்தது. அவர்களுடன் கிருபாகரனையும் பார்க்க நேர்ந்ததில் லேசாக மனதிற்குள் ஏற்பட்ட நெருடலை அவள் மறைத்துக் கொண்டாள்.

அவர்கள் குடும்ப வழிபாட்டிற்கு அவன் வராமல் இருப்பானா? என்று நினைத்தவள் இயல்பாக அவர்களுடன் அவளும் கலந்து வேலை செய்தாள். பூ, பழம் மற்றும் இதர சாமான்கள் நிரம்பிய கட்டைப் பைகளை எல்லாம் அவள் வேனிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது தனியே அவளை அழைத்த இராஜேஷ்வரி,

“இந்த புடவையை மாத்திட்டு வந்துடலாம் வா” என்றார்.

“ஏன் மா மாத்தணும்... இதுவே நல்லாத்தானே இருக்கு”

“இருக்குதான்... ஆனாலும் பூஜைக்கு இது வேண்டாம்... இதைக் கட்டிக்கோ” என, அவளுக்கு உள்ளுர ஏதோ நெருடியது.

“என்னமா பிரச்சனை உனக்கு...? ஏன் இப்போ நான் புடவையை மாத்தணும்?” என்றவள் அழுத்தமாகக் கேட்க,

“அம்மா சொல்றாங்க இல்ல... போய் மாத்திட்டு வா” என்று அங்கே வந்த அவள் தந்தையின் குரல் கணீரென்று ஒலிக்க, அதன் பிறகு அவளால் மறுக்க முடியவில்லை.

“இங்கே எங்கமா நான் புடவை மாத்துறது” என்றவள் தவிப்புடன் கேட்க,

“நம்ம பூசாரி வீட்டுல மாத்திக்கோ” என்று தெரு முனையில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிவப்பு வண்ணப் பட்டுச் சரிகை மின்னிய அந்தப் புடவையை உடுத்தும் போது மனதில் இனம் புரியாத பயவுணர்வு பற்றிக் கொண்டது.

ஒரு மாதிரி தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவள் பட்டுப் புடவை உடுத்தி கோவிலுக்கு வர, அங்கே அவளுக்கும் கிருபாகரனுக்கும் சொந்தங்கள் முன்னிலையில் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

அவள் இதைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. சூடான இரத்தம் அவள் பாதம் முதல் தலை வரை பாய்ந்தது. உள்ளுர எழுந்த கோபத்தில் அவள் நரம்புகள் புடைத்து வெடிக்கக் காத்திருந்த போதும், இங்கே கோபப்பட்டு ஏதேனும் பேசிவிட்டால் சொந்த பந்தங்கள் முன்னிலையில் தன் பெற்றோர்கள் அவமானப்பட நேரிடுமே என்ற எண்ணத்தில் தன் உள்ள குமுறலை அடக்கிக் கொண்டு நின்றாள்.

அங்கிருந்த யாருமே அவள் விருப்பத்தைக் கேட்கவில்லை. கோவிலுக்குள் கல்லாக வீற்றிற்கும் அம்மனிடம் சென்று ஆசிர்வாதமும் அனுமதியும் கேட்கிறவர்கள் சதையும் இரத்தமுமாக நிற்கும் உயிருள்ள அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.

அவ்வப்போது நந்திகா மட்டும் தமக்கையைக் கவலையுடன் நோக்கினாள். இத்தனை பெரிய அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதும் அவள் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வராமல் இருப்பதில் அவளுக்கே கூடத் தான் உயிருள்ள மனுஷியாகதான் நிற்கிறோமா என்ற சந்தேகம் எழத் தொடங்கிவிட்டது.

கிருபாகரன் முகத்தில் அத்தனை பிரகாசம். ஆனால் அதே அளவுக்குப் பிரகாசமும் சந்தோஷமும் அவள் முகத்தில் காணப்படவில்லை என்பதை அவனுமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாலை அணிவித்தல், மோதிரம் போட்டல் என்று நடந்த அத்தனை சடங்குகளுக்கும் அவள் உடன்படாமல் உடன்பட்டாள்.

வீடு வந்து சேரும் வரை அவள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஏதோ பெரிதாகச் சாதித்துவிட்ட உணர்வில் முகப்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவள் அம்மா அப்பாவின் முன்னே சென்று நின்று,

“ஏன் இப்படி பண்ணீங்க? எனக்கும் கிருபாவுக்கும் நிச்சயம் பண்ண போறோம்னு ஏன் ஒரு வார்த்தை கூடச் சொல்லல?” என்று கோபத்துடன் கேட்டாள்.

பாலாஜி அமைதியாக அமர்ந்திருந்தார். மகளை நிமிர்ந்து நோக்கிய இராஜேஷ்வரி, “ஏன்?.... நீ... எங்ககிட்ட ஒரு வார்த்தையாவது சொன்னியா?” என்று கேட்டு வைக்க, அந்த வார்த்தை அவளைச் சுருக்கென்று தைத்தது.

அம்மாவின் பார்வையும் கேள்வியும் விவேக்கைப் பற்றியது என்று ஓரளவு புரிந்த போதும் நேரடியாக அவனைப் பற்றிய பேச்சை எடுக்க அவள் துணியவில்லை. இந்தச் சமயத்தில் தன் காதலைப் பற்றிப் பேசினால் மேலும் பிரச்சனை பெரிதாகும் என்று தோன்ற,

“ப்பா ப்ளீஸ் பா... எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்... நான் படிக்கணும் வேலைக்குப் போகணும்” என்று சொல்லி தந்தையின் மனதைக் கரைக்க முயன்றாள்.

பாலாஜி மகள் தலையை வருடியபடி, “நான் கிருபாகிட்ட தெளிவா பேசிட்டேன் மா... உன் படிப்புக்கு எந்தவித இடையூறும் வராது... நீ மேலே படிக்கக் கூட அவன் சம்மதம் சொல்லிட்டான்” என, இராஜேஷ்வரி மகளைக் குத்தல் பார்வை பார்த்தார்.

அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அவன் யார் தான் வேலைக்குப் போகவும் படிக்கவும் சம்மதம் சொல்ல என்ற எண்ணம் எழ எரிச்சலுடன் தன் தந்தையைப் பார்த்தவள்,

“பா... எனக்கு கிருபாவைக் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல” என்று நேரடியாகச் சொல்லிவிட,

“ஏன் விருப்பம் இல்ல?” என்று இராஜேஷ்வரி மகளைத் திருப்பிக் கேட்டார்,

“ஏன் னு கேட்டா... கல்யாணம் பண்ணிக்கணும்னா எனக்கு அவனைப் பிடிக்க வேணாம ம்மா” என்றாள்.

“பிடிக்கலனா நிச்சயம் பண்ணும் போதே சொல்ல வேண்டியதுதானே... அங்க அமைதியா இருந்துட்டு இங்க வந்து இப்படி பேசுனா” என்று கேட்ட அம்மாவின் சாதுரியத்தைக் கண்டு கடுப்பான தீபிகா,

“ஒரு வார்த்தை கூடச் சொல்லாம சொந்தபந்தங்கள கூட்டி நிச்சயதார்த்தம்னு என்னைக் கொண்டு போய் அங்கே நிறுத்திட்டு இப்போ சொல்லி இருக்க வேண்டியதுதானே சொன்னா... நான் என்னமா சொல்லுவேன்” என்று தைரியமாகப் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென உடைந்துவிட்டாள்.

“அங்கே திடீர்னு எனக்கும் கிருபாக்கும் நிச்சயம்னதும் என் மனநிலை எப்படி இருந்துதுன்னு தெரியுமா உங்களுக்கு?” என்று அவள் நொறுங்கி அழ,

“அக்கா அழாதே” என்று நந்திகா அவளுக்கு ஆறுதல் கூற, இராஜேஸ்வரி மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

தன் இருக்கையில் இருந்து எழுந்து மகள் அருகே வந்த பாலாஜி, “இங்கே பாரு தீபா... உனக்கு அப்பாவோட மானம் மரியாதை முக்கியம்னு தோனுச்சுனா... நீ இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கோ... இல்லனா உன் இஷ்டம்” என்று தீர்க்கமாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்தக் கணமே, “நாங்க உங்களை எப்படி எல்லாம் வளர்த்தோம்... நீங்க கேட்டது எல்லாம் செஞ்சிக் கொடுத்தோம்” என்று இராஜேஷ்வரி தரையில் அமர்ந்து புலம்பத் தொடங்கிவிட அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் தீபிகா உள்ளே வந்துவிட்டாள்.

பின்னோடு வந்த நந்திகா, “நம்ம அம்மா அப்பா மனசைக் கஷ்டப்படுத்த கூடாது க்கா” என்று தனது அறிவுரைகளை ஆரம்பிக்க,

கடுப்புடன் அவள் புறம் திரும்பிய தீபா, “உனக்கு எப்போ இந்த விஷயம் தெரியும்” என்று கேட்க முகம் சுருங்கியவள்,

“முந்தா நேத்துதான்” என்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.

“அம்மாவோட கடைக்குப் போயிருந்தேன் இல்ல... அப்போதான் அம்மா இந்த விஷயத்தை எல்லாம் சொல்லி அழுதாங்க” என,

“என்ன விஷயத்தை சொல்லி அழுதாங்க” என்று தங்கையிடம் விசாரித்தாள்.

“நீ யாரையோ காதலிக்குறியாமே” என்ற வார்த்தைகளைக் கேட்டு அவள் அதிர்ச்சியாகவில்லை. அது தெரிந்துதானே இவர்கள் இந்த நாடகங்களை எல்லாம் அரங்கேற்றுகிறார்கள்.

அவள் மீண்டும் தங்கையைப் பார்த்து, “அம்மாவுக்கு எப்படி தெரியும் இந்த விஷயம்?” என்று கேட்க,

“கிருபா மாமாவோட ஃப்ரண்டு யாரோ... உங்களையும் உன் கூட இருந்தவங்களையும் ஒன்னா ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருக்காங்க... அந்த ஃபோட்டோவை மாமா அப்பாவுக்கு அனுப்பி இருக்காரு” என்று சொல்ல, அவளுக்குத் தன் காதல் விஷயம் எங்கே சுற்றி எப்படி வந்திருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக இப்போது புரிந்துவிட்டது.

ஆனால் தான் காதலிக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்டதும் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தன்னிடம் விவாதிக்காமல் அல்லது விளக்கம் கேட்காமல் இப்படியொரு முடிவை அவர்கள் எடுத்தது நியாயமே இல்லையென்று பட்டது.

அவளின் மனவேதனையை வீட்டில் உள்ள யாருமே புரிந்து கொள்ள முயலவில்லை. தன் வயதினை ஒத்த தங்கையும் கூட அவளுக்கு எதிராகவே நின்றாள்.

இரண்டாம் ஆண்டு தேர்வுகள் முடிந்த இந்த இடைப்பட்ட விடுமுறை நாட்களுக்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற அவர்களின் திட்டம் தீபிகாவை மேலும் அச்சுறுத்தியது.

விவேக்கிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதபடிக்கு அவள் கைப்பேசியும் பிடுங்கி வைக்கப்பட்டுவிட்ட நிலையில் அவள் பொறியில் சிக்கிய எலியாக மாட்டிக் கொண்டு தவித்தாள்.

திருமண நாட்கள் நெருங்க நெருங்க அவளின் தவிப்பு அதிகரிக்கவும்தான் வேறு வழியே இல்லாமல் இப்படியொரு முடிவை அவள் எடுத்துவிட்டாள். இப்போது யோசித்துப் பார்த்தால் இந்த முடிவும் கூட அவளுக்குச் சரியென்று தோன்றவில்லை.

அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் முகத்தை மூடி அழுதபடியே பயணித்தாள்.

Cancel “தூரமில்லை விடியல்” நாவல் முடிவுபெற்றது. விரைவில் “கண்ணாடி துண்டுகள்” மீண்டும் தளத்தில் பதியப்படும். வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா