மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Seethaigal Yaaro - From 30th episodeSeethaigal Yaaro - Episode 30 & 3 …Post ReplyPost Reply: Seethaigal Yaaro - Episode 30 & 31

Quote from monisha on April 15, 2026, 1:21 PM

To read Seethaigal yaaro from the start, Subscribe papr space and click the link below

Seethaigal Yaaro Full Link

அத்தியாயம் – 30

“இப்போ என்ன பண்ண போறோம்?” என்று ஜோஸ் கேட்ட கேள்விக்குச் சுடருக்கும் பதில் தெரியவில்லை. மாதவி விபத்தில் இறந்துவிட்டதாக அறிவிப்பு வந்த போது, உண்மையில் காலுக்கு அடியிலிருந்த பூமி துண்டாகப் பிளந்துவிட்டது போலிருந்தது. அதிலும் சாஷாவிற்கு உலகமே மொத்தமாக இருண்டுவிட்ட உணர்வு.

“நானும் சாகப் போறேன்... என்னையும் கொன்னுடுவாங்க” என்றவள் பயத்தில் பிதற்ற, ஜோஸ்தான் அவளை சிரமப்பட்டு தேற்றினாள். அதேநேரம் அவளுக்குமே கூட என்ன நடக்குமோ என்று பதற்றமாகத்தான் இருந்தது.

மூவரும் திக்குதெரியாத காட்டில் மாட்டிக் கொண்டிருந்தது போன்ற நிலையில்தான் இருந்தனர். அதில் இன்னும் கொஞ்சம் தெளிவுடன் இருந்தது சுடர் மட்டும்தான்.

“எக்ஸாம் முடியுற வரைக்கும் நம்ம யார்கிட்டயும் இதப் பத்திப் பேச வேணாம்”

“சரி... முடிஞ்ச பிறகு என்ன பண்ண போறோம்?” என்று ஜோஸ் சந்தேகமாகக் கேட்க,

“சொல்றேன்... இப்போதைக்கு எதுவும் பேசாம இருக்குறதுதான் நமக்கு நல்லது” என்றவள் சாஷாவின் தோள்களைப் பிடித்து, “எதுவும் நடந்த மாதிரி காட்டிக்காத... எப்பவும் போல இருக்கப் பாரு... எக்ஸாம்ஸ் எழுது” என்றாள்.

சாஷா ஒருவித விரக்தி நிலையுடன் தலையை அசைக்க, “உனக்கு எதுவும் ஆகாது... நான் ஆக விட மாட்டேன்... என்னை நம்பு” என்று சொல்லி சுடர் அவளை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.

அந்த அணைப்பு உண்மையில் சாஷாவிற்கு பெரிய ஆறுதலாக இருந்தது. கொஞ்சம் நம்பிக்கையையும் கொடுத்தது.

அதேநேரம் எழில் பயந்த சுபாவம் என்பதால் சுடர் அவளுக்கு இந்த விஷயங்கள் எதையும் சொல்லவில்லை. மறுபுறம் எழிலோ சூர்யா பைக்கில் சாஷா சென்றதைப் பற்றிச் சுடரிடம் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அன்று தேர்வு அறையில் சாஷாவைப் பார்த்த எழில், தேர்வு முடிந்ததும் அவளை ஓடிச் சென்று பிடித்துக் கொண்டாள். “நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” என்றதும் சாஷா அவளைக் குழப்பத்துடன் பார்த்தாள்.

‘இவளுக்கு விஷயம் தெரிந்திருக்குமோ சுடர் சொல்லி இருப்பாளோ’ என்று யோசித்திருக்கும் போதே எழில் ரகசிய குரலில் கேட்டாள்.

“நீ கல்சுரல்ஸ் அன்னைக்கு யார் கூட பைக்ல போன?” என, சாஷா அதிர்வுடன் பார்த்தாள்.

“நான் தப்பான நோக்கத்தில எல்லாம் கேட்கல... அந்த பைக்கைப் பார்த்த போது எனக்கு தெரிஞ்ச ஆளோட பைக் மாதிரி இருந்துச்சு... அந்த சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கத்தான் கேட்டேன்” என்று எழில் விளக்கவும், சாஷா யோசித்தாள்.

அவளுக்கு அந்த பைக்காரன் யாரென்று தெரியாது. அவன் ஹெல்மெட் அணிந்திருந்தான். அவள் இருந்த மனநிலையில் வண்டி எண்ணை கூட பார்க்கவில்லை.

அப்படியே யோசனையில் திகைத்து நின்றுவிட்டவள் தோளை தொட்டாள் எழில். ஏதோ பயங்கர கனவிலிருந்து மீண்டவள் போல பதறி விலகிய சாஷா,

“நீ என்ன சொல்ற... யாரைச் சொல்றன்னு எனக்கு ஒன்னும் புரியல... நானும் யார் கூடவும் பைக்ல போகல” என்று படபடத்துவிட்டு அங்கிருந்து ஓடியேவிட்டாள்.

அவள் அப்பட்டமாக பொய்யுரைக்கிறாள் என்று எழிலுக்கு புரிந்தது. ஆனால் ஏன் என்றுதான் விளங்கவில்லை. இதே குழப்பத்துடன் அவள் வீடு வந்து சேர, செல்வம் அவளுக்காகக் காத்திருந்தான்.

“அக்கா நான் எக்ஸாம்ஸ் நல்லா எழுதிட்டேன்... உண்மையிலேயே நீங்க சொல்லி கொடுத்த எல்லாமே வந்துச்சு” என்று உற்சாகமாக சொல்ல,

“சூப்பர்டா தம்பி... பாரு சீக்கிரமே நீ காலேஜ்லயும் சேர்ந்துருவ” என்று வாழ்த்தினாள்.

அதனைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டவன், “சரிக்கா நான் வர்றேன்” என்று வாசலை தாண்டி விட்டு அப்படியே நின்று திரும்பி வந்தான்.

“சுடர் அக்கா பின்னாடி கிணத்துகிட்ட யார் கூடவோ பேசிட்டு இருக்குறத பார்த்தேன்... முதல நீங்கன்னுதான் நினைச்சேன், அப்புறம்தான் அந்த சுடர் அக்கான்னு தெரிஞ்சுது” என்று விவரத்தை சொல்ல,

“அப்பா எங்கே?” என்றதும் அவன், “அவர் இன்னும் வரலக்கா” என்றான்.

“சரி நீ போ” என்றவள் உடனடியாக பின்பக்கமாகச் சென்று சத்தமில்லாமல் எட்டிப் பார்க்க, சூர்யாதான் சுடருடன் நின்றிருந்தான். அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம் போல நிகழ்ந்து கொண்டிருந்தது.

“நீ என்னவோ என்கிட்ட மறைக்குறடி... ஒழுங்கா சொல்லு என்ன விஷயம்”

“எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது... முதல நீ இங்கிருந்து கிளம்பு எங்க அப்பா பார்த்தா பிரச்னை ஆகும்”

“யார் பார்த்தா என்ன, நான்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன்”

“கல்யாணம் அது இதுன்னு ஆரம்பிக்காத”

“எங்க அம்மா கேட்குறாங்கடி”

“உங்க அம்மாவுக்காக எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது... எனக்கு நிறைய படிக்கணும்”

“என்னை கல்யாணம் பண்ணிட்டு படி, வேணாம்னு யார் சொல்லறா”

“அவ்வளவு அவசரம்னா... நீ வேற எவளாயாச்சும் போய் கல்யாணம் பண்ணிக்கோ” என்று விட்டுச் சுடர் அவனை அலட்சியமாக கடந்து செல்லவும், அவன் அவள் கையை பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டான்.

“யாராச்சும் பார்க்கக் போறாங்க விடு” என்று அவள் முரண்ட,

“சரி சரி... கல்யாணத்தைப் பத்தி நான் பேசல” என்று இறங்கி வந்தவன் மெல்ல அவள் கன்னத்தைப் பற்றி, “என்னை விட்டுட்டு போறேன்னு மட்டும் சொல்லாத” என்றான்.

அந்த நொடியே சுடரின் கோபம் தணிந்துவிட, “நான் எங்கே உன்னை விட்டுட்டு போறேன்னு சொன்னேன்... நீதான் கல்யாணம் அது இதுன்னு என்னை அவசரப்படுத்துற” என,

“சரி இனிமே அப்படி பேச மாட்டேன்” என்றான்.

“சரி நானும் இனிமே அப்படி சொல்ல மாட்டேன்” என்று அவள் சமாதானமாக பேசியதும் அவன் மெதுவாக அவள் இதழ்களில் முத்தமிட நெருங்கினான்.

எழில் சங்கடத்துடன் தலையை குனிந்து கொள்ள, சுடர் அதற்குள் அவனை தள்ளிவிட்டிருந்தாள்.

“இந்த வேலைதானே வேண்டாங்குறது ஒழுங்கா கிளம்பு” என்றதும் அவன் ஏக்கத்துடன் அவளை பார்த்தான்.

“கிளம்பு சூர்யா”

“எக்ஸாம் முடியுற வரைக்கும் உன்னை பார்க்க முடியாதா?” என்று அவன் அப்போது அங்கேயே நின்று தவிப்புடன் கேட்க,

“நான் வேறொரு பிரச்னைல இருக்கேன்... அது முடிஞ்சதும் நானே உன்னை பார்க்க வரேன்” என்றாள்.

“கன்னத்துலயாச்சும் ஒன்னு கொடு” என்றவன் கேட்க,

“அறை கொடுக்கவா” என்றாள்.

“சரி அதையாச்சும் கொடு” என்றவன் கன்னத்தை காட்ட, “போடா” என்று அவனை வெட்க புன்னகையுடன் தள்ளிவிட்டாள். அவன் போக மனமே இல்லாமல் அங்கிருந்து செல்ல, அவர்களின் காதல் காட்சியை பார்த்திருந்த எழிலுக்கு சூர்யா மீதான அபிப்பிராயம் மாறி போனது.

அவனைத் தேவை இல்லாமல் சந்தேகப்படுகிறோமோ என்று தோன்றியது. சத்தமில்லாமல் மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

இந்த நிலையில் சாஷாவிடமிருந்து சுடருக்கு அழைப்பு வந்தது. அவள் எழில் பேசியது அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

“ஆமா நீ ஏதோ பைக்காரனை பத்தி சாஷாகிட்ட கேட்டியாமே” என்று எழிலிடம் சுடர் விசாரிக்க, அவள் பதற்றமானாள்.

“உன்னைத்தான் கேட்குறேன்... அவகிட்ட ஏன் அப்படி கேட்ட?” என்று சுடர் அழுத்தமாக வினவ,

“உனக்கு யார் சொன்னது?” என்றாள்.

“யார் சொன்னா என்ன.... நீ சொல்லு... ஏன் கேட்ட?” என்று சுடர் விடாமல் துருவ, எழில் உளறிவிட்டாள்.

“கல்சுரல்ஸ் அன்னைக்கு நான் சீக்கிரம் கிளம்பிட்டேன் இல்ல... அப்பத்தான் சாஷா யார் கூடவோ பைக்ல போனதைப் பார்த்தேன்... அது பார்க்க அப்படியே சூர்யா பைக் மாதிரியே இருந்துச்சு”

அதிர்ச்சியான போதும் சுடர் அதனை வெளிகாட்டிக் கொள்ளாமல், “பைக் நம்பர் பார்த்தியா?” என்று கேட்க, “இல்ல” என்றாள்.

“அப்புறம் எப்படிறி அது சூர்யா பைக்குனு சொன்ன?”

“நம்பர் பார்க்கல... பைக் ஓட்டிட்டு வந்த விதம் பாடி லேங்குவஜ் எல்லாம் பார்த்தா அப்படியே சூர்யா மாதிரியே இருந்துச்சு... அதான் சந்தேகப்பட்டு கேட்டேன்”

“நீயும் உன் சந்தேகமும்” என்று சுடர் அவளின் சந்தேகத்தை அலட்சியப்படுத்திவிட்டாள்.

மறுபுறம் கல்லூரியில் தேர்வுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. மறுபுறம் விடுதியில் உள்ள பெண்களை எல்லாம் ஒவ்வொருவராகச் சந்தித்து ஜோஸலினும் சுடரும் நடந்த சம்பவத்தைப் பற்றிப் பேசினார்கள். அதில் ஒன்றிரண்டு பேர் சாஷாவைப் போலவே பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த பெண்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பது என்று முடிவு செய்தனர். “நமக்காக நம்மதான் சண்டை போட்டாகணும்” என்று சுடர் யோசனைப்படி தேர்வு முடிந்த மறுநாள் அந்த விடுதி பெண்கள் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ரகசியமாக தயாராகி கொண்டிருந்தனர்.

இறுதி நாள் தேர்வு முடிந்த அன்று ஜோஸ், “எங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்... இப்பதான் போன் வந்துச்சு... நான் போகணும்” என்று தயக்கத்துடன் சொல்ல,

“அப்போ சாஷா கூட யார் இருப்பா?” என்று கேட்டாள் சுடர்.

“எனக்கும் என்ன பண்றதுனு தெரியல”

“சரி விடு... நான் அவ கூட இருக்கேன் நீ கிளம்பு”

“நான் சீக்கிரம் வந்துடுறேன்... நீ அந்த வார்டன் கண்ணுல மட்டும் மாட்டிடாத”

“இது என்ன முதல தடவையா எனக்கு?”

“இப்ப அது ரொம்ப கெடுபிடி பண்ணிட்டு இருக்கு ... ஏன் யாரும் ஊருக்கு கிளம்பாம இருக்கீங்கனு கேட்டுட்டு இருக்கு”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றவள் ஜோஸை வழியனுப்பிவிட்டு எழிலிடம் தகவலை கூறினாள்.

“இது ஒன்னும் சரி இல்ல” என்றவள் சொல்ல,

“சரி தப்பு எல்லாம் எனக்கு தெரியும், நீ அப்பாவை மட்டும் சமாளிச்சுக்கோ” என்று விட்டு சுடர் விடுதியில் எப்போதும் வரும் பின்பக்கமுள்ள சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே நுழைந்துவிட்டாள்.

அந்த இரவு, விடுதி அறைகளுக்குள் ஒருவித கனத்த சூழ்நிலை நிலவியது. கூடவே நாளை என்னவாகுமோ என்ற பயம் வேறு.

ஆனால், சுடரின் வருகை அந்தச் சூழலையே மாற்றியது. "ஏன் இப்படி முகத்தை தூக்கி வைச்சிருக்கீங்க? வாங்க விளையாடலாம்" என்று அவள் அழைக்க, பாதிக்கப்பட்டிருந்த மாணவிகள் உட்பட அனைவர் முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தது.

விடுதியின் மேல்மாடியின் அருகே இருந்த வராண்டாவில் எல்லோரும் வட்டமாக கூடினர்.

பாட்டுக்கு பாட்டு விளையாடுவது என்று முடிவாக, இரு குழுவாக பிரிந்து விளையாட்டை தொடங்கினர்.

“கண்ணே கலைமானே... கன்னி மயிலெனக் கண்டேன் உன்னை...” என்று ஆரம்ப பாடலே சோகமாகத் தொடங்கியது.

அடுத்ததாக, “நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்...” என்று எதிர் குழுவும் மெல்லிய கானமாக பாட, சுடர் கடுப்பாகிவிட்டாள்.

“அதரடியா ஏதாவது பாடுங்கடினா சோகப்பாட்டு தத்துவப் பாட்டு எல்லாம் பாடிக்கிட்டு” என்றதும்தான் ஆட்டம் சூடுபிடித்தது.

“அப்படி போடு போடு போடு... இழுத்து போடு கையால” என்று ஆரம்பித்து ஒரே டப்பாங்குத்து பாட்டாக பாடி கொண்டிருந்ததில் எல்லோருமே தங்கள் பிரச்னைகளை மறந்துவிட்டனர். அந்த விளையாட்டு அவர்களின் சோகத்தின் வடிகாலாக மாறியது.

“தந்தானே தந்தானே

மேகக் கூட்டம் தந்தானே இடியெல்லாம் தாளம் தானே

மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த

எழுகிறதே ஒரு வாசம்

அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து

விடுகிறதே சில நேரம்

ஊ லலலா

ஓ ஹு ஊ லலலா

ஓ ஹு லல லாலா லல லலலலா லா...”

பாடலை பாடிக் கொண்டே ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆடவும் செய்தனர். அப்போது எழுந்த சிரிப்பு சத்தங்கள் அவர்கள் மனதை லேசாக்கியது. அவர்களின் பிணைப்பை இன்னும் உறுதிப்படுத்தியது.

நாளை நடக்கப்போகும் போராட்டத்தைப் பற்றிய பயத்தை விட, அந்தத் தருணத்தில் அவர்கள் அனுபவித்த தோழமை அவர்களுக்குப் பெரும் பலத்தைத் தந்தது.

ஆனால் அந்த சந்தோஷத்தை நீடிக்க விடாமல் வார்டன் கீதா உள்ளே நுழைந்துவிட்டார்.

“எக்ஸாம் முடிஞ்சும் ஊருக்கு போகாம எல்லாம் இங்கேயே டேரா போட்டிருச்சுங்க... ஏய் எழுந்திரு ரூமுக்கு போங்க”

“அதான் எக்சாம் முடிஞ்சிடுச்சு இல்ல மேடம், கொஞ்ச நேரம் பேசிட்டு போறோம்”

“ஒன்னும் தேவை இல்ல, எல்லாம் போய் படுங்க... நாளைக்கு ஒருத்தி கூட இங்கே இருக்க கூடாது... பொட்டியை கட்டிட்டு ஊருக்கு போய் சேர்ந்திருக்கணும்” என்று அனைவரையும் மிரட்டி அவரவர் அறைக்கு துரத்திவிட்டவர், சுடரை கண்டு இன்னும் கொதிப்படைந்தார்.

“ஆமா நீ ஹாஸ்டல் ஸ்டூடன்ட் இல்லைதானே?”

“கடைசி நாள் அதுவும் பிரண்ட்ஸ் கூட இருக்கலாம்னு வந்தேன்” என்று அவள் சமாளித்த போதும் அவர் கேட்கவில்லை. அவளைக் கையும் களவுமாக பிடித்து இழுத்து கொண்டு செல்ல, “இன்னைக்கு ஒரே ஒரு நாள் மேடம்” என்று மற்ற பெண்கள் எல்லாம் அவளுக்காக பரிந்து பேசினர்.

ஆனால் யார் சொல்வதையும் கேட்காமல் அவளை அலுவலக அறைக்கு அழைத்து சென்று விட்டு, “உன் வீட்டுக்கு போன் பண்ணு... போன் பண்ணுன்னு சொன்னேன்” என்று அதட்டினார்.

அவள் அழைக்கவும் நாராயணமூர்த்தி எடுத்து பேச, “பொம்பள புள்ளய இப்படிதான் வளர்ப்பீங்களா?” என்று பக்கம் பக்கமாக அறிவுரை வாசித்து இறுதியாக, “உங்க பொண்ண முதல வந்து கூட்டிட்டு போங்க” என்றார்.

“இந்த நேரத்துல எப்படி மேடம் அப்பாவால வர முடியும்?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது... நீ இங்க தங்க கூடாது” என்று திட்டவட்டமாக சொல்ல, சுடருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவளை அந்த அலுவலக அறையிலேயே உட்கார வைத்துவிட்டு அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார். ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அப்படியே மேஜையில் கண்ணயர்ந்துவிட்டவளுக்கு ஏதோ உருண்டு விழுவது போல சத்தம் கேட்கவும் பட்டென்று விழிப்பு வந்தது.

அவள் கதவைத் திறக்கவும் வார்டன் மண்டையில் பலமாக தாக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்தார். “மேடம் என்னாச்சு?” என்று அவரை முகத்தைத் தட்டவும், நடுக்கத்துடன் கையை மேலே உயர்த்தி காட்டினார். அந்த நொடி அவளுக்கு சாஷாவின் நினைவு வந்தது.

இருள் கவிந்த அந்த மாடிப் படிக்கட்டுகளில் சுடர் அடித்து பிடித்து ஏறினாள். மூச்சிரைக்க ஓடி வந்தவள் சாஷாவின் அறைக்குள் நுழைந்தபோது, அங்கே ஒரு வித நிசப்த நிலை குடிக்கொண்டிருந்தது.

அறையின் மூலையில் சாஷா சிறு உருவமாக ஒடுங்கி போய் உட்கார்ந்திருக்க, “என்னாச்சு உனக்கு” என்று கேட்டுக் கொண்டே சுடர் முன்னே வந்தாள்.

“பயப்படாத, நான் வந்துட்டேன்” என்றவள் சாஷாவைத் தொடுவதற்குள், இருட்டில் மறைந்திருந்த ஒரு ராட்சதக் கரம் மின்னல் வேகத்தில் சுடரின் வாயைப் பொத்தியது.

அவள் உணர்வதற்குள் அந்த கரம் அசுர வேகத்தில் அவளை அப்படியே பின்னுக்கு இழுத்துது.

இரும்புப் பிடி. சுடரால் ஒரு துளி கூட அசைய முடியவில்லை. ஏன் ஒரு மெல்லிய முனகலைக் கூட எழுப்ப முடியவில்லை. அவளது கண்கள் மட்டும் பிதுங்கிப் போய் முன்னால் நடப்பதைப் பார்த்தன.

அப்போது முகமூடி அணிந்திருந்த நான்கு உருவங்கள் அந்த இருளிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்பட்டன. அவற்றில் ஒருவன் தன் கையில் வைத்திருந்த கேன்களிலிருந்து ஒரு திரவத்தைச் சாஷாவின் மீது வாரி இறைத்தான்.

அந்தத் திரவம் சாஷாவின் மீது பட்டதும், அவள் மரணபயத்த்துடன் சுடரைக் நோக்கி கைகளை நீட்டினாள்.

சுடரும் தன் முழு பலத்தையும் திரட்டி அந்த இரும்புப் பிடியிலிருந்து விடுபடப் போராடினாள். அவளை காப்பாற்றிவிட நினைத்தாள்.

ஆனால்... ஆனால்... அவளால் முடியவில்லை... ஒன்றுமே செய்ய முடியவில்லை.

ஒரு சிறு தீக்குச்சி கிழிக்கப்பட்டது.

அடுத்த நொடி... சாஷாவின் உடல் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது

அந்தத் தீயின் வெப்பம் சுடரின் முகத்தில் அறைய, கூண்டில் அடைபட்டப் பறவையைப் போல அவள் மனம் அடித்துக்கொண்டது.

‘விட்டுட்டுங்க... தயவுசெய்து அவளை விட்டுடுங்க’ என்று கதறியது. ஆனால், அவளது அலறல் அந்தத் கரங்களுக்குள் மௌனமாகச் செத்துப்போனது.

சாஷா தரையில் விழுந்து புரண்டாள். அவள் புரண்ட இடமெல்லாம் தீ பரவியது. ஆனால் அந்த அரக்கர்கள் சலனமின்றி நின்றனர். ஈவு இரக்கமே இல்லாமல் அடுத்தடுத்த அறைகளுக்குள்ளும் அவர்கள் தீப்பந்தங்களை வீச, சுடருக்கு பேரதிர்ச்சி!

எல்லா கதவுகளும் வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தன.

“நெருப்பு... காப்பாத்துங்க! யாராவது கதவைத் திறங்க”

கதவுகளைக் கல்லால் மோதுவதும், நகங்களால் கீறுவதுமான சத்தங்களுக்கு நடுவே அந்த மூன்று உருவங்களும் சுடரை மட்டும் தனியாக இழுத்துச் சென்றன.

சற்று முன்பு தன்னுடன் சந்தோஷமாக சிரித்து பேசி விளையாடி கொண்டிருந்த தோழிகள் தீக்கிரையாக்கப்படுவதை எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன் கடந்தது அவள் தேகம்.

கனவுகளைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பெண்களும் உயிரோடு கருகும் அந்த கூச்சல்களை கேட்ட அவள் ஆன்மா தனியாக அழுது கொண்டிருந்தது. அத்தனை பேருக்காகவும்.. ஒற்றைக் குரலாக...

ஆனால் அது எதை பற்றியும் கவலை இல்லாமல் அந்த கரங்கள் மட்டும் அவளை இழுத்துக் கொண்டு சென்றன.

அவள் எரியவில்லை. கருகவில்லை. சாம்பாலாகவில்லை. ஆனால் அந்த நொடி அவளுமே அவர்களுடன் செத்து மடிந்தாள்.

ஆசை, கனவு, நம்பிக்கை, மனித நேயம் என்று அவளின் அத்தனையும் அந்த கொடூர நெருப்பில் பொசுங்கியது. கரும்புகையில் கலந்து காற்றோடு காற்றாகி போனது.

அவளது போராட்டங்கள் ஓய்ந்து, உடல் மரத்துப் போக... எஞ்சியிருந்த அந்த ஜடத்தைப் பலவந்தமாக தூக்கிச் சென்றது அந்தக் கறுப்பு உருவம்.

அன்று... அந்த கணம் சுடர்விழியின் வாழ்க்கை ஓர் ஆயுட்கால இருளை நோக்கி பயணித்தது.

அத்தியாயம் – 31

மிக மோசமான இருள் ஒன்று தன்னை முழுவதுமாக விழுங்கிக் கொண்டது போலிருந்தது சுடருக்கு. ஒரு பெரும் மௌனத்துடன் நீடித்த அந்தப் பயணம் எங்கே முடிவடைந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. அதே கரம் அவளை மீண்டும் தூக்கிக் கொண்டது. அதனை உதறித் தள்ளிவிட்டு ஓட வேண்டுமென்று உள்ளுணர்வு சொன்னது, ஆனால் முடியவில்லை.

வாழ்வில் இதுவரையில் அனுபவித்திராத ஒரு அதிர்ச்சி நிலை அது. ஏதோ ஒரு அந்நிய மனிதன் தன்னைத் தூக்கிச் செல்கிறான் என்று புரிந்தும், போராடி மீட்டுக்கொள்ள முடியாத ஒரு பலவீன நிலை. இது எல்லாவற்றிற்கும் மேலாக, தான் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்பதே புரியாத, தெரியாத ஒருவித மரத்த நிலையில்தான் அவன் பிடியில் கிடந்தாள் சுடர்.

திடீரென்று ஒரு வெளிச்சம் அவள் முகத்தில் மோதியது. கண்களை இறுக மூடிக்கொண்டாள். அத்தனை நேரம் சிறைப்பட்டிருந்த அவள் தேகம் அப்போதுதான் விடுவிக்கப்பட்டது. மெத்தென்ற ஒரு பொருளின் மீது அவள் கிடத்தப்பட்டதை உணர்ந்து கண்களைத் திறந்தாள். அந்த விசாலமான முகப்பறை சோபாவில் அவள் அமர்ந்திருக்க, எதிரே ஐவர் கறுப்பு முகமூடியுடன் நின்றிருந்தனர்.

அவர்களைப் பார்த்த அந்த நொடி, அத்தனை நேரம் அவளுக்குள் மரத்துக் கிடந்த அத்தனை உணர்வுகளும் எரிமலையாய் உயிர்த்தெழுந்தன. அவள் தொண்டையிலிருந்து வெடித்து வந்த பேரழுகையுடன், “படுபாவிங்களா... கொன்னுட்டீங்களேடா!” என்று ஆவேசமாகக் கத்திக்கொண்டே அவர்கள் மீது பாய்ந்தாள். ஒருவனின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுக்க, அடுத்தவன் அவளைப் பிடித்து இழுத்தான். ஆனால் அடுத்த கணம் அவன் மீது பாய்ந்து கடிக்கத் தொடங்கினாள்.

“ஏய் விடுடி!” என்று மற்றவன் அவளைப் பிடித்து இழுத்துத் தள்ளிய போதும் அவள் அமைதியாகவில்லை. அடக்க முடியாத பெரும் வெறி. ஆவேசம். கோபம். தாங்க முடியாத வலி அத்தனையும் அவளை ஒரு பேயைப் போல இயங்க வைத்தது. ஐவரையும் மாற்றி மாற்றிப் பிராண்டினாள், அடித்தாள், கத்தினாள். கிடைத்த பாகத்தில் எல்லாம் கொடூரமாகக் கடித்தாள். அவளால் என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்தாள்.

அத்தனை நேரம் அவள் இழந்த மொத்த பலத்தையும் இப்போது காட்டிய வேகத்தில் அவர்கள் ஐவரும் திணறிப் போனார்கள். அது வெறும் கோபம் இல்லை... ரௌத்திரம். அடங்காத, அடக்க முடியாத ரௌத்திரம்.

இறுதியாக அவள் ஒருவனின் மீது ஏறி உட்கார்ந்து அவன் முகமூடியைக் கிழிக்க முற்பட, மற்ற நால்வரும் அவளைப் பின்னே இழுத்துப் பிடித்த போதும் அவள் அடங்கவில்லை. கை கால்களை எல்லாம் அரக்கத்தனமாக உதறினாள். சற்று முன்பு ஒருவனின் கைப்பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்தவள், இப்போது அவளைப் பிடித்திருந்த நால்வரையும் திணறடித்தாள்.

“உங்களை எல்லாம் கொல்லாம விட மாட்டேண்டா!” என்று வெறியுடன் கத்திக் கொண்டிருக்க, கீழே விழுந்திருந்தவன் சுதாரித்து எழுந்து நின்றான். “அவளை விடுங்கடா,” என்றான் அவன்.

அத்தனை நேரம் அடங்காமல் கத்திக் கொண்டிருந்தவள், அந்தத் தடித்த குரலை கேட்ட கணத்தில் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.

அதேநேரம் நால்வரும் அவளை விடாமல் தயக்கத்துடன் பார்க்க, “அடச் சீ... விடுங்கடான்னு சொன்னேன். பெரிய இவளா அவ... கொலை பண்ணுவாலாம்ல கொலை... எங்கே வாடி... கொலை பண்ணுடி... கொலை பண்ணு,” என்று அதிரடியாக அவளை நெருங்கி வந்து நிற்க, அவளை விட்டு மற்றவர்கள் விலகினர்.

அவள் இன்னும் அதிர்விலிருந்தாள்... அதுவும் அந்த குரல்... அது அவளுக்கு மிகவும் பரிச்சயமான குரல்.

இல்லை இல்லை... அப்படி மட்டும் இருந்துவிடக் கூடாது என்ற பதைபதைப்புடன் அவன் முகமூடிக்கு பின்னால் தெரிந்த கருவிழிகளை உற்று நோக்கினாள். அவனுமே தனது கூரிய விழிகளால் அவளை நோக்கினான்.

அவள் சந்தேகத்துடன் விழிகளைச் சுருக்கிப் பார்க்கவும், “நான் யாருன்னு தெரியணும் இல்ல? ம்ம்ம்... எல்லாம் கழட்டுங்கடா” என்று உத்தரவிட்டுக் கொண்டே தன்னுடையதையும் கழற்றினான்.

முகமூடிக்குள் மறைந்திருந்த அந்த முகத்தை பார்த்ததுமே அவள் உள்ளம் தடம் புரண்டது. இதய துடிப்பும் ஒரு நொடி நின்று போனது.

“சூ..ர்யா...”

தொண்டைக் குழியிலிருந்து அந்த வார்த்தை வெளிவரும் போது மீண்டுமொரு முறை அவள் உணர்வுகள் கொலை செய்யப்பட்டிருந்தன. துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்தன. கண்ணீருடன் அவர்கள் ஐவரையும் சுற்றி ஒரு முறை பார்த்தாள். அவர்கள் எல்லாம் சூர்யாவின் நண்பர்கள். அவளுக்கு ஏற்கனவே தெரிந்த முகங்கள். ஆனால் முகமூடிக்கு பின்பாக மறைந்திருந்த இந்தச் சாத்தானின் முகம் அவளுக்குத் தெரியாதது.

“நீங்களாடா இப்படியொரு பாவத்தைச் செஞ்சது?” என்று அவள் வலியுடன் கேட்க, “ஆமான்டி நாங்கதான்... என்ன பண்ண போற... சொல்லு என்ன பண்ண போற... கொல்லப் போறியா... கொல்லு... கொல்லுடி!” என்று மிரட்டிக் கொண்டே அவளை நோக்கி பாய்ந்தான். மற்ற நால்வரும் ஒதுங்கி நின்று கொள்ள, அவன் அவளை அப்படியே சுவரின் ஓரமாகச் சிறைபிடித்தான்.

அவள் பற்களைக் கடித்தபடி, “அப்போ ஹாஸ்டல் பாத்ரூம்ல கேமரா வைச்சது... அந்தப் படத்தைக் காட்டி அவங்கள எல்லாம் மிரட்டி படுக்கக் கூப்பிட்டது எல்லாமே நீங்கதானாடா... தே**** பசங்களா?” என்று கேட்க, சூர்யா ஆக்ரோஷமாக அவள் மீது கையை ஓங்கினான்.

ஆனால் அடிக்கவில்லை. அப்படியே கையை நிறுத்திக் கொண்டவன், “ஒ*** மவளே... உன்னையும் அவளுங்களோட மொத்தமா கொளுத்திப் போடாம காப்பாத்திக் கூட்டிட்டு வந்ததுக்கு இதுவும் பேசுவ... இதுக்கு மேலயும் பேசுவ,” என்றான்.

அத்தனை வலி வேதனையிலும் அவளுக்கு அப்போது சிரிப்பு வந்துவிட்டது. “எது... காப்பாத்துனியா?” என்று கேட்டுச் சிரிக்க, அவன் அவள் தொண்டைக் குழியை அப்படியே அழுத்திப் பற்றினான். “இன்னும் ஒரு வார்த்தை பேசுனா...” என்று மிரட்ட, அவள் கண்களில் துளி கூட பயமில்லை.

“என்ன? கொளுத்துவியாடா... கொளுத்திக்கோ. உன்னை மாதிரி அசிங்கப் பிடிச்ச ஒருத்தனைக் காதலிச்சதுக்கு என்னை விட்டா நானே கொளுத்திக்குவேன். நான் இல்லடா... உங்களை மாதிரி ஈனப் பயல்களைப் பெத்து வளர்த்து விட்டு இருக்கிற உங்க அப்பன் ஆத்தான்னு ஒவ்வொருத்தங்களையும் கொளுத்தணும்” என்றவள் ஆக்ரோஷமாக பேசியதைக் கேட்ட சூர்யாவின் நண்பன் மனோ கடுப்பாகிவிட்டான்.

“என்னடா அவ இஷ்டத்துக்குப் பேசிட்டு இருக்கா... வேடிக்கை பார்த்துட்டு இருக்க?”

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “விடுடா... என்னதான் இருந்தாலும் அவ என் காதலி,” என,

“பைத்தியமாடா நீ... எல்லோரையும் நமக்கு எதிரா தூண்டி விட்டதே இவதான். இந்த ரகசியம் வெளியே வந்து இவ்வளவு பெரிய பிரச்னையானதுக்கே இவதானே காரணம்,” என்று மனோ மேலும் எரிச்சலடைய,

“அதுக்குதான் இவளுக்கு மட்டும் ஸ்பெஷல் தண்டனை கொடுக்கப் போறேன்,” என்று சூசகமாகக் கூறினான் சூர்யா.

“இவளை நான் காப்பாத்திக் கூட்டிட்டு வரல... ஆயுள் தண்டனை கொடுத்திருக்கேன்” என்று கூறி சுடரின் கன்னத்தைப் பற்றியவன், “இந்த உலகத்தைப் பொறுத்தவரைக்கும் நீ செத்துட்ட... செத்துச் சாம்பலாகிட்ட” என, அவள் கண்களில் லேசான பயம் எட்டிப் பார்த்தது.

“என்ன புரியலையா... எவனுமே நீ என்ன ஆன, எங்கே போனன்னு தேட மாட்டான். உங்க அப்பனும் உனக்குத் திதியைக் கொடுத்துட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான். அப்புறம் உன் நிலைமை?” என்ற சூர்யாவின் கேள்வி அவளை நடுங்கச் செய்தது.

“நான் நிறைய படிக்கப் போறேன்... கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன்... உனக்கு வேணும்னா வேற எவளையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோ” என்று அவளைப் போலவே கேலியாகப் பேசிக் காண்பித்தவன், பின் வஞ்சப் புன்னகையுடன் அவள் கன்னங்களை இன்னும் அழுத்திப் பிடித்து,

“போ... இப்போ போய் படி... செத்தவளுக்கு எவன் சீட்டு கொடுக்குறான்னு பார்க்கலாம்” என, அவன் நண்பர்கள் நால்வரும் பெருங்குரலெடுத்துச் சிரித்தனர். அந்தச் சிரிப்புச் சத்தம் அவளின் வயிற்றின் அடி ஆழத்தில் எதிரொலித்தது.

“இப்பயாச்சும் புரிஞ்சுதாடி... உன்னை மட்டும் ஏன் நான் காப்பாத்தித் தூக்கிட்டு வந்தேன்னு? இனிமே உன் வாழ்க்கை முழுசுக்கும் நான் மட்டும்தான்... இந்த சூர்யா மட்டும்தான்.”

அந்த நொடி எப்படியாவது தப்பித்துப் போய்விட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவள் சுற்றிலும் பார்க்க, “என்ன... தப்பிச்சுப் போகலாம்னு பார்க்குறியா? கஷ்டம்... இந்த இடத்தைச் சுத்தி நாலு வேட்டை நாயுங்க இருக்கு... வாசலைத் தாண்டிப் போக முடியாது” என்று அச்சுறுத்த, அவள் உதட்டைச் சுழித்தாள். “உங்களை மாதிரியா?”

“இப்போ கூட என்னை விட்டுடு சூர்யான்னு கெஞ்சுவன்னு பார்த்தா திமிராப் பேசிட்டு இருக்க” என்றவன் முறைப்புடன் நெருங்க,

“கெஞ்சுனா விட்டுடுவியா?” என்று பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள்.

“சத்தியமா மாட்டேன்,” என்றான் அவன்.

அவள் அவன் கண்களை நேராக பார்த்துவிட்டு,

“அப்போ நானும் கெஞ்ச மாட்டேன்,” என்றாள் உறுதியாக.

அவனுக்குள் ஆத்திரம் பொங்கியது.

“அடங்க மாட்ட இல்ல நீ...” என்றவன் தன் நண்பர்களைத் திரும்பிப் பாராமலே, “எல்லாம் கிளம்புங்க,” என்றான்.

“பைத்தியக்காரி மாதிரி நடந்துக்குறா... உன்னை ஏதாச்சும் பண்ணிடப் போறா” என்று காளியப்பன் எச்சரிக்க, “போடா... இவளுக்கு நான் பயப்படணுமா? கதவைப் பூட்டிட்டுப் போங்கடா” என்றதும் அவர்கள் நால்வரும் நகர்ந்தனர்.

தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் அதனை எதிர்த்துப் போராடுவதற்கு அவள் உடலிலும் மனதிலும் அப்போதைக்கு தெம்பில்லை.

“ஆயிரம்தான் இருந்தாலும் நான் உன்னை உண்மையா காதலிச்சேன்,” என்றவள் மெலிதாகச் சொல்ல, அவன் நக்கலாக சிரித்தான்.

“கிழிச்ச... ஒரு முத்தம் கூட கொடுக்க விட்டது இல்ல நீ என்னை... காதலிச்சாளாமே” என்றவன் அவளைத் தரதரவென்று பக்கத்து அறைக்கு இழுத்துச் சென்று தள்ளினான்.

அவன் கதவைப் பூட்டவும் கணநேரத்தில் அவள் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். ஒரு மெத்தையைத் தவிர வேறு எந்தப் பொருளுமே இல்லை.

“என்ன... அடிக்க ஆயுதம் தேடுறியா? ஒன்னும் கிடைக்காது உனக்கு,” என்று அவன் சட்டை கழற்றிக் கொண்டு அவள் மீது பாய்ந்தான். அந்த நொடி, சுடர் அவனது தோள்பட்டை சதையைத் தன் பற்களால் கடித்துக் கிழித்தாள்.

“ஆஆஆ...” வலி தாளாமல் அவன் அலறவும், “ஆயுதத்தை எதுக்குடா நான் வெளியே தேடணும்?” என்றாள்.

அவன் கண்களில் வெறி ஏறியது. “மவளே... வெளியே இருக்கிற என் நாய்களை அவிழ்த்து விட்டேன்னு வைச்சுக்கோ... செதில் செதிலா உன் சதையைப் பிய்ச்சு எறிஞ்சிடும்,” என்று எச்சரிக்க, “நீ என்னைத் தொடறதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லடா” என்றாள்.

“அப்படியா... அப்போ முதல்ல நான் உன்னைக் கடிச்சுக் கொதறிடுறேன்... அப்புறம் அதுங்களுக்கு இரையா போடுறேன்” என்றவன் இம்முறை அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தான்.

அவளது மண்டையோட்டோடு சேர்த்து முடியைப் பிடுங்குவது போன்றதொரு வலி. “விடுடா... விடு” என்று அவள் கதறும் போதே, அவளது தலையை மெத்தையில் அழுத்திப் பிடித்தான்.

அவள் முகத்தின் ஒரு பகுதி மெத்தையில் புதைந்தது. மூச்சு விடமுடியாமல் அவள் திணறிக் கொண்டிருப்பதை பொருட்படுத்தாமல் வேட்டை மிருகத்தைப் போல அவளை அணுகினான். அவை சதை துண்டுகளை கிழிப்பது போல அவன் அவள் உணர்வுகளை கிழித்தான்.

அது அவளுக்கு வெறும் உடல்ரீதியான வலி மட்டும் இல்லை. தான் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவன், இப்படி ஒரு அசிங்கமான உருவமாக மாறித் தன்னைச் சிதைப்பதை தாங்க முடியாத மனதின் ரணம்.

ஒவ்வொரு அசைவிலும் அவளது எலும்புகள் நொருங்குவது போன்று வலித்தது. ஆனால் அவளது கதறல்கள் அந்த மெத்தையை தாண்டி வெளிவர வழி இல்லாமல் உள்ளே ஒடுங்கியது. அவள் கண்கள் இருண்டு போயின.

அவள் நம்பிக்கை… அவள் காதல்… அவள் உலகம்…

என்று எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக உடைந்து விழுந்து கொண்டிருந்தன.

மிச்சம் மீதியாக இருந்த அவள் உடலும் அப்போது கூறுபோடப்பட்டதில், மீண்டும் மூன்றாவது முறையாக அவள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தாள்

அதுவும், அவள் மனதார நேசித்தவனால்.

அங்கே அவள் உடல் உயிரற்றுக்கிடக்க, உள்ளம் மட்டும் அந்தத் துரோகத்தின் ஆழத்தில் மூச்சுத்திணறித் தத்தளித்தது.

ஆனால்… இத்தனைக்கும் பிறகும் அவள் சாகவில்லை.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா