மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 21Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 21

Quote from monisha on July 6, 2026, 6:58 PM

21

அந்த விமானம் காற்றைக் கிழித்துக் கொண்டு மேலே பறந்தது. அந்தக்காட்சியை ஜன்னல் வழியாகப் பார்த்திருந்த இந்திரனுக்கு எவ்வித பரவச நிலையும் உண்டாகவில்லை.

முதலிரவு போல இந்தத் தேன்நிலவு பயணமும் அவனுக்கு எதிர்பார்த்தது போல இருக்கப் போவதில்லை. இந்த நான்கு நாளில் அவளின் நிராகரிப்பு அவனுக்கு ஓரளவுக்குப் பழகிவிட்டது. அதனால்தான் அவள் புறம் திரும்பாமல் ஜன்னல் புறம் வெறித்துக் கொண்டிருந்தான்.

ஆனால் சௌந்தர்யாவின் விழிகள் அவன் மீதுதான் லயித்திருந்தன. கூடவே அண்ணன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் காதில் ரீங்காரமிட்டது.

“நான் உனக்காகப் பேசுன மாதிரிதானே இந்திரன் அவன் தங்கச்சிக்காக பேசுனான்... அது எப்படி தப்புன்னு சொல்ல முடியும்... அவன் கல்யாணத்தை நிறுத்துவேன்னு சொன்னதும் என் மேல இருக்க கோபத்துலதான்

அதுவும் இல்லாம அவன் என் காதலை எதிர்த்தது ஏதோ ஸ்டேட்டஸ்காகவோ இல்ல ஜாதிக்காகவோ இல்லையே... அவன் தங்கச்சியோட கனவுக்காக.. அவ படிச்சு நல்ல வேலைக்கு போகணும்கிறதுக்காக...

இதுலயே தெரியலயா இந்திரன் எவ்வளவு நல்லவன்னு... அவன் மட்டும் இல்ல அவன் குடும்பமும் அப்படிதான்... அதனாலதான் எப்படியாச்சும் இந்தத் கல்யாணத்தை நடத்திடணும்னு நான் முடிவு பண்ணேன்.

ப்ளீஸ் உனக்கு அமைஞ்சிருக்குற நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத” என்ற தமையனின் அறிவுரை அவளை யோசிக்க வைத்தது.

திரும்பி இந்திரனைப் பார்த்தாள். ஏதோ கப்பல் கவிழ்ந்தது போல அமர்ந்திருந்தான். அவன் வேதனையை பார்த்தவள் மனம் குற்றவுணர்வு அடைந்தது.

“இந்திரன்” என்றவள் மெதுவாக அழைக்க, அவன் திரும்பினான்.

“நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றதுமே அவன் அலட்சியத்துடன்,

“என்ன, உனக்குத் தனி ரூம் போட்டுக் கொடுக்கணும் அதானே” என்றான்.

“அதெல்லாம் இல்ல”

“அப்புறம் என்ன இந்த ஹனிமூன் ட்ரிப் கேன்ஸல் பண்ணனுமா” என்றவன் கடுகடுக்க, “அது இல்ல” என்றாள்.

“வேற என்ன?”

“சாரி கேட்கணும்” என்றாள் மெல்லிய குரலில்.

“என்ன சாரி கேட்கணுமா?” என்றவன் திகைக்க, “நான் அந்தளவுக்குக் கோபப்பட்டிருக்கக் கூடாது... ஆனா என்னவோ நீங்க அப்படி சொன்னது தெரிஞ்சதும்” என்றவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு,

“நீ சமாதானமாயிட்டியா?” என்று ஆச்சரியித்தான்.

“ம்ம்ம்”

“சத்தியமா?”

“ஆமா” என்றவள் தலையசைத்த மறுகணம், “உஹு” என்று பெரிதாக மூச்சை இழுத்துவிட்டான். பின்னர் மீண்டும் அவள் புறம் திரும்பி, “இந்தத் தொடக்கூடாதுங்குற கண்டிஷன் இனிமே இல்லைதானே” என்று வினவ,

“இல்ல” என்று வெட்க புன்னகையுடன் சொல்ல அவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.

“சாரி சௌமி நானும் அப்படி பேசி இருக்க கூடாது”

“அந்த விஷயத்தை விடுங்க” என்றவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டு, “லவ் யூ” என அவனும், “லவ் யூ டூ” என்றான். ஒரு வழியாக இந்த பிரச்னை முடிந்தது என்று இந்திரனுக்கு நிம்மதியாக இருந்தது. அந்த நொடி அவர்களது தேன்நிலவு பயணமும் இனிதே துவங்கியது.

சென்னை, கஜேந்திரன் தயாரிப்பு நிறுவனம். அலுவலகத்திற்குள் நுழைந்த கார்த்திக் அனுமதி பெற்று அவர் அறைக்குச் சென்றான்.

அவனைப் பார்த்ததும், “வா கார்த்திக் உட்காரு” என்று சொல்ல,

“நான் உட்கார வரல... இந்தாங்க உங்க கார் சாவி” என்று அதனை மேஜை மீது வைத்துவிட்டு, “முன்னாடியே கொடுத்திருப்பேன் ஆனா வீட்டுல கல்யாண வேலை அதான்” என்றான்.

“கேள்விப்பட்டேன் உனக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு போல... அதுவும் அதே பொண்ணோட” என்றவர் அழுத்தி சொல்ல,

“ஆமா, இத்தோட இந்தச் பிரச்னையை உங்க பையனையும் விட்டுடச் சொல்லுங்க” என்றுவிட்டு அறைக்கு வெளியே வந்தவன் அங்கே அமரேஷ் நிற்பதைப் பார்த்தான்.

அவனைக் கண்ட கணமே கார்த்திக்கின் உடல் முழுக்க ரத்தம் கொதித்து ஏறியது. துண்டு துண்டாக வெட்டிச் சாய்க்க வேண்டும் போல மனதுக்குள் ஒரு வெறி தாண்டவமாடியது.

இருந்தபோதும், தன் கோபப்பற்களைக் கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டவன், அவனைப் பார்க்காதது போலத் திரும்பி நடந்தான்.

“கல்யாணம் ஆயிடுச்சாமே... ஃபர்ஸ்ட் நைட் எப்படி இருந்துச்சு?” அமைதியாக போகிறவனை வேண்டுமென்றே வம்பிழுத்தான் அமரேஷ்.

கார்த்திக்கின் கால்கள் அப்படியே உறைந்து நின்றன. நரம்புகள் புடைக்க, பற்களை நறநறவெனக் கடித்தபடி விறுவிறுவென்று திரும்பி வந்தான்.

“அமரேஷ்... வேண்டாம், இதோடு நிறுத்திக்கோ!” எச்சரிக்கையில் அவன் குரல் நடுங்கியது.

“எதை நிறுத்தணும்? உன் வொய்ஃப்பை சைட் அடிக்கிறதையா? அது ரொம்ப கஷ்டம் நண்பா...” அமரேஷ் உதட்டைச் சுழித்து விவகாரமாகப் பேச, கார்த்திக்கின் நிதானம் தப்பியது.

அவன் முகத்திலேயே குத்த பாய்ந்தான். ஆனால், அதற்குள் அங்கிருந்த பவுன்சர்கள் கார்த்திக்கை இரும்புப் பிடியாக இழுத்துப் பிடித்தனர்.

அவர்களின் பிடியில் திமிறிய கார்த்திக்கைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்த அமரேஷ், “அவளுக்காக என்னை அடிக்க வர்றியா?” என்று கேலி பேசினான்.

“அடிக்க இல்லடா... கொன்னுடுவேன் உன்னை! துண்டு துண்டா வெட்டி நடுத்தெருவுல வீசுவேன்!” என்று கார்த்திக் ஆத்திரத்தில் கத்தினான்.

“அந்தளவுக்கு வொர்த்தான பீஸ்தான் அவ... இப்போ கூட இன்ஸ்டால எல்லோ ஸ்லீவ்லெஸ் டாப்ல ஒரு செல்ஃபி போட்டிருந்தா பாரு... சும்மா... கிக்கு ஏறுது!” என்று அமரேஷ் வக்கிரத்துடன் அவளை வர்ணித்த அந்த நொடி, கார்த்திக்கிற்குப் கண்மண் தெரியவில்லை.

“டேய்... உன்னை!!!” என்று மிருகத்தனமான பலத்தோடு முன்னே பாய்ந்தான். ஆனால், இரண்டு பவுன்சர்கள் அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து அலுவலகத்திற்கு வெளியே தள்ளினர்.

வெளியே விழுந்த பிறகும் கார்த்திக்கின் வேகம் அடங்கவில்லை. “நீ என் கையாலதான் சாகப் போற... எழுதி வச்சுக்கோடா!” என்று கத்திவிட்டு நகர்ந்தான்.

அந்தக் காட்சியை ஜன்னல் வழியாக அலட்சியச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அமரேஷ். அவன் அருகே வந்த கஜேந்திரன், மகனின் தோளைப் பிடித்துத் திருப்பினார்.

“நடந்ததெல்லாம் நான் பார்த்துட்டுதான் இருந்தேன். நீ தேவையில்லாத வேலையைப் பார்க்குற அமரேஷ்... கார்த்திக் சாதாரண ஆள் இல்லை. இது உனக்குத்தான் பெரிய ஆபத்துல முடியும், பார்த்துக்கோ!” என்று எச்சரித்தார். ஆனால், அமரேஷ் அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிகரெட்டைப் பற்றவைத்தான்.

அதே சமயம் அங்கிருந்து கிளம்பிய கார்த்திக் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்திருந்தான். உள்ளே நுழைந்ததும் தேன்மொழியின் குரல் உரக்கக் கேட்டது.

“உனக்கு உங்க அம்மா எந்த வேலையும் சொல்லிக் கொடுக்கலையா?”

“இல்லையே, எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்களே”

“என்னத்தைச் சொல்லிக் கொடுத்தாங்களோ... ஒரு கீரை கூட ஒழுங்கா கிள்ளத் தெரியல”

அந்தச் சம்பாஷனையைக் கேட்டும் கேட்காதவன் போல அறைக்குள் வந்து தலையைப் பிடித்துக்கொண்டு வந்து உட்கார்ந்துவிட்டான். இன்னும் அவன் கோபம் அடங்கியபாடில்லை.

அதேநேரம் அறைக்குத் திரும்பிய யாத்ரா அவனைக் கண்டதும், “எப்போ வந்த கார்த்திக்?” என்று கேட்டாள்.

அவன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தான். அதைப் பற்றிக் கவலை இல்லாமல் அவள் பாட்டுக்கு, “உங்க அம்மா சும்மாவே எதையாவது சொல்றாங்க கார்த்திக்... கீரை கிள்ளத் தெரியலங்குறத எல்லாம் பெரிய விஷயம்னு பேசிட்டு இருக்காங்க” என்று புகார் வாசிக்க எதையும் அவன் காதில் வாங்கவில்லை.

“கார்த்திக் உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்” என்றவன் முகத்தை நிமிர்த்தவும், அவளைப் பார்த்தவன் விழிகள் அதிர்ந்தன.

அமரேஷ் சொன்ன அதே மஞ்சள் டாப்பில் இருந்தாள். அந்த நொடி அவன் சொன்ன வக்கிரமான வர்ணனைதான் மூளையில் வந்து தெறித்தது.

எழுந்து நின்றவன், “இன்ஸ்டால போட்டோ போட்டியாடி?” என்று கேட்க,

“ஆமா போட்டேன் ஏன்?” என்றாள் சாதாரணமாக.

“நீயெல்லாம் திருந்தவே மாட்டியா... எவ்வளவு பிரச்னை நடந்துச்சு... திரும்பவும் போட்டோ போட்டிருக்கன்னு சொல்ற... அந்த போட்டோவை எவன் எல்லாம் பார்ப்பான், என்ன கோணத்துல பார்ப்பான்னு ஏதாவது ஐடியா இருக்கா?”

“சாரி, இப்போ என்ன சொல்ல வர்ற நீ?”

“ஒழுங்கா உன் இன்ஸ்டா அக்கவுண்ட்ல இருக்க எல்லா போட்டோவையும் டெலீட் பண்ற”

“என்ன?”

“போட்டோவை எல்லாம் டெலீட் பண்ணுனு சொன்னேன்” என்றவன் அதிகாரமாக சொன்னான். அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தவள்,

“பண்ணலனா என்ன பண்ணுவ?” என்று திருப்பிக் கேட்க, “உன் போனை உடைச்சு போட்டிருவேன்” என்றான்.

“எங்க அப்பா வாங்கித் தந்த போன் அது”

“யார் வாங்கித் தந்தாதா இருந்தாலும் உடைப்பேன்” என்ற அவனும் உறுதியாகச் சொல்ல, அவளுக்கும் கோபம் ஏறியது.

“சரியான சைக்கோ குடும்பத்துல வந்து மாட்டிக்கிட்டேன்”

“என்ன சொன்ன, சைக்கோ குடும்பமா?”

“ஆமா நீ ஒரு சைக்கோ... உங்க அம்மா ஒரு...” என்றவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் கை ஓங்கிவிட, அவள் அப்படியே பயத்தில் பின்வாங்கினாள்.

அந்த நொடியே தன் செயல் தவறு என்று உணர்ந்து அவன் கையை இறக்கிவிட, அவள் கன்னங்களில் சரசரவென கண்ணீர் இறங்கியது.

அந்த கண்ணீர் அவன் கோபத்தை தணித்துவிட,

“சாரி யாத்ரா ஏதோ கோபத்துல” என்றவன் பேச வர,

“ப்ளீஸ் எதுவும் விளக்கம் கொடுக்காத... ஒத்துக்கிறேன்... நான் செஞ்சது தப்புதான்... இன்ஸ்டால போட்டோ போட்டிருக்க கூடாது... இனிமே போட மாட்டேன்... இதோ இப்பவே என் அக்கவுண்ட்டை டெலீட் பண்ணிடுறேன்” என்றவள் வேகவேகமாக தன் அலைபேசியை எடுத்து உடனடியாக இன்ஸ்டா கணக்கை நீக்கிவிட்டு அவனிடம் காட்டினாள்.

“போதுமா... இல்ல வேற ஏதாவது அக்கவுண்ட் டெலீட் பண்ணனுமா சொல்லு பண்ணிடுறேன்”

“யாத்ரா, நான் சொல்றதைப் பொறுமையா கேளேன்”

“அதான் கேட்டுட்டனே... ஆக்சுவலி எனக்கு வேற ஆப்ஷனும் இல்லதானே... பிகாஸ் யூ ஆர் மை ஹஸ்பண்ட் நவ்... நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுதான் ஆகணும்... அப்புறம் உங்க அம்மா அவங்களும் என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கணும்” என்றவள் அதற்கு மேல் அந்த பேச்சை தொடரவில்லை. செல்பேசியை மேஜை மீது தூக்கி வீசிவிட்டு விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

‘சை கொஞ்சம் கூட அறிவே இல்ல எனக்கு... எதையும் பொறுமையா சொல்லிப் பழக்கமே இல்ல’ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவன் அவளைத் தேடிக்கொண்டு வெளியே வந்தான்.

“என்னடா உன் பொண்டாட்டி முடுக்கிட்டுப் போறா... என்ன பிரச்னையாம் அவளுக்கு... வந்ததுல இருந்து ஒரு வேலை கூட செய்யறது இல்ல... அப்படியே செஞ்சாலும் ஒழுங்கா செய்யறது இல்ல... எனக்கு மட்டும் வயசாகலையா, நானும் எவ்வளவு வேலைதான் செய்வேன்?” என்று எரிச்சலாக ஆரம்பித்தவர் புலம்பலாக முடிக்க,

“ம்மா... நான் உன்கிட்ட நூறு தடவைக்கு மேல சொல்லி இருக்கேன் வேலைக்கு ஆள் வைச்சுக்கோங்கன்னு... நீங்க கேட்காம எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செஞ்சுட்டு இப்போ என்னால முடியலன்னு வேண்டியது” என்றவன் அவரிடமே கடுகடுக்க,

“அப்போ உன் பொண்டாட்டி எந்த வேலையும் செய்ய மாட்டாளா?” என்று பொங்கினான். “செய்ய மாட்டாம்மா” என்று ஒரேடியாகச் சொன்னவன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை.

யாத்ராவைத் தேடிக்கொண்டு சென்றான். உள்ளே, வெளியே என்று அலைந்து திரிந்து தேடியவன், இறுதியாக அவள் மாடிக்குப்போகும் படிக்கட்டில் தனியாக அமர்ந்திருப்பதைக்கண்டு நிம்மதியோடு பெருமூச்சுவிட்டான்.

“யாத்ரா...” என்ற அவனது தவிப்பான அழைப்பை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவன் மெதுவாக அவள் அருகில் வந்து உட்கார முற்பட்டான். உடனே அவள் அங்கிருந்து எழுந்து செல்லப் பார்க்க, சட்டென்று அவளது கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

“கையை விடு கார்த்தி!” அவள் குரலில் அத்தனை நடுக்கமும் கோபமும் கலந்திருந்தது.

“ப்ளீஸ்... ப்ளீஸ்டி, நான் சொல்றதை ஒரே ஒரு நிமிஷம் பொறுமையா கேளு!” என்று அவன் இறைஞ்சிக் கேட்கவும், அவளது கால்கள் மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நின்றன.

சற்று முன்பு அலுவலகத்தில் அமரேஷ் எவ்வளவு வக்கிரமாகப் பேசினான், அது தன்னை எவ்வளவு தூரம் உசுப்பிவிட்டது என்பதை எல்லாம் கொட்டித் தீர்த்தவன், “அவன் அப்படி பேசினதும் எனக்குப் புத்தி கெட்டுப் போச்சு... அதான் உன்கிட்ட வந்து ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன். சாரி யாத்ரா...” என்றான்.

அவன் சொன்ன எல்லாவற்றையும் எந்த சலனமும் இல்லாமல் நிதானமாகக் கேட்டு முடித்தாள் யாத்ரா.

பின்னர் அவனை நேராகப் பார்த்து, “எனக்கு ஒரு விஷயம் புரியல கார்த்தி... நான் இன்ஸ்டால போட்டோ போட்டதாலதான் அவன் அப்படி பேசனானா?” என்று தீர்க்கமாகக் கேட்டாள்.

“அப்படி சொல்லல... ஆனா அவன் உன்னைத் தப்பா பார்க்குறான், தப்பான கண்ணோட்டத்துல பேசுறான்னு தெரியும்போது, நாம அதைத் தவிர்க்கிறது நல்லதுதானே?” என்றான் கார்த்திக் தன் பக்க நியாயத்தை விளக்க முயன்று.

“ஓ... அப்போ நான் போட்டோ போடுறதை நிறுத்திட்டா, அவன் திருந்திடுவான்”

“உன்னை அப்படி பார்க்குறதுக்கான வாய்ப்பு குறையும்ல...”

“அப்போ ஸ்கூலுக்கு, காலேஜுக்கு, ஆபீஸுக்கெல்லாம் பெண்கள் போகாம வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தா, அவங்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் இந்தச் சமூகத்துல சுத்தமா குறைஞ்சிடும்... அதானே உன் லாஜிக்?”

“ஏய்... என்ன பேசுற நீ? வேலையும் கல்வியும் பெண்களுக்கு அத்தியாவசியமானது... ஆனா இந்த சோஷியல் மீடியா போட்டோ அப்படி இல்லையே”

யாத்ரா கசப்பாகப் புன்னகைத்தாள். “பாத்தியா... நீயும் உங்க அம்மா டோன்லயேதான் பேசுற!”

“புரியல, அம்மா டோன்லனா”

“இந்தச் சமூகம் தனக்கு வசதியா கட்டமைச்சு வச்சிருக்க ஒரு ‘பெர்ஃபெக்ட் வுமன்’ பிம்பத்தைத்தான் நீயும் உங்க அம்மாவும் எதிர்பார்க்குறீங்க அதாவது... எல்லா வேலையும் தெரிஞ்சிருக்கணும், அடக்க ஒடுக்கமா இருக்கணும், எவன் எங்கிருந்து தப்பா பார்ப்பான்னு பார்த்துப் பார்த்து பயந்து பயந்து டிரஸ் பண்ணனும், சோஷியல் மீடியால முகம் தெரியாம வாழணும்!”

“ஏய் யாத்ரா! நான் சத்தியமா அப்படி எல்லாம் உன்கிட்ட எதிர்பார்க்கல...” என்று கார்த்திக் பதறினான்.

“அப்புறம் ஏன் என்னைப்பார்த்ததும்... ‘எவன் உன்னை என்ன கோணத்துல பார்ப்பான்னு ஏதாவது ஐடியா இருக்கா’ன்னு கேட்ட” என்றவள் கேள்விக்கு கார்த்திக்கால் பதில் பேச முடியவில்லை.

அவள் தொடர்ந்து, “இதெல்லாம் காலம் காலமா பண்ணிட்டு இருக்குறதுதனே... விக்டிம் பிளேமிங். தப்பு செஞ்சவனை ஒண்ணுமே செய்ய முடியாம, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி கூண்டுல நிறுத்துறது!”

“நான் உன் சேஃப்டி பத்தி யோசிச்சுதான் யாத்ரா அப்படி பேசினேன்...” என்று அவன் குரல் தாழ்ந்தது.

“தெரியாம கேக்குறேன், என்னைக்காச்சும் அந்த அமரேஷ் கூட நடிக்க வர்ற மத்த பொண்ணுங்களோட சேஃப்டி பத்தி நீ யோசிச்சிருக்கியா கார்த்தி? அவன் பண்ற அசிங்கங்களையும், தப்புகளையும் உங்க கேமராவுக்குப் பின்னாடி பூசி மொழுகிட்டு அந்த வக்கிரம் பிடிச்சவனை இந்தச் சமூகத்துக்கு முன்னாடி பெரிய ஸ்டார் மாதிரி காட்டி ப்ரொமோட் பண்றோம்னு என்னைக்காச்சும் ஒரு நொடியாவது மனசாட்சி உறுத்தி, ‘கில்டியா’ பீல் பண்ணிருக்கியா?”

அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் கார்த்திக்கின் முகத்தில் சம்மட்டியால் அறைவது போல இருந்தது. அவன் அப்படியே பேச்சற்றுப் போனான்.

யாத்ரா அத்தோடு நிறுத்தவில்லை. “அப்படி இருக்கும்போது... எந்தத் தப்பும் செய்யாத என்னை மட்டும் ஏன் கார்த்திக் எப்போதும் குற்ற உணர்ச்சியில தள்ளுற?”

“யாத்ரா” என்றவன் குரல் நடுங்கியது.

“உண்மையில்... உனக்கும் அந்தப் பெர்வெர்ட்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை!” என்றவள் ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் விறுவிறுவென்று மேலே ஏறிச் சென்றுவிட்டாள்.

கார்த்திக் ஒரு கல் சிலையைப் போல உறைந்து அமர்ந்துவிட்டான். யாத்ரா பேசிவிட்டுப் போன ஒவ்வொரு வார்த்தையும் அவன் நெஞ்சில் ஈட்டியை இறக்கியது. அவனது மனசாட்சியை உலுக்கிப் போட்டது.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா