மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Seethaigal Yaaro - From 30th episodeSeethaigal Yaaro - Episode 36 & 3 …Post ReplyPost Reply: Seethaigal Yaaro - Episode 36 & 37

Quote from monisha on April 15, 2026, 1:30 PM

அத்தியாயம் 36

எழில் சொன்னவற்றை எல்லாம் கேட்ட ரூபன், அப்படியே அதிர்ச்சி நிலையில் உறைந்திருந்தான்.

எழில் தொடர்ந்தாள், “நியாயமான வழியில போராடணும்னுதான் சுடர் நினைச்சா... என் பிரண்ட்ஸ் எல்லாரும் நினைச்சாங்க... ஆனா அவங்களுக்கு நடந்தது என்ன? உண்மையைச் சொல்லணும்னா, நாங்க எந்த வழியில போகணும்கிறதை நாங்க தீர்மானிக்கல ரூபன்... இந்தச் சமூகம் தான் தீர்மானிச்சது! நீங்க சொல்லலாம்... வன்முறை எதுக்கும் தீர்வு இல்லன்னு... ஆனா ஒருத்தனைத் திரும்பத் திரும்ப அடிச்சுக்கிட்டே இருந்தா அவன் என்ன பண்ணுவான்? திருப்பி அடிப்பான் இல்ல? சுடரும் அதைத்தான் பண்ணா... அந்தச் சூர்யா அவளை அந்தளவுக்கு டார்ச்சர் பண்ணான்” என்று அவள் ஆதங்கத்துடன் கூறினாள்.

“நீங்க அன்னைக்குச் செஞ்சது கொலை இல்ல, 'செல்ப் டிபன்ஸ்' ஆனா நீங்க அதுக்கப்புறமும் அந்தப் படுகொலைகளைத் தொடர்றது சரி இல்ல. எல்லாத்துக்கும் மேல எங்க அப்பா... உங்க காலேஜ் சி.ஓ-வோட பிரண்ட்ங்குறதுக்காக அவரும் தப்பானவர்னு அர்த்தம் கிடையாது. பழிக்குப்பழி வாங்குறேன்னு உங்க இஷ்டத்துக்கு எல்லாரையும் கொளுத்திட்டு அதுக்கு நியாயம் தர்மம்னு பேர் வைக்குறீங்களா?” என்று ரூபன் ஆக்ரோஷமாகக் கேட்டான்.

“ஹலோ... ஹலோ பாஸ்! கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் அவ முழு கதையையும் சொல்லி முடிக்கல... முக்கியமா உங்க அப்பாவோட பார்ட்” என்று கைகளைக் கட்டிக் கொண்டு அறைக்குள் வந்து நின்றாள் சுடர். அவள் கண்களில் ஒருவித கேலி.

அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்த ரூபன், பின் மிகவும் சிரமப்பட்டு அந்த கேள்வியைக் கேட்டான். “அந்தச் சூர்யா எடுத்து வைச்சிருந்த வீடியோவுல எங்க அப்பாவும் இருந்தாரா?”

“இல்ல” என்று சுடர் சொன்ன நொடி, ரூபனின் குரல் மீண்டும் உயர்ந்தது. “அப்புறம் எப்படி எங்க அப்பா தப்பானவர்னு சொல்றீங்க?”

“வீடியோவுல உங்க அப்பா இல்ல... ஆனா அந்த வீடியோவை எல்லாம் எடுக்கத் தூண்டினதே உங்க அப்பாவும் அந்தச் சகாதேவனும்தான்” என்று சுடர் குண்டைத் தூக்கிப் போட்டாள்.

“என்ன சொல்ல வர்ற நீ?”

“கேட்குறான் இல்ல? பதில் சொல்லு எழில்” என்று சுடர் சொல்ல, எழில் மௌனமாகத் தலை குனிந்து கொண்டாள். தன் காதலனின் தந்தை ஒரு வக்கிரமானவர் என்று சொல்ல அவள் மனம் தயங்கியது.

“சரி, நானே சொல்றேன்... உங்க அப்பா ஒரு 'பார்ன் அடிக்ட்.” என்றதும் ரூபன் அதிர்ச்சியுடன் நிமிர, சுடர் விடாமல் தொடர்ந்தாள்.

“ஆனா அது மட்டும் இல்ல பிரச்சினை... பெண்கள் மீது நிகழ்த்தப்படுற வன்புணர்வை ரசிச்சுப் பார்க்குற சைக்கோ மனநிலை கொண்ட ஆள் அவர்.”

“வாய்ப்பே இல்லை... எங்க அப்பா அப்படிப்பட்டவர் இல்ல...”

“நீ நம்பாட்டியும் அதுதான் உண்மை ரூபன். இது எல்லாத்துக்கும் ஆரம்பப் புள்ளியே அவரோட அந்த வக்கிரமான மனநிலைதான். அவரும் அந்தச் சகாவும் சேர்ந்து, தான் பார்த்த வீடியோக்களை அப்படியே 'ரெக்ரியேட்' பண்ணி நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க” என்று சுடர் சொல்ல,

“பொய்” என்று சத்தமிட்டான் ரூபன்.

“சுடர் ஏன் பொய் சொல்லணும் ரூபன்?” என்று எழில் நிதானமாக கேட்க, “நான் அவரோட பையன்... எனக்கு அவரைத் தெரியும்... நிச்சயமா அவர் அப்படி இல்ல” என்று உறுதியாகச் சொன்னான். தன் தந்தையின் பிம்பம் உடைந்துவிடக் கூடாதென்ற பயம் அவன் குரலில் தெரிந்தது.

“காளிமுத்து சாகுறதுக்கு முன்னாடி உங்க அப்பா பெயரைச் சொன்னான்” என்றாள் சுடர்.

“எவனோ ஒருத்தன் எங்க அப்பா பேரைச் சொன்னா அவர் தப்பானவர் ஆயிடுவாரா?”

“உங்க அப்பாவைப் பார்த்ததும் எனக்கும் அந்தச் சந்தேகம் வந்துச்சு... பார்க்க அவ்வளவு கண்ணியமா இருக்குற மனுஷன் அப்படியான்னு... அதான் அவரைச் செக் பண்ண முடிவு பண்ணோம். லேட் நைட்லயும் அந்த புக் ரூம்ல அவர் தனியா இருக்குறது சந்தேகத்தை அதிகப்படுத்துச்சு. அதான் சில வேலைகளைப் பார்த்தோம்.

எலெக்ட்ரானிக் ஐட்டங்களைக் கையாள்றதுல எழில் எக்ஸ்பர்ட். அதனால்தான் பெங்களூர் போன போது நாங்க இரண்டு பேரும் இடம் மாறினோம்... எழில் அங்கே வந்து தங்குனா... ஜெயந்தனோட ரிமோட் கார்ல கேமரா செட் பண்ணி, உங்க அப்பா ரூமுக்குள்ள விட்ட. அவர் தனியா இருக்கணும்கிறதுக்காகவே வேலைக்காரப் பொண்ண லீவ் போட வச்சோம்.”

சுடர் விவரித்துக் கொண்டிருக்கும் போதே ரூபன் குறுக்கிட்டான், “இல்ல... நீங்க ஏதோ கதை சொல்றீங்க”

எழில் தன் மெல்லிய குரலில், “நான் என் கண்ணால பார்த்தேன் ரூபன்...” என்றாள். அவளுடைய அந்த ஒற்றை வாக்கியம் அவனை அப்படியே குத்தி கிழித்தது.

“இல்ல நான் நம்ப மாட்டேன்” ரூபன் வலியுடன் கூற,

“எங்ககிட்ட வீடியோ ஆதாரம் இருக்கு!” என்று சுடர் சொல்லவும் ரூபனின் முகம் இருண்டது.

“போய் உன் லேப்டாப் எடுத்துட்டு வா” என்று சுடர் சொல்ல எழில் தயங்கினாள்.

“சரி நானே போய் எடுத்துட்டு வரேன்” என்று சுடரே மடிக்கணினியை எடுத்து வந்து அவன் முன்னே விரித்தாள். அதில் தெரிந்த காணொளியில், தன் தந்தையின் அருவருப்பான அந்த வக்கிர முகம் ரூபனைத் துடிக்க வைத்தது.

அவரின் பிம்பம் சுக்குநூறாக உடைந்துவிட, அவமானமும் வேதனையும் தாளாமல் முகத்தை மூடிக்கொண்டு தரையில் சரிந்து அழுதான். சுடர் ஒருவித அலட்சியப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்துவிட, எழிலின் மனம் அவனுக்காக தவித்தது.

அவனைச் சமாதானப்படுத்த நெருங்கியவள் பின் அவன் குலுங்கி குலுங்கி அழுவதை பார்த்து அப்படியே பின்வாங்கி கொண்டாள்.

சில நிமிடங்கள் அவனுக்குத் தனிமையைத் தந்தாள். மெதுவாக அவனுடைய அழுகை ஓய்ந்ததும், தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க,

“எனக்கு வேண்டாம்...” என்று முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டான்.

“ரூபன் ப்ளீஸ்” எழிலின் கனிவான குரல் அவனை திரும்பி பார்க்க வைத்தது. அந்த நீரை வாங்கி பருகியவன் கண்ணீருடன், “நான் அவரை என்னோட ஹீரோவா பார்த்தேன் எழில்... ஆனா அவர் இப்படி” என்று சொல்லும் போது அவன் குரல் உடைந்தது. பேச முடியவில்லை.

அவன் அருகே அமர்ந்து அவன் கரங்களை ஆறுதலாக பற்றிக் கொண்டவள், “அது உங்க தப்பு இல்ல ரூபன்... இங்கே பல மனுஷங்களுக்கு நமக்குத் தெரியாத பல முகங்கள் இருக்கு.” என்று கூற,

“ஆனா எப்படி... இவ்வளவு வருஷத்துல அவர்கிட்ட இந்த மாதிரி பிஹேவியரை நான் பார்த்ததே இல்லையே!” என்றான்.

“நீங்க அவரோட மகன்... உங்ககிட்ட அவர் ஏன் அந்த முகத்தைக் காட்டப்போறார்?

“எங்க அம்மா போலீஸ் ஆபீசர்... அவங்களுக்காச்சும் தெரிஞ்சிருக்குமே?”

“சூர்யா இவ்வளவு மோசமானவன்னு சுடருக்கு ஒரு சின்னச் சந்தேகம் கூட வரல... ஏன்னா அவ அவனை அந்தளவுக்கு நேசிச்சா. ஏன் நம்ம விஷயத்துலயே, என்னை நீங்க நேசிக்க ஆரம்பிச்ச பிறகு என்னோட தப்பு எதுவும் உங்க கண்ணுக்குத் தெரியலதானே?” என்றாள் எழில்.

“என்னால இந்த உண்மையை ஏத்துக்கவே முடியல எழில்”

“ஏன் னா அவர் உங்களோட அப்பா” என்றதும் அவன் மீண்டும் முகத்தை மூடிக் கொண்டு, “சை” என்றான்.

அவள் அவன் தோள் மீது கை வைத்து ஆறுதல்படுத்த சில நிமிடம் கழித்து தலையை நிமிர்ந்த ரூபன், “எனக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்றியா?” என்று வினவ,

“சொல்லுங்க” என்றாள் .

“எங்க அம்மாவுக்கு மட்டும் இந்த உண்மை தெரிய வேண்டாம்... ப்ளீஸ்.”

“இனிமே இந்த உண்மை யாருக்குத் தெரிஞ்சும் எதுவும் ஆகப் போறதில்லை ரூபன்,” என்றவள் அவன் கை மீது தன் கையை வைக்க, அதனை இறுக பிடித்து கொண்டவனுக்கு அந்த நொடி அப்படியொரு ஆசுவாசம்.

அப்போது அவசரமாக அறைக்குள் நுழைந்த சுடரை பார்த்த எழில் பயத்தில் தன் கையை எடுத்து விட, “எழில், நம்ம இங்கிருந்து உடனே கிளம்புறோம்... சீக்கிரம் வா” என்றாள்.

“என்னாச்சு?”

“செல்வம் போன் பண்ணான்... போலீஸ் ரோந்து அதிகமா இருக்காம். எப்போ வேணா உள்ளே வருவாங்க. இனிமே இங்க இருக்கிறது சேஃப் இல்லை.” என்று விட்டு அவள் வெளியேறவும் பின்தொடர்ந்து சென்ற எழில்,

“அப்போ ரூபன்?” என்று கவலையுடன் கேட்டாள்.

“அவனை இந்த வீட்டிலேயே பூட்டிட்டுப் போயிடுவோம்” என்று சுடர் கறாராகச் சொல்ல, எழிலின் மனம் தவிப்புற்றது.

“ஏன் ரூபனை விட்டுட்டுப் போகணும்?” என்று கேட்க, சுடர் தன் திட்டத்தை விளக்கினாள்.

“இனிமே கார்ல போக முடியாது. நான் பைக்கை எடுத்துட்டு முன்னாடி போறேன்... நீயும் ஜோஸும் செல்வம் பைக்ல வந்துடுவாங்க... அவன் நம்ம காரை எடுத்துட்டு போயிடுவான்”

ஏமாற்றத்துடன் அறைக்குள் வந்த எழில், ரூபனிடம் தயங்கியபடி, “நாங்க போறோம்... நீங்க இங்கேயே இருப்பீங்களா? போலீஸ் வந்திடுவாங்க...” என்று பிரிய மனமில்லாமல் சொன்னாள். அவள் நகர்ந்த போது, ரூபன் அவள் கையைத் திடமாகப் பிடித்துக்கொண்டான்.

“ரூபன்...”

“நீ எங்கேயும் போக வேண்டாம் எழில்”

“போலீஸ் வந்திடுவாங்க ரூபன்...”

அங்கே வந்த சுடர், “இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டவள் ரூபன் அவள் கையை பிடித்திருப்பதை கண்டதும், “கையை விடுடா!” என்று முறைத்தாள்.

“எழில் என் கூடத்தான் இருப்பா” என்று ரூபன் உறுதியாகச் சொல்ல,

“அவளைப் போலீஸ்ல மாட்டிவிடப் பிளான் பண்றியா?” என்று சுடர் கடுகடுத்தாள்.

“இல்ல... அவளைக் காப்பாத்த நினைக்கிறேன்!”

“அவ கழுத்துல கத்தி வச்சு கொலை பண்ணப் பார்த்த நீயா அவளைக் காப்பாத்தப் போற?”

“அப்போ எனக்கு எந்த உண்மையும் தெரியாது சுடர். இப்போ எல்லாம் தெரியும். நீயோ எழிலோ தப்பானவங்க இல்ல... எங்க அப்பா மாதிரியானவங்க தான் உங்களை இந்த நிலைக்குத் தள்ளினது. என்னால நடந்ததை மாத்த முடியாது... ஆனா உங்களைக் காப்பாத்த முடியும்!”

“உன்னை நான் நம்பத் தயாரா இல்லை... எழில் வா, டைமாச்சு!” என்று சுடர் அவளை இழுக்க, “நீயும் என்னை நம்பலையா எழில்?” என்று ரூபன் உருக்கத்துடன் கேட்டான். எழிலின் அவனை வேதனையுடன் பார்த்து கொண்டிருக்க,

“அவன் உன்னை ஏமாத்துறான் எழில்... கையை விடு!” என்று சுடர் அவளின் கையை இழுத்தாள். அந்த நொடி ரூபனின் பிடி நழுவியது.

வாசல் வரை சுடரால் இழுத்துச் செல்லப்பட்ட எழில், சட்டென்று தன் கையை உதறிவிட்டாள். “இல்ல... நான் ரூபன் கூடவே இருக்கேன்”

“பைத்தியாமாடி உனக்கு” என்று கோபமாக கத்திய சுடர், “அவன் நம்மள போலீஸ்ல மாட்டிவிடப் பார்க்கிறான்டி!” என்றாள்.

“ரூபன் அப்படிப் பண்ண மாட்டார் ” எழிலின் குரலில் ரூபன் மீதான அபாரக் காதல் தெரிந்தது.

“அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லையா?” சுடரின் குரலில் ஒரு சகோதிரியின் தவிப்பும், தன் நிழலாக இருந்தவள் விலகிச் செல்வதைத் தாங்க முடியாத ஆத்திரமும் பொங்கியது. எழில் பதில் சொல்லாமல் கண்ணீர் விட்டாள்.

“இப்போ போறோமா இல்லையா?” என்று ஜோஸ் கத்த, சுடர் எரிச்சலுடன் எழிலைப் பார்த்தாள். “இவளுக்கு அந்த ரூபன் கூடத்தான் இருக்கணும்... இத்தனை வருஷமா கூட இருந்த நம்மள விட, நேத்து வந்த அவன் இவளுக்கு முக்கியமா போயிட்டான்!”

“நான் அப்படிச் சொல்லல ஜோஸ்...”

“சொல்லல... ஆனா உன் மனசுல அதுதான் இருக்கு!” என்று சுடர் சீறினாள்.

“என் மனசுல என்ன இருக்குனு உனக்கு எப்பவாச்சும் உனக்கு தெரிஞ்சிருக்கா... எப்பவாச்சும் கேட்டு இருக்கியா... கிடையாது உனக்கு எப்பவுமே என் ஆசை, என் விருப்பம்... இது எதைப்பத்தியும் கவலையே இருந்ததில்லை. ஏன், ஆரம்பத்துல ரூபனை நான் கல்யாணம் பண்ண வேணாம்னு சொன்னப்போ நீ என் பேச்சை கேட்கல? நீயாதான் இதுக்குள்ள என்னை மாட்டிவிட்ட... ஆனா இப்போ, நான் ரூபனை மனசார விரும்ப ஆரம்பிச்சதும் அவரை விட்டுட்டு வாங்குற... என்னால முடியல சுடர்... என்னால முடியல” என்று எழில் கோபத்திலும் ஆதங்கத்திலும் வெடித்து பேசினாள்.

அதனை ஒருவித எரிச்சலோடும், ஏமாற்றத்தோடும் எதிர்கொண்ட சுடர், “அப்போ உன் வாழ்க்கையை நான்தான் அழிச்சிட்டேன், இல்ல? நான் உன் வாழ்க்கையில வந்த வில்லி... அப்படித்தானே?” என்று கேட்க,

“நான் ஒன்னும் அப்படிச் சொல்லல...” என்று எழில் விம்மினாள்.

“நீ அப்படிதான்டி சொல்ற” என்று ஆவேசமாகக் கத்திய சுடர், எழிலை அங்கேயே விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் திரும்பினாள்.

“ஜோஸ் கிளம்பு... இவ அந்த ரூபனை விட்டு வரமாட்டா. அவளுக்கு நம்மளை விட அவன்தான் முக்கியம்”

“ஆனா சுடர்... போலீஸ் வந்தா எழில் என்ன பண்ணுவா?” என்று ஜோஸ் தயக்கமாகக் கேட்க,

“அவளுக்குப் பாதுகாப்பு கொடுக்கத்தான் ஒரு ஹீரோ இருக்கார் இல்ல?... அவர் பார்த்துக்குவார்!” என்று எள்ளலாகச் சொல்லிவிட்டு, ஒரு நொடி கூடத் தன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஆக்ரோஷமாக வெளியேறினாள் சுடர்.

ஆனால் அவள் கண்களில் வழிந்த கண்ணீர் எழிலுக்குத் தெரியவில்லை.

சுடரும் ஜோஸும் செல்வதை தவிப்புடன் பார்த்திருந்த எழிலின் தோளில் ரூபனின் கரங்கள் ஆறுதலாகப் படிந்தன.

“நான் உன் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டேன் எழில்...”

“எனக்கு அது தெரியும் ரூபன்... ஆனா சுடர்கிட்ட அப்படிப் பேசினதை நினைச்சா என்னால தாங்க முடியல...” என்று உடைந்து போனாள் எழில். “அவ மட்டும் என் கூட இல்லைன்னா, நான் இந்நேரம் வெறும் சாம்பலாதான் இருந்திருப்பேன்....” என்று கட்டுப்படுத்த முடியாமல் விம்மினாள்.

ரூபன் அவளை அப்படியே அரவணைத்துக் கொண்டான். அவளது அழுகை மெல்லக் குறையும் வரை காத்திருந்தான்.

பின் அவளது கண்களை நேராகப் பார்த்து, தீர்க்கமான குரலில் சொன்னான், “போலீஸ் நம்மளைத் தேடி வர்றதுக்குள்ள, நாமளே போலீஸ்கிட்ட போயிடணும்!” என, அந்த வார்த்தைகளைக் கேட்ட எழில் முகம் பயத்தில் வெளிறிப் போனது.

அத்தியாயம் 37

அந்தச் சிறிய அறையில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள் சிந்து. பாரூக் அவளை அமைதிப்படுத்த முயன்றான். "சிந்து ரிலாக்ஸ்... முதல்ல ஓரிடத்துல நில்லு."

சிந்து நிற்கவில்லை. அவளது மூளை தீவிரமாக வேலை செய்துகொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு முன்பு ரூபன் காவல் நிலையத்திற்கு வந்தபோது அவனுடன் எழிலும் இருந்தாள். "ரூபன் சொன்ன கதை கேட்கவே சினிமாத்தனமா இருக்கு பாரூக். ஏதோ கருப்பு பைக்காரன் இவங்களைக் கடத்துனானாம், இவங்க தப்பிச்சு வந்தாங்களாம். ரூபன் இதையெல்லாம் உண்மையாவே நம்புறானா, இல்ல நம்மள நம்ப வைக்கப் பார்க்குறானா?"

"இந்த எழிலும் சுடரும் ரூபனை மூளைச்சலவை செஞ்சுட்டாங்களோன்னு தோணுது," என்று பாரூக் கூற, சிந்துவின் ரத்த அழுத்தம் எகிற, அவள் நேராக வெளியே வந்தாள்.

அங்கே வராண்டாவில் எழில், ரூபனின் தோளில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள். அந்த நெருக்கம் சிந்துவின் எரிச்சலை இன்னும் தூண்டியது. நேராக அவர்களிடம் வந்த சிந்து, "மிஸ்டர் ரூபன், நீங்க உடனே சென்னைக்குக் கிளம்புறதுதான் நல்லது. நான் வண்டி அரேஞ்ச் பண்றேன்," என்றாள்.

"அப்போ எழில்? நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதானே வந்தோம்," என்றான் ரூபன் எழிலின் கையை விடாமல்.

"எழில் உங்க கூட வர முடியாது. அவங்க ஒரு கிரிமினல் சஸ்பெக்ட். உங்க அப்பா உட்பட பல கொலைகள்ல இவங்களுக்குப் பங்கு இருக்குன்னு நாங்க சந்தேகப்படுறோம்," என்றான் பாரூக்.

"எழில் எந்தத் தப்பும் செய்யல!" என்றதும் கடுப்பான சிந்து, "உங்க அம்மா ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க... அவங்களைப் பார்க்கணும்னு உனக்கு அக்கறையே இல்லையா?" என்று கேட்க, ரூபன் அதிர்வுடன், "அம்மாவுக்கு என்னாச்சு?" என்று வினவினான்.

"அதனாலதான் உங்களைச் சென்னைக்குக் கிளம்பச் சொன்னேன்," என்று சிந்து சொல்ல, அவன் எழிலைப் பார்த்தான்.

"நீங்க முதல்ல கிளம்புங்க ரூபன், நான் பார்த்துக்கிறேன்" என்று எழில் சொல்ல, ஒரு நொடி அமைதியாக யோசித்தவன், "அம்மாவைப் பார்க்கப் போகணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா எழிலை இங்கே தனியா விட்டுட்டு நான் போக மாட்டேன்" என்று ரூபன் உறுதியாகச் சொன்னான்.

அப்போது எழில் மெதுவாக, "ரூபன்..." என்றாள்.

ரூபன் அவளை ஆழமாகப் பார்த்து, "இல்ல... நான் உன்னை விட்டுப் போக மாட்டேன்," என்றவன் சிந்துவைப் பார்த்து, "விசாரிக்கணுமா? விசாரிங்க. ஆனா எழில் இப்ப ரொம்ப டயர்டா இருக்கா. அவளுக்குச் சாப்பாடு வேணும். அப்புறம்... ஷி இஸ் பிரக்னன்ட்” என்றான்.

இந்தத் தகவல் சிந்துவையும் பாரூக்கையும் ஒரு நிமிடம் அதிர வைத்தது. இது எழிலின் தந்திரமா அல்லது உண்மையா? பாரூக் சூழலை உணர்ந்து, "சரி, நான் சாப்பாடு அரேஞ்ச் பண்றேன்," என்று கூறிவிட்டுச் சிந்துவை அழைத்துச் சென்றான்.

மறுபுறம், ஒரு ரகசிய அறையில் நாராயணமூர்த்தி வைக்கப்பட்டிருந்தார். எழிலையும் ரூபனையும் அங்கே அழைத்துச் சென்றனர். தந்தையைப் பார்த்ததும் எழில் ஓடிப் போய் அணைத்துக் கொண்டாள். நாராயணமூர்த்தியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. அவர் அவளது காதருகே குனிந்து, "சுடர் உயிரோட இருக்காளா எழில்?" என்று விம்மலுடன் கேட்டார்.

எழில் அதிர்ச்சியுடன், "என்னப்பா கேக்குறீங்க? சுடர் எப்படி..." என்றதும் அவர் தன்னிடமிருந்த டைரியைக் காட்டினார். "இந்த டைரில இருக்கிற தேதிகள்... அப்புறம் வீட்டுக்கு பின்னாடி நடந்த கொலைகள்..." என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ரூபன் இடையில் புகுந்தான்.

"மாமா, போலீஸ் உங்களை ஏதேதோ சொல்லி குழப்புறாங்க. விடுங்க அதெல்லாம்... நீங்க முதல்ல சாப்பிடுங்க," என்று பேச்சை மாற்றினான்.

இதை கேமரா வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த சிந்துவின் கண்களில் மின்னல் வெட்டியது. "ரூபனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு"

சிறிது நேரத்திற்குப் பின் எழில் விசாரணை அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். மேஜையில் பல புகைப்படங்கள் பரப்பப்பட்டிருந்தன. "இது உன் டிவின் சிஸ்டர் சுடர்மொழி, அப்புறம் உன் பிரண்ட் ஜோஸ்... சரியா?" சிந்து கேட்டாள்.

"சுடர் இறந்துட்டா. ஜோஸ் என் அக்காவுக்கு பிரண்ட், அவ்வளவுதான்," என்றாள் எழில் உணர்ச்சியற்ற குரலில்.

சிந்து திடீரென சூர்யாவின் புகைப்படத்தை வீசினாள். "இவனைத் தெரியுமா?"

"தெரியாது."

"நல்லாப் பாரு... இவன் சூர்யா. சுடரோட காதலன்."

"சுடருக்குக் காதலன் யாரும் இல்லை."

"ஓ... அப்போ உங்க வீட்டுப் பழைய கிணத்துக்குள்ள இருந்து நாங்க எடுத்த மூணு எலும்புக்கூடுகள் யாருடையது?"

"கிணத்துக்குள்ள இருந்து எலும்புக்கூடு எடுத்தீங்களா?" என்று எழில் ஒன்றும் தெரியாதது போலக் கேட்க, "எட்டு வருஷத்துக்கு முன்னாடி... சூர்யா, மனோ, லோகு... இவங்க மூணு பேரையும் நீ, சுடர், ஜோஸ் சேர்ந்து எரிச்சுக் கொன்னீங்களே... மறந்துட்டீங்களா?" சிந்துவின் குரல் அறையில் எதிரொலித்தது.

எழில் மெலிதாகச் சிரித்துவிட்டுச் சொன்னாள், "நீங்க சொல்ற கதை நல்லா இருக்கு. ஆனா சுடர் இறந்து எட்டு வருஷம் ஆச்சு. ஒரு பிணம் எப்படி கொலை பண்ணும்?"

"நான் சொன்னது கதையா இல்லையான்னு சுடரை நான் கண்டுபிடிக்கும்போது தெரியும்," என்றாள் சிந்து.

"சுடரை நீங்க எப்படி கண்டுபிடிப்பீங்கன்னு எனக்கும் ஆர்வமா இருக்கு," என்று எழில் சவால் விடுவது போலப் பார்த்தாள்.

சிந்து வெளியே வந்து பாரூக்கிடம் சொன்னாள், "சைக்காலஜிகல் வால்' எழுப்பி வச்சிருக்கா. சாதாரணமாக இவளை ப்ரேக் பண்ண முடியாது"

"நீ ஏன் அந்த லேடீஸ் ஹாஸ்டல் தீ விபத்து பத்தி எதுவும் கேட்கல?"

"கேட்டா 'ஆக்சிடென்ட்'னு சொல்லப் போறா. நமக்கு இப்போதைக்கு இவங்கதான் இந்தக் கொலை எல்லாம் பண்ணிட்டு இருக்காங்கன்னு சாலிட்டான எவிடன்ஸ் இல்லாத போது என்ன சொல்ல முடியும்"

"இருக்கு... சகாதேவன்! அந்த ஆளைக் கேட்டா இதோட ஆரம்பப்புள்ளி என்னன்னு தெரியும். பேசிப் பார்ப்போம்," என்று பாரூக் கூறவும் இருவரும் நேராக சகாதேவனைப் பார்க்கக் கிளம்பினர்.

சில நிமிடக் காத்திருப்பிற்குப் பிறகு சகாதேவனின் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். சகாதேவன் அவர்களைப் பார்த்து, "உட்காருங்க," என்றார்.

"உங்ககிட்ட ஒரு கேஸ் விஷயமா விசாரிக்கணும்."

"என் காலேஜ்ல எப்பவோ நடந்த லேடீஸ் ஹாஸ்டல் பத்தி விசாரிச்சுட்டுப் போனது நீங்கதானே?" என்று அவரே பேச்சை ஆரம்பிக்க, "ஆமா," என்றனர்.

அவர் பெருமூச்சுடன், "அது ஒரு துரதிஷ்டமான விபத்து," என்று சொல்ல, "அது உண்மையிலேயே விபத்தா?" என்று பாரூக் கேட்டான்.

"விபத்துதான்னு உங்க டிபார்ட்மென்ட்டே விசாரிச்சு ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்களே... அதுவும் இல்லாம நான் இறந்த ஒவ்வொரு பெண்களோட குடும்பத்தையும் நேர்ல சந்திச்சு ஆறுதல் கூறி தேவையானதெல்லாம் செஞ்சுட்டு வர்றேன்... அவங்க குடும்பத்துல வேற குழந்தைங்க இருந்தா இலவசமா என் காலேஜ்ல சீட் கொடுக்குறேன்," என்று மிகவும் நல்லவன் போலப் பேசியவனை கடுப்பாகப் பார்த்த சிந்து,

"அப்படின்னா அந்த விபத்துல இறந்து போன சுடர் பத்தி தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்டாள்.

அவர் தலையை அசைத்தார். "டக்குனு கேட்டதும் ஞாபகம் இல்ல."

அவள் போட்டோவை எடுத்துக் காட்டி, "சுடர் இரட்டைப் பிறவி, அவ சிஸ்டர் எழிலும் உங்க காலேஜ்லதான் படிச்சா," என, அதனை ஆழ்ந்து பார்த்துவிட்டு, "பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு," என்றார்.

"அதுல இருக்கிற எழில், உங்க பிரண்ட் அகிலனோட மருமக," என்றதும் அவர் யோசனையுடன் நிமிர்ந்தார்.

"அகிலனைக் கொலை பண்ண எழில் உடந்தையா இருந்திருப்பான்னு நாங்க சந்தேகப்படுறோம்," என்றதும் அவர் முகத்தில் சட்டென்று ஒரு பயம் எட்டிப் பார்த்தது.

"என்ன சார், ஒரு மாதிரி ஆகிட்டீங்க?"

"இல்ல... அகிலன் எனக்கு ரொம்ப க்ளோஸ் பிரண்ட்," என்றதும் அந்தப் படத்தை மீண்டும் உற்றுப் பார்க்க, "ஆனா இது வெறும் ஒரு கொலை இல்ல..." என்று மற்ற படங்களையும் நீட்டினாள். சூர்யா, அவன் நண்பர்கள், தாமு, ஆசைதம்பி என்று அந்தப் பட்டியல் நீளவும் அவர் முகம் வெளிறியது.

"அப்புறம் இது..." என்று சூர்யா மற்றும் அவன் நண்பர்களின் எலும்புகளைத் தோண்டி எடுத்ததைக் காட்டி, "இது அந்த எழில், சுடர் வீட்டுக்கு பின்னாடி... அப்புறம் அவங்க உங்களையும் டார்கெட் பண்ணுவாங்கன்னு தோணுது," என்று பாரூக் சொல்ல, "நான்... நான் எந்தத் தப்பும் செய்யல, என்னை ஏன் அவங்க டார்கெட் பண்ணனும்?" என்று கேட்கும்போது அவர் குரல் தடுமாறியது.

"நீங்க எந்தத் தப்புமே செய்யலன்னா அவங்க கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்ல," என்று சிந்து சொன்னதைக் கேட்டு அவர் கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது.

அவர் அருகே இருந்த தண்ணீர் டம்ளரை எடுத்துப் பருக, "சுடர் எப்படி வருவான்னு சொல்ல முடியாது... நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க... இதுவரைக்கும் அவ செஞ்ச கொலையில ஆதாரம் மட்டும் இல்ல... ஒரு எலும்பு கூட மிஞ்சல," என்று கூறியதை கேட்டதுமே அவருக்கு நடுங்கியது.

“பயப்படாதீங்க, ஏற்கனவே எங்க டீம் உங்களை சீக்ரெட் வாட்ச் பண்ணச் சொல்லியிருக்கோம்... ஆனா அதுக்கு நீங்களும் கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்," என்று பாரூக் சொல்ல,

"எப்படி?" என்று படபடப்புடன் கேட்டார் சகா.

"ஒன்னும் இல்ல... நீங்க எப்பவும் கையில வச்சிருக்கிற போன்ல எங்க ஆப்பை இன்ஸ்டால் பண்ணிக்கணும்... அப்புறம் இந்த ஜிபிஎஸ் டாலரை நீங்க கழுத்துல கட்டிக்கிட்டா மட்டும் போதும்," என்று ஒரு டாலரைப் போன்ற ஒரு செயினைத் தந்தாள். ஏற்கனவே பயத்தில் இருந்தவன் அவர்கள் சொன்னதை அப்படியே கேட்டுக்கொள்ள, இருவரும் வெளியே வந்தனர்.

சிந்து பாரூக்கை பார்த்து, "இவனை நம்ம காப்பாத்துறோமோ இல்லையோ, சுடரை நம்ம பிடிக்கிறோம்," என்று சொல்லிவிட்டு சகா கழுத்தில் உள்ள டாலரிலிருந்த கேமராவை ஆக்டிவேட் செய்து தன் செல்பேசி திரையில் திறந்தாள்.

"இப்போ அந்தச் சுடர் எப்படித் தப்பிக்குறான்னு பார்ப்போம்," என்று சிந்து தீவிரமாகக் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவளின் கைப்பேசி அதிர்ந்தது. அதனை எடுத்துப் பேசியவள் கண்கள் சற்றே விரிந்தன.

"என்னாச்சு?" என்று பாரூக் கேட்டான்.

ஒரு நொடி எதுவும் பேசாமல் நின்ற சிந்து, மெதுவாகச் சொன்னாள். "ஜோஸ்..."

"என்ன ஜோஸ் பேசுனாளா?" அவசரமாகக் கேட்டான் அவன்.

சிந்து ஆழமாக மூச்சை இழுத்து கொண்ட, "இல்ல அவ... நீதிமன்றத்துல சரண்டர் ஆகிட்டா..." என்றாள்.

பாரூக் அதிர்ச்சியில், "என்ன?" என்று நின்றான்.

" நான் எந்தத் தப்பும் செய்யல... என்னைக் குற்றவாளியா சித்தரிக்கப் பார்க்குறாங்க'ன்னு சொல்லி வக்கீல் மூலம் கேஸ் ஃபைல் பண்ணி இருக்கா!" என்றாள்.

இருவருமே அவர்கள் என்ன திட்டம் தீட்டுகின்றனர் என்று புரியாமல் திகைத்து நின்றனர்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா