மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Prefinal Epi …Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Prefinal Episode

Quote from monisha on July 6, 2026, 7:17 PM

42

மோதிக்கொள்ளும் மூச்சுக்காற்றுகள். சேர்ந்து துடிக்கும் இதயம். ஆடைகளில்லாமல் அலாதியான காதலில் இணைந்திருந்த உடல்கள். ஏதோ யுகங்கள் கடந்து கிடைத்த ஓர் உன்னதமான அமைதி நிலை அது. கார்த்திக்கின் அகன்ற தோள்களில் சுருண்டிருந்த யாத்ராவின் தேகம், தண்ணீரில் மிதப்பது போலப் பாரமின்றி இருந்தது. அது வெறும் உடலின் பாரம் மட்டுமில்லை; பல காலமாய் அவளது மனம் சுமந்திருந்த தீராத மனபாரமும் கூடத்தான்.

அத்தனையும் அவன் தோள்களில் இறக்கி வைத்த பெரும் நிம்மதியில் கிடந்தவள், இன்னும் நெருக்கமாக அவனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஒரு சிறு பறவை போல அவனது இரும்புக் கரங்களுக்குள் மொத்தமாகத் தன்னைச் சுருட்டிக் கொண்டாள். அவனது கைகளும் அவளுக்கு மிக அழகாக அடைக்கலம் கொடுத்திருந்தன. எல்லாமே அவளுக்கு ஒரு கனவு போல இருந்தது. அந்த இன்பமான கனவு நிலையில் அவளது இமைகளுக்குள் விழிகள் மெதுவாக உருண்டன.

நெடுநேரத் தூக்கத்திற்குப் பின், மெதுவாகக் கண்களைத் திறந்தாள். அவளை அணைத்துப் பிடித்திருந்த அவனது பலமான கைகளைப் பார்த்தாள். நிதானமாகத் தன் தலையை உயர்த்தி, அவனது முகத்தைப் பார்த்தவளுக்குச் சட்டென்று சர்வாங்கமும் நடுங்கி, உலகமே ஆடிப் போனது போல் இருந்தது!

அவளுடன் படுத்திருந்தது கார்த்திக் இல்லை... அமரேஷ்!

அவனது பற்கள் தெரிய அவளைப் பார்த்துப் பேய்த்தனமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு பெரும் அசிங்கத்தை மிதித்துவிட்ட உணர்வில், யாத்ரா அங்கிருந்து அலறிக்கொண்டு ஓடப் பார்த்தாள். ஆனால், அவளால் முடியவில்லை. அவளது கைகளும் கால்களும் ஏதோ சங்கிலியால் கட்டுண்டது போல உறைந்து கிடந்தன. அவள் நினைத்துக் கூட பார்க்க விரும்பாத பழைய நினைவுகளில் மாட்டிக் கொண்ட உணர்வில் தவித்தாள். என்ன முயன்றும் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாததால் சத்தமாக கத்தத் தொடங்கினாள்.

“என்னை விடு... என்னை விடு! உன்னைக் கொன்னுடுவேன்... என்னை விடுடா பொறுக்கி!” என்று தன் கட்டுப்பாட்டை இழந்து அவள் கைகால்களை உதைத்துக் கொண்டு அலறிய அலறலில், பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக் திடுக்கிட்டு விழித்தான்.

“யாத்ரா... யாத்ரா என்ன? என்னாச்சு உனக்கு?!” என்று அவன் பதறித் துடித்து அவளைத் தன் மார்போடு இழுக்க முயல, அவளோ அந்தப் பயங்கரமான கனவின் பிடியில் இருந்து விடுபடாமல் அவனைக் குத்திக் கிழிப்பது போல் நகங்களால் கீறித் தள்ளினாள்.

“என்னை விடு... தொடாதே என்னை!” என்று பைத்தியம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்ல, அவளது இந்த அதீத மன உளைச்சலைக் கண்ட கார்த்திக், “யாத்ரா... யாத்ரா இங்க பாரு, நான் கார்த்திக்!” என்று அவளது தோள்களை இரு கைகளாலும் பற்றிப் பலமாக உலுக்கிவிட்டான்.

அவள் அப்போதுதான் அதிர்ச்சியுடன் கண்களை முழுமையாகத் திறந்து கார்த்திக்கின் முகத்தைப் பார்த்தாள். அவனது தீர்க்கமான விழிகளைப் பார்த்த கணத்தில், அவளுக்கு மூச்சுப் பேச்சும் அப்படியே நின்றுவிட்டது போலானது. நெஞ்சு துடிக்க மறந்தது.

“உனக்கு ஒன்னும் இல்லையே?” என்று கார்த்திக் அவளது முகத்தை அள்ளி நிதானமாகக் கேட்க, அவள் சற்று முன்பு பார்த்த அந்தக் கொடூரமான காட்சியை யோசித்ததில் மீண்டும் அவளது உடலில் ஒருவித நடுக்கம் பரவியது. தன் கணவனின் இந்தத் தூய்மையான அன்பிற்கும் காதலுக்கும் தான் தகுதியானவள் தானா என்ற குற்றவுணர்ச்சி அவளைக் கொன்றது.

“யாத்ரா...” என்று அவளது மென்மையான கன்னங்களைப் பிடித்து நிமிர்த்தி, “என்னம்மா... என்னாச்சு?” என்று அவன் ஆதுரமாகக் கேட்க, அவளது கண்களிலிருந்து விழிநீர் அணை உடைந்த கரையாகச் சொட்டியது.

“ஏய்... என்னடி இது? ஏன் இப்போ அழுற? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” என்றவன் பயந்துகொண்டே கேட்க, “இல்ல... ஒன்னும் இல்ல கார்த்திக்...” என்று அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அவனது அந்த காதலை எதிர்கொள்ள முடியாமல், “நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்,” என்று தன் உடலை ஒரு துண்டால் மறைத்துக் கொண்டு, அவசரமாகக் குளியலறைக்குள் சென்று கதவை உட்புறமாக மூடிக்கொண்டாள்.

அதன் பின் வாஷ் பேசினின் முன்பு வந்து நின்று, குளிர்ச்சியான தண்ணீரை அள்ளித் தன் முகத்தில் பலமுறை ஆவேசமாக அடித்துக் கொண்டாள். தன் நினைவுகளைக் கலைக்க நினைப்பவள் போல முகம் முழுக்கத் தண்ணீரைத் தெளித்துவிட்டு நிமிர்ந்தவள், அங்கிருந்த பிரம்மாண்டமான கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்தாள்.

அங்கே தெரிந்த தன் முகத்திற்குப் பின்னால், அன்னைக்கு அந்த நரகத்தில் அமரேஷின் வக்கிரமான முகம் வந்து நின்று அவளைப் பார்த்துப் பேய்த்தனமாகச் சிரிப்பது போல் இருந்தது. அந்தப் பழைய கொடூரமான நினைவுகள் நெஞ்சில் வந்து மோதின...

“உன் புருஷன் ஜெயில்ல சாவணுமா... இல்ல நாளைக்கே பெயில்ல வெளியே வரணுமாங்கிறது உன் கையிலதான் இருக்கு யாத்ரா. நான் பெருசா ஒன்னும் கேட்கலையே... ஜஸ்ட் ஆ செக்ஷுவல் ஃபேவர்!”

அவள் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள்.

“உன் விருப்பம் இல்லாம தொட்டதுக்காகத்தான் நீ என்னை அடிச்ச,” என்றவன் தன் நெற்றிக் காயத்தைத் தடவிக் காட்டிவிட்டு, “இப்போ நான் உன் விருப்பத்தைக் கேட்குறேன்... அதாவது உன் விருப்பத்தோட!” என்று நிறுத்தினான். அவள் கண்களை மூடித்திறந்தாள்.

“சாய்ஸ் இஸ் யுவர்ஸ்,” என்றவன் காதிற்கு அருகே வந்து சொல்ல, அவள் மூச்சை இழுத்து விட்டு நிதானமாகப் பேசினாள்.

“என் சாய்ஸ் எப்பவுமே கார்த்திக்தான்... கார்த்திக் மட்டும்தான்! உனக்கு என் உடம்பு வேணுமா எடுத்துக்கோ... ஆனா எனக்கு என் கார்த்திக் வேணும். அவன் இந்த கேஸ்ல இருந்து மொத்தமா வெளியே வரணும்!”

“டீல்!” என்றான் சாதாரணமாக.

அந்த விநாடியில் அமரேஷ் தன் மீது நிகழ்த்திய அந்த அசிங்கமான தீண்டல்களும், அவளது மனதையும் உணர்வையும் ஆழமாக குத்தி கிழித்து ரணப்படுத்தின. தன் உடல் மீதே ஒருவித அருவருப்பு உணர்வும் அசிங்கமும் பரவியது. இரு கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு அப்படியே விம்மினாள்.

நீண்ட நேர அழுகைக்குப் பின், ஷவரைத் திறந்து கொட்டும் குளிர்ந்த நீரில் முற்றிலும் நனைந்தாள். விழும் ஒவ்வொரு நீர்த்துளியும் தன் உடலின் மீதிருக்கும் அந்த அசிங்கத்தின் கரையைத் துடைத்து விடாதா என்ற ஏக்கத்தோடு நனைந்தவளின் மனம், ஒருவாறு அமைதி பெற்றது. ஆனால், அது ஒரு தற்காலிக அமைதிதான் என்பதை அவளது அறிவு உணர்த்தியது.

இந்த உண்மையை, தனக்குள் இருக்கும் இந்தக் குற்றவுணர்ச்சியை இப்படியே மறைப்பது கார்த்திக்கிற்குச் செய்யும் துரோகம்... அவனிடம் அத்தனையையும் இப்பொழுதே சொல்லிவிட வேண்டும் என்று அவளது மனம் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வர, உடலைத் துண்டால் துடைத்துக் கொண்டு, ஈரக் கூந்தலோடு வெளியே வந்தாள்.

ஆனால், படுக்கையறையில் கார்த்திக் இல்லை. தன் இரவு உடையை எடுத்து அவசரமாக அணிந்து கொண்டு, வரவேற்பறைக்கு வந்து பார்க்க, கார்த்திக் சமையலறையில் இருந்தான்.

“ஏய்... வந்துட்டியா? எனக்கு ஸ்ட்ராங் காபி... உனக்கு ஸ்பெஷல் கிரீன் டீ ரெடி!” என்று அவன் உற்சாகத்தோடு சொல்ல, அவளோ ஒருவித தவிப்புடனும் குற்ற உணர்ச்சியுடனும் அவனைப் பார்த்தாள்.

உண்மையைச் சொன்னால்... அவளது முகத்தில் இருக்கும் இந்தச் சந்தோஷமெல்லாம் உடனடியாகத் தொலைந்து போகலாம். கார்த்திக்கின் இந்த உன்னதமான காதலை அவள் மொத்தமாக இழந்து விடக் கூடும். இத்தனை நாளாக அவளது இதயம் பயந்ததும், நடுங்கியதும் அதற்குத்தான்.

“ஏய் யாத்ரா... என்ன?” என்று கார்த்திக் காபிக் குவளையோடு வந்து அவளது தோளை மென்மையாகத் தொடவும், அவள் சங்கடமாகத் தன் தலையைத் குனிந்து கொண்டாள்.

“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றவனது கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியாமல், அவளது உதடுகள் துடித்தன. கண்ணீர் முட்டியது.

அவளது முகத்தைத் தன் விரல்களால் நிமிர்த்திப் பிடித்தவன், “நீ ஏதோ டென்ஷன்ல இருக்க. ஃபர்ஸ்ட் ரிலாக்ஸ்... முதல்ல இந்த டீயைக் குடி, அப்புறம் நம்ம நிதானமா பேசிக்கலாம்,” என்று சொல்லி அவளது கையைப் பற்றிக்கொண்டு பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.

இருவரும் பால்கனியில் வந்து நின்றனர். வண்ணச் சிதறல்களாக வானில் மாறிக்கொண்டிருந்த அந்த மாலை நேரத்து அந்திப் பொழுதின் அழகை ரசித்துக் கொண்டே, காபியைப் பருகிய கார்த்திக், அவளைத் தன் தோளோடு அணைத்து, “உன் கூட இருந்தா மட்டும் இந்த உலகமே எனக்கு ரொம்ப அழகா தெரியுது...” என்று ரசித்துக் கூறினான்.

ஆனால், அவளால் அவனைப் போல அந்த அழகையோ, அவனது அருகாமையையோ முழுமையாக ரசிக்கவோ உணரவோ முடியவில்லை.

அவன் தன் காபியைக் குடித்து முடித்துவிட்டு அவளது முகத்தைப் பார்க்க, அவள் இன்னும் தன் தேநீரை ஒரு வாய் கூடப் பருகாமல், அப்படியே அந்தக் கோப்பையைத் தன் இரு கைகளுக்குள் சேர்த்து இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு? நான் போட்ட டீ நல்லா இல்லையா?” என்று அவன் கவலையோடு கேட்கவும்தான், தன் கையில் இருந்த கோப்பையையே அவள் கவனித்தாள்.

“என்னாச்சு யாத்ரா... என்ன பிரச்சினை?” என்று அவன் மீண்டும் அவளது கைகளைப் பற்றி அழுத்தமாகக் கேட்க, அவள் அவசரமாகத் தன் தலையை அசைத்தாள். “அப்போ குடி...” என்றவன் சொல்ல, அவள் அதை ஒருவாறு குடித்து முடிந்துவிட்டு, அவனிடம் அத்தனை உண்மைகளையும் கொட்டிவிடும் துணிச்சலோடு அவனை நோக்கித் திரும்பினாள்.

“கார்த்திக்... உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம்...” என்று அவள் பயத்துடன் ஆரம்பிக்கும் போதே, அவனது பலமான கைகள் பின்புறமாக வந்து அவளது இடையைச் சுற்றி வளைத்துத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டன. அவனது இதழ்கள் அவளது நனைந்த கூந்தலை விலக்கி, அவளது மென்மையான முதுகில் காதலோடு வருடியது. அவனது அந்தத் திடீர் தீண்டலில், அவள் பேச வந்த விஷயம் மீண்டும் அவளது தொண்டைக் குழிக்குள் அமுங்கிப் போனது.

அவனது தீண்டலினை அவளால் பழையபடி ரசிக்க முடியவில்லை; உடலோ எந்த உணர்ச்சியுமற்ற ஒரு ஜடத்தைப் போலக் கிடந்தது. கண்களில் மட்டும் கண்ணீர் ஆறாக ஓடியது. அந்த ஈரம் அவனது கைகளின் மீது சொட்டிய அந்த விநாடியில், கார்த்திக் திடுக்கிட்டான். உடனடியாக அவளது தோளைப் பற்றித் தன் புறம் திருப்பினான்.

கண்ணீரால் முற்றிலும் நனைந்திருந்த அவளது வெளிறிய கன்னங்களைப் பார்த்ததும் அவன் அடியோடு அதிர்ந்துவிட்டான்.

“யாத்ரா... என்னாச்சு!” என்றதும் அவளால் பேச முடியாமல் விம்மல் மட்டுமே பதிலாய் வந்தது.

“என்னடி? ஏன் இப்படி அழுகுற?” என்று அவளை மிகவும் ஆதரவாக, பாசத்துடன் தன் மார்போடு அணைத்துக் கொண்டு அவன் கேட்க, அவள் அழுது கொண்டே பேசினாள்.

“உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும் கார்த்திக்...” என்று தேம்பிக் கொண்டே பேச, கார்த்திக் எதுவும் பேசாமல் மௌனமாக நின்று விட்டான்.

அவள் தொடர்ந்து, “ஆனா... இந்த உண்மையை நான் சொன்னதும் நீ என்னை வெறுத்துடக் கூடாது கார்த்திக்... என்னை விட்டுட்டுப் போயிடக் கூடாது,” என்று நிமிர்த்து அவன் கண்களைப் பார்த்து கேட்க, கார்த்திக்கின் முகத்தில் ஒரு மெல்லிய, அழகான புன்னகை விரிந்தது.

அவளது கண்ணீரைத் தன் கைகளால் அழுந்த துடைத்துவிட்டவன், “நீ முதல்ல வா... இப்படி வந்து உட்காரு,” என்று அவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்துவிட்டு, அவனும் அவளருகே அமர்ந்தான். அவளது நடுங்கும் கைகளைத் தன் கைகளுக்குள் சேர்த்துப் பிடித்துக் கொண்டான்.

“கார்த்திக்... அன்னைக்கு அமரேஷ்...” என்று யாத்ரா தயக்கத்துடனும் நடுக்கத்துடனும் பேச ஆரம்பிக்க, “நீ எதுவும் சொல்லத் தேவை இல்லை யாத்ரா,” என்றான் கார்த்திக் அவளைத் தடுத்து.

“இல்ல கார்த்திக்... நான் உன்கிட்ட இந்த விஷயத்தை மறைச்சது தப்பு... நான் கண்டிப்பா சொல்லணும்,” என்றாள் பிடிவாதமாக.

“வேண்டாம் யாத்ரா,” என்றான் அவன் கனிவோடு.

“கார்த்திக் நான்...”

“எனக்கு நீ என்ன சொல்லப் போறன்னு நல்லாவே தெரியும் யாத்ரா!” என்றதும் அவளுக்கு “உனக்கு... உனக்கு தெரியுமா?!” என்றாள்.

“ஆமா, தெரியும்,” என்றவன் அழுத்தமாகக் கூறினான்.

“உனக்கு எப்படி... இல்ல, உனக்குத் தெரிய வாய்ப்பே இல்லை... இது உனக்குத் தெரியாது கார்த்திக்!” என்றவள் பதற்றத்துடன் மறுக்க, “எனக்கு தெரியும்,” என்றான் அழுத்தமாகவும் சுருக்கமாகவும்.

“அதெப்படி... நான் சொல்லாமலே உனக்கு எப்படித் தெரியும் கார்த்திக்?!” என்றாள் அவளது விழிகள் ஆச்சரியத்தால் விரிய.

“இரண்டு நாள் முன்னாடி மும்பை ஏர்போர்ட்ல அமரேஷோட அப்பா கஜேந்திரன் சாரைப் பார்த்தேன். அவர்கிட்ட பேச எனக்குச் சுத்தமா விருப்பம் இல்லைதான்... ஆனா, அவரா வந்து என்கிட்ட பேசினாரு. நம்ம இரண்டு பேரைப் பத்தியும் விசாரிச்சாரு. நாம பிரிஞ்சிட்டதா நான் சொன்ன போது, அவர் அன்னைக்கு நடந்த அத்தனை விஷயங்களையும் என்கிட்ட சொல்லி, தன் மகனோட தப்புக்காக என்கிட்ட அழுது மன்னிப்பு கேட்டாரு. அவன் பண்ணது மன்னிக்கக் கூடிய விஷயமா?!” என்றவன் கோபத்தில் தன் பற்களைக் கடித்தான்.

சட்டென்று இருவருக்கும் இடையில் ஒரு கனமான, உணர்ச்சிகரமான மௌனம் ஆக்கிரமித்துக் கொண்டது. தன் கணவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த யாத்ரா, தன் முகத்தை இரு கரங்களால் மூடிக் கொள்ள, அவளது உடல் அழுகையில் குலுங்கியது.

அவளது தவிப்பைக் கண்டு பதறிய கார்த்திக், சோஃபாவில் இருந்த அவளது முன்பாக அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். அவளது கைகளைத் தன் முகத்திலிருந்து விலக்கி, “ஏய் யாத்ரா... இங்க பாரு, என்னை பாருடி... நான் உன்னை தப்பு சொல்லல, அந்தப் பொறுக்கி அமரேஷைதான் சொன்னேன்,” என்று அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்.

அவனை மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள், “எல்லாமே தெரிஞ்சிக்கிட்ட பிறகுதான்... நீ இங்க வந்தியா கார்த்திக்?” என்று விம்மலோடே கேட்க, “ஆமா யாத்ரா,” என்றான் கார்த்திக்.

“ஏன் கார்த்திக்? ஏன் இப்படி பண்ணுனீங்க?”

“உனக்கு என் கூட இருக்க பிடிக்கலன்னு நினைச்சுதான் நான் இவ்வளவு நாள் உன்னை விட்டு விலகி இருந்தேன் யாத்ரா... ஆனா, நீ என்னை விட்டுப் பிரிஞ்சதுக்குக் காரணம் உன் வெறுப்பு இல்ல, என் மேல வச்சிருக்க உன் காதலுன்னு தெரிஞ்சு போன பிறகு... நான் ஏன் உன்னை வீணா பிரிஞ்சு இருக்கணும்? அதான் உடனே உன்கிட்ட ஓடி வந்துட்டேன்,” என்றான் அவளது நெற்றியில் முத்தமிட்டு.

“என் மேல உனக்குக் கோபமே வரலையா கார்த்திக்?” என்று கேட்க, “எதுக்குடி நான் உன்கிட்ட கோபப்படணும்? நீ என்னை காப்பாத்தினதுக்காகவா இல்ல என்னை உயிருக்கு உயிரா காதலிச்சதுக்காகவா?!” என்றான் கார்த்திக் உருகிய குரலில்.

அவனது அந்தப் பேச்சில் அவளது அத்தனை ரணங்களும் வலிகளும் மறைந்து போனது.

அவனது கையை எடுத்துத் தன் இரு கைகளுக்குள் பொத்திக் கொண்டவள், “இந்த உண்மை தெரிஞ்சு நீ கோபத்துல அந்த அமரேஷை ஏதாவது செஞ்சு, நீ திரும்பவும் ஜெயிலுக்குப் போயிட்டா என்ன பண்றதுன்னுதான்... உன்கிட்ட உண்மையைச் சொல்ல எனக்குத் தைரியமே வரல கார்த்திக்... ஐம் சாரி,” என்றாள் அவனது மார்பில் சாய்ந்து.

“இப்பவும் அந்த அமரேஷை வெட்டிப் போடணும்னு எனக்கு வெறி இருக்குதான் யாத்ரா... ஆனா, அவனாப் பார்த்து ட்ரக் அடிக்ஷன்ல தன்னைத் தானே அழிச்சுக்கிட்டான். செத்த பாம்பை அடிச்சு இப்போ என்னவாகப் போகுது?” என்றான்.

“நான் செஞ்சதும் தப்புதான் கார்த்திக்... அன்னைக்கு நான் இருந்த நிலைமைல உன்னைக் காப்பாத்தணும்கிற ஒரே எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்துச்சு... அதை அவன் என்கிட்ட...” என்ற போது அவளது வாய் மீது தன் விரலை வைத்துத் தடுத்தான் கார்த்திக்.

“உன்கிட்ட நான் எந்த விளக்கமும் கேட்கவே இல்லை... எனக்கு அது தேவையும் இல்ல... நீ என்னை காதலிச்ச... நீ என்னை மட்டும்தான் இப்பவரைக்கும் காதலிக்குறங்குற ஒரே விஷயம் மட்டும் எனக்கு போதும்,” என்று உணர்வுப்பூர்வமாகப் பேசியவன் மேலும், “எனக்கு இப்போ இருக்கிற ஒரே ஆசை... என் ஆயுள் முழுக்க உன் கூட மட்டும் சந்தோஷமா வாழணும்ங்கிறதுதான்,” என்றான்.

அந்த நொடி கூண்டில் அடைப்பட்ட பறவை சட்டென்று வானை நோக்கி பறப்பது போல அவள் மனம் சுதந்திரமான ஓர் உணர்வை பெற்றது.

அவனது நெற்றியில் அவள் ஆழமாக முத்தமிட, அவனும் பதிலுக்கு அவளது முகம் முழுக்கத் தன் காதலின் முத்தங்களை வாரி இறைத்தான். அவன் அவளது இதழ்களில் முத்தமிட வளைந்த போது, “கார்த்திக்... இரு, உன்கிட்ட நான் ஒண்ணு காட்டணும்,” என்று சொல்லிவிட்டு, அவனிடமிருந்து விடுபட்டு ஒரு குழந்தையைப் போல அறைக்குள் துள்ளி ஓடினாள்.

“ஏய்... எங்கேடி ஓடுற?!” என்று அவனும் சிரித்துக்கொண்டே எழுந்து அவளுக்குப் பின்னாலேயே வர, அவள் தன் படுக்கையறையின் அலமாரியைத் திறந்து, அதிலிருந்த மூன்று அழகான பரிசுப் பொருட்களை அவனிடம் நீட்டினாள்.

அதனை வாங்கிப் பார்த்த கார்த்திக்கின் விழிகள் பேரதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் விரிந்தன. ‘ஹாப்பி அனிவர்ஸரி கார்த்திக்’ என்ற அவள் கையெழுத்தைத் தொட்டுப் பார்த்து, “இதெல்லாம்... எனக்காகவா வாங்கி வச்ச யாத்ரா?!” என்று கேட்க, “ம்ம்ம்... ஆமா,” என்றாள் வெட்கத்துடன்.

அவன் அந்த மூன்று பரிசுகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தான். ஒரு அழகான பிரேஸ்லெட், ஒரு வைர மோதிரம், இறுதியாக ஒரு பிராண்டட் கைக் கடிகாரம் என மூன்றும் இருந்தன.

“இந்த வாட்ச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது உனக்காகவே செஞ்ச மாதிரி...” என்று சொல்லி, அவனது மணிக்கட்டில் அந்த கைக் கடிகாரத்தை அவளே கட்டிவிட்டு, “செமையா இருக்கு உனக்கு!” என்று பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள்.

“உண்மைதான்... ரொம்ப நல்லா இருக்கு... ஆனா, நான் இந்த மாதிரி உனக்கு எதுவுமே வாங்கி வைக்கலையேடி,” என்றவன் கவலையுடன் சொல்ல, “உன் காதலை விட பெரிய கிஃப்ட் எதுவும் இல்ல... அது மட்டும்தான் இந்த மூணு வருஷத்துல எனக்கு இருந்த ஒரே ஆறுதல்!” என்று அவள் நெகிழ்ச்சியுடன் அவனது மார்பில் சாய்ந்தாள்.

“அப்ப நான்தான் உன்னோட கிஃப்ட்?!” என்றவன் அப்படியே அவளை அள்ளித் தன் மடியில் அமர்த்திக் கொண்டு, “நீ வாங்கித் தந்த வாட்ச்சை நான் கட்டிக்கிட்ட மாதிரி... நீயும் என்னை இறுக்கமா கட்டிக்கோ!” என்றான் அவளது இடையை வளைத்து.

“ஓ... தாராளமா கட்டிக்கலாமே!” என்றவள் எவ்வித சஞ்சலமும் இல்லாமல், மனநிறைவோடும் எல்லையற்ற காதலோடும் அவனது நெஞ்சோடு சேர்த்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவனும் அவளது தூய்மையான காதலுக்குள் தன்னை முழுமையாகப் புதைத்துக் கொண்டான்!

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா