மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Tips for Terrace gardenTerrace garden tips- 5Post ReplyPost Reply: Terrace garden tips- 5

Quote from monisha on March 12, 2020, 6:51 PM

குறிப்பு-5

விதைகளே பேராயுதம்!
வருங்காலத்தில் விவசாயத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகப் போராட, விவசாயிகளின் கையில் இருக்கும் வலுவான ஆயுதம் நாட்டு விதைகளே. நாட்டு விதைகளை அறிமுகப்படுத்திய நம்மாழ்வார் நம்மிடமிருந்து மறைந்துவிட்டாலும், அவர் காட்டிய பாதையில் செல்வதே விவசாயத்தின் வருங்காலத்தைத் தீர்மானிக்கும். இதை உணர்ந்து, மரபு விதைகளைக் காக்க விவசாயிகள் மட்டுமின்றி, மக்கள் அனைவருமே முன்வர வேண்டும்!. மாடித்தோட்டம் வைக்க ஆசை கொண்டிருக்கிறீர்கள் எனில் மறவாமல் மனதில் கொள்ளுங்கள். பாரம்பரிய மிக்க நாட்டு விதைகளை காக்க வேண்டும். விதைக்க வேண்டும். நம் மண்ணும் உடலும் செழிப்பாகவும் வளமாகவும் அதுவே சிறந்த வழி. நாட்டு விதைகள் நாளுக்கு நாள் நம்மிடமிருந்து அழிந்து வரும் நிலையில் அதை பேணி காக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்பும் கூட. அந்த வகையில் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு நாட்டு விதைகளின் விற்பனை மீண்டும் பார்வை ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான சமூதாயதிற்கான ஆரம்பம். தட்பவெட்ப சூழ்நிலைக்கு ஏற்ப எந்தெந்த மாதத்திற்கு எந்த காய்களை விதைக்க வேண்டுமென்பதை நாம் அறிந்து விதைத்தோமேயானால் நிச்சயம் நல்ல உற்பத்தி கிடைக்கும். சாதரணமாக எல்லா மாதிரியான காய்கறிகளையும் நாம் பயிரிட முடியும். நாட்டு தக்காளி, வெங்காயம், கீரை வகைகள்., அவரைகாய், பீன்ஸ், சுரக்காய், பூசணிக்காய், பீட்ரூட், கேரட், முள்ளங்கி, கத்திரிக்காய், உருளை, வெண்டக்காய், நீட்டு மிளகாய், குண்டு மிளகாய், இன்னும் பல. அதுவும் சமீபமாக எங்கள் வீட்டில் காலிப்ளவரும் விளைந்தது. கீழே அதன் படம் இணைக்கப்படுகிறது.  மூலிகை வகைகளை பற்றியும் பழ வகைகளை பற்றியும் அடுத்த பதிவில் பேசுவோம் நன்றே செய்வோம் அதையும் இன்றே செய்வோம்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா