மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Seethaigal Yaaro - From 30th episodeSeethaigal Yaaro - Final EpisodePost ReplyPost Reply: Seethaigal Yaaro - Final Episode

Quote from monisha on April 18, 2026, 1:42 PM

அத்தியாயம் 41

செல்பேசியில் அனுப்பியிருந்த இடத்திற்குப் பாரூக்கும் அவன் குழுவும் சென்றிருந்தனர். அவள் எங்கே என்று அவர்கள் தேட, பாரூக் சிந்துவின் அலைப்பேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்.

அவள் எடுக்கவே இல்லை. “கோ சர்ச் ஹெர்” என்று கட்டளையிட்டவன், இறுதியாகச் சிந்துவின் போன் லொகேஷன் முடிந்த இடத்திற்கு வந்தான்.

அது ஒரு பரந்த தென்னந்தோப்பு. சிந்து அங்கிருந்த ஒரு தென்னை மரத்தின் கீழே சேறும் சகதியுமாக உட்கார்ந்திருக்க, “என்னாச்சு சிந்து?” என்று பாரூக் அவளிடம் ஓடினான்.

“சுடர் எங்கே?” என்று கேட்டவனை ஏறிட்டவள், “தப்பிச்சுட்டா” என்று சொல்ல, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“தப்பிச்சுட்டாளா?” என்றவன் எதிரே இருந்த தென்னை மரத்திலிருந்த கயிற்றைப் பார்த்தான்.

சிந்துவின் வாகனத்தை முன்னே அனுப்பிவிட்டவன், அதன் பின் அவளைத் தன்னுடைய வாகனத்தில் கொண்டு வந்து இறக்கினான். ஆனால், வந்து சேரும் வரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

அவள் வீட்டில் நிறுத்தியவன், “சிந்து” எனவும் நிமிர்ந்தாள். தன் வீட்டைப் பார்த்துவிட்டு, “தேங்க்ஸ்” என்று இறங்கிக் கொண்டாள்.

“சிந்து” என்று மீண்டும் அழைக்கவும் திரும்பி நின்றாள்.

“சுடர் உண்மையிலேயே தப்பிச்சுட்டாளா?”

“பின்ன நான் பொய் சொல்றேனா?”

“இல்ல, நான் அப்படிச் சொல்லல” என்றதும் அவள் மறுவார்த்தை பேசவில்லை.

பூட்டைத் திறந்து வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

தான் செய்தது சரியா தவறா? அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

சுடரை இழுத்துக் கீழே தள்ளிய போதும் அவள் சுலபத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. எட்டி அவளை உதைத்துவிட்டு மீண்டும் அந்த காம்பவுண்டு சுவரை ஒரே தாவலில் அந்தப் பக்கமாகத் தாண்டி குதித்துவிட்டாள்.

அப்படியெல்லாம் தாவுவதற்கு அதிகப் பயிற்சி வேண்டும். ஆனாலும் சிந்துவும் சுலபத்தில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. கொஞ்சம் சிரமப்பட்டாலும் அவளும் தாண்டி குதித்துவிட்டாள்.

அந்தத் தென்னந்தோப்பிற்கு இடையில் சுடர் பாய்ந்தோடுவதைப் பார்த்த சிந்துவும் வேகமெடுத்து ஓடினாள். இருவருக்கும் இடையிலான இடைவெளி குறைந்தது.

ஆனால், சுடரின் வேகத்தை எட்டிப் பிடிப்பது சுலபமாக இல்லை. இன்று பார்த்துத் துப்பாக்கியையும் எடுத்து வரவில்லை. எப்படியாவது அவளைப் பிடித்துவிட வேண்டுமென்று மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிய சிந்து, இறுதியாகச் சுடரின் கால்கள் அங்கிருந்த சேற்றில் இடறிய கணத்தைப் பயன்படுத்திக் கொண்டாள்.

அதுதான் சமயம் என்று அவளைப் பின்பக்கமாகப் பாய்ந்து பிடித்து ஒரே அமுக்காக அமுக்கிவிட்டாள். ஆனாலும் சுடரை அசையாமல் பிடிக்க அசாத்திய பலம் தேவைப்பட்டது.

அந்தச் சமயத்தில் தோப்பின் பராமரிப்பாளர், “யாரும்மா நீங்க?” என்று கத்திக் கொண்டே ஓடி வர,

“நான் போலீஸ், இவ பயங்கரமான கிரிமினல்” என்று சிந்து அவளைப் பிடித்துக் கொண்டே தன் பர்ஸைத் தூக்கி வீசினாள்.

“அதுல என் கார்டு இருக்கு பாருங்க” என அதனை விரித்துப் பார்த்தவர் முகத்தில் அச்சம் படர்ந்தது.

“இவ பயங்கரமான கொலைகாரி” என்றதும் அவர் இன்னும் மிரண்டுவிட, “இவளைக் கட்டிப்போட ஏதாச்சும் கயிறு கொண்டு வாங்க” என்றாள்.

“சரிம்மா” என்றவர் ஓடிச் சென்று கயிறு எடுத்து வரவும், சிந்து அவள் கையை இழுத்துப் பிடித்துப் பின்பக்கமாகக் கட்டினாள்.

“கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று அந்தத் தோட்டக்காரர் உதவியுடன் மரத்தோடு பிணைத்துக் கட்டிவிட்டு எழுந்தவளுக்குப் பலமாக மூச்சு வாங்கியது.

உடனடியாகத் தன் செல்பேசியில் பாரூக்கிற்கு வீடியோ காலில் அழைக்க, “என்ன சிந்து?” என்று கேட்க, அவள் கேமராவில் காட்டி, “நான் சுடரைப் பிடிச்சுட்டேன்” என்று நடந்த விவரங்களைக் கூற,

“ஓகே ஓகே, நீ லொகேஷன் அனுப்பு, நான் பேக்அப்போட வர்றேன்” என்றான். சிந்து அழைப்பைத் துண்டித்த மறுகணம் சுடர் பயங்கரமாகச் சிரித்தாள்.

“இப்ப எதுக்குடி சிரிக்குற?” என, அவள் அப்போதும் சிரிப்பை நிறுத்தவில்லை.

“அடிங்க எதுக்குடி சிரிக்குற?” என்று சீற்றமாக அவளை அடிக்கப் போகவும்,

“சுடரைப் பிடிச்சுட்டேன் சுடரைப் பிடிச்சுட்டேனு சொல்றியா... நான் சுடர்னு உனக்கு யார் சொன்னது?” என்று கேட்டு வைக்க, சிந்துவின் முகத்தில் குழப்பம் படர்ந்தது.

ஒரு நொடி நிதானித்தவள் பின்னர் தெளிவுடன் சொன்னாள், “எனக்கு நல்லா தெரியும் நீதான் சுடர்.”

“முதல்ல உனக்கு... சுடருக்கும் எழிலுக்கும் வித்தியாசம் தெரியுமா?”

“வித்தியாசம் ஒன்னும் தேவையில்லை... நீ உயிரோட இருக்கன்னு ப்ரூப் பண்ணிட்டாலே போதும்... இந்த கேஸ் சால்வ் ஆகிடும்.”

“அதெப்படி ப்ரூப் பண்ணுவ” என்ற கேள்விக்கு தீவிரமாக யோசித்தவள் பின்னர், “கைரேகை வைச்சு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும்.” என்றாள்

“ஆமா, யார் கைரேகை எதுன்னு உனக்கு தெரியுமா? முதல நான் யாருன்னே உனக்கு தெரியாது” என்று மீண்டும் சொல்லி சிரித்தாள் சுடர்.

“நீ உன் இஷ்டத்துக்கு என்னைக் குழப்பாத” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போது ரூபனிடமிருந்து அழைப்பு வந்தது.

“என் வைஃப் என்ன பண்ண நீ... அவளுக்கு ஏதாவது ஆச்சு உன்னைச் சும்மா விட மாட்டேன் சொல்லிட்டேன்” என்று எடுத்ததும் அவன் கத்தத் தொடங்க,

“நான் எழிலைத் துரத்திட்டு வரல... சுடரைத்தான் துரத்திட்டு வந்தேன்.” என்றாள்.

“பைத்தியமா நீ... சுடர்தான் உயிரோட இல்லையே... இங்கே நானும் எழிலும் மட்டும்தான் இருக்கோம்.”

“நீ ஏமாத்துற... நான் என் கண்ணால பார்த்தேன்... சுடர், எழில் இரண்டு பேரையும் பார்த்தேன்.”

“இன்னுமா புரியல உனக்கு?” என்று சுடர் சொன்ன நொடி சிந்துவின் முகம் மாறியது. அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“பைனலி...”

“இல்ல, நான் அவ்வளவு சீக்கிரத்துல உங்களை விட மாட்டேன்.”

“நீ என்ன என்னை விடுறது... எப்படி வெளியே வரணும்னு எனக்குத் தெரியும்.”

“சுடர்!” என்றவள் பல்லைக் கடிக்க,

“நான் தெளிவா சொல்றேன்... கேட்டுக்கோ... நான் சுடராக இருக்கும் போது அவ எழில்... நான் எழிலாக இருக்கும் போது அவ சுடர்... பல நேரங்களில் நாங்க யாராக இருக்கோம்கிறது எங்களுக்கு ரொம்ப நெருக்கமானவங்களால கூட கண்டுபிடிக்க முடியாத போது உன்னால எப்படி முடியும்னு நினைக்குற?”

“முடியும்... என்னால முடியும்” என்று அப்போதும் சிந்து விட்டுக் கொடுக்காமல் பேச,

“அதுக்கு எங்க இரண்டு பேரையும் நீ சேர்த்துப் பிடிச்சிருக்கணும்” என்ற போது, சிந்துவிற்கு தான் எங்கே தவறவிட்டோம் என்று அப்போதுதான் விளங்கியது.

“இல்ல, நான் திரும்பவும் உன்கிட்ட தோற்க மாட்டேன்” என்று சிந்து வெறியுடன் சொல்ல,

“முதல்ல எனக்கும் உனக்கும் போட்டியே இல்ல... இன்னும் கேட்டா உன்னையும் எங்க டீம்ல சேர்த்துக்கலாம்னு சொல்லி ஜோஸ் சொன்னா... அதனால்தான் தாமு கைரேகையோட ஒரு லேப்டாப் ஆதாரத்தை உனக்காக விட்டுட்டுப் போனோம்” எனச் சிந்து வியப்பாகப் பார்த்தாள்.

சுடர் தொடர்ந்தாள். “ஆனா நீ தப்பு செஞ்சவங்கள எல்லாம் கண்டுபிடிப்பன்னு பார்த்தா நீ எங்களைத்தான் டிரேஸ் பண்ண... அதுகூடப் பரவாயில்லை, நீ உன் பிரண்டு ஒருத்தன்கிட்ட அந்த லேப்டாப் கொடுத்துச் செக் பண்ண சொன்னியே... அவன் அதை மினிஸ்டர் செகரட்டரி விலைக்குக் கேட்டதும் காசுக்கு வித்துட்டு உன்கிட்ட திருடு போயிடுச்சுனு பொய் சொல்லிட்டான்.”

“ஆனா என் வீட்டுக்கு வந்து...”

“எங்களைப் பத்தி நீ கண்டுபிடிச்ச ஆதாரத்தைத்தான் நான் வந்து அழிச்சேன்... கூடவே உனக்கு ஒரு குளூவும் விட்டுட்டுப் போனேன்... இந்தப் போர் தப்பானவங்களுக்கு எதிரானதுன்னு. நீ கடைசி வரைக்கும் எங்களுக்கு எதிராகத்தான் இருந்த.”

“ஆனா நான் சாய்விஷ்ணுகிட்ட யாருக்கும் தெரியாம லேப்டாப் கொடுத்தது யாரும் தப்பான ஆளுங்ககிட்ட மாட்டக் கூடாதுன்னுதான்.”

“நீ கொடுத்த ஆளே தப்பானவன்தான்... இங்கே பிரச்சினையே அதுதான்... வேலியே பயிரை மேயும் போது யாரை நம்புறது? யார்கிட்ட போய் என் பிரண்ட்ஸுக்கும் எனக்கும் நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்கிறது சிந்து?

அப்படியே உங்க ஜஸ்டிஸ் சிஸ்டம் வேலை பார்த்தாலும் அது நாங்க செத்த பிறகுதான் நீதி கொடுக்கும்... இப்போ கூட முப்பது பேரோட சாவுல சந்தேகம் இருக்குனு நீங்க எப்போ கண்டுபிடிச்சீங்க?”

இந்தக் கேள்விக்கெல்லாம் சிந்துவால் பதில் சொல்ல முடியவில்லை.

“சரி, முப்பது பொண்ணுங்களைக் கொளுத்திக் கொன்னவன்னு தெரிஞ்சும் அவனைப் பாதுகாக்க நினைச்சது எந்த விதத்துல நியாயம்?”

“கொலைக்குக் கொலைதான் தீர்வா?”

“சரி வேற என்ன தீர்வு நீ சொல்லு? என் கண்ணு முன்னாடியே என் பிரண்ட்ஸை எரிச்சுக் கொன்னாங்க... கொன்னுட்டு என்னைக் கடத்திட்டுப் போய் வைச்சிருந்து என்னை தினம் தினம் ஒருத்தன் ரேப் பண்ணான்.

உயிரோட வைச்சுக் கொன்னான்... அப்போ உங்க சிஸ்டம் வந்து என்னைக் காப்பாத்தல... என் ஜோஸும் எழிலும்தான் எனக்காக வந்தாங்க... அவங்களையே அவன் கொல்லப் பார்க்கும் போது நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கணுமா? உங்க நீதித்துறையும் காவல்துறையும் எங்களை வந்து காப்பாத்தும்னு?”

“நீ சொல்றது எல்லாம் சரிதான்... ஆனா அதுக்காக நீ செஞ்ச கொலைகளை எல்லாம் சரின்னு நியாயப்படுத்த முடியும்னு நினைக்குறியா?”

“நினைக்கல... உறுதியாக நம்புறேன்.. நான் செஞ்சதுதான் நியாயம்... நீயும் அதே போல உறுதியாகச் சொல்ல முடியுமா... உங்க டிபார்ட்மெண்ட் இவங்க எல்லோருக்கும் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்னு சொல்ல முடியுமா?”

சிந்து பேச்சற்று நின்றுவிட்டாள். மறுபுறம் ரூபனின் எண்ணிலிருந்து விடாமல் அழைப்பு வந்தது. அவள் சுடரை யோசனையுடன் பார்த்து,

“ஆமா ரூபன் எப்படி உங்க சைட் வந்தான்?” என்று சிந்து கேட்க,

“அவங்க அப்பாவைப் பத்தின உண்மை தெரிஞ்சுக்கிட்ட பிறகு” என்றவள் அகிலனைப் பற்றிச் சொல்லி முடித்த கணம் சிந்து அதிர்ந்தாள்.

“அகிலன் சாரா?”

“ரூபனும் உன்னை மாதிரிதான் ஷாக் ஆனான்... கோபமா கத்தினான்... ஆனா அதைத் தாண்டி எங்க பக்கம் இருக்க நியாயம் அவனுக்குப் புரிந்தது. ஹி இஸ் சச் அ ஜெம்... என் வாழ்க்கையில் எனக்குக் கிடைச்ச மோசமான அனுபவங்களால எனக்கு மனுஷங்க மேல இருக்க நம்பிக்கையே போயிடுச்சு... அதை மாத்தினது ரூபன்தான்...

திரும்பவும் வாழ்க்கை மேல நம்பிக்கை கொடுத்தது ரூபன்தான்... இல்லைன்னா நானும் அந்த சகாவைக் கொன்னுட்டுச் செத்துப் போயிடலாம்னு நினைச்சேன்” என்றாள்.

சுடர் சொன்னதை எல்லாம் யோசித்தபடி அமர்ந்திருந்த சிந்து, அதன் பின் குளியலறைக்குள் சென்றாள். முழுவதுமாகத் தண்ணீரில் நனைந்தாள். நனைய நனைய மனம் இளகி லேசானது. உடை மாற்றிக் கொண்டு சமையலறைக்கு வந்தவள், இன்னும் அந்தப் பொறியில் எலி மாட்டியிருப்பதை கண்டாள்.

அதனைத் தூரமாக எடுத்துச் சென்று திறந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியவளின் மனம் கொஞ்சம் அமைதியடைந்தது. செல்பேசியில் பாரூக்கிற்கு அழைக்க, “சொல்லு சிந்து” என்றான்.

“இன்னைக்கு நைட் பிரீயா... டின்னர் போலாம்.”

“எஸ் எஸ்” என்றவன் ஆர்வமாக சம்மதிக்க, அவள் உடைமாற்றித் தயாரானாள். பாரூக் வந்ததும் அவனிடம் புன்னகையாகக் காத்திருந்தாள்.

அவன் வந்ததும் இருவரும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்லவும், “என் ப்ரோபஸலை அக்ஸப்ட் பண்ணிட்டியா?” என்று கேட்க, “வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு நல்ல வாய்ப்பை நான் தவறவிட்டேன்... திரும்பவும் அதே போலத் தவறவிட விரும்பல” என்றாள்.

******முற்றும்******

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா