மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Final Episod …Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Final Episode

Quote from monisha on July 6, 2026, 7:18 PM

43

ஏற்காட்டின் அந்தப் பனி படர்ந்த காலைப் பொழுது அத்தனை ரம்மியமாகக் காட்சி தந்தது. மூன்று மாதங்கள் ஓடியதே தெரியவில்லை.

இந்திரன் சௌந்தர்யா தம்பதியரின் குட்டி மகனுக்கு இன்று பெயர் வைக்கும் விழா. கார்த்திக்கும் யாத்ராவும் இணைந்த பிறகு, குடும்பத்தில் நடக்கும் முதல் சுப நிகழ்வு.

நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்து, ஏற்காடு இல்லத்தில் மிக எளிமையான முறையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டின் செல்ல மகளாக, யாத்ரா அத்தனை பொறுப்புகளையும் தன் தலைமேல் இழுத்துப் போட்டுக்கொண்டு ஓடி ஓடி வேலை செய்துகொண்டிருந்தாள்.

“ம்மா, நீங்க இருங்க... நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்,” என்று தன் பட்டுப் புடவையின் முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு, யாத்ரா சமையலறைக்கு ஓடினாள்.

மறுபுறம், கார்த்திக் வேட்டி சட்டையில் கம்பீரமாக நின்று, வந்திருந்த விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தான். சமையலறையிலிருந்து சுடச்சுடக் காபி போட்டு எடுத்து வந்த யாத்ரா, வந்திருந்த அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது கார்த்திக்கின் அக்கா மேகலாவின் அருகே சென்று, “காபி எடுத்துக்கோங்க அண்ணி?” என்று அன்போடு நீட்டினாள்.

“என்ன புதுசா அண்ணிண்ணு எல்லாம் கூப்பிடுற... ஆமா, உனக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று மேகலா எல்லோர் முன்னிலையிலும் கேட்க, யாத்ராவின் கைகள் லேசாக நடுங்கின.

“நான் கார்த்திக்கை விட்டுப் பிரிஞ்சு போனது தப்புதான் அண்ணி... இப்போ என் தப்ப முழுசா உணர்ந்திட்டேன்,” என்று யாத்ரா தன் தவறுக்காக வருந்திக் கூறினாள்.

“என் தம்பி ஜெயிலுக்குப் போன கேப்ல, நீ ஊரை விட்டு ஓடுனது வெறும் தப்பாடி?” என்று மேகலா கடுப்புடன் கேட்க, அவள் அப்போதும் பொறுமையாகப் பேசினாள்.

“உங்க கோபம் நியாயம்தான்... ஆனா இப்போ நாங்க இரண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.”

“ஆமா, வாயால சொல்ற... ஆனா இன்னும் புள்ள உண்டான மாதிரி ஒண்ணும் தெரியலையே?” என்றார் மேகலா குத்தலாக.

அப்போது அங்கே வந்த கார்த்திக், அந்த வார்த்தைகளைக் கேட்டு முகம் கடுகடுத்தான். யாத்ராவின் அருகே வந்து நின்றவன், “அது உன் பிரச்சினை இல்லை, எங்க பிரச்சினை! பெத்துக்குறதும், பெத்துக்காததும்... இல்ல பெத்துக்க மாட்டோம்னு சொல்றதும், அதெல்லாம் நாங்க இரண்டு பேரும் முடிவு பண்ணிக்கிறோம். நீ அதைப்பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டாம் அக்கா,” என்று சுருக்கென்று பதிலடி தந்துவிட்டான்.

“உன் பொண்டாட்டியை நாங்க எதுவும் சொல்லிடக் கூடாது... அப்படித்தானே?” என்று மேகலா கடுகடுக்க, “ஆமா!” என்று கார்த்திக் ஆணித்தரமாகச் சொல்வதற்குள், யாத்ரா பதற்றத்துடன் கார்த்திக்கின் கையைப் பிடித்து ஓரமாக இழுத்து வந்தாள்.

“ப்ளீஸ் கார்த்திக்... ஃபங்க்ஷன் ஆரம்பிக்கிற நேரத்துல தேவையில்லாம எதுவும் பிரச்சினை பண்ணி வைக்காதே,” என்றாள்.

அவன் அவளது வார்த்தைக்கு மதிப்பளித்து மறுவார்த்தை பேசாமல் நகர்ந்துவிட, யாத்ரா அனைவருக்கும் காபியைத் தந்துவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்த கணம், அவளுக்குப் பின்னாலேயே வந்த கார்த்திக் அவள் கையிலிருந்த காபி தட்டைப் பிடுங்கி ஓரமாக மேடை மீது வைத்தான்.

“கார்த்திக்... என்ன பண்ற?” என்று அவள் கேட்கும் போதே, அவளது கைகளைப் பற்றிச் சமையலறை கதவோரம் இழுத்துச் சென்று தன் அகன்ற மார்பின் மீது சாய்த்துக் கொண்டான்.

“கார்த்திக், வெளியில எல்லாரும் இருக்காங்க... யாராச்சும் பார்த்துடப் போறாங்க!” என்று பதற்றத்துடனும் வெட்கத்துடனும் அவனை தள்ள, “பார்த்தா பார்த்துட்டுப் போறாங்கடி... என் பெண்டாட்டியைக் கட்டிக்க எனக்கு யார்கிட்டயும் பெர்மிஷன் தேவையில்லை,” என்றவன், அவளது காதோரம் தன் மூச்சுக்காற்று படக் குனிந்து, “அக்கா பேசினது எதையும் மனசுல வச்சுக்காதே,” என்று காதலோடு உருகினான்.

அவனது முகத்தைத் தன் இரு கரங்களால் நிமிர்த்திய யாத்ரா, “நான் உன்னைத் தவிர வேற எதையும் என் மனசுல வச்சுக்கிறது இல்லை கார்த்திக்...” என்று கூற, அந்தப் பதிலில் அவனுக்கு அப்படியொரு பேரானந்தம் பிறந்தது.

“ஐ லவ் யூடி” என்று உருக, “ஐ லவ் யூ கார்த்திக்,” என்று அவளும் பதிலுக்கு உருக, அவனால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. தன் இதழ்களால் அவளது இதழ்களை ஸ்பரிசித்தாள்.

அப்போது, “யாத்ரா...” என்று அழைத்துக் கொண்டே தற்செயலாக அங்கே வந்த ப்ரியா, கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்ததும் அப்படியே சங்கடத்துடன் பின்வாங்கிவிட்டார்.

“அப்பவே சொன்னேன் உன்கிட்ட... கேட்டியா?” என்று யாத்ரா வெட்கத்துடன் கார்த்திக்கின் தோளில் செல்லமாகத் தட்ட, அவனோ அவரைப் பார்த்தும் பார்க்காதது போல ஒரு குறும்பான புன்னகையுடன் சமையலறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

அதன் பிறகு ப்ரியா தன் மகளிடம் வந்து, “என்ன... எல்லோருக்கும் காபி கொடுத்திட்டியா?” என்று மேம்போக்காகக் கேட்க, “கொடுத்துட்டேன் ம்மா...” என்று வெட்கத்துடன் தலையைக் குனிந்து சொன்னாள். “சரி சரி வா... ஃபங்க்ஷன் ஆரம்பிக்கப் போகுது” என்று சிரித்துக் கொண்டே தன் மகளின் தோளைச் செல்லமாகத் தட்டிவிட்டுச் சென்றார் ப்ரியா.

சரியான சுபமுகூர்த்த நேரத்தில் பெயர் வைக்கும் விழாத் தொடங்கியது. இந்திரனும் சௌந்தர்யாவும் தங்களின் குட்டி மகனை மடியில் வைத்திருக்க, குடும்பமே கூடி நின்று வாழ்த்தியது. குழந்தைக்கு என்ன பெயர் சூட்ட போகிறார்கள் என்று குடும்பத்தினர் கேட்ட தருணத்தில், இந்திரன் தன் மனைவியைப் பார்த்து, “இப்பயாச்சும் சஸ்பென்ஸை உடைப்பியா இல்லையா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தவள் போல, சௌந்தர்யா மகிழ்ச்சியுடன் தான் மாட்டி வைத்திருந்த ஒரு அழகான இதய வடிவப் பலகையின் அடிப்பகுதியைத் திறந்துவிட்டாள். அதில் நிரப்பப்பட்டிருந்த ரோஜா இதழ்கள் மொத்தமாகத் தரையில் வழுக்கி ஓட, அதனுள் ஒளிந்திருந்த பெயர் பிரம்மாண்டமாக வெளிப்பட்டது.

“அருண் கார்த்திக்!”

அந்தப் பெயரைக் பார்த்த எல்லோர் முகத்திலும் அவ்வளவு ஆனந்தம் பரவியது. அப்படியே திகைத்துப்போய் நின்ற கார்த்திக் தன் தங்கையின் முகத்தைப் பார்க்க, சௌந்தர்யாவோ ஆரவாரமாக அண்ணனைப் பார்த்துச் சொன்னாள், “என் அண்ணன் பேரைச் சேர்த்து... என் பையனுக்கு ‘அருண் கார்த்திக்’னு பேர் வச்சிருக்கேன்!”

இதைக் கேட்ட கார்த்திக்கின் கண்கள் நெகிழ்ச்சியில் அடியோடு கலங்கின. அதேநேரம் யாத்ரா சௌந்தர்யாவின் கைகளைக் குலுக்கி, “சூப்பர் அண்ணி!” என்றாள் பெருமிதத்துடன். குமார், பிரியா மற்றும் தேன்மொழியும் அந்தப் பெயரின் பொருத்தத்தைக் கேட்டு மட்டற்ற ஆனந்தமடைந்தனர்.

கார்த்திக் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டான். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் குழந்தையின் பெயரை முறைப்படி காதில் சொல்லி முடிக்க, இறுதியாகக் கார்த்திக் யாத்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு குழந்தையின் அருகே வந்தான்.

அவன் தன் பையிலிருந்த தங்கக் காப்பை எடுக்க, யாத்ரா அதனைத் தன் குட்டி மருமகனின் பிஞ்சு கரத்தில் மென்மையாக மாட்டிவிட்டாள். அதன் பின் கார்த்திக் குழந்தையைத் தன் கைகளில் தூக்கி, அவனது காதில் “அருண் கார்த்திக்” என்று மூன்று முறை கூற, யாத்ராவும் அதே போல அவனது காதோரம் சொல்லி, அந்த பிஞ்சு கன்னங்களில் முத்தமிட்டு கொஞ்சினாள். அந்தத் தருணத்தை அழகாகத் தன் செல்பேசியில் படம் பிடித்தான் இந்திரன்.

இந்திரனுக்குத் தனக்குக் குழந்தை பிறந்த தருணத்தை விடவும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது, தன் தங்கையும் கார்த்திக்கும் தங்களின் பழைய மனக்கசப்புகளை மறந்து ஒன்றிணைந்ததுதான்.

விழா இனிதே முடிந்து, மதிய உணவிற்குப் பின் வந்திருந்த சொந்தங்கள் அனைவரும் தத்தமது அறைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். வரவேற்பறை சோஃபாவில் அசதியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை மட்டும் மெதுவாகத் தட்டி எழுப்பிய யாத்ரா, “கார்த்திக்... எழுந்திரு... என் கூட வா?” என்று ரகசியமாகக் காதோரம் அழைத்தாள்.

“எங்கே வர சொல்ற?” என்று தூக்கக் கலக்கத்துடன் அவன் கண் விழித்து எழுந்து வர, அவள் அவனது கையில் கார் சாவியைக் கொடுத்தாள்.

“கார்லயா?”

“ஆமா.”

“சரி, எங்கே போறோம்?”

“நான் ரூட் சொல்றேன்... வண்டியை எடு,” என்றவள் அவனுடன் காரில் அமர்ந்து வழி சொல்ல, அவன் அந்த ஏற்காட்டின் வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலையில் காரை ஓட்டி வந்தான்.

இறுதியாகப் பதினைந்து நிமிடங்கள் கழித்து, அடர்ந்த காட்டின் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு யாத்ரா முதலில் இறங்கினாள்.

அங்கிருந்து பார்த்த போது, அந்தப் பசுமையான மலைச்சிகரத்துடன் பனி மேகங்கள் முத்தமிட்டுக் கொண்டிருப்பது போல ஓர் அற்புதமான இயற்கைக்காட்சியை கார்த்திக் கண்டான்.

அவள் அப்போது அவனது கையைப் பிடித்து, “இப்படி வா...” என்று ஒரு குட்டிப் ஒற்றையடிப் பாதை வழியே அவனை நடத்திச் சென்றாள்

அவன் மறுவார்த்தை பேசாமல் அவளது மென்மையான கைப்பிடித்து நடந்தான். அங்கே மனித நடமாட்டமே இல்லாத ஒரு ஏகாந்தமான காட்டின் நடுவே, அவளுடன் அப்படி நடப்பது அவனுக்கும் பிடித்திருந்தது.

‘மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...’ என்ற கானத்தைப் போல, அந்த நடைப்பயணம் இயற்கையும் காதலும் கலந்த ஓர் அலாதியான மெல்லிய இசையாக இருவரின் நாடி நரம்புகளினூடே பாய்ந்து, மனதை நிறைத்தது.

பனிமூட்டத்தின் நடுவே அவளது கரம் அவனது கரத்தை மிருதுவாகப் பற்றி அழைத்துச் சென்ற போது, உடல் முழுதும் சில்லென்ற குளிர் காற்று வீசி இருவரையும் சிலிர்க்க வைத்தது. அந்தப் பாதையின் முடிவில், பாறைகளுக்கு நடுவே ஒரு சிறு அழகான மழையருவி கொட்டிக் கொண்டிருந்தது. பாறைகளில் மோதித் தெறிக்கும் நீர்த்துளிகள் காற்றில் பனிச்சாரலாகப் பரவி அங்கே ஒரு சொர்க்கத்தை உருவாக்கியிருந்தது.

அந்த அருவியின் பேரழகை ரசித்தபடி நின்ற கார்த்திக்கின் பின்னால் வந்த யாத்ரா, எவ்விதத் தயக்கமுமின்றி அவனது இடுப்பைத் தன் இரு கரங்களால் பின்னால் இருந்து மிக இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது நனைந்த மேனி அவனது முதுகில் அப்பட்டமாக உரசி அவனை சிலிர்க்க செய்தது.

“என்னடி... திடீர்னு இங்க கூட்டிட்டு வந்து பயங்கரமா ரொமான்ஸ் பண்ற?” என்று கார்த்திக் சிரித்துக்கொண்டே, தன் பின்னால் கட்டி நின்ற அவளை முன்புறமாக இழுத்து அணைத்தான்.

அவனது அகன்ற மார்பில் மோதி நின்றவள் தன் முகத்தை நிமிர்த்தி அவன் கண்களைப் பார்த்து, “நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்...” என்றாள். அவளது குரலில் ஒரு விசித்திரமான நடுக்கமும், அதே சமயம் அளவற்ற பேரானந்தமும் கலந்திருந்தது.

“என்ன விஷயம்?” என்று அவன் ஆவலோடு கேட்க, யாத்ரா அவனது கைகளை எடுத்துத் தன் வயிற்றின் மீது வைத்தாள்.

“நமக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு கேட்டியே... இன்னைக்கு அது நடந்திருச்சு... நான் பிரக்னன்டா இருக்கேன்!” என்று அவள் அந்த செய்தியை வெட்கத்துடன் சொல்லி முடிக்க,

“நிஜமாவா சொல்ற?! என்னால நம்பவே முடியல! என் அக்கா காலையில அவ்வளவு பேசினாளே... அப்பவே இந்த உண்மையை அவங்கள் முகத்துல அடிச்ச மாதிரி சொல்லியிருக்கலாமேடி! அவங்க அப்படி பேசியிருக்க மாட்டாங்கல்ல?” என்று கார்த்திக் நெகிழ்ச்சியோடும் தவிப்போடும் கேட்க,

“எனக்கு அவங்க பேசினது எல்லாம் ஒரு விஷயமே இல்லை கார்த்திக்... இந்த உலகத்துல எனக்கு நீ மட்டும்தான் முக்கியம். இந்தச் செய்தியைக் கேட்டு நீ சந்தோஷப்படுற அந்த முதல் தருணத்தை, உன் முகத்துல வர்ற அந்த சிரிப்பை வேற எந்தச் சத்தமும் இல்லாம, இந்தத் தனிமையில என் மனசுல காலத்துக்கும் தேக்கி வச்சுக்கணும்னு நினைச்சேன்... அதுமட்டும் தான் எனக்கு முக்கியம் கார்த்திக்” என்றாள் அலாதியான காதலோடு.

தன் கைகள் இருக்கும் அவளது மென்மையான வயிற்றையும், அவளது காதலோடு கலங்கிய விழிகளையும் மாறி மாறிப் பார்த்தவனுக்குள், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷம் நெஞ்சுக்குள் வெடித்தது.

யாத்ராவை அப்படியே இடுப்போடு அள்ளி எடுத்து காற்றில் ஒரு சுற்று சுற்றினான். அவளது முகம் முழுக்க, கண்கள், கன்னங்கள், இதழ்கள் முழுக்கத் தன் எல்லையற்ற காதலின் முத்தங்களை வாரி இறைக்க, அவன் காதலிலும் அன்பிலும் முழுவதுமாகச் சரணாகதி அடைந்தாள்.

கொட்டும் அந்த மழையருவியின் சாரலில், இரு உடல்களும் ஈரத்தின் வெதுவெதுப்பில் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன.

அந்த நொடி கார்த்திக்கின் கட்டுப்பாடுகள் அனைத்தும் தவிடுபொடியாயின. அவளது பட்டுப் புடவையின் முந்தானையை உலுக்கி, அவளது இடையைத் தன் இரும்பு கரங்களால் வளைத்துத் தன் பக்கமாக மூர்க்கமாக இழுத்துக் கொண்டான்.

அவளது நனைந்த இதழ்களின் தாகத்தைத் தன் இதழ்களால் அடியோடு ஆக்கிரமித்தவன், அத்தனை வருடப் பிரிவின் வலியையும் தீர்த்துக் கொள்ளும் வெறியோடு ஒரு தீவிரமான காதல் முத்தத்தை நிகழ்த்தினான்.

யாத்ரா அவனது அகன்ற தோள்களை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவனது முத்தத்தின் பேராழத்தில் தன்னை முழுமையாகத் தொலைத்தாள்.

அருவியின் நீர்த்துளிகளும், பனிமூட்டமும் அவர்களைக் குளிர்விக்க, ஆடைகளின் தடைகளையும் தாண்டி இரு உடல்களும் உச்சக்கட்ட சங்கமத்தில் இணைந்தது.

அவர்கள் காதல் இயற்கையோடு இயற்கையாக இயைந்த ஒரு அழகான காவியமானது!

காதலும் கபடமும் (முற்றும்)

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா