மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Tips for Terrace gardenTerrace garden tips - 4Post ReplyPost Reply: Terrace garden tips - 4

Quote from monisha on March 10, 2020, 4:42 PM

குறிப்பு – 4 பூச்சிவிரட்டி

பச்சை மிளகாய், இஞ்சி. பூண்டு கரைசல்
இன்றைக்கு இந்தியாவுக்கும், ஏன், உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து இருப்பது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் நச்சு வேதிப்பொருட்கள் கலந்து, மனிதர்களை மெல்லக் கொல்லும் விஷமாக (ஸ்லோ பாய்சன்) அவை மாறி வருவது தான். அதற்கு காரணம் விவசாயிகள் ரசாயன வேதிப்பொருட்கள் கலந்த உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு உண்டு. ஆனால், அறியாமை, அதிக பூச்சித் தாக்குதல், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக விளைச்சல் பெற வேண்டும் போன்ற காரணங்களால் உற்பத்தியாளர்கள், சிபாரிசு செய்யப்பட்ட அளவை விட அதிகமான அளவு உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் ரசாயன வேதிப்பொருட்கள் அடங்கிய உரங்களும், பூச்சிக்கொல்லிகளும், செடிகளையும் தாண்டி, அதில் விளையும் உணவு தானியங்களிலும் ஊடுருவி விடுகின்றன. இப்படியாகத்தான் உணவுப்பொருட்களில் நச்சு வேதிப்பொருட்கள் கலந்து விடுகிறது. இதையெல்லாம் தவிர்க்கதான் முடிந்தளவு நமக்கான காய்கறிகளை நாமே பயிரிட்டு விளைவிக்கும் இந்த மாடி தோட்ட முறை. இதில் முக்கியமாக நாம் தவிர்க்க வேண்டியது பூச்சி கொல்லை மருந்துகளைதான். எங்கிருந்தாலும் பூச்சிகள் நம் பயிர்களை தாக்கத்தான் செய்யும். அதிலிருந்து நம் பயிரை காப்பாற்ற இயற்கை மூளிகயிலான பூச்சிவிரட்டிகளே போதுமானது. அதில் முக்கியமாக நாங்கள் பயன்படுத்துவது பச்சை மிளகாய், இஞ்சி. பூண்டு கரைசல். மூன்றையும் சமளவில் எடுத்து அரைத்து கொண்டு செடியின் மீது வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். அதே போல பழைய புளித்த மோரை கூட தெளிக்கலாம். அதற்கு மேல் பூச்சிகளை விரட்ட மிகவும் கசப்பு வாய்ந்த இயற்க்கை மூலிகைகளை கூட பயன்படுத்தும் வழிமுறைகள் கூட உண்டு. அவற்றையும் கற்று நம் பயிரை காப்பதன் மூலமாக ஆரோக்கியமான உணவும் உடலையும் பெற முடியும்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா