மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 38Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 38

Quote from monisha on July 6, 2026, 7:12 PM

38

மும்பை மாநகரத்தின் மாலை நேரத்துச் சூரிய ஒளி, ஜன்னல் வழியே புகுந்து அந்த அறை முழுக்கப் பரவிக் கிடந்தது. யாத்ரா அமைதியாகக் கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தாள். ஒரு வாரத்திற்கு முன்னால் சென்னை விமான நிலையத்தில் கார்த்திக்கைவிட்டுப் பிரிந்து வந்தபோது இருந்த அதே மனநிலை இப்போது இல்லைதான். ஆனால், அதற்காக எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது என்றும் சொல்ல முடியாது.

"வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துதானே ஆக வேண்டும்..." என்று தனக்குத் தானே மெதுவாகச் சமாதானம் சொல்லிக் கொண்டவள், அலுவலகத்திற்குப் புறப்படத் தயாரானாள்.

அப்போது அவளது செல்பேசி ஒலிக்கத் தொடங்கியது. போனை காதில் வைத்தவள், "சொல்லுங்கப்பா... எப்படி இருக்கீங்க?" என்றாள் மென்மையான குரலில்.

மறுமுனையில் குமாரின் குரல் பாசத்தோடு ஒலித்தது. "நான் நல்லா இருக்கேண்டா... நீ அங்கே எப்படி இருக்கே?" என்று சில இயல்பான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, “குழந்தைக்கு எப்போ பேர் வைக்கிற ஃபங்க்ஷன் நாள் குறிச்சிட்டீங்களா? ஏதோ தேய்பிறை அது இதுன்னு சொன்னீங்களே...” என்று எதார்த்தமாகக் கேட்க, “அதான் நானும் சம்பந்தி அம்மாவும் பேசி மூணு மாசம் கழிச்சு வைச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்றார்.

மூன்று மாதம் என்றதும் அவளுக்குள் ஒரு நிம்மதி பரவியது. இந்தச் சூழ்நிலையில் உடனடியாகக் கார்த்திக்கை எதிர்கொள்ளத் தேவை இல்லை.

அவள் மௌனத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட குமார், “என்னடா ஏதாவது பிரச்சினையா? உன்னால வர முடியாதா?” என்று கேட்க, "அதெல்லாம் இல்லைப்பா, கண்டிப்பா வருவேன்..." என்று அவள் சொன்னாள்.

“ஏற்காடுல நம்ம வீட்டுல வைக்கலாம்னு பேசிட்டு இருக்கோம்” என்று மேலும் கூற, “சூப்பர் பா” என்று மகிழ்ந்தவள் அதன் பேச்சை முடித்து வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பினாள்.

சரியான நேரத்திற்கு ரயிலை பிடித்துவிட்டவள், காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து தன் செல்பேசியை எடுத்தாள். எதார்த்தமாக சில காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் நடிகை நிகிதாவிற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதைப் பார்த்தாள்.

அதன் பிறகு அவள் நன்றி சொல்லும் காணொளி ஒன்றில், கார்த்திக் அவள் அருகே நடந்து வருவதைப் போன்ற காட்சி பதிவானது. ஆரவ் காட்டிய அவர்களின் அந்த நெருக்கமான புகைப்படம் நினைவில் வந்து மோதியது. அவசரமாக அந்த எண்ணத்தையெல்லாம் தவிர்த்தவள், தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள்.

மும்பையின் மக்கள் கூட்டத்தையும் வாகன நெரிசலான சாலைகளையும் கடந்து, தன் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்தாள் யாத்ரா. அவள் அமர்ந்து தன் மடிக்கணினியை திறந்த விநாடியில், "குட் மார்னிங் யாத்ரா..." என்று ஆரவ் வந்து நின்றான்.

தலையைத் தூக்கிப் பார்த்தவளுக்கு, அவனது முகத்தில் எப்போதும் இல்லாத ஓர் அதீத உற்சாகத்தைக் காண முடிந்தது. "யாத்ரா... ஒரு ஹாப்பியான நியூஸ், கெஸ் வாட்!"

"புது புராஜெக்ட் ஏதாவது?" என்றவள் சந்தேகமாக இழுக்க, “இட்ஸ் நாட் அபவுட் பிசினஸ்” என்றான்.

“பிசினஸ் இல்லைன்னா வேற என்ன?”

“நிகிதாவே எனக்குக் கால் பண்ணா!" என்று ஆரவ் சொல்ல, “ஓ ரியலி!” என்று அவள் கண்கள் ஆச்சரியத்தால் பெரிதாக விரிந்தன.

“எஸ்... நான் சத்தியமா எதிர்பார்க்கல... ரொம்ப நார்மலா பேசுனா... அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் சொன்னா.”

“சஸ்பென்ஸ் வைக்காதீங்க... சீக்கிரம் சொல்லுங்க சார்.”

“ஒரு பட பிரமோஷன்காக மும்பை வந்திருக்காளாம்... கூட நிமிஷாவையும் கூட்டிட்டு வந்திருக்காளாம்... ஸோ, என்னை குழந்தையைப் பார்க்க வர சொன்னா..."

“அவங்களே சொன்னாங்களா?”

“எஸ், அவளே சொன்னா.”

"ரொம்ப நல்ல விஷயம் சார்..." என்றவள் மகிழ்ச்சியுடன் கூற, ஆரவ் அவளது விழிகளைத் தீர்க்கமாகப் பார்த்து, "இதெல்லாம் உன்னால்தான் நடந்துச்சு..." என்று சொல்ல, அவள் புரியாமல் பார்த்தாள்.

“நீ கார்த்திக்கிட்ட பேசுனதானே?” என்றதும் அவள் முகம் சுருங்கியது. “பட் தட் டஸன்ட் கோ வெல்... கார்த்திக் நான் சொன்னதைக் கேட்கவே இல்லை சார்.”

“கார்த்திக்தான் நிக்கிகிட்ட பேசியிருக்கான்... இல்லைன்னா நிகிதாவே எனக்குக் கால் பண்ணியிருக்க மாட்டா,” என்றவள் நெஞ்சை அவனது பதில் ஆழமாகத் தாக்கியது.

‘கார்த்திக் பேசினானா?’ அவளால் நம்பவே முடியவில்லை. அன்று காரில் அவர்களுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, “தேங்க்ஸ் யாத்ரா,” என்றான் ஆரவ். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், ஆரவ் முகத்திலிருந்த மகிழ்ச்சி அவளுக்கும் சந்தோஷத்தைத் தந்தது.

இதே மனநிலையுடன் அந்த நாள் சுமுகமாக நகர, அவள் மாலை அலுவலக வேலைகள் முடிந்து கிளம்பிய சமயம், ஆரவ் மீண்டும் வந்து நின்றான். "யாத்ரா... ஒரு ஹெல்ப்."

“ஏதாவது முடிக்க வேண்டிய வேலை இருக்கா சார்?”

“ஆபீஸ் வொர்க் இல்லை, பெர்சனல் வொர்க்.”

“என்ன?”

“என் பொண்ணுக்கு டாய் வாங்கணும். நீ கொஞ்சம் வரியா?" என்று கேட்க, யாத்ரா முதலில் தயங்கினாலும், பிறகு சம்மதித்து அவனுடன் சென்றாள்.

கடைக்குள் சென்ற நொடியிலிருந்து ஆரவ் இது வாங்கலாமா, அதை வாங்கலாமா என்று ஆர்வத்தில் துள்ளிக் கொண்டிருக்க, அவள் முகம் புன்னகை பூத்தது. “விட்டா கடையையே வாங்கிடுவீங்க போல.”

“வாங்கிடலாமா?” என்றவன் கேட்டதில் முதலில் அதிர்ந்தவள், “ஒண்ணும் தேவை இல்லை... முதல்ல ஒண்ணு வாங்கிட்டு போய்க் கொடுங்க, அப்புறம் அவ டேஸ்ட் புரிஞ்சிட்டு அதுக்கு ஏத்த மாதிரி வாங்கிக்கலாம்,” என்றாள்.

“அந்த ஒரு பொம்மைதான் எதுன்னு குழப்பமா இருக்கு.”

அவள் அந்த இடத்தைச் சுற்றிலும் பார்த்துவிட்டு, ஒரு இளஞ்சிவப்பு நிறப் பொம்மையை எடுத்து அவன் கையில் தந்தாள். “இது நல்லா இருக்கு... ஐ திங்க் ஷி வில் லைக் திஸ் ஒன்.”

“நல்லா இருக்கு, இதையே வாங்கலாம்,” என்றவன் அதனை வாங்கிக் கொண்டு பணம் கட்ட எடுத்துச் செல்ல, அங்கே குவிந்து கிடந்த பல வண்ண புதுவிதமான பொம்மைகளைப் பார்த்தபடி நடந்து வந்தாள். அந்த ஒரு விநாடியில், காரில் வைத்து கார்த்திக் கேட்டதை நினைத்துப் பார்த்தாள்.

"நமக்குன்னு ஒரு குழந்தை..." மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகள் அவளது காதுகளுக்குள் எதிரொலித்தன.

ஆரவ் தன்னுடைய காரில் அவளது குடியிருப்பு வாசலில் கொண்டு வந்து நிறுத்த, “வீட்டுக்கு வந்துட்டு போங்க சார்,” என்று யாத்ரா அழைக்க, “இல்லை, இன்னொரு டைம் வரேன்,” என்றான். “பரவாயில்லை, ஒரு காபி குடிச்சுட்டு போங்க,” என்று அவனை அழைத்துக் கொண்டு தன் குடியிருப்பு வாசலுக்கு வந்தவள், சட்டென்று தன் நடையை நிறுத்தினாள். அவளது கால்கள் அப்படியே உறைந்து போயின.

அங்கே... சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான் கார்த்திக்!

“கார்த்திக்...” என்றவள் உதடுகள் முணுமுணுக்க, அவனது கூர்மையான பார்வை அவர்கள் இருவரையும் ஆழமாகப் பார்த்தது.

ஆரவ் கொஞ்சமும் யோசிக்காமல் நேராகக் கார்த்திக்கின் அருகே சென்று, “தேங்க்ஸ் கார்த்திக்,” என்றான்.

அவன் புரியாமல் பார்க்க, ஆரவ் விளக்கமாக, “நீங்கதானே எனக்காக நிகிதாகிட்ட பேசினது,” என, “யாத்ராதான் உங்களுக்காக என்கிட்ட பேசினா,” என்றான் கார்த்திக் ஒற்றை வரியில்.

“யாத்ரா பேசினது வேற... ஆனா அன்னைக்கு நடந்த பிரச்சினைக்கு அப்புறமும் எனக்காக நீங்க பேசினது பெரிய விஷயம்,” என்றவன் கை கொடுத்துக் கார்த்திக்கிடம் நன்றி நவில, அவன் பார்வை பின்னே நின்ற யாத்ராவை நோக்கியது.

அவள் பார்வையும் அவனிடம்தான் இருந்தது. ‘ஏன் இந்நேரத்துல வந்திருக்கான்... அதுவும் வீட்டுக்கு... டிவோர்ஸ் பத்திப் பேசினதுக்குச் சண்டை போடப் போறானா?’ என்று ஆயிரம் கேள்விகளுக்கு இடையில் அவள் அப்படியே உறைந்து நின்றுவிட, ஆரவ் கார்த்திக்கிடம் பேசிவிட்டுத் திரும்பிச் செல்ல எத்தனித்தான்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டவள், “இருங்க... காபி சாப்பிட்டுப் போங்க சார்,” என, “இல்லை யாத்ரா, நான் நெக்ஸ்ட் டைம் வரேன்,” என்று கூறிவிட்டு அவன் கிளம்பிவிட்டான். அவளது பார்வை மீண்டும் கார்த்திக்கின் மீது நிலைத்தது.

ஒரு வாரப் பிரிவின் தவிப்பும், காதலும் இருவரையும் சூழ்ந்துகொள்ள, வார்த்தைகளின்றி அப்படியே ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்!

பால்கனி நிலவொளியில் உறைந்த அந்த முத்தத்திற்குப் பிறகும், விமான நிலையத்தின் நுழைவாயிலில் வீசி எறிந்த விவாகரத்து வார்த்தைகளுக்குப் பிறகும், ஒரு வாரம் கழித்துத் தன் மும்பை குடியிருப்பு வாசலில் கார்த்திக்கை யாத்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது அந்தத் திடீர் வருகையும், ஒரு வாரமாகத் தூக்கமில்லாமல் தவித்துப்போயிருக்கும் அவனது உடைந்த முகமும் அவளது நெஞ்சை என்னவோ செய்தது.

தன் பையிலிருந்த சாவியை எடுத்து, கதவின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தவள் கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்து, "உள்ளே வா கார்த்திக்..." என்று சொல்லிவிட்டு, " உட்காரு... நான் டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்," என்று அறைக்குள் விரைந்தாள்.

உள்ளமே வந்து கதவைச் சாத்தியவளுக்குள், இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

மறுபுறம், யாத்ரா அறைக்குள் சென்றதும் கார்த்திக் மெதுவாக எழுந்து அவளது வீட்டைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான். அவ்விடத்தின் ஒவ்வொரு மூலையையும் அவனது விழிகள் அணு அணுவாக அளவெடுத்தன.

அப்படியே மெல்ல நடந்து சமையலறைக்குள் வந்தவன், அங்கே இருந்த காபித் தூள், சர்க்கரை டப்பாவை எடுத்துத் தனக்குத் தானே மிக நிதானமாகக் காபி போடத் தொடங்கினான்.

ஒரு தளர்வான நைட்டிக்கு மாறி வெளியே வந்த யாத்ரா, வரவேற்பறையில் கார்த்திக்கைக் காணாமல் சுற்றிலும் தேடினாள். சமையலறையிலிருந்து காபியின் மணம் நாசியைத் துளைக்க, அங்கே வந்து நின்றாள்.

"நானே காபி போட்டுத் தந்திருப்பேன்ல?" என்று கேட்க,

"பரவாயில்ல" என்றவன் இரண்டு கப்பில் பாலை ஊற்ற போகவும்,

" நான் ஈவினிங்ல காபி குடிக்கிறது இல்ல, கிரீன் டீ தான்," என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டவன் பெரிதாக நினைக்காமல் அந்த கப்பை ஓரமாக வைத்துவிட்டு தன் கப்பில் மட்டும் காபியை ஊற்றி பருக பருகத் தொடங்கினான்.

உடனே யாத்ரா ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு, தன் கிரீன் டீக்கான கப்பை கையில் எடுத்தாள். தண்ணீர் கொதிக்கக் காத்திருந்த அந்தச் சில நிமிடங்களில், சமையலறைக்குள் ஒரு கனமான அமைதி நிலவியது.

கார்த்திக் காபியைக் குடித்தபடியே, தன் தீர்க்கமான விழிகளால் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அந்த ஆழமான, ஊடுருவும் பார்வை யாத்ராவை உள்ளூர தடுமாறச் செய்தது. அவளது நிதானத்தைக் கலைத்தது.

அந்தப் பார்வையின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பது போலத் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தண்ணீர் கொதித்ததும், அதில் கிரீன் டீயைத் தயாரித்துத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். இன்னும் அவனது பார்வை தன் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்து, மெதுவாகத் தன் தொண்டையைச் சீர்செய்தபடி அவனது முகத்தைப் பார்த்தாள்.

"ஏன் இப்போ திடீர்னு மும்பைக்கு அதுவும் இங்கே என் வீட்டுக்கு?" என்று கேட்டபடியே, குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்து ஒரு எலுமிச்சம்பழத்தை கையில் எடுத்தாள்.

அதை மேடையில் வைத்து ஒரு கத்தியால் நறுக்கத் தொடங்கவும் கார்த்திக், "நீ கேட்ட டிவோர்ஸ் கொடுக்க வந்தேன்..." என்று அவன் சொல்லவும் சரியாக இருந்தது.

அந்த வார்த்தை... காதுகளில் விழுந்த நொடி யாத்ராவின் கையிலிருந்த கத்தியின் பிடி நழுவியதில் எலுமிச்சம்பழத்திற்குப் பதிலாக அவளது விரலைச் சுரீரென்று வெட்டி கொண்டாள்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா