மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 29Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 29

Quote from monisha on July 6, 2026, 7:04 PM

29

மும்பை உள்நாட்டு விமான நிலையம் எப்போதும் போலவே மனிதக் கடலால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அவசர ஓட்டங்களும், பயணப் பைகளின் சக்கர ஒலிகளும், அடுத்தடுத்து ஒலிக்கும் அறிவிப்புகளும் அந்தப் பரபரப்பிற்கு மேலும் உயிர் கொடுத்தன.

அந்தப் பெருங்கூட்டத்தின் நடுவே, கச்சிதமான ஒரு ஃபார்மல் உடையில், ஒரு கையில் சூட்கேஸையும் மறு கையில் செல்பேசியையும் பிடித்தபடி நிதானமாக நடந்து வந்தாள் யாத்ரா. கடந்த மூன்று வருடங்களில் அவளுக்குள் ஏற்பட்டிருந்த அந்தத் தனித்துவமான ஆளுமை, சுற்றியிருந்த கூட்டத்திலும் அவளைத் தனியாகப் பிரித்துக் காட்டியது.

அவளது கண்கள் கூட்டத்தின் நடுவே யாரையோ தேடி அலைந்தன. "ராகேஷ், வேர் ஆர் யூ?" என்று மெல்ல முணுமுணுத்தவள், தன் செல்பேசியைத் திறந்து பார்த்தாள். அவளது அசிஸ்டென்ட் ராகேஷிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“நான் ஏர்போர்ட் வரல மேம். ஆரவ் சாரே உங்க கூட ஜாயின் பண்ணிப்பார்.”

அவள் இதை எதிர்பார்க்கவில்லை. ஆரவ்வின் காரியதரிசி என்பதால் ராகேஷும் உடனிருப்பான் என்று நினைத்தாள். அவள் ஒருவித தயக்கத்துடன் ஆரவைத் தேட, “லெட்ஸ் கோ,” என்று அவனது குரல் கேட்டது. அவள் திடுக்கிட்டுத் திரும்ப, அவனோ எதுவும் பேசாமல் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்.

ஆனாலும் யாத்ரா ஒரு நாகரிகமான புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டு அவனருகே சென்று, "ஹாய் சார்," என்றாள்.

அவள் பேசிய அந்த ஒரு நொடி... அவனிடமிருந்து ஒரு சின்னப் புன்னகையையோ அல்லது ஒரு 'ஹலோ' என்ற வார்த்தையையோ அவள் எதிர்பார்த்தாள். ஆனால், அவன் முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாத அதே இறுக்கமான பார்வை மட்டுமே அவனிடமிருந்து பதிலாக வந்தது.

ஒற்றை வார்த்தை கூடப் பேசாமல் சோதனைகள் அனைத்தையும் முடித்து, போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டவர்கள் இருவரும் வெவ்வேறு வரிசையிலிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். அவன் பாட்டுக்குத் தன் மடிக்கணினியைத் திறந்து எதையோ செய்யத் தொடங்க, அவளுக்குக் கடுப்பாகிவிட்டது.

சமீபமாகக் கார்ப்பரேட் உலகில் பல மனிதர்களைப் பார்க்கவும் பழகவும் செய்கிறாள். ஆனால், இது போன்ற ஓர் இறுக்கமான மனிதனை அவள் எதிர்கொண்டதில்லை.

காபியை வாங்கிக் கொண்டவள், அங்கேயே நின்றபடி ராகேஷிற்கு அழைத்தாள்.

அவன் எடுத்ததும், “ஏன் நீங்க வரல ராகேஷ்?” என்று கேட்க, “நீங்களே ஹேண்டில் பண்ணுவீங்கன்னு அவர் நினைச்சிருக்கலாம்,” என்றான்.

“நான் அவர் பி.ஏ கிடையாது, சீனியர் ஸ்ட்ராட்டஜிக் ஹெட்!”

“அவர் பெரும்பாலும் யாரையும் டிபெண்ட் பண்ண மாட்டாரு... பெரும்பாலான ஆன்-சைட் விசிட்ஸ் எல்லாம் அவரே பார்த்துக்குவாரு.”

“அப்போ இதையும் அவரே பார்த்துட்டு இருக்கலாம் இல்ல, நான் ஏன்?”

“உங்க பிரசென்டேஷன் அவரை இம்ப்ரெஸ் பண்ணதாலதான் உங்களைக் கூட்டிட்டுப் போறாரு.”

“இம்ப்ரெஸ்... சீரியஸ்லி? நேத்தே ஒரு சின்ன ஸ்மைல் கூட பண்ணல... அவங்க முகத்துல அதுக்காக எந்த அறிகுறியும் தெரியல.”

“அவர் கொஞ்சம் அப்படித்தான்... மூடி டைப்.”

"ஆனா, அவரோட அப்பா தேவேந்திர மேத்தா சார் அப்படி இல்லையே... ரொம்ப ஜாலியா, எல்லாரோடும் சகஜமா பேசுவாரே?" என்று யாத்ரா தன் சந்தேகத்தைக் கேட்க, ராகேஷின் குரல் சீரியஸானது.

"தேவேந்திர சாரையும் ஆரவ் சாரையும் கம்பேர் பண்ணாதீங்க மேம்," என்று எச்சரித்தவன், சற்று இடைவெளி விட்டு, "அவருக்குப் பெண்கள்னாலே பிடிக்காது... ஒருவித வெறுப்பு," என்றான்.

யாத்ரா புரியாமல் புருவத்தைச் சுருக்கினாள். "ஏன் அப்படி?"

"மேரேஜ் ஃபெயிலியர், டிவோர்ஸ்... அதுக்கப்புறம் அவரோட எக்ஸ்-வைஃப் அலிமனி கேஸ் போட்டு அவரைக் கோர்ட், கேஸ்னு அலைக்கழிச்சு, அவரோட மொத்த இமேஜையும் முடிச்சுட்டாங்க... எல்லா நியூஸ் சேனல்லயும் வந்துச்சு, நாலு அஞ்சு வருஷம் முன்னாடி இருக்கும்," என்றான்.

'ஹிந்தி சேனல்ல வந்திருக்கும் போல' என்று மனதில் நினைத்துக் கொண்டவளுக்கு, அந்த நொடி அவன் மீது கொஞ்சம் பரிதாபம் உண்டானது.

"ஐ ஃபீல் சாரி ஃபார் ஹிம்... ஆனா அதுக்காக உலகத்துல இருக்கிற எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரி நினைச்சு வெறுக்குறது எல்லாம் டூ மச்சா இல்ல?"

“கரெக்ட்தான்... ஆனா அவரோட அம்மாவும்... சின்ன வயசுல அவங்க அப்பாவை இதே மாதிரிதான் ஏமாத்திட்டுப் போனாங்கன்னு சொன்னா என்ன சொல்வீங்க?” என்றதும் அவள் அதிர்ந்தாள்.

ராகேஷ் தொடர்ந்து, “தேவேந்திரன் சாரோட ஃபர்ஸ்ட் ஒய்ஃபோட சன்தான் ஆரவ்... சோ, அந்தப் பாதிப்பு அவருக்குச் சின்ன வயசுல இருந்தே இருக்கு,” என, அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“ஆக்சுவலி இது எதுவும் சீக்ரெட் இல்ல, நியூஸ்ல எல்லாம் வந்திருக்கு... ஆனாலும் எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க,” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மும்பையிலிருந்து சென்னை செல்லும் விமானத்தைப் பற்றிய அறிவிப்பு வந்தது.

“அனௌன்ஸ்மென்ட் வந்திருச்சு, நான் போகணும்.”

“ஆரவ் சார் ஹேண்டில் பண்றதும் கொஞ்சம் கஷ்டம்தான்... ஐ திங்க் யூ கேன் டூ இட், ஆல் தி பெஸ்ட்!” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, அவளுக்கு இன்னும் பதற்றம் கூடியதுதான் மிச்சம்.

இப்படிப்பட்ட சென்சிட்டிவ் மனிதர்களைக் கையாளுவது அவ்வளவு எளிதல்ல என்று நினைத்துக் கொண்டே காபியைக் குடித்துவிட்டு, கப்பை குப்பைத்தொட்டியில் போடும் போது அவன் பார்வை அவள் மீது விழுந்தது. அந்தப் பார்வைக்கு அர்த்தம், ‘சீக்கிரம் வா’ என்பது.

‘இந்த ஒரு வாரமும் இப்படியே இவன் கண்ணால பேசுறதைப் புரிஞ்சுக்கணும் போலவே’ என்று சலித்துக் கொண்டே தன் தோள் பையை மாட்டிக் கொண்டாள்.

விமானத்தில் அவனுடைய பக்கத்து இருக்கையிலேயே அமர வேண்டியிருந்தது. அது இன்னும் அவள் சங்கடத்தை அதிகப்படுத்தியது. அந்த இரண்டு மணி நேரப் பயணத்தில் அவன் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், சென்னைக்கே உரிய அந்தப் பரபரப்பு அவர்களை வரவேற்றது.

நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பாரம் சட்டென்று ஏறியது போன்ற உணர்வு யாத்ராவுக்குள். விமான நிலைய வாசலில் இவர்களுக்காகக் காத்திருந்த ஒரு சொகுசுக் கார், இருவரையும் ஏற்றிக்கொண்டு சென்னையின் புதிய கிளை அலுவலகத்தை நோக்கி விரைந்தது.

சென்னையின் புதிய கிளை அலுவலகம் நவீன வசதிகளுடன், மிக நேர்த்தியாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிய ஊழியர்கள், மேலாளர்கள் என அனைவரும் ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்து, கிளைத் தொடக்க விழா மற்றும் வணிகத் திட்டங்கள் குறித்து தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாத்ரா தன் திட்டங்களை ஒவ்வொன்றாக விவரித்துக் கொண்டிருக்க, போர்ட்ரூமின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான் ஆரவ் மேத்தா. அவளது நேர்த்தியான பேச்சைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வியந்து கொண்டிருக்க, ஆரவ் மட்டும் அதே உணர்ச்சியற்ற முகத்துடன், எந்தவொரு ஈடுபாடும் காட்டாமல் அமர்ந்திருந்தான். அவன் எங்கு பார்க்கிறான், என்ன நினைக்கிறான் என்பதை அவனது கண்கள் காட்டிக் கொடுக்கவே இல்லை.

யாத்ரா பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளது கவனம் அடிக்கடி அந்த மூலையில் அமர்ந்திருந்த ஆரவ்வின் மீதே சென்று திரும்பியது. இத்தனை திறமையாகப் பேசியும் ஒரு மனிதன் எப்படி இவ்வளவு அசைவற்று இருக்க முடியும் என்பது அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.

மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்ப, ஆரவ் காரை நோக்கி நடக்க, அவன் பின்னே சென்றவள் சிறு தயக்கத்துடன், “சார்,” என்று அழைக்க, அவன் திரும்பினான்.

பார்வையில், ‘என்ன?’ என்ற கேள்வி.

“நான் எங்க அண்ணா வீட்டுல ஸ்டே பண்ணிக்கலாம்னு இருக்கேன்,” என்றாள்.

"ஃபைன், டிராப் பண்ணணுமா?" என்று அவன் கேட்க, “இல்ல சார், நான் கேப்ல போயிடுவேன்,” என்றாள்.

“ஓகே, நாளைக்குக் காலைல டைமுக்கு வந்துடுங்க.”

“ஓகே சார்,” என்றவள் தலையசைக்கவும் அந்த கார் சர்ரென்று கிளம்பிவிட, அவள் பெரிதாக மூச்சை இழுத்துவிட்டாள்.

“இந்த ஒரு வாரத்துக்கு எப்படி இந்தச் சிடுமூஞ்சியைச் சமாளிக்க போறோமோ தெரியலையே," என்று புலம்பிக் கொண்டவள், அடுத்ததாகத் தன் செல்பேசியை எடுத்து இந்திரனை அழைத்தாள்.

மறுமுனையில் அழைப்பை ஏற்ற இந்திரன், அவளது குரலைக் கேட்டதும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான். "யாத்ரா! உண்மையாவா சென்னைக்கு வந்திருக்கியா?" என்று அவன் உற்சாகமாகக் கேட்க, “ஆமா அண்ணா... உன் அப்பார்ட்மெண்ட் லொகேஷனை மட்டும் எனக்கு வாட்ஸ்அப் பண்ணு," என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

'ஸ்கை வியூ அப்பார்ட்மெண்ட்ஸ்'

சென்னையின் மிக ஆடம்பரமான, பிரம்மாண்டமான ஒரு கண்ணாடி அடுக்குமாடி குடியிருப்பு அது. வண்ண விளக்குகளின் ஒளியில் அந்தப் பெரிய கட்டிடம் இரவில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

காரில் இருந்து இறங்கிய யாத்ரா, நிமிர்ந்து அந்த உயரமான கட்டிடத்தைப் பார்த்தாள். இதற்காகத்தான் கார்த்திக் ஜெயிலுக்குப் போனான் என்ற நினைவு அவளது நெஞ்சில் ஆழமாகக் குத்தியது. "கார்த்திக்..." என்று அவளது இதழ்கள் அவளையறியாமல் மெல்ல உச்சரித்தன. நெஞ்சை லேசாக அழுத்திவிட்டு, விறுவிறுவென்று அப்பார்ட்மெண்ட்டின் உள்ளே நுழைந்தாள்.

மின்தூக்கி இருக்கும் பகுதிக்கு அவள் வந்தபோது, ஒரு லிஃப்ட்டின் கதவுகள் மூடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தன.

"வெயிட்... ப்ளீஸ் வெயிட்!" என்று கத்திக்கொண்டே, யாத்ரா தன் பையுடன் ஓடிவந்து, மூடிக்கொண்டிருந்த அந்த லிஃப்ட் கதவுகளுக்கு இடையே நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்த அடுத்த நொடி, லிஃப்ட்டின் இரும்புக் கதவுகள் கச்சிதமாக மூடிக்கொண்டன.

வேகமாக ஓடிவந்த காரணத்தால் யாத்ராவின் மூச்சு பலமாக வாங்கியது. கண்களை மூடி, தன் மூச்சைச் சீராக்கிக் கொண்டவள், மெதுவாகத் தன் தலையை நிமிர்த்தித் திரும்பினாள்.

அடுத்த வினாடி... அவளது கண்கள் அதிர்ச்சியில் அப்படியே அகல விரிந்தன! உடம்பில் ஓடும் ரத்தமெல்லாம் ஒரு கணம் உறைந்து போவது போன்ற பேரதிர்ச்சி அவளைத் தாக்கியது.

அங்கே... அவளுக்கு மிக அருகில், அவளையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான் கார்த்திக்!

மூன்று வருடங்கள்... பேசாமல், பார்க்காமல், தவித்துப் பிரிந்த அவளது ஒட்டுமொத்தக் காதலும், கடந்த காலமும் அந்தச் சிறிய மூடிய அறைக்குள் அவளது கண்முன்னே நின்றிருந்தது.

அந்த மின்தூக்கியில் ஒரு மயான அமைதி நிலவியது. வார்த்தைகள் அற்று, உலகமே ஸ்தம்பித்த அந்த நொடியில்... இருவரது விழிகளும் அதிர்ச்சியிலும் தவிப்பிலும் ஒன்றை ஒன்று உற்றுப் பார்த்துக்கொண்டன!

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா